ksk2022-writer
Well-known member
Ksk – 47
வெள்ளிக் கொலுசின் ஓசையிலே…
அத்தியாயம்- 4
ஊரிக்காட்டுப் பிரதேசத்தில் நிறுவத்தம்பைப் பரந்த காணியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைப் பசுமையான வயல்கள் விரிந்து கிடக்க, அந்த வயல்வெளியை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடி மணற்பாதையின் முடிவில் அமைந்திருந்த நிறுவத்தம்பைப் பிள்ளையார் ஆலயத்தில் வழமையாக இடம்பெறும் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அது ஐப்பசி மாதம் என்பதாலும் தமிழ் நாட்காட்டியின் முறைப்படி பன்னிரண்டு மாதங்களிலும் ஏழாவது மாதமாக வருகின்ற இந்த ஐப்பசி மாதத்தில் நிறையப் பண்டிகைகளும் விரதங்களும் கொண்டாடப் படுவதாலும், இந்த மாதம் அடைமழைக் காலம் என்பதாலும் கோயில்கள் தோறும் விஷேச பூஜைகளும் வயல்கள் தோறும் மழைநீரும் நிறைந்து இருந்தன.
நிறுவத்தம்பைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாக நின்றிருந்த வெள்ளை எருக்கஞ் செடியில் பூத்திருந்த பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீரங்கநாயகி.
கைகள் அது பாட்டில் எருக்கம் பூக்களைக் கொய்து கொண்டிருக்க அவள் பாட்டில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
“போகிற போக்கைப் பார்த்தால் என் திருமணம் இந்த வருடம் முடிவதற்குள் முடிந்து விடும் போல இருக்கிறதே… அதற்கு முதல் என்னுடைய மனநிலையைப் பற்றி என்னாலேயே கணிக்க முடியவில்லையே… நானும் இந்தத் திருமணத்தை வரவேற்கிறேனா? அல்லது அவருடனான திருமணத்தை வரவேற்கிறேனா? தெரியவில்லையே… ஒரு வேளை அப்பா என்னிடம் வந்து வேறு யாரையேனும் இவர் தான் மாப்பிள்ளை என்று கை நீட்டியிருந்தால் நான் எதையாவது சொல்லி மெல்ல நழுவியிருப்பேன் போல… ஆனால் அப்பா வந்து அவரின் பெயரைச் சொன்னதும் மட்டும் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்… அது எல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு பெண் குழந்தையுடன் என்னைத் திருமணம் செய்து கொள்ள முன் வருபவரைத் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று இந்த அப்பாவிடம் நான் சொன்னேன். அவ்விதம் நான் சொன்னதே அந்த மாதிரி யாரும் அத்தனை சுலபமாக வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான்… ஒருவேளை நான் துளசியைத் தத்தெடுப்பது பற்றி அப்பா அவரிடமோ அவரின் குடும்பத்தினரிடமோ ஒன்றும் சொல்லவில்லையா அல்லது சொல்லியிருப்பாரா… அதற்கு முதல் அவரும் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லி இருப்பாரா? இதைப் பற்றியே யோசனை செய்ததில் தலை வலித்தது மட்டும் தான் மிச்சம்… இது பற்றி அப்பாவிடம் தெளிவாகக் கேட்டு விட வேண்டும். அதன் பிறகு தேனுவக்காவிடம் இந்த விஷயம் பற்றிப் பேசுவோம்.”
என்று கடைசியாக ஒரு முடிவை எடுத்தவள் கோவிலினுள் சென்று விட்டாள்.
அதே நேரத்தில் தன் கணவனுடன் தேனருவி பிள்ளையார் கோவிலுக்கு வரவே உட் பிரகாரத்தில் இருந்து அவளைப் பார்த்து விட்ட ஸ்ரீரங்கநாயகி வேகமாக வெளியே ஓடி வந்தாள்.
மூச்சிரைக்க ஓடி வந்தவளை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்ட தேனருவி
“என்னடியம்மா… இன்னும் தான் பிரசாதம் கொடுக்கத் தொடங்கவில்லையே அதற்குள் எங்கே இந்த ஓட்டம் ஓடுகிறாய்?”
