கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 57

Akila vaikundam

Moderator
Staff member
57

கௌசி என்னை மன்னிச்சிடு அப்போ எனக்கு வேற வழி தெரியலை.

நீ பேசாத இங்கிருந்து போ.. என்கிட்ட நீ சொல்லியிருந்திருக்கனும்..நீ பண்ணினது தப்பு. எத்தனை நாள் உன்னை நினைச்சு நான் தவிச்சுப் போயிருக்கேன் தெரியுமா உனக்கு என்ன ஆச்சோ.. ஏதாச்சோ.. எப்படி இருக்க.. எங்க இருக்க, சாப்டியா இல்லையான்னு எதுவுமே தெரியாம இந்த ஒன்றரை வருசம் கஷ்டப்பட்டது தெரியுமா .?.மன்னிச்சிடுன்னு ஒத்த வார்த்தையில சொல்லற.. என்னால உன்னை மன்னிக்க முடியாது போடா இங்கிருந்து என் தன்னருகில் அமர்ந்திருந்தவனை அடித்து விரட்டினாள்.

பொறுமையாக வாங்கிக் கொண்டவன் ஒரு கட்டத்தில் அடிக்கும் கரங்களை இறுகப் பிடித்துக்கொண்டு கண்களில் ஒற்றி இந்த பாசத்துக்காக தான்.. இதுக்காக தான் உன்னை விட்டு விலகி வந்தது .


நான் அங்கே இருந்திருந்தா இதுபோல ஒரு நிறைவான வாழ்க்கையை நீ வாழ்ந்திருக்க மாட்ட.


இந்த ஓன்றரை வருஷம் எனக்கு மட்டும் உன்னைப் பற்றி கவலை இல்லைனு நினைச்சுகிட்டு இருந்தியா தினம் தினம் உன்னை பத்தி மட்டும் தான் வேதனை படுவேன்
தெரியுமா.

என் அம்மா அப்பாவை பற்றி கூட நான் கவலைப்பட்டதில்லை கௌசல்யா ஆனா உன்னை நினைச்சு கவலைபடாத நாளே கிடையாது.


மனசுக்கு பிடிக்காத ஒருத்தனோட சேர்ந்து வாழுன்னு நான் பாட்டுக்கு லெட்டர் கொடுத்துட்டு வந்துட்டேன்.. என் பேச்சை மதித்து அவளும் அங்க போயிட்டா அந்த மனுஷன் கிட்ட சித்திரவதையை அனுபவிக்கிறாளோ.. இல்ல மனவேதனையை அனுபவிக்கிறாளோன்னு தெரியலையேன்னு மனசுக்குள்ள புழுங்கி கிட்டு இருந்தேன்.


ரவி உன்ன பத்தி விசாரிச்சு உனக்கும் அண்ணாவுக்கும் வாழ்க்கை ஸ்மூத்தா போகுதுன்னு சொன்ன பிறகுதான் என்னால நிம்மதியா மூச்சு விட முடிஞ்சதுக்கு கௌசல்யா.


அதன் பிறகு ஒரு நாள் உன்னுடைய புகைப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தான்.


இந்த மேடிட்ட வயிற்றை பார்த்த பிறகு தான் என் குற்ற உணர்ச்சி எல்லாமே காணாம போயிடுச்சு.. ரொம்ப நன்றி மா என்று அவள் தலையோடு தலைமுட்டி அவனின் அன்பை வெளிப்படுத்தினான்.



அப்படின்னா நான் மாசமா இருக்குறது தெரிஞ்சதுக்கப்புறம் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா என்று குரல் தழுதழுக்க கேட்டாள்.


ஆமாம் என்பது போல் தலையசைக்கவும்.


ஒருவேளை இது என் விருப்பம் இல்லாமல் வந்திருந்தா..? ஹரி என்னை அப்யூஸ் பண்ணி இருந்தா என வயிற்றில் கை வைத்து கேட்க

வேகமாக அவளின் வாயை முடியவன் பேசாதே என்பது போல தலையசைத்து விட்டு என்னைக்குமே உனக்கு அப்படி ஒரு கொடுமை நடக்காது அந்த நம்பிக்கைல தான் நான் அண்ணாகிட்ட உன்னை போக சொன்னது .

