கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டுவிடு வெண்மேகமே 29

Akila vaikundam

Moderator
Staff member
29

என்னதான் ஜானயிடம் திருமணத்தில் தனக்கு விருப்பம் என கூறிக் கொண்டாலும் ஹரிபிரசாத்தால் கேசவனது குடும்பத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


தங்கை சிறுவயதில் இருந்தே ஆடம்பரமாக வளர்ந்தவள் அப்படியிருக்கையில் புகுந்த வீட்டில் எப்படி அத்தனை பேர் நடுவில் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்று பலவாறாக கவலை கொண்டான்.


அத்தோடு இல்லாமல் அவனது தாய் தந்தைகளிடமும் இதைப்பற்றி வாதாடி பார்த்தான்.


அவர்களும் பெற்றவர்கள் தங்கள் பெண்ணிற்கு வரன் பார்த்திருக்கிறார்கள் இதில் நாம் தலையிடுவது சரிவராது இதை விட்டுவிடு.


வேண்டுமானால் அவளின் திருமணத்திற்கு தேவைப்படும் அனைத்தையும் நாம் செய்து கொள்ளலாம் இதற்கு உன் சித்தப்பா சித்தி மறுப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறியதால் ஓரளவுக்கு மனம் சாந்தமாயிற்று. .


ஜான்விற்காக அவளின் பெற்றோர்கள் சேர்த்து வைத்ததை விட பல மடங்கு அதிகமான நகைகளை ஹரி வாங்கி குவித்தான். அது மட்டுமின்றி அவளின் வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவையோ எல்லாவற்றையும் மிக சிறப்பானதாக வாங்கியும் கொடுத்தான்.


இதை எல்லாம் ஏற்றுக் கொண்டவளால் அவன் அவளுக்காக வீடு வாங்கிக் கொடுக்க முன் வந்ததையும் கம்பெனியில் பங்கு தருகிறேன் என்று சொன்னதையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.


அது பெரியப்பாவின் உழைப்பு,அது உனக்கு மட்டுமே சொந்தம் அதனால் அதை வாங்கிக்கொள்ள மாட்டேன் மீறி கட்டாயப்படுத்தினால் உங்களுடன் பேசுவதையே நிறுத்தி விடுவேன் என்று மிரட்டவும் ஜானுவிற்காக முடிவை மாற்றிக்கொண்டான்.


அவர்கள் எதிர்பார்த்தபடி திருமண நாளும் வந்தது.மனதிற்கு கொஞ்சமும் விருப்பமில்லாத திருமணம் அதனால் அவனால் ஒன்றி உறவாட முடியவில்லை.

முக்கியமான நிகழ்வுகளில் மட்டும் முன்நின்று விட்டு நாசுக்காக ஓதிங்கிக்கொண்டது எல்லாம் காலை முகூர்த்தத்தில் கௌசியை காணும் வரையில் மட்டுமே.. அவளைக் கண்டதும் நொடியில் அனைத்தும் மாறி போயிற்று.


இரட்டை ஜடையில் பாவாடை தாவணியில் ஒட்டியானம் நெத்திசுட்டியென குறும்பு பெண்ணாக அனைவரிடத்திலும் விளையாடிக் கொண்டும் அரட்டை அரட்டை அடித்துக்கொண்டும் திருமணத்தை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாற்றிக் கொண்டிருந்தாள்.

அவளின் நட்புப்பட்டாளமோ ஓரு படி மேலே சென்று ஆட்டம்பாட்டம் என ‌திருமண மண்டபத்தை இரண்டாக்கிக்கொண்டிருந்தனர்.

ஹரிக்கு சுத்தியிருக்கும் எந்த நிகழ்வுமே கவனத்தில் இல்லை.. அவனின் பார்வை வட்டம் கௌசியை சுற்றியே இருந் சட்டதது.

அவளின் குண்டு கண்களும் சிரித்தபடியே இருக்கும் அவளது இதழும் அவனை அவளுக்குள் சுழற்றி இழுத்தது.


அந்த நேரம் ஐயர் அவளிடத்தில் அட்சதை தட்டை கொடுத்து விட அனைவருக்கும் கொடுத்துக்கொண்டு வந்தவள் ஹரியின் முன்பு வந்து நின்றாள்.


ஹரி அட்சதையை எடுக்காமல் மெய்மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


ஹரினின் முன்பு வந்து கையாட்டி அவனின் கவனத்தை தனது பக்கம் இழுத்த கௌசி அவனிடத்தில் தட்டை காண்பித்து எடுத்துக்கொள்ளுமாறு ஜாடை செய்தாள்.


சார் சீக்கிரம் எடுத்துக்கோங்க . தாலிக்கட்ட போறாங்க என்று கூறவும் முதலில் அவனுக்கு அவள் கூறியது எதுவுமே புரியவில்லை.


ஹான்.. என்று கேட்டான்.


அட்சதை எடுத்துக்கோங்க அங்க தாலி கட்ட போறாங்க நான் அங்க போகணும் என்று கூற அவளின் அசையும் ஜிமிக்கியை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவள் கூறியது மறுபடியும் புரியவே இல்லை.

வைத்தக்கண் வாங்காமல் ஹரி அவளையே பார்க்க எரிச்சலுடன்

ம்ப்ச்..என்றபடி அவனது வலக்கையை பிடித்து அட்சதையை வைத்துக் விட்டு ஒரு கையால் தாலி கட்டியவுடன் இதைத் தூவ வேண்டும் என அபிநயத்துடன் விலக்கிவிட்டு அங்கிருந்து மணவரை நோக்கி ஓடினாள்.


அவள் மட்டும் ஓடவில்லை கூடவே ஹரியின் மனமும் சேர்ந்து ஓடியது.


தாலி கட்டும் நேரத்தில் அண்ணன் எங்கே என்று தேடிய ஜானகியின் கண்களுக்கு இது தப்பாமல் பட்டது.


யோசனையுடன் பின்பக்கமாக நின்று கொண்டிருந்த கௌசியை பார்த்துவிட்டு மறுபடியும் அண்ணனின் பக்கம் பார்வையைத் திருப்ப அண்ணனின் பார்வையோ கௌசியை விட்டு இம்மி அளவு கூட நகரவில்லை.

நொடியில் அண்ணனின் என்ன ஓட்டத்தை புரிந்து கொண்ட ஜானகி கௌசியின் பக்கம் திரும்பி ஓரு ஹெல்ப் பண்ண முடியுமா எனக்கேட்டாள்.


சொல்லுங்க அண்ணி..என்ற படி முட்டி போட்டு அமர்ந்தாள்.


அதோ அங்க அண்ணா நிக்கறாங்க அவங்களை இங்க வரச்சொல்லறியா..?


உங்க அண்ணாவா..கல்யாணத்துக்கு வந்திருக்காங்களா.எனக்கேட்டவள் ஆர்வமுடன் ஜானகி காமித்த பக்கம் திரும்பினாள்.


அதற்குள்ளாக தன்னை சுதாரித்துக் கொண்ட ஹரிபிரசாத் தங்கை தன்னை பார்த்து ஏதோ கூறுவதை அறிந்ததும் மேடைக்கு தான் அழைக்கிறாள் என புரிந்து கொண்டு வேக வேகமாக மணவரையை நோக்கி வந்தான்.


அவனைப் பார்த்ததுமே கௌசி சற்று நக்கலாக அவர்தான் உங்க அண்ணனா நான் ஏதோ மண்டபம் மாறி வந்துட்டாங்கன்னு நினைச்சுட்டு இருக்கேன்..

உங்க அண்ணனுக்கு காது கேட்காதா என கேட்கவும்..


ஏன்
.ஏன் அப்படி கேட்கற என சற்று கோபம் கலந்த பதற்றத்துடன் கேட்கவும்.


இல்லண்ணி அட்சதை எடுத்துக்க சொன்னேன் ..அவர் காது கேக்காதது போல நின்னாங்க அதான் என்று சற்று பயந்தபடியே சொல்லவும்.


அவன் என்ன நம்மளை மாதிரி சாதாரண ஆளா பெரிய பிசினஸ் மேக்னெட் அவன் மணசுக்குள்ள பலது ஓடிக்கொண்டிருக்கும் அந்த சமயத்துல நீ போய் நீ தட்ட நீட்டியிருப்ப அவர் கவனித்திருக்க மாட்டாரு உடனே செவிட்டு பட்டம் கட்டிருவியா.. சென்று மணவரையில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்து ஜானகி அவளின் கோபத்தை கௌசி இடம் காண்பித்தாள்.


ஜானுவின் உக்கிர முகத்தை கண்ட உடனேயே கௌசிக்கு உள்ளுக்குள் குளிரெடுக்க ஆரம்பித்துவிட்டது.


பெரிய அண்ணியாவது பரவால்ல வந்து கொஞ்ச நாள் கழிச்சு தான் அண்ணாவை கூட்டிட்டு போனாங்க இந்த அண்ணி வரதுக்கு முன்னாடியே கூட்டிட்டு போயிடு வாங்க போல என்று கலங்கவும் ஆரம்பித்தாள்.


தாய்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் எதற்காக அவளின் அண்ணனைப் பற்றி குறை கூறினாய் என்று தன்னைத் தானே திட்டுவார்கள் என்று அதற்கும் பயந்தாள்.


அதற்குள்ளாகவே இருவருக்கும் ஏதோ சரியில்லை என உணர்ந்து கொண்ட ஹரி தங்கையின் பக்கமாக அவனும் முட்டி போட்டு அமர கௌசி சத்தமில்லாமல் அங்கிருந்து எழுந்து நகர்ந்தாள்.


இவன் அமரவும் சற்றென்று அருகில் அமர்ந்திருந்த கௌசி எழுந்து போகவும் நொடியில் ஹரியின் முகம் இறுகியது .


இவளை இத்தனை பேர் முன்னாடி நான் என்ன பண்ணிடுவேன்னு எழுந்து ஓடறா என்று தான் தோன்றியது.அடுத்த வினாடியே தனது தகுதிக்கு இவள்லாம் ஓரு ஆளா என்றும் தோன்றியது.

செல்லும் கௌசியை பார்த்தபடியே யார் இவ என்று ஜானுவிற்கு கேட்கும் படி மெதுவாக கேட்டான்.


உடனே அவள் உன் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சி படிச்சிட்டு இருக்கான்னு சொன்னேன்ல அது இவதான் என்று சொல்லும் பொழுதும் ஜானுவின் முகத்தில் இருந்த கோபம் அகலவில்லை.


சரி அவ கிட்ட பேசுறதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படுற என்று கேட்கவும் உன்னை செவிடான்னு கேட்கறாண்ணா கோபப்படாம என்ன பண்ண சொல்லற..என்று பட்டென்று போட்டு உடைத்தாள்.


நிமிர்ந்து கௌசியை ஆச்சரியமாக பார்த்தவன் உன் நாத்தனாருக்கு ரொம்ப தைரியம் தான் சரி சரி முகத்தை இயல்பா வச்சுக்கோ என்ற படி எழுந்து நின்று கொண்டான்.


அதே சமயம் கேசவன் ஜானுவை பார்த்து ஏதாவது பிரச்சனையா முகம் ஏன் ஒரு மாதிரி ஆயிடுச்சு என்று கேட்கவும்.


சிரித்தபடி ஒன்னும் இல்லங்க அண்ணன் இல்லன்னு கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் அதான் இப்போ வந்துட்டாங்கல்ல இனி சரியாயிடும் என்றபடி தலை குனிந்து மணப்பெண்ணாய் ஐயர் சொல்லும் மந்திரங்களை திருப்பிச் சொல்ல ஆரம்பித்தாள்.


அதே சமயம் மணவரையில் கீழ் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த லட்சுமி கௌசியிடம் ஏன் ஜானு‌ உன்கிட்ட கோபமா பேசினது போல இருந்தது..என்ன பேசி வச்ச என்று கேட்டார்.


அது ஒன்னும் இல்லம்மா அவங்க அண்ணாவை வர சொன்னாங்க நான் விளையாட்டா உங்க அண்ணனுக்கு காது கேட்காதான்னு கேட்டுவிட்டேன் உடனே முகத்தை ஓரு மாதிரி பண்ணிட்டாங்கம்மா என்று சொல்லும் பொழுதே அவளின் குரல் உள்ளே சென்று விட்டது.


நீ ஆள் தான் வளர்ந்து இருக்க கொஞ்சம் கூட புத்தியே கிடையாது அவகிட்டயே போய் உன் அண்ணன செவிடான்னு கேட்டிருக்க..
இதோட விட்டாளேன்னு சந்தோஷப்படு..

என்னம்மா விளையாட்டுக்காக கேட்டதை நீங்களும் அண்ணி மாதிரியே சண்டைக்கு வரீங்க என்று மனம் ஆற்றாமல் கேட்டுவிட்டாள்


கொஞ்சம் யோசிச்சு பாரு உன்கிட்ட வந்து கேசவனை பற்றியோ இல்ல ராகவனை பத்தியோ யாராவது இப்படி கேட்டா சும்மா விடுவியா..


சரி விடு கல்யாணம் முடிச்சதும் போய் அவ கிட்ட ஒரு சாரி கேட்டிடு சரியா.
என்கிட்ட சொன்னதையோ நான் மன்னிப்பு கேட்க சொன்னதையோ அவகிட்ட காமிச்சிக்காத ஆரம்பத்திலேயே நாத்தனார்க்கும் அண்ணிக்கும் முட்டிக்கிச்சுன்னா கடைசி வரைக்கும் முட்டிக்கிட்டே தான் இருக்கணும் புரியுதுல்ல என்று கேட்கவும்.


புரியுது என்பது போல் தலையசைத்தாள்.


ஆனாலும் லட்சுமியின் மனம் கவலை கொண்டது முதல் பேச்சிலேயே இருவருக்கும் ஒரு மனக்கசப்பு வந்துவிட்டதே என்று.

பிறகு மகளை சமாதானம் படுத்தும் பொருத்து சரி தாலி கட்ட போறாங்க போ நாத்தனாரா நல்ல பிள்ளையா அண்ணன் பக்கத்துல நில்லு என்று சொல்லவும் சரி என்று ஒரு அடி எடுத்து வைத்தவள் அங்கு ஜானகியையும் அவனின் பின்புறமாக நின்ற ஹரியையும் பார்த்து இல்லம்மா நான் போகல என்றாள்.


ஏன்…

இல்லம்மா நான் போகல என ஹரியை பார்த்தபடியே கூறினாள்.


அதை மேடையில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த ஹரி மனதிற்க்குள்ளாக சரியான திமிரு புடிச்சவ போல.. இப்ப மட்டும் மேடைக்கு வராம இருக்கட்டும் அதுக்கப்புறம் உனக்கு வெச்சுக்குறேன் என் கச்சேரியை என்று கருவிக்கொண்டான்.


ஆனால் கௌசி பிடிவாதமாக மேடை ஏற மறுத்துவிட்டாளள் அத்தோடு இல்லாமல் நண்பர்களின் கூட்டத்திற்குள் புகுந்து கொண்டாள்.


திருமணம் முடிந்து சடங்குகள் அத்தனை முடியும் வரையிலும் ஹரி கண்ணிலும் ஜானகியின் கண்ணிலும் சிக்கவே இல்லை .


மணமக்களை மாப்பிள்ளை வீடு அழைத்துச் செல்லும் பொழுது தான் ஹரி ஜானுவின் காதருகில் என்ன உன் நாத்தனார் சிக்கவே மாட்டேங்கறா என்று சொல்லவும் எங்க போயிடப் போறா அண்ணா மெதுவா மாட்டுவா என்று கூறவும் இருவரும் அர்த்தத்துடன் ஒருவரை மற்றொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

திருமணம் முடித்த கையோடு ஜானுவின் பொறுப்பை லட்சுமியிடம் விட்டுவிட்டு ஜனா அமெரிக்கா கிளம்பி விட்டான்.
பெற்றோர்கள் வழக்கம் போல கிராமத்து வீட்டிற்கு சென்று விட்டனர்.

ஜானுவிற்கு இதனால் மிகுந்த மன வருத்தம் சிறுவயதிலிருந்து தாயும் தந்தையும் அதிக அளவு தன் மீது பாசம் காட்டவில்லையோ என்று வேதனையும் கொண்டாள்.


அவளுடைய அண்ணனும் திருமணத்திற்கு வந்து எல்லாவற்றையும் முன் நின்று நடத்தி வைத்தான் தான் ஆனாலும் ஹரி அளவிற்கு ஈடுபாட்டோடு செய்தானா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் ஜானு கூறுவாள்.


ஹரி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான் .. எந்த இடத்திலும் தான் ஒரு பணக்காரன் என்ற அகந்தையை காட்டவே இல்லை அவன் செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் கேசவனின் குடும்பத்தையும் பாதிக்காத வண்ணம் அவ்வளவு கவனத்துடன் கையாண்டான்.


ஜானுவுடனே இருந்தான் முதல் நாள் மாப்பிள்ளை வீட்டில் விட்டுவிட்டு செல்லும் பொழுது கூட கண் கலங்கினான். ஆனால் ஜனாவும் அவளின் பெற்றோர்களும் கடமை முடிந்தது என்ற மனோபாவத்தில் தான் இருந்தனர்.


அதனாலேயே ஜானகிக்கு ஹரியின் மீதும் அவனின் பெற்றோர்கள் மீதும் மிகுந்த மரியாதை கலந்த பாசம் உண்டாயிற்று.

அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கும் ஓரு தங்கையாக உருவெடுத்தாள்.

புகுந்த வீட்டில் லட்சுமியும் அவளை மற்றொரு மகளாகவே பார்த்தார்.

திருமணநாளின் இரவே வந்து கௌசியும் ஜானுவிடம் வந்து மன்னிப்பு கேட்க அவள் மீது இருந்த சிறுவருத்தமும் கானல் நீராக போனது .

லட்சுமியும் மகளின் துடுக்கான பேச்சுக்கு வருத்தத்தை தெரிவிக்க தானும் கோபப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
அத்தோடு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை அனைவரும் மறந்தனர்.


ஜானு திருமணத்திற்கு முன்பே கேசவனிடம் வேலைக்கு செல்வதற்காக அனுமதி பெற்றிருந்ததால் பெரியதாக குடும்ப சுமையும் அந்த வீட்டில் இல்லாமல் போயிற்று.

இப்படியாக நாட்கள் அது பாட்டிற்கு நகர ஹரியின் வீட்டில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர்.

இங்கே ஜானு மசக்கையில் அவதிபட்டுக்கொண்டிருந்தாள்.

வேலைக்கு விடுப்பு போட்டுக் கொண்டவளால் பெற்றோரின் மீது கொண்ட பாசத்திற்கு விடுத்து போட முடியவில்லை தாய் தந்தையின் பாசத்திற்கு மிகவும் ஏங்கினாள்.பெற்றோர்களுடன் சில நாட்கள் இருக்கவும் ஆசை கொண்டாள்.
அதை கேசவனிடம் சொல்ல அவனும் அவளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக சம்மதித்தான்.

இதற்கு நடுவே ஜனாவிற்கும் மும்முரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதற்காக அவர்களுக்கு ஹரியின் வீட்டில் வந்து தங்கியிருக்க ஜானுவும் ஹரியின் வீட்டிலேயே தங்கும் படி ஆயிற்று.

அவளுக்கு சில நாள் பெற்றோர்களுடன் கிராமத்து வீட்டில் இருக்க வேண்டும் என்பது ஆசை ஆனால் பெற்றோர்களோ ஹரியின் வீட்டில் வந்து தங்கிக்கொள்ள பெற்றோர்களுக்காகவும் பெரியம்மா பெரியப்பாவிற்காகவும் அவளும் அங்கேயே வந்து தங்கி கொண்டாள்.

ஆனால் ஹரியின் குடும்பம் அவளின் மனக்குறையை போக்கும் அளவிற்கு தாங்கு தாங்கென்று தாங்கினர்.

இதில் கிராமத்து வீடு காணாமல் போயிற்று.

ஹரிக்கும் ஜனாவிற்கும் ஒரு போல பெண் பார்ப்பது தெரிந்த விஷயம் என்பதால் ஜனாவின் விஷயத்தில் பெரியதாக ஜானு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.


ஏனென்றால் ஜனா அமெரிக்காவில் இருப்பதால் அங்கே சென்று வேலை பார்ப்பது போல் இருக்கும் பெண்ணையே தேடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஹரியின் விஷயத்தில் என்ன எதிர்பார்ப்பு என்று தெரிந்து கொள்ள ஜானு ஆர்வம் காட்டினாள்.

ஹரியின் தாயோ அவன் மனசுல என்ன இருக்குன்னே தெரியல ஜானு எந்த பொண்ணை காமிச்சாலும் ஏதாவது ஒன்னு சொல்லி தட்டி கழிச்சுட்டே இருக்கான் இந்த வருஷத்துக்குள்ள முடிச்சிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் வயசு வேற ஏறிகிட்டே இருக்கு என கவலை கொண்டார்.

ஜானுவின் மனதில் சிறு மின்னல் ஒன்று வந்து மறைந்தது.

இப்படி

இருக்குமோ என்று..ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது.. நாமாக ஏதாவது நினைத்த கற்பனை செய்வதை விட அண்ணனிடமே நேரடியாக கேட்டுவிடலாம் என்று ஹரியை தேடி வந்தாள்.
 
Last edited:
Top