10.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
"சுந்தரி நீ பண்றது எதுவுமே சரியில்லை மலர் இருக்கும் போது வினோவுக்கு மாப்பிள்ளை பார்க்குறது சரியில்லை" என்று சங்கர் கடிந்து கொள்ள... அவர் சொல்வதை எதையும் கேட்க கூடாது என்று காதில் விழாத மாதிரி தனது வேலைகளை தொடர்ந்தாள் சுந்தரி.
"அண்ணி அண்ணி" என்றழைக்க...அங்கே வந்த காமாட்சியிடம்" நாளைக்கு வினோவை பொண்ணு பார்க்க வராங்க அதனால நீங்க வீட்ல இருக்க வேண்டாம்" என்றாள் சுந்தரி.
அதைக் கேட்டு தலையை ஆட்டிய காமாட்சியை பார்த்து.சுந்தரி "நீங்களும்னா உங்க பொண்ணையும் சேர்த்து தான் சொல்றேன் புரியுதா?" என்று சொல்ல...அவர் அமைதியாய் இருந்தார்.
அதைக் கேட்ட சங்கர் "சுந்தரி எதுக்கு இப்போ அண்ணியையும் வீட்ல இருக்க வேண்டாம்னு சொல்லுற?என்று கேட்க...
அதற்கு சுந்தரி "இங்க பாருங்க உங்க அண்ணி இருந்தாலும் தேவையில்லாத பிரச்சினை வரும் மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றவங்க இவங்க யாருன்னு கேட்பாங்க நாம சொல்லுவோம் அடுத்து இவங்களுக்கு பசங்க இருக்காங்களான்னு கேட்பாங்க அடுத்து மலரைப் பற்றி சொல்லணும், ஏன் அவளுக்கு கல்யாணம் பண்ணலையான்னு கேட்பாங்க நாம அசிங்கப்பட்டு நின்றதை சொன்னா வினோக்கு கல்யாணமே நடக்காது
அதனால அண்ணியை ஒதுங்கிக்க சொல்றேன்.அப்படி யாராவது கேட்டா எனக்கு சமாளிக்க தெரியும்.என்னோட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்காமல் வீட்ல வைக்க முடியாது அதனால நான் சொல்றதை புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன்" என்று சொல்லி முடித்தாள் சுந்தரி.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சி சுந்தரியிடம் "வினோவும் எனக்கு பொண்ணு தான் அவ வாழ்க்கை முக்கியம்னு எனக்கு தெரியும் சுந்தரி,அதனால எப்பவும் வினோவுடைய கல்யாணத்துக்கு தடையாக நானோ என் பொண்ணு மலரோ இருக்க மாட்டோம்" என்று காமாட்சி சொல்ல அவர் சொன்னதை கேட்டு விஷமமாக சிரித்தாள் சுந்தரி.
எதுவும் பேச முடியாத நிலையில் இருந்தார் சங்கர்."அப்புறம் அண்ணி முக்கியமான விஷயம் வினோவை பொண்ணு பார்க்க வர்றது மலருக்கு தெரிய வேண்டாம்" என்றார்.
சரி என்று அவர் சமையலறைக்கு செல்ல... அங்கே நடந்தது எதுவும் தெரியாமல் இருந்தாள் மலர். அந்நேரம் வினோவும் மலரும் வெளியே சென்றிருந்தனர்.மறுநாள் ... காமாட்சியிடம் மலர் "அம்மா இன்னைக்கு ஸ்கூல்ல கொஞ்சம் வொர்க் இருக்கு அதனால இன்னைக்கு வர லேட்டாகும்"
"அப்படியா! சரி மலர், நீ சீக்கிரமாக வீட்டுக்கு வருவதாக இருந்தால் கோயிலுக்கு வந்துடு, அங்கே தான் நான் இருப்பேன் நாம ரெண்டுபேரும் ஒன்னா வெளியே
போய் ரொம்ப நாளாச்சுல்ல அதற்கு தான்" என்றார்.
