5.
சுதா ராமுக்கு இணையாக கெஞ்சிய படியே நடக்க சில அடிகள் விட்டு பின்தொடர்ந்தத நடுத்தர வயதுப் பெண்மணி…
ம்மா... என்று அழைத்தார்…
நின்ற சுதா திருப்பி பார்க்கவும் பெண்மணி வேகமாக அவரிடத்தில் ஓடிவந்தார்.
அம்மா என் பொண்ணை கொலை செய்யறதுக்காக..
என்று கூறும் பொழுதே... இடைமறித்த சுதா... எல்லாம் எனக்கு தெரியும் ம்மா..
இப்போ அவங்க யாரு என்னன்னு விசாரிக்கவோ ஆராய்ச்சி பண்ணவோ நமக்கு நேரமில்லை ... பிரசவ வலி வந்த உங்க பொண்ணு எங்க இருக்காங்கனு பாக்கணும்…
ஏற்கனவே அவங்க ரத்தத்தில பாய்சன் மாதிரி ஏதோ கலந்திருக்கு பத்தாததுக்கு இப்போ வலியும் வந்திடுச்சு.
உடனே அவங்க எங்கனு தேடி கண்டுபிடிக்கனும்..
நாம தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து சீக்கிரமா வாங்க நாம தேடலாம்…
ஆனா டாக்டர் போறாரே…
பரவாயில்லை போகட்டும்... இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே நம்மளை தேடி வருவாங்க என்ற சுதா அந்தப் பெண்மணியை அழைத்துக்கொண்டு படிக்கட்டு பக்கமாக வந்தார்.
ராம் சிறிது நேரம் வேகமாக சென்றவர் அங்கிருந்த படியே வெளியே எட்டிப்பார்க்க இப்பொழுது வாசலில் பத்து பேருக்கும் குறையாத வாட்டசாட்டமான ஆண்கள் நின்று கொண்டிருந்தனர்… அனைவர் கைகளிலும் ஆயுதம் இருந்தது.
மருந்துக்குக்கூட மருத்துவப் பணியாளர்கள் ஒருவருமில்லை முன்பக்க வாயிலின் கேட்டும் சாத்தப்பட்டிருந்தது அவர்களிடத்தில் சென்று கர்ப்பிணிப் பெண்ணைப் பற்றி கூறலாமா என்று நினைத்தவருக்கு அவர்களின் தோற்றத்தையும் செயலையும் பார்த்து சற்று பயம் கிளம்பியது .
இவர்களிடத்தில் சுதாவை தனியாக விட்டு செல்வதா... என்று நினைத்தவர் அவரை மட்டும் இங்கிருந்து அழைத்து சென்று விடலாம் என நினைத்து அவரைக் கூப்பிடுவதற்கு திரும்பிப்பார்க்க சுதா அங்கில்லை.
சுதா என்று அழைத்தபடி படிக்கட்டின் பக்கம் வந்தார்…
கீழே சுதாவின் சத்தம் கேட்கவும் இவரும் அண்டர் கிரவுண்டை பார்த்தபடி இறங்கினார்.
கீழே சுதாவும் பெண்மணியும் சேர்ந்து எங்கேனும் சத்தம் கேட்க்கிறதா என சந்தேகத்திற்கிடமான இடங்களில் தேடி பார்க்க ஆரம்பித்தனர்...சுதா பதட்டத்தை கைவிட்டு மூளைக்கு வேலை கொடுத்தார்.
இவ்வளவு பெரிய இடத்தில் தேடுவது கஷ்டம்...எங்கே இருப்பார் கர்ப்பிணி பெண்….கமலா அம்மாவால் தனி ஒரு பெண்மணியாக கண்டிப்பாக படிக்கட்டின் வழியாக கர்ப்பிணிப் பெண்ணை கூட்டி வந்திருக்க முடியாது...அப்படி வந்திருந்தால் கண்டிப்பாக லிஃப்ட் மூலமாகதான் கர்ப்பிணியை கொண்டு வந்திருப்பார்... அப்படி வந்திருந்தால் லிஃப்ட்டை சுத்தி தான் ஏதாவது ஒரு இடத்தில் ஓளிந்து வைத்திருப்பார்….அங்கு இல்லை என்றால் யோசிக்காமல் மொட்டை மாடிக்கு சென்று விட வேண்டும் என முடிவெடுத்த படி அங்கே ஓடினார்.
அவர் சந்தேகப்பட்டது போல் லிஃப்ட்டின் பக்கவாட்டு சுவற்றருகே சம்பந்தமே இல்லாமல் தார்ப்பாய் கிடக்கவும்... யோசிக்காமல் அதை இழுக்க அதனடியில் அரை மயக்கத்தில் கர்ப்பிணி பெண் கிடத்தார்.
யாராவது தேடி வந்தாலும் அவர்களின் கண்ணில் படாதவாறு காரை மூட பயன்படுத்தபடும் தார்பாய்யை போட்டிருந்தார் கமலாம்மா…
இவரைக் கொண்டு வந்து இங்கே ஒளித்து வைத்துவிட்டு மேலே மருத்துவரை அழைக்க வரும் பொழுதுதான் கமலாம்மா தாக்கப்பட்டிருக்கிறார் என்றும் சுதாவிற்கு புரிந்தது… தாமதிக்காமல் அவர் அருகில் சென்ற சுதா அவரின் நாடித்துடிப்பை ஆராய்ந்தார்…
அவரின் பல்ஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்தது... வயிற்றில் கை வைத்து அழுத்தி பார்க்க எந்த ஒரு அசைவும் இல்லை... சுதாவிற்கு மனம் முழுவதுமே வலிக்க ஆரம்பித்தது...கண்கள் கலங்கி உடனடியாகவே அழுகை வர ஆரம்பித்தது..
இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்... கமலா அம்மாவும் உயிரை விட்டார்கள் என்று...ஆனாலும் சிறு நம்பிக்கை நாடித்துடிப்பு இருக்கிறது தாயை மட்டுமாவது காப்பாற்ற முயற்சி செய்யலாம் என அந்தப் பெண்ணின் கன்னத்தில் வேகவேகமாக தட்ட ஆரம்பித்தார்.
அதற்குள்ளாக நடுத்தர வயது பெண்மணி அருகில் வந்து மகளின் கோலத்தைக் கண்டு தலையில் அடித்தபடி அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.
எரிச்சலடைந்த சுதா அந்த பெண்மணியை பார்த்து முதல்ல அழறதை நிறுத்துங்க... நீங்க இப்படி அழுதா என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது முதல்ல அந்த பக்கம் போங்க என்று கோபத்தில் விரட்டிவிட்டார்.
அதற்குள் ராமும் அந்த இடத்திற்கு வர உணர்ச்சியே இல்லாமல் சுதாவை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
சுதா அவரை ஒரு அருவருப்பான பார்வை பார்த்துவிட்டு கர்ப்பிணி பெண்ணின் கன்னத்தை தட்டிக் கொண்டே இருந்தார்.
அருகில் வந்த ராம் பெண்ணின் நாடித்துடிப்பை ஆராய்ந்து விட்டு சுதா ரொம்ப சிரம படாதீங்க இந்த பொண்ணு இன்னும் கொஞ்சநேரத்தில் செத்து போய்டுவா என்னதான் நாம ஹைடெக் ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் பிழைக்கறது ரொம்ப கஷ்டம் என்று கூறவும்…
ராமின் மீதிருந்த கோபமும் கர்ப்பிணி பெண்ணுக்கு இப்படி நடந்து விட்டதே என்ற ஆதங்கமும் ஒன்று சேர
முதல்ல நீங்க இங்க இருந்து போங்க உங்க உயிரை காப்பாத்திக்கோங்க...இவ செத்துபோயிடுவானு சொல்லத்தான் மெடிசன் படிச்சீங்களா...நீங்க சொன்ன விஷயத்தை அதோ அங்க உக்காந்து அழறாங்களே அந்த அம்மாவுக்கே சொல்ல தெரியும்…
நாம அவங்கள மாதிரி படிக்காதவங்க இல்ல ...கடைசி வரை போராடனும்...நம்மளோட தோல்வியை ஓத்துக்க கூடாது... மேல வித்யா டாக்டர் இருக்காங்க நான் அங்க கூட்டிட்டு போறேன்... இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு எங்களால கண்டிப்பா இந்த பொண்ணை காப்பாத்த முடியும்னு அவ மூஞ்சிய பாருங்க…இன்னும் குழந்தை தனம் கூட மாறல...அவ்ளோ சின்ன பொண்ணு….
இருபது வயசு கூட முடியல சாகற வயசா இந்த பொண்ணுக்கு …ரொம்ப கூலா சொல்லறீங்க...செத்துபோயிடுவா…. விட்டிடுனு... என்ன மாதிரியான மனுஷன் சார் நீங்க...
உங்க வைஃபை இறந்து போயிட்டாங்க வருத்தம் தான்...அதுக்காக ஊருக்குள்ள எந்த கர்ப்பிணி பொண்ணுமே உயிரோடு இருக்கக் கூடாதுன்னு நினைக்கறது எந்த வகையில நியாயம்... முதல்ல ஒரு நல்ல மனுஷனா வாழப்பாருங்க... இங்கிருந்து தப்பிச்சு போய் நூறு வருஷம் வாழறது வீரம் இல்ல சார்... இந்த பொண்ணுக்காக போராடறது தான் வீரம்...என்று கூறவும்..
நீங்க பேசறது கேக்க நல்லா இருக்கு சுதா...ஆனா சம்பந்தமில்லாத இந்த பெண்ணுக்காக நீங்க ரிஸ்க் எடுக்கறேன்னு சொல்லறீங்க...அது கூட பரவால்ல...ஆனா இந்த பொண்ணு பொழைக்க வாய்ப்பு இருந்தா கூட முயற்சி செய்யலாம் பிழைக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சும் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறது தப்புன்னு தோணுது...வாங்க முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் என்று சுதாவின் கையை பிடித்து இழுக்கவும் ...இவர்களின் சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ராமின் காலில் வந்து விழுந்தார் .
ஐய்யா உங்க வாயால என் பொண்ணு பொழைக்க மாட்டான்னு சொல்லாதீங்க... ரெண்டு உசுரையும் நல்லபடியா இங்கிருந்து கூட்டிட்டு போவோம்னு நம்பி வந்தோம்…ஆனா இப்போ ஒத்த உசுரையாவது கூட்டிட்டு போங்கனு சொல்லுங்க...என்று கெஞ்சினார்.
ம்மா...விடுங்க உங்களால எங்க எல்லாருக்கும் எவ்ளோ பிரச்சினை பாருங்க...முதல்ல உங்க உயிரை காப்பாத்திக்கோங்க... பிழைக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க…
உங்க பொண்ணுக்கு நடக்கற அநியாயத்தை அவ கணவர் கிட்ட சொல்றதுக்காகவாவது நீங்க உயிரோடு இருக்கணும் முதல்ல இங்கிருந்து கிளம்புங்க...என்றவர் சுதாவை பார்த்து நீங்களும் வாங்க போலாம் என்று இழுக்க அவரும் நின்ற இடத்திலேயே விடாப்பிடியாக நின்றார்…
நடுத்தர வயது பெண்மணியோ இப்பொழுது அவரின் மகளின் கன்னத்தை அழுதபடியே தட்ட ஆரம்பித்தார்...அவர் உயிரை விட்டாலும் விடுவாரே தவிர கண்டிப்பாக அங்கிருந்து கிளம்ப மாட்டார் என்று புரிந்ததும் ராம் சுதாவை பார்த்து…
புரிஞ்சுக்க மாட்டீங்களா சுதா இன்னும் அவங்க இந்த அண்டர்கிரவுண்ட் வரல... வந்துட்டாங்களா நம்மளை யாரும் உயிரோட விடமாட்டார்கள் புரியுதா இல்லையா…?
அதுக்காக தெரிஞ்சே எப்படி சார் ஒரு உயிரை துடிக்க விட்டுட்டுப் போக முடியும் ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டுங்க நீங்க முயற்சி செஞ்சா கண்டிப்பா அந்த பொண்ணை காப்பாற்றலாம் என்று சுதா கெஞ்சிக் கொண்டு இருக்கும்போதே படிக்கட்டின் வழியாக வேகமாக வித்யா வந்தார்.
அவரைக் கண்டதுமே நம்பிக்கை பெற்று சுதா அவரிடம் சென்று வாங்க டாக்டர் அந்த பொண்ணுக்கு இன்னும் உயிர் இருக்கு நாம முயற்சி செஞ்சா காப்பாத்திடலாம் என்று கூறவும்..
என்னை மன்னிச்சிடு சுதா நான் முதல்ல இங்கிருந்து போகனும்…முடிஞ்சா நீயும் கிளம்பு...என்றார்.
டாக்டர் என்று அதிர்ச்சியாக அவரை பார்க்கவும்…
நாம நினைக்கிற மாதிரி இந்த பொண்ணை தேடி வந்து இருக்கிறவங்க சாதாரணமானவங்க மாதிரி தெரியல... ரொம்ப பயங்கரமானவங்க….அவங்களோட ஒரே டார்கெட் இந்த பொண்ணு தான் இவளை குடுத்துட்டா அவங்க போயிட போறாங்க…இந்த பொண்ணு இருக்கற நிலையை பார்த்தா கண்டிப்பா பிழைக்க மாட்டா தெரிஞ்சும் நீ ரிஸ்க் எடுக்காத...கிளம்பு என்ற படி அவரின் நான்கு சக்கர வாகனத்தில் ஏறி இயக்க ஆரம்பித்தார்.
அவரிடம் சென்ற சுதா நாமளே இந்த தப்பை செஞ்சா சாதாரண மனுஷங்க என்ன பண்ணுவாங்க...நாம் போலீஸ்க்கு போன் பண்ணலாம் டாக்டர்...என்றார்.
வேஸ்ட் சுதா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினேன்... ஆனா இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாரு தெரியுமா ...அவங்க கேக்கற பொண்ணை கொடுத்துட்டு நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பார்க்கலாம்ல எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கறீங்கனு எனக்கே அட்வைஸ் பண்ணறாங்க... இந்த மாதிரி ஆளுங்களோட நம்மளால மோதி ஜெயிக்க முடியாத சுதா... இனியும் நாம இந்த பொண்ணுக்காக போராடினா நம்ம உயிர் தான் போகுமே தவிர பெருசா எதையும் சாதிக்க முடியாது..
எனக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க..
அந்த குழந்தைகளுக்காகவாவது நான் வாழனும் அதனால் என்னை மன்னிச்சிடு நான் இங்கிருந்து போறேன்…
டாக்டர்...அப்போ இந்த பொண்ணையும் அவங்க அம்மாவையும் நம்மளோட கூட்டிட்டு போகலாம்...அதுக்காவது உதவுங்க…
புரியாம பேசாத சுதா...
முதல்ல கூட ஒருத்தன் தான் ஆபரேஷன் தியேட்டர்குள்ள வந்தான்.
இப்போ மூனு பேர் வந்து அந்த பொண்ணை அந்த கிழவி எங்க ஒளிச்சி வச்சிருப்பானு கேட்டு மறுபடியும் என்னை தாக்க வந்தாங்க...சொல்லலனா மீதி இருக்கற எல்லா பேஷன்ட்டையும் கொன்னுடுவோம்னு மிரட்டறாங்க...நானும் பயந்து நம்ம ஹாஸ்பிடல்ல இருக்கற எல்லா சீக்ரெட் ரூம்மையும் சொல்லிட்டேன்…எதாவது ஒன்னுல தான் அவளை சேவ் பண்ணிருப்பாங்க நீங்க தேடிக்கோங்கன்னு சொன்னதால என்னை போன்னு விட்டுட்டாங்க...அது மட்டும் இல்ல மீதி பேஷன்ட்டை எதும் பண்ண மாட்டோம்னு சொல்லிருக்காங்க…
அவங்க தேடிட்டு வர்றதுக்குள்ள நான் இங்கிருந்து கிளம்பனும் அப்படி இல்லனா சத்தியமா என்னை கொன்னுடுவாங்க….என் உயிருக்கே உத்திரவாதம் இல்ல...இதுல உங்க எல்லாரையும் என்னோட அழைச்சிட்டு போய் ரிஸ்க் எடுக்க விரும்பல... என்று வித்யா கறாராக பேசவும்...
