அத்தியாயம்-29
நாட்களில் வேகமாக சென்றன. பெரும்பாலும் தனு ரிப்போர்ட் ராமின் கைக்கு சேராமல் பார்த்துக் கொண்டாள். அப்படியே அவனிடம் காட்டினாலும் புரியாத மாத்திரை சீட்டு மட்டும் காட்டினாள்.
ராமின் துணை இருப்பதால் ராதை பெரிதாக தனுவின் ரிப்போர்ட் எல்லாம் பார்க்கவில்லை.
மாதாந்திர செக் அப் மட்டும் சென்று குழந்தை நலனை கேட்டு தெரிந்து கொள்வாள். ராதை வீட்டிலும் விகாஷ் நேத்ரா பார்த்து கொண்டு மேலும் பவித்ரா வேறு மீண்டும் கருவுற்று இருப்பதால் அவளையும் கவனிக்க என நாட்கள் பறந்தன.
தன்யா எப்பொழுதும் போல ராமின் கைகளால் சாப்பிடுவதால் நிறைவாகவே சாப்பிட்டாள்.
சில நேரம் ராம் ஜூஸ் போட்டு வைத்து செல்வான். நடுவில் செமஸ்டர் முடிய லீவும் வந்து சேர முழு நேரமும் வீட்டில் இருந்தாள். தன்யா தனியாக இருப்பதற்கும் பயந்து ராமிடம் ''ராம் நாம கொஞ்ச காலம் அம்மா வீட்ல இருக்க முடியுமா?'' முகத்தில் நடனமாடும் முடிக்கற்றையை எடுத்து காதில் ஒதுக்கி ''ஏன் டா உனக்கு அம்மா வீட்டுக்கு போகணும் போல இருக்கா? நான் உன்னை நல்லா பார்த்துக்கலையா?'' என்று வருத்தமுடன் கேட்டான் ராம்.
''அப்படி இல்லை ராம். வீட்ல எனக்கு ரொம்ப தனியா இருக்க பய.. இல்லை போர் அடிக்கு அங்க எல்லோரும் இருப்பாங்க எனக்கு பொழுது போகும். காலேஜ் வேற முடிஞ்சதால் ரொம்ப நேரம் தனியா இருக்கேன்'' என்றாள் தன்யா.
''சரி நீ போய் தங்கு..''
''நீங்களும் தங்கினா... அங்க தங்கறேன்... இல்லை என்றால் வேண்டாம். எனக்கு உங்களை பிரிய மனசு இல்லை'' என்றாள்.
சிறிது நேரம் யோசித்தவன். ''சரி முடிஞ்ச அளவு கூட தங்க பார்க்கறேன். ரொம்ப வேலை என்றால் போனில் சொல்லிடுவேன் அப்பறம் இங்க வந்துடுவேன். நடுவில் நடுவில் மட்டும் ஓகே வா'' என்றதற்கு ஹ்ம்ம் என வேகமாக தலையை ஆட்டினாள்.
நடுவில் நிஷாந்தினி குழந்தைக்கு பெயர் சுட்டும் நாளும் வந்து போனது. ரித்விக் என்ற பெயரினை சூட்டினார்கள்.
தன்யா வயிறும் வளர்ந்தன அவளின் பயமும் வளர்ந்தன. விகாஷ் நேத்ரா குறும்புகள் கண்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
அன்று காலையில் மீண்டும் அஸ்வின் மேலிருந்தே பவித்ரா பவித்ரா என கத்தி கூப்பிட முன்பு போலவே என்ன என்று கீழே இருந்தே கேட்க ''என் ஐ.டி கார்டு காணோம்'' என்றான்.
பவித்ரா முறைக்க, ''ஏய் நிஜமா காணோம் டி வந்து தேடி கொடுத்துட்டு போ...'' என்றதற்கு ''இரு பைவ் மினிட்ஸ்...'' என ஏறினாள். ''நீ கண்டுபுடிச்சு எடுத்துக்கொண்டு வா எனக்கு லேட்டா ஆகிடுச்சு.... நான் பிரேக் பாஸ்ட் முடிச்சுடறேன்'' என இறங்க, பவித்ராவோ அறையில் எங்கு எல்லாமோ தேடி பார்த்து ஓய்ந்தாள்.
ஏதோ நினைவு வந்தவளாக இங்க இருக்குமோ என நேத்ரா விளையாட்டு கூடையில் தேட அங்கே ஐ.டி கார்டு இருந்தன.
எடுத்துக் கொண்டு கீழே இறங்கினவளிடம் ''எங்க இருந்துச்சு நான் தேடினபொழுது கிடைக்கலை...''
''அது எப்படி கிடைக்கும் நீங்க அந்த இடத்தில தேடி இருக்க மாட்டீங்க''
''அப்படி என்ன சீக்ரெட் பிளேஸ்?'' என்றான் கடைசி உணவினை வாயில் வைத்தபடி ''ஹ்ம்ம் உங்க பொண்ணு விளையாட்டு கூடையில்....'' என்றதும் அங்கிருந்த எல்லோரும் சிரிக்க ''சரி என் மொபைல்...''
''அது உங்ககிட்ட தானே இருந்துச்சு...''
''அது.. ஆஹ் நேத்ராகிட்ட இருக்கு.. குட்டிம்மா அப்பா போன்'' என்று கேட்க அவளோ போனை கொடுப்பது போல காட்டி வேகமாக தண்ணிர் ஜக்கில் போட்டுவிட்டு சிரித்தாள்.
''ஏய் ஏய் குட்டிம்மா...'' என்று அவன் பதற ஜக்கில் போட்டுவிட்டு துள்ளி குதித்தவளை கண்டும் பவித்ராவையும் பார்க்க பவித்ராவோ சிரிப்பை அடக்குவது புரிந்தது.
அஸ்வின் முதலில் முறைத்தவன் பார்வை கொஞ்சமாக புன்னகை புரிய, பவித்ரா சிரிக்க அடுத்த நொடி வீடே சிரிப்பில் மிதந்தது.
ராமிற்கு வயிற்றை பிடித்து சிரிக்க ''டேய் உன் மகனும் மகளும் இதை விட உன்னை டார்ச்சர் பண்ணி உன்னை ஆபிஸ்கே போக விடாம பண்ணுவாங்க அப்போ இதே மாதிரி சிரிப்பேன் பாரு'' என்று கிளம்பினான்.
தனுவோ, 'அஸ்வின் அண்ணா எப்படி சொன்னார் மகன் மகள்.' என்ற சிந்தனையில் மூழ்கினாள்.
நிஷாந்தினி கவனிக்க தனியாக ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்தமையால்... இலகுவாக போனது. ராம் அஸ்வின் வீட்டில் தங்கினாலும் தன்யாவுக்கு ஊட்டிவிட மறப்பதில்லை. யார் இருந்தா எனக்கு என்ன? நான் என் தன்யாவுக்கு ஊட்டி விடறேன். நீ என்கிட்ட முதல் முதலா கேட்டது இது அதை நான் எப்பவும் முடிஞ்ச அளவு செய்வேன் என்பான்.
வீட்டில் எல்லோரும் இருப்பினும் இதில் தலையிடுவதில்லை. ராதை மட்டும் இவ இன்னும் குழந்தை மாதிரி தாங்கறார் மாப்பிள்ளை.... இவரை போய் வேண்டாம் என்று சொல்ல நினைத்தேனே என சொல்லி வருந்துவார்.
பவித்ரா இம்முறை ஆண் மகவினை பெற்று எடுத்தாள். அஸ்வின் போன முறை போல அழ எல்லாம் செய்யவில்லை அதை விட மிக கடினமான பொறுப்பு நேத்ராவை சமாளிக்க திணறினான்.
''என்ன அச்சு நீ கேட்ட மாதிரி பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு ஓகே தானே." என்று பவித்ரா மயக்கத்தில் கேட்க, அவளின் நெற்றியில் இதழ் பதித்து "வேற என்ன டி வேணும் எனக்கு மூணு குழந்தை போதும்'' என்றான்.
''அடேய் இன்னும் ஒன்றா?'' என பவித்ரா கேட்க, தலையை இல்லை என்பது போல செய்து ''நீ நேத்ரா அப்பறம் இந்த புது வரவு'' என பையனை காட்டி ''சோ மூன்று குழந்தை'' என்றான்.
பவித்ரா மென்னகை புரிய அவள் புன்னகையில் அவனும் கலந்தான். ''நீ என்ன நினைச்ச?'' என்றான் குறும்போடு.
ராமிற்கு எப்பொழுது தனக்கும் இந்த தருணம் வாய்க்கும் என்றே காத்திருந்தான்.
---
சில மாதங்கள் பறந்தன.
அடுத்து தன்யாவுக்கு கோலாகலமாக ஒன்பதாம் மாதம் வளைக்காப்பு விழா நடை பெற்றது. கை வளையல் குலுங்க... கன்னங்கள் சந்தனம் மிளிர இருந்தாலும் அவளுக்குள் பயமே அதிகம் இருந்தது. பவித்ரா குழந்தைக்கு தர்ஷன் என்றே பெயரிட்டு இருக்க அந்நாளிலும் நகுலன் வந்து சேர்ந்தான்.
ராமிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அஸ்வின் நகுலன் பேச்சில் ராம் தன்னிடம் இருந்து அஸ்வின் நட்பு தனக்கு மட்டுமே என்று மீண்டும் தோன்றியது.
சிறு வயதிலே இருந்து இருவரின் நட்பில் புதிதாக வந்த நகுலனை ராமின் மனம் ஏற்க தயாராகவில்லை.
அஸ்வின் மற்றவர்களை பார்க்க செல்ல நகுலன் ராமிடம் வந்து ''ஹாய் ஸ்ரீ எப்படி இருக்கீங்க? என்று கேட்க ''பைன்'' என திரும்ப ''சாரி என் மேல கோவமா இருக்கீங்களா? இந்த முறையும் உங்க கம்பனி கோட் பண்ணிய அமௌண்ட் விட கொஞ்சமா லீட் பண்ணி சதிஷிற்கு நான் ப்ராஜெக்ட் வாங்கி கொடுத்ததால்...'' என்று கேட்டா.
''இல்லை... உங்க ப்ரெண்ட் சதிஷ் அவருக்கு நீங்க ஹெல்ப் செய்யறீங்க நான் இப்போ கொஞ்ச நாளா பிசினெஸ் எல்லாம் ரொம்ப தூரமா வேண்டாமே என்று தான் விட்டுவிட்டேன். என் மனைவியை கூட இருந்து பார்த்துக்க'' என்றான் ராம்.
''ஓஹ் நான் உங்க பிசினஸ் கெடுத்துட்டேன்னு நினைச்சேன்... சாரி... உங்ககிட்ட பேசி ரியலைஸ் பண்ணனும் என்றிருந்தேன். பட் இப்போ தான் நேரம் வந்து இருக்கு''
''லுக் நகுலன் என் பிஸ்னஸ் எனக்கு பெரிசு இல்லை... எனக்கு என் அஸ்வின் பிரென்ஷிப் மட்டும் தான் முக்கியம்.
நீங்க பிஸ்னஸ்ல என்ன வேண்டுமெண்டாலும் என்னை தோற்கடிக்கலாம், எனக்கு அது பிரச்சினையே இல்லை ஆனா என் அஸ்வினுக்கும் எனக்கும் இருக்குற நட்பில் குறுக்கே வராதீங்க. அது எனக்கு பிடிக்கலை... ஏற்கனவே அஸ்வினுக்கு எனக்கும் இதுல சின்ன மனக்கசப்பு... அவன் அதை மறந்துட்டான் எனக்கும் அது நினைவு வராது... ஆனா உங்களை பார்க்கும் பொழுது என்னால நிம்மதியா இருக்க முடியலை...
உங்களுக்கு தான் அப்பா அம்மா பாட்டி அக்கா மாமா குழந்தைகள் அத்தை ஒய்ப் பிள்ளைகள் என்று இருக்காங்க.
எனக்கு என் அஸ்வின் மட்டும் தான் உறவு. ப்ளீஸ் அவன்கிட்ட இருந்து விலகி போங்க... நான் இதுவரை யாரிடமும் மனம் வருத்தம் செய்யற மாதிரி நடந்துக்கிட்டது இல்லை ஆனா முதல் முறையா உங்க விஷயத்தில் இப்படி பேசறேன்.
சாரி... எனக்கும் இதை ரொம்ப நாளா உங்களை பார்த்து பேசணும் என்றிருந்தேன் இப்போ தான் நேரம் அமைஞ்சது'' என்று சொல்ல நகுலன் முகம் வருத்தம் பூசியது.
''சாரி... ஸ்ரீ என்னை மீறி உங்களை காயப்படுத்தி இருந்தா...'' என கிளம்பினான். நகுலுக்கு ஸ்ரீ சொல்லியது போல எல்லா உறவும் இருந்தாலும் நட்பில் சொல்லி கொள்வது போல நெருங்கிய நண்பன் இதுவரை யாருமில்லை என்பதே உண்மை.
அஸ்வினிடம் அந்நட்பை உணர்ந்தான் ஆனால் ஸ்ரீராமுக்கு பிடிக்கவில்லை என்றதும் அப்படியே கிளம்பினான்.(இந்நிகழ்வு... தொடர்ச்சி *காதலாழி* கதையில் சொல்வேன்...)
---
நாட்கள் மீண்டும் இயல்பாய் போக தன்யா ராதையிடம் ''அம்மா... நான் இன்னிக்கே ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டா?'' என்றாள்.
''என்ன விளையாடறியா? வலி வந்து போனாதான் ஏற்றுப்பாங்க. இல்லை கொடுத்த நாள் வரை காத்திருக்கணும்'' என நகர்ந்தார். பேசாம யாரிடமாவது 'வயிற்றில் இருப்பது ஒரு குழந்தை இல்லை இரண்டு என்று சொல்லிடலாமா?' என குழம்பி தவித்தாள்.
எப்பொழுதும் ஸ்ரீராமுக்கு கஷ்டம் தான் கொடுத்திருக்கேன். அவர் அளவுக்கு என்னால பாசம் காட்ட தெரிலை. ஆனா பயத்தை கொடுக்க விரும்பலை. என்னாலேயே இதை எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரிலை.
பிரசவம் வேற சிக்கல் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. அப்பவே சொல்லியிருந்தா... ராம் கலைக்க கூட சொல்லி இருப்பார். இப்பவும் அவரின் சந்தோசத்தை கலைத்து பயத்தை தர விரும்பவில்லை. அம்மாகிட்ட சொல்லலாம் என்றாலும் எப்படியும் எல்லோருக்கும் தெரிஞ்சுடும். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களா தெரிஞ்சுக்கட்டும். ஆனா இந்த குழந்தை வலி வருவதற்குள் அட்மிட் ஆக சொன்னாங்களே... அந்த டாக்டர் வேற ஊருக்கு போயாச்சு இப்போ எப்படி டவுட் கேட்க...?
பேசாம நிஷாந்தினி அண்ணி விட்டுக்கு போகலாம் என்றாலும் அவங்களும் ரித்விக் வச்சிக்கிட்டு இருப்பாங்க நான் போய் எதுக்கு தொந்தரவு? இப்போ என்ன செய்ய... என யோசித்தவள் ராமிடம் மருத்துவமனையில் அட்மிட் செய்வதை பற்றி கேட்போமா?' என்று தோன்ற அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
இரவு வர நேரமாகும் என்பதை கூறி சாப்பிட சொல்லிவிட்டான். ஏனோ அவனின் கைகளால் சாப்பிட்டே பழகிய பிறகு அவளாக எடுத்து உண்ண பிடிக்காமல் சாப்பிட்டாள்.
அவளின் முகம் கண்டு அஸ்வின் ராதையை ஊட்டிவிட சொல்லிட, ராதையும் அப்படியே ஊட்டிவிட்டாள்.
