கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 25

Akila vaikundam

Moderator
Staff member
25.


ஏன் இப்படி வீண் பிடிவாதம் பிடிக்கிற என்று கேட்டவளின் கேள்வியை காதில் வாங்காதவனாக டூவீலர்ல தான வந்த அதை டிரைவர் அண்ணா ஆபீஸ் எடுத்துட்டு வந்துருவாங்க நான் உன்னை ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன் என்றபடி காரின் அருகினில் சென்றான்.


விக்கி நம்மளோட ஒன்பது ஆண்டுகால நட்பை அசைச்சு பாக்குது உன்னோட நடவடிக்கை என்றாள்.


மே பீ என்றான்.


நீ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தா நான் ஆபீஸ் விட்டு போய்விடுவேன் ,எப்பவுமே உன் முகத்தில் முழிக்க மாட்டேன், நீ தேடினாலும் கிடைக்காத தூரத்துக்கு போயிடுவேன் என சற்று மிரட்டி பார்த்தாள்.


ரொம்ப நல்லது.. அதுக்கப்புறம் என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்த மாட்டாங்க.


டேய்.. என அடக்கப்பட்ட கோபத்துடன் கத்தியவள் அவன் திரும்பி முறைக்கவும் கெஞ்சும் குரலில்.. ப்ளீஸ் டா..

நீ எவ்ளோ கெஞ்சினாலும் என் முடிவு மாறாது. நல்லதோ கெட்டதோ நீயும் நானும் நண்பர்கள் ஆயிட்டோம் ஒருத்தரோட வாழ்க்கை சரியில்லாமல் போகும்போது இன்னொருத்தர் அதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


ஒருவேளை என் இடத்துல நீ இருந்தா கூட இதை தான் செய்து இருப்ப கௌசி.


என்னோட வாழ்க்கையே சரி பண்ணதுக்கு அப்புறம் தான் உனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்திப்ப ..


எனக்கொரு வாழ்க்கை அமையனும்னா அது உன் கையில தான் இருக்கு இனி இது பற்றி பேசாதே என்று கூறியபடி வாகனத்தில் ஏறி அமர்த்தவன் அவள் ஏறுவதற்காக கதவை திறந்து விட்டான்.


அவனது அன்பில் அக்கறையில் நெகிழ்ந்து போனவள் காருக்குள் ஏறி அமர்ந்ததும் ஆஃபிஸ் வேணாம் விக்கி வேற எங்காவது கூட்டிட்டு போறியா..என கேட்டாள்.


யோசனையாக அவளை பார்த்தவன் என்னாச்சி…தீடிர்னு வெளிய போகனும்னு சொல்லற..


உன்னை மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க நான் போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் பண்ணி இருக்கேன்னு தெரியல எனக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம உன்னோட வாழ்க்கையை தூக்கி போடற..உன் அம்மாவை காயப்படுத்தற..உன் அப்பாவோட சண்டை போடற.. எல்லாத்தையும் விட என்னை அடிச்சாருங்கற காரணத்துக்காக என் புருஷன் கிட்டயே போய் நியாயம் கேட்டுட்டு வர்ற..


இவ்வளவு பாசம் வைத்திருக்கிற உன்கிட்ட நான் என் பர்சனலை சொல்லலாம் தப்பில்லை.



அதிர்ச்சியில்அவளைப் பார்த்தவன் நீ எதுவும் சொல்ல வேண்டாம் கௌசி.. உன்னை காயப்படுத்தற எந்த விஷயத்தையும் நான் தெரிஞ்சுக்க விரும்பல என்று சொல்லவும்.


அவனின் கைகளை பிடித்தவள் நான் சொல்லப் போற விஷயத்தை முழுசா கேட்ட பிறகு நீ உன் கல்யாணத்தை தள்ளி போடக்கூடாது அது மட்டும் இல்லை இப்படி பாராமுகமா எப்பவும் என்கிட்ட நடந்துக்க கூடாது.ப்ராமிஸ் பண்ணு என்றாள்.


நான் தெரிஞ்சுக்கவே வேணாம் என்கிறேன் …நீ சத்தியம் பண்ண சொல்லற..என்றவன் அவளின் முகம் பார்த்தபடி அமர்ந்தான்.


என்னதான் வாய் வார்த்தையாக பிரிவுக்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறினாலும் அவளின் நலன் கருதி அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.


ஏற்கனவே உனக்கு தெரிஞ்சது தான்.. நான் பிஜி ஃபைனல் இயர் முடிக்கும் பொழுதே எனக்கு என் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிவு செஞ்சுட்டாங்க.


என்னோட படிச்சு நீங்க எல்லாருமே வேலை, பிசினஸ்னு போகும்போது நம்ம செட்ல எனக்கு தான் முதல்ல கல்யாணம் ஆச்சு.


நீங்க எல்லாரும் நினைக்கலாம் என்னுடைய கல்யாணம் பெரியவங்க பார்த்து நிச்சயம் பண்ணி வச்சதுன்னு.


ஆனா அது முழுக்க முழுக்க பொய் என் அண்ணியும் என் கணவரும் சேர்ந்து செய்த ஓரு சதி.

ரொம்ப அழகா என் அண்ணி மூலமா ஒரு வலை விரித்து அந்த வலையில் எங்க எல்லாரையுமே மாட்ட வச்சு அதிலிருந்து என்னை மட்டும் பிரிச்சு ஹரிபிரசாத் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.. இன்று கௌசல்யா கண்களில் நீர் தழும்பு சொல்லவும் ஆர்வமே இல்லாமல் கேட்கத் தொடங்கியிருந்த விக்கி அதிர்ச்சியை அப்பட்டமாக காண்பித்தான்.


என்ன கௌசல்யா சொல்ற என்று கேட்கவும் செய்தான்.


நீங்க எல்லாரும் என்னை கிண்டல் செய்வீங்களே.. மாப்பிள்ளையை பார்த்ததும் கௌசி அவ லட்சியத்தை விட்டுட்டு விழுந்துட்டான்னு ..அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.


என் அம்மா, அப்பா, என் அண்ணா இப்படி எல்லாரும் என்னை கட்டாயப்படுத்தி அவங்க கொடுத்த அழுத்தத்தால வேற வழியே இல்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.


அந்த கல்யாணத்துல எப்பவுமே எனக்கு துளி கூட விருப்பம் கிடையாது.


கட்டாயப்படுத்தி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினா அந்த பொண்ணு எப்படி சந்தோஷமா இருப்பா.


பணம் மட்டும் ஒரு பொண்ணுக்கு சந்தோஷத்தை கொடுத்திடுமா.. அந்த கல்யாணம் மனசுக்கு பிடிக்க வேண்டாமா.


வேலைக்கு போகணும் அம்மா அப்பாவை நல்லா வச்சுக்கணும் அவங்களுக்காக சொந்தமா வீடு வாங்கணும் இப்படி பல ஆசைகள் இருக்கும்போது எல்லா ஆசைகளையும் குழி தோண்டி புதைக்க வச்சிட்டு பணத்தை மட்டுமே வெச்சிருக்க ஒரு அழகான ஆம்பிளை கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாமே மறந்து போயிடுமா..



அதுவும் என்னை பொறி வச்சி பிடிச்சு கல்யாணம் பண்ணி இருக்காருன்னு தெரிஞ்ச பிறகு என் சுயத்தை தொலைச்சிட்டு

பொய்யா எத்தனை நாளைக்கு என்னால வாழ முடியும்.
 
Last edited:
Top