வெற்றியின் ரகசியம்...
அர்ஜுன்…
ஆரவ் தன் சட்டையின் காலரில் மாட்டியிருந்த மைக்கை சரி செய்துவிட்டு தன் எதிரே இருந்த கேமரா மேன் சித்தார்த்தைப் பார்க்க சித்தார்த் "ஆல் தி பெஸ்ட்".. என மெதுவாக வாயசைத்தான்.
ஆரவ் புன்னகையுடன் "வணக்கம் மக்களே வெல்கம் டு தி சோ.. இது உங்களின் அபிமான வெற்றியின் ரகசியம் என்ன..? நிகழ்ச்சி.. நா உங்களின் ஆரவ்.. இப்போ நம்ம நிகழ்ச்சிக்கு வர போறவங்க உலக நாடுகள் மத்தியில நம்ம தமிழ் பெண்களுக்கு மிக பெரிய பெருமைய சேர்க்க போற தமிழரசி."..
நம்ம எல்லாரும் இங்க இருந்து நிலால ஆயா வடை சுடுதான்னு பாத்துகிட்டு இருந்தா. நம்ம தமிழரசி நிலாவுக்கே போய் நிலவை ஆராய்ச்சி பண்ண போறாங்க.. சாதாரண நடுத்தர குடும்பத்துல பிறந்த நம்ம தமிழரசி எப்படி நிலவுக்கு போய் ஆராய்ச்சி பன்ற அளவு பெரிய சாதனையாளரா மாறுனாங்கன்னு தெரிச்சுக்கலாம். அதுக்கு முன்னாடி உங்க கைத்தட்டல்களால நம்ம தமிழரசிக்கு ஒரு உற்சாகமான வரவேற்பு குடுங்க."..
ஆரவ் கூறியதைக் கேட்டு நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்ட தமிழரசி அரங்கத்திற்குள் நுழைந்தாள். வெண்ணிற சுட்டியில் சிவப்பு நிற ஷால் அணிந்து எந்தவொரு ஒப்பனையுமின்றி தேவதையாக தெரிந்தவள் தனக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தாள்.
ஆரவ் "வணக்கம் தமிழரசி மக்களோட சார்பாகவும் எங்களோட சேனல் சார்பாகவும் உங்கள வெற்றியின் ரகசியம் என்ன..? நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்க்குறே."..
தமிழரசி இதழில் புன்னகை மலர "ரொம்ப நன்றி ஆரவ்.. எனக்கும் உங்க நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுல ரொம்ப சந்தோஷம்"..
ஆரவ் துள்ளல் நிறைந்த குரலுடன் "பல கவிஞர்களோட கனவு காதலியான நிலவு மேல நீங்க கால்பதிக்க போறீங்க. நீங்க நிலவுக்கு போறத நெனச்சு எந்த மாதரி பீல் பன்றிங்க."..
தமிழரசி விழியில் உயிர்ப்புடன் "கவிஞர்களுக்கு மட்டுமில்ல என்ன மாதிரி ஒரு சில பெண்களுக்கும் நிலவுதா காதலன். எனக்கு சின்ன வயசுல இருந்து நிலான்னா ரொம்ப பிடிக்கும். நிலவுக்கு போகணும் அங்க என்ன இருக்குன்னு பாக்கணும்ன்னு ரொம்ப ஆசைபட்டேன். ஆனா அது இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும்ன்னு நா சத்தியமா நினைக்கல."..
ஆரவ் "தமிழரசி சாதாரண நடுத்தர குடும்பத்துல பிறந்து அரசு பள்ளியில படிச்ச உங்களால எப்படி இவ்வளவு பெரிய சாதனைய செய்ய முடிஞ்சது. உங்களோட வெற்றியின் ரகசியம் என்ன..?"..
தமிழரசியின் விழிகளில் விரக்தியின் ரேகை படர்ந்திட தமிழரசி உணர்ச்சியற்று குரலில் "தனிமை"..