தீடிரென அம்மா ஊட்டிவிட கண்டு தனு அழுதிடவே செய்திட, ''எல்லோருக்கும் வேலை இருக்கும் தனு... அதுக்கா அழுவாங்க?'' என சுவாதி சொல்ல ராதை ''நீ அழுதா பிள்ளைக்கு ஆகாது சாப்பிடு'' என்று ராதை ஊட்டிவிட சாப்பிட்டாள்.
இரவில் 11க்கு மேலாக ராம் வந்தவன் நேராக அஸ்வினுக்கு கால் செய்ய ''அஸ்வின் டோர் ஓபன் பண்ணுடா கீழே இருக்கேன்'' என்றதும் பவித்ராவின் கைகளை மெல்ல எடுத்து அவளை நகர்த்தியவன் கீழே வந்து கதவை திறந்தான்.
''இன்னிக்கு கொஞ்சம் லேட்... தன்யா சாப்பிடாளா...'' என அக்கறையாய் விசாரித்தான்.
''ஹ்ம்ம் ஆனா கொஞ்சம்... நீ உள்ள வா ப்ரெஷ் ஆகிட்டு வாடா'' என்றதும் ராம் முகம் அலம்பி சிறு குளியல் முடித்து வர அவனுக்கு உணவை எடுக்க ''அங்கயே சாப்பிட்டேன் டா'' என்றதும் சூடுபடுத்திய பாலை கொடுத்தான். ''அதானே ஆப்ஷன் இல்லாம இருப்பியா...''என பாலை குடித்து முடித்தான்.
''தனு இன்னிக்கு அம்மா ஊட்டிவிடும் பொழுது அழுதுட்டா... ஐ பீல் ஷி இஸ் ஸ்கேர்டு...'' என அஸ்வின் சொன்னதும் ''ஹ்ம்ம் கொஞ்ச நாளா... இல்லை ரொம்ப முன்னவே.. அதுக்கு தான் இங்க கூட்டிட்டு வந்து விட்டேன். ஆனா இப்பயும் பயமா?'' என்றான் ராம்.
''சரி நீ போய் தூங்கு குட் நைட்...'' என அஸ்வின் அவனின் அறைக்கு செல்ல, ராமும் தன்யா அறைக்கு சென்றான். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க அவனுக்கு தெவிட்டவே இல்லை.
அவளின் நெற்றியில் முத்தம் வைத்து படுக்க ''ராம் லவ் யூ... உன்னை விட்டு போக மாட்டேன் போக மாட்டேன் ராம்'' என்ற உளறல் மட்டுமே இருந்தது. அதற்கும் புன்னகையுடன் மீண்டும் தலையில் முத்தமிட்டான் அவளை அணைத்தப்படி உறங்கி போனான்.
கொஞ்ச நாள் இப்படியே போக தனுவே ராமிடம் ''ராம் நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகிடவா...'' என்று சிறுபிள்ளையாய் கேட்டாள்.
''ஏன் டா அங்க மருந்து நெடி இருக்கும். உனக்கு தான் தேதி இன்னும் இருக்கே... அப்பறம் என்ன? நீ எதுக்கும் பயப்படாதே... நான் உன் கூடவே இருப்பேன். நமக்கு குழந்தை பிறக்கறவரை நான் வெளிய ரொம்ப தூரம் போகிற வேலை எல்லாம் தவிர்த்துவிட்டேன்.
சோ நீ கால் செய்ததும் பத்து நிமிஷத்தில் உன் கூட இருப்பேன் ஓகே வா'' என்றதும் ''இல்லை ராம் எனக்கு நார்மல் டெலிவரி நடக்காது. சீசரியன் தான் அதனால நாம முன்னாடியே போயிடுவோம்'' என்று கூறினாள்.
''ஏய் உனக்கு யார் ஜோசியம் சொன்னது.... உனக்கு நார்மல் டெலிவரி இல்லை என்றும் சீசரியன் என்று?''
"அது... அது அப்படி தான்...ப்ளீஸ் '' என கண்ணீர் விட, ''பயப்படாதே தன்யா... நீ எல்லாரையும் எதிர்த்து பேசற ஆளு செம போல்ட் என்று நினைச்சு இருக்கேன். இங்க பாரு நான் இருக்கற வரை உனக்கு எதுவும் ஆகா விட மாட்டேன் ஓகே வா'' என்றிட, ''ம்' என்றே சொல்லி முடித்தாள்.
நாட்களின் நெருக்கம் வர வர பயத்தின் அளவுகோல் அதிகமானது அவளுக்கு... போனில் அந்த டாக்டர் கேட்டு பேச அந்த டாக்டர் இல்லை என்றாலும் வேற டாக்டர் பிரசவம் பார்ப்பார்கள் என்ற தகவல் மட்டுமே வந்தது. யாரிடமாவது வயிற்றில் இருப்பது ட்வின்ஸ் என்று பகிர்ந்தால் கூட மனம் இலகுவாக மாறிடும் என்று தவிக்க அன்றைய மனப்போராட்டத்தில் பெரிதும் சோர்ந்து போய் இருந்தாள்.
''என்னாச்சு தன்யா? எதுக்கு சோர்ந்து தெரியரை குடிக்க ஏதாவது எடுத்து வரவா'' என்ற பவித்ரா குரல் கிணற்றில் இருந்து கேட்பது போல தோன்ற அப்பொழுது தான் தனக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வு செல்கின்றது என தனு அறிந்தாள்.
''அண்ணி அண்ணி... ஹாஸ்பிடல் போகணும் ட்வின்ஸ்.. வயிற்றில் இரண்டு... உயிர் இருக்கு..'' என்று திக்கி திக்கி கூறி முடிக்க வீட்டில் அப்பொழுது பார்த்து யாருமே இல்லை. ஆகாஷ் விஸ்வநாதன் அஸ்வின் ராம் நால்வருமே அலுவலகம் சென்று இருந்தார்கள்.
சுவாதி ராதை வரும் நேரமே இருக்க முதலில் ராமிற்கு போன் செய்ய அது ரிங்க் ஆகி கட் ஆனது. அடுத்து அஸ்வினுக்கு போன் செய்ய, ''என்ன பச்சரிசி?''
''அஸ்வின் தன்யா மயக்கமா ஆகறா... ஏதோ ட்வின்ஸ் இரண்டு உயிர் அப்படி என்று உளறுறா... ஒரு வேளை ட்வின்ஸ் பேபியோ என்னவோடா கொஞ்சம் சீக்கிரம் வா ஸ்ரீராமுக்கு போன் செய்தேன்.. இரு இரு செகண்ட் லைன் வந்துட்டான். நீ கிளம்பி வா'' என ராமின் போனை ஆன் செய்தவள் ''ராம் கொஞ்சம் சீக்கிரம் வா ஹாஸ்பிடல் போகணும்'' என்று வைத்து விட்டாள்.
முதலில் வேகமாக வந்தவன் அஸ்வின் அவளை அழைத்து காரில் ஏற்ற ராம் வந்து சேர்ந்தான். அஸ்வின் பவித்ரா முன் இருக்கையில் அமர கையில் பிறந்த நான்கு மாத குழந்தை தர்ஷன் இருக்க மற்றும் நேத்ரா இருவரையும் வைத்திருக்க, பின் சீட்டில் ராம் தனு இருவரும் இருந்தார்கள்.
''ராம் இரண்டு உயிர்டா எனக்கு பயமா இருக்கு...'' என அவனின் சட்டையினை பிடித்து அழுதவளை எப்படி சமாதானம் படுத்துவதே என்று புரியாமல் அவனும் பயந்தான்.
ஆனால் அப்பொழுதும் கூட அவனுக்கு இரண்டு உயிர் என்பது தனுவும் குழந்தை என்றெண்ணி இருந்தான். ''உனக்கு ஒன்னும் இல்லை தனும்மா... இதோ ஹாஸ்பிடல் வந்துட்டோம்... கொஞ்சம் வலி பொறுத்துக்கோடா'' என்று சொல்ல மருத்துவமனை வந்தடைந்தார்கள்.
வேகமாக லேபர் வார்டு சென்று துரிதப்படுத்த... ''சிஸ்டர் அவங்களுக்கு ட்வின்ஸ் என்று டவுட் நீங்க கொஞ்சம் டாக்டர் கிட்ட சொல்லுங்க என்றதும் தலையில் பிடித்து அழுது இருந்த ராம் உயிரே போவது போல உணர்ந்தான்.
ட்வின்ஸ் என்றால் முன்னாடியே சொல்லி இருப்பாங்கம்மா ரிப்போர்ட்ல இருக்குமே'' என்றதற்கு... இல்லை அவங்க மறைச்சு இருப்பாங்க போல கொஞ்சம் எதுக்கும் டாக்டர்கிட்ட சொல்லிடுங்க'' என்று கூற ''என்ன? வயிற்றில் இருப்பது ட்வின்ஸ் என்று கூடவா தெரிஞ்சுக்காம இருப்பீங்க? என்ன சொந்தக்காரங்களோ? இதுல நிஷாந்தினி டாக்டர் ரீலேட்டிவ்' என்று அந்த நர்ஸ் முனங்கி செல்வது ராமின் காதில் அப்பட்டமாக விழுந்தது.
''டேய் அஸ்வின் கேட்டியா அவ இதை கூட சொல்லை... நான் அவளிடம் பாசமா இல்லையாடா... ஏன் என்கிட்ட சொல்லலை...'' என்று கதறினான்.
''சொந்தம் பந்தம் உறவு இல்லாதவனிடம் பொண்ணை கொடுத்தா இப்படி தான் பார்த்துப்பேன் போலடா.. அவள் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே...'' என்று அழுதவனை என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று அஸ்வின் அவனின் கைகளை பற்றி ''டேய் அவ சொல்லாததுக்கு நீ என்ன செய்வ''
''இல்லை டா அவள் சொல்லி இருக்கனும்... சொல்லி இருந்தா அவளின் பயத்தை களைந்து இருப்பேன் இல்லை இந்த குழந்தையே வேண்டாம் என்று இருந்துயிருப்பேன்'' என்றான்.
''முட்டாள் மாதிரி பேசாதே ராம்...இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் உங்கிட்ட பேசுவா... அதுவும் உன் குழந்தையோடு...ப்ளீஸ் பீ காம் டா'' என்றான்.
''இல்லை அஸ்வின் அவ சொன்னா ராம் என்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணு என்று நான் தான் அவ சொல்றதை பெரிதா எடுத்துக்கலை...'' என்று சொன்னவனின் நிலை கண்டு ராதையும் அதிர்ந்தாள்.
இதே போல தனு தன்னிடம் சொல்லி அவள் பேச்சை தானும் நிராகரித்தது நினைவு வர ராம் தொடர்ந்தான் புலம்பலை... ''அஸ்வின் முன்ன பவித்ரா முதல் பிரசவத்தில் நீ அழுதியே அப்போ எனக்கு உன் அழுகை வித்தியாசமா இருந்தது. அப்போ நீ சொன்னியே... 'வார்த்தையால் மட்டும் விவரிக்க முடியாதுடா... லைப்ல வரும்பொழுது புரியும்' என்று இப்போ புரியுது டா... எனக்கு பயமா இருக்குடா... தன்யா இல்லாமல் இனி வாழவே முடியாது என்ற நிலையில் இருக்கேன்டா...'' என்று அழுதவனை பவித்ரா வந்து ஓங்கி ஒரு அரை அறைந்தாள்.
''என்னடா நினைச்சுகிட்டு இருக்க.. சும்மா அழுதுட்டு இருக்கற எல்லோரையும் கஷ்டப்படுத்திகிட்டு... முதலில் நம்பு.. உன் தன்யா திரும்ப வருவா. அதுவும் உன்னோட ட்வின்ஸ் குழந்தையோட... புரிதா...'' என்றதும் தான் சுற்றி இருப்பவர்களை கண்டான்.
விஸ்வநாதன்-ராதை சித்திக்-நிஷாந்தினி, ஆகாஷ்-சுவாதி என்று நிற்பதை... அதன் பின் அமைதியாக இருந்தாலும் அவனின் கண்கள் அந்த அறையையே இமைக்காமல் பார்த்து இருந்தது