என்று சிரிப்புடன் கேட்டாள்.
“அக்கா… உங்களுக்கு என்னைக் கிண்டல் செய்யவில்லை என்றால் பொழுதே போகாதா? நான் உங்களைப் பார்த்து விட்டுத் தான் வேகமாக ஓடி வந்தேன் தெரியுமா?”
என்று முகத்தைத் தூக்கி வைத்தபடி சொன்னவளின் கன்னத்தை லேசாகத் தட்டியபடி
“அது எனக்குத் தெரியாதா? நான் சும்மா சொன்னேன். நானே கோவிலுக்கு வந்து விட்டு உன் வீட்டுக்கு வரலாம் என்று தான் இருந்தேன். அதற்குள் பார் கும்பிடப் போன தெய்வம் கோவிலுக்கே வந்து விட்டது போல உன்னை இங்கே பார்த்து விட்டேன். வா அப்படி அந்த அரசமரத்துக்குக் கீழே இருந்து கொஞ்சம் நேரம் பேசுவோம்.”
என்று சொன்ன தேனருவியுடன் கோவிலுக்கு அருகே குடை பிடித்து நின்றிருந்த அரசமரத்தை நோக்கி நடந்தாள் ஸ்ரீரங்கநாயகி.
தன் கைகால்களை அலம்பி விட்டுக் கோவிலுக்குள் செல்வதற்கு வந்த தேனருவியின் கணவன் சந்தனக்குமரனது காதுகளில் அவளது மனைவி கடைசியாகச் சொன்ன ‘கொஞ்சம் நேரம் பேசுவோம்' என்ற வார்த்தைகள் விழுந்தன.
அரச மரத்தை நோக்கிச் சென்ற இரண்டு பெண்களையும் பார்த்தவனுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.
“கொஞ்சம் நேரம் தானாம் பேசுவாளாம் இவள் அதை நம்பி அந்தப் பிள்ளையும் பின்னாலேயே போவதைப் பார். இன்று நான் வீட்டுக்குச் செக்கல் படும் நேரம் ஆனாலும் போவேனோ என்று தெரியவில்லை.”
என்று சிரித்தபடியே சொல்லிக் கொண்டவன் கோவிலினுள் போய் விட்டான்.
அரச மரத்தின் கீழே கிடந்த சதுரக் கல்லில் அமர்ந்து கொண்ட தேனருவி மற்றவளையும் அருகே இழுத்து அமர்த்திக் கொண்டாள்.
அருவியின் அருகில் அமர்ந்து கொண்ட ஸ்ரீரங்கநாயகி
“அக்கா… நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். அப்புறம் ஒன்று கேட்க வேண்டும்.”
என்று சொல்லியபடி தன் விரல் நகங்களை ஆராய்ந்தாள்.
பக்கத்தில் இருந்த தன் உடன் பிறவாத சகோதரியை மேலும் கீழும் பார்த்து விட்டு
“எது இந்த நகங்களுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டுமா? இல்லை வெந்நீர் ஊற்றி வளர்க்க வேண்டுமா? என்று கேட்க போகிறாயா?”
என்று சொல்லி முறைத்தாள் தேனருவி.
“ஐயோ! அக்கா… அதில்லை”
என்று உதட்டைப் பிதுக்கிய சின்னவளின் வலது கையைப் பற்றி மெல்லத் தட்டியபடி
“சொல்ல வந்த விடயத்தைச் சட்டென்று சொல்லி விட வேண்டும். கேட்க வேண்டிய விடயத்தைப் பட்டென்று கேட்டு விட வேண்டும். என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.”
எனச் சொல்லிய தேனருவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீரங்கநாயகி
“அக்கா… அது வந்து அப்பா என்னிடம் துளசியைத் தத்தெடுப்பதற்குச் சம்மதம் சொல்லி விட்டார்.”
என்று சட்டென்று சொன்னாள்.
“அம்மாடி… இது ரொம்பவும் சந்தோஷமான விடயம் தானே அதை அல்லவா முதலில் நீ என்னைப் பார்த்தவுடனே சொல்லியிருக்க வேண்டும் ஸ்ரீ.”
