கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -23

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-23

அன்று அஸ்வின் காலையில் சாப்பிடும் பொழுதே விஸ்வநாதன் அவனிடம் உன் அம்மா உன்னிடம் பேசணுமாம்...'' என்று சொல்லிக் கொண்டு சாப்பிட்டிட்டு முடித்து கை அலம்பிக் கொண்டார்.

தான் சொன்னது அஸ்வின் காதில் விழுந்ததா? என யோசிக்க அவன் சாப்பிடும் முன் அப்படியே கையை நிறுத்தியது நினைவு வர சொல்லியாச்சு அஸ்வின் தயாரா பேச காத்திருப்பான் என ராதை விஸ்வநாதன் இருவருக்கும் தோன்றியது.

தனு புத்தகத்தை எடுத்து கொண்டு மாடிக்கு சென்று படிக்க, சனி என்றாலும் ஆகாஷ் அலுவலகம் இருப்பதால் அவன் அலுவலகம் செல்ல பவித்ரா சுவாதி அவரவர் குழந்தைக்கு தடுப்பூசி போட மருத்துவமனை செல்ல புறப்பட்டனர்.

அஸ்வின் ராதை விஸ்வநாதன் மூவரும் ஹாலில் இருந்தார்கள். ''அப்பா சொல்றது எல்லாம் என்ன டா? இதுக்கு தான் பிரெணட்ஸ் வீட்டுக்கு வருவாங்களா?'' என எடுத்ததும் ராமை குற்றம் சுமத்தினார்.

''இங்க பாருங்கம்மா முதலில் ஒன்றை தெரிஞ்சுக்குங்க... அவன் முதலில் தன்யாவை விரும்பலை.. நம்ம தனு தான் முதலில் விரும்பினா... அவன் எனக்கு துரோகம் செய்ய கூடாது என்று விலகி தான் போனான். ஆனா உண்மையான அன்பு எப்படியும் சேர்த்து தான் வைக்கும்'' என்று நட்புக்கு துணை பேசினான்.

''தனு அவளா விரும்ப வைக்க கூட அவன் நினைக்கலாம் இல்லையா?'' என்று குற்றம் சுமத்துவதை நிறுத்தவில்லை.

''என் ஸ்ரீராமுக்கு அந்த அவசியம் இல்லை...'' என்றான் மிடுக்காக.

''அப்போ எல்லாம் உன் தங்கை மேல தான் தப்பு அப்படி தானே?'' என்று பாய்ந்தார்.

''இல்லையே அவளுக்கும் ஒரு மனசு இருக்கு அதுல வருங்கால கணவன் என்ற கனவு இருக்கும் அது என் ஸ்ரீராமின் குணதிசயத்தின் ஒன்றி இருக்கும் அதனால அவளுக்கு என் நண்பனை பிடிச்சிருக்கு'' என்றான் தங்கையை விட்டு கொடுக்காமல்..

''பிடிச்சிருக்கு என்ற ஒரே காரணத்துக்காக யாரும் அப்பா அம்மா இல்லாத ஒருவனை பார்த்து பெண் கொடுக்க மாட்டாங்க அஸ்வின்'' இதை கேட்டதும் ஹாலில் இருந்த கண்ணாடி டேபிள் சிதறி சில்லுகளாக உடைந்தன.

அதன் பின்னரே அஸ்வின் கையில் பலம் கொண்டு அடித்து உள்ளான் அதனால் அது உடைந்து உள்ளது என அறிய ராதை அப்படியே பேச்சிழந்து போனார்.

விஸ்வநாதனும் சற்றே மிரண்டு போனார் என்று சொல்லலாம். கைகளை மீண்டும் இறுக்கி மூடியவன் கண்களை திறவாமல் சில வினாடி இருந்தவன் ''என் ஸ்ரீராமுக்கு உறவு சொந்தம் என்று சொல்ல நான் இருக்கேன். அப்பா அம்மா இல்லைனு தெரியுமா? ஸ்கூல் படிக்கிறப்ப அப்பா அம்மா இறந்துட்டா என்ன செய்யாறதாம். இனி அப்படி சொன்னிங்க இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்'' என வெளியேறினான்.

அஸ்வின் கிளம்பியதும் வாசலையே பார்த்த ராதை, ''இப்போ நான் என்ன சொல்லிட்டேன் தனு கல்யாணம் ஆகி போற குடும்பத்தில் அவளை வீட்டில் கணவன் இல்லாத பொழுதும் கவனிக்க ஒரு ஆள் கூட இல்லாத இடத்தில எப்படி அவளை கட்டி கொடுக்க என்று தானே சொல்ல வந்தேன். அதுக்குள்ள இவனுக்கு ஏன் இப்படி கோவம். எல்லா அம்மாக்களும் தன் மகள் போகின்ற வீட்டிலும் சந்தோசமா சாப்பிட்டியா என்று கேட்க ஒரு ஜீவனை கூட இல்லாமல் இருந்தால் எப்படி மனம் நிறைவா சம்மதிப்பாங்க?'' என்று புலம்பினார்.

''நீ சொல்றது ஒரு தாயின் மனம் ராதை அவன் பேசறது நட்பின் பலம் பற்றி... எப்படியும் இதை பற்றி தனுவிடம் கேட்காதே. அவள் படிப்பு முடியறவரை நமக்கு அவள் காதல் தெரிந்தது என்று காட்டிக்காதே. அந்த ராம் நிச்சயம் தனுவிற்கு சொல்லமாட்டான் அவள் படிப்பை கெடுக்க அவன் விரும்பலை... நாமளும் கொஞ்ச நாள் இதை பற்றி பேச வேண்டாம். உன் மகன் இதுக்கே வீட்டை விட்டு போவேன் என்று பேசறான். அப்பறம் அவன் ஏதாவது முடிவு எடுத்துடுவான் அதனால் இப்பொழுது இதை பற்றி மூச்சு விடாதே'' என விஸ்வநாதன் சொல்லிட ராதைக்கும் அது சரி என்றே பட்டது.

ராதையிடம் தனு ராம் காதல் சொல்லியதும் பெண்ணை கொடுக்கும் தாயின் உள்ளம் உறவையும் நாடுகின்றது என்பதை அதன் பின்னரே உணர்ந்தார்.

நிஷாந்தினி-சித்திக் இருவரின் உறவு இருந்தாலும் அவர்களை தவிர்த்து என்று யாருமில்லை... வீட்டில் ராமை தவிர்த்து தனு மட்டும் தனியாளாக அவ்வீட்டில் எண்ணும் பொழுதே தனு சிறு பெண் அப்படி குடும்பத்தை தனியாக தாங்க இயலுமா?

அதே சுவாதியின் சித்தப்பா பையன் விக்ரம் வீட்டில் தாய் தந்தை விக்ரம் அவனின் தங்கை என்றிருக்க தவசுடரின் உறவும் மேலும் அன்னியோன்னியமாக மாறா கூடும் என்பதால் ராமை மறுக்க யோசித்தார்.

விஸ்வநாதன் முன்பே ராமை தனுவிற்கு என்று எண்ணி பார்க்காமல் இல்லை. ஆனால் அது அஸ்வின் ஸ்ரீராம் இருவரின் நட்பை கெடுத்திடுமோ என சிந்தித்தார்.

அஸ்வினின் இன்றைய செயலால் இருவரின் நட்பின் ஆழத்தை உணர்ந்து கொண்டார். இனி என்ன செய்ய....?! என்பதை விட்டு பிடிக்கவே மனம் சொல்ல அதே சரி என்று விடுத்தார்.

வீட்டில் எல்லோரும் வந்த பிறகும் கூட அஸ்வின் வரவில்லை. இரவு சாப்பிட அமரும் பொழுதும் பவித்ரா அஸ்வினுக்கு கால் செய்து எடுக்காமல் போக பவித்ராவும் எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

மணி பத்துக்கு மேல் வந்தவனை பவித்ரா சாப்பிட அமர சொல்ல அவனோ சாப்பிட்டேன் பவித்ரா... என படியில் வேகமாக ஏற துவங்கினான்.

இதனை கவனித்த ராதை விஸ்வநாதனை வருத்தத்துடன் ஒரு பார்வை பார்க்க அவரோ கண்களில் பொறுமை சாப்பிடலை என்றால் பரவாயில்லை என புரிய வைக்க ராதைக்கு தான் பையன் சாப்பிடாமல் செல்வது கண்டு வருந்த பவித்ரா பாலை சூடுபடுத்த செய்வதை கண்டார்.

''யாருக்கு பவித்ரா பால்?''

''அவருக்கு தான் அத்தை வெளியே ஒழுங்கா சாப்பிட்டாரோ என்னவோ? அதனால பாலை கொஞ்சம் போல...'' என்றதும் ராதைக்கு கொஞ்சம் நிம்மதி பரவியது.

ராதை உடனே அங்கிருந்த செவ்வாழை ஒன்றை நறுக்கி பாலில் சேர்த்து சீனியும் சேர்க்க, ''இதை கொடு கொஞ்சம் போல வயிறு காலியா இருந்தாலும் உடம்புக்கு நல்லது'' என்றதும் சரி அத்தை என எடுத்து சென்றாள்.

அறையில் உடை மாற்றி பால்கனியில் நின்று இருந்தவனிடம் பவித்ரா பாலை நீட்ட, அவளை கூர்ந்து பார்க்க அவளே.... ''நீங்க சரியா சப்பிட்டிங்களோ என்னவோ அதனால பால்... அத்தை செவ்வாழை நறுக்கி சேர்த்தாங்க'' என்றதும் ஒரு மிடறு ஸ்பூனில் சாப்பிட்டவன் நிறுத்தி சில நொடி யோசித்து மீண்டும் சுவைத்தான்.

பவித்ராவுக்கு அஸ்வின் அமைதி குழப்பமாக இருந்தன. எப்பொழுதும் நேத்ரா தடுப்பூசி போட்டு வரும் பொழுது அழுதாளா? என்ன செய்தா? எப்படி அழுகையை நிறுத்தினா? என்று கேள்வி மேல கேள்வி எழுப்புவான் இன்று ஒன்றும் கேட்கவில்லையே?! என்ற கேள்வி குடைந்த மனதோடு தூங்கினாள்.

அடுத்த நாளும் பொங்கல் சூடாக நெய் மனம் பரப்பி அஸ்வினை வரவேற்றாலும் மாடியில் இருந்து கைப்பட்டனை சரி செய்து கொண்டே வந்து, ''பவித்ரா பிரட் ஆம்லெட் ரெடி பண்ணு...'' என சாக்ஸ் அணிய ''என்னங்க பொங்கல் இருக்கு'' என்றாள்.

''எனக்கு வேண்டாம் பிரட் ஆம்லெட் வேண்டும். லஞ்ச் கூட வேண்டாம் ஆபிஸ்ல டீம் லஞ்ச் போறோம்'' என்றதும் அதற்கான பணியை செய்ய ஆரம்பித்தாள்.

ராதை விஸ்வநாதனை பார்த்து மீண்டும் வருத்தத்துடன் பார்வை பார்க்க, இம்முறை அவருக்கே கோவம் வர தான் செய்தது. இவன் இங்க சாப்பிட கூடாது என்று கங்கணம் கட்டி திரிகிறான் என்று புரிந்து. அதுவும் தனது மனைவியை வருத்தி செல்கின்றான் என்றும்.... இது எல்லாம் அஸ்வின் கண்டு கொண்டதாக இல்லை.

தனு இது எல்லாம் அறியாமல் அவள் பாட்டிற்கு படிப்பில் கவனம் கொண்டாள்.

ஆகாஷ்-சுவாதி பவித்ரா தனு அறியாமல் அஸ்வினுக்கு அவனின் பெற்றோருக்கும் பனிப்போர் நடந்து கொண்டு இருந்தது. அஸ்வின் ராம் சந்திப்பில் ''அங்கிள் என்ன சொன்னார்டா? வீட்ல அவகிட்ட ஏதாவது கேட்டாங்களா? ஆன்ட்டிக்கு தெரியுமா? என் மேல ஏதாவது தப்பு இருக்காடா? நட்பை கலங்க படுத்திட்டேன் என்று சொன்னார்களா? துரோகி ஆகிட்டேனா?'' என ராம் கேட்கும் கேள்விக்கு அஸ்வின் அவனுக்கு பதில் கொடுப்பதாக இல்லை.

பதிலாக முறைப்பை மட்டுமே தந்தான். ''ஏதாவது நல்லது என்றால் உன் முகம் சொல்லி இருக்கும் நீ இப்படி அமைதியா இருக்க அப்படினா ஏதோ சொல்ல மறுக்கற அப்படி தானே டா?'' என ராம் வருந்திட, ''இங்க பாரு தனு கழுத்தில் தாலி கட்ட போறது நீ தான் நான் முடிவு பண்ணிட்டேன்... நான் நினைச்சுட்டேன் நடத்தி காட்டுவேன்'' என்றான் அஸ்வின்.

''தன்யாவுக்கும் உனக்கு பவித்ராவுக்கு மட்டும் ஓகே என்றால் கூட நான் தாலி கட்ட மாட்டேன் அஸ்வின். எனக்கு உன் மொத்த குடும்பமும் வேண்டும் அவங்க ஆசிர்வாதமும் வேண்டும்'' என்றதும் அஸ்வின் அமைதியாக யோசித்தான்.

''அஸ்வின் நிஷாந்தினிக்கு நான் காதலிக்கறது தெரிஞ்சுடுச்சு...'' என்றதும் அஸ்வின் எப்படி என்ற பார்வை மட்டும் செலுத்த ''அன்னிக்கு தன்யா உங்க அப்பா என் ஆபிஸ்க்கு வந்து சென்ற அடுத்த நாள் மாலை நிஷா வீட்டுக்கு வந்த அப்போ நாங்க பேசிக்கிட்டது கேட்டுட்டா''

'' நிஷாவுக்கு உன் காதலில்... முழு சம்மதமா?'' என்றான் அஸ்வின்.

''எப்பத்துல இருந்து? ஏன் முதலில் சொல்லல? தெரிஞ்சா முன்னாடி அவளிடம் பேசி இருப்பேனே என்று ஒரே சந்தோஷம்... நான் தான் படிப்பு முடியற வரை அவளிடம் எதுவும் இதை பற்றி கேட்காதே என்று கண்டிப்பா சொல்லிட்டேன். யாரிடமும் கேட்க மாட்டாள்.... பவித்ராகிட்ட நீ இன்னும் சொல்லலையா?'' என்றான் வருத்தமாய் ராம்.

''இல்லை... பொறுமையா சொல்லி திட்டு வாங்கிக்கலாம்'' என அஸ்வின் சிரிக்க ராமும் சேர்ந்தே சிரித்தான்.

அஸ்வின் ராதை செய்யும் உணவை அறவே தவிர்த்தான். அதனால் ராதை அவனுக்காக பவித்ராவையே சமைக்க செய்ய சொல்ல அதன் பிறகே உண்டான்.

இன்று சேர்த்து ஒரு வாரம் ஆனது. அஸ்வின் விஸ்வநாதன்-ராதை இருவரிடமும் பேசாமல் இருந்து....

ராதை தான் பெரிதும் கவலையில் மூழ்கினார். தன்யா போனை தவிர்த்து படிப்பதால் வீட்டில் அவளை பற்றி பேசுவதை விட அஸ்வின் பேசவில்லை என்ற தாக்கமே ராதைக்கு அதிகமானது அன்று மனம் கவலையில் தாக்க கோவிலுக்கு தனியாக ராதை சென்றாள்.

அங்கே எதிர்பாராது நிஷாந்தினி சித்திக் காண நேர்ந்தது. தன்யா விஷயம் தவிர்த்து பொதுவாக பேச முயன்றாள் ராதை. நிஷாந்தினிக்கு ஒரு வேளை இவ்விஷயம் தெரியாது இருக்குமோ என்றெண்ணி, நிஷாந்தினிக்கு அதே எண்ணம் ஒரு வேளை ராதை ஆன்ட்டிக்கு தெரியாது என்று அவளும் பொதுவாக பேசினார்கள்.

''இது எத்தனை மாதம்ம்மா''

''ஏழாவது மாதம் துவக்கம் ஆன்ட்டி... இங்க சென்னை வந்த பொழுது தெரியாது''

''குழந்தை வயிற்றோடு இந்த மாதிரி மலை மேல இருக்கற கோவிலுக்கு வரலாமா?''

''கோவிலுக்கு என்று கிளம்பிட்டேன் ஆன்ட்டி ஆனா இப்படி இருக்கும் என்று யோசிக்கலை. ஜாக்கிரதையா பார்த்துக்கறேன் ஆன்ட்டி''

''கையில் ஏன் வளையல் அணியலை...? இப்போ இருந்தே கண்ணாடி வளையல் நிறைய அணிந்தா உள்ள இருக்கற குழந்தை கேட்டு ரசிக்கும் டாக்டர் உனக்கு தெரியாதா?''

''வாங்கி போடணும் ஆன்ட்டி. அம்மா இருந்தா அவங்க கையாளா வாங்கி போட்டு விடுவாங்க..'' என வருத்தத்துடன் முடிக்க, ராம் வருவது அறிந்து ''ராம் வந்துட்டான்...'' என்றதும் ராதை மெல்ல அவன் வரும் திசையை பார்த்தார்.

'தன்யா ஸ்ரீராம் ஜோடி நல்ல பொருத்தம் தான். சே நான் ஏன் இப்படி அஸ்வினிடம் அப்படி சொன்னேன்.. என் வாயில் அன்னிக்கு சனீஸ்வரன் இருந்தாரோ? இப்போ அஸ்வின் என்கிட்ட பேசலை... என் கையால் ஒரு தோசை கூட சாப்பிட மாட்டேன் என்று இருக்கான்' என நினைக்க ராம் அருகே வந்து சேர்ந்தான்.

''நிஷா உன்னை யாரு மலை மேல இருக்கற கோவிலுக்கு வர சொன்னது... வீட்ல இருக்கற சாமி கும்பிட கூடாதா?'' என அதட்டினான். இத்தனை நாள் கரு தங்காமல் அக்கா உண்டாகி இருக்க அவ்வாறு கேட்டான்.

''டேய் தெரியாம வந்துட்டேன் சாரி டா''

''என்னவோ போ இது தான் லாஸ்ட் ஓகே''

''ஓகே ஓகே'' என்றதும் '' ராம் பிரசாதம் என்றதும் முறைக்க சித்திக் வாங்கி வந்து கொடுத்தான்.

ராம் கொஞ்சம் தள்ளி அமர்ந்தான். அருகே சில பிள்ளைகள் விளையாடி மகிழ்வதை கண்டு புன்னகைக்க, அதில் ஒரு சில பிள்ளைகள் பிரசாதம் கிடைக்காமல் தவிக்க ராம் அவனின் பிரசாதத்தினை உண்ணாமல் கொடுத்திட ராதை அதனை கண்டு தன்னிடம் இருக்கும் பிரசாதம் எடுத்து அவனிடம் நீட்டினார்.

ராம் முதலில் திகைத்து தயங்க, ''கோவில் பிரசாதம் கோபுர தரிசனம் இதெல்லாம் கோடி புண்ணியம்... ஒரு வாயாவது சாப்பிடணும் என்றே கொடுக்க, ''தேங்க்ஸ் ஆன்ட்டி'' என வாங்கிக் கொண்டான்.

நிஷா சித்திக் இருவரும் கை அலம்ப கோவில் குழாய் அருகே செல்ல, ராதை ஸ்ரீராமிடம் பேச ஆரம்பித்தார்.

''வீட்ல அஸ்வின் என்கிட்ட பேசி ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. நான் சமைச்சா சாப்பிட மாட்டேங்கிறான்... முதலில் எனக்கு இதில் விருப்பம் இல்லை இப்போ அஸ்வின் செய்கையில் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. நான் பேசியது தவறு தான். சொந்தம் உறவு அப்பா அம்மா இல்லாமல் என் மகள் வீட்டில் தனியா இருப்பா என்று யோசிச்சேன் ஆனா அவள் மனசுல நீங்க இருப்பது.... கொஞ்சம் அப்போ தோணலை... எப்பவும் போல பெற்றோர் பிடிவாதம் அப்படி நடந்துக்கிட்டேன். இப்போ அஸ்வின் பேசாம முகம் திருப்பி தண்டனை கொடுத்து எனக்கு அதை புரிய வைத்து விட்டான்'' என்றதும் கண்ணீர் துளி விழ அப்பொழுது தான் ராமிற்கு வீட்டில் பேசியதை ஏன் அஸ்வின் தன்னிடம் மறைத்தான் என்பது புரிந்தது.

ஸ்ரீராமுக்கு யாருமில்லை என்ற உண்மை அவனுக்கு பிடிக்காது. ''ப்ளீஸ் ஆன்ட்டி அழாதீங்க அவன் என்கிட்ட எதையும் சொல்லலை. தன்யா கூட பேச மாட்டேன் என்று அங்கிளுக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்து இருக்கேன் அதனால அங்க நடந்தது எனக்கு எதுவும் தெரியாது. அஸ்வின் என்கிட்ட இதெல்லாம் பேசலை''

''அவனுக்கு உன்னை... உங்களை வருத்த செய்யற விஷயம் அதனால் சொல்லி இருக்க மாட்டான்'' நிஷா சித்திக் இருவரும் அருகே வர பேச்சு தடை ஆனது.

''நான் பார்த்துக்கறேன் ஆன்ட்டி நீங்க... இனி கவலைபட வேண்டாம்'' என சொல்ல ராதை நிஷா சித்திக் ராம் என்று எல்லோரும் கீழே இறங்கினார்கள்.

அங்கே கண்ணாடி வளையல் கண்டு ராதை வாங்கி நிஷாவிடம் கொடுக்க, அதனை புரிந்து நிஷா வாங்க ராமோ ''ஆன்ட்டி உங்க கையால் அக்காவுக்கு அணிந்து விடுங்களேன்'' என்றான்.

அவரும் அதே போல அணிவித்து கோவிலில் கொடுத்த குங்குமம் விபூதி நெற்றியில் பூசி மனதார ஆசி வழங்கினார்கள்.

வீட்டிற்கு வந்து விஸ்வநாதனிடம் ராதை எல்லாம் சொல்ல, கேட்டு கொண்டார். ''என்னங்க நம்ம குழந்தைகள் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம் என்று ஆகாஷ் பிடித்த மாதிரி அஸ்வின் பிடித்த மாதிரி கல்யாணம் பண்ணி வைத்தீர்கள்... இப்போ அதே போல தன்யா கல்யாணமும் அவள் மனம் விரும்பும் படி செய்து வைத்திடுவோம். ஸ்ரீராமுக்கு சொந்தம் பந்தம் எல்லாம் இனி நாமளாக இருப்போம்'' என பேசி விஸ்வநாதனின் எண்ணத்தை கேட்க, ''உனக்கு நான் இந்த ரீஷன்னால தான் ராமை மறுக்கறேன் என்று நினைச்சியா?''

''பின்ன அது இல்லையா?'' என்றதும் அவர் தலையை ஆம் என்பது போல செய்ய, ''அப்போ என்ன காரணம்?''

''இப்போ இருக்கற நட்பு உறவா மாறி அதுக்கு பிறகு சண்டை பிரிவு என்று வந்துச்சு என்றால் அதனை தாங்க முடியாது. அதுவும் ஒரே மகள்.. உன் மகன் எப்படி பிடிவாதமா அதே போல ஸ்ரீராம் ஒரு விதமான அழுத்தக்காரன். என்ன உன் மகனை போல கோவக்கரான் இல்லை... ஆனா மற்றது எல்லாம் அதே மாதிரி தான். அதனால் தான் யோசிச்சேன்''

''புரியலை அதனால் என்ன?''

''உன் மகன் பேச கூடாது என்று முடிவு எடுத்தா நம்ம அம்மா என்று கூட பார்க்கலை... அவன் விரும்பின பெண் பவித்ரா இருந்தாலும் அவளிடம் லவ்வுக்கு சம்மதம் வாங்கும் முன்னவே அவளை கோவத்தில் கன்னத்தில அறைந்தவன் அதே மாதிரி ராமும் ஒரு கட்டத்தில் ஏதாவது பிரச்சனை என்றால்... யோசிச்சு பாரு தனுவை நம்ம கூட பேச கூடாது என்று சொல்லிட்டா? அவர்களின் உறவும் பேசாம நட்பு பாதிச்சுதுன்னா? நானும் நந்தனும் இன்னும் ப்ரெண்ட்ஸ்... அதே போல இருக்கனும்... இவர்களால் முடியுமா? இவங்களும் சைல்ட்உட் காலத்தில் இருந்தே ப்ரெண்ட்ஸ் தான். ஆனா இதுவரை நம்மகிட்ட சொன்னாங்களா? ஏன் ஏதோ பிடிவாதம்? போட்டி நீ முதலில் என் வீட்டுக்கு வருவியா? நான் வருவேனா? என்று அதுக்கே அப்படின்னா பிரச்சனை என்றால்...'' என்று விஸ்வநாதன் முடிக்க, ''எனக்கு தலையே சுத்துது. ஆனா என்னால அஸ்வின் பேசாம இருப்பதை தாங்க முடியலை. எதுவா இருந்தாலும் அஸ்வின் ராம் பிரச்சனை அவங்க பார்த்துப்பாங்க. நாம தன்யா ஸ்ரீராம் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்'' என்றார் ராதை.

''உன் மகன் பேசாதது அவ்ளோ கஷ்டமா?'' என்ற விஸ்வநாதனை ராதை முறைக்க அவரோ குறுஞ்சிரிப்பில் நகர்ந்தார்.

அங்கு நிஷாந்தினி அப்பொழுது தான் ''ராம் ஒரு பொண்ணை விரும்பறான்'' என்று கூறி முடிக்க சித்திக் ஆர்வமாக ''யார் அந்த பெண்?'' என கேட்க நிஷாந்தினியோ ''இப்போ சொல்ல மாட்டேன் அவன் அப்பறம் திட்டுவான்... இன்னோர் நாள் சொல்றேன்'' என சொல்லி சிரித்தாள்.

அதற்கு சித்திக்கோ ''ஹ்ம்ம் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு உன் தம்பியை சீக்கரம் கல்
யாண சாப்பாடு போடா சொல்லு'' என அவரும் கூடவே நகைத்தார்.

பெண் தன்னை அடித்த அஸ்வின் என்றால்? சித்திக் எவ்வாறு எண்ணுவான்?

பிரவீணா தங்கராஜ்.
 
Top