கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

1.செல்லாத்தியே நீதானடி

Gayathrirajkumar

Moderator
Staff member
"தேவ் ..தேவ் என்னடா மாப்பிளை கல்யாணத்துக்கு ரெடியாகிட்டியா?"என குசலம் விசாரித்தபடி வந்தான் அவன் நண்பன் விக்ரம்.
"ம்ம்ம்"என்ற பதில் மட்டும் மொழிந்தது தேவின் திருவாய்.
சரியாக சவரம் செய்யப்படாத தாடியும்,கலையிழந்த முகமும் அவன் ஆழ்மனதில் இன்னும் பழைய நினைவுகள் கரையவில்லை என்பதை உணர்த்தியது அதை முழுவதுமாய் உணர்ந்துகொண்டான் விக்ரம்.
"இதற்கு மேல் ஏதாவது கேட்டால் தன்னை கொன்றாலும் கொன்றுவிடுவான்"என்பதையறிந்தான் விக்ரம்.
அவனுக்கு ஒருவாராய் மாப்பிள்ளை தோரணைக்கு தயார் செய்து மணவறைக்கு அழைத்துச்சென்றான் விக்ரம்.
"கெட்டிமேளம்...கெட்டிமேளம்"என்று மேளவாத்தியமும் நாதஸ்வரமும் முழங்க
மங்கலநாணை யாழினி கழுத்தில் கட்டினாள்.
பூவையாய் வீற்றிருந்த பாவையவள் நாணத்தோடு அந்த மங்கலநாணை தன்னவனிடம் கழுத்தில் வாங்கிக்கொண்டாள்.
முகத்தை திருப்பியவாறு எதற்கோ திலகமிடுவதைப்போல இஷ்டமின்றி அவள் நெற்றியில் திலகத்தை வைத்துவிட்டான் தேவ்.இது நடந்தது திருமணத்தன்று.
"அப்பா உனக்கு அம்மாவை எவ்வளவு பிடிக்கும் "என்றாள் குட்டி மகள் தீப்தி.
"ரொம்ப...ரொம்ப பிடிக்கும்"என சிரித்தவன் தன் அலுவலக கோப்புகளை ஒருகையில் ஏந்தியவாறு மறுகையில் மெல்ல அவள் இடையை கிள்ளிச்சென்றான்.
"ஆஆவென "கத்தியவள் தீப்தி இருப்பதைக்கண்டு சுதாரித்து விட்டு அமைதியானாள்.
"சரியான இம்சை இம்சை"என புலம்பியவாறும் சிறு புன்னகையோடும் அடுக்களை வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
காதலை ஒவ்வொரு தருணமும் உணரச்செய்யும் கணவன்,அவர்கள் அன்புக்கு அடையாளமாய் தீப்தி குட்டி இவையெல்லாம் கிடைப்பதற்கு யாழினி மட்டுமே காரணமாவாள்.அவளின் சமயோஜித புத்தியும்,ஆழமான காதலும் இல்லாமல் தேவ் மனதைமாற்றுவது கடினமான காரியம்.
யாழினி_தேவ் காதல் எங்கே எப்படி மலர்ந்தது என்று பார்க்கலாமா.
தேவின் மாமாமகள் பூரணி.இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான்.பூரணியின் பூரணமான அழகும் அவளின் அவளின் கூர்மையான வசீகரிக்கும் கண்களும் செதுக்கி வைத்த சிற்பமாய் அழகாய் தெரிந்தாள்.
அதைவிட அவளின் சாந்தமான பண்பும் அடக்கமான தன்மையும் அவள்புறம் அவன்மனதை வசீகரம் செய்தது.
"தட்டை மாத்திக்கோங்க"என்று ஐயர் கூறியதும் இருகுடும்பத்தாரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டர்.
பிரபல இரும்புத்தொழிற்சாலையின் மேனேஜராக பணிபுரிபவன் .தொழில் என்று வந்துவிட்டால் அவனுக்கு அடிபணிந்து வேலைகளை சரியாக செய்ய வேண்டுமென்று நினைப்பான் அத்தனை ஸ்ட்ரிக்ட் பேர்வழி இன்று பூர்ணிமாவிடம் மனதை பறிகொடுத்து இளகி நின்றான்.அவன் ஆண்மை அத்தைமகளிடம் தோற்றது காதலின் வலிமையை உணர்ந்தான்.
அவளிடம் பேசவும்,அவளோடு பழகிடவும் அவன் மனம் ஏங்கிக்கிடந்தது.
திருமணநாள் குறித்துவிட்டார்கள் இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது.அதற்குள் அவளைப்பற்றி ஐம்பது சதவிகிதமேனும் தெரிந்துகொள்ளவேண்டுமென அவன் மனம் துடித்தது.
நாளை அவளுக்கு பிறந்தநாள் சிறுவயதில் பொம்மையென்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம் அவளுக்காக அழகான பிங்க் வண்ண டெடியை வாங்கிவந்தான் தேவ் ,அத்தோடு அவன் வருங்கால மனைவிக்கு இரவெல்லாம் கண்விழித்து காதல் கவிதையையும் எழுதிக்கொண்டான்.
இப்பொழுது டிரெண்டாக இருக்கும் மொபைலும் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக பேக் செய்யப்பட்டது.
காலையில் ஏழு மணிக்கெல்லாம் அவள் வீட்டு காலிங்பெல்லை தட்டினான்.எரிச்சல் தோய்ந்த முகத்தோடு வந்த பூர்ணிமா"வாங்க அத்தான்"எனச்சொல்லிவிட்டு கடகடவென அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
அவள் வெட்கப்படுகிறாள் என நினைத்தவன் மனது அதைத்தவறாக எண்ண முற்படவில்லை.
பூரணியின் பெற்றோரும் வராத சிரிப்பை வரவைத்துக்கொண்டு "வாங்க மாப்பிள்ளை"என்றனர்.
பூரணியின் தாய் சூடான காபியை கொண்டுவந்தாள்.அதை அருந்தியவன் கண்கள் அவளைத்தேடியது.
"பூரணி... பூரணி"என அவள் அம்மா அவளை அழைக்க மெல்ல அன்னநடையிட்டு அவனருகே வந்தாள்.
"ஹேப்பி பர்த்த்டே "என அவள் கைகளை குலுக்கினான்.அவள் மெல்ல கைகளை அவனிடமிருந்து விலக்கினாள்.அவன் அவள் நாணத்தால் அப்படி செய்கிறாள் என்று நினைத்தான் .
முற்றத்தில் துளசிமாடத்தின் அருகில் நின்றவன் முதன்முதலாக காதலுக்காக யாசிக்கிறான் .கையிலிருந்த டெடியையும் அவன் எழுதிவந்த கவிதையையும் அவளுக்காக பரிசளித்தான்.
அவள் சிரித்தவாறே"தாங்க்ஸ் அத்தான்"என்றாள் கன்னத்தில் விழுந்தும் விழுந்திடாத குழிதெரிய.
மாமா மகளின் அத்தான் என்ற வார்த்தை அவன் ஆயுசுமுழுக்க நிலைக்கவேண்டும் என்று அவனுக்கு இஷ்டமான குலதெய்வம் பெருமாளை வேண்டிக்கொண்டான்.
அவன் மொபைலில் ரீங்காரம் அடித்தது.அவன் நொறுங்கிப்போனான்"என்ன அப்பாவுக்கு ஆக்ஸிடென்டா..எந்த ஹாஸ்பிட்டல்"என்றவன் ,
"பூரணி நான் கிளம்புறேன் பை"என்று கிளம்பினான்.
உள்ளே புது மொபைலிருப்பதை கண்டவளுக்கு ஏகபோக குஷியானது மனம்.
அந்த மொபைலில் அவன் நம்பர் சேவ் செய்யப்பட்டிருக்க "தேங்க்ஸ்"என்ற ஒற்றை வார்த்தை குறுஞ்செய்தி அவளிடமிருந்து புதுமொபைல் மூலமாக வந்தது.
பெருமாளுக்குகூட பிடிக்கவில்லை இந்த காதல்.இப்படி அவன் எண்ணங்களை கூறச்செல்லும் வேலையிலே "இது நமக்கு சரிபட்டுவராது"என்பதை அவன் அப்பாவின் ஆக்ஸிடென்ட் மூலம் பொருளுரைத்துள்ளார்.
"உங்கள் கவிதை நல்லாயிருக்கு அத்தான்"என்றாள் பூர்ணிமா.
அவளுக்கு பிடித்துவிட்டதென அவனுக்கு தலைகால் புரியவில்லை.
தினமும் இரவு வேலைகளில் காதலன் காதலிக்கு அழைப்பது போல் அழைப்பான்.அவளும் மொபைலை அட்டெண்ட் செய்து அவன் சொல்வதற்கெல்லாம்"ம்ம்ம்"என்ற பதில் மட்டும் கூறுவாள்.
எத்தனை பணிவான பெண் என்று நினைத்தது காதல் கொண்ட அன்பானவன் நெஞ்சம்.
குணசீலனுக்கு சிறிய அடியென்பதால் ஒருவாரத்தில் இயல்புநிலை திரும்பியது.
இதோ திருமணம் நெருங்கிவிட்டது.நண்பர்கள் புடைசூழ ஒவ்வொருவரும் பல விதமான கல்யாண டிப்ஸ்களை அள்ளித்தெளிக்க புதுமாப்பிள்ளையின் சந்தோஷம் இரட்டிப்பானது.
"கெட்டிமேளம்...கெட்டிமேளம்"என்று மேளம்முழங்க தாலியைக்கட்ட சென்றவனுக்கு பேரதிர்ச்சி.பூர்ணிமாவின் வலதுபுறம் அமர்ந்திருந்த இவன் கையில் ஒரு தாலியிருக்க,வலதுபுறத்தில் அந்த கருவாயன் குறித்த முகூர்த்தத்தில் அவள்கழுத்தில் தாலிகட்டிவிட்டான்.
தேவின் தாய் சக்தி அவள் அண்ணனிடம்"என்ன பொம்பளபுள்ளையை நீ பெத்து வைச்சிருக்க"தாம்தூமென கத்திகூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.
பூர்ணிமா"ஐ ஆம் ஸாரி"என்ற ஒரு வார்த்தையை தேவிடம் உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி அவன் பைக்கிலேறி சென்றாள்.
மண்டபத்திலிருந்து வெளியேறியவன் காரிலேறி அமர்ந்தான்.அங்கு குப்பைத்தொட்டியில் அவளுக்கு ஆசையாய் பரிசளித்த டெடிபியர் கிடந்தது.
'சீ.இதுதான் காதலா'ன குப்பைத்தொட்டியை பார்த்தவனுக்கு சலிப்பு தட்டியது வாழ்க்கை பற்றற்று போனது.
'இத்தனை நாள் பூர்ணிமா ஆடியது நாடகமா?' என அந்த அமுக்குனியை நினைந்து வெந்துநொந்து போனான்.
"பூரணி பூரணி "என கத்திக்கொண்டே தலைகுனிந்தவாறு அவள் பெற்றோர் சென்றனர்.
திருமணமேடை வரை சென்ற திருமணம் அபசகுணமாக கருதப்படுவது தம் தமிழ்நாட்டு பாணிப்பாயிற்றே.அனைவரும் முகம் சுழித்தவாறு தேவின் புறம் பரிதாபப்பார்வை வீசினர்.
அவன் கம்பெனி தொழிலாளர்கள்கூட அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
கம்பீரமாக இருந்தவனுக்கு காதல் தோல்வி,கல்யாணமுறிவு,மற்றவர்களின் ஏளனப்பார்வை எல்லாம் ஒன்றுசேர்ந்து மன உளைச்சலை தந்தது.
ஒருமாதகாலம் எதையோ பறிகொடுத்தவனாய் வீட்டினுள் முடங்கிக்கிடந்தான்.அந்த பெரியதொழிற்சாலையில் மேனேஜர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டான் பல கோப்புகளில் தவறு நடந்தமையால்.
அடுத்தடுத்து அடி எவ்வளவுதான் தாங்க இயலும் அவனால்.
அவன் தாயும் தந்தையும் அவனுடைய நிலை கண்டு நிலைகுழைந்தனர்.
நல்ல திறமைசாலி என்பதால் ஒருவருடபோராட்டத்திற்கு பின்னர் வேறொரு தொழிற்சாலையில் மேனேஜராக பொறுப்பேற்றான்.
அவன் கவனம் முழுவதையும் தொழிலில் திருப்பினான் நல்ல முன்னேற்றம் கண்டான். ஒரு கட்டத்தில் அவன் கடும்உழைப்பை பாராட்டி மேலும் இரண்டு கம்பெனிகளின் பொறுப்பையும் தர்மராஜன் கொடுத்தார்.
அவன் நேர்மையும் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் தர்மராஜனுக்கு பிடித்து போனது.
தன் ஒரே அன்புமகள் யாழினியை அவனுக்கு மணம் முடிக்க அவன் பெற்றோரிடம் மாப்பிள்ளை கேட்டார்.
தேவின் தாய் சக்தி அவனிடம் ஒற்றைக்காலில் நின்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தாள்.
இவையெல்லாம் அவன் நெருங்கிய நண்பன் விக்ரமிற்கு தெரியும்.இந்த திருமணத்திற்கு மற்ற எந்த நண்பர்களுக்கும் திருமண அழைப்புகூட தரவில்லை.
விக்ரம் மட்டுமே அவன் கடுமையான நேரங்களை கடப்பதற்கு உதவிசெய்தான்.மற்றவர்கள் எள்ளிநகையாடுவதிலேயே இருந்தனர் அவன் மனவேதனையை புரிந்துகொள்ளவில்லை.
மறுமுறை கெட்டிமேளம் முழங்கியபோது திருமணம் சீரும்சிறப்புமாக நடந்தேறியது.
யாழினி பூர்ணிமாவைக்காட்டிலும் சற்று நிறம் குறைவானவள்தான் ஆனால் அவளைவிட அழகான முகமும்,புத்திகூர்மையும்,எதையும் பளிச்சென பேசும் திறனும் கொண்டவள்.
நல்ல படிப்பு,அந்தஸ்துடன் அனைவரையும் அனுசரித்து போகும் குணமுடையவள்.
திருமணம் முடிந்து அன்று தேவ்_யாழினி தம்பதி முதலிரவு அறைக்குள் அனுப்பப்பட்டனர்.அவள் மஞ்சள் முகம் முழுக்க வெட்கம் பூசி மெருகேறியிருந்தாள்.
அவனோ முகம்முழுக்க எரிச்சலோடு அவள் அவனிடம் நீட்டிய பால்சொம்பை தட்டிவிட்டான்.அவளுக்கு பகீரென்றானது இருந்தாலும் சமாளித்துக்கொண்டாள்.
"இப்போ என்ன உங்களுக்கு இந்த முதலிரவுல உடண்பாடில்லை...சரி நான் மேலே படுத்துக்குறேன்,நீங்கள் கீழே படுங்கள்"என்றவள் பாய் ,தலையணை மற்றும் போர்வையை எடுத்து கீழே போட்டுவிட்டு.
"நீங்களே விரிச்சுக்கோங்க ...நான் டயர்டா இருக்கேன்"என சொல்லிவிட்டு குப்புறப்படுத்து தூங்கினாள்.
அவனுக்கு அதிர்ச்சி தாளவில்லை ,அவன் சொல்கேட்டு நடப்பவர்களை மட்டுமே பார்த்தவனுக்கு இந்த திமிர் பிடித்தவளை பார்க்கும்பொழுது கோபமாய் வந்தது.
"இவள் என்ன இவ்ளோ பிஹூ பண்றா"என நினைத்தவன் அவனாகவே போர்வையை விரித்து படுத்துத்தூங்கினான்.😝😝😝
'சரியான திமிர்பிடிச்சவளா இருப்பாபோலயே...என் பூர்ணிமா அப்படியில்லை 'என நினைத்தவனுக்கு..இப்பொழுது மனதில் தெரிந்தது துரோகி பூர்ணிமா...
'சே...அந்த நம்பிக்கைதுரோகியை போய் நினைக்குறேனே என்னோட மனதை முழுவதும் கொன்று புதைச்சு போட்டாளே ,அவளை போய் நினைக்குறேன்'என்று மனம் சொல்ல வேகமாக கோபத்தில் சுவற்றை ஓங்கி குத்தினான்.
"அய்யோ அம்மா...வலிதாங்க முடியலையே"எனக்கையை உதறியவன் யாழினி கொறட்டை விட்டு தூங்குவதைப்பார்த்துவிட்டு கையில் ஐயோடெக்ஸ் மருந்தை தேய்த்துவிட்டு உறங்கினான்.
காலையில் எழுந்தவனுக்கு பேரதிர்ச்சி அவளைக்காணவில்லை காலைக்கடன்களை முடித்து குளித்து கீழிறங்கியவன்.
அவள் நல்லவள் போல் அவனருகில் வெட்கத்தோடு வந்து"இந்தாங்க காபி எடுத்துக்கோங்க"என்றாள்.
அதனை வேண்டாவெறுப்பாய் வாங்கியவன் மனம்
'அடேங்கப்பா உலகமகா நடிப்புடா சாமி' என்று நினைத்தது.
காபியை அருந்தியவன் அருகில் நின்றவள் புருவங்களை ஏறதூக்கிவிட்டு மெல்ல கண்ணடித்தாள்.தேவ் படாரென கீழே குனிந்துவிட்டான்.
விக்ரமின் ஃபோன் கால் வந்தது"மச்சி எல்லாம் ஓ.கே ஆயிடுச்சா"என்றான் விக்ரம்.
மெல்ல வெளியே எழுந்து சென்றவன்"அடச்சீ வாயமூடுடா....ஏன்டா எல்லோரும் சேர்ந்து படுத்துறீங்க ...இப்போ புதுசா இவள் வேற இம்சை பண்றாடா"என்று தேவ் கூறியதும் உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டான் விக்ரம்.
இதற்குமேல் அவனை தேவ் கடித்துகுதறிவிடுவான் என்பதை நன்குணர்ந்தான் விக்ரம்.
'சரியான லூசுபய...இவனும் இப்படித்தான் இருக்கிறான்'என தலையில் அடித்துக்கொண்டு ஆபிஸ் கிளம்பினான் தேவ்.
"அத்தை அவர் கிளம்பிட்டாரு நானும் கிளம்புறேன்"என்று தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு அவனுடன் செல்வதற்கு தயாரானாள் யாழினி.
"ஏய் நீ எங்க வர்ற நான் ஆபிஸ் போறேன்" என்றான் எரிச்சலாக.
"ஹலோ சார் நானும் இனி தினமும் உங்ககூட ஆபிஸ் வருவேன்...அப்பா ஆறுமாதத்துக்கு வெளிநாடு போகிறார் பிஸ்னஸ் சம்பந்தமாக அதனால் என்னைய கம்பெனியை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்"எனாறாள் யாழினி.
"ஐயோ பெருமாளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற "என்று மனதில் நினைத்ததை வாய்விட்டே சொல்லிவிட்டான்.
"ஹீஹீ....உங்களோட தலையெழுத்தை யாரும் மாற்ற இயலாது"என்றவாறு சிரித்தாள் யாழினி.
அவன் பைக்கில் பின்புறம் ஏறியவள் அவன் இடுப்புப்பகுதியை இறுக்கமாகப்பிடித்தாள்.
"ஏய்...ஏய்...நீ என்ன பண்ற"என்று பதறியவனை பார்த்தவளுக்கு சிரிப்பாய் வந்தது.
"பைக் ரைட்னா எனக்கு பயம்...அதான் இறுக்க பிடிச்சுட்டேன்"என்றாள்.
"கீழே இறங்கு முதலில்...உனக்கு கேப் பேசிவிடறேன் நீ ஆபிஸ் வா"என்றான்.
இவள் ஏதும் பேசாமல் கீழிறங்கி முகத்தை உம்மென வைத்துக்கொண்டாள்.அதற்குள் அங்கு வந்த சக்தி"ஏன்மா டல்லா இருக்குற"எனக்கேட்டார்.
"அத்தை அவர் என்னைய பைக்ல ஆபிஸ்கூட்டிட்டு போகாமல் கேப் புக் பண்றாரு"என்று சொல்லதான் செய்தாள் யாழினி.சக்தி வானுக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தாள் சக்தி.
அம்மாவின் நச்சரிப்பு தாளாமல்"நான் பைக்லயே கூட்டிட்டு போறேன் ..ஏறுமா தாயே"என யாழினியை பைக்கில் ஏற்றினான்.
அவளின் மெல்லிய கரத்தின் இளகிய அணைப்பு அவனுக்கு ஆனந்தத்தை தரவில்லை மாறாக
"எப்படா ஆபிஸ் வரும்"என்ற எண்ணம் தொற்றியது.
ஆபிஸில் கணக்கு வழக்கு பார்ப்பதிலும் வீட்டை அவன் பெற்றோரை பராமரிப்பதிலும் கெட்டிக்காரியாக திகழ்ந்தாள்.சமையலும் அத்துபடி ஆனால் அவளுடைய ஒரே குறை அவள் கணவன்மட்டும்தான்.
விதவிதமாய் உடுத்தினாலும் சரி,கண்டுகொள்ளாததுபோல அவனை கண்காணித்தாலும் சரி,விதவிதமாய் சமைத்தாலும் சரி, எதற்கும் மசியாத கல்நெஞ்சுக்காரன் அவன்.
இப்பொழுதுதெல்லாம் சொந்தங்களிடமிருந்து வரும் ஒரே வார்த்தை"என்ன இன்னும் விசேஷமில்லையா".
இவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை"ஏதாவது நடந்தாதானேடா விஷேசம் வரும்...சிறுபிள்ளைதனமா பேசுராங்களே"என டேக் இட் ஈஸியாக மனதை தேற்றிக்கொண்டாள்.
எல்லாம் அவன் மனதை எப்படியும் மாற்றிவிடலாம் என்ற ஒரே நம்பிக்கைதான்.
ஒருவருடம் இப்படியே ஓடிப்போனது திருமணநாளும் வந்தது.பெற்றோர்களின் இம்சை தாளாமல் கோவிலுக்கு சென்றவனுக்கு பேரதிர்ச்சி.
கருவாயனும் பூர்ணிமாவும் கையில் ஒன்றரை வயது குழந்தையுடன் நின்றிருந்தார்கள்.இவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
பூர்ணிமா அவனை எதேர்ச்சையாக பார்க்க தலையை கவிழ்த்துக்கொண்டாள்.இவன் மெல்ல யாழினி அருகில் சென்று அவள் தோல்மேல்கைபோட்டு"சரி வா தங்கம் வீட்டுக்கு கிளம்பலாம் மணியாயிடுச்சு"என்றவன் குங்குமம் வேறு வைத்துவிட்டான்.
"என்னடா இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா "என நினைத்தவாறுஅவன் செய்கையை அறியாமல் உற்று நோக்கினாள் யாழினி.
"குழந்தையை ஒரு நிமிடம் பிடிச்சுக்கோங்க"என்றவள் வேகமாக தேவிடம் ஓடிவந்தாள்.
"அத்தான் அத்தான் என்னை மன்னிச்சுருங்க...நான் பண்ணுனது தப்புதான் .எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.அப்பா அம்மாவுக்கு பயந்துதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்,அர்ஜூனைத்தான் நான் விரும்பினேன்"என அவன் கால்களில் விழுந்து மன்றாடினாள் பூர்ணிமா.
"ஏய் வழியை விடு...நீ யாருனே எனக்குத்தெரியாது"என மூர்க்கமாக அவளை தள்ளிவிட்டவன் வேவேகமாக நடையைக்கட்டினான்.
பூர்ணிமா "அத்தான்அத்தான்"எனக்கதறியும் அவன்செவிசாய்க்கவில்லை.வேகமாக தன் ராயல்என்ஃபீல்டில் ஏறியவன் பைக்கை கிளப்பினான்.
"ஏய் உனக்கு வேற சொல்லனுமா ஏறுடி வண்டியில"என ஒரு அதட்டு போட்டதும் கப்சிப்பென வண்டியில் ஏறினாள் யாழினி.
'அம்மாடியோவ்...இந்த சிடுமூஞ்சிக்கு இவ்ளோ கோவம் வருதே...யாழுமா அமைதியா இருக்குறதை வச்சு எடைபோடாத நீ கொஞ்சம் அடக்கிவாசி 'ன மனதில் நினைத்துக்கொண்டாள்.
வண்டியை வேகமாக ஓட்டியவனிடம்"கொஞ்சம் மெல்ல போங்க"என்றாள் யாழினி.
 
Last edited:
Top