மலரும் சரி என்று அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
ஸ்கூலில் ஆபிஸில் வேலை அதிகமாக இருக்க மதிய இடைவேளைக்கு கூட நேரமில்லாமல் போனது.ஆபிஸ் அறையில் அமர்ந்தே தனது மதிய உணவை உண்டாள்.நாளைக்கு ஸ்கூலுக்கு செக்கிங் வருவதால் இத்தனை நாட்களாய் முடிக்காமல் போன அனைத்து வேலைகளும் அவள் தலைமேல் விழுந்தது.தன்னை சந்திக்க வந்த தேவியிடம் கூட சரியாக பேச முடியவில்லை.மாலை நேரம் துவங்குவதற்கு முன்னரே காமாட்சி தன்னுடைய வேலைகளை விரைவாக முடித்து கோயிலுக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்றார்.தான் நினைத்த வேலை மிக எளிதில் முடிந்ததில் சுந்தரிக்கு எல்லையில்லா ஆனந்தம்.வினோவை புடவையை எடுத்து உடுத்தச் சொல்ல ஏன் என்று காரணம் கேட்க... சுந்தரி பெண் பார்க்கும் படலத்தை கூறினாள்.
இதைக் கேட்ட வினோ கோபப்பட்டவளாய் "அம்மா நீங்க பண்றது சரியில்லை மலர் அக்கா இருக்கும் போது நான் எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்க முடியும்" என்று கேட்க....
"அப்படி கேளு வினோ சின்ன பொண்ணு உனக்கு தெரியுற விவரம் கூட உன் அம்மாக்கு தெரியலை" என்று சுந்தரியை கடிந்து கொண்டார் சங்கர்.
அவர்கள் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சுந்தரி "வினோ அம்மா எப்பவும் உனக்கு நல்லதை தான் செய்வேன் புரிந்து நடந்துக்கோ" என்று கூற...
"அம்மா என்னை மாதிரி தானே மலர் அக்காவும் அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டீங்கிறீங்க" என்று கேட்க...
"இங்கே பாருங்க ரெண்டுபேரும் நான் சொல்றதை நல்ல காது கொடுத்து கேளுங்க மலருக்கு ஏற்கனவே ஒரு தடவை கல்யாணம் நின்னு போனதால திரும்ப கல்யாணம் நடக்கிறதுன்னு என்பது நடக்காத காரியம் அது வரைக்கும் உனக்கு ஒரு நல்லது நடத்தி பார்க்கக் கூடாதுன்னு சொல்றது சரியில்லை புரியுதா? வினோ நீ இதே மாதிரி தேவையில்லாம அடம்பிடிச்சா மலரை கல்யாணத்துக்கு கூட வர விடாமல் பண்ணிடுவேன்.நான் சொன்னா அதை அப்படியே நடத்துவேன்னு உனக்கு நடத்தி தான் புரிய வைக்கனும்னு அவசியமில்லை என்று நினைக்கிறேன்"என்று வேகமாக கூறிவிட்டு சென்று விட்டாள் சுந்தரி.
பள்ளியில் மலர் அதிக வேலைகளில் சோர்ந்து விட அங்கே வந்த தேவி மலரிடம் "மலர் வீட்டுக்கு போலாம்மா"என்று கேட்க...
"இல்லை தேவி இன்னும் கொஞ்சம் வொர்க் பென்டிங் இருக்குஅதை எல்லாத்தையும் முடிச்சுட்டு தான் போகனும்னு அங்கிள் சொன்னாங்க, அதனால நான் முடிச்சுட்டு வரேன் நீ வீட்டுக்கு போ தேவி" என்றாள் மலர்.
"இல்லை மலர் நான் உனக்காக வெயிட் பண்றேன்.நீ தனியாக இருக்க வேண்டாம். நாம ரெண்டுபேரும் சேர்ந்தே போகலாம் என்று சொல்ல... "இல்லை தேவி நான் தனியா இருக்க மாட்டேன் நான் பைல முடித்த உடனே அதை செக் பண்ணுறது கதிரோட வேலை அதனால அவரும் இங்கே தான் இருப்பாங்க"
"ஓ... ஓஓ..... "என்று கேலியாகச் சொன்ன தேவி மலரிடம் "என்னை விட உனக்கு இப்போ கதிர் முக்கியமா போய்ட்டாருல்ல" என்று சொல்ல....
"ஏய் தேவையில்லாம பேசாத தேவி நேற்றைக்கு உன்னோட அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னேல்ல அதனால வீட்டுக்கு இன்னைக்கு சீக்கிரமா போகணும் காலையில் என்கிட்ட சொன்னே அதனால சொன்னேன் உடனே தேவையில்லாததை பேசுறது"என்று சொல்லி முகத்தை திரும்பிக் கொள்ள...
"ஓ... சரி சரி... என் மேல உள்ள அக்கறைல தானே சொன்னே கோபப்படாதே சும்மா விளையாட்டுக்கு சொன்னால் அதை போய் பெரிது படுத்துற" என்றவள் "நீ ஒத்துக்கிட்டாலும் சரி ஒத்துக்கலைனாலும் சரி அந்த கதிருக்கும் இந்த கலைக்கும் இடையில என்னவோ இருக்கு அது எனக்கு தெரியுது கூடிய சீக்கிரம் அது உனக்கும் தெரியும்"என்று கண்ணடித்து சொல்ல... ஏய் .... என்று தேவியை அடிக்க கையை ஓங்கிய வாறே மலர் எழுந்து கொள்ள அவளை கண்டு வேகமாக வெளியே வந்த தேவி "நான் சொன்னதை யோசித்து பாரு ஒரு மணி நேரம் கழிச்சு கால் பண்றேன் கனவுலகத்துல எடுக்காம இருந்துடப் போற" என்று சொல்லி விட்டு சென்றாள் தேவி.
'இந்த தேவிக்கு ரொம்ப திமிராயிடுச்சு' என்றவள். "நாளைக்கு உனக்கு கச்சேரி வைக்கிறேன்டீ "என்று கத்தினாள் மலர்.
தன்னுடைய வேலைகளை தொடர்ந்தவள் 'ஐயோ ரொம்ப டயர்டா இருக்கே என்றவள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்' என்று டேபிளில் தலையை சாய்த்தவள் அப்படியே கண் அயர்ந்து விட்டாள்.வெளியே சென்றிருந்த கதிர் உள்ளே நுழைந்தவன் மலரைக் காண கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருந்தவளை கண்டவன் அவளருகே சத்தம் இல்லாமல் மெதுவாக அமர்ந்தான்.
அவளது மென்மையான சாதுவான முகத்தைக் கண்டவன் "என்ன அழகு கலை நீ? இப்போ தான் உன்னை இவ்வளவு அருகாமைல நான் உன்னை பார்க்கிறேன் நீ தூங்குறதுனால நான் தப்பிச்சேன் இதே மற்ற நேரமா இருந்தால் என்னை ஜீஸ் பிழிஞ்சிடுவேடீ என் செல்ல..... குட்டி"என்று அவளுடைய நாடியை லேசாக பிடித்தான் கதிர். "உன்னுடைய இந்த பாவமான முகத்துல பின்னாடி சேட்டை பண்ணுற கலை இருக்கான்னு சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க என்று பெரூமூச்சு விட்டவன் என்னை என்ன பண்ணுன நீ? உன்னையே தான் என்னோட மனசு சுத்தி சுத்தி வருது தெரியுமா? இன்னும் உன்கிட்ட நிறைய சொல்லனும்னு ஆசையாக இருக்கு ஆனால் உன்கிட்ட நான் பேசும் போது பொறுமையா கேட்பியான்னு தான் எனக்கு தெரியலை என்று மெதுவாக சத்தம் வராமல் பேசிக் கொண்டிருக்கும் போது அவளது நெற்றியில் உள்ள மூடி முகத்தில் விழ அதை மெதுவாக விலக்கி விட்டவன் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இதுவரைக்கும் ஒரு செல்பி கூட எடுக்கலை தெரியுமா? இப்போ எடுக்கலாமா?" என்று அவளது முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றவன் ஒரு போட்டோ என்று வெவ்வேறு விதமாக போட்டோ எடுத்துக் கொண்டான்.அவளிடம் லேசாக அசைவு தெரிய மலரின் எதிர்புறமாக இருந்த சேரில் அமைதியாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்துக்
கொண்டான்.
