24.
அவன் கூறிய ஹோட்டல் வாசலுக்கு அவளது இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தவள் மீண்டும் விக்கிக்கு அழைத்தாள்.
விக்கி நான் வந்துட்டேன்.
ரிசப்ஷன்ல வெயிட் பண்ணு மீட்டிங் முடிஞ்சதும் வரேன் என்றான்.
சீக்கிரமா வா என்றபடி அவன் சொன்ன இடத்தில் காத்திருக்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் வேகமாக வந்தவன் கோபத்துடனே எதுக்காக இங்கெல்லாம் வர்ற..என கடிந்து கொள்ள தவறவில்லை.
இறுகிய முகத்துடன் அவனை எதிர்கொண்டவள் நேரடியாக எதுக்காக உன் அம்மாகிட்ட அப்படி சொன்ன என கேட்டாள்.
நான் என் அம்மாகிட்ட நிறைய சொல்லுவேன்.. நீ எதை பத்தி கேக்குற.
தெரியாத மாதிரி நடிக்காத விக்கி எனக்கு வர கோபத்துக்கு.. என கிட்டத்தட்ட கத்தினாள்.
ஷ்ஷ்…இது பப்ளிக் பிளேஸ் பொறுமையா பேசறதா இருந்தா கேட்கறேன் இல்லனா கிளம்பிட்டே இருப்பேன்.
ஏன் விக்கி எதுக்காக இப்படி செஞ்ச.. எனக்காக உன் கல்யாணத்தை வேணாம்னு சொல்லியிருக்க இதை உன் அம்மா கூப்பிட்டு சொல்லும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..
கல்யாணம் வேணாம்னு சொல்லறதுக்கான காரணத்தை என்னால ஏத்துக்கவே முடியல ஏன்டா இப்படி செஞ்ச என்று சொல்லும் பொழுதே குரல் உடைந்து இருந்தது.
இங்க பாரு கௌசி அம்மா கிட்ட பல முறை கல்யாணம் வேணாம்னு சொல்லிருக்கேன்.. அப்பெல்லாம் சரின்னு கேட்டுகிட்டாங்க.. இந்த முறை சரியான காரணத்தை சொல்லு அது நியாயமானதா இருந்தா ஒத்துக்குறேன்னு சொன்னாங்க..
நான் காரணத்தை சொன்னேன் ஒத்துக்கிட்டாங்க..தட்ஸ் இட் என்றான்.
அப்போ இத்தனை நாள் நீ கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கு காரணம் நான் தானா என கேட்கவும்.
சற்றும் தாமதிக்காமல் ஆமாம் என பதில் வந்தது அவனிடத்திலிருந்து.
ஏன் விக்கி எனக்கு இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு நீ வேற இப்போ புதுசா கிளப்பிட்டு இருக்க.
உன் அம்மா என்கிட்ட போன் பண்ணி கேக்குறாங்க.
அவன் சொன்னதால தான் நான் இந்த கல்யாணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போனேன் .
கிட்டத்தட்ட எல்லாம் முடிவாயிருச்சு நிச்சய தேதி குறித்து கல்யாண மண்டபம் பாத்துட்டேன்..
ஆனா கடைசி சமயத்துல வந்து எனக்கு இந்த கல்யாண வேண்டாம் கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்றான்.
என்னன்னு காரணம் கேட்டா கௌசி தனியா இருக்கா அவ அப்படி இருக்கும்போது நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்க முடியும்னு என்னை திருப்பி கேட்கிறான்.
நான் பொண்ணு வீட்டுக்கு என்ன பதில் சொல்லட்டும்..
உங்க நட்புக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கிக்கிறதா..
இல்ல என் புள்ள வாழ்க்கை மட்டும் தான் முக்கியம்னு அவனை பத்தி மட்டும் கவலை படறதான்னு கேட்கறாங்க..
என்னோட இடத்துல வேற எந்த பொண்ணு இருந்தாலும் நேரடியா சண்டை போட்டு இருப்பாங்களாம்.. நான் என்கிறதால தான் என்கிட்ட தன்மையா சொல்லறாங்களாம்.
உன் வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு தெரியாது அதை நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல அது உன்னோட தனிப்பட்ட விஷயம் ஆனால் அந்த தனிப்பட்ட விஷயம் என் பையனையோ என் குடும்பத்தையோ பாதிக்கிறதை நான் விரும்பல கௌசல்யா.
எப்படி அவன் உனக்காக அவனோட வாழ்க்கையை தியாகம் பண்ண துணிஞ்சிட்டானோ அப்பவே அவனுடைய வாழ்க்கை உன்னோட ரெஸ்பான்ஸ்பிலிடி ஆயிடுச்சு.
பொறுப்பா ஓரு நல்ல பிரண்டா அவனுக்கு புத்தி சொல்லி இந்த கல்யாணத்தை ஒத்துக்க வை..இன்னும் பொண்ணு வீட்ல இதை பத்தி பேசல..
உன்மேல எனக்கு அவ்ளோ நம்பிக்கை என்றவர் சில வினாடி மௌனத்திற்கு பிறகு இதுக்காக தான் நான் உனக்கு போன் பண்ணினேன்.
ஒரு அம்மாவா,உன் ஆன்ட்டியா உன்கிட்ட உதவி கேட்டு இருக்கேன் செய்வேனு நம்பறேன் என்றபடி அழைப்பை துண்டித்தார்.
இப்போ நான் உன் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லட்டும்..
*****
சொல்லு விக்கி பொண்ணு வீட்ல எதுவுமே சொல்ல வேணாம் அப்படியே இது ஏற்பாட்டை தொடருங்கன்னு சொல்லட்டுமா.
வேணாம் கௌசி..
ஏன் அந்த பொண்ணை பிடிக்கலையா.?
எங்கோ பார்த்தபடி பிடிக்கலைன்னு சொல்றதுக்கு எந்த காரணமும் இல்லை போட்டோ காமிச்சாங்க ஓகே தான் என்று சொல்லவும்.
அப்புறமா என்ன பிரச்சனை.. சும்மா என்னை காரணம் காட்டாத விக்கி என்னால் இதை ஏத்துக்க முடியாது.
நீயும் நானும் ஒன்னா படிச்சோம், நெருங்கிய நண்பர்கள் தான்..அதுக்காக ஒருத்தருக்காக இன்னொருத்தரோட வாழ்க்கையை அழிச்சுக்கணும்ங்கற அவசியம் கிடையாது.
என்னோட வாழ்க்கை சரியா அமையல ..அது விதி. அதுக்காக உனக்கொரு வாழ்க்கை வரும்போது வேணான்னு ஒதுக்கி வைக்கிறது முட்டாள்தனம் அந்த முட்டாள் தனத்தை நீ செய்யாதே.
பரவால்ல உன் விஷயத்துல நான் முட்டாளாக இருந்துட்டு போறேன் பிரெண்டா இருந்துதான் ஒன்னும் சாதிக்க முடியல அட்லீஸ்ட் முட்டாளா இருந்தாலாவது உன் மனசை மாற்ற முடியுமான்னு பார்க்கிறேன்.
எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற என்னால மறுபடியும் மிஸ்டர் ஹரியோடு சேர்ந்து வாழ முடியாது உனக்கு புரியுதா இல்லையா நான் அவரோட சேர்ந்து வாழ்ந்தா தான் உன் கல்யாணம் அப்படின்னா கடைசி வரைக்கும் உனக்கு அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது டா.
நீ இப்படி தனியா இருக்கிறதுக்காகவா நான் பிரண்டா இருக்கேன் நீ இந்த விஷயத்துல பிடிவாதமா இருந்தா அப்புறம் நான் வேற மாதிரி முடிவுகள் எடுக்க வேண்டியது வரும்.
ப்ளீஸ் முதல்ல அதை செய்..என் கண்ணு முன்னாடி நீ தனியா கஷ்டப்படறதை என்னால பாத்துட்டு இருக்க முடியல.
நீ என் கூட இருக்கும் போது சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன் அவ்ளோ தான்..
தென்.. நான் ஒன்னும் மிஸ்டர் ஹரியோடு உன்னை சேர்ந்து வாழ சொல்லல அவரை பிடிக்கலைன்னா டிவோர்ஸ் கொடுத்துடு.
உனக்காக வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ அதைதான் சொல்ல வர்றேன் ..நீ இப்படி தனியா இருக்கும் போது நான் மட்டும் எப்படி ஒரு குடும்பமா இருக்க முடியும்.
