கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

05.உன்னை பிரியேனடி

சஹா

Moderator
Staff member
துர்காவின் மன நிலையை அவளே அறியவில்லை எனும் போது நாம் அறிய வாய்ப்பில்லை.

நாட்கள் பல சென்றன.
துவாரகீஸ் ‘துர்காவிற்கு இந்த கல்யாணத்தை ஏற்று கொள்ள சிறிது காலம் தேவை’ என்று எண்ணி அவளிடமிருந்து ஒதுங்கி இருந்தான்.

ஆனால் ஒரு போதும் தான் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளை பாதிக்கா வண்ணம் நடந்து கொண்டாலும்

அந்த செயலில் தன் காதலை வெளிபடுத்திக்கொண்டு இருந்தான்.
அவளுக்கு தெரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் அவள் மீதான அவன் காதலை பற்றி தான்.

‘மூன்று வருடம் என்று தேவி சொன்னாளே? அப்போ நாகாலேஜ் போகும் போதுன்னு தானே அர்த்தம்!!’
(என்ன ஒரு கண்டு பிடிப்பு)

‘ஆனா எப்டி அவன்ட்ட இருந்து விசயத்த கறக்க?’ என்று தீவிரமாக யோசித்தாள்.

(என்ன மேடம் தலைல தட்டிட்டு இருக்காங்க… ஓ யோசிக்கிறாங்கலாம் சரி யோசிங்க யோசிங்க)

“ஐடியா!!!” என்று விறுவிறுவென எழுந்து சென்றாள் தங்கள் அறைக்கு.

அறை முழுவதும் அலசி விட்டு நிமிர்ந்தவள் கண்ணில் பட்டது அது.
அவனின் டைரி…

தினமும் எழுதுபவன் இல்லை அவன் என்பதால் அதை அங்கேயே வைத்து விட்டு திரும்பியவளின் காதில் முதலிரவு அன்று அவன் கூறிய வார்த்தைகள் காதில் விழுந்தன.

"என்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான நாட்களும் அதோட ஸ்வீட் மெமரீசும் தான் எழுதுவேன்…" என்று.

அதை கையில் எடுத்தவள் அதற்கே வலிக்கா வண்ணம் தொட்டு பார்த்து விட்டு அதை பிரித்தாள்.

ஒரு கணம் தயங்கி விட்டாள்.

‘அடுத்தவங்க டைரிய படிக்கறது அநாகரிகம் ஆச்சே!!’ என்ற மூளையை மனம் வலுவாக இடித்தது.

‘அது அடுத்தவங்களுக்குதானே…இது என் துவியோட டைரி. இதை நா படிக்காம வேற யார் படிப்பா?’ என்று.

(பார்டா!! நம்ம துவில இருந்து… இப்போ என் துவிக்கு இம்ப்ரூமன்ட் ஆகிருக்கு போல… ரொம்ப சந்தோசம் போ)



டைரியில் முதல் பாதி பக்கங்கள் எழுதாமல் இருக்க ஒரு வழியாக எழுதிய பக்கத்தை அடைந்தாள் துர்கா.

(பாருங்க… அவ துவிய விரும்புனா எழுதாத பக்கத்துல கூட எதோ கவிதை இருக்க மாறி பீல் பண்ணி ஒவ்வொரு பேஜையும் திருப்புனா… நாமளும் அதையே தான் செய்யணும்னு என்ன தலை எழுத்து சொல்லுங்க? ஒரு வழியா படிக்க ஆரம்பிச்சிட்டா வாங்க போய் வழக்கம் போல ஒட்டு கேப்போம்)

ஜூன் 16:

இந்த நாள் தான் என்னோட தேவதையை எனக்கு அறிமுகப்படுத்திய நாள்…
பொதுவா எனக்கு டைரி எழுத விருப்பமே கிடையாது.
என்னோட பிரண்ட்ஸ் சொல்லும் போது சொல்வேன்…
அது எப்படி ஒரு நாள் பூரா நடக்குறத ஒரே பக்கத்துல எழுத முடியும்?
போங்கடா… நீங்களும் உங்க பழக்கமும்… அப்படின்னு போயிருவேன்… ஆனா இன்னக்கி நா எழுதுறேனா அதுக்கு அவ தான் காரணம்.

என் க்ளோஸ் ப்ரண்ட் வருண்… இயல்புலயே கொஞ்சம் பயந்த சுபாவம்…
படிப்பு முடிச்சி எதோ ஒரு காலேஜ்ல முதல் நாள் வேலைக்கு சேர போறேன்டா… அது உன் சொந்த ஊர் தானே… நீ கொஞ்சம் வந்தா எனக்கு மோரல் சப்போர்ட்டா இருக்கும்டா வாயேன்” என்று கேட்க என்னால் மறுக்க முடியவில்லை.

அம்மா கூட எத்தனையோ தடவ கூப்ட்டுருக்காங்க… நா தான் அப்புறம் பார்ப்போம்னு காலம் கடத்துனேன். ஏனோ தெரியல அங்க போனா அப்பா நினைவு வருமோன்னு ஒரு தயக்கம்… ஆனா அப்போவே போய் இருந்தா அவ கூட இன்னும் ஃப்ரீயா பேச சான்ஸ் கெடச்சிருக்குமோ என்னவோ?
ஆனா அவள பாக்கும் போது அவ தான் என்னோட மாமன் மகள்ன்னு எனக்கு தெரியாது… திடீர்னு ஒரு பொண்ணை பாத்தா… அவளை திருப்பி ஒருமுறை ஏறிட்டு பாக்க தோணுமே அப்டி தான் எனக்குள்ள பீல் ஆச்சு…

காலேஜ்க்குள்ள வரும் போதே திரு திருனு முழிச்சிக்கிட்டு… அங்க இங்க பார்த்துட்டே வந்தவ… யாரோ ஒருத்தன பார்த்ததும் ஒரு திருப்தியோட சிரிச்ச முகமா அவன் கிட்ட போய் எதோ குறும்பு பண்ணிட்டு இருந்தா…

அவளை மட்டுமே என் பார்வை சுத்திட்டு இருக்க…

“டேய், அதோ அந்த ரெட் கலர் ஷர்ட்க்காரன் தான்… வா போய் பேசலாம்”என்று என் கையை பிடித்து அழைத்து சென்றான் வருண்.


அவளின் அருகிலேயே கொண்டு என்னை நிறுத்தினான்.

அவளோடு பேசிக்கொண்டு இருந்தவனை
“எக்ஸ் கியூஸ் மீ?”என்று அழைக்க துர்கவிடம் பேசி கொண்டிருந்தவன் திரும்பினான்.

“நீங்க விமல் தானே…” என்று வருண் கேட்க

“ஆமா நீங்க...?" என்றான்.

“ஹலோ ஐ அம் வருண்… உங்கள போல எனக்கும் இன்னக்கி தான் பர்ஸ்ட் (first) டே" என்றான் கை குலுக்கியவாறே.

அதை கேட்ட துர்கா சிரிக்க நானும் வருணும் அவளை புரியாமல் நோக்க…
விமல் தான் அவளை கண்களால் அடக்கினான்.

“சரி துர்கா நீ க்ளாஸ்க்கு போ… தேவி நாளைக்கு வருவா…” என்றான் இயல்பான குரலில்.

அவர்களிடம் விடை பெற்று கிளம்பிய துர்காவையே என் விழிகள் தொடர்ந்தன.

‘என்ன பெண் இவ? தான் இந்த காலேஜோட புது ப்ரபசர் என்று அவன் கூறியும் இவள் ஒரு குட் மார்னிங் கூட சொல்லாம போறா?’ என்று நான் எண்ணி கொண்டிருக்கும் போதே திரும்பி வந்தவள்,

“குட் மோர்னிங் சார்… ஐ அம் துர்கா… உங்கள போல எனக்கும் இன்னக்கி தான் first டே… ஆனா நான் ஸ்டூடெண்ட்” என்று அவனை போன்றே குரலசைவில் கூற வருண் அதிர்ச்சியோடு அவளை நோக்கினான்.

(பாத்தீங்களா? எல்லாரும் ஸ்டுடென்ட தான் ராக் பண்ணுவாங்க… இவளோ ப்ரொபசர ராக் பண்ணிட்டு போறா? புடிங்க சார்… இவள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்…)

‘ஹவ் ஸ்வீட்ல என்னோட தும்ஸ்… அவளோட முதல் சந்திப்புலையே நா டோட்டல் ப்ளாட். எனக்கு அவ கிட்ட பிடிச்சதே இந்த குறும்பு தான்…

( இனி நானே டைரெக்டா சொல்றேன் இந்த காதல் கதையை…)

 
Top