கண் விழித்து முழித்தவள் நிமிர்ந்து பார்க்க... எதிரே அமர்ந்து இருந்த கதிரைக் கண்டவள் "ஐயோ எப்போ வந்தீங்க கதிர் நான் ரொம்ப நேரமா தூங்கிட்டேனா "என்று கேட்க...
"உன்னையை நம்பி அந்த மனுஷன் வேலையை கொடுத்துட்டு போன நீ என்னடான்னா தூங்கிட்டு இருக்கே ம்ம்ம்ம்ம் ...... என்ன செய்ய அவருக்கு உன்னை பற்றி தெரியலை" என்று பாவமாக முகத்தை வைத்து சொல்ல...
" உங்ககிட்ட போய் கேட்டேன் பாரு என்னை சொல்லணும்" என்று தலையில் அடித்துக் கொண்டவளைப் பார்த்து "என்னை சொல்றது இருக்கட்டும் முதல்ல நீங்க பைல செக் பண்ணுங்க"என்று அடுத்த டேபிளில் இருந்த பைல காட்ட... "ஆஆ... மறந்துட்டேன் என்றவள் என்னை குறை சொல்லனும்னா ஐயாவுக்கு கற்கண்டா இனிக்கும்" என்று சொல்ல.... "இஇஇஈஈஈ..." என்று சிரித்த கதிர் 'நல்ல வேளை நாம போட்டோ எடுத்ததை பார்த்துட்டாலோன்னு பயந்துட்டேன் நல்ல வேளை பார்க்கலை'என்று மனதினுள் சொல்லிக் கொண்டான்.
இருவரும் வேலையை ஒன்றாக முடிக்க மலர் "கதிர் நான் கிளம்புகிறேன்" என்று சொல்ல... "கலை நாம ரெண்டு பேரும் போய் எதாவது வெளியே போய் சாப்பிடலாமா?" என்று கேட்க...
"வேண்டாம் கதிர் வீட்டுக்கு போகனும் நேரமாயிடுச்சு" என்று சொல்ல... "ப்ளீஸ் கலை சீக்கிரமா வீட்டுக்கு போகலாம் இந்த ஒரு தடவை வாயேன்" என்று அவன் கெஞ்ச... "சரி போகலாம். ஆனால் ஒரே அடிக்கடி என்னை கூப்பிட கூடாது" என்று சொல்ல அவனும் தலையாட்டினான்.
வெளியே வந்து அவன் பைக்கை எடுக்க... "கதிர் பைக் வேண்டாம் ஆட்டோல போலாமே" என்று மலர் சொல்ல.... "கலை ஆட்டோல போகனும்னா லேட் ஆகும் பக்கத்துல தானே பைக்ல போலாம் சீக்கிரமாகவும் வந்துடலாம்" என்று சொல்ல... சரி அவனின் பின்னே அமர வண்டி சென்றது.அமரும் போது கொஞ்சம் இடைவெளி விட்டே அமர்ந்திருந்தாள் மலர்.
"கலை என்ன ஒன்னுமே பேசாம வர்றீங்க" என்று கதிர் கேட்க... மலர் அவனிடம் "கதிர் என்னை எல்லோரும் மலர் தானே சொல்றாங்க நீங்க ஏன் கலைன்னு சொல்றீங்க" என்று கேட்க...
"நீங்க மலரா இருக்கலாம் ஆனா எனக்கு எப்பவுமே கலை தான்" என்று புன்னகையோடு சொல்ல... "ஏன்" என்று கேட்க..."நாம சந்தித்த போது நீ கலை தானே சொன்னீங்க அதான்" என்று சொல்ல... "ம்ம்ம்"என்றாள்.ஆனால் கதிரோ மனதினுள் 'என்றும் இந்த கதிரோட என்னவளின் கலையாக இருக்கனும்' என்று எண்ணிக் கொண்டான் கதிர்.
(தொடரும்)