கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 46

Akila vaikundam

Moderator
Staff member
46

விக்கி அடுத்ததாக சென்று பார்த்தது அவனது தந்தையை.

கார்டனில் காஃபியை சுவைத்தபடி இருந்தவரின் எதிரில் இருந்தவன்.

ஏன் பா.. என்கிட்ட இவ்ளோ நாளா சொல்லல.. குரலில் அப்பட்டமாக குற்றச்சாட்டு இருந்தது.

எதைப்பற்றினு தெளிவா சொல்லு விக்கி.


கௌசி பற்றி.

அதை பற்றி பேச விரும்பவில்லை என்பதை போல பார்த்து வைத்தார்.

நீங்க சொல்லி தான் ஆகனும் என்பது போல மகன் தந்தையை பார்த்தான்.

இழுத்து மூச்சை விட்டவர்..சோ உனக்கு அவங்க பிரிவிற்கான காரணம் தெரிஞ்சிடுச்சி ரைட்..

****

சரி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க..


இன்னும் முடிவு பண்ணல.

நீ எந்த முடிவு எடுத்தாலும் உன் அம்மாவை அது சந்தோஷப்படுத்தணும் பெத்தவங்களான எங்களுக்கு அது சாதகமானதாக இருக்கனும் அதை மட்டும் மனசுல வச்சுக்கோ.

பட் நீங்க எடுக்கற எந்த முடிவும் இதுவரைக்கும் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லையேப்பா என வருத்தத்துடன் முடிக்கவும்.



அவனை அர்த்தத்துடன் பார்த்தவர் அப்படி நான் என்ன பண்ணிட்டேன் நீ விருப்பப்பட்ட படிப்பு நீ விருப்பப்பட்ட வேலை நீ விருப்பப்பட்ட ஸ்டேஃப் வேற என்ன வேணும்.

நம்பிக்கை கலந்த சந்தோஷம் பா அதை நீங்க கொடுக்கல என் அப்பா ஒரு விஷயம் பண்ணினாங்கன்னா அது மிகச் சரியா இருக்கும்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா அது தப்புன்னு இன்னைக்கு தான் புரிய வச்சியிருக்கீங்க.


உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்குப்பா கௌசி வாழ்க்கைக்குள்ள என்னையும் அறியாமல் ஏதோ ஒரு வகையில் நான் இன்டெர்பியர் ஆகியிருக்கேன்..அதை நீங்க என்கிட்ட சொல்லல ,

சொல்லி இருந்தீங்கன்னா இவ்வளவு நாள் அந்த பிரச்சனையை நான் வளர்த்து விட்டிருக்க மாட்டேன் அதை முலையிலேயே நான் கிள்ளி இருப்பேன்.


அது செடியாகி இன்னிக்கு மரம் ஆகி விருட்சகம் ஆகிடுச்சி பா எப்படி நான் சரிசெய்ய போறேன்.எப்படி வெளியே வரப் போறேன் இந்த குற்ற உணர்ச்சி எனக்கு காலம் பூரா இருக்குமே இதைத்தாண்டி எப்படி நான் உங்களை சந்தோஷப்படுத்த முடியும் , வேற ஒரு பெண்ணை தான் திருமணம் செஞ்சு சந்தோஷமா வச்சிக்க முடியும்
சொல்லுங்கப்பா வாட் ஐயம் டூ..எனக்கு சத்தியமா தெரியல என்று படபடத்தான்.

விக்கி ரிலாக்ஸ்.. ப்ளீஸ் ரிலாக்ஸ்.
நீ உன் தோழியை நம்புற அளவுக்கு என்னை நம்ப மாட்டேங்குற அதுதான் எனக்கு வேதனையா இருக்கு.



மத்த அப்பாக்கள் மாதிரி குடும்பத்தை பற்றி கவலை கொள்ளாமல் பிசினஸ் பிசினஸ்னு அது பின்னாடி ஓடி இருக்கேனா சொல்லு.. எனக்கு பிசினஸ் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் வாய்ந்தது நம்ம குடும்பம் அதை நான் பல இடத்துல உனக்கு புரிய வச்சிருக்கேன் நீயும் பாத்திருக்க..மறுக்க முடியுமா உன்னால்.?.


ஒவ்வொரு இடத்திலும் உன் சந்தோஷத்துக்கு மதிப்பு அளித்துள்ளேன் இப்போ கூட உனக்கு தெரியும் அப்பாவோட டைமிங் எவ்வளவு வேல்யூன்னு தெரியும்.


அப்படி இருந்தும் உனக்காக நேரம் ஒதுக்கி உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் மத்த சராசரி அப்பாக்கள் மாதிரி பேருக்கு சொல்லாம உண்மையாவே நண்பன் போல பழகிட்டு இருக்கேன் .


அப்படி இருந்தும் நீ உன்னோட பெண் தோழியை நம்பற அளவுக்கு இந்த ஆண் தோழனை நம்ம மாட்டேங்குற .


சரி விடு..முதல்ல ஒரு விஷயத்தை தெளிவு படுத்திடறேன்..ஆரம்பத்துல கௌசியோட பிரச்சனைக்குள்ள நீ இருக்கறன்னு சத்தியமா எனக்கு தெரியாது என்று சொல்லவும் அவரை நம்பாதவாறு பார்த்து வைத்தான்.


நீ நம்பலன்னாலும் அது தான் நிஜம் விக்கி எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் கௌசல்யாவை நம்ம ஆபீஸ்குள்ள விட்டிருப்பேனா சொல்லு.



ஒரு காமன் பிசினஸ் பார்ட்டி அப்போ தான் எதேச்சையா மிஸ்டர் ஹரி கிருஷ்ணனை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது.


அப்போ பொதுவா பேசும் போது அவர் ரொம்ப விரக்தியா பேசினாரு,அவரை அப்படியே விட்டுட்டு வர முடியல அதனால அவரை ரிலாக்ஸ் பண்ணறதுக்காக மேலும் பேச ஆரம்பிச்சேன்.



மனுஷன் எதுக்கும் பிடி கொடுக்கல.. ஆனாலும் நான் என்னனு தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சேன்.

அப்போ தான் அவர் மனைவியோட ஏற்பட்ட பிரிவு பத்தி பேசினாரு. ஏற்கனவே இந்த விஷயம் எனக்கு தெரியும் என்கிறதால நான் மௌனமா கேட்டுகிட்டேன்.

ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் ராமநாதன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அவ என் கூட இல்லனாலும் அவ மேல எனக்கு இன்னும் அக்கறை இருக்கு அதனால தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லறேன்.


கல்யாண வாழ்க்கை தான் எங்க ரெண்டு பேருக்கும் சரியா அமையல.. அட்லீஸ்ட் வேலையாவது அவளுக்கு புடிச்ச மாதிரி இருக்குதுதே..

இனிமே தினமும் திருட்டுத்தனமா சாட் பண்ண வேண்டியது இல்ல பயந்து பயந்து போன்ல பேச வேண்டியது இல்ல யாருகிட்டயும் சொல்லாம உங்க பையனோட ஊர் சுத்த வேண்டியது இல்லை எல்லாமே உங்க சம்மதத்தோட எல்லார் கண்ணு முன்னாடியும் நடக்கும் இட்ஸ் சோ லக்கில அவ..

மிஸ்டர் ஹரி உங்க மேல நான் நிறைய மரியாதை வச்சிருக்கேன் இப்படி என் பையனோட உங்க மனைவியை இணைச்சு பேசி அதை கெடுத்துக்காதீங்க.


நான் கூட தான் உங்க மேல நிறைய மரியாதை வைத்திருந்தேன் நீங்க கெடுத்துக்கலையா..

வாட் யூ மீன்..

என்னையா மீனு கருவாடுன்னுகிட்டு.. உனக்கு தெரியாது எனக்கும் என் பொண்டாட்டிக்கு நடுவுல வந்தது உன் பையன்னு உனக்கு தெரியாது..அப்படி என்னையா பொடலங்கா பிரண்ட்ஸ்ஷிப்.. கல்யாணமான பொண்ணு கூட உனக்கு என்னடா பிரண்ட்ஷிப்னு பையனை தட்டி வைக்க தெரியல நீ வந்து எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்ட..


அந்தப் பக்கம் புருஷனை வேலைக்கு அனுப்பிட்டு இந்த பக்கம் உன் பையனோட ஊர் சுத்திகிட்டு இருந்தா அதை ஏன்னு கேட்டதால தான் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனா இப்போ வசதியா உன் பையன் அவன் பக்கத்திலேயே கூப்பிட்டு வச்சுக்கிட்டான்.. இனி யாரும் அவங்களை கேட்கவும் முடியாது பேசவும் முடியாது போங்கய்யா என்றபடி தள்ளாடி நடந்தான்.


அவன் கூறியவற்றை ராமநாதனால் ஜீரணிக்கவே முடியவில்லை என்ன தன்னுடைய மகன் திருமணமான பெண்ணுடன் நெருக்கமாக இருக்கிறானா அதனால்தான் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினையா.?இருக்காது இருக்கவே இருக்காது.. இந்தக் குடிகாரனின் பேச்சை நம்பி நான் என் மகனை சந்தேகப்படுவதா நெவர்.


இப்பொழுது நான் அமைதியாக சென்று விட்டால் இவன் கூறுவதை உண்மை என்று நம்பி விட்டதாக அல்லவா நினைப்பான் அதனால் இப்பொழுதே கணக்கை தீர்த்து விட வேண்டும் என்று நினைத்தவர் ஹரியின் முன்பு வழிமறித்தபடி நின்றார்.


யார் அது வழிவிடுங்க.

குடிச்சிருந்தா என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைச்சுக்கிட்டியா நீ யாரை பத்தி பேசி இருக்க தெரியுமா..தி கிரேட் ராமநாதன் பையனை பற்றி..
உன் பொண்டாட்டிய பத்தி நீ எவ்வளவு வேணாலும் அசிங்கமா பேசிட்டு போ அதை பத்தி எனக்கு கவலை இல்லை ஆனா என் பையனை அதுல இணைச்சு விடாதே அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.

என்னய்யா பண்ணுவ.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது சரி நீ இவ்ளோ பேசுற இல்ல நாளைக்கு என் பொண்டாட்டிய வேற ஆஃபீஸ் மாத்தி விடு.. அப்போ தெரியும் உன் பையனோட லட்சணம் என்று கூறியபடி தள்ளாடியபடியே நடந்து செல்ல யோசனையாக நின்றவர் மறுநாளே விக்கியிடம் சென்று கௌசல்யாவை வேறு கிளைக்கு மாற்றும் படி கேட்க அவன் செய்த ஆர்ப்பாட்டத்தை கண்டு ராமநாதனுக்கு முதல் முதலில் சந்தேகம் வந்துவிட்டது அதன் பிறகு மீண்டும் ஹரியை சந்திப்பதற்காக சென்றார்.


இம்முறை அவனது அலுவலகத்திற்குச் சென்றதால் குடி இல்லாமல் நிதானமாக இருந்தான். ராமநாதனை மரியாதையுடன் வரவேற்று அவரை உபசரித்த பின்பு முதலில் அவன் வாய் திறந்தது அவரிடம் மன்னிப்பு கேட்கத்தான்.


என்ன மன்னிக்கணும் மிஸ்டர் ராமநாதன் நேத்திக்கு கொஞ்சம் போதை அதிகம் ஆதனால உங்க கிட்ட ஏதேதோ பேசிட்டேன்.


இட்ஸ் ஓகே.. நான் வந்த விஷயம் வேற.. பட் ஓரு சந்தேகம் குடிச்சிட்டா என்ன பேசுறோம் எப்படி நடந்து கொள்வதுன்னு குடிச்சவங்க மறந்துவிடுவார்கள்னு சொல்லுவாங்க நீங்க மன்னிப்பு கேட்கிறதை பார்த்தா ஒன்னு நேத்து நீங்க குடிச்சிருக்கல அப்படி இல்லன்னா அவ்வளவு போதையிலேயும் நீங்க நிதானமா இருந்து இருக்கீங்கன்னு அர்த்தம்.

நேத்து நான் மது அருந்தி இருந்தது உண்மைதான் ஆனால் நிதானம் தவறும் அளவுக்கு போதையில் இல்லை நான் மன்னிப்பு கேட்டது உங்க பையனையும் என் மனைவியும் சம்பந்தப்படுத்தி பேசிட்டேன்ல அதுக்காக தான்.

ஆச்சரியமாக அவனைப் பார்த்தபடி இருந்தவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை நீங்க சொன்னது உண்மைதான் என் பையன் கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது கௌசியை பிரான்ச் மாற்ற சொன்ன போது இவன் ஒத்துக்கல என்ன சற்று வருந்தும் குரலில் கூறினார்.


நோ..ந்நோ..நோ..ராங் மிஸ்டர் ராமநாதன்.. ஒரு அப்பாவா இருந்துட்டு பிள்ளையை நீங்க அந்த கோணத்தில் பார்க்க கூடாது இரண்டாவது உங்க பையனும் அப்படி கிடையாது என்று சொல்லவும் .


என்னை குழப்புறீங்க ஹரி..


யெஸ்.. நான் உங்களை குழப்பிட்டேன் தான் அதுக்காக உங்ககிட்ட மனப்புர்வமா மன்னிப்பு கேட்டுக்கறேன்
நான் சொல்ல வந்த அர்த்தம் அவங்க ரெண்டு பேரையும் தப்பான முறையில் இணைச்சு பேசினதுக்கு இல்லை..
அவங்களோட நட்பை நீங்க புரிஞ்சிக்கனும்னு தான் அப்படி சொல்லிட்டு போனேன்.


எல்லாத்துக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கும் ஆனா அவங்க ரெண்டு பேரோட நட்புக்குள்ள அந்த எல்லைக்கோடு எல்லாம் கிடையாது ரொம்ப உணர்வுபூர்வமானது, ஆத்மார்த்தமான நட்பு,புனிதமானது, அத தள்ளி இருந்து பார்க்கும்போது என்னால் ஏத்துக்க முடியுது ஆனால் என் பக்கத்துல வரும்போது ஏத்துக்க முடியல.


என் மனைவி அவளோட அன்பு எனக்கு மட்டும் தானே சொந்தமா இருக்கணும்னு நினைக்கிறேன் அது தப்பா அவளோட அன்புக்கு பங்கு போட உங்க பையன் வரும்போது தான் என்னால ஏத்துக்க முடியல அது உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன் மத்தபடி என் மனைவியும் உங்க பையனையும் நான் தவறா சித்தரிக்கல.. சிந்திக்கவும் மாட்டேன்.


மறுபடியும் குழப்புறீங்க.. நேத்து நீங்கதான் சொன்னீங்க அவளை பிரான்ச் மாத்தி பாருங்க அப்போ உங்க பையன் லட்சணம் தெரியும் நானும் அதே மாதிரி சொன்னேன் என் பையன் விடல..இப்போ நீங்க அப்படியே மாத்தி பேசறீங்க.


நான் மாத்தி பேசல நீங்க அவங்க நட்பை தவறாக புரிந்து கொண்டீர்கள் அவன் அவளை பாதுகாக்கிறான், அதான் என் பிரச்சனை..திருமணத்திற்கு பிறகும் கூட இந்த உலகத்திலேயே அவனைத் தவிர வேறு யாரும் தன்னை நன்றாக பார்த்துக்க முடியாதுன்னு என் மனைவியும் நம்பறா.



இவங்களோட நட்பு ரொம்ப பரிசுத்தமானதாக இருக்கிறதால அவங்களால வேற எதைப் பற்றியும் யோசிக்க முடியல.


ரெண்டு பேருமே கொஞ்சம் பலகீனமானவங்களா இருந்தாலோ இல்ல அந்த நட்புல கொஞ்சமாவது கலப்படம் இருந்தா‌ அவங்களே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பாங்க ஆனா அவங்களுக்குள்ள அது வரல ஒரு சகோதரத்துவமும் அவங்களுக்குள்ள இல்ல இது அதையெல்லாம் தாண்டுனது கடைசி வரைக்கும் ஒருத்தரோட பாதுகாப்புல இன்னொருத்தர் இருக்கணும்னு நினைக்கிறாங்க .


அது பாஸிபில் கிடையாது அதை அவங்க ரெண்டு பேருமே புரிஞ்சுகிட்டாங்கன்னா ரெண்டு பேரோட லைஃப்-ம் நன்றாக இருக்கும் இது என்னோட கருத்து நான் நேத்து அப்படி பேசினது அவங்க நட்பை நீங்க நேர்ல தெரிஞ்சுக்கணும் என்பதற்காக தான் இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் என்ன பண்ணலாம்னு நீங்களே முடிவு எடுங்க.


சோ உங்களோட சைட்ல இருந்து பார்த்தா அவங்க ரெண்டு பேரோட நட்புமே உடைக்கப்படனும்னு சொல்றீங்க இல்லையா ஓகே என்னால என்ன பண்ண முடியுமோ கண்டிப்பாக பண்றேன் தெரிஞ்சோ தெரியாமலோ உங்களோட திருமண வாழ்க்கைக்குள்ள என் பையனோட நட்பு வந்துருச்சு அந்த நட்பு உடைஞ்சாலும் பரவால்ல உங்க திருமண வாழ்க்கையை உடைக்க என் பையன் காரணமா இருக்க மாட்டான் அதுக்கு நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன்.


தேங்க்ஸ் மிஸ்டர் ராமநாதன் நான் சொல்ல வந்த விஷயத்தை ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கிட்டீங்க அவங்க நட்பு உடைஞ்சா தானா கௌசல்யா தனிமைப்படுத்தப்படுவா அப்போ கண்டிப்பா என்னோட அன்பை பரிசீலனை பண்ணுவா ..மறுபடியும் நாங்க சேருவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.


அவ தனியாளா இருந்தா கூட எப்படியோ போன்னு விட்டிட முடியும் ஆனா எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா அவளோட எதிர்காலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் அதுக்காகவாவது பிடிச்சாலும் பிடிக்கவில்லை என்றாலும் கௌசல்யாவோட குடும்பமா வாழனும்னு ஆசைப்படறேன்.


அவளோட கேடயமா உங்க பையனோட நட்பு இருக்கிறதால என்னால அவளை சுலபமா நெருங்க முடியல கேடயத்தை ரிமூவ் பண்ற வேலைய நீங்க பாருங்க அவளை என்கிட்ட வர வைக்கற வேலைய நான் பாத்துக்குறேன்.

சேர்ந்து வாழ ஆசைப்படுறீங்க அப்புறம் ஏன் தயக்கம் .
நேரடியாவே கௌசல்யா கிட்ட போய் பேசி உங்களோடு அழைத்துக்க வேண்டியது தானே அதை விட்டுட்டு தேவையில்லாம எதற்காக இப்படி குடிச்சி உங்க உடம்பை கெடுத்துக்கணும் என் பையன் கிட்ட நான் பேசுறேன் அப்படி இல்லையா அவனை மொத்தமா எங்காவது வெளியூர் மாதிரி அனுப்பி வச்சிடறேன் அந்த சமயத்துல நீங்க கௌசல்யா கிட்ட பேசி உங்க வாழ்க்கைய பிரச்சினை இல்லாம மாத்திக்க பாருங்க.


அது கஷ்டம் மிஸ்டர் ராமநாதன் அவ என்கிட்ட சொல்லிக்காம அம்மா வீட்டுக்கு போய்ட்டா..இந்த நிமிஷம் வரைக்கும் அதுக்கான காரணத்தை என்கிட்ட சொல்லல அந்த கோபம் இன்னும் போகல.
அன்னைக்கு நடந்தது ரொம்ப கசப்பான சம்பவம் அதை பத்தி நானும் சரி அவளும் சரி என்னைக்கும் பேச விரும்பல ஆனா அவ்ளோ பெரிய சண்டைக்கு அப்புறமும் நான் அங்க தான் இருந்தேன் அதே மாதிரி அவளும் அங்க இருந்திருக்கணும் ஆனா விட்டுட்டு போயிட்டா அதுக்கப்புறம் அவங்க வீட்டு சைடும் சரி அவளும் சரி ஒரு துரும்பை கூட எடுத்து வைக்கல அப்படி இருக்கும் பொழுது நான் இறங்கி போறது சரிவராது.


செய்த தப்பை‌ அவ உணரவில்லை அது கூட பரவாயில்லை எப்படா என்கிட்ட போவோம்னு காத்துகிட்டு இருந்த மாதிரி பிரிஞ்சதும் இதான் சாக்குனு மறுபடியும் அவரோட ஃப்ரெண்டோட சேர்ந்துட்டா இதுதான் என்னை ரொம்ப காயப்படுத்துது.

நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன் ஹரி.. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களை தனிமை படுத்த பாக்கறேன்.அப்புறம் கடவுள் விட்ட வழி.

வேணாம் மிஸ்டர் ராமநாதன் அவங்களா புரிஞ்சுகிட்டு விலகுனா மட்டும் தான் அவங்க நட்பு பிரியும் மத்தபடி நாம என்ன முயற்சி பண்ணாலும் அது ரொம்ப ரொம்ப கஷ்டம் அவங்களா பிரிஞ்சுக்கிட்டா ரெண்டு பேரோட தனிப்பட்ட வாழ்க்கையும் நல்லா இருக்கும்.
இனி காலம் தான் அவங்களை பிரிக்கனும்.

தந்தை கூறியவற்றை முழுவதுமாக கேட்டுக் கொண்டிருந்த விக்கி அப்போ நாங்க பிரிஞ்சிட்டா எல்லாம் சரியா வரும்னு சொல்றீங்களாப்பா.


முதல்ல நான் அப்படித்தான் நினைச்சேன் அதனாலதான் அவளை பிரான்ச் மாற்றினேன் உனக்கு ஒர்க் லோடு நிறைய கொடுத்து கொஞ்சம் அவகிட்ட இருந்து தள்ளி வெச்சேன் பட் இப்போ தெரியுது கௌசல்யா மனசு வச்சா மட்டும் தான் அவ வாழ்க்கை நல்லா இருக்கும் என்கிற விஷயம்.



ஹரியுடனான வாழ்க்கையை மட்டும் சொல்லல ஒரு வேளை ரெண்டாவது திருமணம் பண்ணினால் கூட நீ அவ வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினால் மட்டும்தான் அவ சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருப்பா இல்லன்னா எல்லாத்துக்கும் உன்னை தான் தேடுவா எல்லாரும் ஹரி மாதிரி கண்டும் காணாம இருக்க மாட்டாங்க சோ, அவ வாழ்க்கைக்கு எது சரி என்கிறதை இனி முடிவு எடுக்க வேண்டியது நீதான்.


மிஸ்டர் ஹரி பர்ஃபெக்ட் கிடையாதுப்பா..அவர் சைடுல இருந்து பார்க்கறதால எங்களை தப்பு சொல்லறீங்க.
உண்மையிலேயே அவர் நேர்மையானவரா இருந்திருந்தால் என்கிட்ட வந்து நேரடியா பேசி இருக்கலாமே எங்க வாழ்க்கையில இருந்து ஒதுக்கி போன்னு.



அதை விட்டுட்டு உங்களை தூண்டிவிட்டு தேவையே இல்லாம கௌசல்யாவை கஷ்டப்படுத்தி இதெல்லாம் ஒரு நல்ல மனிதன் கணவன் செய்யற காரியமா அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு நீங்க இந்த விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சது எனக்கு கஷ்டமா இருக்குப்பா யாரோ ஒரு ஹரிக்கு பேவர் பண்றேனு உங்க பையன காயப்படுத்திட்டீங்க அதான் நிஜம் என்று சொல்லவும் கடும் கோபம் கொண்ட ராமநாதன்


உனக்கு மிஸ்டர் ஹரிகிருஷ்ணன் பத்தி என்ன தெரியும் விக்கி.. சொல்லு…என்ன தெரியும் என்று குரலை உயர்த்தினார்.
உன் அரைலூஸூ பிரண்டோட புருஷன் அதை தவிர வேறு என்ன தெரியும்..

அவருக்கு நான் சப்போர்ட் பண்ணறேன்னு அதுக்கு நிறையா காரணம் இருக்கு..அவன் பக்கம் கொஞ்சமே கொஞ்சம் நியாயம் இருக்கு..அது எனக்கு தெரியும் சொல்லட்டுமா கேக்கறியா.

பெரியவங்கள மதிக்க தெரிந்தவர் ,பணக்காரன் ஏழை வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் சரிசமமா வச்சு பார்க்கிறவர் ,தொழில்ல பிசினஸ் மேக்னட், ஒருத்தர்கிட்ட டீல் பேசுறதுக்கு முன்னாடியே இவன் சரி வருவானா வரமாட்டானான்னு கணிக்க தெரிஞ்ச ஒரு தீர்க்கதரிசி..

அவர் கணிச்சதுல பொய்த்து போனது ஒன்னே ஒன்னு தான்..அவர் ஆசைபட்டு செய்து கிட்ட கல்யாணம். அழகை பார்த்தவரால அதுக்கு பின்னாடி இருந்த அறிவுகெட்டதனத்தை பார்க்க தவறிட்டாரு..

பொண்ணு எடுத்தவர்..அந்த குடும்பத்தை பற்றி தீர விசாரிக்கல..சுயநலத்தோட ஒட்டு மொத்த குடும்பம்.

அப்பா இங்க நீங்களும் நானும் மட்டும் தான் பேசிகிட்டு இருக்கோம் தேவையில்லாம கௌசல்யாவோட குடும்பத்தை பற்றியோ அவ குடும்ப மெம்பர்களை பற்றிய விமர்சனம் பண்ண உட்கார்ந்து இருக்கல.

ஆனா பேச்சு கௌசல்யாவை பற்றியது..

இருக்கலாம் அதுக்காக அவ குடும்பத்தை பற்றி எதற்காக பேசனும்.


ஒரு பேச்சு வந்துட்டா எல்லாத்தையும் மொத்தமா பேசிடனும் பொண்ணு ஏதோ ஒரு காரணத்துக்காக பிறந்த வீட்டுக்கு வர்றா ..என்ன ஏதுன்னு தீர விசாரிச்சிருக்கனும்..


அந்த குடும்பம் இந்த நிமிஷம் வரைக்கும் விசாரிச்சு இருக்காங்களா..
பொண்ணு சொல்லலைன்னா ஹரிகிட்ட நேர்ல போய் விசாரிச்சி இருக்கனும்..செஞ்சாங்களா..
நீ எடுத்த முயற்சியை அவ அண்ணன்க எடுத்து இருக்காங்களா கௌசி வாழ்க்கை எப்பவோ சரி ஆகியிருக்கும்.


தன்னுடைய குடும்பம் நல்லா இருந்தா போதும் அப்படித்தானே நினைச்சுட்டு இருக்காங்க ..தங்கச்சிக்கு தோதான இடத்துல வேலை கிடைக்கவும் மொத்தமா அவளை மறந்துட்டாங்களே.
ஒருவேளை வேலைக்கு சேர்ந்த இடத்தில ஏதாவது பிரச்சனை வந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க.? அப்பவும் கண்டுக்காம அவளை விட்டுருப்பாங்க அதான் உண்மை.


உன் கூட பழகுறது அவங்க அம்மாக்கு பிடிக்காது இந்த நிமிஷம் அவ உன் ஆபீசுக்கு தான் வந்துட்டு இருக்கா அதுக்கு ஏதாவது ஆட்சேபனை சொல்லுவாங்களா..மாட்டாங்க அதனால தான் சொல்றேன் அந்த குடும்பம் ஒரு சுயநலம் பிடித்தது என்று.

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை என்பதால் விக்கியால் தந்தையை எதிர்த்து பேச முடியவில்லை மௌனம் காட்ட அவரே மேலும் பேசினார்.


ஹரி கிருஷ்ணன் ரொம்ப நல்ல பையன் விக்கி அவரோட பர்சனல் என்னன்னு எனக்கு தெரியாது ஆனா பிசினஸ் உலகத்துல அவர் ஒரு முடி சூடா மன்னனா வர வேண்டியவர். அவருடைய இல்வாழ்க்கை மட்டும் சிறப்பா அமைந்திருந்தா உலகத்தில் டாப் மோஸ்ட் மில்லியனர்ஸ்ல அவரும் ஒருத்தரா இருந்திருப்பார் அவ்வளவு டேலண்ட் ஆனா இந்த பொண்ணை எந்த நேரத்துல கல்யாணம் பண்ணாரோ இன்னைக்கு நடுத்தெருவுல வந்து கிடக்கிறார் .


பிசினஸ் லைன்ல அவரை தூக்கி விடுறதுக்கு யாருமே கிடையாது அப்படியே உதவ போனா கூட அதை அவர் ஏத்துக்க மாட்டார் செல்ப் ரெஸ்பெக்ட் மேன் தெரியுமா.
எல்லாத்துலயும் சறுக்கிட்டாரு..உனக்கொன்னு தெரியுமா நீ மட்டும் பொண்ணா பிறந்திருந்தா நான் அவருக்கு தான் கல்யாணம் பண்ணி தந்திருப்பேன்.. பர்சனலா எனக்கு அவரை அவ்ளோ புடிக்கும். இப்ப கூட அந்த கௌசல்யாவ நெனச்சு அவர் வாழ்க்கையை அழிச்சுக்கும்போது எனக்கு என்ன தெரியுமா தோணும் ஊருல உலகத்துல வேற பொண்ணே இல்லையா தூக்கி வீசிட்டு வேற கல்யாணத்த பண்ணிட்டு வாழ்க்கையில் மட்டும் இல்ல பிசினஸ்லேயும் ஜெயிக்க பாரு மேன்னு சொல்லணும் போல இருக்கும்.



ஆனா என்னதான் நட்பா பழகினாலும் ஒரு கட்டத்துக்கு மேல யார்கிட்டயும் நாம உரிமை எடுத்து பேச முடியாது எதையும் சொல்லிடவும் முடியாது அதனாலதான் நாவை அடக்கிகிட்டு நடக்கிறதை எல்லாம் பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்.


அவருக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சி தான் அவளை பிரான்ச் மாற்றினேன் ஆனா நீ குறுக்க புகுந்து கெடுத்த..


மறுபடியும் அவளே வந்தா சரி இனியாவது உருப்படட்டும்னு பார்த்தேன் பார்த்தா மறுபடியும் இங்கே வந்து உட்கார்ந்துகிட்டா என்னவோ இப்போ உங்க நட்பை பார்த்தா பிரிக்கனும்னு தோணலை பொறாமை தான் வருது.இப்படி ஒரு பெண் தோழி நமக்கு இல்லையேன்னு..


எப்படியோ இங்க யாரும் குழந்தைகள் கிடையாது எல்லாருமே வளர்ந்தவர்கள் படிச்சவங்க எது நல்லது எது கெட்டதுன்னு உங்களுக்கு தெரியும் அளவுக்கு பக்குவம் இருக்கு பார்த்து நடந்துக்கோங்க என்று கூறியபடி இத்துடன்

பேச்சு வார்த்தை முடிந்தது என்பது போல் கிளம்பினார்.


யோசனையாக நெற்றி பிடித்தபடி அமர்ந்தவன் அடுத்த என்ன செய்யலாம் என மனதிற்குள் திட்டம் போட ஆரம்பித்தான்.
 
Last edited:
Top