கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 50

Akila vaikundam

Moderator
Staff member
50..

அடுத்து என்ன? என்பது போல கௌசி தர்மசங்கடத்துடன் அங்கேயே நிற்க எதை பற்றியும் கவலைகொள்ளாமல் மகளுடன் ஐக்கியமாகி விட்டான்.


மெதுவாக வீட்டின் உட்புற தோற்றத்தை ஆராய்ந்தாள்.

நீ போன பிறகு எதையுமே மாற்றியமைக்கல..ஏனோ தோணலை என அவனிடத்தில் இருந்து அவளுக்கான பதில் வந்தது.

திக் என பயந்தவள் குழந்தையுடன் தானே விளையாடிக் கொண்டிருக்கிறான் எந்த இடைவேளையின் என்னை கவனிக்கிறான்.
இனி எல்லாம் இப்படித்தான் பழகிக்கொள் என அவளுக்கு அவளாக உறுபோட்டுக்கொண்டாள்.


அம்மாடி கௌசி என குரலில் சொல்ல முடியாத ஓரு வருத்தத்துடன் லட்சுமியின் குரல் கேட்டது.

அம்மா..என கௌசி திரும்பி பார்க்கும் முன்னே..


இங்க வந்ததை சொன்னியா என கோபமாக கேள்வி எழுப்பினான்.

ம்ம்..

என்னன்னு.

புருஷன் வீட்டுக்கு போறேன்னு..

அப்படி சொன்னா அவங்க இப்படி பதறி அடிச்சுட்டு வர மாட்டாங்களே நீ வேற எதோ சொல்லி இருக்க என்ன சொன்ன..

என்னை தேடி யாரும் வராதீங்க நானும் இனிமே இங்க வர மாட்டேன் செத்தாலும் சரின்னு சொல்லி முடிக்கும் முன்பே கோபத்தில் பற்களை கடித்தான்.

திருந்தற ஐடியாவே இல்லை இல்லையா என கேள்வி எழுப்பியவன்.அவளிடம் தர்க்கம் செய்ய விரும்பாமல் கனிவாகவே இப்படியா சொல்லிட்டு வருவாங்க.. பாவம் பயந்து போய் வந்திருப்பாங்க முதல்ல தள்ளு என வேகமாக மாமியாரை வரவேற்க சென்றான்.

வேதனை, வருத்தம், அவமானம் என பல்வேறு உணர்ச்சிகளை தாங்கியிருந்தது லட்சுமியின் முகம்.அவரின் ஓய்ந்த தோற்றம்.
பத்து‌ வயதை தூக்கிக் காட்டியது.கையில் வேறு அழுதழுது களைத்து விட்ட நிஷாந்த் வேறு.அவரை அப்படி பார்த்ததுமே கௌசியின் மேல் தான் அப்படியொரு கோபம் வந்தது.


உள்ள வாங்க என்றவன் இயல்பாக நிஷாந்த்தை மாமா கிட்ட வாங்க என தூக்கிக்கொண்டான்.


அவனது கையில் அனுவை பார்க்கவும் தான் லட்சுமிக்கு உயிரே வந்தது..வாடியம்மா பாட்டி கிட்ட என நிஷாந்தை கொடுத்துவிட்டு அனுவை வாங்கிக்கொண்டார்.

உள்ளே வர தயங்கியவரை பார்த்து கௌசிக்கு ஜாடை செய்தான்.

ம்மா வாங்க..என்றவளை முறைத்து வைத்தார்.

உள்ளே வந்ததுமே நியாபகம் வந்தவராக வெளியே செல்ல அவர் வந்த ஆட்டோவை கட் செய்து அனுப்பிய படி ஹரி உள்ளே வந்து கொண்டிருந்தான்.

மீண்டும் அவருக்கு அப்படியொரு தர்மசங்கடம்..அதை கவனிக்காதவனாக ஏன் வேளிய வந்துட்டீங்க உள்ள வாங்க அத்தை என உரிமையோடு அழைக்கவும் அதுவரை இருந்த உணர்ச்சி போரட்டத்தின் காரணமாக லட்சுமிக்கு பெரும் அழுகை கேவலாக வெளியே வந்தது.

அவரின் மனநிலையை உணர்ந்தவனால் ஆறுதல் கூட சொல்ல முடியா நிலை.இப்படி கதற விட்டதற்கு அவனும் ஒரு காரணமல்லவா.

கௌசியால் நெடுநேரம் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

குழந்தைகள் ஓரு ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒருவழியாக அழுது முடித்தவர் ஹரியைப் பார்த்து மாப்பிள்ளை அவளை ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன் ஏதாவது வாய் துடுக்கா பேசினா காதுல வாங்கிக்காதீங்க.. ரெண்டு திட்டுவேணாலும் அதிகமா பேசிடுங்க தயவுசெய்து கை மட்டும் நீட்டிடாதீங்க அவ தாங்க மாட்டா.
அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அவ தான் முடிவெடுத்தா..ஏன் வந்தேன்னும் அப்போ நான் கேட்கல..இப்போ ஏன் போறேன்னும் கேட்கல.

அப்போ நான் பார்த்துப்பேன் என்கிற நம்பிக்கையில் வந்துட்டா.இப்போ நீங்க பார்த்துப்பீங்க என்கிற நம்பிகைல இரண்டாவது முறையா வந்திருக்கா...போன தடவை நடந்த தவறு இந்த முறை நடக்காம பாத்துக்கோங்க,என்றவர்


தனக்குள்ளாகவே முத தடவையா குழந்தையை தூக்கிட்டு வந்திருக்கா முறையா எல்லாம் நடந்திருந்தா நிறையா செஞ்சிருக்கலாம் ம்ப்ச் இந்த பொண்ணுக்கு எல்லாத்துலயும் அவசரம் என நான் கிளம்பறேன் என பேத்தியை தூக்கி உச்சி முகர்ந்து விட்டு வா நிஷாந்த் என விளையாடிக்கொண்டிருந்த பேரனை அழைத்தார்.

அதுவரை எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஹரி அவர் கிளம்புகிறேன் என சொல்லவும் அவசரமாக கௌசியை பார்த்து ஜாடை செய்தான்.


ம்மா சாப்பிட்டுவிட்டு போகலாம் இருங்க என உரிமையாய் சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஹரியின் அதட்டலையும் கௌசியின் உரிமையையும் கண்கூடாக கண்டவருக்கு மனது நிறைந்தது என்னதான் பிரிந்திருந்தாலும் கூட கணவனின் கண் ஜாடையை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த வீட்டில் இன்னும் அவளுக்கான உரிமை இருக்கிறது இது போதும்.

ஒன்னும் வேணாம் கௌசி வீட்டில் எல்லாமே செஞ்சு வச்சிருக்கு பக்கத்துல தானே வீடு சொன்னா கேளு வந்ததுக்கு தண்ணி மட்டும் கொடு என வாங்கி குடித்தவரை காரில் அழைத்துச் செல்ல ஹரி தயாராக நின்றிருந்தான்.

நான் ஆட்டோல போய்க்கிறேனே பக்கம் தானே.

இனி வரும் போது ஆட்டோல போய்க்கோங்க இப்போ என்னோட வாங்க என்ற படி கார்க்கதவை திறந்து விட்டான்.கௌசியை வருகிறாயா என அழைக்க மறுத்து விட்டாள்..


லட்சுமியும் ஹரியும் பெரியதாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மாமியாருக்கும் மருமகனுக்கும் ஒரு மெல்லியப் பனித்திரை இருப்பதை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர் .


லட்சுமிக்கும் சரி ஹரிக்கும் சரி தனிப்பட்ட முறையில் விரோதம் என்று எதுவுமே இல்லை இருவர்களின் வருத்தமும் கௌசியை வைத்து தான் இப்பொழுது கௌசியே சமாதானமாக போகும்பொழுது அவர்களுக்குள் இனி பெருகிதாக என்ன வருத்தம் இருந்து விடப் போகிறது.


வீட்டில் இறக்கி விட்டவன் அப்படியே வண்டியை திருப்பவும் ரொம்ப நாள் கழிச்சு வாசல் வரை வந்தீருக்கீங்க அப்படியே ஓரு எட்டு வீட்டுக்குள்ளேயும் வந்துட்டு போங்களேன் மாப்பிள்ளை என்று கூறவும் .


அத்தை அது…அவளும் ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்து இருக்கா‌ எதெது எங்க இருக்குன்னு தெரியாது அனு அழ ஆரம்பிச்சா சமாளிக்க முடியாது தானே என தயங்கவும்.


ஒரு வாய் தண்ணி மட்டும் ஆவது என்று அவர் இருக்கவும் .


சரி தாங்க என உடனே கீழே இறங்கி விட்டான்.

குழந்தையை கையில் வாங்கிய படி அவன் பின்னே வர
லட்சுமிக்கு கை கால் ஓடவே இல்லை பரபரப்பாக தண்ணீரை எடுக்க வேகமாக ஓடினார்.

பார்த்து..மெதுவா என்ற வார்த்தை அவனுக்குள்ளாகவே ஒலித்துக்கொண்டது.

அவரிடத்தில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வாசலுக்கு வரவும் கேசவனும் ஜானு வேகமாக உள்ளே வர சரியாக இருந்தது .


அதன் பிறகு ஜானு அவனை விடவில்லை..ஆயிரம் கேள்விகள் அண்ணனின் வாழ்வு இனி மலரப்போகிறது என மனமகிழ்ந்து போனாள்.


உள்ளே கேசவன் சத்தமாக இப்படி சொல்லாம கொள்ளாம தனியா குழந்தையை தூக்கிட்டு போறது சாதாரணமான விஷயம் கிடையாது இங்க ஏதோ பெருசா நடந்திருக்கு நீங்க என்னமா சொன்னீங்க நீங்க சொன்னீங்களா இல்ல ஜானு சொன்னாளா ..?எதா இருந்தாலும் எப்படி நீங்க தனியா அனுப்பி வைக்கலாம் என கத்திக் கொண்டிருந்தான்.

ஜானுவிற்கோ மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது.. இப்பொழுது தான் கௌசிக்கு அறிவு வந்து புத்திசாலிதனமான முடிவை எடுத்திருக்கிறாள்..

அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விடாமல் இந்த மனிதன் வேறு காரணம் இல்லாமல் கத்தி கெடுத்து விடுவான் போலருக்கு ஏற்கனவே அண்ணனும் கணவனுக்கும் ஏழாம் பொருத்தம்..இதில் இப்படி பேசி வைத்து மீண்டும் ஏதாவது ரசாபாசம் ஆகிவிடுமோ என பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்


கேசவனின் கத்தலை சற்றும் கண்டு கொள்ளாத ஹரி நேராக கிச்சனுக்குள் சென்றான்.

பின்னாலே ஜானுவும் பயந்து ஓடினாள்.


இங்க என்ன மாப்பிள்ளை சத்தம் என்றவன் இருவரையும் பொதுவாக பாத்து…

இங்க என்ன நடந்தது இன்னைக்கு என்ன நடந்தது இதெல்லாம் இனி தேவையில்லாதது..

நமக்கு இப்போ தேவையானது கௌசல்யா என்கிட்ட வந்துட்டா அந்த ஒரு சந்தோஷம் போதுமே ..


போனது போனதாகவே இருக்கட்டும் இனி நடக்கறது நல்லதாகவே இருக்கட்டும் என்று நினைத்து கொள்ளலாம் பழைய கோவத்தை எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டு போங்க மாப்ளை என் பொண்டாட்டி சந்தோஷப்படுவா என்று கூறியபடி அங்கிருந்து வெளியேறினான்.


இங்கு அனைவருமே நல்லவர்கள் தான் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் ஒருவரிடத்தில் மற்றொருவரை எதிரியாய் காட்டுகிறது பொல்லாதவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் பிரதிபலிக்க வைத்திருக்கிறது.


அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நலமும் சந்தோஷமும் கிடைக்கும் இதை கௌசியின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.


கௌசி மீண்டும் ஹரியுடன் இணைந்ததில் லட்சுமி, கேசவன, ஏன் கௌசியின் தந்தை உட்பட யாருக்குமே பிடிக்கவில்லை ஆனாலும் மகள் முடிவெடுத்துவிட்டாள் இனி அவளின் வாழ்க்கை அவளது கையில் .


கௌசல்யா தனி மனுஷி கிடையாது அவள் ஒரு குழந்தைக்கு தாய் அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு அவள் மட்டுமே பொறுப்பு.



ஒரு பெண்ணால் தனியாக பெண் குழந்தையை‌ வளர்ப்பது என்பது மிகவும் சவாலான விஷயம் கண்டிப்பாக அதற்கு அப்பா என்ற ஆண் துணை தேவைப்படுகிறது அதற்காக வேணும் கௌசல்யாவின் முடிவை மனதார ஏற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர் சமாதானப்படுத்திக் கொண்டனர்.


ஏதோ ஒரு வேகத்தில் கௌசல்யாவும் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து விட்டாள்..ஹரி லட்சுமியை விடப்போன இடைப்பட்ட நேரத்தில் தான் அவளின் முடிவை பரிசீலிக்க ஆரம்பித்தாள்.


அவனிடம் திரும்பி வந்தது மட்டும் இப்போதைய சவால் கிடையாது இனி அவனோடு ஒரே அறையில் ஒரே படுக்கையில் காலத்தைக் கழிக்க வேண்டும் தன்னால் முடியுமா .

ஒருவரை மற்றவர் காயப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்குடன் மாறி மாறி பேசிக்கொண்டது நினைவிற்கு வர தலை வலிக்கு ஆரம்பித்தது தலையைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்து விட்டாள்.


குழந்தை ஒரு ஓரமாக விளையாடிக் கொண்டிருக்க இவள் ஒரு ஓரமாக அமர்ந்திருக்க இரவு உணவை வாங்கி வந்தவன் அவளின் தோற்றம் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.


அனு குட்டி வாங்க.. அப்பாகிட்ட வாங்க என குழந்தையை அழைப்பது போல கௌசல்யாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.


அவன் உள்ளே வந்ததும் பதட்டமாக தரையில் இருந்து எழவும் எதுக்கு இவ்வளவு பதட்டம் ரிலாக்ஸ் .. ஜஸ்ட் ரிலாக்ஸ் என்றபடியே உணவு பொட்டலத்தை டைனிங் டேபிளில் வைத்தவன் உனக்கும் பாப்பாக்கும் சாப்பிட.என்ற படி அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.


என்ன வாங்கி வந்திருக்கிறான் என பார்த்தவள் குழந்தைக்கு மட்டும் வேகமாக ஊட்டினாள்.

அவன் சாப்பிடாமல் எப்படி நாம் மட்டும் சாப்பிடுவது என யோசனையுடன் சற்று நேரம் அமர்ந்திருந்தவள் எதுவாக இருந்தாலும் அவன் சாப்பிட்ட பிறகே பார்த்துக் கொள்ளலாம் .


மீண்டும் இருவருக்கும் நடுவே மன வருத்தத்தையும் கொண்டு வர வேண்டாம் என முடிவெடுத்தபடி மடியில் போட்டு குழந்தையை தூங்க வைக்க முயற்சித்தாள்.


சிறிது நேரத்தில் அனு நன்றாக உறங்கவும் அவளை சோபாவில் கிடத்திவிட்டு இவள் தரையில் அமர்ந்து ஷோபாவில் தலை வைக்க கொஞ்ச நேரத்தில் கண்ணயற ஆரம்பித்தாள்.


நீண்ட நாள் பிரிவு தன் முன் சாப்பிட சங்கோஜப் படுவாள் என் நினைத்து தான் ஹரி அறைக்குள் ஓடி வந்தது.

ஒரு மணி நேரம் கடக்கவும் எப்படியும் சாப்பிட்டு இருப்பா இனி நாம சாப்பிடலாம் என்று நினைத்தபடியே வெளியே வர மீண்டும் அவளின் ஓய்ந்த தோற்றம் கலைத்த முகம் அவனை செயல் இழக்க வைத்தது.


அவளைத் தட்டி எழுப்பி இது உன் வீடு நீ இயல்பா இரு சங்கோஜப்படாத உரிமையா என்கிட்ட சண்டை போடு ஏண்டா நான் கோவிச்சிகிட்டு போனா என்னை சமாதானப்படுத்தி கூப்பிட மாட்டியான்னு அதை விட்டுட்டு இப்படி ஓடுங்காதே என கத்த வேண்டும் போல இருந்தது.

ஆனால் சண்டையிட மீண்டும் பயம் அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது ..அவளாக இனி மாறினால் தான் உண்டு. சுவற்றில் சாய்ந்து அமரவும் சோபாவில் தலை தாங்கவும் தான் இங்கே வந்தாளா இது அவள் வீடு உரிமையாய் அறைக்குள் சென்று உறங்க என்ன தயக்கம்..


வீட்டில் இத்தனை படுக்கை அறைகள் இருக்கும் பொழுது மகளும் மனைவியும் எதுவுமே இல்லாதது போல ஆதரவற்று ஹாலில் படுத்திருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


கோபத்தை நேராக டைனிங் டேபிளில் மீது காட்டினான்.வேகமாக நாற்காலியை இழுத்துப்போட்டு பொட்டலங்களை பிரித்து பார்த்தால் இரண்டே இரண்டு இட்லி மட்டுமே குறைந்திருக்கிறது மீதியெல்லாம் அப்படியே இருக்க மீண்டும் கோபம் தலை தூக்கியது.

கௌசி…ஏன் வந்த.. மறுபடியும் என் நிம்மதியை கெடுக்கவா என மனதிற்குள் கூறிக்கொண்டவன் பொறுமையை இழத்துப் பிடித்தபடி குழந்தையை தூக்கி அறைக்குள் படுக்க வைத்தான்.

பிறகு அவளருகில் சென்று கௌசி… கௌசி.. எழுந்திரு..என அதட்டல் குரலில் எழுப்பினான்.


அடித்து பிடித்து எழுந்தவள் தன் முன்னே நின்றிருக்கும் கணவனைப் பார்த்ததும் அவனின் கோபம் கருத்தில் படவில்லை அவனது நெருக்கம் தான் முதலில் பட்டது ..அவள் எழவும் அனிச்சை செயலாக அவன் நெருங்க தன் மீது அவனது உடல் உரசி விடுமோ என பயந்து அப்படியே பின்னால் சாய தொப்பென சோபாவில் விழுந்தாள் .


அவளது பய

ம், விலகல் என அத்தனையும் ஒன்று சேர பார்த்தவனின் முகம் சிறுத்தது. மிக மோசமான அவமானத்தை மனைவியிடத்திலிருந்து மீண்டும் ஒருமுறை பெற்றுக் கொண்டான் ஹரி.
 
Top