கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டுவிடு வெண்மேகமே 19

Akila vaikundam

Moderator
Staff member
19

கேட்கிறதால ஏதாவது மாறப் போகுதா விக்கி..?
வேணாம்.. எப்படியும் உன்னை காயப்படுத்தி இருப்பாரு அதை கேட்டு என் மனசை காயப்படுத்திக்க விரும்பல.

எப்போ இருந்து கௌஷி நீ இவ்ளோ புத்திசாலி ஆன..?
அப்படியே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்ற எனக் கோபப்பட்டவன்.. என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காம நீயா கண்டதை கற்பனை பண்றது சரி கிடையாது என்றவன்.


அவளை விட்டு சற்று தள்ளி நின்றபடி மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன்படுத்தினான்.

பிறகு அவளை பார்த்தபடி.. மிஸ்டர் ஹரி உனக்கு டிவோர்ஸ் தர்றதா ஒத்துக்கிட்டாரு என்று சொல்லவும்.

டிவோர்ஸா..என அதிர்ச்சி அடைந்தவள்…நான் கேட்கலையே என்றாள்.


நீ கேக்கல ஆனா உனக்கு பதிலா நான் கேட்டேன்.


எதுக்காக.?

நீ இப்படி கஷ்டப்படுறதை என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல.


நான் கஷ்டப்பட்டேன்னு உனக்கு யார் சொன்னது .


இதோ கன்னம் வீங்கற அளவுக்கு அடி வாங்கிட்டு வந்து நிக்கிறியே இது கஷ்டம் இல்லையா..? எந்த உரிமையில் அவர் உன்னை அடிச்சாரு..? புருஷன்ங்கற உரிமையில் தானே..? அந்த உறவு இல்லன்னா உரிமை எங்கிருந்து வரும்.! அதான் டிவோர்ஸ் கேட்டேன்.


பட் அவர் எப்படி ஓத்துகிட்டாரு.

ஓத்துக்கல..

என்ன உளர்ற.

நான் சொல்ல வர்றதை முழுசா கேளு அவர் டிவோர்ஸ் தரேன்னு சொன்னது எந்த அளவு உண்மையோ அதே அளவு மறைமுகமா கொடுக்க மாட்டேன்னு சொன்னதும் உண்மை என்றவனை யோசனையுடன் பார்த்தாள்.


ஆமா கௌசி.. நீ ஏன் அவரை விட்டு வந்தேன்ங்கற விஷயத்தை என்கிட்ட சொன்னா டிவோர்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காரு.. நானும் பேப்பர்ஸ் ரெடி பண்ண சொல்லிட்டு வந்திருக்கேன்.
என்று சொல்லி முடிக்கும் முன்..


உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என்ன தைரியத்துல நீ அவரை பேப்பர்ஸ் ரெடி பண்ண சொன்ன..


முதல்ல அவர் டிவோர்ஸ்க்கு ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க போறது இல்ல அது தெரியுமா உனக்கு என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசியவள்..ஏன் விக்கி இப்படி செஞ்ச என ஆதங்கமாக கேட்டாள்.


ஏன் செஞ்சன்னு என்னை கேள்வி கேட்கிறதை விட்டுட்டு நீ ஏன் அங்கிருந்து வந்த..? அதுக்கான பதில் மட்டும் சொல்லு.. டிவோர்ஸ் உன் தனிப்பட்ட விஷயம் அதுல நான் தலையிட மாட்டேன்.


ம்ப்ச்…நான் கேபின் போறேன்.


பதில் சொல்லிட்டு போ கௌசி.


சொல்லற அளவுக்கு எதுவும் இல்ல விக்கி.சின்ன மனஸ்தாபம் தான் நாள் போக்குல பூதாகரமா ஆகிடுச்சி.


அந்த சின்ன விஷயம்தான் என்னன்னு கேட்டுட்டு இருக்கேன்..



சொல்றது போல இருந்தா சொல்ல மாட்டேனா..?


அப்படி என்ன விஷயம் என வாய்க்குள் சொல்லிக்கொண்டவன்..
ஏதேதோ கற்பனை செய்தபடி அவளருகில் வந்து.. வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அந்த ராட்சசன் கிட்ட நீ அவ்ளோ கஷ்டம் அனுபவிச்சியா..?


விக்கி ப்ளீஸ் அப்போ என்ன நடந்ததுன்னு நிஜமாவே எனக்கு மறந்துடுச்சு..

நான் நம்ப மாட்டேன்..நீ பொய் சொல்லற எதையோ மறைக்கற..
ஏழு வருஷத்துக்கு மேல ஃபிரண்டா பழகுற என்ன விட கொஞ்சமே கொஞ்ச நாள் உன்னோடு இருந்தாலும் மிஸ்டர் ஹரி என்னை விட உன்னை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கார்..என்றவனுக்கு பதில் கூறாமல் நின்றாள்.

***

நீ எதுக்காக பிரிஞ்சு வந்திருக்கறங்கற விஷயத்தை என்கிட்ட சொல்ல வேண்டாம்.

உங்களுக்குள்ள என்ன மனஸ்தாபம்ன்னு எனக்கு தெரிய வேண்டாம்.


ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு. மிஸ்டர் ஹரி சொல்றாரு நீ அவரை விட்டு பிரிஞ்சு வந்ததுக்கு நானும் ஒரு காரணம்னு.. அதை மட்டும் இல்லைன்னு சொல்லிடு.


இந்த உலகத்திலேயே உன் அம்மா அப்பாவை விட உன் அண்ணன்களை விட நீ நல்லா இருக்கணும்னு நினைக்கறவன் நான்.


எப்பவாவது கோவில் போனா கூட உன் சந்தோஷத்துக்காக வேண்டிக்கறவன் என்ன பார்த்து மிஸ்டர் ஹரி சொல்றாரு உன்னோட எல்லா கஷ்டத்துக்கும் நானும் ஒரு காரணம்னு அதை தான் ஏத்துக்க முடியல.. என்றவனிடம் கோபமாக


அவர்தான் ஏதோ பைத்தியக்காரத்தனமா உளறியிருக்காருன்னா அதையும் கேட்டுட்டு வந்து என்கிட்ட கேட்டுட்டு இருக்க பாரு…என்றாள்.


இங்கு பார்க்க கௌசி.. கேட்ட கேள்விக்கு ஆமா இல்ல ரெண்டுல ஏதாவது ஒரு பதில் சொல்லு..அதை விட்டுட்டு மழுப்பலா பதில் சொல்லாத.


இப்போ என்ன பதிலை எதிர்பாக்கற..


உண்மையான பதிலை.


என் கஷ்டத்துக்கு நீ காரணம் இல்ல போதுமா..இப்போ என் வேலையை பாக்க போகலாம்ல என்றபடி அங்கிருந்து சென்றாள்.


ஊஃப்.. என மூச்சை இழுத்து விட்டவன் சந்தோஷமாக தேங்க்ஸ் எ லாட்..என்று விழிமுடி கண் திறக்கையில் விழியோரத்தில் நீர் துளி பளபளத்தது.


உடனடியாக ஹரிக்கு அழைத்தவன் .. ஹலோ மிஸ்டர் ஹரி கௌசல்யாவுக்கு கொடுக்கிறதா சொன்ன டிவோர்ஸ் பேப்பர் ரெடி ஆயிடுச்சா எனக் கேட்டான்.


எதிர் முனையில் இருந்த பதில் வர சில வினாடிகள் எடுத்தது.


பிறகு உணர்ச்சியற்ற குரலில்.. கௌசல்யா எங்க பிரிவுக்கான காரணத்தை முழுசா சொல்லிட்டாளா எனக்கேட்டான்.


அது எனக்கு தேவையில்லை மிஸ்டர் ஹரி எனக்கு தேவையானது உங்க ரெண்டு பேரோட பிரச்சினைக்கும் காரணம் நான் இல்லை என்கிறது மட்டும் தான் அதை கேட்டு தெளிவு படுத்தியாச்சி..சோ நீங்க தோத்து போய்ட்டீங்க..வாக்கை காப்பாத்துவீங்கனு நினைக்கறேன் என்று முடிக்கும் முன்னே எதிர்முனையில் இருந்து வெடிச்சிரிப்பு கேட்டது.


அதை ஹரி அடக்க சிரமப்படுவதும் தெரிந்தது.


ஸ்டாப்பிட்.. ஸ்டாப்பிட் மிஸ்டர் ஹரி எதுக்காக சிரிக்கறீங்க நான் ஒன்னும் உங்க கிட்ட காமெடி பண்ணல என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.


நானும் நீங்க காமெடி பண்றதா சொல்லவே இல்லையே கோமாளிங்க காமெடி சொல்லனும்னு அவசியம் இல்ல அவங்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும்.. அப்படித்தான் நீங்களும்..என்ன ஸ்பெஷல்னா இப்போ உன்னை நினைச்சாலே சிரிப்பு பொங்குது.. என்றவனிடம்.


ஓஓ தோல்வியை இப்படி கூட சிரிச்சி மழுப்பலாமா.


தோல்வியா அதும் உன்கிட்டையா..நெவர்.. நான் வாழ்க்கைல மட்டும் தான் தோத்தவன்…உன்னப்போல பொடி பசங்க கிட்ட கிடையாது.


மிஸ்டர்…என கோபமாக கத்தியவனிடம்.


தாரளமா ஹரின்னு கூப்பிடலாம்..மிஸ்டர் துணைக்கு அழைக்காம என்றான் கூலாக..


நீங்கதான் சொன்னீங்க அவ காரணத்தை சொன்னா டிவோர்ஸ் கொடுக்கிறதா..

நான் மறக்கலையே.


அப்போ நீங்க சிரிச்சி மழுப்புவதற்கு பேர் என்னவாம்..

ஹாஹாஹா…அப்போ காரணத்தை சொல்லு..என் தோல்வியை ஓத்துக்கறேன்.


அதான் சொன்னேனே..அவ கஷ்டத்துக்கு நான் காரணம் இல்லனு..

ஹான் மறுபடியும் ஒரு முறை சொல்லு..


அவ கஷ்டத்துக்கு காரணம் என்று செல்லும்போது ஹரி கூறியதின் அர்த்தம் புரிந்தது.


ஆம் அவர்கள் இருவரின் பிரிவுக்கான காரணத்தை தானே அவன் கேட்டது.


பிரிவுக்கு விக்கி காரணம் இல்லை என்று கௌசி சொல்லாமல் கஷ்டத்திற்கு காரணம் நீ இல்லை என்று கூறியிருக்கிறாள்.. அப்படியென்றால் என யோசிக்கும் பொழுதே எதிர் முனையில்
இருந்து மீண்டும் ஒரு வெடிச்சிருப்பு கிளம்பியது .


கோபத்தில் மொபைல் ஃபோனை சுவற்றில் அடித்திருந்தான் விக்னேஸ்வரன்.

தொடரும்..
 
Last edited:
Top