நீ அவரை புரிந்து கொண்டதை விட அதிகமா நான் புரிஞ்சு வச்சிருக்கேன் அண்ணாவை பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவர் பெண்களை மதிக்கிறவர் கூட தொட மாட்டார் உண்மை தானே என்று கேட்கும் அவளும் ஆமாம் என்பது போல் தலையசைத்தாள்.


பிறகு கண்களை அழுத்தி துடைத்தபடி சரி இப்ப சொல்லு. உன் அம்மா ஹரியை தேடி வராமல் இருந்திருந்தால் சொல்லிக்காம கல்யாணம் பண்ணி இருப்ப இல்ல என்று கேட்கவும்.


ஆமாம் என்பது போல தலை குனிந்தான் உடனே அவன் முதுகில் ரெண்டு அடி போட்டவள் அவ்வளவு தைரியம் உனக்கு நான் இல்லாமல் நீ கல்யாணம் பண்ணிடுவியா..
என்ன விடு உன் அம்மா அப்பா அவங்க எவ்வளவு ஆசைப்பட்டாங்க உன் கல்யாணத்தை பாக்கணும்னு அவங்களுக்கு கூட சொல்லாம கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்திருக்கிறேனா உனக்கு எவ்வளவு திமிரு எனக்கு வந்த கோபத்துக்கு என்று மேலும் இரண்டு அடிகளை அவனது முதுகில் வைத்தாள்.


சிரித்தபடியே வாங்கிக் கொண்டவன் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு என்னோட கல்யாணத்த நீங்க எல்லாம் ஏத்துக்க மாட்டீங்ங என்கிற பயம் தான். ஆனால் அது பொய்யின்னு உங்களையெல்லாம் பார்த்து பிறகு தான் தெரிந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை பண்ண இருந்தேன் என்னை மன்னித்துவிடு கௌசல்யா என்று மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டான்.


சரி மன்னிக்கிறது எல்லாம் இருக்கட்டும் யாரை கல்யாணம் பண்ணிக்க போற.


நம்ம கூட படிச்சாலே ரெஜினா அவ தான் என்று உணர்ச்சியற்று குரலில் கூறவும்.


என்ன..? என பதறி எழுந்தாள்.
அதிர்ச்சியில் உதடுகள் துடிக்க அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சிடா என்று சொல்லவும் ஆமாம் என்பது போல் தலையசைதான்.


அப்புறம் எப்படி டா என மேலும் அதிர்ச்சியில் கேட்க அவ இப்போ கைம்பெண் என கூற மீண்டும் ஒரு முறை அதிர்ச்சி அடைந்தாள்.


எப்படி, அன்னைக்கு கெட் டூ கெதர் வரும் போது கூட கணவரோட தானே வந்தா..

ம்ம்..ரோட் ஆக்ஸிடென்ட்ல அவ கணவர் ஸ்பாட் அவுட்‌.இவ‌ பிழைத்து வந்தது கடவுளோட ஆசிர்வாதம்.


இப்போ அவ எங்க..


பக்கத்து அறையில் தான் இருக்கா.. நீங்க எல்லாம் ஏத்துக்கலனா என்ன செய்யறதுன்னு பயத்துல யாரையும் பார்க்காம அடைஞ்சு கிடக்குறா என் அம்மா அப்பா ஹரி அண்ணா எல்லாருக்குமே விஷயம் தெரியும் ஆனாலும் அவங்களை பார்க்க இவ தயக்கறா..

இதில் என்ன தயக்கம் இருக்கு அவளோட கெட்ட நேரம் அவளோட கணவர் போயிட்டாங்க அதுக்காக இப்படியே இருந்திட முடியுமா? நம்மளை புரிஞ்சிக்கிட்டவங்க நல்லவங்க வரும்போது ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கலாம் தப்பில்லை .. எப்படி அவ எங்களை எல்லாம் அப்படி நினைக்கலாம் நாங்க என்ன அந்த அளவுக்கு பிற்போக்குவாதின்னு நினைச்சிட்டாளா? நான் இதுக்காகவே அவ கிட்ட சண்டை போட போறேன் நகரு பக்கத்து ரூம்தான என்று வேகமாக நடக்கவும் கௌசி என பின்னாடியே ஓடி வந்தவன் ஏதோ சொல்ல வருவதற்க்குள் ரெஜினா என்றபடி கதவை திறந்து விட்டாள்.


அடுத்த நொடி அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் என்ன பேசுவது என்று புரியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.


கௌசல்யாவை சமாதானம் செய்வதாக இல்லை அறைக்குள் அழுது கொண்டிருக்கும் ரெஜினாவை சமாதானப்படுத்துவதா என தெரியாமல் வினாடி நேரம் குழம்பியவன் ரெஜினாவிடமே சென்றான் .அவளோ மடியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு வீழ்ச்சேரில் அமர்ந்திருந்தாள்.


இதுக்கு தான் இதுக்குதான் இந்த கல்யாணம் வேணாம்னு உன்கிட்ட போராடினேன்..என கண்ணீர் வடித்தாள்.

சாரி..சாரி..கௌசிக்காக சாரி ப்ளீஸ் ப்ளீஸ் நீ அழக்கூடாது ..நீ அழக்கூடாது ரெஜினா..ஓகே ..கௌசிக்கு எல்லாத்தையும் நான் புரிய வைக்கறேன்.. நான் சரிசெஞ்சிடுவேன்..,நீ மட்டும் அழக்கூடாது.. நாளைக்கு நமக்கு கல்யாணம் அது மட்டும் தான் நியாபகத்துல இருக்கனும் வேற எதையும் யோசிக்க கூடாது..
என்று கூற அவள் சரி என்பது போல் தலையசைத்தாலும் கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே தான் இருந்தது.


நீ குழந்தையை என்கிட்ட கொடு என்றவன் இந்தா டிஸ்யூ முகத்தை நல்லா துடைச்சிக்கோ இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் உன்னை பாக்க வருவாங்க..என் ரெஜினா அழு மூச்சியா அவங்க முன்னாடி இருக்க கூடாது என குழந்தையை வாங்கிய படி அறையை விட்டு வேகமாக கௌசியை நோக்கி ஓடினான்.


கௌசி வேகமாக வரவுமே ஹரிக்கு புரிந்து விட்டது.அவள் ரெஜினாவை பார்த்து விட்டாள்.விக்கி சொல்லும் பொழுது அவனுக்குமே அதிர்ச்சி தான் ஆனாலும் அவனது தனிப்பட்ட முடிவில் தலையிட முடியாதல்லவா.

அவனது தாய் தந்தைக்குமே பெரும் அதிர்ச்சி தான்.. மகன் இத்தனை வருடம் கழித்து திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கிறான்..அந்த சந்தோஷத்தை கொண்டாடுவதா இல்லை பெண் இப்படி இருக்கிறாளே என்று வேதனை கொள்வதா என்று புரியவில்லை.


ஏற்கனவே விக்கி தாயாரிடம் இந்த திருமணம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காது என மறைமுகமாக எச்சரிக்கை செய்திருந்ததால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டுதான் அவரும் இங்கே வந்தது. அதனால் அவருக்கு பேரதிர்ச்சியாக இல்லை .


அவரும் ஒரு வீல் சேர் அதில் இருக்கும் கஷ்டங்களை அறிவார் அதேபோல மருமகளும் வரவும் சற்று ஏமாற்றம் தான் மகனுக்கு விடிவென்பதே கிடையாதா என்று ஆனாலும் அவனுக்கு இதுதான் விருப்பம் என்று தெரியும் பொழுது எப்படி தடை போட முடியும் முழு மனதாக ஏற்றுக் கொண்டு விட்டார்.


ஆனாலும் ரெஜினாவை பார்க்க தயங்கியபடி இதுவரை யாரும் அவளை பார்க்கவில்லை.


என்ன கௌசி ஏன் இப்படி ஓடிவர்ற..நீ இப்போ தனியாள் இல்லை கவனத்தில் வச்சிக்கோ.

அவன் திட்டியதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

ஹரி…ஹரி..அங்க ரெஜினா என்று கேவவும்..


தெரியும்..விக்கி உன்னை பார்க்க வர்றதுக்கு முன்னாடி எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.

இது அவனோட தனிப்பட்ட முடிவு அவன் வாழ்க்கை நாம தலையிட முடியாது அதிர்ச்சடையவும் கூடாது சீக்கிரமா ரெஜினா குணமாகணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்க மட்டும் தான் செய்யணும் இப்படி ஓவரா ரியாக்ட் பண்ணாத இது கல்யாண வீடு ஞாபகம் இருக்கட்டும். இதற்கு பயந்து தான் அவன் யார்கிட்டயும் சொல்லாமல் திருமணம் செய்ய முன் வந்தது புரியுதா என்று அழுத்த கூறவும் .


எப்படி என்னால ஏத்துக்க முடியும் ஏற்கனவே ஆன்ட்டியை அவனுடைய பதினைந்தாவது வயசுல இருந்து பராமரிச்சிகிட்டு இருக்கான் இப்போ மனைவிக்கும் பணிவிடை பண்ணனும்னா எப்படி.


கௌசி மறுபடியும் சொல்லறேற் இது அவன் வாழ்க்கை ..அவன் மனைவிக்கு அவன் செய்ய போறான் அதுக்கு தடை போட நீயும் நானும் யாரு சொல்லு நீ அவனோட தோழிதான் அந்த எல்லைக்குள்ள நில்லு அதை தாண்டி அவனோட அந்தரங்கத்துக்குள்ள போக முயற்சி செய்யாதே புரியுதா என்று அவளை கட்டுப்படுத்த.

மௌனமாக கண்ணீர் சிந்தினாள்.
கௌசி நீ உன் நண்பனை நினைத்து பெருமைப்படணும் இந்த மாதிரியான குணம் எத்தனை பேருக்கு வரும் சொல்லு .. கண்டிப்பா நான் செய்யமாட்டேன்.

பெண் என்றாளே கட்டில் சுகம்னு நினைக்கற ஆண்களுக்கு மத்தியில இவன் குறிஞ்சி பூ போல பூத்திருக்கான்..

மனைவி எந்த குறையும் இல்லாம புத்தம் புது மலரா வரணும்னு எதிர்பார்க்கறவங்களுக்கு மத்தியில் உன் நண்பன் ஒரு விதவை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிறான் அத்தோடு இல்லாமல் அவளோட குறையை முழு மனசா ஏத்திருக்கான். ரெஜினா உடல்ல ஊனம் இல்லை உன் மனசுல தான் ஊனம் இருக்கு தயவு செஞ்சு நீ இதுபோல நடந்து அவன் மனசை உடைத்து விடாதே..நாங்க எல்லாருமே முழு மனசோட இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டோம் நீயும் ஏத்துக்கோ..அவன் வர்றான் நான் சொன்னதை கவனத்துல வச்சிகிட்டு பேசு என்றான்.


அதற்குள் விக்கியும் வர அவனிடத்தில் இருந்த குழந்தையை ஹரி வாங்கிக்கொண்டு சென்றான்.


அண்ணா எங்க போறீங்க என்று கேட்கவும் ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு பேரும் பார்த்து இருக்கீங்க உங்களுக்குள்ள பேசிக்க நிறைய இருக்கும் பொறுமையா பேசிட்டு வாங்க நான் அம்மா அப்பாவோட கல்யாண வேலையை பாத்துட்டு இருக்கேன் என்று நாசுக்காக நகர்ந்தான்.


கௌசி இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பாக்கலை.

நானும் தான் இப்படி ஓரு ரெஜினாவை எதிர்பாக்கல.. என்னாச்சு அவளுக்கு..

ம்ப்ச் விடு கௌசி நீ ரெஜினாவை ஏத்துக்கல..பிறகேன் இதெல்லாம் கேட்கற.

நீயா அப்படி கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..போ..சொல்லாத..கல்யாணத்தையே சொல்லிக்காம பண்ணிக்க இருந்தவன் இதையா சொல்ல போற..என்று மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியவள் அவனருகில் வந்தவள், எப்படிடா..எப்படி உன்னால யோசிக்க முடிஞ்சுது நானும் உன் அம்மாவும் இந்த கல்யாணத்தை ஏத்துக்க மாட்டோம்னு.. எங்களுக்கு உன் திருமணம் சந்தோஷத்தை கொடுக்காதுன்னு நீ எப்படி சொல்லலாம்.


ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவுதான் அதுக்காக இந்த அளவுக்கு நீ கற்பனை செய்வியா ..

ஒரு தாயா,தோழியா இந்த வருத்தம் கூட எங்களுக்கு இல்லனா எப்படி நாங்க உன் நல விரும்பிகள் ஆவோம் சொல்லு.. நீ என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்த்தன்னு தெரியல ஆனா நான் உனக்குள்ள இருக்கற இந்த விக்கியை எதிர்பாக்கல.

இப்போ நீ எங்ககிட்ட சொல்லிக்காம தானே கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்ச..பண்ணிக்கோ நான் இப்பவே கிளம்பி போறேன்.. ஏர்போர்ட்ல இருந்து பத்திரமா கூட்டிட்டு வந்து புது விக்கியை எனக்கு அறிமுகபடுத்தினதுக்கு ரொம்ப நன்றி சாமி.. என்னவளின் கைகளை பிடித்தவன்.

ப்ளீஸ் கௌசி உன் பங்கிற்கு நீயும் என்னை வதைக்காதே..இந்த நிமிஷம் வரைக்கும் கல்யாணம் வேணாம்னு ரெஜினா பிரச்சனை பண்ணிட்டு இருக்கா அவளை எப்படி சமாளிக்கறதுன்னு இப்போ வரை எனக்கு சத்தியமா தெரியல.இப்போ நீயும் கிளம்பறேன்னு ஆரம்பிச்சா நான் என்ன செய்வது.


இந்த மாதிரி எல்லாம் பிரச்சனைகள் வரும்னுதான் சொல்லாம கொள்ளாம இங்க வச்சு கல்யாணத்தை பண்ணிட்டு அதுக்கப்புறம் உங்களுக்கு அவளை அறிமுகப்படுத்தனும்னு நினைச்சேன்..என் அம்மா எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க..ப்ளீஸ் கௌசி என்னை புரிஞ்சுக்கோ நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன் சாஞ்சி அழ யாராவது ஒருத்தர் தோள் கொடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை.தள்ளி மட்டும் விடாதீங்க என்னால தாங்க முடியல.


ஏன்டா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லற.. நான் இருக்கேன் டா..தோள் என்ன மடி தர்றேன்டா..என்னை உன் தாயா நினைச்சி அதுல ஆசுவாசப்படுத்திக்கோ.. என்று மாறி மாறி சமாதானம் செய்து கொண்டனர்.


பிறகு அனைவரும் ரெஜினாவை சென்று பார்த்து அவளிடம் சகஜமாக பேசி அவளது மன குழப்பத்தை போக்கினர் அவள் தனியாள் அல்ல என்பதை உணர வைத்தனர்.ஒன்றாக
இரவு உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தனர்.

ரெஜினா விக்கி தாயாருடன் பேசிக் கொண்டிருக்க ராமநாதனும் ஹரியும் குழந்தையுடன் விளையாடிக்

கொண்டிருக்க கௌசல்யா விக்கியுடன் அமர்ந்து அவனின் ஒன்றை ஆண்டு கால வாழ்க்கையை கேட்டு தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
 
Last edited:
Top