கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

1. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
வணக்கம் நண்பர்களே! இந்த கதையை 2020 ல் ஆரம்பித்து ரசித்து ரசித்து எழுதியிருக்கேன். இப்போதான் ஒரு வழியா முடிச்சிருக்கேன். இன்று முதல், இந்த கதை சங்கமம் சைட்ல தினமும் போடறேன். படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

இந்த கதைக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக நம்ம புவனாம்மா ஒவ்வொரு எபிக்கும் கவிதை எழுதிருக்காங்க.. இது என் கதையை மேலும் மெருகேத்துது. நன்றி புவனாம்மா.

இப்போ கதைக்குள்ள போலாம்.


காதல் மொழி – 1


ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்ச்செல்வி அந்த சாலையோர இளநிக் கடையில் ஒரு இளநியை வாங்கி மெதுவாக உறிஞ்சினாள். என்ன வெயில்! மனதுக்குள் வெயிலின் கடுமையை நினைத்துக் கொண்டாள்.

அவளுடைய ஸ்கூட்டியை ஒட்டியது போல தன் ஹீரோ ஹோண்டாவை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றிவிட்டு நல்ல நெடிய உயரத்துடன் வாட்டசாட்டமாக நல்ல சிவந்த நிறத்தில் ஒரு இளைஞன் இறங்கி வந்து இளநி வாங்கினான். முறுக்கு மீசையுடன் இருந்த அவனை தமிழ்ச்செல்வி அசுவாரசியமாய் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

குடித்து முடித்து இளநிக்கான பணம் முப்பத்தைந்து ரூபாய்க்காக தமிழ்ச்செல்வி நூறு ரூபாயைக் கொடுக்க, இளநி விற்கும் தாத்தா சில்லரையில்லை என்றார். அந்த இளைஞனும் நூறு ரூபாயை நீட்டினான். அவனுக்கும் அதே பதிலைக் கூறினார் தாத்தா!

"வாட்!" என்றான் இளைஞன்.

"சில்லரை இல்லை!"

"நோ! நோ! நோ டமில்!"

"அம்மணி! சொல்லுங்க!" என்று பதில் சொல்லும் பொறுப்பை தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தார் தாத்தா!

இது வேறயா! என்று மனதில் நினைத்தபடியே, இளைஞனிடம் ஆங்கிலத்தில் விளக்கினாள்.

"ஓ! நோ ப்ராப்ளம்! யூ கிவ் மீ எள்னி ஃபார் ஹன்ரட்"!

"தாத்தா! நூறு ரூபாய்கும் இளநி தரச் சொல்றாரு!" எப்டி ஒரே மூச்சில மூணு இளநியையும் குடிக்க முடியும். ஓ! வீட்டுக்கு எடுத்துகிட்டு போயிடுவார் போல, என்று நினைத்தாள்.

"சரிங்க அம்மணி!" தாத்தா மேலும் இரண்டு இளநிகளை வெட்டினார்.

"'ஓப்பன் இட்!"

ஆச்சரியத்துடன் தமிழ்ச்செல்வி மொழிபெயர்க்க, தாத்தா செய்தார். ஸ்ட்ராவை சொருகி இரண்டு இளநிகளையும் அருகில் இருந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடமும் அவர் மனைவியிடமும் தந்துவிட்டு ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு போயே விட்டான்.

"அம்மணி! தம்பிக்கு ரொம்ப நல்ல மனசு!"

"ம். ஆமா தாத்தா! சரி தாத்தா சில்லரைய நீங்களே வெச்சுக்குங்க!" கிளம்ப எத்தனிக்க, "ஏனுங்க அம்மணி! நீங்களும் யாருக்காவது வாங்கித் தரலாமில்ல?" தாத்தா கேட்டார்.

"கரெக்ட்தான் தாத்தா! ஆனா நீங்களே யோசிங்க! இவங்க ரெண்டு பேரத் தவிர பக்கத்தில யாரும் இல்ல. நான் யாராவது வராங்களான்னு இங்க நின்னு பாத்தா வேற மாதிரி ஆகிடாதா?"

"சரியாதான் சொல்றீங்க! சரிங்க அம்மணி! நீங்க கிளம்புங்க! உங்களுக்காக நானே யாருக்காவது குடுத்துர்றேன்!"

இளநி தாத்தாவிடம் விடைபெற்றுக் கொண்டு ஸ்கூட்டியை கிளப்பினாள்.

சென்னையின் ஐ டி காரிடார் என்று அழைக்கப்படும் ஓ எம் ஆரில் தன் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள், தமிழ்ச்செல்வி. அன்பான பெற்றோருக்கு ஒரே பெண். நன்றாகப் படித்திருக்கிறாள். அவளுக்கு மாதம் அரைலகரம் சம்பளமாக கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்ள பல கணிணி நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால் அவள் தன் விருப்பமாக சிறப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியையாக ஒரு செவிலியாக இருக்கிறாள். அவளுக்கு அதில் சொற்ப வருமானமே கிடைக்கிறது என்றாலும் மனத்திருப்தி அதிக அளவு கிடைக்கிறது. இருபத்தியிரண்டு வயதாகிறது. வட்ட வடிவ முகத்துடன் சிவந்த நிறத்தில் சராசரி உயரத்துடன் கருகருவென்ற அடர்ந்த நீண்ட கூந்தலுடன் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தடன் இருக்கும் அவளுக்கு, தான் இருக்கும் போதே திருமணத்தை செய்து விடு! என்று அவளுடைய பாட்டி அவளுடைய தந்தை கிரிதரனிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அவரும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். அவர் தமிழக காவல் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசி இல்லத்தரசி. அவர்கள் வீடு சென்னை பெசன்ட் நகரில் இருக்கிறது. அவள் வேலை செய்யும் பள்ளி ஓ எம் ஆரில் காரப்பாக்கத்தில் உள்ளது. காலை எட்டு மணி முதல் மாலை மூன்று வரை தான் வேலை. சில சமயம் நான்கு வரை இருக்கும். குழந்தைகளின் அன்றைய தினத்தின் கற்கும் ஆற்றலைப் பொறுத்து அவளுடைய வேலை முடியும் நேரம் மாறுபடும். அன்று கொஞ்சம் சீக்கிரமே முடிந்துவிட்டது. அதனால் சீக்கிரமே கிளம்பிவிட்டாள். வீட்டுக்கு வரும் வழியில்தான் இந்த இளநி கதை நடந்தது. அத்துடன் இந்த சம்பவத்தை சுத்தமாக மறந்தே போனாள்.

ஒரு வாரம் கடந்திருந்தது.

அன்று பள்ளியில் சிறிய விழா! அருகில் உள்ள ஐடி கம்பெனியின் சார்பில் பள்ளிக்கு நன்கொடை அளித்திருந்தார்கள். அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் பள்ளியை பார்வையிடவும் அங்குள்ள குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடவும் இன்று வருகை தரவிருக்கிறார்கள். அதனால் குழந்தைகளை தயார் செய்ய தமிழ்ச்செல்வி பள்ளிக்கு சீக்கிரம் வந்துவிட்டாள். அவளுடன் சேர்த்து இன்னொரு பெண்ணும் இரு ஆண்களுமாக மொத்தம் நான்கு ஆசிரியர்களும் இரண்டு ஆயா வேலை செய்பவர்களும் அந்தப் பள்ளியில் பணிபுரிந்தனர். மொத்தம் இருபது குழந்தைகள் பயில்கிறார்கள். இது மாதிரி விழாக்கள் என்றால் குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோரும் வந்து பங்கெடுத்துக் கொள்ளலாம் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர்.

ஐடி நிறுவன ஊழியர்கள் ஆண்கள் மூவரும் பெண்கள் இருவருமாக மொத்தம் ஐவர் விருந்தினர்களாக வந்திருந்தனர். அனைவரும் இளைய வயதினராக இருந்தனர்.

பள்ளியின் நிறுவனரும் தலைமை ஆசிரியையுமான திருமதி நாராயணி விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து உரையாற்றினார். பின்னர் அவர்களை பள்ளியையும் குழந்தைகளையும் பார்வையிட அழைத்து வந்தார்.

விருந்தினர்கள் ஒவ்வொரு வகுப்பாக வந்தனர். ஆசிரிய ஆசிரியைகளை அறிமுகம் செய்து கொண்ட பின் பள்ளிக் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டனர். அவர்களோடு பேசினார்கள்; விளையாடினார்கள்; குழந்தைகளுடன் ஆடிப் பாடி அவர்களை மகிழ்வித்தார்கள்.

வந்திருந்த விருந்தினர்களுள் முறுக்கு மீசையுடன் இருந்த ஒரு இளைஞனை எங்கோ பார்த்ததாய் எண்ணிக் கொண்டாள் தமிழ்ச்செல்வி. எவ்வளவு யோசித்தும் அவளது நினைவுக்கு வரவில்லை. இதப் போய் எதுக்கு யோசிச்சிகிட்டு? எங்கியாவது பாத்திருப்போம்! என்று விட்டுவிட்டாள்.

அவளுக்கு யோசிக்க நேரமும் இருக்கவில்லை. அவளுடைய வகுப்புக் குழந்தை ஒன்று, திடீரென்று கொஞ்சம் கடுமையாய் நடந்து கொள்ள ஆரம்பித்தது. பயங்கரமாக கத்திக் கொண்டே கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்த வீசத் தொடங்கியது. யாராவது அருகில் சென்றால் கடிக்கவும் செய்தது. யாராலும் அருகில் செல்ல முடியவில்லை. இந்தக் குழந்தையின் செயலால் மற்ற குழந்தைகள் கத்தத் தொடங்கின. நாராயணியும் தமிழ்ச் செல்வியும் அந்தக் குழந்தையின் அம்மாவும் அந்தக் குழந்தையுடன் போராடி அதனை சமாதானப் படுத்த முயன்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்ச்செல்விக்கு தலையில் அடிபட்டது. தலையிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தத்தை பார்த்ததும் குழந்தை பயந்து அழுதது. அந்த மீசை இளைஞன் அந்தக் குழந்தையை தூக்கிக் கொண்டான். அதனிடம் ஏதோ பேசுவது போல எதையோ காட்டுவது போல கொஞ்சம் தள்ளி அழைத்துச் சென்றான். பள்ளியில் எப்போதும் தயாராக இருக்கும் மருத்துவக் குழு தமிழ்ச்செல்விக்கு முதலுதவி செய்தது. மெல்ல மெல்ல குழந்தை சமாதானமடைந்தது. மற்ற குழந்தைகளும் அமைதியடைந்தன. குழந்தையின் தாய் நன்றி சொல்லி குழந்தையை வாங்கிக் கொண்டாள். தமிழ்ச்செல்வியும் அந்த இளைஞனிடம் நன்றி கூறினாள்.

"ரொம்ப தேங்கஸ்!"

"இட்ஸ் ஓ கே!"

"எப்டி சமாதானப் படுத்தினீங்க?"

"நோ! நோ! நோ டமில்!"

இத எங்கியோ கேட்டிருக்கோமே! தமிழ்ச் செல்வி யோசித்தாள். இவ்வளவு நேரமும் நாராயணி ஆங்கிலத்தில் உரையாடியதால் பெரிதாக எதுவும் தெரியவில்லை. குழந்தையின் அம்மாவும் நன்றியை ஆங்கிலத்தில் கூறிவிட்டாள். இப்போது தமிழ்ச்செல்வி தமிழில் ஏதோ கேட்கவும் இளைஞன் தமிழ் தெரியாது என்றான்.

ஆனால் இப்போதும் அவளுக்கு நினைவு வரவில்லை. சரிபோ! விட்டு விட்டாள்

ஆங்கிலத்தில் பேசினாள். அவன் இவளைப் பற்றி கேட்டான். இவள் எம்டெக் படித்திருக்கிறாள் என்று தெரிந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனான். அவ்வளவு படித்தும் நிறைய சம்பளம் கிடைக்கும் வேலைக்குப் போகாமல் இங்கே குழந்தைகளிடம் அடிபட்டுக் கொள்வதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வதை நினைத்து வியந்தான். அவளைப் பற்றிய மதிப்பு அவன் மனதில் உயர்ந்தது.

"ஐ திங்க் வீ மெட் பிஃபோர்! பட் டோன்ட் ரிமெம்பர் வென்?" அவள் சொன்னாள். ("நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்! ஆனால் எப்போது என்று நினைவுக்கு வரவில்லை!")

"இஸ் இட்! மே பீ! ஐ டோன்ட் ரிமெம்பர்!" அவன் சொன்னான். ("அப்படியா? இருக்கலாம்! எனக்கு நினைவில்லை!")

அவன் அவளுடைய பெயரைக் கேட்டான்.

"தமிழ்ச்செல்வி!"

"டமில் செவிலி!"

"நோ! நோ செவிலி! செல்வி! செல் ....வி!" தனித் தனியாக சொல்லிக் காட்டினாள். மனதுக்குள் செவிலிதானே! சரியாகத்தான் சொல்கிறார் என்று நினைத்தாள்.

"செல் .... வி! ஓகே! டமில்....செல்... வி!"

இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தான்.

அவளுக்கு கூச்சமாக இருந்தது. இருந்தாலும் எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

"யுவர் குட் நேம்?"

"ஐயாம் சூரஜ் ராதோட்!" சொல்லி தன் விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான். அவள் அதை தன் ஹேன்ட் பேகில் பத்திரப் படுத்தினாள்.

"ஓகே! மிஸ். டமில்.. செல்.. வி! நைஸ் மீட்டிங்! பை!" விடை பெற்றுக் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான். அனைவரும் நாராயணியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

விழா இனிமையாக முடிந்தது. அதனால் மதியமே அனைத்து குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆசிரிய ஆசிரியைகளும் கிளம்பினர்.

தலையில் கட்டு இருப்பதால் அவளை வண்டியை பள்ளியிலேயே விட்டுவிட்டு ஆட்டோவில் போக நாராயணி கூறினார். ஆனால் தனக்கு ஒன்றுமில்லை என்று கூறி ஸ்கூட்டியிலேயே கிளம்பினாள்.

வழியில் சாலையோர இளநி கடையைப் பார்த்ததும் அவளுக்கு இன்று வந்த சூரஜ் ராத்தோடை அன்று இளநிக் கடையில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

அந்த இளைஞன் அன்றும் இன்று போலவே, "நோ! நோ! நோ டமில்!" என்று கூறியதும் நினைவுக்கு வந்தது.

வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலையாக தன்னுடைய மொபைலில் அவன் விசிட்டிங் கார்டைப் பார்த்து அவன் மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டாள்.

அவன் தன் பெயரை "டமில் செவிலி!" என்று அழைத்ததையும் பின்னர் அதை சரியாக உச்சரிப்பதற்காக தன் பெயரை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்ததையும் நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவள் தனக்குத் தானே சிரிப்பதைப் பார்த்த அவளுடைய பாட்டி லட்சுமி என்னவென்று கேட்க,

"ஒண்ணுமில்ல பாட்டி! இன்னிக்கு எங்க ஸ்கூலுக்கு சில பேர் வந்தாங்க! அவங்கள்ள ஒருத்தரு ஹிந்திகாரர். என் பேர தப்பு தப்பா சொன்னாரா! அதான் நெனச்சா சிரிப்பா வருது!" என்று உள்ளதை உள்ளபடியே கூறிவிட்டு உள்ளே ஓடினாள்.

"பேர ஒருத்தன் தப்பா சொன்னா கோவப்படாம சிரிச்சிகிட்டு இருக்காளே! என்ன பொண்ணுடியம்மா!" என்று சிரித்தார் லட்சுமிப்பாட்டி.





வேல்விழியாள் அவள்
வேற்று மொழியாள்!
வெயிலுக்கு இளநீரும்
வாங்கச் சென்றாள்!
வேந்தனவன் முகம் கண்டு
தனை மறந்தாள்!
விழிகளே கவிதைகள்
பாடுகையில்
மொழிகளுக்கு இங்கு என்ன வேலை?
காதலில் இரு மனங்கள்
கலந்து நின்றால்
மொழியில்லாக் கவிதையுமே
முத்திரை பதித்திடுமே!


- C. Puvana



- காதலின் மொழி என்ன?


 
Top