கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 44

Akila vaikundam

Moderator
Staff member
44.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் எனத் தெரியாது சற்று நேரம் கழித்து கண் விழித்தவன் இனி பேசி மீண்டும் மீண்டும் காயத்தை கீறி விட்டுக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்தான் .

நாமும் அப்படி கோபத்தில் பேசி இருக்க கூடாது அவளும் அப்படி பேசி இருக்கக் கூடாது இரு பக்கமும் சம அளவில் காயங்களும் வலிகளும் இருக்கிறது.

இருவர் பக்கமும் தவறு இருக்கும் பொழுது ஒருவரை மட்டும் குறை சொல்வது தவறு எனப் புரிந்து.

அவளுக்கு பிடித்து நடந்தாலும் சரி பிடிக்காமல் நடந்திருந்தாலும் சரி திருமணம் என்பது நடந்து விட்டது அவள் சொன்னது போல் சகித்துக் கொண்டு இந்த வாழ்க்கை கடந்து செல்ல வேண்டியதுதான்.. டிவோர்ஸ், கோர்ட் என படியேறினால் வாழ்வின் மீதி நிம்மதி தொலைந்து போகும்.



அவனது நிம்மதி போகிறதோ இல்லையோ தாய் தந்தை அவனது செல்லத் தங்கை ஜானுவின் நிம்மதி மட்டும் அல்ல வாழ்க்கையும் சேர்ந்து பறிபோகும்.

அந்த வீட்டுப் பெண்ணை இவன் வேண்டாம் என அனுப்பி வைத்தால் பின்னோடு இவன் வீட்டுப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைக்க தயங்க மாட்டார்கள் ஆனால் இனிமேல் கௌசல்யாவுடன் இல் வாழ்க்கை என்பது முடியாத காரியம் .


எப்பொழுது நான் காதலாக நெருங்கிய வேளையில் மற்றொருவனை நினைத்துக் கொண்டேன் என்று கூறிவிட்டாளோ அதன் பிறகு அவள் நிழலை கூட மிதிக்க கூடாது..


ஊர் உலகத்திற்காக மட்டும் இனிமேல் அவரது கணவனாக நடமாட வேண்டும் இதுதான் எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை ஆசையாக ஒருத்தியை காதல் திருமணம் செய்து அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடத்த வேண்டும் என நினைத்ததற்கு கொடுத்துக் கொள்ளும் தண்டனை.



இன்றிலிருந்து மேல் அறையை அவள் உபயோகப்படுத்திக் கொள்ளட்டும் கீழே இருக்கும் அறையை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்..

முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என எழுந்தவன் யோசனையாக அவள் மேலே இருப்பாளே மீண்டும் அவளது முகத்தை பார்க்க வேண்டுமா.? வேண்டாம் எவ்வளவு முக்கியமான பொருட்களாக இருந்தாலும் அது அங்கேயே இருக்கட்டும் ஒருவேளை அவளுக்கும் அந்த அறையை உபயோகப்படுத்த பிடிக்கவில்லை என்றால் பக்கத்து அறையை எடுத்துக் கொள்ளட்டும்.


தேவைப்படுவதை புதிதாகவே நாளை வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்தவன் பக்கத்து அறைக்கு சென்று படுத்துக் கொண்டான்.

நல்ல வேளை இன்று வேலைக்காரர்கள் யாரும் இல்லை இருந்திருந்தால் அவர்கள் முன்பு வேறு அவமானப்பட்டிருக்க வேண்டும் அதுவரையில் மனதிற்கு சற்று நிம்மதி.

ண்ணா…அண்ணா எங்கயிருக்க என பதறியடித்தபடி உள்ளே வந்த ஜானகி இருட்டடித்து கிடந்த வீட்டை சுவிட்ச் போட்டு வெளிச்சமாக்கினாள்.

வீட்டை பார்த்ததுமே தெரிந்து விட்டது.மாமியார் தன்னை முறைத்ததற்கான காரணத்தை.


பிறகு மாடிக்குச் சென்று அண்ணனின் அறையை பார்த்தவள் அங்கு யாரும் இல்லாததே உணர்ந்து பக்கத்து அறைக்குள்ளும் சென்று பார்த்து ஏமாற்றத்துடன் கீழே வந்தவள் கீழே இருந்த படுக்கையறையை எட்டிப்பார்க்க ஹரி கட்டிலில் மல்லாக்க படுத்திருக்க கை கொண்டு முகத்தை மறைத்தபடி கால்களை தொங்கவிட்டபடி படுத்திருந்தான் .


அண்ணா…அண்ணா எழுந்திரு என அவனை அமர வைத்தவள்.
என்னாச்சுண்ணா.. நீ ஏன் இந்த கோலத்தில் இருக்க விடு ஏன் இந்த கதியில் கிடக்குது.


அதை விடு ஜானு, நீ ஏன் இந்த நேரத்துல இங்க வந்திருக்க..


ம்ம்..ஏன் கேட்க மாட்ட. என் அத்தைக்கு மட்டும் இன்னைக்கு நெற்றிக்கண் இருந்திருந்தா என் எரிச்சி பஸ்பம் ஆக்கிருப்பாங்க அதான் பயந்து நேரா இங்கே ஓடி வந்துட்டேன்


ஏன்..

பண்றது எல்லாம் பண்ணிட்டு கூலா ஏன்னு கேக்கற என் வீட்டுக்காரர் வந்தா என்ன ஆகும்னு கை கால் எல்லாம் நடுங்கிட்டு இருக்கு தெரியுமா..
வீட்டுக்கு போனதும் என் அத்தை பார்த்த பார்வைல ஏதோ சரியில்லைனு தோணிச்சி, அப்புறம் அண்ணி ஒரு பார்வை பாத்தாங்க அப்படியே ஆடிட்டேன..அப்படி ஒரு உக்கிரம்.
அதான் என்னன்னு தெரிஞ்சுட்டு போறதுக்காக இந்த கிளம்பி வந்துட்டேன் இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரியுது என்னவோ பெருசா நடந்திருக்குன்னு, என்ன சண்டையா இருந்தாலும் அண்ணியை அங்க அனுப்பலாமா இது தப்பில்லையா,நீ இப்படி பண்ணுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல அண்ணா ..



என்ன கௌசல்யா இங்க இல்லையா என அதிர்ச்சி அடைந்தவன் அடுத்த வினாடியே கோபமாக‌ என் நிம்மதியை கெடுத்தது பத்தாதுன்னு உங்க நிம்மதியை கெடுக்க அங்க வந்து உக்காந்துக்கிட்டாளா.

அப்போ நீ ஒரு அனுப்பலையா ண்ணா
என்று கேட்கவும் .


நீ அந்த வீட்ல இருக்கியே ஜானு எப்படி நான் அவளை அங்க அனுப்புவேன் என கேட்டபடி மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.



குழப்பமாக அண்ணா எதும் பெரிய பிரச்சனையா நான் வேணா அண்ணி கிட்ட பேசட்டுமா .


வேணாம் ஜானு என சத்தமாக கூறியவன் எங்க போறதா இருந்தாலும் சொல்லாம போறதே இவளுக்கு பழக்கமா போச்சு அவ்வளவு பேசினதுக்கு அப்புறமும் நான் இந்த வீட்ல தானே இருக்கேன் அதே மாதிரி அவளும் இருந்திருக்கனும் தானே ..அட்லீஸ்ட் அம்மா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்னு சொல்லிட்டு போறதுக்கு என்ன..?எதுவுமே சொல்லாம அவ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்..
திமிர் எடுத்து அவதான அங்க வந்தா..இனி அவளே திரும்பி வரட்டும் என வாய்க்குள் முணுமுணுப்பாக ஜானகிக்கு எதுவுமே கேட்கவில்லை.



அண்ணா நான் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் சொல்லு ப்ளீஸ்..


ஜானு ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடு இனியாவது நிம்மதியா இருக்க முடியுதான்னு பாக்கறேன்..


அண்ணா…என அவனை தொடப்போக.


உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா ஜானு , லீவ் மீ அலோன்


அதிர்ச்சியில் அழுதபடி அண்ணனை பார்க்க..


இன்னும் சொன்னது புரியலையா என்றவன் அவள் கைபிடித்து ஹாலில் கொண்டு வந்து விட்டவன் என்னை கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுன்னு சொன்னேன்..இப்போ கிளம்பு.

அழுத்தப்படியே மாட்டேன் அண்ணா நான் போக மாட்டேன் உன்னை இந்த நிலையில விட்டுட்டு போக மாட்டேன் எனக்கு உன்ன பார்த்தா பயமா இருக்கு பாவமா இருக்கு..


நீ பயப்படுற மாதிரி உன் அண்ணன் தப்பா எந்த முடிவும் எடுக்க மாட்டான் நான் கோழை இல்லை புரியுதா பாவம் பாக்குற அளவுக்கு இன்னும் உன் அண்ணன் முழுசா உடைச்சு போகல சின்னதா சறுக்கியிருக்கிறேன் அவ்வளவுதான் மறுபடியும் எழுந்து நிற்பேன் இது என்னோட வாழ்க்கை நான் வாழ்வேன் என்னை விட்டுட்டு ஓடிப்போனாள்ல அவ முன்னாடி நான் எழுந்து வாழ்ந்து காட்டுவேன் நீ கிளம்பு என்று சொல்லவும்.


நான் போக மாட்டேன் என்பது போல் தலையாட்டியபடி கண்ணீரிடம் நிற்கும் தங்கையின் அருகில் வந்தவன்.


அவ ஏதாவது சொல்லி உனக்கும் மாப்பிள்ளைக்கும் பிரச்சனை வந்திடும்னு பயப்படறியா ஜானு அண்ணன் உன் மேல சத்தியம் பண்றேன்.. அப்படி எதுவும் வாய் திறந்து உன் அண்ணிக்காரி சொல்ல மாட்டா..என்னை நம்பி தைரியமா போ புரியுதா.. அவளால உன் வாழ்க்கைக்கு எந்த ஒரு சின்ன பிரச்சனையும் வராது அப்படி வந்தது என்றால் அன்னைக்கு தான் அது அவளோட கடைசி நாளா இருக்கும்..கிளம்பு..


ம்ம்..

கிளம்பும்மா டைம் ஆச்சி..எதுல வந்த..

கேப்ஸ்ல வெயிட் பண்ணுது என கேவலுடன் கூறிய படி வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கும் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

இதெல்லாம் நான் பாத்துக்குறேன் முதல்ல நீ கிளம்பு .


நாளைக்கு மெய்ட் வந்து இதை பார்த்தா..


அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ கிளம்பு உன் மாமியார் ஏதாவது கேட்டாலோ,இல்லை சண்டை போட்டாலோ யோசிக்காம எனக்கு போன் பண்ணி சொல்லு நான் பேசிக்கறேன்.


இல்லையா எனக்கு எதுவும் தெரியாது என் அண்ணன் கிட்ட பேசிக்கோங்கன்னு சொல்லிட்டு நீ தேவை இல்லாம பேசி உன் நிம்மதியை,சந்தோஷத்தை கெடுத்துக்காத என்று சொல்லவும் ‌


உண்மையாவே எனக்கு எதுவுமே தெரியாது அண்ணா நீ சொன்னாதான் நான் அவங்க கிட்ட ஏதாவது பேச முடியும்.


மறுப்பாக தலையசைத்தவன் ஜானு எல்லா வீட்டுலயும் இருக்குற சண்டை தான் நீயும் கல்யாணம் ஆன பொண்ணு உனக்கு தெரியாததா.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள வர்ற சாதாரண மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் தான்
எல்லாமே சீக்கிரத்துல சரியாயிடும் அண்ணன் சரி பண்ணிடுவேன் நீ கவலைப்படாம பயமில்லாமல் போய்ட்டு வா அப்புறம் எனக்காக ஒரு சின்ன உதவி செய்வியா.



என்ன அண்ணா.


ஊர்ல இருக்கிற அம்மா அப்பா கிட்ட இப்போதைக்கு நீ எதுவும் சொல்ல வேண்டாம் முடிஞ்ச அளவு அவங்க காதுக்கு போகாமலே சீக்கிரமா சரி பண்ண பார்க்கிறேன்.


எப்படி இருந்தாலும் உன் மாமியார் அவங்க பொண்ணுக்கு புத்தி சொல்ல தானே செய்வாங்க கொஞ்ச நாள் கழிச்சு அவ வர விருப்பப்பட்டா நானே வந்து கூப்பிடுகிறேன் இல்லையா அவளுக்கா எப்ப தோணுதோ அப்ப தாராளமா இங்க கிளம்பி வரட்டும் அது மட்டும் அவகிட்ட சொல்லிடு இப்போ நீ கிளம்பு என தன்மையாக பேசி அனுப்பி வைத்தான்.


ஜானகி செல்லும் கார் சத்தம் அவன் காதுக்கு வந்து அடையும் வரை பொறுமை காத்ததும் ..அடுத்த வினாடி முகத்தை அஷ்டகோணலாக்கியபடி பண்றது எல்லாம் பண்ணிட்டு பேசுறதை எல்லாம் பேசிட்டு உன் அம்மா வீட்டுல போய் ஒளிஞ்சிக்கிட்டியா.! நான் வந்து உன்னை கெஞ்சி கூப்பிடுவேன்னு மட்டும் கற்பனை பண்ணாத பீடை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருக்க போறேன் ,நீ என் வாழ்க்கை விட்டு தொலைஞ்சா சரி,எக்கேடோ கெட்டு ஓழி என்று கத்தியபடி அவள் விட்டுச் சென்ற ஆத்திரத்தை வார்த்தைகளால் வெளிக்கொண்டு வந்து உச்சபட்ச கோபத்தில் அழகிற்காக வைத்திருந்த ராதா கிருஷ்ணன் பொம்மையை எடுத்து அவர்களின் திருமண புகைப்படத்தை நோக்கி அடிக்க பொம்மையோடு சேர்ந்து புகைப்படமும் கீழே விழுந்து நொறுங்கியது.


அதன் பிறகு சிறிது நாட்கள் லட்சுமி கௌசல்யாவை எந்த கேள்வியும் கேட்கவில்லை ஏதோ மகளுக்கும் மருமகனுக்கும் சுனக்கம் ஏற்பட்டுவிட்டது சிறிது நாட்கள் சரியாகிவிடும் என விட சில நாட்களிலேயே கௌசி கருத்தரித்திருப்பது தெரிந்திருந்தது.


கௌசல்யாவின் வீட்டில் சந்தோஷம் இருந்தாலும் அதை கொண்டாட முடியவில்லை.. அவளின் உடல் நலம் வேறு மிகவும் மோசமாக இருக்க அதை கருத்தில் கொண்டு யாருமே ஹரியை பற்றி கேட்கவில்லை.


சற்று தேறி வரும் போது ஹரி பற்றி பேச்சை எடுக்க.. லட்சிமியிடம் சண்டையிட்டு மயக்கம் போட்டு விழ அவர் பயந்து யாரையும் அதன் பிறகு பேசவிட வில்லை


கேசவனோ தங்கையின் குடும்ப வாழ்க்கையில் தன்னால் ஏதாவது உதவ முடியுமா என தயாரிடமும் ஆரம்பத்தில் பேசி பார்க்க அவர் சரியாக பிடி கொடுக்காதததால் அவனும் சிறிது நாட்கள் விட்டுவிட்டான்.


ஜானகியும் கணவனிடம் கௌசல்யா எப்போ கிளம்பனும்னு ஆசைப்படறாளோ அடுத்த நிமிஷம் அண்ணன் வந்து கூப்பிட்டுகிறதா சொல்லி இருக்காங்க என்று சொல்லவும் அப்படி என்றால் கௌசல்யா சிறிது நாட்கள் தாய் வீட்டிலேயே இருக்கட்டும் என விட்டுவிட்டான்.


கர்ப்பிணி வேறு.. உடல்நலமும் சரியில்லை இந்த சமயத்தில் அவளை ஏன் தொல்லை செய்ய வேண்டும் குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகும் என நினைத்துக்கொண்டு அமைதியாகி விட்டான்.

அவள் கருவுற்றதை ஜானு கூற அதைக்கேட்டதும் ஹரிக்கு ஒரு நிமிடம் மனம் சந்தோஷத்தில் குதுகழித்தாலும் அடுத்த நிமிடமே அவள் சொன்ன வார்த்தை அவனின் முகத்தை கறுக்கச் செய்தது அவனால் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.


அப்பொழுதும் கூட மனைவிக்கு அழைத்துப் பேசாமல் ஜானகிடம் தான் கேட்டான் அவ என்னை பாக்கணும்னு சொன்னாளா..இந்த விஷயத்தை என்கிட்ட சொல்ல ஆசைப்படுவாள்ல.. இப்போ நான் வந்து கூப்பிட்டா என் கூட வருவாளா .


சாரி அண்ணா ..எனக்கு தெரியல.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு தெரியல தெரிஞ்சா தானே நாங்க ஏதாவது பேச முடியும்.. ஒன்னு நீ வாய் திறந்து இதுதான் பிரச்சனை சொல்லணும் இல்ல அவ சொல்லணும் அப்படி இருந்தா மட்டும் தான் உங்க லைஃப்குள்ள என்னால உதவ முடியும்.. நீயும் சொல்ல போறதில்லை..அவ ரொம்ப அழுத்தமா இருக்கா,



அத்தை ,கேசவன், நான்னு எல்லாருமே பேசி பாத்துட்டோம் எதுக்குமே பிடி கொடுக்க மாட்டேங்குற அவ உடம்பு வேற ரொம்ப வீக்கா இருக்கு அதனால குழந்தை பிறக்கிற வரைக்கும் வெயிட் பண்ணு அண்ணா அதுக்கப்புறம் பேசி பார்க்கலாம்.

பரவாயில்லை ஜானு..அவளுக்கு உடம்பு சரியில்லைன்னா அங்கேயே இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும் தப்பு இல்லை.. இப்போ எனக்கு எந்த ஈகோவும் இல்லைனு மட்டும் சொல்லிடு..
அவ எப்போ வரணும்னு விருப்பப்பட்டாலும் சொல்லு. நான் வந்து கூப்பிடுகிறேன் ..

ஓகே அண்ணா.. சொல்லறேன் என்று கூறிய ஜானகி அதோடு நிறுத்திக் கொள்ளாமல் கௌசல்யாவிடம் அண்ணனிடம் பேசியதை பற்றி கூற இனி ஒரு முறை அந்த ஆளை பத்தி என்கிட்ட பேசறதா இருந்தா நீங்க என்கிட்ட வந்து பேச வேண்டாம் அப்புறம் இன்னொரு விஷயம் தேவையில்லாம என்னோட லைஃப்க்குள்ள நீங்க தலையிட்டா.. அப்புறம் நானும் உங்க வாழ்க்கைக்குள்ள வரவேண்டியதா இருக்கும்.. அந்த அளவுக்கு வச்சுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் என்று கூறியபடி நகர அப்பொழுதிலிருந்து கௌசல்யாவை ஜானுவிற்கு சுத்தமாக பிடிக்காமல் போயிற்று .


ஆனாலும் கர்ப்பிணிப் பெண் இந்த சமயத்தில் ஹார்மோன் பிரச்சனைகளால் அவள் மூட் ஸ்வீங்கில் இருக்கலாம். அதனால் கூட இப்படி பேசலாம் எதாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை விட்டுப் பிடிக்கலாம் என பொறுமை காத்தாள்.


குழந்தையும் நல்லவிதமாக பிறந்தது .
ஹரிக்கும் அவனது பெற்றோர்களுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹரியும் சந்தோஷமாகத்தான் குழந்தையை பார்க்க ஓடி வந்தான் ஆனால் கௌசல்யாவின் முகத்திருப்பல் அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த

யாரோ போல் பார்த்து விட்டு வந்தான்.


ஹரியின் தாயாரும் தந்தையும் அவனைப்பார்க்க அடிக்கடி வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றனர்.
மகனிடத்திலும் மருமகளிடத்திலும் தனித்தனியாக எத்தனையோ முறை பேசிப் பார்த்தனர் பலன் பூஜ்ஜியத்தில் நின்றது .


ஹரி இறங்கி வர தயாராகத்தான் இருந்தான் ஆனால் கௌசல்யாவிற்கு தான் பயம் .


அவள் பேசிய வார்த்தைகள் அவ்வளவு வீரியமானது என்பதை குழந்தை பிறந்தவுடன் தான் உணர ஆரம்பித்ததாள்.


அந்த குற்ற உணர்ச்சியில் எல்லோரைப் பார்க்கவும் பயந்தாள்..குடும்ப வாழ்க்கை‌ பற்றி பேசவே பயந்தாள்.


இருவருக்கும் நடந்த பிரச்சனையை கூறத் தொடங்கினால் அவள் கூறிய அத்தனை வார்த்தைகளையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும்.

இவள் செய்த தவறுகளும் வெளியில் வரும்.அது அவளுக்கு மிகப்பெரிய அவமானமாக மாறும்.


அத்தோடு இல்லாமல் கணவனுக்கும் அவளுக்கும் நடந்த அந்தரங்கமான சண்டையை பொதுவெளியில் காட்சிப்படுத்த விரும்பாததால் ஹரியும் கௌசல்யாவும் மௌனம் காத்தனர்.


ஹரியின் பெற்றோர்கள் முடிந்த அளவு போராடிவிட்டு அவன் போக்கிலேயே விட்டுவிட்டனர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல் அது கொடுத்த வலி இதனால் தொழிலில் கவனம் செலுத்த தவறினான்.


மது,புகை என அடுத்தடுத்து கெட்ட பழக்கங்களுக்குள் தன்னை புகுத்திக் கொண்டு ஆறுதல் தேடும் முயற்சியை கையில் எடுத்தான் ஹரி.



அண்ணனின் வாழ்க்கை பறிபோவதை பார்த்த ஜானகி ருத்ரமூர்த்தி அவதாரம் எடுத்தாள்.


கௌசியிடம் கோபத்தை காட்டாமல் அவளுக்கு துணை நிற்கும் மாமியாரிடம் காட்டத் தொடங்கினாள்.


அவ்வப்போது கௌசிக்கும் கொட்டு வைக்கத் தவறவில்லை அவள் கொடுத்த அழுத்தத்தை தாங்க முடியாத கௌசி ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்ல ஆயத்தமானாள்.



தோழியின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று சரியில்லை என்பதை சில நாட்களிலேயே தெரிந்து கொண்ட விக்கி அவளிடம் எதுவும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளவில்லை அவனுக்கு நேரமும் இல்லை வேலைப்பளு அவனது கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது அந்த சமயத்தில் அவள் வேலைக்காக முயற்சி செய்வதை தெரிந்து கொண்டவன் தகப்பனிடம் பேசி அவளுக்கு ஒரு வேலையையும் ரெடி செய்து அவனுடைய அலுவலகத்திற்கு வருவது போல பார்த்துக் கொண்டான்.


கௌசி மீண்டும் உதவியென விக்கிடமே சென்றதை அறிந்த ஹரி முற்றிலும் உடைந்தே போனான்.. அதுவரை அவனது ஈகோவை ஓரம் கட்டிவிட்டு அவளை அழைத்து

வர தயாராக இருந்தவன் அதன் பிறகு தனக்கு எந்த ஜென்மத்திலும் அவள் வேண்டவே வேண்டாம் என உறுதியான முடிவையும் எடுத்துத்தான்.
 
Last edited:
Top