இது தேவையில்லாத வறட்டு பிடிவாதம்.. ஏற்கனவே ஒருமுறை போட்டுக்கிட்ட சூட்டோட காயமே ஆறல ..
அதுக்குள்ள அடுத்த சூட்டை போட்டுக்க சொல்ற எல்லாத்தையும் விட எனக்கு ஒரு பொண்ணு இருக்கா மறந்துட்டியா நீ.
ஏன் குழந்தை வெச்சிருக்கிற யாருமே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா.. வர்றவங்க கிட்ட தெளிவாக சொல்லுவோம்.
அனு கடைசி வரைக்கும் உன்னோட தான் இருப்பான்னு அதுக்கு ஒத்துக்குறவங்களை கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்கானவனை தேடி கண்டுபிடிக்கிற வேலை என்னோடது .
உன்னோட ரூட் கிளியர் ஆனதுக்கு அப்புறம் அடுத்து என் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்.
அப்போ இது தான் உன் பதிலா.. நான் ஆண்ட்டிகிட்ட எவ்வளவு பெருமையா சொன்னேன் தெரியுமா நீங்க கவலைப்படாதீங்க ஆன்ட்டி நான் சொன்னா விக்கி கண்டிப்பா கேட்பான் எனக்காக அந்த பொண்ணு கழுத்துல கண்டிப்பா தாலி கட்டுவான்னு என் நம்பிக்கையை இப்படி காலுல போட்டு மிதிச்சிட்டியே..
நான் கூட தான் அன்னைக்கு மிஸ்டர் ஹரி கிட்ட பெருமையா சொல்லிட்டு வந்தேன் கௌசி அவளோட தனிமைக்கான காரணத்தை என்கிட்ட சொல்லுவான்னு..அப்போ என் நம்பிக்கை கூட இப்படித்தான் காலுக்கு கீழே மிதிவாங்கிச்சி.
விக்கி நீ என் மேல வச்சிருக்கற நம்பிக்கையும் நான் உன் மேல வச்சிருக்கற நம்பிக்கையும் வேற வேற.
நீ என்னை காரணம் காட்டி உன் அம்மாவை ஏமாத்திகிட்டு இருக்கிற... அப்படி பண்ணாம கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்..
ஆனா நீ என்னோட அந்தரங்கத்தை பத்தி கேட்டுட்டு இருக்க..
உனக்கு புரியுதா ஒரு பொண்ணோட அந்தரங்கத்தை எல்லாரும் முன்னாடியும் போட்டு உடைக்க முடியாது.
சில விஷயங்களை எல்லாரும் முன்னாடி சுலபமா போட்டு உடைக்க முடியாது .
நீ சுலபமா சொல்லிடற..கௌசல்யா தனியா இருக்கா அவ அப்படி இருக்கும்போது எனக்குனு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாதுனு..
அது போல நீ கல்யாணம் பண்ணிக்கணும் என்பதற்காக சுலபமா என்னோட ஒட்டுமொத்த அந்தரங்கத்தையும் வந்து உன்கிட்ட சொல்ல முடியாது .
சில விஷயங்கள் மனசுக்குள்ள இருக்கிறது தான் அழகு அது வெளிய வந்துருச்சுன்னா அசிங்கம் புரிஞ்சிக்க.
ஓகே கவுசல்யா உன்னோட பிடிவாதத்தை நீ காமிச்சிட்ட என்னோட முடிவையும் நான் சொல்லிடறேன்.
எத்தனை வருஷம் ஆனாலும் சரி உனக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்டு நீ சந்தோஷமா இருந்தா மட்டும்தான் என்னால் ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.
இதை நட்புக்கு செய்ற மரியாதையா பாக்கறேன்.. நீ மிஸ்டர் ஹரியோட சேர்ந்து வாழறது அவருக்கு டிவோர்ஸ் கொடுக்கிறது, இல்ல வேறொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறது இது எல்லாமே உன்னோட தனிப்பட்ட விஷயங்கள்.
இதில் எதுவும் நான் தலையிட போறது இல்லை ,அதேசமயம் இனிமே உன் அந்தரங்கத்தை பத்தியும் நான் கேட்க போறது கிடையாது. எனக்கு அது தேவையும் இல்லை.
ஆனால் என் முடிவு இதுதான்.. ஓகேவா கிளியர் ஆயிடுச்சா என் அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டு.
நீ சொன்னா உனக்காக நான் தாலி கட்டுவேன்னு நினைச்சது பொய்னு புரியவை..
போலியான எந்த ஒரு அக்ரிமெண்ட்டும் எங்களுக்குள்ள இல்லம்மா.. என் பேச்சை உங்க புள்ள கேட்கலைன்னு .
அம்மா ஏதாவது என்கிட்ட பேசினா நான் அவங்க கிட்ட மேற்கொண்டு பேசுகிறேன் வா கிளம்பலாம்..என்றவன் அவனது வாகன இருப்பிடத்தை நோக்கி நடந்தான்.
பின்னாலே சென்றவள் கோவிச்சிகிட்டியா.?
ச்சே ச்சே நீ என்ன புதுசா வா இப்படி முகத்தில் அடிச்ச மாதிரி பேசுற நான் உன்கிட்ட கோவிச்சிக்க.
உன்னோட பழகின இத்தனை வருஷத்துல இதை மட்டும் தானே செஞ்சிட்டு இருக்க.
தெரிஞ்சு தானே ஃப்ரெண்ட் ஆனேன்..இப்போ இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்காக எல்லாம் பிரண்ட்ஷிப்பை கட் பண்ண முடியாது என்று வேடிக்கை பார்த்தபடியே பதில் கொடுத்தான்.
என்னால ஹரியை டிவோர்ஸ் பண்ண முடியாது விக்கி.. அதே சமயம் அவரோட சேர்ந்தும் வாழ முடியாது டா.
அது உன் விருப்பம்… உன் பர்சனலும் கூட எனக்கு தேவையில்லை.
அது உண்மைனா நீ கல்யாணத்துக்கு ஓத்துக்கோ.. நான் ஆன்ட்டி கிட்ட இப்பவே சொல்றேன் விக்கி ஒத்துக்கிட்டானு என்றபடி அவளின் கைபேசியை எடுக்க..
அதை தடுத்தவன் ரொம்ப ஸ்மார்ட்னு நினைப்பா.. நீ படிச்ச அதே காலேஜ்ல தான் நானும் படிச்சேன்.
எப்படி உன்னால உன்னோட முடிவுல உறுதியா இருக்க முடியுதோ அதே மாதிரி தான் என்னாலயும் என்னோட முடிவுல இருந்து மாற முடியாது புரியுதா.
இனி ஒரு முறை அம்மா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்க கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டுகிட்டு வராத.
நான் சொன்னா தாலி கட்டுவான்னு நீயா எல்லாருக்கும் உறுதிமொழியை வாரி வழங்காத.
எப்படி உனக்குன்னு ஒரு பர்சனல் ஸ்பேஸ் இருக்கோ அதே மாதிரி எனக்கும் ஒரு பர்சனல் ஸ்பேஸ் இருக்கு.
சரியோ தப்போ நீ என்கிட்ட வந்துட்ட உனக்கு ஒரு நல்லது நடக்காம கண்டிப்பா எனக்கான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடியாது .அதுல நான் உறுதியா இருக்கேன் .
நீ கேட்கலாம் கல்யாணம் மட்டும் தான் பொண்ணுக்கு வாழ்க்கையா..? தனியா இருந்து சாதிக்க முடியாதான்னு பல பேரை மேற்கோள் காட்டாலாம்.
அதெல்லாம் சொல்றதுக்கும், கேக்குறதுக்கும், படிக்கறதுக்கும் ,பாக்குறதுக்கும் மட்டும் தான் நல்லா இருக்கும் .
நம்ம கூட இருக்கிறவங்க அதை பண்ணும் போது ரசிக்க முடியாது.ஏத்துக்க மனசு ஓப்பாது.
நமக்கு அப்புறம் இவளோட லைஃப் என்ன ஆகும் அவளோட குழந்தை நாளைக்கு செட்டில் ஆனதுக்கப்புறம் தனியா கஷ்டப்படுவாளேன்னு பல விஷயங்கள் மண்டைக்குள்ள உருட்டிக்கொண்டி
ருக்கும்.. இதற்கெல்லாம் ஒரு தீர்வு உன் மனசை நீ மாத்திக்கிறது தான் .
நீ மாத்திக்காத வரைக்கும்
எத்தனை வருஷம் ஆனாலும் சரி என் முடிவும் மாறாது.
தொடரும்.

Last edited: