59
ரெஜினா கோமாவில் இருந்து மீண்ட பிறகு முதலில் கேட்டது அவளது கணவனைத் தான் .
அவள் உடல் நலம் கருதி சில நாட்கள் வரை ஏதேதோ பொய் சொல்லி சமாளித்தார்கள்.
ஆனால் ரெஜினா புத்திசாலி கணவனுக்கு ஏதோ பெரியதாக நடந்து விட்டது என்பதை புரிந்து கொண்டாள்.
அவர் என்னை விட்டுட்டு போய்ட்டாரா அப்பா என நேடியாகவே கேட்டாள்.
ஆமாம் என்பது போல தந்தை தலைகுனியவும் அதிர்ச்சியில் சில வினாடிகள் மௌனம் காத்தாள்.
எதார்த்தத்தை புரிந்த பிறகு தான் அழவே ஆரம்பித்தாள் கணவன் இல்லாத உலகத்தில் நானும் இருக்க விரும்பவில்லை என சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் முரட்டு பிடிக்க ஆரம்பித்தாள்.
தந்தையார் குழந்தையை வைத்துக்கொண்டு அவளுடன் போராட முடியவில்லை உதவிக்காக விக்கியை அழைத்தார்.
அவனும் உதவிக்கு ஓடி வந்தான்.சாதாரணமாகவே எல்லோருக்கும் உதவும் குணம் உடையவன்.. அப்படி இருக்கும் பொழுது காதலித்த பெண்ணையா கை விடுவான்.
ரெஜியை பார்த்து விட்டு ஊர் செல்ல இருந்தவன் அவளின் நிலை அறிந்து ஊர் செல்ல பிடிக்காமல் கடந்த பத்து நாட்களாக ஹோட்டலின் தங்கி இருக்கிறான்.. மருத்துவ செலவு ஒருபுறம் தங்கும் செலவு மறுபுறம் என அவனது கழுத்தை நெரிக்கும் வேளையில் ரெஜியின் கணவனின் சொத்து வக்கீலின் மூலமாக வந்தது.
மறுப்பு சொல்லாமல் அவளது தந்தை வாங்கிக்கொண்டு உடனடியாகவே விடுதியை நடத்துவதிலும் ஆர்வத்தை காட்டி விட்டார்.
இனி ரெஜியை உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்கலாம் அதற்கு அவள் ஒத்துழைக்க வேண்டுமே
எப்படியோ போராடி வெளியில் தெரியும் காயங்களை எல்லாம் ஆற வைத்தனர்.. ஆனாலும் அவளால் எழுந்து நடமாட முடியவில்லை..காலை கீழே வைத்தாலே வலியில் துடித்தாள்.
அதன்பிறகு ஒவ்வொரு சிறப்பு மருத்துவராக அவளின் உடல்நிலையை சோதிக்கும் பொழுது தான் விலாவில் அடிபட்டு இருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது .
விக்கிக்கு மிகவும் அதிர்ச்சி விலாவில் அடி என்றால் நடப்பது சிரமம் ஆயிற்றே..
அதையே தான் மருத்துவர்களும் கூறினார்கள்.
முதலில் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் உள் காயம் முற்றிலும் குணமடைய வேண்டும் அதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகும் அதன் பிறகு சில பரிசோதனைகள் செய்துவிட்டு எந்த மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்வது என்பதை பிற்பாடு கூறுகிறோம் என முடித்து விட்டனர் .
ரெஜியில் உடல் காயம் மனக்காயம் ஆறி மீண்டு வர முழுதாக மூன்று மாதங்கள் ஆயிற்று விக்கி வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கும் மதுபான விடுதிக்கும் மாறி மாறி அழைந்து கொண்டிருந்தான்.
இடைப்பட்ட நாளில் நேகா அவனுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள் அவளை பராமரிக்கும் பொறுப்பை பணிப்பெண்ணுடன் சேர்ந்து அவனும் கவனித்தான்.
கணவனுடன் ஆடம்பர பங்களாவில் வாழ்ந்த ரெஜினா இப்பொழுது குழந்தை மற்றும் வீல்சேரின் உதவியுடன் பண்ணை வீட்டிற்கு மாறி இருந்தாள்.
ஹரி பண்ணை வீட்டின் ஒரு பகுதியை திருமணம் மட்டும் விழாக்களுக்கு வாடகைக்கு விடுவது போல ஏற்பாடு செய்துவிட்டு அருகேயே ஒரு அறை வாடகைக்கு எடுத்து தங்கிக்கொண்டான்.
பண்ணையை நிர்வகிப்பதும் மதுபான விடுதியில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பதும் அவனின் பொறுப்பாயிற்று.. அதற்கு ரெஜியின் தந்தை கணிசமாக ஒரு தொகையை சம்பளம் என கொடுத்து விட்டார்.
அவனுக்கும் தேவை இருந்ததால் மறுக்காமல் வாங்கிக் கொண்டான் அவன் ஒன்றும் இனாமாக பெற்றுக் கொள்ளவில்லையே அவர்கள் கொடுக்கும் ஊதியத்தை விட மூன்று மடங்கு உழைத்துக் கொட்டினான் நடுநடுவே குழந்தையை பார்த்துக் கொள்வது ரெஜினாவிற்கு ஆறுதலாகவும் அனுசரணையாகவும் இருந்தான்.
ஆனால் ரெஜி அவனை அவ்வளவு சீக்கிரத்தில் அருகில் நெருங்க விடவில்லை அவன் அருகில் வந்தாலே எரிந்து விழுவாள் அவன் செய்யும் உதவிகளை ஏற்றுக்கொள்ள மாட்டாள் மட்டம் தட்டுவாள் இப்படி பலவாறாக வார்த்தைகளாலும் செயலாலும் அவன் மனதை நோகடித்தாள்.
இப்படியே ஆறு மாதம் கடந்திருக்கு ஒரு நாள் ரவியின் போனிலிருந்து விக்கிக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது அதை ஓபன் செய்து பார்க்கும் பொழுது கௌசல்யா குடும்பம் சகிதமாக ஓரு ரெஸ்டாரன்ட்டில் உணவு அருந்துவது போல இருந்தது மற்றொரு புகைப்படம் மகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வது போல.. அவனின் மனம் நிறைந்தது போதும் இப்போதும் அவனுக்கு எதற்காக ஊரை விட்டு ஓடி வந்தானோ அது நன்றாகவே நடந்து விட்டது.
இனிமேல் தைரியமாக அவனைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளலாம் அதிகமாகவே தயாரிடம் உரையாடினான் எப்பொழுதும் இவன் கூறுவது நான் எங்கே இருக்கிறேன் என்று நீங்கள் கேட்கக் கூடாது தேடவும் கூடாது என்பது அவரோ நீ சொல்றபடி நான் கேட்கிறேன் ஆனா சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோ பெரும்பாலும் தாய்க்கும் மகனுக்கும் இருக்கும் உரையாடல் இப்படித்தான் இருந்தது.
இவர்கள் பேசுவதை சில சமயம் ரெஜினாவும் கேட்பாள் ஏன் நீ உன் அம்மாவை விட்டு வந்தாய்..எதற்காக இன்னும் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கிறாய் என்று எதற்குமே பதில் கூறியதில்லை.
ஒரு முறை கோபத்தில் உன்கிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா.. உன்கிட்ட தானே கேள்வி கேட்கிறேன் என கத்தினாள்.
நீ கூட தான் ஹாஸ்பிடல் போனா ட்ரீட்மென்ட்க்கு ஒத்துழைக்க மாட்டேங்குற என்கிட்ட எப்பவும் எரிஞ்சி எரிஞ்சி விழுந்துட்டு இருக்கு அதை எல்லாம் ஏன்னு நான் உன்கிட்ட கேட்டேனா கேட்டா நீ பதில் சொல்லுவியா..சொல்லு.. நானும் உனக்கு பதில் சொல்றேன் என்று பதிலுக்கு வெடித்தான்.
தலை குனிந்து மெல்லிய குரலில் ஏன்னா உன்னை பார்த்து எனக்கு பயமா இருக்கு..
எதுக்கு பயம்..
ஏற்கனவே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ நீ செய்த உதவிகள் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப ரொம்ப பிடிக்குது என்னை அறியாமல் என் மனசு உன் பக்கம் திரும்புது இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காத ப்ளீஸ்..
அவளின் நிலை புரியவும் ஏய் லூசு இதுக்காகவா என்கிட்ட அப்படி நடந்துக்கற. உன்னை முதல்ல நம்பு நீ பழகினமான பொண்ணு கிடையாது புரியுதா.
ஏமாற்றத்தை உணர்த்தவள் சரி என்பது போல் தலையாட்ட அதை புரிந்து கொண்டவன் போல உனக்கு உடம்பு சரியில்ல ரெஜினா ..நீ அதிகமான வலியை அனுபவிக்கிற மருந்துகள் எடுத்துக்கற.. அதோட பக்க விளைவுகள் கூட உன்னை பலவிதமா சிந்திக்க வைக்கும் முதல்ல உன் உடல்நிலை சரியாகட்டும் அதுக்கப்புறம் நிதானமா யோசிச்சு பாரு அப்போவும் இதே பயம் இருந்தா என்கிட்ட சொல்லு அதற்கான தீர்வை நான் உனக்கு சொல்றேன்.
சரி இப்போ ஹாஸ்பிடல் கிளம்பு..
இன்னைக்கு ஹாஸ்பிடல் வேண்டாமே..
ஏன்..ஏன் வேணாம்னு சொல்லற நேற்றே போக வேண்டியது ஏற்கனவே ஒரு நாள் லேட் ..நான் உன்னோட நர்ஸ் அனுப்பி வைக்கறேன் சீக்கிரமா டவல் பாத் எடுத்துட்டு கிளம்பறோம்.
விக்கி என கைபிடித்தவள்.. இங்க வெச்சி செக் பண்ண மாட்டாங்களா.
ஏன்பா ..
இல்ல விக்கி பொதுவாவே எனக்கு கூச்ச சுபாவம் இடுப்புல அடி என்கிறதால என்னால ட்ரீட்மென்ட்க்கு கோ ஆபரேட் பண்ண முடியல.
மருத்துவ தொழிலை தப்பா பார்க்க கூடாது அவங்க இன்னொரு தாய் மாதிரி நீ எப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்த..அது போல தான் இதுக்கும் நீ ஓத்துழைப்பு கொடுக்கனும்.
உனக்கு பெண் மருத்துவர்களை பரிந்துரை செய்ய சொல்லறேன்.. இனி ஒவ்வொரு முறை ட்ரீட்மென்ட் போகும்போதும் முடியுற வரைக்கும் நானும் உன் கூடவே இருக்கிறேன் ஓகே வா.. இனியும் என்ன தயக்கம்.
அது.. இன்றைக்கும் நாளையும் என்னை விட்டிடேன் ரெண்டு நாள் கழித்து போகலாம்.
அது என்ன, இன்னைக்கும், நாளைக்கும் ஏற்கனவே ஓரு நாள் லேட் இப்போ மூனு நாள் கணக்கு ஆகிடும் என பேசிக்கொண்டிருந்தவன் சற்றென அவளின் முகத்தை பார்த்து நிறுத்த தயக்கத்துடன் தலை குனிந்தாள்.
பெண்களின் அந்தரங்க விஷயம் அவள் வெளிப்படையாக கூற தயங்க..இவன் சட்டென்று புரிந்து கொண்டான்.. ஏற்கனவே வலியுடன் வாழ்பவள் இப்போது இந்த வலி வேறு எப்படி தாங்குவாள் உடனே அவளின் மீது கருணை பிறக்க.
ஏதாவது வேணுமா இல்ல வெளில மாதிரி கூட்டிட்டு போகட்டுமா.ரிலாக்ஸா இருக்கும்.
எப்படி உன்னால இவ்வளவு ஈஸியா புரிஞ்சிக்க முடிஞ்சுது.
ஏன்னா என் அம்மாவை பல வருஷமா நான் தான் பராமரிச்சிட்டு இருந்தேன் அவங்களும் உன்னை மாதிரி தான் சக்கர நாற்காலியில் வாழறவங்க சில சமயம் அவங்களோட கேர் டேக்கர் வரலன்னா எல்லா பணிவிடைகளையும் நான் தான் செய்வேன் எனக்கு அவங்க குழந்தை மாதிரி.. அப்படித்தான் உன்னையும் நான் பாக்குறேன் எதுவா இருந்தாலும் தயங்காம வெளிப்படையா என்கிட்ட சொல்லு உனக்கு ஒரு அம்மா இருந்தா அப்படித்தானே சொல்லுவ என்று சொல்லவும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாள்.
அதன் பிறகு அவர்களின் நட்பு இன்னும் வலு பெற்றதே தவிர குறையவே இல்லை குழந்தையை கவனிப்பதாகட்டும் அவளை கவனிப்பதாகட்டும் சிறு அளவில் கூட குற்றம் காணமுடியாது .
இருவருமே அவனுக்கு சம அளவிலான குழந்தைகள் தான் .
ரவி அவ்வப்போது கௌசல்யாவை பற்றிய தவக்கவல்களை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பான் அப்படித்தான் கடைசி தடவை அனுப்பிய புகைப்படத்தில் கௌசல்யாவின் மேடிட்ட வயற்றை கண்டதும் விக்கியின் வாழ்வு நிறைவு பெற்று விட்டதாக தோன்றியது.
தாயாரும் அடிக்கடி திருமணம் செய்து கொள் என்று கூற இப்பொழுது மனைவி என்னும் ஸ்தானத்தில் ரெஜினாவை பார்க்க ஆரம்பித்தான்.
ரெஜினாவிடம் கூறுவதற்கு முன்பு அவனுடைய தந்தையிடம் தான் பேசினான் அவருக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால் ரெஜினாவை திருமணம் செய்வதற்கு சில கண்டிஷன்களை விக்கி போட்டான்.
ரெஜி தற்சமயம் வரை அவளது முன்னாள் கணவனின் மனைவியாகத்தான் இருக்கிறாள் அதனால் இப்போதைய வருமானத்தில் அவள் வாழலாம் தனக்கு மனைவியான பிறகு இந்த சொத்தில் அவளுக்கும் உரிமை கிடையாது.
உண்மையான வாரிசு நேஹா மட்டுமே திருமணம் முடிந்த கையோடு அவளை எனது வீட்டிற்கு அழைத்து சென்று விடுவேன்.
தந்தை முதலில் மிகவும் வேதனைப்பட்டார்..பிறகு மகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும் என உணர்ந்தவர்.
உங்கள் விருப்பம் போல் செய்யங்கள் குழந்தை மேஜர் ஆகும் வரை அவளுடைய சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது என்னுடைய கடமை என்றார் .
அதன் பிறகே ரெஜியின் அனுமதி வேண்டி அவள் முன் நின்றது.
முதலில் கத்தி தீர்த்தார் நீ என் மேல வச்சிருந்தது அக்கறை கிடையாது..வேற ஏதோ ஒன்று..
அவன் அசரவில்லை..
ஏற்கனவே என் கணவர் வீட்டு ஆளுக எல்லாம் உனக்கும் எனக்கும் ஏதோ தவறான உறவு இருக்கிறதாகவும் அதற்காக தான் திட்டம் போட்டு என் கணவரை ஆக்சிடென்ட் பண்ணி அவரை கொலை செஞ்சிட்டதா பேசிக்கிறாங்க இப்போ நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா அது உண்மைனு ஆகிடும்
அது அவங்களோட அதீத கற்பனை அதுக்கு நாம பொறுப்பாக முடியாது..ஆமாம்னு சொல்லிட்டு கடந்து வா என்றான்.
இங்கிருந்து போ என கதறி அழுதாள்.
பாவம் பார்க்க வில்லை..அங்கேயே நின்றான்
ஒரு கட்டத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் அவன் மீது எறிந்தால் பொறுமையாக வாங்கிக் கொண்டான்.
ஏன் விக்கி.. உனக்கு என்ன குறை எதற்காக என்னை போல ஒரு பெண்ணை நீ திருமணம் செஞ்சுக்கணும் என்னால உனக்கு எந்தவித உபயோகமும் இருக்காது உபத்திரம் மட்டும் தான் ஒரு மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமையை கூட என்னால செய்ய முடியாது என் வாழ்க்கையில் இனி நான் நடப்பேனா என்பதே தெரியாது அப்படி இருக்கும் பட்சத்தில் என்னை ஏன் தூக்கி சுமக்கனும்னு நினைக்கிற.
ஏன்னா நான் உன் உண்மையா காதலிக்கிறேன் நீ எனக்காக பிறந்தவள்னு நம்பறேன் அதனாலதான் காலம் மறுபடியும் உன்னை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்திருக்கு.
நான் நம்புற விஷயத்தை நீயும் நம்பு நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும் யாரோ உனக்கு பணிவிடை செய்றாங்க.. அப்போலாம் நம்மாள இவளுக்கு எதுவுமே செய்ய முடியலையேன்னு வருந்திருக்கேன்..கணவன் என்கிற உரிமையை குடு..மத்தவங்க கடமையா செய்யறதை நான் சந்தோஷமா செய்யறேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என கெஞ்சி கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்தான்.
அதன் பிறகு தாயாரிடம் சொன்னான்.
ரெஜியின் நிலையைச் சொன்னால் தாயார் சம்மதிக்க மாட்டார் என்பது அவனுக்குத் தெரியும் அதனால் திருமணத்தைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தான் ரவி அவ்வப்போது பேசுவதால் அவனுக்கு விஷயம் தெரியும் அவன் மிகவும் சந்தோஷம் கொண்டான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என சத்தியமும் செய்தான்.
என் அம்மா ஹரி அண்ணாவை பார்த்தாங்க அண்ணா புத்திசாலிங்கிறதால யாரோ ஒருத்தர் உதவி செய்றாங்கன்னு ஈஸியா கண்டு புடிச்சிட்டாரு..
ஒன்னு புடிச்சவங்களா இருக்கணும் இல்லன்னா பிடிக்காதவங்களா இருக்கணும்னு புது கோணத்துல ஆராய்ச்சி பண்ணி ஈஸியா கெட்ச் போட்டு ரவியை தூக்கிட்டாரு.
அவனும் அட கௌசல்யாவோட கணவர்பா அவரே நேர்ல வந்து நம்மகிட்ட உதவி கேட்கும்போது சொல்லாம எப்படின்னு அவனோட சத்தியத்தை மீறிட்டான்.அதனால இப்போ நீ என் பக்கத்துல உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருக்க.
கிரேட் விக்கி உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஆனாலும் உண்மையை சொல்லு ஏற்கனவே ரெஜி ஒரு வருஷமா நடக்க முடியாம இருக்கறா இனிமேலும் நடக்க முடியும்ன்னு நம்பிக்கை இருக்கா.
ஏன் இல்லாம கண்டிப்பா இன்னும் ஆறே மாதத்தில் நடப்பா .
அதுக்கப்புறம் எங்களுக்கான வாழ்க்கை ரொம்ப அழகானதாக இருக்கும் நேகா நான் ரெஜி கேட்கவே நல்லாயிருக்குல்ல என்றவன் ஒருவேளை அவளால் நடக்க முடியாமலே போனாலும் கூட கடைசிவரைக்கும் அவளோட நான் இருப்பேன் எனக்காக அவ இருப்பா..எங்களுக்காக நேகா இருப்பா.
இது பேச நல்லாயிருக்கும் நாளைக்கே இது என்னடா வாழ்க்கைனு சலிப்பு தட்டும்..விக்கி கடைசி வரைக்கும் உனக்குன்னு ஓரு குழந்தை இல்லாம,கணவன் மனைவியோட தேடல் இல்லாம என மேற்கொண்டு பேச முடியாமல் நிலம் பார்க்க.
கௌசி நீ என்ன கேட்க வர்றன்னு புரியுது.. கணவன் மனைவிக்குள்ள தாம்பத்தியம் இல்லாம எப்படி சந்தோஷமான வாழ்க்கைன்னு கேட்கற இல்லையா..தாம்பத்தியம் மட்டும் வாழ்க்கை கிடையாது அது ஒரு பார்ட் ஆப் தி லைஃப் அவ்வளவு தான்.ஓருவேளை எனக்குன்னு ஓரு பெண் தேடல் இருந்தா அது ரெஜியா மட்டும் தான் இருப்பா..நீ என்னை முழுமையா நம்பலாம்.. எப்போவும் எல்லாத்தையும் பாஸிட்டிவ்-ஆ பார்க்கும் நீயே இப்படி நெகட்டிவா யோசிச்சா என்ன செய்யறது.
எழுந்திரு ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கோம் காலைல கல்யாணம் அப்புறம் ஊருக்கு கிளம்புனும் என்றபடி மற்றவர்களின் அருகில் விக்கி செல்ல கண்களில் கண்ணீரோடு அவனை மனதார வாழ்த்தினாள்.
மறுநாள் காலையில் மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.ரவி குடும்பமாக வந்திருந்தான்.விடுதியில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் சேர்ந்து விடுப்பு அளிக்கப்பட்டது அவர்களும் சந்தோஷமாக குடும்பத்துடன் இவர்களின் திருமணத்தை காண வந்திருந்தனர்.
ரெஜியின் கழுத்தில் முதல் முடிச்சை போட இரண்டாம் முடிச்சை கௌசி போட்டுவிட்டாள்.
கண்களில் ஆனந்த கண்ணீருடன் விக்கியின் பெற்றோர் பார்ந்துக்கொண்டிருக்க..ஹரிக்கு மனதிற்குள் சொல்லமுடியாத ஒரு வலி.
அவர்களின் உறவை பொது சபையினில் காட்டிவிட்டனர் இந்த புனித உறவையா கொச்சைப்படுத்தினோம்,நான்கு ஆண்டுகள் அவளையும் கஷ்டப்படுத்தி தானும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை தொலைத்தோம் என மனதிற்குள் மறுகினான்.
அதன் பிறகு குடும்பம் சகிதமாக அனைவரும் மணமக்களுடன் போட்டோ
எடுத்துக் கொண்டிருக்க கௌசி கண்களில் நீருடன் விழி தட்டாமல் நண்பனையும் அவனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

Last edited: