கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 26

Akila vaikundam

Moderator
Staff member
26.

புரியிற மாதிரி சொல்லு கௌசி.. அப்போ உன்னோடது அரேஞ்ச் மேரேஜ் இல்லைன்னு சொல்ல வரியா ..?

ஊருக்கும்,என் குடும்பத்துக்கும் மட்டும் அது அரேஞ்ச் மேரேஜ்..என் கணவருக்கு அது பக்கா லவ் மேரேஜ் அதும் ஒன் சைடு லவ் மேரேஜ்.. அதுக்காக அவர் கொடுத்த விலை என் அண்ணியோட வாழ்க்கை..

அண்ணி அவங்க தியாகத்துக்காக கேட்ட விலை என்னோட வாழ்க்கை.


இங்க எல்லாருமே ரொம்ப சுயநலம் விக்கி.


அந்த சுயநலத்துக்கு நடுவுல தெரியாம நான் போய் மாட்டிக்கிட்டேன்.


பார்க்கிறவங்களோ இல்ல கேட்கிறார்களோ ரொம்ப சுலபமா சொல்லிட்டு கடந்திடுவாங்க .


உனக்கு என்ன வசதியான மாப்பிள்ளை.. இதை விட வேற என்ன வேணும்னு.

ஆனா பணம், ஆடம்பர வாழ்க்கை அழகான புருஷன் இது எல்லாத்துக்கும் மேலேயும் மன நிறைவுன்னு ஒன்று இருக்கிறது.


அது இல்லனா அந்த கல்யாணம் எப்படி வெற்றி அடையும்.


ஏன் விக்கு அப்படி பாக்குற.


நீ கூட இப்போ நினைக்கிற இல்ல..ஒரு நல்ல வாழ்க்கையை கடவுளும், என்னோட குடும்பமும் அமைத்துக் கொடுத்ததா.!
அதை என்னோட பிடிவாதத்துல விட்டுட்டு வந்திருக்கேன்னு..


அப்படி நினைக்கல கௌசி..ஆனா உன்கிட்டயும் ஏதோ தப்பு இருக்கறது போல முதல் முறையா தோணுது.


எல்லாருக்கும் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை அமையாது கௌசி.


பொதுவா அரேஞ்ச் மேரேஜ் ஆகும் போது ரெண்டு பேருக்கும் முழுக்க முழுக்க பிடித்து தான் கல்யாணம் ஆகணும் என்கிற கட்டாயமும் இல்லை..இதானே காலங்காலமா நடக்கற அரேஞ்ச் மேரேஜோட கோட்பாடு.


அதுக்கப்புறம் அந்த கல்யாணத்தை நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கிறது தான் நம்மளோட புத்திசாலித்தனம் .


கல்யாண சமயத்துல கூட நான் உன்கிட்ட கேட்டு இருக்கேன் மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு.


ஓகே தான் மறுக்கறதுக்கு எந்த காரணமும் இல்லைன்னு சொன்னதா ஞாபகம்.


அப்படி இருக்கும்பொழுது அந்த வாழ்க்கையை அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்து இருக்கலாமே .


என்னோட சந்தேகத்தை தான் கேட்கிறேன் ஏன்னா எனக்கும் என் அம்மா பொண்ணு பாத்தாங்க அந்த பொண்ணை மறுக்குறதுக்கு என்கிட்ட பெருசா காரணம் இல்லனு சொன்னேன்.


ஆனா அந்த பொண்ணுக்கு என்னை ரொம்ப புடிச்சிருக்கு அப்போ எங்க லைஃப் நல்லா தானே இருக்கும்.


உனக்கும் அவர் வேணான்னு சொல்றதுக்கான காரணம் இல்ல. அவருக்கும் உன்னை ரொம்ப புடிச்சிருக்கு.


அப்போ நீ ரொம்ப லக்கி தானே..? நீ இதான் லைஃப்னு நினைச்சிருந்தா நல்லா இருந்திருக்குமே.


உன்னோட பிடிவாதம் உங்க வாழ்க்கைக்குள்ள வந்திருச்சா..?

ஒரு பிரண்டா தான் கேட்கிறேன் விருப்பம் இருந்தா இதுக்கு மட்டும் காரணத்தை சொல்லு இதுக்கு அப்புறம் நான் உன் பர்சனல்ல தலையிட மாட்டேன் என்றவனிடம்.


விக்கி என்னோட பிரச்சனையே இதுதான் என் வாழ்க்கையில என்ன நடந்திருக்கும்னு நான் முழுசா சொல்ல ஆரம்பிக்கும் போதே நீயே ஜட்ஜ்மெண்ட் பண்ணிட்ட.


என் லைஃப் இவ்ளோ பெரிய காம்ப்ளிகேட் ஆவதற்கு நான் தான் காரணம்னு.


இப்படி தான் என் வீட்டு ஆளுகளும் என்னை பத்தி நினைச்சுட்டு இருக்காங்க.

எனக்குன்னு இல்ல பொதுவா நிறைய பேரோட லைஃப்ல இப்படித்தான் நாம ஒரு ஜட்ஜ்மெண்ட் கொடுத்திடறோம்.


அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்தது, அவங்க எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாங்க,இதெல்லாம் நமக்கு தெரியாது.

நாமளா வாய்க்கு வந்ததையும் மனசுக்கு தோணறதையும் கற்பனை பண்ணிக்கிறோம்..விளைவு சம்பந்தப்பட்டவர்கள் காலம் பூரா என்னை மாதிரி இடி சொல் வாங்கிகிட்டு வாழ்ந்துட்டு போகணும்.


அப்படி அடுத்தவங்களோட வாய்க்கு பயந்தா உடனே யோசிக்காமல் இன்னொரு கல்யாணத்தை பண்ணி அது மனசுக்கு பிடிச்சிருக்கோ பிடிக்கலையா மத்தவங்க முன்னாடி போலியோ ஒரு வாழ்க்கை வாழணும்.


பேருக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளனும்.. ஊருக்கு முன்னாடி நானும் சந்தோஷமா இருக்கேன்னு காமிச்சுக்கணும்.


போ விக்கி இதெல்லாம் பேசுறவங்களுக்கும் பாக்குறவங்களுக்கும் புரியாது.


அந்த வாழ்க்கைக்குள்ள இருக்களவங்களுக்கும் வாழ்ந்தவங்களுக்கும் மட்டுமே புரியும் .


என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்கிறதை முழுசா உங்க கிட்ட சொல்றேன்.


உன்னால புரிஞ்சுக்க முடியுதான்னு பாரு..இல்லையா அப்படியே விட்டிடு.


என்றபடி அவளின் கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்.


தோழியின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் அதை எப்படி சரி செய்வது என்ற எண்ணத்துடனே அவளின் கடந்த காலத்திற்குள் அவனும் பயணிக்க ஆரம்பித்தான்.
 
Last edited:
Top