சத்ய நாராயணன், சட்டென்று அந்த பன்னிரண்டு மாடி கட்டிடத்தின் உயரத்திலிருந்து அழைப்பு விடுப்பானென எந்த மீடியாவும் முதலில் நம்பவில்லை. சென்ற வாரத்தில்தான் அவனது அந்த பிரபலமான பேட்டி உலகை கலக்கியிருந்தது. கருந்துளைகளைப் பற்றிய அவனது புதிய பார்வை ஓர் பிரபல அறிவியல் தளத்தில் வெளியாகி கவனிப்புக்குள்ளான நேரம், அவனது பேட்டி மிக முக்கியத்துவம் பெற்றது.
****************
“ நட்சத்திரங்களை இரவில் முழுசா ரசிச்சிருக்கியா… ? “
“ ம்… உன் முகம்தான் தெரியுது.. “
“ வேற.. ? “
“ சத்யா… உன்னை முழுசா ரசிக்கணும்.. ப்ளேடு போடாத.. “
****************
சென்ற வாரம் ஓர் நாள்,
சுற்றியிருந்த நிருபர் கூட்டம் தமக்குள் சத்தமாய் பேசிக்கொண்டனர். வெளிநாட்டின் ஆங்கில சேனல் நிருபர்கள் சில புத்தகங்களை புரட்டியபடி காத்திருந்தனர். சத்ய நாராயணன் வந்தமர சில கைதட்டல்களின் முடிவில், கேள்விகளை ஆரம்பித்தனர்.
“ கருந்துளைகளை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்க இந்த சந்திப்பா சார் … ? “ என்றார் வட இந்திய நிருபர்.
“ இல்லை, அது முடிந்து போன விஷயம். என்னுடைய கண்டுபிடிப்பு சொல்லியாச்சு, அறிவியலாளர்கள் இந்த கோணத்தில் இதுவரை யோசிக்கவேயில்லைன்னு விவாதிச்சிட்டிருக்காங்க ..”
“ இந்த கோணத்தில் யோசிக்க உங்களுக்கு எது உந்துதலா இருந்தது.. ? “
“ மனிதன் ஆறாம் அறிவை யோசிக்கும் காலத்திற்க்கு முன்னிருந்தே இது எல்லாமே இருக்கு, E = MC ஸ்கொயர் என்பது ப்ரபஞ்ச ஆரம்ப காலம்தொட்டே இருப்பதுதான். அதை சொல்ல, நாம் தெரிந்துகொள்ள யாராவது வரவேண்டியிருக்குது. எல்லாமே கணிதத்தில் அடக்கம்.. “
“ நீங்க எப்படி, இந்த ஆராய்ச்சியெல்லாம்…. ? “
“ ஆர்வம், உழைப்பு, கணித அறிவு… அதோடு நமது ஆன்மிக சிந்தனை.. “
கருப்பு சட்டையணிந்த நிருபர் சட்டென்று முன் வந்தார்.
“ இதிலே எங்க ஆன்மிகம் வருது... சாமியை துணைக்கு கூப்பிடறீங்க.. ? “
“ முக்கியமான விஷயம், எனக்கு நீங்க சொல்ற கடவுள் எதும் நம்பிக்கையில்ல.. ஆனா நமது புராணங்களில் பலவித கற்பனைகளை நீங்க பாத்திருப்பீங்க.. அது அத்தனையும் இப்போ நிஜமாயிருக்கு, வேற வடிவங்களில். “
கண்ணாடியை சரி செய்தபடி, அந்த பெண் நிருபர் ஆர்வமானார்.
“ மாயமா மறையறது கூடவா சார்.. ? “
****************
“ சத்யா, இன்னும் எவ்ளோ காலம் வெய்ட் பண்றது.. “
“ ஒரு வருஷம் மட்டும்டா.. முடிஞ்சிரும், ப்ளாக்ஹோல் பத்திய தீஸிஸ் ரெடி பண்ணிட்டேன். “
“ வெளியிட வேண்டியதுதானே.. “
“ இல்ல, அது எனக்கு ஒரு அறிமுகம்தான். என்னோட மெயின் ரிசர்ச் இப்போ வேற.. “
“ என்னது… ? “
“ அப்படியே நாம வானத்தில், இப்ப பேசிட்டு இருக்கறப்பவே பறந்தபடி பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும் டியர்….. “
****************
அந்த நிருபரை ஊன்றி கவனித்த சத்ய நாராயணன், சிரித்தபடி சொன்னான்,
“ யெஸ், மறையலாம், அதை எதிர் விளைவும்பாங்க, எல்லா எனர்ஜியும் ஸீரோவுக்கு அப்புறம் ஒண்ணுமில்ல. ஆனா அதற்கு கீழே மைனஸில் லெவல் போக, இப்போ நடக்கும் விஷயங்கள் தலைகீழா மாறும், லண்டன் யூனிவர்சிடியில 1970 வாக்கில இந்த சக்தி இருப்பதை உறுதி பண்ணியிருக்காங்க.. “
“ சார், ஏதேதோ சொல்றீங்க… உங்க ஆராய்ச்சி கருத்துகள் வெளியுலகில் பேச ஆரம்பிச்சதால வந்திருக்கோம்.. ஏதோ கொஞ்சமாவது எங்களுக்கும் சயின்ஸ் தெரியும்… “ என்றார், அந்த முதிர்ந்த வெள்ளுடை நிருபர்.
“ அதான் சார் விஷயம், அதனாலதான் கொஞ்சம் பிரபலமானதும் உங்களை கூப்பிட்டிருக்கிறேன்… பழங்காலங்களில் கற்பனா சக்தியில் கண்டறிந்த பல விஷயங்கள், நிஜமா நடத்தமுடியும்… “
“ மாயமா மறையறது பத்தி பேசறீங்களா சார்… “
“ அதில் எனக்கு ஆர்வமில்ல, தவிர அது மிக பெரும்செலவில் ஆராய்ச்சி பண்ணவேண்டிய சப்ஜெக்ட். “
சிறிது தண்ணீர் அருந்தினான்.
“ நாம் சில நேரம் கனவில் , மேலிருந்து கீழே விழறமாதிரி , சட்டுனு விழிச்சிக்குவோம், ஏதும் ஆகாது, சில நேரம் பறக்கிற மாதிரி… “
அமைதி அதிகமானது.
“ மேலிருந்து கீழே நம்மை இழுப்பது, புவிஈர்ப்பு விசை, ஒரு கனமான பொருள் வேகமாகவும், லேசான பொருள் மெதுவாகவும் பூமியை அடைந்தே தீரவேண்டும். தடை ஏற்படுத்துவது காற்றின் மூலக்கூறுகள்.. “
ஒரு சிலர், கொட்டாவி விட ஆரம்பித்தார்கள்.
“ கீழே விழும் மனிதன், அதை எதிர்த்து ஏன் பறக்கமுடியாது.. ? “
****************
“ இரண்டு நாளா நீ ஃபோனே எடுக்கலை சத்யா… “
“ சாரிப்பா… இந்த வாரம் முடிச்சிடுவேன் .. “
“ டேய்…. லூஸா நீ… பொண்ணு பாத்திட்டு போயிருக்காங்கடா… முடிஞ்சிரும்போல இருக்கு.. “
“ நீயே கொஞ்சம் சமாளியேன். ஜெயிச்சப்புறம் சயிண்டிஸ்ட் பொண்டாட்டின்னு பெருமையா சொல்லலாமில்ல… “
“ எனக்கு, பொட்டிகடைக்காரன் சத்யா பொண்டாட்டிகூட போதும், வீட்ல நம்ப விஷயம்வேற தெரிஞ்சிருக்கு, அவசரமா வேற இடம் தள்ளிவிட பாக்கறாங்க.. “
“ நீ ஃபோனை வை… அப்புறம் பேசறேன் “
****************
“ இதன்படி, உயரமான இடத்தில் இருந்து கீழே விழும்போது, நான் காற்றின் அணுக்கள் மீது மெதுவாக காலடி வைப்பேன். படிப்படியாக இறங்கி வருவேன். இதற்கு என் உடலை நிறையற்றதாக அல்லது குறைவான நிறையுடையதாக மாற்ற நமது தியான முறைகளின்படி, சில பயிற்சிகளை முறைப்படுத்தி வழி கண்டுபிடித்திருக்கிறேன். ஒரு சுழலை உடல்மூலம் ஏற்படுத்தி காலின் கீழே படரும் புதிய அணுக்கள் மீது அதனினும் மெல்லிய உடலை பரவ அனுமதிப்பதன்மூலம் ஈர்ப்புவிசைக்கு எதிராக, அல்ல அதனுடன் இணைந்த ஒரு செயல்பாட்டை வடிவமைத்துள்ளேன். இதை நான் முறைப்படி உங்களுக்கு நிரூபித்துக்காட்ட ஒரு நாளை தெரிவிக்கிறேன்.
அதிர்ந்து போன நிருபர்கள், சலசலவென்று பேச ஆரம்பித்தார்கள்.
முட்டாள்தனம் என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்தன. சத்யா தன் கையை உயர்த்தி அமைதியாய் இருக்கவேண்டினான்.
****************
“ ஒரு வாரம் மட்டும்டா… முடிஞ்சிருச்சு.. “
“ இல்ல சத்யா.. கைமீறிடுச்சு.. நிச்சயம் பண்ணிட்டாங்க.. “
“ அதனால என்ன இப்போ… “
“ இல்ல… நானும் யோசிச்சேன். எனக்கு உன் கூட சரியா வராதுன்னு தோணுது …. சம்மதிச்சுட்டேன் “
“ ….. டியர்… டேய்.. நீதாண்டா எனக்கு எல்லாம்.. கொஞ்சம் யோசிடா.. “
“ உன்னை என்னால மறக்கமுடியாது சத்யா.. ஐ லவ் எவ்ரி டைம்…. பட் .. ரியல் லைஃப் வேற .. சாரிடா “
****************
“ யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம், இது முழுக்க அறிவியல், இப்போது நீங்கள் பயன்படுத்தும் பலவிதமான அறிவியல் கூறுகளும் முதலில் மனிதனின் கற்பனையில் தோன்றியதுதான். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவரிடம் இங்கிருந்து முகம் பார்த்து பேசமுடியும் என்பதை சில நூறு ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் சிரித்திருப்பார்கள். இப்போது சிரிக்கும் உங்களைப்போல… ஒரு சிறிய அணுவால் நாட்டையே அழிக்கமுடியும் என்பதை கற்பனையல்ல என பார்த்துவிட்டோம். நம்மால் கண்டுபிடிக்கவேண்டி பலநூறு கண்டுபிடிப்புகள் கண்முன்னே கொட்டிக்கிடக்கின்றன .
……………………………….
…………………….. “
****************
கீழே கவனித்தான் சத்யா... ஓரளவு மீடியா வந்துவிட்டது. போலீசார் கூட. அவர்கள் இறங்கச்சொல்லி மைக் மூலம் சத்தமிடுவது அவனுக்கு கேட்டது. ‘ வருகிறேன்... மெதுவாக.. காற்றில் நடந்து.. ‘ என்று மனதில் சொல்லிக்கொண்டான். சூழல் சற்று குளிராகத்தான் இருந்தது. அவர்களின் பதட்டம் அவனுக்கு வேதனையளித்தது. எனினும் வேறு வழியில்லை. கீழே இறங்கியதும் கிடைக்கும் பாராட்டு, ஆச்சரிய கேள்விகள், உலகையே புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு என்ற பல விஷயங்கள் அவன் முன் சுழன்றன.
உயரத்தில் நுனிகாலில் நின்றவன், மூச்சை முழுமையாக உள்ளடக்கி ஒருவித தியான நிலையை எட்டினான். உடல் பஞ்சினும் மெல்லியதாக இறகுபோல் மாறுவதை உணர்ந்தபின் சட்டென்று குதித்தான்.
“ ஹோ... “
ன்று அதிர்ந்த கும்பல் இடம்விட்டு விலக ஆரம்பித்தது. மீடியா கேமராக்கள் தாவுதலை ஸ்லோமோஷனில் பதிவுசெய்ய ஆரம்பித்தார்கள்.
சத்யா கால்களை காற்றின் ஊடாக நீரில் நீந்துவதுபோல் துழாவினான்.
இதோ... மெதுவாக.. இதோ ஜனத்திரள்.... ஆச்சரிய பார்வைகள்.... எவ்வளவு மனிதர்கள்... அது... அவளேதான்... நீயும் வந்திருக்கிறாயா... பார்.. நன்றாகப்பார்.. நம் குழந்தைக்கு என்ன பெயர் யோசித்தோம்... யோசி.. ஏன் பயமாக பார்க்கிறாய்... பயப்படாதே... அது.. பக்கத்தில்... அவன் தான் மாப்பிள்ளையா.. அழகுதான்.. ஆஸ்திரேலியா டாக்டர் என்றால் அழகில்லாமலா... அவன்.. அவன் ... உன் தோளில் கைபோடுகிறான்.. அவன் உன்னை அணைத்தபடி கும்பலில் விலகுகிறான்..
இதோ வருகிறேன்.. இதென்ன.. எங்கே தவறு... வேகமாக... காலை ஊன்ற முடியவில்லையே... இன்னும் சுதாரிக்க உயரம் இல்லையே..
அடுத்ததடவை.. இன்னும் உயரமாக.....
“சொத்........”
அவள் முகத்திலும் சில துளிகள் ரத்தம் தெறித்தது.