என்று சந்தோஷத்தில் கிட்டத்தட்ட துள்ளிய பெரியவளைப் பார்த்து அடக்கமான புன்னகை ஒன்றைச் சிந்திய சின்னவளோ
“ஆனால் அதற்குப் பதில் நானும் ஒன்று செய்ய வேண்டுமாம் என்று சொல்லி விட்டு என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார் அக்கா.”
என்று குரலில் லேசான அலுப்புப் பிசிறடிக்கச் சொன்னாள்.
ஸ்ரீரங்கநாயகி சொன்னதைக் கேட்டதும் உள்ளூர ஊற்றெடுத்த சந்தோஷத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் சற்றே நிதானித்த தேனருவி
“அதற்கு நீ என்ன பதில் சொன்னாய்? மூர்த்திமாமா ஒன்றை முடிவு செய்தால் அதை முடிக்கும் வரை ஓய மாட்டாரே அதனால் திருமணத்திற்கு உன்னிடம் சமமதம் பெற்று இருப்பார் என்று நினைக்கிறேன். இதோ பார் ஸ்ரீயம்மா… உனக்குப் பிடிக்குதோ இல்லையோ நீ உன் துளசிக்காக என்றாலும் திருமணம் செய்து கொள்ள தான் வேண்டும்.”
என்று விட்டுச் சின்னவளைப் பார்த்தாள்.
“அக்கா… நான் சம்மதம் சொல்லி விட்டேன் தான் ஆனால் அதற்கு முதல் அப்பாவிடம் நானும் ஒரு நிபந்தனை வைத்தேன். துளசியோடு என்னை யார் ஏற்றுக் கொள்கிறாரோ அவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று…”
என்று சொன்னவளை
“இருந்தாலும் உனக்கு ரொம்பத் தான்டியம்மா தெனாவெட்டு நானெல்லாம் என் அப்பாவின் எதிரில் நிற்கவே இரண்டு தினங்களாவது ஒத்திகை பார்ப்பேன். நீ நிபந்தனை எல்லாம் போடுகிறாய்.”
என்றபடி விழிகளை விரித்தாள் தேனருவி.
அவளது பதிலில் லேசாகச் சிரித்து விட்டு
“அது தான் இப்போது குமரனத்தானைப் பக்கம் பக்கமாக நின்று கேள்வி கேட்டு ஓட விடுகிறீர்களே அது போதாதா?”
என்ற ஸ்ரீரங்கநாயகியின் காதை வலிக்காமல் திருகி விட்டு
“சரி என் பொத்தானைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்வோம். இதற்குப் பதில் சொல்லு முதலில் உன் நிபந்தனைக்கு மாமாவிடம் இருந்து என்ன பதில் வந்தது?”
என்றாள் தேனருவி.
அதன் பின்னர் தான் தேனருவியிடம் தான் சொல்ல நினைத்தது. கேட்க நினைத்தது எல்லாவற்றையும் பேசத் தொடங்கினாள் ஸ்ரீரங்கநாயகி.
“இந்த இடத்தில் தான் அக்கா எனக்குக் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் என்னுடன் சாதாரணமாக இருந்து பேசுவதைப் பார்த்தால் உங்களுக்கு ஒன்றில் விடயம் தெரியவில்லை. அல்லது இந்தப் பேச்சு உங்கள் வீட்டில் இன்னும் வெளிப்படையாகப் பேசப் படவில்லை என்று தான் நினைக்கிறேன்.”
“நீ எந்த விடயம் பற்றிப் பேசுகிறாய் ஸ்ரீ. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.”
“அக்கா… அப்பா எனக்காகப் பார்த்த மாப்பிள்ளை யாரென்று தெரியுமா?”
“ஏன் மாமா உன்னிடம் சொல்லவில்லையா? என்னைக் கேட்கிறாய்?”
“ஐயோ! அக்கா…”
“அடி வாங்கப் போகிறாய் நீ என்னிடம்… எத்தனை தடவை உனக்குச் சொல்லி இருக்கிறேன் ஐயோ என்று சொல்லாதே அது எமனின் பொண்டாட்டியின் பெயர். என் வீட்டுக்காரியை நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள் என்று முன்னால் வந்து நிற்கப் போகிறார் என்று…”
“ஐயோ! அக்கா மறந்து போய்ச் சொல்லி விட்டேன்… இனிமேல் சொல்ல மாட்டேன்.”
“உனக்குப் பழகி விட்ட வார்த்தை அது இந்த ஜென்மத்தில் உன் நாக்கில் இருந்து போகாது. சரி அதை விடு நாங்கள் விடயத்துக்கு வருவோம். மாமா உனக்காகப் பார்த்த அந்த மாப்பிள்ளை மரிக்கொழுந்து யார் என்று சொல்லு? எனக்கு ஒரே ஆர்வமாக இருக்கிறது.”
“அது வந்து…”
“ரொம்ப நேரமாக நீ வந்து கொண்டு இருக்கிறாய் என்று நினைக்கிறேன்.”
“அக்கா…”
“நான் தான் நானே தான்…”
“உங்களின் கொழுந்தனார் ஈழக்குமரன்.”
“அடடா நம்முடைய இலங்கை வேந்தனா? அது தான் இந்த அத்தையும் மாமாவும் ஏதோ ஜாடைமாடையாக அடிக்கடி பேசிக் கொண்டார்களா? ஆனால் ஒன்று ஸ்ரீ என் இரண்டு மாமாக்களும் ஏதோ பெரிதாகத் திட்டம் ஒன்று போடுகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. ஆனாலும் பார் உனக்கும் அவனுக்கும் தான் எத்தனை பொருத்தம்”
“என்னக்கா… சொல்கிறீர்கள் அப்படி எந்தப் பொருத்தத்தைப் பார்த்து விட்டீர்கள்”
“அது தான் பிள்ளைப் பொருத்தம்”
“தாலிப் பொருத்தம் கேள்விப் பட்டு இருக்கிறேன். ஜோடிப் பொருத்தம் கேள்விப் பட்டு இருக்கிறேன். அதென்னக்கா பிள்ளைப் பொருத்தம்?”
“நீ துளசியைத் தத்தெடுப்பதற்குப் படாத பாடு படுவதைப் போல அவனும் ஒரு பிள்ளையைத் தத்தெடுப்பதற்குப் படாத பாடு படுகிறான். ஆக இரண்டு பேருக்கும் பிள்ளைப் பொருத்தம் நூறு சதவீதத்தில் இருக்கிறது. அதைத் தான் சொன்னேன்.”
“உண்மையாகவா? அக்கா”
“உண்மையாகத் தான் ஸ்ரீ”
“நான் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த விடயம் அவரும் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லியிருப்பாரா? என்று தான்”
“எனக்குத் தெரியாதும்மா… அதை நீ மாமாவிடமே கேட்டு இருக்கலாமே… ஆனால் சம்மதம் சொல்லாமலா மாமா இது பற்றி உன்னிடம் பேசியிருப்பார்.”
“அக்கா எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது. நான் துளசியைத் தத்தெடுத்துக் கொள்வதை அவர் ஏற்றுக் கொள்வாரா? அப்படியே அங்கே மாமியும் மாமாவும் ஏற்றுக் கொள்வார்களா? இந்தக் கேள்வியை அப்பாவிடம் கேட்டு விட்டுத் தான் உங்களுடன் பேச வேண்டும் என்று இருந்தேன்.”
“உன்னுடைய குழப்பம் எனக்குப் புரிகிறது. அவனே ஒரு பிள்ளையைத் தத்தெடுக்க இருக்கும் போது உன் விடயத்தில் அவனுக்கு மாற்றுக் கருத்து இருக்காது. மாமாவும் மாமியும் அவனுக்கே தத்தெடுப்பதற்குச் சம்மதம் சொல்லும் போது உனக்குச் சொல்ல மாட்டார்களா?”
“அவர் தத்தெடுப்பது பற்றி எனக்குத் தெரியாது தானே அக்கா… அதனால் தான் இந்தக் குழப்பம். “
“ஏன் அவன் இது பற்றி உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா?”
“அக்கா… அவருடன் நான் பேசிக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரும்.”
“என்னடி சொல்கிறாய் ஏதேனும் சண்டையா?”
“அது வந்து… அப்படி ஒன்றும் இல்லையக்கா. அக்கா உங்களை அத்தான் தேடப் போகிறார். நீங்கள் கிளம்புங்கள் நானும் புறப்படுகிறேன்.”
என்று எழுந்து கொண்ட ஸ்ரீரங்கநாயகியை ஆராயும் பார்வை பார்த்த தேனருவி அதன் பிறகு ஒரு கேள்வியும் அவளைக் கேட்கவில்லை.
பெரியவள் கோவில் நோக்கிச் செல்லச் சின்னவள் வீடு நோக்கிச் சென்றாள்.
............................................................
செந்தில்குமரன் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவரின் மனைவி அமுதவாணி
“அத்தான் எதைப் பற்றி இத்தனை தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”
என்று கேட்டபடியே அவருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
முகத்தில் விசமப் புன்னகையொன்று இழையோட மனைவியைப் பார்த்தவர் வாய் திறந்து எதையும் பேசாமல் வேண்டுமென்றே அமைதியாக இருந்தார்.
“அத்தான்… உங்களைத் தானே கேட்கிறேன். வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்து இருக்கிறீர்கள்…”
என்று மீண்டும் கேட்ட மனைவியை மேலும் கீழும் பார்த்தபடி
“ஆமாம் அப்படியே நீ கொழுக்கட்டை அவித்துக் கொடுத்து விட்டாய் பார் நான் வாயில் வைத்துக் கொள்வதற்கு…”
என்று சொல்லி விட்டுத் தன் அலைபேசியில் எதையோ தேடினார்.
முகத்தை மூன்று முழத்திற்குத் தூக்கி வைத்தபடி
“ஏன் அத்தான் இப்படி அபாண்டமாகப் பழி சொல்லுகிறீர்கள். நான் உங்களுக்குக் கொழுக்கட்டையே அவித்துக் கொட்டியதில்லையா?”
என்று கேட்ட மனைவியின் கன்னத்தில் தட்டியபடி
“சரி சரி அதை விடு நான் சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன். நான் இப்போது இன்னொரு விடயம் சொன்னேன் என்றால் நீ அப்படியே பூமிக்கும் வானுக்குமாகக் குதிப்பாய் தெரியுமா?”
என்று சொன்னார் செந்தில்குமரன்.
கணவன் சொன்னதைக் கேட்டதும்
“முதலில் விடயத்தைச் சொல்லுங்கள் அத்தான். பிறகு நான் எந்தப் பக்கமாகக் குதிக்கலாம் என்று யோசிக்கிறேன்.”
என்று அப்போதும் சிறு கோபத்துடன் சொன்ன அமுதவாணியைப் பார்த்தவருக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.
தான் இப்போது சிரித்தால் தன் மனைவி மீண்டும் கடுப்பாகி விடுவாள் என்பதைப் புரிந்து கொண்ட செந்தில்குமரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் சொல்ல வந்த விடயத்தை மனைவியிடம் அப்படியே ஒப்புவித்தார்.
“அமுதா… நான் எதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்று கேட்டாய் அல்லவா”
“ஆமாம் கேட்டேன். அதற்கு நீங்கள் எங்கே பதில் சொன்னீர்கள்”
“சரி இப்போது சொல்கிறேன் கேள். ஆனால் அதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்ல வேண்டும் என்ன”
“நான் ஏன் அத்தான் உண்மையில்லாமல் சொல்லப் போகிறேன் நீங்கள் கேளுங்கள்”
“சரி… நம் ஈழன் பிள்ளையொன்றைத் தத்தெடுக்கப் போகிறான் என்றதும் அவன் ஆசைப்பட்டதை நாம் ஏற்றுக் கொண்டு சம்மதம் சொன்னோம் தானே…”
“ஆமாம் அத்தான்… இது தான் உங்கள் கேள்வியா?”
“அட இருடியம்மா நான் இன்னும் சொல்லி முடிக்கவேயில்லை”
“சரி சரி சொல்லுங்கள்”
“அதே போல அவனைத் திருமணமும் செய்து கொள் என்று நாம் சொன்னால் நாம் ஆசைப்படும் இந்த விடயத்தை அவன் ஏற்றுக் கொண்டு சம்மதம் சொன்னால் உனக்கு எப்படி இருக்கும்?”
