17.
அலுவலகத்திற்கு உள்ளே சென்ற கௌசிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
கணவன் கொடுத்த பரிசை மற்றவர்களுக்கு காட்டுவதற்கு பயந்து குனிந்த தலை நிமிராமல் அவளது கேபினுக்குள் செல்ல பாதி வழியிலேயே சக தோழியால் தடுத்து நிறுத்தப்பட்டாள்.
கௌசி கங்கிராட்ஸ்…
எதுக்கு என்பது போல பார்க்க…அந்தப் பெண்ணிடம் இருந்து சிறு பொறாமை கௌசியின் முகத்தை ஆராய்ச்சி செய்வதை விட்டிருந்தது.
உன்ன ஹெட் ஆபிசுக்கு மாத்திருக்காங்க..வித் ப்ரமோஷனோட அதுக்கு தான்…தெரியாத மாதிரி கேக்கற…நேத்து ஈவினிங்கே உனக்கு மெயில் வந்திடுச்சி தானே இன்னுமா பாக்காம விட்டிருப்ப…என்று நம்பாத தோணியில் கேட்டு விட்டு சென்றாள்.
குழப்பத்துடன் அவளது டேபிளுக்கு வந்தவள் முதல் வேலையாக கணினியை உயிர்பித்து அவளடைய மின்னஞ்சலை ஆராய்ந்தாள்.
ஆம் உடன் பணி புரிபவள் சரியாக தான் சொல்லியிருக்கிறாள்…ஆனால் தனக்கெதற்கு இடமாற்றம்..அதுவும் பிரமோஷனுடன்..என காலையிலேயே கவலை வந்து ஓட்டிக்கொண்டது.
இங்கே வேலை செய்வதால் தான் தாயும் அண்ணனும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றனர்.
இதுவே வேறு இடம் என்றால் வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
விக்கியின் மற்றொரு அலுவலகமாவே இருந்தாலும் அது தான் அவர்களின் முடிவாக இருக்கும் என்ன செய்வது..
விக்கி வரட்டும் அவனிடமே இது பற்றி பேசலாம் என காத்திருக்க ஆரம்பித்தாள்.
அவளை நெடுநேரம் காக்க வைக்காமல் புயல் போல அலுவலகத்திற்குள் நுழைந்தான் விக்னேஸ்வரன்…
அவனைக்கண்டதுமே கௌசியின் அப்போதைய கவலை காணாமல் போயிற்று.
ஆனால் விக்கியோ கௌசியைக் கண்டதும் பலகீனமடைய ஆரம்பித்தான்.
ஹரியிடம் பந்தாவாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும் படி சவால் விட்டாயிற்று.
அதற்கு கௌசி ஒத்துழைக்க வேண்டுமே…அவளது மனதில் இருப்பதை கூறினால் தானே அவனால் சவாலில் வெற்றி காண முடியும் இதுவரை வாய் திறக்காதவள் இனியா திறக்கப் போகிறாள் என்ற புது பயமும் சேர்ந்து கொண்டது.
அவளை எதிர்கொள்ள பயந்தவன் போல அவனது அறைக்குள் வேகமாக நடந்தான்.
அவன் இருப்பிடம் செல்லும் வரை மௌனமாக நேரத்தை கடந்தவள்.. சற்று நேரம் சென்றதும் கையில் ஒரு கோப்பை தூக்கியபடி விக்னேஷின் அறைக்குள் சென்றாள்.
உள்ளே அவனோ கௌசியிடம் எப்படி ஆரம்பித்து,விஷயத்தை தெரிந்து கொள்வது என்ற குழப்பத்துடனே அமர்ந்திருந்தவனின் முன்பு படபடப்புடன் வந்தவளை யோசனையாக எதிர்கொண்டான்.
வா கௌசி நானே உன்னை கூப்பிடனும்னு நினைச்சுட்டு இருந்தேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட..
ஏதாவது முக்கியமான விஷயமா…ஏன் உன் முகமே சரியில்லை…என கேட்டவன்..
அவளின் முகபாவங்களை கவனித்துக் கொண்டே… இன்னும் காலைல நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருக்கியா.
அதை மறக்க முயற்சி பண்ணு…சில விஷயங்களுக்கு மறதி நல்ல மருந்து..
அது இல்ல விக்கி இது வேற எனும் பொழுது அவளின் பதட்டம் அவனையும் தொற்றியது.
வேறன்னா என்ன..?
நீ மெயில் செக் பண்ணலையா.. என்னை ஹெட் ஆஃபீஸ் மாத்திட்டாங்க எனும் பொழுது அவளின் தொண்டை கமர தொடங்கியிருந்தது.
வேகமாக கணினியை உயிர்ப்பித்தவனின் கைகளும் ஏனோ நடுங்க தொடங்கியிருந்தது.
ம்ப்ச் என்று தலைகோதியவனின் கண்களில் சத்தியமாய் கௌசியை எதிர்கொள்ளும் துணிவில்லாமல் போய்விட்டது.
கௌசி இது அப்பாவோட அஃபிஷியல் மெயில் ஐடில இருந்து வந்திருக்கு…அதனால என்னால எதும் செய்ய முடியாது..என்றவனுக்கு தெரியாமல் இல்லை தந்தை ஏன் இவ்வளவு சீக்கிரமாக கௌசியை மாற்றியிருக்கிறார் என்று..அவருக்கு தான் இவளை சுத்தமாக பிடிக்காதே.. பிறகெப்படி விக்கி அவ்வளவு கூறியும் அதை கண்டு கொள்ளாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாராம்.
இப்போ என்ன செய்யறது விக்கி என்று சிறுபிள்ளையாய் பரிதவித்தபடி கேட்டாள்.
அப்பா பேச்சை மீற முடியாது கௌசி..ஏற்கனவே இதுபத்தி அப்பாட்ட பேசிட்டேன்…மறுபடியும் பேசினா சரிவராது.
அப்போ என்னை மாத்த போற விஷயம் உனக்கு ஏற்கனவே தெரியுமா..?
****
பதில் சொல்லு விக்கி..ஏன் இதை என்கிட்ட முன்னமே சொல்லல…சொல்லிருந்தா நான் மென்டலி ஃபிரிப்பேர் ஆகிருப்பேன்ல…ஏன் மறைச்ச என்று கேட்டவளிடம்.
ஹெட் ஆஃபிஸ்க்கு ஒரு கேண்டிடேட் வேணும்னு அப்பா கேட்டாங்க நீயா இருந்தா நல்லாயிருக்கும்னு பீல் பண்ணினாங்க நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் அதுக்கப்புறம் அப்பாவும் என்னமோ பண்ணிக்கோன்னு போயிட்டாங்க .
ஆனா உன்னை தீடிர்னு மாத்துவாங்கன்னு எனக்கு தெரியாது தெரிந்திருந்தா கண்டிப்பாக நான் தடுத்திருப்பேன்.
இப்போ உன்னால எதும் செய்ய முடியாதா?.என மீண்டும் ஆரம்பித்தாள்.
அப்பா பேச்சை மீற முடியாது கௌசி என தலைகுனிந்தபடி கூறவும்.
கௌசியின் கண்களை உடனே நீர் நிறைத்தது..அதை சமாளிக்க தெரியாமல் வேகமாக அவளின் இருக்கைக்கு நடந்தாள்.
செல்லும் அவளை இயலாமையுடன் பார்த்தவன் உடனடியாக தந்தையை அழைத்தான்.
அவனது அழைப்பிற்காக காத்திருந்தது போலவே அவரும் உடனே ஏற்றார்.
அவர் என்ன விஷயம் விக்னேஷ் என கேட்டு முடிக்கும் முன்னே.
ப்பா அவ்ளோ தூரம் உங்ககிட்ட சொல்லியும் நீங்க கேக்கலல்ல…எனக்காக இதை கூட பண்ண முடியாதா?.என்று கேட்டவும்.
மகன் எதைப்பற்றி பேசுகிறான் என புரிந்து கொண்டவர்.
அவளை இங்க அனுப்பறதுல உனக்கேன் இவ்ளோ கஷ்டம்..உன் ஆஃபீஸ்ல வேலை செய்யற எல்லாருமே எப்போ டா ஹெட் ஆஃபீஸூக்கு மாத்துவாங்கன்னு காத்திட்டு இருக்காங்க நீ என்னென்னா அவளுக்கு கிடைக்கற நல்ல வாய்ப்பை கெடுக்கறது போல பேசிட்டு இருக்க.
அதான் பா நானும் கேட்கிறேன் நம்ம ஆபீஸ்ல இத்தனை பேர் இருக்கும்போது நீங்க ஏன் கௌசி மட்டும் தான் வேணும்னு அடம் பண்றீங்க .
ப்ளீஸ் பா அவ முகத்தை என்னால நேருக்கு நேரா பார்க்க முடியல..பாவம் பா அழுகையை முழுங்கிட்டு எதுவும் பேசாம போறா.அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்றது.
நீ எதுக்காக அவளுக்கு ஆறுதல் சொல்லணும்.. அவ நம்ம ஆஃபீஸ்ல சாதாரண ஒரு ஸ்டேஃப் அவ்ளோ தான்...அந்த அளவுக்கு அவளை நினைச்சா போதும் வேற ஏதும் வேணாம்.
ப்பா எங்க நட்பை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி பேசறது சரியா என தந்தையிடன் ஆதங்கமாக கேட்டான்.
டேய் விக்கி எதுவா இருந்தாலும் அளவோட இருக்கனும் அது மீறும் போது பார்க்கவும் கேட்கவும் சகிக்காது உங்க நட்பை போல..
ப்பா உங்க மனசுல வேற எதுவோ இருக்கு அதை வெளிப்படையா சொல்லுங்க..அதை விட்டுவிட்டு கௌசியை கார்னர் செய்யாதீங்க.
என்ன இருக்குங்கறதை உன் தோழிகிட்டயே கேளு..
என்ற படி அழைப்பை தூண்டித்தார்.
நெற்றியை விரல் கொண்டு நீவி விட்டவன் கௌசியை அவனது அறைக்கு அழைத்தான்.
முகம் சற்று தெளிவுற்றுப்படி நிதானமாக வந்தவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
கௌசி நீ ஏதோ முடிவெடுத்துட்ட போல..
ம்ம்.. நான் ஹெட் ஆஃபீஸ் போக மாட்டேன் விக்கி..நீ எனக்காக முடியாதுன்னு மெயில் பண்ணிடு..
இது அப்பாவோட முடிவு..இதுல எப்படி நான்..
ஆனா இந்த ஆஃபீஸ் இன்சார்ஜ் நீ தானே யாரை வச்சிக்கனும் யாரை அனுப்பனுங்கற முடிவு எடுக்கற அதிகாரம் உனக்கு இருக்குல்ல..
நீ சொல்றது சரிதான் கௌசி ஆனால் இது அப்பா பர்சனலாவே என்கிட்ட கேட்டுக் கொண்டது என்னால அவரோட பேச்சை மீற முடியாது.
ஓகே விக்கி அப்படின்னா என்னோட ரெஸிகினேஷன் லெட்டர் அனுப்புறேன் நீ அக்செப்ட் பண்ணிக்கோ..
அப்படியே அறைஞ்சேன்னா பாரு…லூசு தனமா உளறாத.
இவ்ளோ நல்ல வேலை விட்டுட்டு நீ என்ன பண்ண போற.
என்னமோ பண்றேன் விக்கி. அதை பற்றி உனக்கு என்ன கவலை .இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை தேடிக்க போற அப்படி இல்லையா கடைசி வரைக்கும் அண்ணி கிட்ட திட்டு வாங்கிகிட்டு என் வீட்டுல நான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிறேன் நீ எனக்காக கவலைப்படாத.
ம்ம்…என்று கோபத்தை அடக்க தெரியாத விக்கி ஆழ மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்து கொள்ள முயன்றான்.
பிறகு அவளிடம் கெஞ்சும் குரலில் ப்ளீஸ் கௌசி கொஞ்ச நாள் அங்க போ.. அதுக்கப்புறம் நானே உன்னை கூப்பிடுகிறேன் அப்படி இல்லையா நான் அந்த ஆபீஸ் வந்துருவேன்.
உன் அப்பா ரெண்டுக்குமே ஒத்துக்க மாட்டார் .
எதை வச்சி அப்படி சொல்லற..
சிலதெல்லாம் அப்படிதான் விக்கி..நீ ஆராய்ச்சி பண்ணாத..
என் அப்பாவை பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுற..
தெரியும் விக்கி உன்னை விட உன் அப்பாவ பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் என்றவளை ஆழமாக பார்த்தான்.
அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் .. நான் கேபின் போறேன் என்று நகர்ந்தவளை..
நில்லு என்று கட்டளை தோணியில் கூறினான்.

Last edited: