கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

06.உன்னை பிரியேனடி

சஹா

Moderator
Staff member
சென்று கொண்டிருந்தவளை தொடர்ந்த துவி பார்வையை விலக்க மனம் இல்லாமல் விலக்கினான் நண்பனிடம்.



"அப்புறம் விமல், இவன் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் துவாரகீஸ்... இது தான் அவனோட நேடிவ் பிளேஸ்..." என்று வருண் கூறினான்.


இருவரும் சிநேகமாய் சிரித்து கொண்டனர்.


"அது யார் சார் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா?" என்று துவி இயல்பாய் அவனிடம் கேட்க நண்பனை புரியாமல் நோக்கினான் வருண்.


'பொதுவாக இவன் இப்படி கேட்பவன் இல்லையே!!!' என்று தான்.



"அவளா, என் சிஸ்டர் ப்ரண்ட்... அவளும் எனக்கு சிஸ்டர் போல தான்." என்று விமல் கூற அவன் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.


தன் நண்பன் முகத்தில் தெரிந்த தேஜசை கண்டு குறித்து கொண்டான் வருண்.



சில நாட்கள் வருணின் வீட்டில் தங்கி விட்டு ஞாயிறு துவி தன் வீட்டிற்கு திரும்பும் சமயம் அலமேலுவிடம் இருந்து அழைப்பு வருணிற்கு,


"எங்க அண்ணா வீட்டுக்கு ஒரு தடவ போயிட்டு வர சொல்லுப்பா... அவன் போகலைனா அண்ணா ரொம்ப வருத்த படுவாங்க, நீ சொன்னா தான் கேப்பான்..." என்று பலவாறு ஐஸ் வைக்க அதில் உருகி விட்டான் வருண்.


ஒரு வழியாக மூன்றாம் உலக போர் நடத்தி அவனும் உடன் செல்வது என்று ஒப்பந்தம் ஆனது.



"வாப்பா துவி சின்ன வயசுல பாத்தது அப்படியே உங்க அப்பாவ போல இருக்க, வாங்க தம்பி... அமிர்தம் துவி தம்பி வந்திருக்கு பாரு… குடிக்க ஏதானும் கொண்டு வா?' என்று துர்காவின் தந்தை உள்ளே திரும்பி குரல் கொடுக்க அவரும் அவர் பங்கிற்கு அவர்களை வரவேற்றார்.


'இத்தனை நாளாய் இதயெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணிட்டோமே' என்று மனதிற்குள் துவி புலம்பும் அளவிற்கு அவர்களின் அன்பு வெளிப்பட்டது.


சிறிது நேரம் அவர்களோடு வளவளத்து கொண்டிருக்க அப்போது தான் வெளியில் சென்ற துர்கா வீட்டினுள் நுழைய மூவருமே அதிர்ச்சியின் உருவாய் இருந்தனர்.


'இவளா? அப்படியானால், இது என்னவளின் வீடா?' என்று துவியும்


'அய்யயோ.. இவளா? இவ வீடா இது? இவள காலேஜ்ல எங்க பாத்தாலும் ஓடி ஒளிஞ்சதெல்லாம் வேஸ்ட் ஆகி போச்சேடா வருண்' என்று அவன் தனக்குள் புலம்ப


(பாத்தீங்களா ,லெக்ச்சரர் கூட பயந்து ஓடி ஒளியர அளவுக்கு வேல பண்ணி வச்சிருக்கா )


அதற்குள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர் மூவரும்.


முதலில் துர்கா தான்


"சார், நீங்க இங்க... அய்யோ சாரி சார், அன்னக்கி உங்கள்ட்ட நடந்து கிட்டதுக்கு சாரி சார்... மன்னிச்சிகோங்க... இப்போ தான் விமல் அண்ணா சொன்னாங்க நீங்க ரொம்ப வருத்த படுறதா... நானே நாளைக்கு காலேஜ்ல உங்கள மீட் பண்ணி மன்னிப்பு கேக்கணும்னு நினச்சேன். அதுக்குள்ள இன்னக்கே மீட் பண்ணிட்டோம்.


அது சரி, நீங்க எங்க இங்க?" என்று அங்குள்ள யாரையும் பேச விடாமல் அவளே நீட்டி முழக்க


"இட்ஸ் ஓகே துர்கா... நீங்க நினைக்கிற போலலாம் இல்ல. நீங்க தப்பா ஏதும் சொல்லலையே... ஏதோ விளையாட்டுக்கு தானே... எதுக்கு மன்னிபெல்லாம்?" என்று அவன் பதட்டமாக கூற,


அவன் தோளை ஆதுரமாய் தொட்டான் துவி.


யாரும் அறியா வண்ணம்,


" டேய் மச்சான், எதுக்குடா இவ்ளோ பீல் பண்ணி பேசுற? கூல் டவுன் மச்சி... அவ ஒன்னும் நீ பீல் பண்ணி பேசுற அளவுக்கு உன்னோட கலீக் இல்லடா,

உன் ஸ்டுடண்ட்,

நியாயமா பார்த்தா நீ தான் அவள பத்தி ப்ரின்சிபல்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருக்கணும்... எதோ நீ நல்லவனா இருக்க போய் இத ஒன்னும் பெருசா எடுத்துக்கல!!" என்று கூற


இது துர்காவின் காதுகளில் விழ,

அவளோ பேயை போல் துவியை முறைக்க கை எடுத்து கும்பிடாத குறையாக விடை பெற முற்பட்டான் வருண்.


"யாரு சார் இது? வந்ததுல இருந்து தொனதொனணு பேசுறாரு..." என்று அவளும் பதிலுக்கு கடுப்படிக்க

(எது அவன் தொனதொனணு பேசுறானா?)


அடுப்படியில் இருந்து குரல்,


"அடி கழுத, வீட்டுக்கு வந்தவங்கள்ட்ட இப்டியா பேசுறது?" என்று அமிர்தம் ஆரம்பிக்கும் போதே,



"இருக்கட்டும் அத்தை, என்னை யாருன்னு தெரியாம தானே பேசிருப்பா!!! பரவா இல்லை" என்று அவளுக்கே பரிந்து கொண்டு வந்தான்.


(லவ்வர காப்பத்துறாராம் )


அதன் பின்னும் நேரம் ரெக்கை கட்டி பறக்க


'துவிக்கு அங்கு இருந்து புறப்பட மனமே இல்லை'என்பதை கண்டு கொண்டான் வருண்.


(பின்ன சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ல கண்டு புடிக்காம எப்புடி?)


"என்னடா? ஊருக்கு போக மனசே இல்லை போல!" என்று கேட்க அதற்கு அவனும் அசடு வழிய,


"டேய் சண்டாளா, தயவு செஞ்சி என் முன்னாடி வெட்கம் மட்டும் படாத அந்த கருமத்த பாக்க முடியல என்னால" என்று அவன் நொந்து முகத்தை தன் கையால் மூடி கொண்டான்


(எங்களாலையும் தான் பாஸ்...)


துர்காவின் மீதான துவியின் காதலின் நிலை???


எப்போது அவனின் காதலை உணர்வாள் துர்கா....

பதில்???

 
Top