கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

08. உன்னை பிரியேனடி(final)

சஹா

Moderator
Staff member

நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர


தேவியும் தன் வேலையின் மாற்றல் காரணமாக துர்காவின் பக்கத்து வீட்டில் குடி ஏறினாள்.


"ஆனா, இப்டி புருசனும் பொண்டாட்டியும் ஓவரா நடிக்க கூடாதுடி.." என்றாள் பெரு மூச்சோடு.


புரியாது நோக்கினர் தம்பதியர் இருவரும்.


"பின்ன என்ன அண்ணா? நா கூட கல்யாணத்துக்கு முன்னாடி இவளுக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லன்னு நினச்சேன் தெரியுமா?" என்று சொல்ல

அவள் 'என்ன கூற வருகிறாள்?' என்பதை உணர்ந்த துர்கா,

அவசரமாக அவள் வாயை அடைத்தாள்.

"நீ சும்மா இரு துர்கா.... நீ சொல்லுமா தங்கச்சி..." என்று அவன் ஊக்க

அவள் கையை நறுக்கென கடித்து விட்டு
பின் பழிக்கு பழி என்று கூறினாள்.

நிச்சயத்திற்கு முன்,

காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று அவள் கூறியதையும்... துவியின் மேல் எந்த உணர்வும் ஏற்படவில்லை என்றும் கூறியதையும் அவள் ஒன்று விடாமல் கூற துர்கா உச்ச ஸ்தாதியில் நின்றாள்.


(அப்படி போடு... வாங்க நம்ம துவி எப்படி ரியாக்ட் பண்றாரு பாப்போம்)

ஒன்றும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் சிந்தினான் துவி.

(ச்ச சப்புன்னு ஆக்கிட்டாரே துவி)

அவனின் இந்த சிரிப்பின் அர்த்தம் புரியாது விழி விரித்த துர்கா

'ஒரு வேலை அவன் நம்மள தப்பா நினச்சிட்டானோ!' என்று மிரண்டு விழிக்க அவன் 'இல்லை' என்பது போல் தலை ஆட்டினான்.

(இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே)

தேவி செல்லும் வரையும் யென் சென்ற பின்புமே அவன் அவளிடம் அமைதியாக இருக்க

அன்றும் வழக்கம் போல் தங்கள் வீட்டு பால்கனியில் செவ்வனே தங்கள் பணியை செய்தனர்.

அன்று நிலா மட்டும் வர வில்லை இருப்பினும் அந்த தெருவின் விளக்கு கம்பம் நிலவிற்கு போட்டியாக வெளிச்சம் கொடுத்து கொண்டிருந்தது.

(அமாவாசைல கூட இவங்க நிலா சோறு சாப்டுவாங்க போல)


"ரகிஸ், ஈவ்னிங்ல இருந்து ஒரு மாறி இருக்கீங்க? ஏன் என்ன ஆச்சு? தேவி சொன்னத தப்பா நினைச்சுட்டீங்களா?" என்றவள் குரல் விட்டால் 'அழுதுடுவேன்' என்பது போல் இருந்தது.


தோட்டத்து பக்கம் திரும்பி இருந்தவன் அவள் புறம் திரும்பி அவள் முகத்தை நோக்க

அவள் கண்ணீரோ' இப்போது வருவேன் அப்போது வருவேன்' என்று கண்ணாமூச்சி காட்டியது.

அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்,

"அம்மு, என்னடா இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு" என்று கூற அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.


"பின்ன ஏன்டா என்னை அப்படி சுத்தல்ல விட்ட? நா வழிய வந்து பேசுனா ஒரு வார்த்தைல பதில் சொல்லி கழண்டுக்கிட்ட .." என்று கேட்க,


"ம்ம், இப்போ கேளுடி? சரி அத விடு எனக்கு சொல்லு, என் போட்டோவ தேவி சொன்னதுக்கு அப்புறமாவது பார்த்தியா இல்லையா?" என்று கேட்க

அவள் 'இல்லை' என்றே தலை ஆட்டினாள்.

"ஏன் பாக்கல தும்ஸ்?" என்றான்.

"ப்ச் ரகிஸ், நான் என்ன உன்ன இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையா? புதுசா போட்டோ பாக்றதுக்கு என்ன வந்துச்சு என்று உதட்டை பிதுக்கினாள்?"

(அடிபாவி, உனக்குலாம் காதல் டைலாக்கே வராதா)

"கிட்ட தட்ட இது போல ஒரு நிலையில தான் நானும் இருந்தேன் தும்ஸ், இருந்தாலும் என்னை மொத்தமே ரெண்டு தடவ பார்த்திருப்ப அதுலயும் ஒரு தடவ என்னை பாக்கவே இல்ல... அப்புறம் உங்க வீட்ல வச்சு ஒரு தடவ பார்த்திருக்க, அதான் ஒரு வேல என் ஃபேஸ் உனக்கு நியாபகம் இல்லைனா? அதுக்கு தான் நான் போட்டோவே அனுப்னது" என்று அவன் கூறினான்.


"ப்ச் போடா, அது எப்படி மறக்கும் உன் ஃபேஸ்?" என்று அவள் எதோ கூற வரும் போதே

"ஹேய் ரகிஸ், ஆமாடா உன் பேஸ் எனக்குள்ள மறக்காம அப்படியே இருக்குனா என்ன அர்த்தம்?" என்று எதோ எட்டாவது அதிசயம் போல் அவள்.விழி விரிக்க அவனும் 'ஆம்' என்பது போல் தலை ஆடினான்.

'இதை தான்... இத்தனை நாளும் அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
அவளுக்கும் தன் மீது ஏதோ ஒரு உணர்வு இருந்து வந்தது. ஆனால் அவள் தான் அதை அறிய சிறு முயற்சி கூட செய்யவில்லை. அவளை அவள் வாயாலேயே அதை உணர்ந்து சொல்ல வைக்கவே அவனின் அந்த பாராமுகம்.'


"ஹேய் ரகிஸ்" என்று அவன் முகமெங்கும் முத்தமிட்டவள்,

" அப்போ எனக்கும் உன் மேல ஆரம்பத்துல இருந்தே லவ் இருந்திருக்குடா!!! ஆனா நான் தான் அதை சரியா புரிஞ்சிக்கவே இல்ல" என்று தலையை தட்டினாள்.

(நீ தான் டியுப் லைட்னு எனக்கு ஏற்கனவே தெரியுமே)

"தும்ஸ், பார்த்துடி தலைல உள்ள மண்ணுலாம் சிந்துது பாரு" என்று கூற

முதலில் புரியாமல் விழித்தவள் பின் அவனை நாலு சாத்து சாத்தினாள்.


அடித்து கொண்டிருந்த அவள் கையை லாவகமாக பற்றி தன்னோடு அணைத்து கொண்டான் துவி.

அந்த அணைப்பு இனி என் வாழ் நாள் முழுதும் "உன்னை பிரியேனடி ......." என்று சொல்லாமல் சொல்லியது


அவளுக்காக அவன் காத்திருந்து கை கூடிய காதல்...

அவள் அறியாமலே அவளுள் எழுந்த அவன் மீதான நேசம்...

இனி இவர்களின் காதல் வாழ்வெனும் பொன்னூஞ்சலை இனிதாய் வீசி செல்லட்டும்.

***
 
Top