கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 18

Akila vaikundam

Moderator
Staff member
18

என்ன என்பது போல் திரும்பி பார்த்தவளருகில் நிதானமாக நடந்து வந்தவன் அழுத்தமாக அவளின் முகத்தை பார்த்தபடியே..


என்னை விட
அப்பாவை பற்றி உனக்கு ரொம்ப நல்லா தெரியும்னா என்ன அர்த்தம்.?


என்ன கேள்வி இது அபத்தமா இருக்கு இப்படியெல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்தாதே.


சரி..நேரடியாவே கேக்கறேன்,என் அப்பா உன்னை இங்கிருந்து எதுக்காக அனுப்பறாருங்கற விஷயம் உனக்கு தெரிந்திருக்கு..


****


கௌசி பதில் சொல்லு..


என்ன சொல்ல சொல்ற விக்கி நீ எவ்ளோ அபத்தமான கேள்வி கேட்டுட்டு இருக்கேன்னு தெரியுமா..உன் அப்பாவுக்கு சுத்தமா என்னை பிடிக்காது..
இது ஒரு காரணம் போதாதா..?


அது எனக்கும் தெரியும்..வேற ஏதோ காரணம் இருக்கு…


அப்போ கேக்க வேண்டியது உன் அப்பாவை..?


ம்ம்..கேட்டாச்சி…பதில் உன்கிட்ட இருக்குங்கறாரு..



என்ன..?என் கிட்டயா…என ஆச்சர்யம் காட்டியவள்..நொடியில் மாற்றிக் கொண்டு..இயல்பாக எது எப்படியோ என் முடிவை சொல்லிட்டேன் அப்புறமா உன் விருப்பம்..


கேள்விக்கு பதில் இன்னும் சொல்லலையே கௌசி.


தெரிஞ்ச விஷயத்தை தெரியாதது போல கேக்கற.. என்ன பதில் சொல்லறது.. என்றவளை பார்த்த வண்ணமே விக்கி நிற்க..


சில நேர மௌனத்திற்கு பிறகு மிக மெதுவாக இந்த ஆஃபீஸ்ல ஓட்டு மொத்தமா எல்லாருக்கும் தெரியும் நீயும் நானும் ரொம்ப க்ளோஸ் ..இது போதாதா உன் அப்பா என்னை மாத்த..
இதை தவிர்த்து வேற காரணம் இருக்க முடியாது விக்கி.


பதிலை கேட்டு முறுவலித்தபடியே..
இப்போ நீ தான் அபத்தமா பதில் சொல்லற கௌசி..என்னமோ நேத்துதான் நீயும் நானும் ரொம்ப க்ளோஸ் ஆன மாதிரி பேசிட்டு இருக்க…


நம்ம காலேஜ் படிக்கிற டேஸ்ல இருந்தே திக் ப்ரண்ட்ஸ் கிட்டத்தட்ட ஏழு வருஷத்துக்கு மேல ..


சொல்லப்போனா நீ வீட்ல இருக்கறன்னு அப்பா கிட்ட சொன்ன போ வேலைக்கு வர்ற ஐடியா இருந்தா நம்ம ஆஃபீஸ்க்கு வர சொல்லுன்னு சொன்னதே என் அப்பா தான் .


அப்படிபட்டவர் இன்னைக்கு உன்னையும் என்னையும் பிரிக்கணும்னு சில்லியா நினைக்க மாட்டாங்க.


அப்படி நினைச்சா என்னை வேணும்னா ஹெட் ஆபீஸ் மாத்தியிருப்பாங்க அப்படி இல்லையா என்னை ஃபாரினுக்கே பேக்கப் பண்ணி இருப்பாங்க .


வேற என்னவோ இருக்கு..என்ன அது..


***


கௌசி என்று அழைத்தவனின் பார்வையில் அப்படியொரு வலி இருந்தது.



அவனில் நிலை கண்டு சற்று தடுமாறியவள் மெல்லிய குரலில் ஏன்னா என் கல்யாணத்துக்கு முன்னாடியே என் கணவரும் உன் அப்பாவும் ஒரு நல்ல பிசினஸ் பிரண்ட்ஸ்.


நீ என் கல்யாண ரிசப்ஷனுக்கு தான் வந்த..


ஆனா உன் அப்பா காலையில் முகூர்த்தத்துக்கே வந்தாங்க.. நான் கூட எனக்காக வந்ததா தான் நினைச்சி சந்தோஷப் பட்டேன்..ஆனா ஒரு பிசினஸ் பார்ட்டில உன் அப்பாவையும் என் கணவரையும் சேர்ந்து பார்த்த பிறகு தான் எனக்கே புரிஞ்சது அவங்க ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஸ் அப்படிங்கற விஷயம்.


இப்போ நான் என் கணவரை விட்டு பிரிஞ்சிருக்கேன் ஆரம்பத்தில் எனக்கு உதவலாம்னு நினைச்சிருப்பாரு.. இப்போ வேலை இல்லாம என்னை முடக்கி வச்சா வழியில்லாம மறுபடியும் என் ஹஸ்பண்டு கிட்ட போவேன்னு நினைக்கிறார் வேற ஒன்னும் இல்ல விக்கி என உண்மையை யோசிக்காமல் பட்டென்று போட்டு உடைத்தாள்.


என் அப்பாவும் உன் ஹஸ்பண்டும் பிரண்ட்ஸா இதையேன் நீ இவ்வளவு நாளா என்கிட்ட இருந்து மறைச்ச.


உனக்கு தெரிந்திருக்கும்னு நினைத்தேன்..


இரண்டாவது பிசினஸ்ல இருக்கும்போது ஒருத்தருக்கு ஒருத்தர் தொழில் முறையில நட்பா இருக்கிறது இயல்பு தானே..

அவரோட பர்சனலையும் என்னையும் உன் அப்பா மிங்கிள் பண்ணுவார்னு எதிர்பார்க்கல…


ம்ம்…புரியுது..என் அப்பா மட்டும் பர்சனலையும் உன்னையும் மிங்கிள் பண்ணல..
வேற ஒருத்தரும் கூட அவரோட பர்சனலையும் ‌நீ இங்க வேலை பாக்கறதையும் மிங்கிள் பண்ணறது போல தோணுது.

வேற யாரு…நான் இங்க வேலைக்கு வர்றதை பிடிக்காதவங்க..என யோசித்தவள் சட்டென்று விக்கி நீ…என இழுக்கவும்..


யெஸ் நான் மிஸ்டர் ஹரியை மீட் பண்ணினேன் என்று கூறவும் அதிர்ச்சியில் இமைக்க மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.


எதுக்காக..அவர் உன்னை துளி கூட மதிச்சிருக்க மாட்டாரே…ஏன் அவரைத் தேடி போன..என உள்ளே சென்ற குரலை கடினப்பட்டு வேளியிழுத்து பேசினாள்.


உனக்காக தான் போனேன்…உன்னோட இந்த நிலைக்கு நியாயம் கேட்கப் போனேன்.


ஏ விக்கி இப்படி செஞ்ச போறதுக்கு முன்ன நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல..

சொல்லியிருந்தால் போக விட்டிருப்பியா..?


ம்ப்ச் என்ற சலித்தவள்..
ரொம்ப பேசிட்டாரா..?


அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதான் இல்லையா..? என அவளின் முகத்தைப் பார்த்து விக்கி கேட்கவும்.


நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்ற என்ன சற்று கோபத்துடனே பதிலைக் கொடுத்தாள்.


உன்னோட கேள்விக்கான பதிலை தான் நான் சொல்லிட்டு இருக்கேன் .நீ என்ன கேட்ட கொஞ்சம் யோசிச்சு பாரு.. மிஸ்டர் ஹரி என்னை வார்த்தைகளால வதம் செஞ்சாரான்னு கேட்க வந்த.


சும்மா பார்க்க போன என்னை எதுக்காக அவர் அப்படி பண்ணனும் அப்போ என்னை அவருக்கு பிடிக்காது ரைட். என அவளின் முகத்தைப் பார்த்து கேட்கவும்.


பேசி முடிச்சிட்டியா விக்கி கொஞ்சம் என்னை பேச விடுறியா நீயா கற்பனை பண்ணி ஏதேதோ பேசிட்டு இருக்க.
ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கோ என் கணவர் என்ன பிடிச்சு போயி அதீத அன்பால என்னை பிரிஞ்சு இருக்கல.

என்னை பிடிக்காததால பிரிஞ்சு இருக்காரு.


என் கிட்ட பேசறவங்க யார் அவரை பார்க்க போனாலும் அவர் அப்படித்தான் பண்ணுவாரு இந்த லாஜிக் கூட தெரியாம நீ இந்த அளவு ரியாட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல.
நீ வொர்க் பாரு நாம ஈவினிங் பேசிக்கலாம் என்றபடி நகர்ந்தவளை
.



கௌசி ஒரு நிமிடம் ‌என்றவன் அவளின் முகம்பார்த்து என்ன பேசினேன்னு கேட்க மாட்டியா..?

தொடரும்..
 
Last edited:
Top