கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -20

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-20

வீட்டில் அஸ்வின் அண்ணா இல்லை என்பது தன்யாவுக்கு சின்ன ஆறுதல். விகாஷை தூக்கி கொண்டு நிஷா வீடு தேடி சென்றாள். கதவு திறந்தே இருக்க உள்ளே சென்றாள்.

''உட்கார்'' என்றே கட்டளையிட்டான் ராம்.

''அவன் எவ்ளோ நாள் உன்னை இப்படி பேசி..'' என்று ஆரம்பிக்க,

''நிஷா அண்ணி கேட்க போறாங்க'' என இடையில் நிறுத்தினாள்.

அவனோ சினத்தை கொஞ்சமும் குறைக்காமல், ''ரொம்ப முக்கியம்... நிஷாவுக்கு தெரியறது. அவள் இங்க இல்லை... செக்கப் போயிருக்கா.

நீ ஏன் என்கிட்ட சொல்லலை. சரி என்கிட்ட சொல்ல வேண்டாம். ஒருத்தனுக்கு இரண்டு அண்ணன்கள் இருக்காங்கள? அவன்கிட்ட சொல்ல வேண்டியது தானே'' என்று அதட்டினார்.

''ப்ளீஸ் அவன் இப்ப தான் ஒரு மாசமா என்கிட்ட பேச முயற்சி செய்தான். உங்ககிட்ட இல்லை அண்ணாகிட்ட சொல்லலாம் என்றால் நம்ம லவ் வீட்டுக்கு தெரிஞ்சுடுமே என்று தான் யாருக்குமே சொல்லலை. அண்ணாகிட்ட சொல்லி இருந்தால் அவன் அஸ்வின் அண்ணாகிட்ட நம்ம லவ் சொல்லிடுவானோ என்று பயந்தேன். உங்கிட்ட சொல்லி நீங்க இப்படி அடிச்சு பிரச்சனையாகி அப்பறம் காலேஜில் தெரிஞ்சு வீட்டுக்கு சொல்லிடுவாங்களோ என்று நினைத்தேன்'' என்று பயந்ததை கூறினாள்.

''ஏதாவது உப்பு சப்பில்லாத காரணத்தை சொல்லிடு'' என்று திட்டினான்.

''அஸ்வின் அண்ணா எப்படி அங்க வந்தாங்க? அண்ணா என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை... அப்படியே நாம கிளம்பியதும் அவரும் கிளம்பிட்டார். உங்களோட என்னை பார்த்ததை கூட எதுவும் கேட்கலை.'' என்று சந்தேகத்தை கேட்டாள்.

''அந்த போலீஸ் யூனிபார்ம் போட்டு இருந்தாரே அவர் கார்த்திக்.

அஸ்வின் பிரென்ட் என்னை பார்த்ததும் அஸ்வினுக்கு போன் செய்தார் போல கூட இருப்பது தன்யா என்று பெயரை சொல்லி இருப்பார். அஸ்வின் வந்து இருப்பான்'' என்று கூறினான்.

''அஸ்வின் அண்ணா என்னை கேள்வி கேட்பாரா?'' என விசும்பினாள்.

''அழுவறதை நிறுத்தறியா.. அவனுக்கு கால் பண்ணி பேசிட்டேன்'' என்று எரிந்து விழுந்தான் ராம்.

''என்னனு?'' என்று பயந்தாள்.

"ஹ்ம்ம் நானும் உன் தங்கையும் லவ் பண்ணறோம் என்று'' கூற
''அச்சச்சோ..'' என அழுகை அதிகரித்தது.

அவள் அழுகையை காண சகிக்காதவனாக ''ஏய் லூசு சின்ன பிரச்சனை... நான் அந்த பக்கம் போனதும் பார்த்தேன் பையனை அடிச்சுட்டேன் அப்படி என்று தான் அஸ்வினிடம் சொல்லி இருக்கேன்'' என்று கூறினான்.

''அப்போ அண்ணாகிட்ட?''

''நீயா சொல்லிக்கறதா இருந்தா சொல்லிக்கோ''

''வேற வினையே வேண்டாம். நீங்க சொன்னதே போதும். அதையே சொல்லிக்கறேன்'' என்று பெருமூச்சை விட்டாள்.

''அவ்ளோ பயப்படறவ எதுக்கு லவ் பண்ணனும்?'' என்றான் ராம்.

''ஹ்ம்ம் எனக்கு ஒன்னும் பயம் இல்லை'' என்று சொல்ல ''அத அஸ்வின் எதிரில் நின்றா சொல்லு பார்க்கலாம்'' என்றான் ராம்.

''எதுக்கு இப்படி பண்றிங்க. நான் கிளம்பறேன்'' என கிளம்பியவளை அவன் தடுக்கவில்லை.

வேகமாக சென்றதும் வீட்டில் அஸ்வின் இருப்பதை கண்டு நடையை மெதுவாக்கி அறைக்குள் ஒதுங்கினாள்.

அஸ்வின் அவளை பார்க்க கூட செய்யவில்லை. நேராக அஸ்வினே தனு அறைக்கு வந்தான், ''சாரி தனு என்னால தான் இன்னிக்கு உங்கிட்ட அந்த பையன்... பட் இனி வம்பு வராது'' என்றுரைந்தான்.

''அண்ணா...'' என எச்சிலை விழுங்கி,

''நல்ல வேளை ராம் அந்தப்பக்கம் வேலை விஷயமா வந்து சேர்ந்தான்'' என நிறுத்தி, ''சரி நீ ரெஸ்ட் எடு. தேவை இல்லாத டென்ஷன் உனக்கு'' என அஸ்வின் கிளம்பிட தன்யா நிம்மதியாக மூச்சு விட்டாள்.

அஸ்வின் ராமிடம் நேரிடையாக "ஏன் டா இப்படி போலிஷ் ஸ்டேஷன் வர வேண்டிய அவசியம் என்ன?'' என்று கேட்டான்.

''இல்லை டா தன்யா பக்கம் கூட அவன் இனி திரும்ப கூடாது. அதனால தான் அப்டி செய்தேன்'' என்றான் ராம்.

''நீ வரலை என்றாலும் அவளே அவனை கிழிகிழி என்று கிழிச்சு தொங்கவிட்டிருப்பா'' என்றான் அஸ்வின்.

''அவ சின்ன பொண்ணுடா.. அவ எப்படி தைரியமா ஹண்டில் செய்வா?'' என்றான் ராம்.

''உனக்கு அவளை பற்றி தெரியாது ஸ்ரீராம். வீட்ல அப்பா அம்மா கூட என்மேல கொஞ்சம் பயமிருக்கு. ஆனா வீட்ல என்மேல பயப்படாம பயப்பட மாதிரி நடிக்கறது இந்த பூச்சி தான். எனக்காக அம்மா அவளை ஒரு வேலை சொன்னா கண்டிப்பா எனக்கு மனசுக்குள்ள அர்ச்சனை நடக்கும். நான் எது செய்தாலும் அதில் அவளுக்கு பிடிக்காது. பனியில் நாணயதே ஐஸ்க்ரீம் சாப்பிடாதே, கடலில் ரொம்ப நேரம் இருக்காதே. பிரிட்ஜ் வாட்டர் குடிக்காதே இப்படி எது நல்லதுக்கு சொன்னாலும் அவளுக்கு பிடிக்காது.
அவளுக்கு சயினஸ் பிரச்சனை இருக்கு என்று அவளுக்கு சொல்லினாலும் 'எனக்கு தெரியாதா ரொம்ப அக்கறை இருக்கற மாதிரி' என்று என்னையே மனசுக்குள் திட்டுவா... உனக்கு அவளை பற்றி இன்னும் தெரியலை.... அடம்... கடைக்குட்டி என்று ஓவர் செல்லம்.

ஆனா நல்லா சாப்பிடுவா டா... அம்மா செய்தது எல்லாம் கற்றுப்பா''

''எனக்கு அது எல்லாம் தான் ரொம்ப பிடிக்குதே'' என்றான் காதலாய் ராம்.

''அடப்பாவி இப்படியா இருப்ப? நானே பரவாயில்லை டா...'' என சிரிக்க ராமும் அவனின் சிரிப்பில் கலந்தான்.

நாட்கள் கடக்க ஒரு வழியாக அஸ்வினின் குட்டி ஏஞ்சலுக்கு பெயரிடும் நாளும் வந்தன. உறவுகள் நட்புகள் அலுவலக நண்பர்கள் என்று சூழ பெயரினை 'நேத்ரா'வென வைத்து முடித்தனர். அந்நிகழ்வுக்கு நகுலனும் மிருதுளாவும் வந்து இருந்தார்கள். கையில் அவர்களின் இளவரசன் 'சஞ்சய்' அழைத்து வந்தார்கள். ''என்ன டா நேத்ரா என்று நீயும் ரைமிங்கா வச்சியிருக்க?'' என்றான் ஸ்ரீராம்.

''என்ன செய்ய என் பிரென்ட் சொல்லிய பேரில் இது தான் எனக்கு பிடிச்சிருந்தது'' என்றான் அஸ்வின்.

''டேய் நான் எதோ ப்லொவ்ல சும்மா சொன்னேன் டா... நீ அதையே....'' என்று கலங்கினான்.

''எனக்கு நிஜமாவே இந்த பெயர் பிடிச்சிருந்தது டா..ஓகே'' என்றபோதே ''ஹாய் அஸ்வின் பெயர் அழகாயிருக்கு...'' என நகுலன் சொல்ல ஸ்ரீராமிடம் இருந்து திரும்பி நகுலனை கண்டு ''தேங்க்ஸ் நகுல்'' ''உங்க இளவரசன் சஞ்சய்-க்கு விழால கசகசனு இருக்கா?'' என்று உபசரிப்புடன் கேட்டான் அஸ்வின்.

''சே சே ஏசில அவனுக்கு ஓகே தான். என்ற பொழுது சஞ்சய் அஸ்வின் கையில் இருந்த குட்டி நேத்ராவை கண்டு குதித்தான். ''அவன மாதிரியே சின்ன குட்டி பாப்பா பார்த்ததும் சந்தோஷத்துல குத்திக்கறான்'' என மிருதுளா கூற, பவித்ரா அதனை ஆம் என்பது போல சிரித்து ஏற்றாள்.

எல்லோரிடமும் பேசி கலகலப்பாக முடிந்தன. மிருதுளாவும் பவித்ராவும் நல்ல நெருங்கிய தோழிகளாக பேசி பழக வாய்ப்பு அமைந்தன.

தற்பொழுது தன்யா இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வில் இருக்க படிப்பில் நேரம் போனது. மீண்டும் ஸ்ரீராம் போன் மெசேஜ் செய்வது கொஞ்சம் குறைந்தது. அவன் அலுவலக பணியில் கருத்தாகவும், இவள் தேர்வில் கருத்தாகவும் இருப்பதால் நேரம் சுழன்றன.

நேத்ரா விகாஷ் சுட்டி தனங்களில் விஸ்வநாதன்-ராதை எல்லையில்லா மகிழ்ச்சியில் லயித்தனர். ராதை செய்திடும் உணவுகள் பலகாரங்கள் எப்பொழுதும் தன்யா எடுத்து சென்று நிஷாந்தினியிடம் சேர்ப்பிக்கும் கொரியர் வேலையையும் தொடர்ந்தாள். நேரம் கிடைக்கும் சமயம் மற்ற பெண்களும் நிஷாந்தினியை பார்த்து பேசிவிட்டு பொழுதை கழித்தார்கள்.

சித்திக் வாழ்க்கை இங்கு கொஞ்சம் நன்றாகவே சென்றன. வீட்டில் நிஷாந்தியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான்.
ரோஷன்-ரம்யா திருமணத்திற்கு அஸ்வின்-பவித்ரா மகள் நேத்ராவை தூக்கி கொண்டு சென்றார்கள். அங்கே சஞ்சு அவளின் கணவர் மற்றும் குழந்தையோடு வந்திருக்க கலகலப்பாக போனது. ஸ்ரீராம் அங்கு வந்து சேர்ந்தான். ரோஷனுக்கு வாழ்த்தை தெரிவித்தான். பரிசினை கொடுத்துவிட்டு அமர்ந்தபொழுது சித்திக் வந்து சேர்ந்தான். நிஷா அழைத்து வரவில்லை. கூட்டத்தில் எதற்கு சிரமம் என தவிர்த்தான். அஸ்வின் பவித்ரா சஞ்சு அவர் கணவர் ஸ்ரீராம் சித்திக் மற்றும் ரகு அங்கிள் என புகைப்படம் எடுத்து இறங்கும் சமயம் ஸ்ரீராமிடம் ரோஷன் ''சார் அந்த கான்ஸ்டருக்ஷன் கான்ட்ராக்ட்... டீல் ஓகே வா சார்'' என்றான் ஆர்வம் மிகுதியில்...

ராமோ அஸ்வினை கண்டு பதில் சொல்ல முடியாமல் திணற, ''சார் அந்த நகுலன் அமௌன்ட் வேற கோட் பண்ணி இருந்தாரே அவருக்கு டீல் போயிடுச்சா?'' என்றதும் ஆமாம் என தலையை அசைத்து முறுவல் செய்தான்.
''என்னடா ஒர்க் விஷயமா? எந்த நகுலன்?'' என்றான் அஸ்வின்.

''உனக்கு தெரிந்த நகுலன் தான்'' என்றான் ராம். ''அவருக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் அக்கொன்ட் தானே ஜாப்... உன்னோட ஜாப்குள்ள எப்படி?'' விசாரித்தான்.

''அவனோட ப்ரெண்ட்காக கோட் பண்ணி ஐடியா தந்து இருக்கான் அந்த ப்ரெண்டுக்கு புதுசா ஒர்க் ஏற்பாடு பண்ணி இருக்கார் போல தட்ஸ் ஆல் டா'' என ராம் சொல்ல இயல்பாக போனது.

ஆனால் அஸ்வின் நகுலன் நண்பர்கள் ஆனதால் ராமிற்கு சின்ன வருத்தம். அஸ்வின் தனக்கு மட்டுமே நண்பன் என்ற கருத்தில் சின்ன இழை என்றெண்ணினான்.
இதில் நகுலன் தனக்கு போட்டியாக கோட் செய்து அவன் நண்பனுக்காக அந்த ப்ரொஜக்ட் சென்றதில் சிறு வருத்தம். அஸ்வினுக்கு அதே வருத்தம் தான் நகுலன் புது நண்பன் அதிலும் நிஷாவின் வாழ்க்கையில் அவனையும் அறியாது உதவி புரிந்தவன் ஆயிற்றே.

---

அன்று ஆகாஷ் போனும் கையுமாக அலைந்து திரிந்தான். இன்று விகாஷுக்கு முதல் பிறந்த நாள் தினம். வீட்டிலே எளிமையாக வண்ண காகிதங்கள் கொண்டு பவித்ரா தன்யாவால் வீடு அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

விஸ்வநாதன் நெருங்கிய நண்பர்கள் தவசுடர் அவரது கணவர் மற்றும் அவரின் அண்ணன் மகன் குடும்பத்தார் ஆகாஷ் ப்ரெண்ட்ஸ் சுவாதி தோழிகள் பவித்ரா உறவுகள்....
ஸ்ரீராம் மற்றும் சித்திக்-நிஷாந்தினி குடும்பத்தினர், நகுலன்-மிருதுளா அவர்களின் சஞ்சய் என வீடே அமர்க்களமாக காட்சி அளித்தது.

சின்ன சின்ன பாதம் அடியெடுத்து படியில் நடந்து வந்து கேக் கட் செய்து கோட் சூட் என்று அழகா இருந்தான் விகாஷ்.

பெரும்பாலும் ஆகாஷ் விகாஷை ஏந்தியே இருந்தான். நேத்ரா-சஞ்சய் இருவரும் மாதங்கள் மட்டுமே இடைவெளியில் பிறந்த குழந்தைகள் அமர்ந்தபடி விளையாடி மகிழ்ந்தார்கள்.

மிருதுளா தான் நகுலனிடம் இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னால டிவியில் ஒரு படம் பார்த்தோமே அதுல ரெண்டு குழந்தைகள் கையை பிடிச்சுக்கிட்டு இருக்குமே அதே போல இருக்குல என நகுலனிடம் சொன்னாள்.

நகுலன் அதனை ஆம் என்பது போல ஆமோதித்தான் கூடுதலாக "இதே நட்புறவு வளர்ந்தா நம்ம சஞ்சயுக்கு நேத்ராவை மணமுடிக்கலாம்." என்று தன் ஆசையை மனைவியிடம் கூறினான். இதனை ராம் கேட்க நேர்ந்தது.

--

தன்யா மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் அடியெடுத்து வைத்தாள். ''இன்று முதல் நீ சீனியர் ஆகிட்ட வாழ்த்துகள் தன்யா...''

''தேங்க்ஸ்... ஆமா நீங்க ஏன் என்னை தனு என்று கூப்பிடாமல் என் முழு பெயரை கூப்பிடறீங்க?'' என்றாள்.

''ஏன் உனக்கு பிடிக்கலையா?''

''ஸ்கூல் படிக்கும் பொழுது என் பெயரை எல்லாரும் தனியா மிளகாய் என்று கிண்டல் பண்ணினாங்க அதான் அப்பறம் யார் கேட்டாலும் தனு அப்படினு சொல்லிட்டேன்''

''ஹ்ம்ம் எனக்கு தனு விட தன்யா தான் பிடிக்கும்'' என சொல்ல முகம் வெட்கத்தில் சிவந்தது.

இருவரும் அதன் பின் அவர்கள் வேலையை பார்க்க சென்றார்கள். ராமிற்கு தினமும் வேலை பணி அதிகம் ஆனது. நடுவில் நிஷாந்தினியை பார்த்து பார்த்து கவனிக்க வேறு செய்தார்கள்.

எப்பொழுதும் மாதம் ஒரு முறை வெளியே அவளுக்கென நேரத்தை ஒதுக்கிய ராம் அன்று தன்யா எதிர்பாராது பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான். முதலில் யாரோ வேண்டுமென்றே பைக் எடுத்து தன் முன் வந்து சீன் போடுவதாக எண்ணி ஒதுங்கி செல்ல, மீண்டும் அவளின் அருகே வந்து அந்த பைக் நிற்பதை கண்டு முகத்தை பார்க்க ஸ்ரீ ராம் ஹெல்மெட் தலைக்குள் சிரித்தான்.

''நீ.. நீங்க..ளா?''

''என்ன யாரோ என்று பயந்துவிட்டியா?''

''சே சே எனக்கு தான் பாடிகார்ட் இருக்கே'' என்று அவள் சிரிக்க,
''நேரம் தான் டி என்கிட்ட பேச பயந்த பூச்சி என்னையே கலாய்க்குது... சரி ஏறு'' என்றதும் ஏறியவள், ''யாரோட பைக்?'' என்றாள் தன்யா.

''என்னோடது தான் எப்படி இருக்கு?'' என்று அபிப்ராயம் கேட்டான்.

''செம RL அதுலயும் இப்படி தனியா லாங் டிரைவ் சூப்பரோ சூப்பர்''

''ஹ்ம்ம்''
''ஆமா கார் என்னாச்சு?''

''ஒய் நீதானே காரில் போறதை விட பைக்ல போறது பிடிக்கும் என்று சொன்ன அதனால தான் பைக் வாங்கிட்டேன். அஸ்வின்கிட்ட கூட இன்னும் சொல்லலை''

''அது என்ன எதுனாலும் அஸ்வின் அண்ணாகிட்ட சொல்லலை என்று வறுத்தபடுறிங்க.... சும்மா நீங்களும் அவரை தூக்கி வச்சி பேசாதிங்க... ஏதோ எங்க தாத்தா மாதிரி இருப்பதால் அப்பா அம்மா கொஞ்சம் அவனை தூக்கி நடத்தறாங்க... எல்லோரும் அப்படியே இருக்கிங்க'' என்றாள்.

''ஏய் இப்ப எதுக்கு கோவப்படற?'' என்றான் ராம்.

''பின்ன எதுக்கு எடுத்தாலும் திட்றது ஓவரா பண்றது.'' என்று வஞ்சனையில்லாமல் திட்டினாள்.

''உனக்கு ஏன் அஸ்வின் மேல இப்படி புகைச்சல்'' என்று ஐயத்தை கேட்டான்.

''எல்லோரும் நேரத்துக்கு வந்து சாப்பிட்டா, அவரை மட்டும் கூப்பிட நான் போகணும்.. இல்லையா ஸ்னாக்ஸ் எடுத்துக்கிட்டு ரூமுக்கே கொண்டு போய் கொடுக்கணும்.

ஏன் ஆகாஷ் எல்லாம் கீழே வந்து தானே சாப்பிடறான். அது போக இதை சாப்பிடாதே அதை செய்யாதே.. இந்த காலேஜ் சேறு... அதை படி... இந்த வழியில் போ... என்று ஏகபட்ட ஆர்டர். எனக்கு எப்படி பிடிக்கும்? அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கனும்னு நினைக்கறாங்க... எனக்கு பிடிக்கலை... என் பேச்சுக்கு வந்தா நான் எதிர்த்து எதிர்த்து பேசிடுவேன்'' ''எப்படி எப்படி எதிர்த்து பேசிடுவியா?'' என்றே சிரிக்க ''எப்பா மனசுக்குள்ள எதிர்த்து பேசிடுவேன் போதுமா நேர்ல பேசி அதுக்கு வேற திட்டு வங்கா வா. ஆமா எங்க போறோம்'' என்றாள்.

''இங்க கோவிலுக்கு திருக்கழுகுன்றம் அப்பறம் ரிட்டன் தான்'' என அவளுக்கு பிடித்த மாதிரி சென்று திரும்ப நேரம் போனது. இதற்கு இடையில் எந்த போன் காலும் எடுக்க வேண்டாம் என போனை பிளைட் மோடில் போட்டு விட்டான். ஸ்ரீராமிற்க்கு முன்பு அஸ்வின் அவளை சொல்லிய வார்த்தைகள் அதனை அப்படியே தன்யா சொல்ல அவனுக்குள் சிரிப்பு தான் வந்தது. இந்த அஸ்வின் எப்படி இப்படி எல்லாம் சரியா சொல்றான். நான் கூட இவள் அஸ்வினை திட்ட மாட்டனு இருந்தேன்.

இவள் அன்று அஸ்வின் கூறிய வார்த்தை பிசகாமல் திட்டிடறா? எண்ணி முறுவலிக்க... ''எனக்கு ரொம்ப பசிக்குது...'' என்றதும் அதற்கும் முறுவலித்து ஒரு கடை அருகே நிறுத்தி கரும்பு சாறை பருகினார்கள்.

''நீ ஏன் என்னை வாங்க போங்கனு கூப்பிடற?''

''அது.,... நீங்க தானே என்னை விட 5 வயசு பெரியவர் என்று சொன்னிங்க'' என்று வாறினாள்.

''அடிப்பாவி அது அப்போ... இப்போ தான் நாம காதலர்கள் ஆச்சே பேர் சொல்லி கூப்பிடேன்''

''எனக்கு அப்படி தோணலையே.
எனக்கு தோணும் பொழுது கூப்பிடவா?'' என்றாள்.‌

'இதுவும் அஸ்வின் டயலாக் ஆச்சே' என்று ராம் அவளை ரசனையாக பார்க்க அவளோ நேரம் ஆகுது கிளம்பலாம் என்றாள்.

அன்றைய நாட்களில் பைக் பயணம் தன்யாவிற்கு மிக பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஏன் ராமிற்கும் கூட இது புது அனுபவம் தான்
.

''தன்யா நம்ம கல்யாணத்துக்கு பிறகு இப்படி ஒருமுறை வரணும்'' ''ஹ்ம்ம் கண்டிப்பா நானும் அதே தான் சொல்ல வந்தேன்'' என்று முடிக்க அவனுக்குள் மென்னகை பரவியது.

-பிரவீணா தங்கராஜ்.
 
Top