கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -10

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-10

நான்கு நாட்கள் ஆனது.

அஸ்வின் ராமிற்கு வட்ஸப்பில் வாய்ஸ் கால் செய்தான்.

''சொல்லு டா. பவித்ரா எப்படி இருக்கா? வருண் அப்பா அம்மா...'' என்று ஆரம்பிக்க அஸ்வின் இடைவெட்டி பேசினான்.

''ராம் எனக்கு ஒரு வீடு வேண்டும் டா. நம்ம ஏரியாவில் தனி வீடு, 2bhk டைப்'' என அஸ்வின் ராம் நலத்தை விசரிப்பதை பதில் உரைக்காமல் வேறு பேசினான்.

''என்னடா தனி குடுத்தனமா? பவித்ரா அப்படி எல்லாம் தனி குடுத்தனம் விரும்ப மாட்டாளே?'' எண்டு விளையாடினான்.

''டேய் விளையாடம சொன்னதை செய்'' என்று கட்டளை பேச்சை முடித்தான்.

''எப்ப பாரு சொன்னதை செய் என்று ஆர்டர் போடுற... கேள்வி கேட்க கூடாதா?'' என்றான்.

''நான் வந்த பிறகு தனியா கேள்வியா கேளு பதில் சொல்றேன். இப்போ நாளைக்கே குடியேறுகின்ற மாதிரி ஒரு வீட்டை பாரு. மார்னிங் பால் காய்ச்ச'' என்று முடித்தான்.

''டேய் டேய் என்ன ஸ்பீடா ஈஸியா சொல்லிட்ட வீடு கிடைக்கணும் டா? சரி யாருக்கு வீடு?''

''ஹவுசிங் டாட் காம் போ. நேர்ல பாரு பணம் கொடுத்து கீயை வாங்கு'' என்று ராம் கேட்டதற்கு எதற்கும் பதில் அளிக்காமல் பேசினான்.

''டேய் நான்.... '' என்று தயங்கினான்.

''அதெல்லாம் கிடைக்கும் பாரு'' என துண்டிக்க செய்தான்.

என்ன ஆச்சு யாருக்கு வீடு பார்க்கிறான்? என உடனடியாக மற்ற வேலைகளை தவிர்த்து நெட்டில் வீட்டினை ஆராய்ந்தான். இரண்டு மணி அளவில் தேடுதலில் அதே ஏரியாவில் சில வீடுகள் இருந்தன. அலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு நெரில காண புறப்பட்டான்.

மனதிற்கு நிறைவாக மூன்று வீட்டில் நேரில் போய் பார்த்தான். அதில் இரண்டு வீடு நாளைக்கே என்றதும் அரை மனதாய் ஓகே என சொன்னார்கள். அதில் அஸ்வின் வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒன்றரை தேர்ந்தெடுத்தான். போட்டோவை அஸ்வினுக்கு அனுப்பினான்.

இரவில் வந்து மெத்தையில் படுத்தவன் எதுக்கு இந்த அஸ்வின் வீடு பார்க்க சொன்னான் யாருக்காக இருக்கும்? ஒரு வேலை பவித்ராவை விட்டு பிரிய மனமின்றி பவித்ரா குடும்பத்தை இங்கயே தங்க ஏற்பாடு நடத்துறானா? செய்தலும் செய்வான் பவித்ரா மேல அவ்ளோ லவ் அவனை அப்படி மாத்தினாலும் ஆச்சரியம் இல்லைஎன முடிவு கட்டினான்.

அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்தான் ஸ்ரீராம். மணி எட்டாக அஸ்வினிடமிருந்து கால் வந்தது.

''சொல்லு டா அஸ்வின்''

''வீடு சென்ட் பண்ணினியே அது குடிபோக ரெடியா? என்றான்.

''நீ சொல்லி அந்த வேலைய பார்க்காம இருப்பேனா? கீ என்கிட்ட தான் இருக்கு பால் காய்ச்சி போக வேண்டியது தான். ஆமா யாருக்கு டா வீடு?'' என்றான்.

''நீ என்ன பண்ற உங்க வீட்ல ஒர்க் பண்ணுற ஆன்ட்டிகிட்ட பால் காய்ச்ச புதுசா குடிப்போக என்ன என்ன திங்க்ஸ் வேண்டும் என்று லிஸ்ட் வாங்கி அதை எல்லாம் வாங்கிக்கோ. அப்பறம் அந்த அட்ரஸ் எனக்கு சென்ட் பண்ணு'' என்று கட்டளை பிறப்பித்தான்.

''ஹ்ம் ஓகே நீ எங்கயிருக்க?''

''ஒன் அண்ட் ஹாப் ஹவர்ல நேர்ல பேசலாம்'' என்றுரைத்தான்

''டேய் சென்னைல இருக்கியா? யாருக்கு டா வீடு? யாரு தான் பால் காய்ச்சி குடிப்போக போறாங்க?'' என்றதும் அஸ்வினுக்கு நிஷா இருக்கும் நிலையில் அவள் பால் காய்ச்சுவது சந்தேகம் என தோன்ற, வினாடியில் யோசித்தவன்

''ராம்... நீ பவித்ராவை...'' என்றதும் பவித்ரா ஊரில் இல்லை என்ற நினைவு வந்த பிறகே அம்மாவையும் அழைக்க மனமின்றி, கைகளில் வாட்சை பார்த்தான்.

''ராம் நீ என்ன பண்ற தனு காலேஜ் போயிட்டு அவளை நான் சொன்னதா சொல்லி கூப்பிட்டுக்கிட்டு வா'' என்றான்.

''டேய் அவ இன்னும் காலேஜ் போயிருக்க மாட்டா. அவ இப்பதான் வீட்ல இருந்து கிளம்பி நடந்து வந்துகிட்டு இருப்பா'' என்றான் ராம் அவனையும் அறியாமல்...

அஸ்வின் தற்பொழுது எதையும் யோசிக்கும் நிலையில் இல்லாமல் ''சரி அவளை எப்படியாவது கூப்பிட்டுகிட்டு வா'' என்றான்.

''அவ எதுக்கு டா?'' என்று புரியாமல் கேட்டான்.

''நேர்ல சொல்றேன்டா போனை வை எனக்கு பேச நேரமில்லை. சீக்கிரம் சொன்னதை செய்'' என போனை வைத்துவிட்டான்.

போனில் வீட்டு வேலை செய்யும் அந்த பெண்மணியிடம் கேட்டு எல்லாம் எழுதி கொண்டே கார் சாவி எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
முதலில் தன்யா காலேஜ் செல்லும் வழியில் அவளுக்கு முன் நின்றான். தனு மெல்ல நடந்து வருவதை கண்டு அவள் கார் அருகே நெருங்கும் சமயம் கதவை திறந்து, ''ஏறு'' என்றான்.

ராம் காரில் ஏற சொன்னதும் முதலில் குழம்பியவள் பின்னர் தனது காதல் சொல்லும் நோக்கமாக கூட இருக்கலாம் என ஏறியமர்ந்தாள். அவள் ராம் என்ன சொன்னாலும் கேட்கும் ரகம்.

ராம் எதையும் பேசாமல் அமைதியாக சூப்பர் மார்க்கெட் சென்றான். அங்கே எல்லா பொருட்களையும் லிஸ்ட் படி வாங்கினான். தனுவிற்கு செம கடுப்பு. என்ன இவன் தன்னிடம் தனியாக காதலை சொல்லுவான் என்றிருக்க சூப்பர் மார்க்கெட் வந்துள்ளான்.

சரி எதையாவது பரிசு கொடுத்து காதலை சொல்ல போகின்றான் என்று நினைக்க ராமோ இன்டெக்ஸ் ஸ்டவ், பால் குக்கர் என வாங்கி கொண்டிருக்க கடுப்பாகி போனவள் அவனிடம் வந்து,

''எனக்கு காலேஜ் இருக்கு எதுக்கு இங்க கூப்பிட்டுக்கிட்டு வந்திங்க?'' என்று வாய் திறந்து கேட்டாள்.

அவளை முறைத்தவன் அப்படியே நகர்ந்து லிஸ்டில் இருக்கும் மற்றவைகளை வாங்கினான்.

மனதினுள் 'என்கூட இருக்க இவளுக்கு என்ன? நானே கூப்பிட்டு வந்திருக்கேன் அமைதியா இருக்க என்னவாம்.

என்னை விரும்பறவ என்கூட இருப்பதை அல்லவா விரும்பணும் ' என முறைத்தான்.

அவனுக்கு தோன்றவில்லை அவளுக்கு தன் மீது கோவம் இருக்கும் அதுவும் தன்னால் என்று உணரவில்லை.

எல்லாம் வாங்கி டிக் செய்து திருப்தி ஆனவன் மீண்டும் கார் கதவை திறந்து அவளை உட்கார சொல்ல... அவளும் அவனுக்கு இணையாக முறைத்தபடி உட்கார்ந்தாள்.

நேராக ஒரு வீட்டின் முன் நின்றான். தனு குழப்பமாக அவனை பார்த்து,

''எதுக்கு என்னை இங்க கூப்பிட்டு வந்து இருக்கீங்க?''

''கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?'' என்றான் ராம்.

''ஹலோ எனக்கு கிளாஸ் இருக்கு, காலேஜ் போகணும். ஏன் எதுக்கு என்று சொல்லாமல் நீங்க பாட்டு என்னை கூப்பிட்டுக்கிட்டு கடைக்கும் இங்கயும் கூட்டிட்டு வந்து இருக்கிங்க?'' என்றாள்.

''ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட... காரில் ஏறும் பொழுதே கேட்கணும்'' என திரும்பி கொண்டான்.

''ஹலோ அதான் இப்போ கேட்கறேன் சொல்லுங்க'' என்று சண்டைக்கு குதித்தாள்.

''கொஞ்ச நேரத்தில தெரியும்'' என போனில் அஸ்வின் கால் செய்ய அவன் எடுக்கவில்லை. 'இந்த அஸ்வின் எதுக்கு இவளை கூப்பிட்டு வர சொன்னான் காரணமும் தெரியலை. இவளை பக்கத்துல இருந்தும் நிம்மதியா பார்க்க கூட முடியலை எல்லாமே என் விதி' என மனதினுள் பேசியபடி இருந்தான் ராம்.

''இங்க பாருங்க எனக்கு போர்த் பீரியட் பிராக்டிக்கல் இருக்கு. எதுக்கு என்று தெரியாம வந்தது தப்பு தான்'' என்றதற்கு ராமோ மனதினுள் போஸ்ட் மார்ட்டம் பண்ண இருந்த தவளையும் கரப்பான் பூச்சி தப்பிச்சுது' என கவுண்டர் கொடுத்தான்.

''இப்ப நீங்க காரணம் சொல்லலை நான் கிளம்பிடுவேன்'' என்றதும்

''உங்க அண்ணன் அஸ்வின் தான் உன்னை கூப்பிட்டு வர சொன்னான் காரணம் எல்லாம் தெரியாது. அவன் சொன்னான் தட்ஸ் இட்'' என போனில் கடுப்புடன் மீண்டும் அஸ்வினுக்கு அழைத்தான். இம்முறை எடுத்து பேசினான்.

''வந்துட்டேன்டா பத்து நிமிஷம் பொறு'' என அணைத்தான்.

''இன்னும் டென் மினிட்ஸ் உங்க அண்ணன் வந்துடுவான் கேட்டுக்கோ'' என திரும்பி கேட்டை பார்த்தான்.

தனுவிடம் பேசும் பொழுது தன் நண்பன் அஸ்வின் என அவன் விளிப்பது இல்லை. மாறாக தனுவின் அண்ணன் என நினைத்து பேசினான் அது அவனுக்கே புரிந்தபொழுது 'சே இவளால என் பிரென்ட் அஸ்வின் என்ற நிலை மாறி, இவன் அண்ணன் என்று நினைக்கறேன்' என அவனே வருந்தினான்.

எல்லாம் இவளாலே என்றே கடுப்புடன் தனுவை பார்க்க, அவளோ ''கார் ஏதோ வருது'' என்று சொன்னாள்.

ராம் பார்க்க அஸ்வின் காரிலிருந்து இறங்கினான்.

''யாருடா... கூப்பிட்..'' என்றதும் நிஷா இறங்க ''நி.. நிஷா.. '' என ஓடி வந்து அவளை பார்த்து அஸ்வினை பார்க்க, அவனோ மென்மையாய் சிரித்தபடி பார்த்தான்.

ராமிற்கு திகிலுடன் நிஷாவை பார்க்க அவளோ அழுது களைத்து ஓய்ந்து வந்தது போல தெரிய குழப்பத்துடன் ''சி..'' என்றதும் சித்திக் இறங்கினான்.

சற்றே அவனும் வாடி வதங்கி இருப்பதாய் தோன்ற, ''அஸ்வின் எப்படி டா?'' என்றதும் பேச்சே எழவில்லை.

''எல்லாம் அப்பறம் பேசலாம். முதலில் பாலை காய்ச்சி குடிப்போகலாம்'' என காரிலிருந்து லக்கேஜ் எடுத்து இறக்கினான்.

தனு எதுவும் பேசாமல் நடப்பதை பார்த்தாள். நிஷா சித்திக் வீட்டுக்கு நுழைய, பின்னரே ராம் அஸ்வின் வந்தார்கள். தனு வேறு வழியின்றி அவளும் பின் தொடர்ந்தாள்.

எல்லாம் கொஞ்ச நேரத்தில் இடத்தில் வைத்துவிட்டு தனு பாலை காய்ச்சு என்றதும் முன்னே வந்து மின்சார அடுப்பில் பாலை காய்ச்சினாள். எல்லாவற்றிற்கும் முழு முதல் கடவுள் விநாயகன் முன் பாலை எடுத்து வைத்து வழிபட, அஸ்வின் நினைவு வந்தவனாக ராம் அருகே சென்று அவனின் பர்ஸை எடுத்தான். நொடியில் பதறியவன் அதனை வாங்கி, அல்ல அல்ல பிடுங்கி ''என்னடா'' என்றான் முகத்தில் கலவரத்தோடு.

''அங்கிள் ஆன்ட்டி போட்டோ டா சாமி போட்டோ பக்கத்துல வை'' என்றான். ஒரு கணம் பெருமூச்சு ஒன்றை விடுத்து அதனை எடுத்து வைத்து விட்டு முன் பக்க பேண்டில் வைத்தான்.

அஸ்வின் அந்த நேரம் வேறு எதையும் யோசிக்கவில்லை. ஆனால் ராம் செய்கை வித்தியாசமாக தோன்றியது. ஆனால் அப்பொழுது கவனம் மற்றவையில் இருப்பதால் அதனை விடுத்து,

''தனு பால் எல்லோருக்கும் டம்ளரில் ஊற்றி கொடு'' என்றதும் அப்படியே செய்தாள்.

வேகமாக போனில் ஆர்டர் கொடுத்து உணவை வர வழைத்தவன். தனு இருக்கும் பொழுதே நிஷாவை சாப்பிட சொன்னான். அவள் 'எப்படி டா முடியும்' என்ற பார்வை பார்க்க, அஸ்வின் தான்

''என்ன நிஷா ஊட்டி விடணுமா? இங்க ராமும் இருக்கான். நீ சாப்பிட்டா தான் அவனும் சாப்பிடுவான். நீ சாப்பிடலை என்றால் அவனை ஊட்டி விட சொல்லுவேன்'' என்றதும் நிஷா கண்களில் இருந்து தவறிய கண்ணீர் துளிகள் விழ அதனை கண்டு கொள்ளாமல் ''சாப்பிடு'' என நீட்டினான். சித்திக் அருகே ஒரு பாக்ஸ் நகர்த்தினான்.

ராமிடம் ''ராம் நீயும் சாப்பிடு'' என்றதும்அவனிடம் கொடுத்துவிட்டு அஸ்வின் ஒன்றை எடுத்து உண்டான்.

''தனு நீ சாப்பிட்டியா? என்றான் அஸ்வின்.

''சாப்பிட்டேன் அண்ணா'' என சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள்

''நீ இன்னிக்கு காலேஜ் போக வேண்டாம் கொஞ்ச நேரம் இங்க இரு. அப்பறம் நீயும் நானும் சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்'' என முடித்தான் அஸ்வின்.

'அய் ஜாலி இந்த ராமை கொஞ்ச நேரம் கூட இருந்தே பார்க்கலாம்' என்றது அவளின் காதல் உள்ளம். பின்னரே இவர்கள் யார் ஏன் ஒரு வித அமைதி நிலை என நினைத்தாள்.

ராமோ மெல்ல சாப்பிட்டு கொண்டே நிஷாவையும் சித்திக்கையும் பார்த்தான். அவனின் பார்வையை இருவருமே கவனிக்காமல் உறைந்த நிலையில் ஏதோ பெயருக்கு சாப்பிட்டு முடித்தார்கள்.

அஸ்வின் ராம் இருவருமே கொஞ்ச நேரத்தில் கிளம்ப தயாராகினர்.

''தனு நீ நிஷா கூடவே இரு. நான் ராம் டூ ஹவர்ல வந்திடுவோம் என்று கிளம்பினான். தனு தலையை மட்டும் அசைத்தாள்.

ராமும் செல்லும் நேரம் சாவி எடுப்பதாக வந்து தனுவிடம் ''தன்யா நிஷா கூடவே இரு ப்ளீஸ்'' என தவிப்பாய் சென்றான்.

ராம் அஸ்வின் கிளம்பியதும் சித்திக் நிஷாவிடம் பேச முயல, நிஷாவோ ஒரு அறையில் போய் தஞ்சம் புகுந்தாள். சித்திக் தனு இருப்பதால் மேலும் நிஷாவை போய் பார்த்து பேச முடியாமல் படி ஏறி மாடி சென்றான்.

தனுவிற்கு தான் என்ன செய்வது என புரியாமல் தவித்தாள் நிஷா அறையில் சுருண்டு படுத்து கொண்டு விசும்பி அழுவது உணர்ந்தாள். சித்திக் மாடியில் இருந்தான். ஹாலில் நிஷா அறைக்கு வெளியே அமர்ந்து போனை எடுத்து அதில் நேரத்தை ஓட்டினாள்.

இரண்டு மணிக்கு மேலாக நேரம் போனது. மணி ஒன்றை தொட ஒரு மினி டெம்போவில் சில வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் தாங்கி வந்து நின்றது.

கையோடு கையாக கட்டில் பீரோ டைனிங் டேபிள், சோபா, ஸ்டவ், மைக்ரோ ஓவென். மிக்சி, கிரைண்டர், ஜூஸ்ஸர்,டிவி என்று இடத்தில் வைக்க ஒரளவு வீட்டில் இடம் நிறைந்தன.

மதிய உணவையும் ஆர்டர் கொடுத்துவிட்டு சாப்பிட செய்தார்கள். தனுவிடம் ராம் உணவினை நீட்ட, அவளோ அவனிடம் வாங்காமல் பையில் இருந்த லன்ச் பாக்ஸ் எடுத்து சாப்பிட செய்தாள். ராமோ அவளை முறைத்தபடி திரும்ப எடுத்துக்கொண்டு வந்து டேபிளில் வைக்க,

''தனு சாப்பிடலையா? என்றான் அஸ்வின்.

''அண்ணா அம்மா தக்காளி சாதம் கொடுத்து விட்டாங்க'' என்றாள் அவள்.

''அதை ராமிற்கு கொடு. அவனுக்கு வீட்டு சாப்பாடு பிடிக்கும் நீ இதை சாப்பிடு என சொல்ல ராமிற்கு அவள் தனக்கு தருவாளா? இல்லையா? என தவித்தான். ஏன் என்றால் தனு அதில் இரண்டு வாய் எடுத்து சாப்பிட்டு இருந்தாள்.

அஸ்வின் சொன்னதும் பேசாமல் அப்படியே ராமின் பக்கம் நகர்த்தினாள். ராமிற்கு மனம் மிகவும் நிம்மதி பரவியது. நிஷா இந்தியா வந்தது ஒரு சந்தோஷம் என்றால் தனு எச்சில் இன்று அவன் உண்பது அவனுக்கு ஏதோ ஆறுதலாக இருந்தன. அஸ்வினிடம் காரில் கேட்டதிற்கு நைட் பேசறேன். இப்போ நிறைய ஒர்க் இருக்கு. நிஷாவுக்கு தேவையானதை வாங்கணும் இப்போ கோர்வையாக சொல்ல முடியாது என கூறி விட்டான். ராமும் இரவு கேட்டுக்கொள்வோம் என கருதினான்.

மணி மூன்றை தொட ''ராம் நீ நிஷா கூட இரு அப்பறம் நைட் சாப்பிட வைச்சிட்டு அப்பறம் கிளம்பு. இப்போ நானும் தனுவும் கிளம்பறோம். அம்மா தனு நாலு மணிக்கு வருவதால் தேடுவாங்க'' என சொல்லிவிட்டு திரும்பினான்

''நிஷாகிட்ட எதுவும் கேட்காதா... கொஞ்ச நாள் அப்படி தான் இருப்பா அப்பறம் மாற்றிடலாம் சரியா'' என சொல்ல ராம் அமைதியாக தலையை அசைத்தான்.

''நைட் வருவல டா'' என்றான் ராம். இம்முறை அஸ்வின் தலையை அசைத்தான். நிஷா இருக்கும் அறைக்கு சென்று ''நிஷா இங்க பாரு ராம் உன்னை பார்த்து தான் வருந்துவான் சோ நீ அவனை வருத்தப்பட வைக்காதே. நான் அடிக்கடி வருவேன்'' என்றதும் நிஷா அவனை பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

''தட்ஸ் குட் நிஷா'' என்றே கிளம்பினான். சித்திக் பார்த்து அவன் இருப்பதாக தோன்றாமல் சென்றான்.

தொடரும்
-praveena thangara
 
Top