கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-30 (முடிவுற்றது)

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்- 30

அந்த பக்கமும் இந்த பக்கமும் நர்ஸ் உடை அணிந்து சிலர் ஓடி ஓடி சென்று வருவதை கண்டு அஸ்வினே பயப்பட ஆரம்பிக்க, அங்கிருந்த எல்லோருமே ட்வின்ஸ் என்று செய்தியில் ஆடி போய் இருந்தார்கள்.

''ஏய் இன்னிக்கு நம்ம ஹாஸ்பிடலில் ட்வின்ஸ் பிறந்து இருக்காங்கப்பா'' என்ற குரலில் ராம் நிமிர்ந்தான்.

''அவங்களுக்கு இப்ப எப்படி இருக்காங்க?'' என ராம் அந்த நர்ஸ் பெண்ணிடம் கேட்க, ''சார் ஸ்டிர்சஸ் போட்டுட்டு இருக்காங்க கவலை இல்லை'' என்று கூலாக சொல்லி நகர அப்பொழுதும் அவளை காணும் வரை உயிர் அவனிடம் இல்லை.

அரை மயக்கத்தில் தன்யா இருப்பதை கண்டு அவளின் அருகே அமர்ந்தான் அவளின் முதல் இமை திறப்பிற்காக காத்திருந்தான்.

அதுவரை குழந்தைகளின் முகம் காண மாட்டேன். அவளோடு சேர்ந்து பார்த்துக்கறேன் என சொல்லிவிட்டான்.

'அம்மா பாப்பா தம்பி மாதிரியே இருக்கு...?'' என்று மழலை குரலில் நேத்ரா சொல்லி கொண்டு இருக்க, எல்லோருமே அந்த இரட்டையர்களை கண் கொட்டாமல் பார்த்து வியந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மணி நேரம் கழித்து இமையை திறந்தவளை கண்டு அப்பொழுது தான் பெருமூச்சை வெளியிட்டான் ஸ்ரீராம்.

''குழந்தைகள்...பார்... த்... திங்களா...?'' என்று தன்யா கேட்க, ''இல்லை...'' என்றான் ராம்.

''என்னாச்சு குழந்தைகள் சத்தம் கேட்டுச்சே...'' என பயந்தாள்.

''ஏய் பயப்படாதே... குழந்தைகள் நல்லா இருக்காங்க அத்தைகிட்ட இருங்காங்க..'' என்றான்.

''எப்படி இருக்காங்க?'' என்று ஆர்வமாய் கேட்டாள்.

''தெரிலை நான் இன்னும் பார்க்கலை... உன்கூட சேர்ந்து பார்த்துக்கறேன் என்று சொல்லிட்டேன்'' என்று சட்டையில் கண்ணீரை துடைத்தான்.

''குழந்தைகளை கூட்டிட்டு வர சொல்லுங்க...'' என்றதும் வெளியே சென்றவன் '' அத்தை நிஷா தன்யா குழந்தைகளை பார்க்கணுமாம்... '' என்றதும் இரு வெண்ணிற டவலில் வெள்ளை ரோஜாவாக கண்கள் இரண்டும் திராட்சை போல இருக்கும் குழந்தையை இருவரும் கண்டு வருடினார்கள்.

''ஏன் தனு வீட்ல யார்கிட்டயாவது உன் ரிப்போர்ட் காட்டி இருக்கலாம் இல்லை... எல்லோரும் பயந்துட்டாங்க அட்லிஸ்ட் ட்வின்ஸ் என்றாவது சொல்லி இருக்கலாம்ல...'' என்று சுவாதி கேட்க ''ஹாஸ்பிடலை ஒரு வழி ஆகிட்டான் ஸ்ரீராம்'' என்று பவித்ரா சொல்ல, ''இப்போ எல்லாம் ட்வின்ஸ் இல்லை த்ரைஸ் பைஸ் எல்லாம் கூட சர்வ சாதாரணம் தனு... முதலில் சொல்லி இருந்தா உன் பயத்தை களைந்து, பேசி புரிய வைத்து இருப்போம்'' என நிஷாந்தினி எடுத்துரைத்தார்.

''போதும் அவள் சொல்லலை என்று குற்றம் சுமத்தாதீங்க. சின்ன பொண்ணு தானே. என் தனு நல்லபடியா வந்துட்டாங்கல அப்பறம் என்ன'' என ஸ்ரீராம் தன்யாவுக்கு ஆதரவாக பேசினான்.

''அடப்பாவி உனக்காக தானே இப்படி பேசினோம் அப்படியே மாற்றிட்ட... என்ன என்ன டயலாக் விட்டான்'' என பவித்ரா சொல்ல, ''போதும் போதும் இது என்ன ஹாஸ்பிடலா வீடா போங்க கொஞ்ச நேரம் தூங்கட்டும். டாக்டர் நிஷாந்தினி உங்களுக்கு தெரியாதா?'' என தன்யாவிற்கு பிரசவம் பார்த்த மற்றொரு டாக்டர் திட்டி அனுப்ப எல்லோரும் நிறைவோடு வெளியேறினார்கள். ராதை ஸ்ரீராம் மட்டும் அங்கே இருந்து கொண்டார்கள்.

ஆறு மாதங்கள் பின்னர்....

ஸ்ரீராம் ஆட்டோவிலிருந்து அஸ்வின் வீட்டுக்கு வந்திறங்கினான். ''என்னடா ஆட்டோவில் வர்ற..? கார் என்னாச்சு?'' என அஸ்வின் கேட்க ''அதை ஏன் டா கேட்கற? கார் சாவி தொலைந்து மூணு நாள் ஆகுது'' என்றான் கவலையாக.

''ஸ்பேர் கீ இருக்குமே..?''

''அதுவும் தொலைந்து போச்சு''

''அது எப்படி டா...?''

''அஸ்வதிகிட்ட தான் கொடுத்தேன் அவ எங்க போட்டுட்டா என்று தெரிலை'' என்று ராம் கூற, அஸ்வதி தனது நண்பன் அஸ்வின் பெயரினை கொண்டு வைத்தது.

''சரி பைக் என்னாச்சு? என்றான் அஸ்வின்.

''ஹ்ம்ம் அது விஷ்ணுகிட்ட தான் கேட்கணும்'' என்றதற்கு அஸ்வின் சிரித்தான்.

''என்னடா சிரிப்பு..ஓஹ் பழைய ஞாபகம்... டேய் டெய்லி அஸ்வதி-விஷ்ணு தொலைக்கார பொருள் எல்லாம் எங்க போகுதுன்னே தெரியலை...ஒரே மர்மமா இருக்கு'' என்றதும் வீட்டில் இருக்கும் எல்லோரும் சிரிக்க, ''இதாச்சும் பரவாயில்லை.... ஆபிஸ்க்கு இவர் ஆட்டோவில் தான் போறார்.

அங்க ரோஷன் கூடஏன் சார் நீங்க முதலாளி ஆட்டோவில் வர்றீங்க என்று கேட்கின்றார்... ஒரு நாள் ஆபிஸ்க்கே போகலை...ஒரே சிரிப்பா இருக்கு'' என்று தன்யா கூற அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் போனது.

''டேய் மச்சான் நீயுமா சேர்ந்து சிரிக்கிற... எல்லாம் எங்க போய் இருக்கும் என்று கெஸ் பண்ணி சொல்லு டா...'' என்று ராம் அஸ்வினிடம் ஆலோசனை கேட்க, ''அவங்க விளையாட்டு கூடை?'' ''அத தான் முதலில் ஆராய்ந்தேன். அங்க இல்லை...''என்றான் அலுப்புடன்.

''கப்போர்ட பெட் அடில...'' என்றாள் பவித்ரா.

''அண்ணி அங்கயும் பார்த்துட்டோம்...நோ யூஸ்'' என தன்யா சொல்ல ஆகாஷோ ''ஏய் சுவாதி உனக்கு ஏதாவது ஐடியா?'' என்றான்.

''ஐயோ இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...'' என ஜகா வாங்கினாள். பின்ன விகாஷ் ஒரு முறை ஆகாஷின் வாட்சை வாஷ் பேசினில் போட்டு அலசி கொடுத்தானே... நல்ல வேளை பாத் ரூமில் போடலை என ஆகாஷ் சொல்லியதை நினைவு வர சிரிக்க, ஆகாஷ் அமைதியாக நழுவினான்.

''உன் வீட்ல குஷன் சோபால அதுல கேப்ல இருக்கா பாரு... என்றதும் தன்யா ஸ்ரீராம் இருவருமே ''சே இந்த இடத்தில தேடலையே...'' என சொல்ல ராதை விஸ்வநாதன் கூட இம்முறை சிரிப்பை அடக்காமல் சிரித்தனர்.

அப்பொழுது நிஷாந்தினி-சித்திக் இருவரும் ரித்விக் அழைத்து வர, வீடே கோலாகலமாக இருந்தது.

சுவாதி ஆகாஷ் மகன் விகாஷ், அஸ்வின்-பவித்ரா மகள் நேத்ரா மற்றும் மகன் தர்ஷன், நிஷாந்தினி-சித்திக் மகன் ரித்விக், தன்யா-ஸ்ரீராம் இவர்களின் இரட்டை குழந்தை மகள் அஸ்வதி மகன் விஷ்ணு என்கின்ற விஷ்ணுவர்தன் என்று ஆறு செல்வங்களும் ஒரே வட்டம் வடிவம் கொண்டு சூழ்ந்து விளையாட, அதனை பெரியவர்கள் அவர்களின் சேட்டையினை கண்டு ரசித்தார்கள்.

ராமின் போன் அடிக்க, எடுத்தவன் அவர்கள் வீட்டில் பணி செய்யும் லட்சுமி ஆண்ட்டி பேசினார்கள். ''தம்பி நீங்க சொன்னது போல வீட்டில் எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு... சாவி எப்பவும் போல் வச்சிட்டு போகவா தம்பி'' என்றதற்கு ''ஆஹ் வச்சிட்டு போங்க ஆன்ட்டி... ஆன்ட்டி ஒரு நிமிஷம் கொஞ்சம் சோபா இடுக்கில் கையை விட்டு ஏதாவது பொருள் இருக்க என்று செக் பண்ணி சொல்லுங்க...'' என்று காத்திருந்தனார்.

அந்த லட்சுமி ஆன்ட்டியோ ''இருங்க தம்பி பார்க்குறேன் என ஆராய... ''ஆன்ட்டி எதாவது இருக்கா?'' என்று அஸ்வினை பார்த்து கேட்க, ''தம்பி ஏதோ கீ செயின் நாலு இருக்கு, அப்பறம் பேனா... காசு... இரெண்டு மூணு விளையாட்டு பொருள்.. அப்பறம் நகவெட்டி... இப்படி நிறைய இருக்கு தம்பி'' என்றதும் ''சரி நீங்க அதெல்லாம் எடுத்து டேபிளில் வச்சிட்டு கிளம்புங்க'' என சொல்லிவிட்டு ''மச்சான் எல்லாம் நீ சொன்ன குஷன் சோபால தான் ஒளிச்சு வச்சி இருக்காங்க டா'' என்று ராம் உரைத்தான்.

''பார்த்தியா அனுபவம் டா மாப்பிள்ளை'' என்றான் அஸ்வினும். ''ஆமா ஆமா அப்படியே மாப்பிள்ளையும் மச்சானும் இப்படியே இருங்க'' என்று தன்யா ஒழுங்கு காட்டி சிரிக்க,

''தன்யா உனக்கு ஏன் புகைச்சல் உன் தன்யஸ்ரீராம் எப்பவும் உனக்கு தான் முதல் உரிமை தந்திருக்கான். அஸ்விணுக்கு இல்லை... போதுமா'' என்று பவித்ரா சொல்ல ''அப்படியா...?'' என்று அஸ்வின் ஸ்ரீராம் இருவருமே கோரஸாக கேட்க, தன்யா இருவரையும் முறைக்க, அங்கே ஸ்ரீராம் காதல் நட்பு என்ற இரண்டிலும் வெற்றியோடு உறவாடினான்.

---------- சுபம்---------

-பிரவீணா தங்கராஜ்.
 
Top