விட்டுவிடு வெண்மேகமே
ம்மா...ஆஃபிஸ் டைம் ஆச்சி... டிஃபன் ரெடியா...என்று குளியலறையில் இருந்து வெளிவந்த கௌசல்யா கத்தினாள்….
இதோடி அம்மா...ரெடியாகிட்டே இருக்கு...என்ற லட்சுமி இடுப்பில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை வைத்தபடி உருளைக்கிழங்கை வதக்கிக் கொண்டிருந்தாள்...வயது சரியாக ஐம்பது...சராசரி உயரம்... ஐம்பது வயதுக்கு உண்டான உடல்வாகு...மாநிறம்...வட்ட முகம்...அடர்த்தியான நீளமான கூந்தல் கிடையாது...கலக்கமான குட்டையான கூந்தல் தான்...இப்பொழுது தான் ஆங்காங்க வெள்ளை முடி எட்டிப்பார்கிறது…
முகத்தைப் பார்த்த உடனே சொல்லி விடலாம் மிகுந்த மனக் கவலையில் இருப்பவர் என்று ...கவலையின் காரணமாக இரவில் சரியான உறக்கம் இன்றி கண்களை சுற்றி கருவளையம் எப்பொழுதுமே இருக்கும்…
கணவர் சிறிய அளவில் சாக்கு வியாபாரம் செய்பவர்...லட்சுமிக்கு...முன்று குழந்தைகள்...முதலில் இரண்டும் ஆண் பிள்ளைகள்...ராகவன்,கேசவன், கடைக்குட்டி பெண் தான் கௌசல்யா... மூவருக்கும் திருமணமாகிவிட்டது…
மூத்த பிள்ளைக்கு இரண்டு பெண் குழந்தைகள் இவர்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் தான் இருக்கிறார்கள்...மாமியார் வீட்டின் தயவால் சற்று சொகுசு வாழ்க்கை வாழ்பவன்…இவர்களை அருகில் சேர்த்துக் கொள்வதில்லை.
இளையவன் கேசவனுக்கு ஒரு ஆண்குழந்தை...அவர்களோடு தான் இவர்கள் அனைவரும் வசிப்பது...சொந்த வீடு... அதுவும் சற்று பெரியது... மகன் மருமகள் என இருவரும் வேலைக்குச் செல்வதால் ஓரளவிற்கு தாக்குப் பிடிக்க முடிகிறது…
மகள் கௌசி...திருமணம் முடித்து ஒர் ஆண்டுகளிலேயே கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாய் வீடு வந்துவிட்டாள்... இங்கு வந்த பிறகுதான் அவள் வயிற்றில் கரு இருந்தது அனைவருக்கும் தெரிந்தது ...ஆனால் அக்குழந்தையை யாரும் எதுவும் சொல்லாததால் மகளும் தைரியமாகவே பெற்றுக்கொண்டாள்…
ஒருவருடம் வரை வீட்டில் இருந்தவள் அண்ணியின் பேச்சை கேட்க முடியாமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.
தாய் வீடு வந்து மூன்று ஆண்டுகளை தொடுகிறது...விடிவுகாலம் தான் பிறப்பது போல தெரியவில்லை..
மகளை நினைத்தபடியே சமையலை செய்து கொண்டிருக்க...
அப்பொழுது பின்னால் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஆயா சூச்சி வருது எனக் கூறியபடி புடவை முந்தியை பிடித்து இழுத்தது…
ம்மாடி ஜானு...உன் பையன் பாரு பாத்ரூம் போகனும்னு சொல்லறான்...வந்து கூட்டிட்டு போம்மா...உருளை வதக்கிட்டு இருக்கேன் விட்டுட்டு வந்தா அடிபிடிச்சிடும் என கிட்டத்தட்ட கத்தினார்.
ம்ம்... எல்லாத்துக்கும் என்னையே கூப்பிடுங்க... எனக்கு ஆஃபிஸ் டைம் ஆகலையா…?என்று உள்ளிருந்தே குரல் கொடுத்த ஜானகிக்கு இருபத்தி ஆறு வயது...லட்சுமியின் இளைய மருமகள்... தனியார் நிறுவனத்தில் வேலை...கை நிறைய சம்பளம்...சராசரி உயரம்...அவளின் உயரத்திற்கேற்ற உடல் எடை...மாநிறமாக இருந்தாலும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் முகவெட்டை கொண்டவள்…
இல்ல ஜானு...சமையல் வேலை முடியல...இதை விட்டா வேலைக்கு போறதுக்கு முன்னாடி யாருக்கும் டிபன் கட்ட முடியாது... அதான் உன்னை கூப்பிட்டேன்…என்று இவரும் ஜானுவிற்கு கேட்கும் படி சொன்னார்.
ஜானுவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை...அதற்குள் பேரன் நிஷாந்த்...பாட்டி சீக்கிரமா வா...என்றபடி கால்கள் இரட்டையும் தூக்கியபடி மாறிமாறி குதிக்க ஆரம்பித்தான்.
இனி விட்டால் சமையலறையை ஈரம் செய்துவிடுவான்... அவனது இயற்கை உபாதை குழந்தையை நிற்க கூட விடவில்லை என புரிந்தது வேறு வழியில்லாமல் அடுப்பை அணைக்கலாம் என திரும்ப அதற்குள் ஜானு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு இதோ இவ அம்மாவும் இங்க தானே இருக்கறா...அவளை கூப்பிடலாம்ல... எல்லாத்துக்கும் என்னையே கூப்பிடுங்க...என்று கடிந்து கொண்டாள்.
உனக்கு நிஷாந்த் பத்தி தெரியாதா ஜானு அவன் ஒன்னு உன்னை கூப்பிடுவான்,இல்லன்னா என்னை கூப்பிடுவான் வேற யார்கிட்டயும் போகமாட்டான் தெரிஞ்சுக்கிட்டே இப்படி பேசலாமா …
நான் ஒன்னும் உங்க பொண்ண கூட்டிட்டு போக சொல்லல உங்க பொண்ணை அடுப்ப பார்த்துக்க சொல்லிட்டு நீங்க நிஷாந்தை கூட்டிட்டு போயிருக்கலாம்னு சொல்ல வந்தேன் என்ற படி அவளின் அறைக்குள் சென்றாள்.
ஆம் அது போல் செய்திருக்கலாம் தான் ஏன் தனக்கு தோன்றவில்லை என்று லட்சுமி அவரையே கேட்டுக்கொண்டார்.
சமையலறையில் சத்தம் கேட்டு கௌசல்யாவும் வந்துவிட்டாள்.
என்னாச்சிமா...என்று கேட்டபடி குழந்தை அனுவை கையில் வாங்கினாள்..
ஒன்னுமில்ல சும்மா நானும் அண்ணியும் பேசிக்கிட்டு இருந்தோம் என்றவர் அப்பொழுதுதான் மகளை திரும்பிப் பார்த்தார்...
ஆரஞ்ச் மற்றும் பச்சை வண்ண கார்டன் புடவையில் அழகாக காட்சியளித்தாள்...அவளது இளஞ்சிவப்பு நிறத்தை புடவையின் கலர் தூக்கி காட்டியது... .. இருபத்தி ஐந்து வயதை கடந்தவள்... ஐந்தேகால் அடி உயரம் கொண்டவள்... சற்று சதுர முகம்...பார்த்துமே திருப்பிபார்க்க வைக்கும்... அழகிய தோற்றம்... கோபத்திலே இருந்தாலும் கூட சிரித்தபடி காட்டும் பெரிய உதடுகள்…
உருண்டை கண்களுக்குள் சோகத்தை வைத்து திரிபவள்... இன்றும் தாயின் முன்பு சோகத்தை மறைத்து தான் நின்று கொண்டிருக்கிறாள்…
சரிம்மா நான் பாப்பாவை பாக்கறேன் நீங்க வேலையை பாருங்க என்று வாங்கிக்கொண்டவள் முன்அறையை நோக்கி செல்ல போகவும்..கௌசி என்று தாயின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.
என்னம்மா…
இன்னைக்கு எங்காவது போறீயா…புது புடவையெல்லாம் கட்டிருக்க…என்று கேட்டபடியே அடுப்பை அணைத்தார்.
ஆமாம்மா...இன்னைக்கு என்னோட காலேஜ்ல படிச்ச எல்லாரும் சேர்ந்து கெட் டூ கெதர் பார்ட்டி வச்சிருக்காங்க...அங்க தான் போறேன்…
அப்போ ஆஃபிஸ் போகலையா... அப்புறம் ஏன் என்னை காலையிலேயே டிஃபன் கட்ட சொன்ன…
ஐயோ அம்மா ஆபீஸில் போகனும்..
ஆபீஸ் முடிச்சிட்டு ஈவினிங் தான் பார்ட்டிக்கு போறேன்... என்றவள் பிரபல நட்சத்திர விடுதியின் பெயரை கூறினாள்.
தனியாவா அவ்ளோ தூரம் போற…
இல்லம்மா...விக்கியோட போறேன்... என்று சொல்லவும் லட்சுமியின் முகம் சற்றுக் கோபத்தில் கடுகடுவென ஆனது…
ஏன் மா...அவன் பேரை சொன்னாலே உன் முகம் இப்படி மாறுது என்று சற்று கவலையாக கேட்டாள் .
ம்ம்... காரணம் உனக்கே தெரியும் தெரிஞ்சிகிட்டே கேட்டா என்ன சொல்லறது...அவனோட போறதுக்கு நீ தனியா போகலாம்ல...இல்லன்னா ஏதாவது சினேகிதிகளை கூப்பிட்டுக்க வேண்டியது தானே….
கூட படிச்ச பொண்ணுங்க யாருமே பக்கத்துல இல்லம்மா...இன்னைக்கு சாயங்காலம் தான் அவங்கள பாக்க போறேன்…அப்புறம் தனியா எல்லாம் அவ்வளவு தூரம் போக முடியாது மா ஸ்டார் ஹோட்டல் போக ஒரு மாதிரி இருக்கும் ...விக்கியோட போனா எதும் தெரியாது….
காலேஜிலிருந்து ஒண்ணா படிச்சவன்...அவனும் சாயங்காலம் போறான் கூட வர்றியானு கேட்டான் சரின்னு சொன்னேன்...தப்பாம்மா... என்றவள் ஏக்கமாக போயிட்டு வரட்டுமா எனக்கேட்டாள்.
போகனும்னு முடிவு பண்ணிட்ட... இனி எதுக்கு என் கிட்ட கேட்டுகிட்டு... என்று கூறும்பொழுது ஜானகியின் குரல் கோபமாக ஓலித்தது…
அத்தை...இப்படி வாங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு பாருங்க…
என்ன ஜானு…
என்னாவா...என்று கோபமாக கேட்டவள்...என்ன இது என்றபடி அவளின் குர்த்தி ஒன்றை காட்டியபடி கேட்டாள்.
நீ ஆஃபிஸ்க்கு போடற டிரஸ்…
அது எனக்கு தெரியாதா...இதை என்ன பண்ணி வச்சிருக்கீங்க…
நான் ஏதும் செய்யலையே நீ சொன்னது போல துவைத்து அயர்ன் பண்ணி தானே வச்சிருக்கேன்…
கிழிச்சீங்க... நீங்கள் துவைச்ச லட்சணத்தை நீங்களே நல்லா பாருங்க... நிஷாந்த் பண்ணின சாக்லேட் கறை அப்படியே இருக்கு அந்த லட்சணத்தில் துவைத்து இருக்கீங்க போங்க போய் நல்லா வாஷ் பண்ணி அயர்ன் பண்ணி வைங்க நாளைக்காவது ஆஃபிஸ் போட்டுட்டு போறது போல என்று மாமியாரின் முகத்தில் குர்த்தியை தூக்கி வீசினாள்.
எதுவும் பேசாமல் அதை எடுத்தபடி வெளியே வர ... வெளியே இருந்த கேட்டுக்கொண்டிருந்த கௌசிக்கு அத்தனை கோபம் வந்தது.
அண்ணியை திட்டுவதற்கு நாக்கு துறுதுறு என வந்தது ஆனால் தாயே பொறுமையாக இருக்கும் பொழுது அவள் பேசுவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என நினைத்து மௌனம் காத்தவள் தாயிடம் நேராக வந்து பொறியத் தொடங்கினாள்.
என்னம்மா அண்ணி இவ்வளவு மோசமான உங்ககிட்ட நடத்துக்கறாங்க நீங்க எதுக்கும்மா பொறுமையா வர்றீங்க... நல்லா குடுத்துவிட வேண்டியது தானே அவங்க துணியை துவைச்சு கொடுக்கிறதே பெருசு இதில அதிகாரம் வேற என்ன உங்களை அவங்களுக்காக படைச்ச வேலைகாரின்னு நினைச்சாங்களா... என்று சற்று உரக்க கேட்டாள்.
உடனே அவளின் வாயை முடிய லட்சுமி கொஞ்சம் பொறுமையா பேசு...ஜானு காதுல கேட்டா அதுக்கும் எதாவது சொல்லுவா…இது நானும் உன் அப்பாவும் சம்பாதிச்சி வாங்கின வீடு இல்ல...நம்ம கேசவன் லோன் போட்டு வாங்கினது...நியாபகம் வச்சிக்கோ...
இந்த வீட்டுக்கு லோன் கட்ட நானும் ஒரு வருஷமா பணம் குடுத்துட்டு தான் இருக்கேன்...அதுமில்லாம அப்பாவும் குடுத்துட்டு தான் இருக்காங்க...அதை மறந்திடாதீங்க...வீடு மட்டும் தான் அண்ணா பேர்ல இருக்கு...வாங்கின நாள்ல இருந்து அப்பா கிட்ட தான் கூசாம பணம் கேட்டு வாங்கறான்…
அடியே வாய முடிறியா….காலைலேயே ஏன் இவ்ளோ பேசற...நீ ஆஃபிஸ் கிளம்பு...
எதுக்குமா இவ்ளோ பயம் உங்களுக்கு ..
இங்க யாரும் யாரை நம்பியும் இல்லை அப்படி இருக்கும்போது எதற்காக நான் பயந்து போகனும் என்று கேட்கவும்…
இப்படி வா என்று கௌசியின் கையை பிடித்து இழுத்து வந்தவர் எல்லாம் உனக்காகத்தான்...நீ மட்டும் இங்க இல்லன்னா இதல்லாம் கேக்கனும்னு எனக்கென்ன தலையெழுத்தா…
இவ துணியெல்லாம் துவைக்கறதும் இல்லாம இப்படி பேச்சு வாங்கனும்னு வேண்டுதலா என்ன…இதெல்லாம் நான் அவளுக்கு செய்யலன்னா...நீ இங்க இருக்கறதுக்கு ஏதாவது சொல்லுவா…
என்னை என்ன சொல்ல போறாங்க எனக்கு ஒண்ணுமே புரியல…
உனக்கு எதுவுமே புரியாது கௌசி அதனாலதான் நீ இப்படி இருக்க இந்த வீட்டுக்கு நான் அடிமை வேலை செய்யறது உனக்காக தான்…
அவ உன்னை ஏதும் பேசிட கூடாதுனு நான் பொருத்து போறது புரியுதா.
என்னமா நீங்க பேசுறது கொஞ்சமாவது லாஜிக் இருக்கா அப்பாவும் ஒரு அளவுக்கு சம்பாதிக்கிறாங்க நானும் ஒரு அளவுக்கு சம்பாதிக்கிறேன் எதுக்காக இங்க இருந்து நீங்க இந்த பேச்சை எல்லாம் கேக்கனும்... நாம தனியா வீடு பார்த்து போயிடலாம்…
நல்லா இருக்குடி உன் பேச்சு தனியா போறோம் சரி நாளைக்கே நீ உன் புருஷன் வீட்டுக்கு போயிட்டா அப்புறம் வயசான காலத்துல நானும் அப்பாவும் தனியா கிடக்கனுமா சொல்லு …
எதுக்கும்மா நீங்க தனியா கிடக்கனும்..
கடைசி வரைக்கும் உங்களை நான் பாத்துக்க மாட்டேன்னா…
இது அதை விட நல்லா இருக்கு கௌசி... இன்னும் கொஞ்ச வருஷத்துல நானும் அப்பாவும் போய் சேர்ந்திடுவோம்... அதுக்கப்புறம் கடைசி வரைக்கும் குழந்தையோட நீ தனியா இருக்க போறியா…?.
எதுக்கும் எதுக்கும் முடி போடறீங்க... நான் இங்க
இருந்தா நீ பேச்சி வாங்கறீங்கன்னு… அந்த ஆளோட போய் சேர்ந்து வாழனுமா... சொல்லுங்க..
நான் மாப்பிள்ளையோட சேர்ந்து வாழுன்னு சொல்லவரல...உனக்கு அவரைப் பிடிக்கலைன்னா முறையா பிரிஞ்சி வந்திடு... நான் உனக்கு வேற ஒரு நல்ல வரன் பார்க்கறேன்...நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ... இப்போ ரெண்டாவது கல்யாணம் நடைமுறைல இருக்கறது தானே…
அம்மா விளையாடறீங்களா…?எனக்கு ரெண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு... ரொம்ப ஈஸியா ரெண்டாவது கல்யாணம் பண்ண சோல்லறீங்க...
அதனால என்ன... பாக்கற பையன் கிட்ட குழந்தை இருக்கற விஷயத்தை சொல்லியே கல்யாணம் பேசுவோம்…
குழந்தை இருக்கறதுக்கு ஆட்சேபனை தெரிவிச்சா... நானும் அப்பாவும் இருக்கிற வரைக்கும் அனுவை வளர்த்தறோம்... அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு…
ஐயோ அம்மா இன்னைக்கு காலைல இருந்து நீங்க பேசுறது எதுவும் எனக்கு புடிக்கல இங்க இருந்தா எனக்கு பிபி தானா ஏறும்... நான் கிளம்பறேன் என்றபடி குழந்தையை தாயின் கையில் திணித்தவள் அவளின் பேக்கை தூக்கியபடி வெளியே சென்றாள்.
கௌசி சாப்பிட்டுட்டு போ…
நீங்களே சாப்பிடுங்க...எனக்கு வேணாம் என்ற படி அவளது இருசக்கர வாகனத்தை இயக்க அதுவும் அவளுக்கு எதிராக செயல் பட்டது…
ச்சே...என்று இறங்கி அதை ஒரு உதை விட்டவள்...நேராக பஸ்நிலையத்தை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
இங்கே வீட்டிற்குள் கேசவன் மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்…
ஜானு ஏன் அம்மாகிட்ட அப்படி நடந்துகிட்ட போய் சாரி கேளு...நீ என் அம்மாவை இப்படி மட்டம் தட்டறதை பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு நீ அதை தாண்டற…
நீ பேசனதால கௌசி அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு சாப்பிடாம போறா...எல்லாம் நீ நடந்துகிட்டதால தான்… போ இப்பவே என் முன்னாடி அவங்ககிட்ட வந்து மன்னிப்பு கேளு என்றான்.
முடியாது...இப்போ நான் போய் கேட்டா..உங்க அம்மா செய்யறது சரிங்கறது போல ஆயிடும் நான் கேட்க மாட்டேன்…
ஆப்டர் ஆல் ஒரு துணியை சரியா துவைக்கலங்கறதுக்காக எங்க அம்மா பண்ணறதை எல்லாமே தப்புன்னு சொல்லிடுவியா நீ…?முதல்ல அவங்க எதுக்காக உனக்கு வேலை செய்யனும்...எத்தனை நாளா இது நடக்குது...இன்னைக்கு நீங்க பேசும் போது நான் பாத்ரூம்ல இருந்ததால தெரிஞ்சிருக்கு இல்லனா இப்படி என் அம்மாவை வேலை வாங்கறதும் மட்டம் தட்டறதும் தெரியாமலே போயிருக்கும்..
இனி லீவு நாள்ல உன்னோட டிரஸ்ஸை நீயே துவைச்சுக்கோ அப்படி இல்லையா. ஆள் போட்டுக்கலாம்...
இங்க பிரச்சனை உங்க அம்மா துணி துவைத்தது கிடையாது...உங்க தங்கை இங்க இருக்கிறது தான்…
உளறாத...அவளை நீயா தலைல தூக்கி வச்சிட்டு இருக்க...அவளோட எல்லா செலவுக்கும் சரியா பணம் கொடுக்கறா...அதுமட்டும் இல்ல... ரொம்ப நாளாவே இந்த வீட்டோட ஈ எம் ஐ க்கும் பணம் கொடுத்துட்டு இருக்கறா...அதை மறந்திடாத…
ஓஹோ...அப்போ அவ பணம் தர்றதால நான் எதையும் கண்டுக்க கூடாது இல்லையா...எப்படி உங்களை மாதிரியே எப்படியே போகட்டும்னு கை கழுவிடவா…
என்ன பிரச்சினை உனக்கு ஏன் சம்மந்தமில்லாம பேசற…
நான் சம்மந்தத்தோட தான் பேசிட்டு இருக்கேன் மாசா மாசம் செலவுக்கு பணம் கொடுக்கறா... நம்மளோட கடன்ல பங்கெடுத்துக்கறான்னு அவ வாழ்க்கை எப்படியோ போகட்டும்னு உங்களை மாதிரி என்னாலயும் பொறுப்பு இல்லாமல் இருக்க முடியாது கொஞ்சம் யோசிச்சு பாருங்க தனியாக இருக்க வேண்டிய வயசா அவளுக்கு ...என்னை விட ரெண்டு வயசு தான் கம்மி... எனக்கு இருக்கிற எல்லா உணர்ச்சிகளும் அவளுக்கும் இருக்கும் தான…
மூணு வருஷமா இங்க வந்து உட்கார்ந்து கிட்டு இருக்கா...நாம இரண்டாவது குழந்தை பெத்துக்கலாம்னு எடுத்த முடிவை அவளால தள்ளி போட்டிருக்கோம்….
உனக்கு இரண்டாவது குழந்தை தான் பிரச்சனையா என்பது போல் கேசவன் பார்த்து வைக்க…
புரியுது நீங்க என்ன அர்த்தில பாக்குறீங்கன்னு எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது ...இங்க என் பிரச்சனை இப்போ ரெண்டாவது குழந்தை கிடையாது அவ புருஷனை விட்டுட்டு வந்து இங்க தனியாக இருக்கும்பொழுது நாம மட்டும் எப்படி சந்தோஷமா ரெண்டாவது குழந்தை பெத்துக்க முடியும் சொல்லுங்க அது கௌசியை காயப்படுத்தாது...நம்ம மேல அண்ணனுக்கு அக்கறை இல்லைனு நினைக்க மாட்டாளா... நாம இப்படி தனிமரமா இருக்கும்பொழுது அண்ணன் மட்டும் அவன் லைஃப்பை ஃபுல் ஃபில் பண்ணிட்டு போய்ட்டிருக்கானேன்னு வேதனை படமாட்டாளா…?
ஏற்கனவே பெரியவர் நம்ம குடும்பத்தை பத்தி நினைக்கிற மாதிரியே தெரியல இப்போ நாமளும் நம்ம ஃபேமிலியை பார்த்துட்டு போனா அவளை யார் பாத்துப்பா…
உங்க அம்மாவுக்கும் புத்தி இல்லை உங்களுக்கும் புத்தி இல்லை….பொண்ணு புருஷனோட ஏற்பட்ட மனஸ்தாபத்தில பிறந்த வீட்டுக்கு வந்தா என்ன ஏதுன்னு ரெண்டு பேர்கிட்டயும் விசாரிச்சி நல்ல புத்தி சொல்லி பொண்ணை அனுப்பி வைக்கணும்...இல்லையா அண்ணன்காரன் என்ன ஏதுன்னு விசாரிக்கனும்... தங்கச்சி புருஷன் சரியில்லன்னா..
அவன் செவில்ல விட்டு தங்கச்சி அருமையை புரியவச்சி வாழ வைக்கனும்...இல்லன்னா அத்து விட்டுட்டு வேற வாழ்க்கையை அமைச்சி தரனும்...தங்கச்சி வாழ்க்கையை பத்தின அக்கறை
உங்களுக்கும் இல்லை... அவங்களுக்கும் இல்ல... நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்தா நான் எப்படி சும்மா இருக்க முடியும்...
அதான் உங்க அம்மாவை மட்டம் தட்டறேன்...அதை பாத்தாவது கௌசி கேட்பா...அதை வச்சாவது அவளுக்கு புத்தி சொல்லலாம்னு நினைச்சேன்…
ஆனா இன்னைக்கு உங்க அம்மா பேச ஆரம்பிச்சிட்டாங்க..அந்த வகையில நான் ஜெயிச்சிட்டேன்….
உங்களுக்கும் என்னை மாதிரி
கொஞ்சமாவது மூளை வேலை செஞ்சா ஒழுங்கா உங்க தங்கச்சி வாழ்க்கைக்கு என்ன பண்ணனும்னு வழிய பாருங்க….இல்லனா நான் இப்படிதான் பண்ணிக்கிட்டு இருப்பேன்…
அவளே இந்த வீட்டை விட்டுப் போனா போதும்னு நினைக்கிற அளவுக்கு செய்வேன் என்னை கட்டுப்படுத்திடலாம்னு கனவு காணாதீங்க... என்று கூறவும்
கோபமடைந்த கேசவன் இப்படி எங்க அம்மாவை வேலை வாங்கறதையும் மட்டம் தட்டறதையும் விட்டுட்டு நீயே டைரக்ட்டா கௌசிகிட்ட பேசவேண்டியது தானே...அதை விட்டுட்டு தேவையில்லாம அவளை வம்புக்கு இழுக்கற…
என் தங்கச்சி புருஷன் உனக்கு அண்ணன் தான அவனை நேரில் பார்த்து என்னன்னு நீ விசாரிக்க வேண்டியது தானே…நீ ரெண்டு பேருக்கும் புத்தி சொல்ல வேண்டியது தானே...
எல்லாம் பேசி பார்த்தாச்சு... அண்ணன் என்ன சொல்றேன்னா அவ தான் வீம்புக்காக அங்க வந்து உக்காந்துட்டு இருக்கான்னா... உன் புருஷனும் மாமியாரும் தான் புத்தியில்லாம வீட்டுக்குள்ள வச்சிருக்காங்க அவங்களை முதல்ல வீட்டை விட்டு துரத்திவிடச்சொல்லு…அப்புறம் கௌசி தானா என்னைத்தேடி வருவா...அப்படிங்கறாங்க….
இவகிட்ட அண்ணனை பத்தி பேச போனா அந்த ஆளை பத்தி என்கிட்ட பேசாதீங்க அப்படி பேசுற மாதிரி இருந்தா என்கிட்ட பேசவே செய்யாதீங்கங்கறா... என்னை என்ன பண்ண சொல்றீங்க…
அதான் வேற வழியில்லாம இப்படி நடத்துக்க வேண்டிருக்கு...முதல்ல பொறுப்பான அண்ணனா நடந்துக்கற வழிய பாருங்க அதுக்கு அப்புறம் வந்து எனக்கு பத்தி சொல்லுங்க
என்று கூறியபடி வேகமாக வெளியே வந்தாள்.
அவர்கள் இருவரின் சம்பாஷணைகளை கேட்காவிட்டாலும் மகனுக்கும் மருமகளுக்கும் ஏதோ ஒரு சண்டை நடக்கிறது என லட்சுமி புரிந்துகொள்ள முடிந்தது .
சரி வெளியே வந்ததும் அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று காத்திருக்க... கதவைத் திறந்த ஜானு மாமியாரின் முகத்தை கூட பார்க்காமல் நேராக அவளின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட…
ஜானு...சாப்பிட்டுட்டு டிபன் எடுத்துட்டு போ என்றவரின் குரல் காற்றில் கரைந்தது…
மகளும் சாப்பிடவில்லை... மதியத்திற்கும் எடுத்துச் செல்லவில்லை... இப்போது மருமகளும் சாப்பிடாமல் எதும் எடுத்துச் செல்லாமல் போக லட்சுமி மிகவும் கலக்கமாக வாசற் படியிலேயே அமர்ந்துவிட்டார்.

Last edited: