கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 48

Akila vaikundam

Moderator
Staff member
48


ஏற்கனவே கௌசியின் மீது கடும் கோபத்தில் இருப்பவர்,
இப்பொழுது மகனும் தன்னை விட்டுப் போவதற்கு இவள் தான் காரணம் என்று உறுதியாக நம்பியதால் அலுவலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கோபத்தையும் அவள் மீது காட்டினார்.


என்ன..?எரிந்து விழுந்தார்.


சார்..விக்கி..

என்ன விக்கி.. அவன் ஒண்ணும் நீ வளர்த்துற நாய்க்குட்டி இல்ல இந்த ஆபீஸோட எம்டி மிஸ்டர் விக்னேஸ்வரன் ராமநாதன் ..உனக்கு சம்பளம் கொடுக்கற பாஸ் கிவ் ரெஸ்பெக்ட்.

சாரி சார்.. விக்னேஸ்வரன் சார் எங்க போயிருக்காங்க..அவர் நல்லாயிருக்காருல்ல.. போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது மெசேஜ் பண்ணினா அது சென்ட் ஆக மாட்டேங்குது என்று கண்களின் கண்ணீருடன் கூறவும் அவருக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது.


என்னவோ கட்டுன புருஷன் காணாம போன மாதிரி கண்ணீர் விடற.. இந்தக் கண்ணீரை நீ கழுத்துல தொங்க போட்டு இருக்கியே தாலி.. அதை கட்டுனவனுக்காக கொஞ்சமா விட்டிருந்தா இன்னைக்கு யாருக்கும் இந்த நிலைமை வந்திருக்காது..

ஆமை புகுந்த வீடு விளங்காதுன்னு சொல்வடை இருக்கு தப்பு இனிமே ஆமைங்கற இடத்துல உன் பேரை சேர்த்துக்கணும் ..


பண்ணறதெல்லாம் பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி என் முன்னாடியே வந்து பேசிகிட்டு இருக்க முதலில் இங்க இருந்து போ..
இல்ல பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன் என்று கத்தி தீர்க்கவும் அவர் கூறிய வார்த்தையின் வீரியம் தாங்காமல் அவமானத்தில் அங்கிருந்து கண்ணீருடன் வீட்டிற்கு ஓடி வந்தவள் தான் அதன் பிறகு ஒரு வாரத்திற்கு எழவே இல்லை அந்த அளவிற்கு தோழனை நினைத்தும் தோழனின் தந்தை பேசியதை நினைத்தும் அழுதே தீர்த்தாள்.

இதை கவனித்த ஜானு உடனே அண்ணனுக்கு மொபைலில் அழைத்து விட்டாள்.

அண்ணா ஓரு குட் நியூஸ்.

என்ன ஜானு.

அந்த லூஸூ பய எங்கேயோ சொல்லாம போயிட்டான் போல.

தெளிவா சொல்லு யாரு.

அதான் அண்ணா அண்ணியோட பாய்பெஸ்ட்டி.

ஜானு..உனக்கு கௌசியை நக்கல் அடிக்கலன்னா அன்றைய நாள் போகாது இல்லையா.

அய்யோ அண்ணா இது நக்கல் இல்ல சந்தோஷம்..அந்த பையன் எங்கேயோ இவ கிட்ட சொல்லாம போய்ட்டான் போல.. ரொம்ப நாள் ஆச்சேன்னு இவ அவன் அப்பாகிட்ட போய் கேட்டிருக்கா அவர் பாவம் என்ன டென்ஷன் இருந்தாரோ தெரியல ..மொத்த கோபத்தையும் இவட்ட காட்டிட்டாரு ஏதோ அசிங்கமா வேற ஒரு வார்த்தை கேட்டுட்டாராம் தாங்க முடியாம வந்து ஒரு வாரமா அழுகை.

அத்தை என்னன்னு கேட்டதுக்கு இதை சொல்லிட்டு இருந்தா என்னை பாத்ததும் அப்படியே வாயை முடிகிட்டா..


என் மாமியார் தான் என்னை கவனிக்காம நீ எதுக்காக இதெல்லாம் அவர்கிட்ட கேட்ட..வேலைக்கு போனோமா வந்தோமான்னு இருக்கனும்னு அட்வைஸ் வேற..

ஏன் ஜானு கௌசியை‌ எவனோ ஒருத்தன் திட்டறதும் அவ அழறதும் உனக்கு குட் நியூஸ்ஸா.

அய்யோ அண்ணா நீ அப்படி எடுத்து கிட்டியா நான் அந்த அர்த்தத்துல சொல்லல நான் சொல்ல வந்தது அந்த பையன் இவ பிரண்ட் ஷிப்பை கட் பண்ணிட்டேன்னு சொல்ல வந்தது.

நீ எந்த அர்த்துல சொல்லியிருந்தாலும் உன் சந்தோஷத்துக்கு காரணம் கௌசி அழுதது தான் அதை என்னால புரிஞ்சிக்க முடியுது.நீ சொல்லற காரணம் சப்பைக்கட்டு எனிவே தேங்க்ஸ் ஃபார் யூவர் இன்ஃபர்மேஷன்.

அண்ணா…என ஜானு அழைத்தும் கண்டுகொள்ளாமல் அழைப்பை துண்டித்தான்.


மனமெங்கிலும் அவ்வளவு கோபம்.எப்படி ராமநாதன் அவளை திட்டலாம் கேட்க யாரும் இல்லையென்ற திண்ணக்கமா..என நினைத்தவன் அடுத்த நொடியே அவருக்கு அழைத்திருந்தான்.

அதன் பிறகு தான் புரிந்தது.. அவருக்கு அழைத்திருக்க கூடாதென்று..அவ்வளவு வேதனையுடன் பேசினார்.

முதலில் அவரை அழைக்கும் போது மிகவும் கோபமுடன் தான் அழைத்தாள்.
கௌசியை பேச உனக்கென்ன உரிமை இருக்கிறது என கேட்க வாய் எடுக்கவும்.

சாரி மிஸ்டர் ஹரிகிருஷ்ணன் சமீபமா என் பர்சனல் லைஃப் சரியில்லை அந்த கோபத்தை காரணமே இல்லாமல் கௌசல்யா மேல காட்டிட்டேன்..பிள்ளைக்கே பெத்தவங்க மேல அக்கறை இல்லாத்தோ அடுத்தவங்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம் என சொல்லவும்.

கோபம் மறைந்து பரிதாபம் வந்தது.என்னாச்சு என கேட்டான்.


மகன் ஒரு துண்டு சீட்டில் என்னை தேடாதீங்க எழுதி வச்சிட்டு சொல்லாம கொள்ளாமல் எங்கேயோ போயிட்டான்..கையில் பணம்,கார்ட்,,ஃபோன் எதுவுமே எடுத்துட்டு போகலை.. எங்க போறேன்னும் சொல்லல..எல்லாமே அப்படி அப்படியே கிடக்குது..பிஸினஸ்ல‌ கூட என்னால கான்சன்ட்ரேட் பண்ண முடில.. வீட்டுக்குப் போனா என் மனைவியை என்னால சமாளிக்கவே முடியல ஓரே அழுகை..ஆபீஸ் வந்தா அவனைப்போல சுறுசுறுப்பா வேலை பாக்க முடியல என்ன செய்யறது என குரல் கமர கேட்டவரிடம் இவனால் கோபத்தை காட்ட முடியவில்லை.


விக்கி ஒன்னும் குழந்தை இல்ல தொலைந்து போக.. சீக்கிரமா திரும்பி வந்திடுவான் கவலை படாதீங்க இந்த சமயத்துல உங்க மனைவிக்கு ஆறுதலா இருங்க எல்லாம் சரியாகும் என்றபடி வைத்தான்.


ஒரு நிமிடம் மனம் வெறுமையை உணர்ந்தது ..ச்சே என்ன வாழ்க்கை இது என்பது போல.. அவன்கிட்ட இப்படி மொத்தமா விட்டுட்டு ஓடிபோன்னு சொல்லவே இல்லையே பிறகேன் இப்படி செய்யனும் ஒடி ஓளிஞ்சிகிட்டா எல்லாம் சரியா போகுமா..பைத்தியக்காரன் என்று தான் தோன்றியது.


ஹரியை பொருத்தவரை ஆகாத ஒருவன் எங்கே எப்படி போனால் நமக்கென்ன என்ன என்ற நிலைப்பாடு தான் அதனால் அவன் சென்றது துளி கூட அவனை பாதிக்கவில்லை.


அதே போல கௌசியால் இருக்க முடியவில்லை..எப்படியாவது தகவல் தெரிந்தே ஆகவேண்டும் என்ன செய்யலாம் என யோசிக்கும் போது விக்கியின் தாயார் முகம் நினைவில் வந்தது.


யெஸ் ஆன்ட்டி கிட்ட கேட்டா கண்டிப்பா சொல்லுவாங்க என்று அவருக்கு அழைத்தாள்.

இயல்பாக பேசியவர் கௌசியை வீட்டுக்கு அழைத்தார்.தாயார் கண்டிப்பாக‌ அனுப்ப மாட்டார் அத்தோடு இல்லாமல் விக்கியின் வீட்டிற்கு சென்றதை ஹரி அறிந்தால் அவ்வளவு தான் வேறு வினையே வேண்டாம் எதற்கு வம்பு என முகத்திற்கு நேராகவே மறுத்து விட்டாள்.



நீ ரொம்ப மாறிட்ட கௌசி..
எனக்குத் தெரிஞ்ச கௌசிக்கு இப்படி முகத்தில் அடித்தது போல பேச வராது ஒரு கடினமான வார்த்தைகளை சொல்லனும்னா கூட ரொம்ப பாலிஷா தான் சொல்லுவா.. எதிராளியை அது எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்று யோசித்து பேசுவாள். இப்பொழுது இருக்கும் கௌசி யார் காயப்பட்டால் எனக்கென்ன என்பது போல பேசுகிறாய் என்றார் .


இருக்கலாம் ஆன்ட்டி நீங்க பார்த்த கௌசல்யாவிற்கு கவலைகளும் கிடையாது , கனவுகள் மட்டுமே இருந்தது..வாழ்க்கையின் நெளிவு சுளிவு தெரியாது எல்லோரையும் அவளைப் போலவே கற்பனை செய்து பழகி வந்தாள்.


ஆனால் இப்போதைய கௌசல்யா வாழ்க்கையில் பல அடிகளைப் பட்டுவிட்டாள் ..ஒரு உறவை கூட தக்கவைத்துக் கொள்ள தெரியாத பைத்தியக்காரி என்ற பட்டத்தை வாங்கி விட்டாள்.உறவுகள் கொடுக்கும் அடிகளை பொறுமையுடன் வாங்கிக் கொள்ள பழகிவிட்டால்.



வாழ்க்கையை வெறுத்தது போல பேசுகிறாயே கௌசல்யா உன் வயது பெண்கள எவ்வளவு துடிப்பாகவும் சூட்டிப்பாகவும் இருக்க வேண்டும்.. உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் மறந்து விடாதே.


அந்த ஒரு காரணத்திற்கு தான் ஆன்ட்டி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் எப்பொழுதோ என்னை புதைத்த இடத்தில் புல் அல்ல மரமே வளர்ந்திருக்கும்.


ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க இப்படி நீ தொடர்ந்து பேசுறதா இருந்தா நான் ஃபோனை வைக்கறேன்.


ஆன்ட்டி ப்ளீஸ் ஃபோனை வச்சிடாதீங்க நான் கேட்க வந்த விஷயத்தை கேட்டறேன்.. எனக்கு விக்கி பற்றி தெரியணும் அவன் எப்படி இருக்கான் நல்லா இருக்கானா, எங்க இருக்கிறான் ஏன் இப்படி சொல்லாம கொள்ளாம போனான்..என் மேல ஏதாவது கோபமா அப்படி ஏதாவது இருந்தா என்னை மன்னிக்க சொல்லிடுங்க இனிமே நான் அவன் முன்னாடி கூட வரலை, ஆனால் தயவு செய்து ஒரே ஒரு முறை என் கிட்ட பேச மட்டும் சொல்லுங்க.


மன்னிச்சுடும்மா கௌசல்யா அவன் எங்க இருக்கிறான் எப்படி இருக்கிறான் எதுவும் எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் அவன் சந்தோஷமா இல்ல ரொம்ப வருத்தத்தோடு போயிருக்கான்.



போறதுக்கு முன்னாடி என் கிட்ட வந்து கடைசியா பேசினான் அம்மா இவ்வளவு நாள் உங்க கூடவே நான் இருந்திருக்கிறேன் என்னைக்குமே உங்களுக்கு மத்தவங்க தேவை இல்லாதவாறு பாத்துகிட்டேன் அதுல ஏதாவது குறை இருந்தா என்ன மன்னிச்சிடுங்க இனிமே உங்களோட என்னால எப்பவும் இருக்க முடியும்னு தோணல உங்கள பார்த்துக்கறதுக்காக ஒரு பொண்ணை நியமிச்சி இருக்கேன்.


அவங்க உங்களை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க நான் உங்களை விட்டு ரொம்ப தூரம் போக போறேன் ப்ளீஸ் நீங்க பொறுமையா கேட்டுக்கோங்க.. சும்மா அழாதீங்க ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்லுகிற விஷயத்த கேளுங்க அதன் பிறகு நான் இங்க இருக்கணுமா போகணுமான்னு மட்டும் முடிவு செய்ங்க.


அம்மா நான் கொஞ்ச நாளா நிம்மதி இல்லாம இருக்கேன் சந்தோஷம் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிடுச்சு உண்மையிலேயே உங்க பிள்ளை சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா எனக்கு விடை கொடுங்க.

நான் எங்க இருந்தாலும் உங்களை பத்தி மட்டும் தான் யோசிச்சிட்டு இருப்பேன் உங்களை கண்காணிச்சுக்கிட்டே இருப்பேன் நம்பிக்கை வையுங்கள்.. சீக்கிரமா திரும்பி வருவேன்னு.


கொஞ்ச நாள் ஆன பிறகு நானே உங்களை தொடர்புக்கொள்கிறேன் அதுவரைக்கும் நான் எங்க இருக்கேன்னு தேடாதீங்க உங்க புள்ளை சந்தோஷமா நிம்மதியா இருக்கான்னு நினைச்சு ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள் ப்ளீஸ் அம்மா என்னை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி விடுங்க.


தம்பி நீ போயிட்டா அம்மா எப்படி வாழ போறேன்..இந்த அம்மாவால தனியா இருக்க முடியாது.. உன்னை அனுப்ப எனக்கு கொஞ்சம் கூட மனசு இல்ல ஆனாலும் நீ போகணும்னு முடிவு எடுத்துட்ட அதுக்கப்புறம் உன்னை தடுத்து நிறுத்துவது நாகரீகமான செயல் இல்லை.போய்ட்டு வா.. அம்மா உனக்காக பிராத்தனை பண்ணிகிட்டு காத்திருப்பேன்.

எனக்கு தெரியும்ம்மா அப்பா கிட்ட சொன்னா கண்டிப்பாக ஓத்துக்க மாட்டாங்க..அதனா‌ல தான் உங்ககிட்ட சொல்லிட்டு போறேன் கண்டிப்பா நான் உங்களை கூடிய சீக்கிரம் தொடர்பு கொள்ளறேன்..ஓரு சின்ன உதவிம்மா

சொல்லுப்பா..

இது நான் கௌசிக்காக எழுதிய கடிதம் அவ என்னை தேடுவா..என்னை கேட்டு உங்களுக்கு எப்பவாவது ஃபோன் செய்வா அப்போ இந்த கடிதத்தை அவ கிட்ட சேர்த்த வேண்டியது உங்க கடமை.

உன்னை குடும்பமா பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா நீ அவ குடும்பமா சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காக எங்க எல்லாரையும் விட்டுட்டு போற.



உன் மனசு யாருக்கும் வராது நீ நல்லா இருக்கணும்,அவ வாழ்க்கை சரியான பிறகாவது உனக்காக ஓரு குடும்பத்தை உருவாக்கிக்கனும் செய்வியா.

கண்டிப்பா அம்மா..முதல்ல அவ வாழ்க்கை சரியாகட்டும் பிறகு பார்க்கலாம்.

முதல்ல உங்க நட்பை பார்த்து நான் ரொம்ப பெருமை பட்டிருக்கேன்..ஆனா இன்னைக்கு ஒரு அம்மாவை ரொம்ப வேதனை படறேன் இந்த பொண்ணு ஏன் என் பையன் வாழ்க்கைக்குள்ள வந்தான்னு.


ம்மா ப்ளீஸ் எங்க உறவு தெரிந்த நீங்களே இப்படி பேசினா எப்படி.. எங்களை சுத்தி இருக்கிற அத்தனை பேருமே எங்க உறவை எவ்வளவு அசிங்க படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்திட்டாங்க.

அது போல நீங்களும் பேசி என்னை வேதனைப்படுத்தாதீங்க..எப்படி நான் நல்லாயிருக்கனும்னு நினைக்கறீங்களோ அதே அளவு அவளும் நல்லாயிருக்கனும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க.



அவளையும் என்னையும் தயவு செஞ்சு பிரித்து பாக்காதீங்க..அவ என் உடலில் ஓரு உறுப்பு போலம்மா..நான் போயிட்டு வரேன் அடிக்கடி நான் உங்க கிட்ட பேசுவேன் என்று கூறிவிட்டு அவரின் கால் தொட்டு வணங்கிச் சென்றவன் தான் அதன் பிறகு வாரம் ஒரு முறை தாயாரிடம் பேசியிருக்கிறான் .


பேச ஆரம்பிக்கும் பொழுதே எங்கே இருக்கற என்று கேட்கக்கூடாது என்று கன்டிஷனோடு பேசுவான்.


வைக்கும் பொழுது போன் எங்கிருந்து வந்திருக்கும் என லொகேஷன் தேடி கஷ்டப்படாதீங்க கிடைக்காது இது சாட்டிலைட் ஃபோன் என்று கூறிவிட்டு வைத்து விடுவான்.


அவன் பேசும் அந்த ஒரு சந்தோஷமே போதும் எனக்கு நினைத்துக் கொண்டார்.


பொறுமையாக அவர் கூறியதை கேட்டுக்கொண்ட கௌசல்யா ஆன்ட்டி அந்த லெட்டரை நான் பாக்க முடியுமா..நீங்க கொடுத்து விடுவீங்களா இல்லனா நானே வந்து வாங்கிக்கவா என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க.



நீ வர வேண்டாம்மா நீ வந்தா அங்கிள் கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. சமையல்காரங்க காய்கறி வாங்குறதுக்காக மார்க்கெட் போகும் போது கொடுத்து விடறேன் நீ மார்க்கெட்டில் வந்து வாங்கிக்கோ என்று சொல்லவும் எப்போது எனக்கு கேட்டுக் கொண்டு அந்த நேரத்தில் சென்று பெற்றுக் கொண்டாள்.


அதை வாங்கும் வரை இருந்து அவசரம் படிப்பதில் இல்லை..பிரிக்கும் போதே கை
நடுங்க ஆரம்பித்தது உள்ளே என்ன வெடிகுண்டை வைத்து கொடுத்து விட்டு சென்றிருக்கிறானோ என நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது.
 
Last edited:
Top