ஆரவ் குழப்பமான முகபாவனையுடன் "தனிமையா..?"..
விரக்தியாய் சிரித்தவள் "ம்ம்.. தனிமைதா என்னோட வெற்றியின் ரகசியம். கோடி ஆசைகள மனசுல சுமந்துக்கிட்டு அதை வெளிப்படுத்த முடியாத சராசரி பாவைகளில் ஒருத்தியாதா நானும் இருந்தே. ஆனா தனிமைதா என்னை சிந்திக்க செஞ்சு தைரியமா பல முடிவுகள் எடுக்க வச்சு இப்ப உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்கு"..
ஆரவ் "தனிமைக்கு இவ்வளவு சக்தியா அப்போ நானும் தினமும் தனியா உட்க்காந்து யோசிக்கிறேன் அம்பானி ஆகுறே."..
ஆரவ் கூறியதை கேட்டு மெல்லியதாய் இதழ் வளைத்து சிரித்தவள் "ஆரவ் நாம தேடி போற தனிமைக்கும் நம்மள தேடி வார தனிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. நாம தேடி போற தனிமை நமக்கு மன அமைதிய மட்டும்தா குடுக்கும். ஆனா நம்ம சுத்தி இருக்க உறவுகள் எல்லாம் நம்மள ஒதுக்கி தனிமைபடுத்தும் போது நாம அனுபவிக்கிற தனிமைதா நம்மள வலிமைப்படுத்தும்.."..
ஆரவ் "நீங்க சொல்லுறதெல்லாம் பார்த்தா வாழ்க்கை உங்களுக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்குன்னு தெரியுது. அப்படி நீங்க கத்துகிட்ட விஷயங்களை எங்களோட பகிர்ந்துகிட்டா பல கனவுகளை மனசுல சுமந்துக்கிட்டு முன்னேறி செல்ல துடிக்கிற பெண்களுக்கு மிக பெரிய உந்துதலா இருக்கும்."..
தமிழரசி "கண்டிப்பா ஆரவ்.. பல பெண்கள் தங்களோட வாழ்க்கையில சந்திக்கிற சின்ன பிரச்சனைக்கே தற்கொலை செஞ்சுக்குறாங்க இல்ல தங்களோட ஆசை, கனவு, திறமை எல்லாத்தையும் மறச்சுகிட்டு சராசரி வாழ்க்கை வாழுறாங்க. அப்படி வாழுற பல பெண்களுக்கு என்னோட வாழ்க்கை ஒரு புது நம்பிக்கைய குடுத்து முன்னேற வைக்கும்ன்னு நா நம்புறேன்."..
தமிழரசி கூறியதை கேட்டு அரங்கத்திலுள்ள அனைத்து விழிகளும் ஆர்வத்துடன் அவளை காண தமிழரசி பேச ஆரம்பித்தாள். "திருச்சி மாவட்டத்துல உள்ள ஒரு சின்ன கிராமம்தா என்னோட சொந்த ஊர். நாங்க ஒரு விவசாய குடும்பம். என்னோட சின்ன வயசுல எங்க அறிவியில் ஆசிரியர் இஸ்ரோல வேலைக்கு சேர்ந்தா விண்வெளிய பத்தி நிறைய தெரிச்சுக்கலாம். ஏன் விண்வெளிக்கு கூட போக வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க. அப்போ இருந்தே இஸ்ரோல வேலைக்கு சேருறதுதா என்னோட கனவு.
நா சின்ன வயசுல இருந்து ரொம்ப பயந்த சுபாவம் நா காலேஜ் படிக்கும் போது ஒரு பொறுக்கி என்கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னா. நா முடியாதுன்னு மறுத்துட்டே. ஆனா அவே எங்க வீட்ல வந்து என்னை பொண்ணு கேட்ருக்கா. அவன் வேற ஜாதின்னு தெரிஞ்சதும் என்னோட அப்பா அவனை அவமானபடுத்தி அனுப்பிட்டாங்க. அதோட எங்க நா அவனை காதலிக்க ஆரம்பிச்சிருவனோன்னு பயந்து என்னோட படிப்ப நிறுத்திட்டு எங்க மாமா பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணிவைக்க நெனச்சாங்க. நா கல்யாணம் வேணாம்ன்னு அழுது ஒரு வாரம் சாப்பிடாம இருந்ததால என்ன எக்ஸாம் எழுத மட்டும் அனுப்புனாங்க.
நானும் சந்தோசமா எக்ஸாம் எழுத போனேன். என்னோட கடைசி எக்ஸாமையும் நல்ல படியா முடிச்சுட்டு நா சந்தோசமா வெளிய வந்தேன். அப்போ என்கிட்ட காதலிக்கிறதா சொன்ன அந்த பொறுக்கி அவனோட ப்ரண்ட்ஸ் நாலு பேரு கூட வந்து திடிருன்னு என்னை ஒரு வேன்ல கடத்துனா. ரெண்டு நாள் ஒரு பொண்ணு அனுபவிக்க கூடாத அத்தனை கொடுமைகளையும் நா அனுபவிச்சே".. என கூறும் போதே பழைய நினைவுகளால் அவளின் உடல் நடுங்கியது.
தமிழரசி பேசுவதை இதுவரை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை விழிகளும் கலங்கி இருந்தன. ஆரவ் கைகள் முறுக்கேறி இருக்க தன் விழியில் நீர் கசிவதை மறைக்க வெகுவாய் சிரமப்பட்டான். தமிழரசி தன் எதிரே இருந்த டம்ளர் நீரை எடுத்து பருகியவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "அப்பொறம் குறிச்ச தேதியிலேயே எனக்கு பதிலா என்னோட தங்கச்சிய எங்க மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. என்னோட வாழ்க்கைய நாசமாக்குன பொறுக்கி நாய்க்கு எந்த தண்டனையும் கிடைக்கல. ஆனா எக்ஸாம் எழுத போன என்ன பாத்துதா பொம்பள பிள்ளைதா அடக்க ஒடுக்கமா இருக்கணும்ன்னு ஊரே தப்பு சொல்லுச்சு. என்னோட குடும்பமும் கூட என்னை அருவருப்பா பாத்து ஒதுக்குனாங்க.
எனக்கு ஆதரவா இருக்க வேண்டிய என்னோட குடும்பமே என்னை ஒதுக்க ஆரம்பிச்சதும் நா யாரு ஆதரவையும் எதிர்பாக்காம தனியா வாழ நெனச்சே. இரண்டு மாசம் தனியா அறையிலயே இருந்தே தனிமை எனக்கு நிறைய கத்துக்கொடுத்துச்சு நிறையா யோசிக்க வச்சது. தப்பு பண்ண அந்த நாய் வெளிய சுத்தும் போது நா ஏன் ஒதுங்கி இருக்கணும்ன்னு நெனச்சு தைரியமா வெளியே வந்தே. அந்த நேரத்துல என்னை பத்தி கேள்விப்பட்ட யாரோ ஒருத்தர் என்னோட படிப்புக்கு ஸ்பான்சர் பண்ணி படிக்க ஹெல்ப் பண்ணாங்க.
என்னோட அப்பா கிட்ட நா படிக்க போறேன்னு சொல்லும் போது அவரு பார்வையில இருந்த அருவருப்ப நெனச்சா எனக்கு இன்னும் நெருப்பு மேல நிக்கிற மாதரி இருக்கு. என்னோட அப்பா நா வீட்ட விட்டு வெளிய வாரதையே அவமானமா நெனச்சாரு. அதுனால நா மொத்தமா என்னோட வீட்டை விட்டு வெளிய வந்து படிச்சுக்கிட்டே பார்ட்டைம் வேலை பார்த்தே. அப்படியே என்னோட ஸ்பான்சர் உதவியாள படிப்படியா வளர்ந்து இப்ப இங்க இருக்கே. அப்போ என்னோட குடுப்பம் நா வீட்ட விட்டு வெளிய வாரதையே அவமானமா நெனச்சாங்க. ஆனா நா இப்போ இந்த பூமியையே விட்டு நிலவுக்கு போறதை பெருமையா பாக்குறாங்க.
என்னோட வெற்றிக்கு காரணம் எனக்கு ஸ்பான்சர் பண்ண முகம் தெரியாத அந்த நல்ல உள்ளமும் என்னோட தனிமையும்தா. தனிமை வலி மிகுந்ததுதா ஆனா நம்ம பலத்தை நம்மளையே உணர வைக்கும். நம்மள இன்னும் பக்குவப்படுத்தும். என்னோட வெற்றியின் ரகசியம் தனிமையே."..
தமிழரசி பேசி முடிக்க அந்த இடம் முழுவதையும் ஆடியன்ஸின் கரவோசம் ஆக்கிரமித்தது. பின் ஆரவ்வின் சில பல கேள்விகளுக்கு பின்பு நிகழ்ச்சி முடிந்தது. தமிழரசி ஆரவ்விடம் பேசிவிட்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேற செல்ல சித்தார்த் ஆரவ் அருகில் ஓடி வந்தான்.
சித்தார்த் "மச்சி சிஸ்டர் கிட்ட உன்னோட காதல சொல்லிட்டியாடா".. என கேட்க ஆரவ் தன்னை விட்டு பிரிந்து செல்லும் தன்னவளை விழிநீர் திரள பார்த்துக் கொண்டே இல்லையென தலையசைத்தான்.
சித்தார்த் கோபத்துடன் "போடா நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டியே. நீ எல்லாத்தையும் சொல்லிருந்திருக்கலாம்ல"..
ஆரவ் விழியில் வலியுடன் "என்ன மச்சி சொல்ல சொல்லுற நா உன்னை ரொம்ப வருசமா காதலிக்கிறேன். உங்க வீட்ல வந்து நான்தா பொண்ணு கேட்டே அதா உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாங்க. அதுனாலதா உனக்கு இப்படியெல்லாம் நடந்துச்சுன்னு சொல்ல சொல்லுறியா. என்னோட தமிழ தொட்ட நாய்ங்கள அடிச்சு கொன்னதுக்கு அப்பொறம்தா என்னோட வெறி அடங்குச்சு. அப்பொறம் என்னோட தமிழ நா கையில வச்சு தாங்க நெனச்சே. ஆனா என்னோட குற்ற உணர்ச்சி எனக்கு இடம் கொடுக்கல. அதா அவளை தள்ளி நின்னு படிக்க வச்சே.
நா பண்ணதும் சரிதா தனிமை என்னோட தமிழ ரொம்ப தைரியமான பொண்ணா மாத்திருக்கு. இப்ப வரையும் தனிமைய அவ அவளோட பலமாதா பாக்குறா. ஆனா நா என்னோட காதல சொல்லி அதை அவ ஏத்துக்கிட்டா என்னை பிரிஞ்சு நிலவுல இருக்க போற அந்த மூனு மாசம் என்னோட தமிழுக்கு தனிமை வலிய தந்து பலவீனமாக்கலாம். இனிமே என்னோட தமிழ் எந்த வலியவும் அனுபவிக்க கூடாது எல்லாத்தையும் தைரியமா எதிர்கொள்ளணும். அதோட அவளை நெனச்சுகிட்டே தினமும் நிலவ பாத்து நா அனுபவிக்கிற தனிமை கூட ஒரு அழகு தான்டா..".. என கூற சித்தார்த் தூரத்தில் செல்லும் தமிழரசியை ஒரு முறை பார்த்து விட்டு ஆரவ்வின் முதுகில் தட்டி கொடுத்துவிட்டு சென்றான்.