“அட என்னத்தான் நீங்கள்… உன் முன்னால் தட்டு நிறைய லட்டு வைத்து இதெல்லாம் உனக்குத் தான் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி… அப்படி மட்டும் நடந்து விட்டால் நீங்கள் சொன்னது போல நான் வானத்துக்கும் பூமிக்குமாகத் தான் குதிப்பேன்… ஆனால் அவனைப் பற்றித் தான் நமக்குத் தெரியுமே…”
“ஏன் அமுதா… என்னைப் பற்றித் தெரிந்து தானே என்னிடம் தன் விடயத்தைச் சொல்லிச் சம்மதம் வாங்குமாறு உன்னைத் தூது விட்டான் நம் பையன். அதே போல நாமும் அவனிடம் திருமண விடயம் பற்றித் தீவிரமாகப் பேசினால் தானே அவனுக்கும் ஏதாவது அது பற்றிய எண்ணம் கொஞ்சமாவது தோன்றப் பார்க்கும்.”
“நீங்கள் சொல்வதும் சரி தான் ஆனால் இது பற்றி நீங்களே பேசுங்கள் அத்தான். எனக்கு கொஞ்சம் கூடத் தீவிரமாகவோ இல்லாது போனால் கண்டிப்பாகவோ பேச வராது அத்தான். அதிலும் அவனைப் பார்த்தால் சுத்தமாக வராது. அப்புறம் அவன் என்னை ஒரு வழி செய்து விடுவான்.”
“இது நீ சொல்லித் தான் எனக்குத் தெரிய வேண்டுமா? எனக்குத் தான் உங்கள் இருவரைப் பற்றியும் தெரியுமே ஒரு வேளை நீயாகக் கேட்டால் கூட உன்னை மட்டும் அவனுடன் பேச விட மாட்டேன்.”
“போதும் போதும் நீங்கள் பேசச் சொன்னாலும் நானும் பேச மாட்டேன்.”
“சரி நமக்குள் சண்டை வேண்டாம்.”
“அது சரி அத்தான்… வருகின்ற பிள்ளை ஈழனோடு சேர்த்து அவன் தத்தெடுக்கும் பிள்ளையையும் அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் எனக்கு ஒரே யோசனையாக இருக்கிறது.”
“அடடா… நான் பேச்சு வாக்கில் விடயத்தையே மறந்து விட்டேன். நம் மூர்த்தி இருக்கிறான் தானே அவனுடைய மகள் ஸ்ரீயைத் தான் ஈழனுக்குக் கட்டி வைக்க வேண்டும் என்று எனக்கு நெடுநாள் விருப்பம்.”
“அட அந்தப் பிள்ளையா எனக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும் அத்தான். அவள் இங்கே இருக்கும் போது மாமி மாமி என்று என் பின்னால் சுற்றி வருவாள். அப்போது எனக்கும் உங்களைப் போல ஒரு விருப்பம் இருந்தது தான். நம் மற்றப் பையன்கள் போல ஈழனும் காதலித்து அவனுக்கு வேறு பெண்ணைப் பிடித்துப் போகலாம் என்ற எண்ணத்திலும் அவனின் எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் மட்டுமே கனவு கண்டு அதை அவன் மேல் திணிக்கக் கூடாது என்றும் என் ஆசைக்குக் கடிவாளம் போட்டு விட்டேன் அத்தான்.”
“உன் ஆசைக்குப் போட்ட கடிவாளத்தை நீ கழற்றி எறியலாம் அமுதா."
“என்னத்தான் எனக்குப் புரியவில்லை.”
“கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மூர்த்தியும் நானும் நேரில் சந்தித்துக் கொண்டோம். அநேகமாக நாங்கள் இருவரும் ஏதாவது சந்தோஷம் கவலை என்றால் தான் நேரில் பார்த்து அது பற்றி பேசிக் கொள்வோம். அவனது குரலை வைத்தே அவன் ஏதோ ஒரு கவலையில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் நான் உடனேயே அவனைச் சந்திக்கப் போய் விட்டேன்.”
“என்ன அத்தான் ஏதும் பெரிய பிரச்சினையா மூர்த்தியண்ணாக்கு. எனக்கு அவர்கள் இந்த ஊரை விட்டுப் போய் அத்தனை தூரத்தில் இருப்பது பிடிக்கவில்லை தெரியுமா? ஆனால் என்ன செய்வது அத்தான். இப்போது நடந்து கொண்டிருக்கும் விடயத்தால் அவரிடம் பெண் கேட்டுப் போய் நிற்கவும் முடியாது.”
“அமுதா… முதலில் நான் சொல்ல வந்த முழு விடயத்தையும் கேட்டு விட்டுப் பிறகு சந்தோஷப் படலாமா துக்கப் படலாமா என்று யோசி.”
“சரியத்தான் நீங்கள் சொல்லுங்கள்”
“மூர்த்தி என்னைப் பார்த்ததுமே அவளுடைய மகளைப் பற்றிச் சொன்னான். அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும் என்பது தான் அவனுடைய பெரிய கவலையே… அவன் அப்படிச் சொல்லும் போது நான் வாயைத் திறக்கவேயில்லை. இதே மற்றும்படியாக இருந்தால் உனக்கு நல்ல மாப்பிள்ளையாக என் கடைசி மகன் இருக்கும் போது உனக்கு என்னடா கவலை என்று உரிமையோடு சொல்லியிருப்பேன் அமுதா. ஆனால் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்தே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் மகனுக்கு உன் மகளைக் கொடு என்று எப்படி என்னால் கேட்க முடியும் அதனால் நான் எதையும் பேசவில்லை. ஒரு வேளை அவன் என் மகனைத் தன் மாப்பிள்ளையாக்கிக் கொள்வதற்கு விருப்பப் பட்டுக் கேட்டால் அவனைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விடலாம் என்று இருக்கும் போதே மூர்த்தி ஒரு விடயம் சொன்னான். அதைக் கேட்டதும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?”
“அத்தான்… இப்படித் தொக்கி நிற்காமல் விடயத்தைச் சொல்லுங்கள் எனக்கு ஒரே பரபரப்பாக இருக்கிறது.”
“நான் மூர்த்தியையே பார்த்திருக்க, அவனோ
‘மகளின் ஆசை தான் என்னாசை என்பது போல இருந்து இருந்து அவளை வளர்த்து விட்டேன் செந்தில்… அடுத்தது அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று நான் மனக்கோட்டை கட்டிக் கொண்டு இருக்க, அவள் என்னிடம் அப்பா நான் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்க்கப் போகிறேன் என்று வந்து நிற்கிறாள். எனக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் அவளது சந்தோஷம் அது தான் என்று சம்மதித்து விட்டேன். ஆனாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அவளது விருப்பத்திற்கு சம்மதம் சொன்னேன். அவளோ எனக்கு ஒரு படி மேலே போய் என்னையும் என் பிள்ளையையும் ஏற்றுக் கொள்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நிற்கிறாள் செந்தில்… அப்படி எந்தப் பையனாவது சம்மதிப்பானா என்று எனக்குத் தெரியவில்லை…’ என்று சொன்னான். அதைக் கேட்டதும் நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை உடனே என் மகன் விடயத்தை அப்படியே ஒப்புவித்து விட்டேன் அமுதா…”
“அடடா அடடா நிஜமாகவா அத்தான். எனக்கு ஒரே சந்தோஷமாக இருக்கிறது.”
“இன்று எப்படியாவது ஈழனுடன் பேசி அவனிடம் இருந்து சம்மதம் வாங்கி விட வேண்டும் அமுதா.”
“இன்று என்ன இன்று இப்போதே பேசுங்கள் அத்தான்”
என்றபடி தன் கடைசி மகனை அழைத்து வர கிட்டத்தட்ட துள்ளிக் குதித்து ஓடிச் சென்ற மனைவியைச் சிரிப்புடன் பார்த்திருந்தார் செந்தில்குமரன்.
“இரு மனங்கள் இணையும் சங்கமம்
தாலிப் பொருத்தம் தவிர்த்து
ஜோடிப் பொருத்தம் தவிர்த்து
பிள்ளைப் பொருத்தத்தினால் அஸ்திவாரமானதோ…”

Last edited: