கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகம் 30

Akila vaikundam

Moderator
Staff member
30.

அண்ணா என்றபடி ஜானு வரவும் லேப்டாப்பில் ஸ்டாக் செக் செய்து கொண்டிருந்தவன் வேகமாக எழுந்தான்.

என்ன ஜானு நீயேன் படி ஏறி வர்ற..கூப்பிட்டா நான் வரமாட்டேனா என கடிந்து கொண்டான்.

எதுவும் பேசாமல் அவனெதிரில் அமர்ந்தவள் ‌நீ ஏன்னா நான் பிறந்த வயிற்றில் பிறக்கல..இல்ல நான் ஏன் நீ பிறந்த வயிற்றில் பிறக்கல என குரல் கமற கேட்டாள்.


ஏ லூசு என்ன பேச்சு இது யார் வயிற்றில் பிறந்தா என்ன ஒரே வீட்டில் தான இருக்கோம் என்று அவளை சமாதானப்படுத்தும் விதத்தில் கூறினான்.

ம்ப்ச் இல்லண்ணா வித்தியாசம் இருக்கு ஒரே வீட்ல இருக்கறதுக்கும் ஒரே வயிற்றில் பிறக்கிறதுக்கும்.. என்ன இருந்தாலும் நான் உன் சித்தப்பா பொண்ணு தானே.


என்ன ஆச்சுடா.


உண்மையிலேயே நீ என்னை தங்கச்சியா நினைச்சிருந்தா உன் மனசில இருக்கறதை என்னிடம் சொல்லி இருப்பல்ல இவ்வளவு நாள் மூடிவச்சிருக்க மாட்டல்ல.


என் மனசுல என்ன இருக்கு.. ஒன்னுமில்லை உனக்கு இன்னைக்கு என்னவோ ஆயிடுச்சு நீ போய் ரெஸ்ட் எடு எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.


அன்னைக்கு உன் மொபைல்ல கௌசி போட்டோ பார்த்தேன் இன்னைக்கு பெரியம்மா உனக்கு எந்த பொண்ணை பாத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி ரிஜெக்ட் பண்ணறதா சொன்னாங்க ஒன்னும் ஒன்னும் ரெண்டு இந்த கணக்கு கூடவா எனக்கு தெரியாது.

ஓஹோ கல்யாணமாகி புகுந்து வீட்டுக்கு போயிட்டதால என் தங்கச்சி பெரிய கணித மேதை ஆயிடுவாளா.
உன் கணக்கு ரொம்ப கேவலமா இருக்கு கல்யாண மண்டபத்துல அந்த பொண்ணு துருதுருன்னு அழகா இருந்தா.


அதும் இல்லாம ட்ரடிஷனல் டிரஸ்ல இருந்தா இப்போலாம் அந்த மாதிரி டிரஸ் போட்டு யாரையும் பார்க்க முடியல அதனால போட்டோ எடுத்து வச்சேன் அவ்வளவுதான் வேற எந்த கணக்கும் இல்ல.


அப்புறம் இன்னும் என் மனசுக்கு புடிச்ச பொண்ணை நான் பாக்கல அப்படி பாத்துட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே டும் டும் தான்.


ஜனாவுக்கும் பொண்ணு பாத்துட்டு இருக்காங்க நீ வேற இப்படி இருக்க இதுல என் கல்யாணமும் சேர்ந்து வந்துட்டா ஒரே சமயத்துல எல்லாம் பாக்கறது கஷ்டம் இல்லையா அதனால முதல்ல ஜனா கல்யாணம் முடிக்கட்டும் அதுக்கப்புறம் நான் பண்ணிக்கலாம்னு இருக்கேன் வேற எந்த கற்பனையும் பண்ணிக்காத.

நம்பிட்டேன்..

நம்பும்மா அதான் உண்மையும் கூட.

அப்புறம் எதுக்காக சார் மண்டபத்துல வாய்க்குள்ள ஈ போய்ட்டு வர்றது கூட தெரியாத அளவுக்கு வாயை திறந்து வைச்சி பாத்துட்டு இருந்தீங்களாம்.

அதான் சொன்னேனே க்யூட்டாக பப்ளியா சார்மிங்கா துருதுருன்னு ட்ரெடிஷனல் டிரஸ் ப்ளா..ப்ளா..ப்ளா

ம்ம்…உனக்கு பொய் பேசவும் வரல உளறவும் வரல எதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்க.

ம்ப்ச் சின்ன பொண்ணு ஜானு.. அதும் உன்னை விட எப்படி முடியும் சொல்லு.


ஓஹோ அப்போ வயசு தான் உன்னை தடை போட்டு வச்சிருக்கு அப்படித்தானே.


அதுவும் ஒரு காரணம் அப்புறம் ரொம்ப திமிர் புடிச்சவளா இருக்கா நமக்கு செட்டாகாது ஆளை விடு.


எதை வச்சு அப்படி சொல்ற.


அதான் மண்டபத்துல பார்த்தேனே அவங்க அம்மா உன் பக்கத்துல வந்து நிக்க சொன்னப்போ கூட வரலை..அன்னைக்கு முழுக்கவே நம்ம கண்ணுல அவ மாட்டலையே ..இப்போ கூட பாரு நாங்க அங்க வந்தா மரியாதையா நின்னு கூட பேசறது இல்லையே..இது திமிர் இல்லையா.


ஐயோ அண்ணா அது அத்தையோட வேலை அவ கொஞ்சம் வாய் துடுக்கா பேசுவா அதனால அத்தை நம்ம கிட்ட எல்லாம் வாயை அடக்கி பேச சொல்லி கண்டிச்சி வச்சிருக்காங்க.

அன்னைக்கு மண்டபத்தில் நடந்ததுக்கு நைட்டே வந்து சாரி கேட்டுட்டா.
பேசி பழக ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா உனக்கு கரெக்டா மேட்ச் ஆவா இரண்டாவது உனக்கு பிடிக்கலைன்னா கூட பரவால்ல உனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு அப்படி இருக்கும்போது எதுக்காக சப்ப காரணத்தை சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கற ஒரு வேலை உன் வசதிக்கேத்த மாதிரி அவ வீட்ல வசதி இல்லனு யோசிக்கிறியா அண்ணா.


ஜானு நான் அப்படி யோசிச்சிருந்தா உன்னை அந்த வீட்டுக்கு கல்யாணமே பண்ணி கொடுத்திருக்க மாட்டோம். அப்படியே நீ ஆசைப்பட்டேன்றதுக்காக கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தா கூட உன்னை பார்க்க அந்த வீட்டுக்கு நாங்க வந்திருக்க மாட்டோம்.


நீ அந்த வீட்ல வாழும் போது எப்படி நான் அவங்களை எல்லாம் கீழ வச்சி பார்ப்பேன் சொல்லு..

ஒரு உண்மையை சொல்லட்டுமா ஜானு எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு அவளை மட்டும் தான் பிடிச்சிருக்கு.. அவை இடத்தில இன்னொரு பொண்ணை வச்சு பார்க்க கூட மனசு ஒத்துக்கல, ஆனா எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வயசு ஒரு பெரிய தடையா இருக்கு.


படிச்சிட்டு இருக்கா அவகிட்ட போய் கல்யாணம் பத்தி பேசறது அதைவிட தப்பு. ஏற்கனவே என்னை ரொம்ப கீழ இறக்கி வச்சு பாத்துட்டு இருக்கா இந்த லட்சணத்துல நான் போய் அவ கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினா என்னை ரொம்ப அசிங்கமா பாக்க ஆரம்பிச்சிடுவா.


இதுதான் உன் பிரச்சினையா வயசு அது வெறும் நம்பர் தான் என் மாமியார் கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசி உனக்கும் அவளுக்கும் நடுவில இருக்கிற வயசை நான் ஒடச்சு காமிக்கிறேன்.


அப்புறம் அவ ரொம்ப கீழ இறக்கி வைத்து பார்க்கறான்னு பீல் பண்றல்ல நீ போய் அவகிட்ட கல்யாணம் பண்ண கேட்டா தானே இந்த பிரச்சனை அவங்களா வந்து என் பொண்ணுக்கு உன் அண்ணனை பாக்கலாமான்னு கேட்க வச்சிட்டா கணக்கு சரியாயிடும்மில்ல.


எப்படி..? எப்படி ..?இது சாத்தியமாகும் என்று ஆச்சரியமாக கேட்டவனிடம்.


அண்ணா என் மாமியாருக்கு கொஞ்சம் வசதியான ஆளுங்களோட பழகுறது பேசுறதெல்லாம் ரொம்ப பிடிக்கும் அதுவும் கௌசியை ரொம்ப பெரிய இடத்துக்கு கட்டிக் கொடுக்கணும்னு ஒரு ஆசை.


என் மாமியாரை வழிக்கு கொண்டு வர்றது ரொம்ப சுலபம்.


கௌசி அவ அண்ணனும்,அம்மாவும் என்ன சொல்றாங்களோ அதைத்தான் கேட்பா.


அவ கேட்கிறதுக்கு என்ன பண்ணனுமோ அதை நான் பார்க்கறேன் என் அண்ணன் ஆசைப்பட்ட ஒரு விஷயம் அவனுக்கு கிடைச்சே ஆகணும் அதுதான் இந்த தங்கச்சியோட ஆசை.

நடக்குமா..


கண்டிப்பா நடக்கும் நான் நடத்திக் காட்டறேன்.


ஜானு..


சொல்லுங்க அண்ணா .


இல்ல உன் குடும்பம் இவ்வளவு நாள் என்னை ரொம்ப உயர்வா பார்க்குது எப்போனாலும் உன் வீட்டுக்கு வந்துட்டு போறேன் அதே மாதிரி மாப்பிள்ளையும் சரி அத்தை மாமாவும் சரி என்கிட்ட ரொம்ப மரியாதையாகவும் பாசமாகவும் பேசுறாங்க இப்போ நான் அந்த வீட்டு பொண்ணை பாத்ததுமே ஆசைப்பட்டது தெரிஞ்சாலோ இல்ல உன் வீட்டுக்கு வந்ததே அவளை பார்ப்பதற்கு தான் என்கிற விஷயம் தெரிஞ்சாலோ நாளைக்கு இதே மரியாதை பாசம் எனக்கு கிடைக்குமா என்று சற்று ஆதங்கமாக கேட்டான்.


ம்ம்…இப்போ வழிக்கு வந்தியா உன் வாயிலிருந்து உண்மை வந்துருச்சு பாத்தியா.


கல்யாண மண்டபத்தில் இருந்தே நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன் பாசமா தங்கச்சியை பார்க்க வர்ற மூஞ்சிக்கும் சைட்டை பாக்க வர்ற மூஞ்சிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன என்று சிரித்தவள்.


நீ பயப்படாத அண்ணா என்னைக்கும் என் மூலமா இந்த விஷயம் வெளிய வராது நீ அவளை லவ் பண்ணிக்கிட்டே இரு அவ படிப்பு முடிஞ்ச பிறகு உன் லவ்வரை விட்டே அரேஞ்ச்டு மேரேஜா மாத்திக்காட்டறேன்

சரி இப்போ நீ போய் தூங்கு ஆமா கேக்க மறந்துட்டேன் எத்தனையாவது மாசம் இது..வயிறே தெரியலை.

அண்ணா மாசம் எல்லாம் இல்ல இப்போ தான் கொஞ்ச நாள் தள்ளி போயிருக்கு அதுக்குள்ளேயே என்னை இந்த பாடு படுத்துது அதான் இங்க வந்துட்டேன்.


ம்ம் கவனமா இரு.. இனி நீ படி ஏறி மேல வராத ஏதா இருந்தாலும் ஃகால் பண்ணு நானே வந்து பார்க்கிறேன்.


அதன் பிறகு தனது உடல் நிலையைக் கூட கண்டுகொள்ளாமல் உடனடியாக ஜானு அவளின் புகுந்த வீட்டிற்கு சென்றாள்.


மெதுவாக கௌசியிடம் பேச்சு கொடுத்து பார்த்தாள்.அவளின் மனநிலை எப்படி என்று.


கௌசிக்கு மிகப்பெரிய கனவு இருந்தது படிப்பை முடித்த பிறகு ஒரு நல்ல வேலை அதன் பிறகு சொந்தமாக வீடு கார் என்று செட்டில் ஆன பிறகு தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தாள்.


மாமியாரின் மனநிலை வேறாக இருந்தது கௌசியின் படிப்பு முடித்தவுடன் வசதியான மாப்பிள்ளை வந்தால் திருமணம் செய்து கொடுத்த விட வேண்டும் என்பது .


கேசவனுக்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை இப்பொழுது மனைவிக்கு நல்லபடியாக சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் அந்த ஒரு எண்ணம் மட்டுமே மற்றபடி அவனிடத்தில் பெரிதாக எந்த ஒரு கனவும் கற்பனையும் இல்லை.


ஜானுவிற்கு இப்பொழுது மாமியாரும் கணவரும் தொல்லையாக இல்லை கௌசியும் அவரது கனவுகளும் தான் தடையாக இருந்தது.


எப்படி அவளது கனவுகளை உடைப்பது.
எப்படி அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்று யோசிக்க தொடங்கியிருந்தாள்.


இது எதுவுமே தெரியாத கௌசல்யாவோ அவளது நண்பர்களுடன் ஜாலியாக கல்லூரிக்கு சென்று வருவதும் அங்கே இங்கே என சுற்றுவதுமாக பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள்.


அவளுக்கு இன்னும் ஆறு மாதம் மட்டுமே கல்லூரியின் மீதி படிப்பு.. அதற்கு முன்னதாக ஏதாவது ஒரு கம்பெனியில் பயிற்சி எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவளின் கல்லூரி படிப்பு பூர்த்தியாகும்.


அதற்காக கல்லூரி நிர்வாகமும் பல நிறுவனங்களை கல்லூரிக்கு வரவழைத்திருந்தது . பயிற்சி காலம் முடிந்த பிறகு அந்த நிறுவனத்திலேயே வேலையும் கொடுப்பதற்காக கேம்பஸ் இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது


அவளுடன் படித்த பாதியேருக்கு மேல் நல்ல வேளையில் சேர்ந்திருக்க கௌசி மட்டும் எல்லா வளாக நேர்முகத் தேர்வுகளிலும் தோல்வியை மட்டுமே தழுவிக் கொண்டிருந்தாள்.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் குறைந்தது நான்கு மாதங்களாவது பயிற்சி பெற்றால் மட்டுமே அவளுடைய படிப்பு முழுமை அடையும் சான்றிதழ்களையும் பெற முடியும் அப்படி இருக்கும் பட்சத்தில் சொல்லி வைத்தது போல எல்லா இடத்திலும் வேண்டாம் என்று ஒதுக்கும் பொழுது அவள் மீது இருந்த நம்பிக்கை அவளுக்கே கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியிருந்தது


அவளது உயிர் நண்பனான விக்கி கூட என்னோட அப்பா ஆபீஸ்க்கு வந்திடு கௌசி கோர்ஸ் கம்ப்ளீட் ஆனபிறகு வேலை தேடிக்கலாம் என்று ஆறுதல் கூறிப் பார்த்தான் .


அவளால் எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


நன்கு படிக்கும் பெண் புத்திசாலியும் கூட அப்படி இருந்தும் சொல்லி வைத்தது போல எந்த கம்பெனிகளுமே அவளை தேர்வு செய்யவில்லை ஏன்..எதற்காக என்ற கேள்வி அவளது மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.

கடும்

மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு கல்லூரிக்கு செல்லாமல் பத்து நாட்களாக வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாள்.
 
Last edited:
Top