கடைசி வாய்ப்பாக நினைத்து சுதா அவரிடம் கெஞ்சும் குரலில் டாக்டர் ப்ளீஸ்...என்று இழுக்கவும்.
கோபம் கொண்டவர் கொஞ்சம் எதார்த்தத்தை புரிஞ்சுக்கோங்க சுதா எத்தனையோ பேஷன்ட்டுகளோட உயிரை காப்பாத்த நாம உயிரை கொடுத்து போராடுவோம்..
ஆனா அவங்க நம்மளை ஏமாத்திட்டு போயிடுவாங்க..
அப்போல்லாம் நாம என நினைச்சுப்போம்.
விதி முடிஞ்சது அதனால போயிட்டாங்கனு மனசை தேத்திப்போம்ல... அப்படி இந்த பொண்ணோட விதியும் முடிஞ்சதுன்னு நினைச்சிக்கோங்க...முதல்ல வழி விடுங்க நான் போகனும் என்றவர் சுதாவின் முகம் கலங்குவதைக் கண்டு மனம் கேளாமல்…
வேணும்னா நீங்க, சார்,அந்த பொண்ணோட அம்மா மூனு பேர் மட்டும் கார்ல ஏறிக்கோங்க... முன்னாடி கேட்டா உண்மையை சொல்லிக்கலாம் என்றார்.
இல்லை என்பது போல் சுதா தலையசைக்க... முகத்தை கடினமாக வைத்துக்கொண்ட வித்யா...ஒகே சுதா என்னை மன்னிச்சிடு என்னால உனக்கு உதவ முடியாது என்று கூறியபடி வேகமாக காரை ஓட்டி சென்றார்.
இனி என்ன செய்வது என்பது போல் கர்ப்பிணியை பார்த்தார் சுதா... அவரின் தாயார் நம்பிக்கை இழக்காமல் தனது பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் போராடிக் கொண்டிருந்தார்... சுதாவிடம் வந்த ராம்...இந்த பொண்ணால ஓரு நல்ல டாக்டரை நம்ம ஹாஸ்பிடல் இழந்திடுச்சி...உங்களையும் இழக்க வரும்பல வாங்க...என்று மீண்டும் ராம் அழைத்தார்..
யோசனையாக பார்த்த சுதாவிடம்... வித்யா டியூட்டி டாக்டர்ங்கறதால காரை இங்க பார்க் செஞ்சு இருக்காங்க அதனால நம்ம கிட்ட சொல்லிட்டு போவதற்கான வாய்ப்பு கூட அவங்களுக்கு கிடைச்சது இதுவே அவங்க எமர்ஜென்சிக்கு உள்ள வந்திருந்தா சைடு வழியா தான் வந்து இருப்பாங்க... நம்ம கிட்ட சொல்லிட்டு கூட போய் இருக்க மாட்டாங்க... அவங்க மறுபடியும் இங்க வர்ற மாதிரி இருந்திருந்தா காரை மட்டும் இங்க விட்டுட்டு அவங்க சைடு கேட் வழியா போய் இருப்பாங்க...இத்தனை பிரச்சினைக்கு நடுவிலும் அவங்களோட காரை எடுத்துட்டுப் போறாங்கன்னா மறுபடியும் அவங்களுக்கு இங்கே வர்றதுக்கு விருப்பமில்லை என்று கூறவும் புரிகிறது என்பது போல் தலையசைத்தார்...
அப்பொழுது கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து சிறு அசைவு வரவும் அவரின் தாய் அம்மா என் பொண்ணு கண்ணை திறக்கறா என்று கூறினார் உடனே ராமுடன் கிளம்புவதற்கு தயாராக இருந்த சுதா மீண்டும் அவரிடத்தில் ஓடினார்.
கர்ப்பிணி பெண் கண் திறக்கவும் சுதா அவரருகில் அமர்ந்து கலைவாணி இப்போ உங்களுக்கு என்ன செய்யுது வலி இருக்கா என்று கேட்கவும்…
ஆமாம் என்பது போல் தலையசைத்த கலைவாணியின் முகம் மீண்டும் வலியில் சுருங்கியது...பற்களை கடித்து வலிகளை தாங்கிக் கொண்டவரை பார்த்த பொழுது சுதாவிற்கு பிரமிப்பாக இருந்தது...சிறு பெண்ணால் இவ்வளவு நேரம் வலியை தாங்கி முடிந்ததே என்று.
கடினப்பட்டு வயிற்றில் கை வைத்த கலைவாணி... அக்கா என் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லல்ல...என்று சுதாவை பார்த்து கேட்கவும்...இல்லை என்பது போல் கண்ணீருடன் தலையசைத்தார்.
எப்படி சொல்வது இவளிடம் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டது அதனால்தான் உனக்கு வலி அதிகமாக இருக்கிறது... அதுமட்டுமல்லாமல் இன்னும் சற்று நேரத்தில் நீயும் இறக்கப் போகிறாய்... உன்னை இந்த நிலையில் அம்போவென்று விட்டு விட்டு நான் இங்கிருந்து செல்ல போகிறேன் என்று மனதிற்க்குள்ளாகவே பேசிக்கொண்டார்.
கலைவாணியின் கேள்விக்கு சுதா மனதிற்குள் பதில் கூறித் கொண்டிருக்க... கலையின் தாயாரோ புடவை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
தாயாரின் அழுகையை பார்த்து குழம்பிய கலைவாணி அவரைப் பார்த்து எங்களுக்கு ஒன்னும் ஆகல அம்மா நாங்க நல்லா இருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல நீ உன் பேரனையோ பேத்தியையோ பார்க்க போற... நான் இருப்பேனா என்னனு தெரியல ஆனா...என் குழந்தை இருக்கும்... என்ன எப்படி வளர்த்தியோ அதே மாதிரி என் குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்துங்க அம்மா...இங்க நடந்து எந்த விஷயத்தையும் என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லாத….கோபபட்டு அவங்க வீட்டு ஆளுக கிட்ட கேட்டாருன்னா அவங்க அவரையும் ஏதாவது செஞ்சிடுவாங்க...அவர் பாவம்... என்று கூறும்பொழுது மீண்டும் தலையில் அடித்து அழ ஆரம்பித்தார் கலையின் தாயார்.
என்னம்மா இது புதுசா நம்மளோட வாரிசு வரப்போகுதுன்னு சொல்லறேன் நீ அழுதுக்கிட்டே இருக்க... உன்னை விட்டுட்டு போயிடுவேன்னு பயப்படுறீங்களா... அதான் என் குழந்தையை விட்டுட்டு போறேனே சந்தோஷ படுங்க என்று நிறுத்தி நிதானமாக மூச்சு வாங்கியபடியே பேசினாள் கலை…
போதும் நிறுத்து கலை...மேல பேசாத அம்மாவால தாங்க முடில…. உன் குழந்தை நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு போயிடுச்சி...அது தெரியாம நீ அதை வளர்க்கறதை பத்தி பேசிட்டு இருக்க...என்று கூறினார்.அதிர்ச்சியில் கலைவாணி சுதாவை பார்க்க...சுதா கலையின் தாயாரை கண்டித்தார்.
ம்மா என்ன இது பொண்ணு கிட்ட இப்படி பேசறிங்க... இந்த மாதிரி சமயத்தில் அவங்ககிட்ட இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா என்று கூறும்பொழுது கலை சுதாவை பார்த்து...அக்கா அம்மா என்ன சொல்லறாங்க...என் குழந்தைக்கு என்னாச்சி என்று கேட்டபடி வயிற்றின் மீது கை வைத்து தடவி பார்த்தார்..
ஒன்னுமில்ல கலை... கொஞ்ச நேரமா நீ மயக்கத்திலிருந்த இல்லையா அதைப் பார்த்து அம்மா அப்படி நினைச்சுட்டாங்க வேற ஒன்னும் இல்ல என்று கூறவும்…
ஒன்னுமில்லல அக்கா...என் குழந்தைக்கு ஒன்னும் ஆகல ...வாங்க என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போங்க...என்று அந்த வலியிலும் தள்ளாடியபடி எழ முயற்சித்தார்.
கலையின் செயலைப் பார்த்து அனைவருமே பதறினர்...என்ன பண்ணற நீ சாய்ந்து உக்காரு...நீ இப்படியெல்லாம் போக முடியாது...என்று சுதா அவளிடம் கடிந்து கொண்டார்.
அப்போ நீங்க என்னை கூட்டிட்டு போங்ககா…என்று கலை வலியில் கண்களை முடியபடியே கூறினாள்.
தாயாரோ அழுகையை அடக்க முடியாமல் மேலும் அழுதார்.
இப்பொழுது என்ன செய்வது என்பது போல் ராமை பார்த்தார் சுதா…
ராமிற்கு கலைவாணி ஒரு அதிசயப் பிறவி போல் தெரிந்தாள்...அவரின் இத்தனை ஆண்டு கால மருத்துவ சேவையில் கலையைப் போல் எந்த ஒரு கேஸையும் பார்த்ததில்லை... பல்ஸ் முற்றிலும் இறங்கி ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணா இப்படி சாய்வாக அமர்ந்த படி பேசிக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே அவரது ரத்தத்தில் ஏதோ ஒன்று கலந்து இருக்கிறது என்று சுதா கூறியிருக்கிறார் அதுமட்டுமின்றி சில நேரத்திற்கு முன்பாகவே பிரசவ வலி வந்திருக்கிறது ஆனால் இந்த நிமிடம் வரை பிரசவமும் நடக்கவில்லை அவர் ரத்தத்தில் கலந்திருந்த விஷமும் அவரை எதுவும் செய்யவில்லை இவள் கடவுளின் விசித்திரப் படைப்பா...இல்லை இந்தப் பெண்ணிடம் வேறு ஏதாவது சக்தி இருக்கிறதா என்றுதான் பார்த்துக்கொண்டிருந்தார்.
நீ ஏம்மா இப்படி அழற... என்று கலை மீண்டும் கண்களை மூடியபடியே கேள்வி கேட்க….
என்னை என்ன கலை பண்ண சொல்ற உன்னோட பேச்சை கேட்டு அழறதை தவிர வேற என்னால என்ன செய்ய முடியும்...உன் குழந்தை வயித்திலேயே இறந்திடுச்சி…. நீயும் இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவ விட்டுட்டு போகப்போறேன்னு இவங்க பேசிக்கறாங்க... எல்லாத்தையும் கேட்டுட்டு நான் இன்னும் உயிரோட இருக்கறேன் இதான் நீஜம்….உன் குழந்தை இப்போ உயிரோட இல்லம்மா...அதை வெளியே எடுத்தா மட்டும் தான் நீ உயிரோட இருப்ப...ஆனா எப்படின்னு எனக்கு தெரியலம்மா அந்த கடவுள் மட்டும்தான் உன்னை காப்பாத்த முடியும்...என்று அழ ஆரம்பித்தார்.
இல்லம்மா என் குழந்தை சாகல...அது சாகாது...அது நம்மள மாதிரி முதுகுல கூடையை தூக்கிட்டு தேயிலை பொறிக்கற கூலி தொழிளார்களை காப்பாத்த வர்ற சாமிம்மா….அது சாகாது... நான் சாக விடமாட்டேன்... என்று மேலே பார்த்து கடவுளே என் உயிரை வேணாலும் எடுத்துக் கோங்க என் குழந்தைக்கு அந்த உயிரை குடுங்க…. எங்களை சோதிக்காதே….இவ்ளோ நாள் நாங்க கொத்தடிமையா வாழ்ந்தது போதும்….இனியாவது எங்களுக்கு சாப விமோஷனம் தாங்க…. என்று அழுத கலை வயிற்றின் மீது கையை வைத்து அழுத்தியபடி குட்டியம்மா உனக்கு ஒன்னும் ஆகல நீ நல்லா தான் இருக்க...போதும் நீ அம்மாக்குள்ள இருந்தது வெளிய வா..என்று வயிற்றில் தடவி கொடுத்தார்…
பிறகு ராமை பார்த்து... ஐயா எப்படியாவது என் குழந்தையை காப்பாத்துங்க...வாரிசு இல்லாத குடும்பத்துக்கான முதல் வாரிசு... இந்த குழந்தை வெளியே வந்து தான் நூற்றுகனக்கான மக்களை மீட்க போகுது... இந்த குழந்தை இல்லனா எங்களோட கொத்தடிமை வாழ்க்கை அப்படியே நிரந்தரமா எங்களோடவே தங்கிடும்..
எந்த அரசாங்கம் வந்தாலும் எங்களுக்கு விமோசனம் கிடைக்காது….எங்களை அடிமையா வச்சிருக்கற வர்க்கத்துகிட்ட பணத்தை வாங்கிகிட்டு எங்களை மேலும் அடிமையாக்கி வைச்சிப்பாங்க... இதிலிருந்து என்னோட மக்கள் வெளிய வரனும்னா இந்த குழந்தை இந்த உலகத்தை பாக்கணும்.அந்த அதிகார வர்க்கத்தோட வாரிசா போகனும்…. தயவுசெய்து இந்த குழந்தையை நல்லபடியாக எடுத்துக் கொடுங்க…என்று கெஞ்சினாள்.
ராம் பேசும் கலையை தான் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தார் இது மெடிக்கல் மிராக்கிள் இந்தப் பெண்ணால் எப்படி இந்த மாதிரி மனநிலையில் தெளிவாகப் பேச முடிகிறது இவ்வளவு நேரம் மருத்துவமனையை சுற்றிலும் கேட்டுக்கொண்டிருந்த சத்தங்கள் கூட கேட்கவில்லையே... இந்த பெண் சொல்வதை போல் அவளது குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டால் நல்லது தான் ஆனால் அதன் இடத்தில் தான் துடிப்பே இல்லையே எங்கிருந்து பிறகு எப்படி நல்லபடியாக வெளியில் எடுப்பது என்று கவலையுடன் கலைவாணியை பார்த்துக்கொண்டிருந்தார்.
சுதாவோ நீ சொல்றத கேக்கும்போது எனக்கும் இந்த குழந்தையை நல்லபடியாக பிறக்காதான்னு தோணுது...ஆனா அது முடியாது கலை...எல்லாமே நம்ம கை மீறி போயிடுச்சி…
இல்ல அக்கா அப்படி போகாது... போறதா இருந்தா எனக்கு சாப்பாட்டுல விஷம் வச்சப்போவே நான் போயிருப்பேன் என் குழந்தையும் செத்துப் போயிருக்கும் இவ்வளவு நேரம் நான் உயிரோடு இருக்கேன்னா என் குழந்தையும் உயிரோடு இருக்குன்னு தானே அர்த்தம்… எங்களுக்காக ஒருத்தர் அவங்க உயிரை தியாகம் பண்ணி இருக்காங்க... அது உண்மைனா குழந்தை நல்லபடியா பொறக்கும் நீங்க முயற்சி பண்ணி பாருங்க இந்த குழந்தையை எப்படியாவது நல்லபடியா பிறக்க வெச்சு என் கணவர் கைல ஓப்படைங்க...அடிமையா வாழற என் மக்களுக்கு விடுதலை வாங்கி தாங்க...என்ற கலைவாணி வயிற்றை சற்று அழுத்திய படி..
போதும் உள்ள இருந்தது...வெளிய வா... ஏன் இன்னும் பொறுமையா இருக்க...உனக்கு நிறையா பொறுப்பு இருக்கு..
வெளிய வா என்று தனது வீங்கிய வயிற்றை பார்த்து பேச பேசவே சிறு அசைவு தெரிய ஆரம்பித்தது…
உடனே சந்தோஷமடைந்த கலை கிட்டத்தட்ட கத்தவே ஆரம்பித்துவிட்டாள்…ராமிற்கும் சுதாவிற்கும் தான் பயம் தொற்றிக்கொண்டது...இது சாதாரண பெண் கிடையாது...ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருக்கிறது... இல்லையென்றால் இந்த அளவு கத்தி பேசிக்கொண்டிருக்கும் போது கூட யாரும் இவர்களை தேடி வரவில்லை அதுமட்டுமின்றி உடல் நிலை இந்த ...அளவு மோசமாக இருக்கும் பொழுது எதுவுமே நடக்காதது போல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாள்….என்று ஆச்சர்யத்தை மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே
அக்கா இங்க பாருங்க என் குழந்தை அசையுது என்று மீண்டும் சொல்லவும் நம்ம முடியாமல் வயிற்றை பார்க்க கலை அணிந்திருந்த நைட்டியின் மேலாக குழந்தையின் தலை முட்டிக் கொண்டு இருப்பது போல் தெரிந்தது இப்பொழுது மெல்ல மெல்ல அது கீழ் நோக்கித் திரும்புவது போல் இருக்க அதிர்ச்சியில் சுதாவும் ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ராமு வேகமாக ஓடி வந்து கலையின் கையில் நாடி துடிப்பை பார்க்க இப்பொழுது அது மிகச் சீராக இருந்தது... அவள் உடலில் எந்த ஒரு களைப்பும் தெரியவில்லை குழந்தையும் மிக சாதாரணமாக திரும்பிக் கொடுக்க அந்த வலி கூட கலையின் முகத்தில் தெரியவில்லை…
உடனே வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்த ராம் குழந்தை பிறக்கப்போகுது உங்களுக்கு வலி இல்லையா என்று கலையை பார்த்து கேட்க வலிக்குது டாக்டர் ஆனா நான் தாங்கிப்பேன்….குழந்தை நல்லபடியாக பொறக்கணும் அந்த குழந்ததைக்காக உயிரை வேணாலும் தருவேன் என்று உறுதியான குரலில் சொன்னாள்.
இப்பொழுது கலைக்கு வலி தாங்க முடியாத அளவிற்கு வரவும் மெதுவாக கத்த ஆரம்பித்தாள்...உடனே சுதா இப்படி கத்த கூடாது... நல்லா மூச்சை இழுத்து இழுத்து வெளியே விடு நாங்க சொல்லும்போது மட்டும் புஷ் பண்ணு புரிஞ்சுதா என்று கூறியவர் அங்கிருந்த மறைப்பு கம்பிகளை கொண்டு கலையை மறைத்தார்.
அப்பொழுது அவர்கள் அருகில் காலடிச் சத்தம் கேட்பது போல் இருக்க மூவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க சுதா ராமை ஊக்குவித்தார் .
டாக்டர் சீக்கிரமா ட்ரீட்மெண்ட் பாருங்க குழந்தையை வெளியே எடுத்துட்டோம்னா நாம இவங்கள அழைச்சிட்டு பக்கத்தில இருக்கற வேற ஹாஸ்பிட்டலுக்கு போயிடலாம் என்று கூறவும் கலைக்கு நன்றாகவே பிரசவ வலி வந்துவிட்டது வலியில் துடிக்க ஆரம்பித்தவள் சுதா சொல்வதைப்போல் கேட்டு நடக்கவும் தவறவில்லை.
ராமு பிரசவம் பார்க்க மிகவும் தயங்கினார்.
ஏன் தயங்குறீங்க டாக்டர் என்று சுதா கேட்க இல்ல சுதா ரொம்ப நாளாச்சு நான் பிரசவம் பார்த்து இப்போ எனக்கு டச்சே கிடையாது பயமா இருக்கு என்று கூறினார்.
டாக்டர் உங்களால முடியும் நீங்க முயற்சி பண்ணுங்க….
அவ வலில துடிக்கறா என்று பிரசவம் சுலபமாக நடக்க உதவி செய்ய ஆரம்பித்தார்.
இல்ல சுதா கைல அடிபட்டிருக்கு கண்டிப்பா குழந்தையை வெளிய எடுத்து தூக்கற அளவுகூட சக்தி இல்ல...என்று பதட்டமடைந்து பேசினார்.
ஏனோ கலையில் கதறல் காவ்யாவை நினைவுபடுத்தியது... கடைசி நிமிடத்தில் காவ்யாவும் இதேபோல்தான் முகம் முழுவதும் வேர்த்து அந்த மலை முகட்டில் துடித்துக்கொண்டிருந்தார்… அன்றும் இப்படித்தான் அவருக்கு பிரசவம் பார்க்க பயந்து இவர் மற்றொருவர் உதவியை நாடி அழைத்து வருவதற்குள் காவியா மண்ணை விட்டே மறைந்து விட்டார்…
இன்றும் அதே போல் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று அஞ்சினார்…
கலையோ வலியையும் மீறி அய்யா உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன் குழந்தை வெளியே வருவதற்கு உதவி பண்ணுங்க உங்களால கண்டிப்பா முடியும் ….உங்க சக்தி உங்க கிட்ட தான் இருக்கு... என்று கை எடுத்து கூப்பிட்டாள்…
சுதாவும் அவரின் பங்கிற்கு... சார் இந்த இடத்தில உங்க அம்மா எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்காங்க... அவங்களோட ஆசிர்வாதமும் உங்க அம்மாவோட ஆன்மாவும் இங்க தான் இருக்கும் தைரியமா பண்ணுங்க சார் என்று கூறவும்
ராமிற்குள் புது சக்தி ஒன்று பிறப்பது போல் தோன்றியது…அவரை சுற்றி தாய்,தந்தை,மனைவி,சற்றுமுன் மரணமடைந்த கமலாம்மா அனைவரும் துணையாக இருப்பது போல் உணர்வு எழுந்தது...
அவரின் உடைந்த கைகள் நொடியில் சரியானது போல இயல்பாக அசைக்க முடிந்தது…ஆச்சர்யத்தில் கையை அசைத்துப்பார்க்க அவரின் தாயாரின் ஸ்பரிசத்தை உணர்ந்தார்…
ம்மா என்று கண்கலங்க சுத்திபார்க்க...கமலாம்மாவின் குரல் தம்பி குழந்தை தலை வெளியே தெரியுது பாருங்க கவனம் என்று அறிவுறுத்துவது போல் கேட்டது...சுதாரித்து கலையின் பக்கம் திரும்ப குழந்தையும் நன்கு திரும்பி இருந்தது…. சுதா கலையை பார்த்து வேகமா புஷ் பண்ணுமா...என்று கூற அது படியே ஆஆஆ என்று கத்திய கலை குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதுமே விழியோரத்தில் நீர்துளி வெளிவந்தது….அப்படி வரவரவே அவளின் ஜீவனும் அடங்கியது…அது வரை அவர்களுக்கு துணையாக சுற்றி இருந்த புனித ஆன்மாக்கள் அத்தனை பேரும் வந்த வேலை முடிந்தது இனி நமக்கு வேலையில்லை என்று புன்னகையுடன் கலையை அழைத்துச் சென்றது…
குழந்தை பிறந்ததும் அது கத்தி அழ மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தது….ரத்தமும் சதையுமாக குழந்தையை கையில் பிடித்த ராம் வாய் விட்டு அழ ஆரம்பித்தார்...சுதாவோ கலை உனக்கு பொண்ணு பிறந்திருக்கா...என்றவர் தாயாரிடம் பேத்தி பொறந்திருக்கா என்று கூறினார்.
ஆனால் அவர் அதிர்ச்சியில் கலையை பார்த்துக் கொண்டிருக்க சுதாவும் கலையை பார்த்தார்... அதிர்ச்சி அடைந்தவர் கலையின் நாடித்துடிப்பை ஆராய அவர் இறந்து விட்டாள் என்பதை உணர்த்தியது உடனே ராமிடம் டாக்டர் கலையை பாருங்க என்று கூறவும் குழந்தையை சுதாவிடம் கொடுத்துவிட்டு கலையின் நாடித்துடிப்பை ஆராய்ந்தார்... அதிர்ச்சி அடைந்தவரால் நம்பவே முடியவில்லை சற்று முன்பு அவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் அமர்ந்து பேசிய பெண்ணா இப்பொழுது மூர்ச்சையாகி கிடைக்கிறாள் என நம்ப மறுத்து கலையின் கன்னங்களை தட்டி கூப்பிட ஆரம்பித்தார்…
அசைவில்லாததை கண்டவர் அவளது நெஞ்சில் உள்ளங்கையை வைத்து அழுத்தி பார்க்க கலை அவள் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை...இறந்து விட்டாள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது அதிர்ச்சியில் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க குழந்தையின் அழுகுரல் கேட்டு சத்தம் கேட்ட பக்கமாக அடியாட்கள் ஓடிவர ஆரம்பித்தார்கள்..
கலையின் தாயார் இப்பொழுது சுதாவிடம் தயவு செய்து குழந்தையை எப்படியாவது அவ அப்பா ஊர்ல இருந்து வந்ததும் அவர் கைல ஒப்படைச்சிடுங்க…. நான் வர்றவங்களை பார்த்துக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே படிக்கட்டில் திபுதிபுவென
சத்தம் கேட்க ஆரம்பித்தது.
அழும் குழந்தையை சுதா நெஞ்சோடு அணைத்து கொள்ள குழந்தை கண்மூடி தூங்க ஆரம்பித்தது...இப்பொழுது விளக்கு வெளிச்சத்தில் ஆயுதங்களுடன் மனிதரின் நிழல் உருவம் தரையின் தெரிய ராமும் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு லிஃப்ட்டின் பக்கவாட்டு சுவற்றில் இருட்டோடு இருட்டாக ஒன்றினர்.
சுற்று முற்றும் பார்த்த கலையின் தாயாரோ கீழே கிடந்த சிறிய ரக தண்ணீர் கேனை எடுத்து புடவை முந்தானையை சுற்றி நெஞ்சோடு அணைத்தபடி அண்டர்கிரவுண்ட் விட்டு வெளிப்பக்கமாக ஓட ஆரம்பித்தார்.
அவர் ஒடுவதை கண்டதும் ஒருவன் பார்த்து கத்தினான்.
டேய் குழந்தையைத் தூக்கிட்டு அந்த பொம்பளை வெளியே ஓடறா அவள பிடிங்க என்று ...அவரின் பின்னால் அனைவரும் துரத்திச் செல்ல ஒருவன் மட்டும் கலையின் அருகில் வந்து ஷூ காலால் அவளின் முகத்தை வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் திருப்பி பார்த்தான் கலை இறந்ததை உறுதி செய்துவிட்டு அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
இருட்டில் இருந்து வெளிவந்த சுதாவும் ராமு யாரும் அங்கு இல்லை என்பதை உறுதிப் படுத்தி விட்டு வேகமாக படியேறி தரை தளத்திற்கு வந்தார்கள் பிறகு மருத்துவமனையின் பின்பக்கமாக ஓட ஆரம்பித்தார்கள்.