கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

11. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 11


பிங்கியுடன் ட்யூஷன் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து செல்விக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்தார்கள். ஒரே அமர்க்களம்தான். பிங்கிதான் அவர்களின் தலைவி. எவ்வளவு முடியுமோ அவ்வளவு லூட்டி அடிப்பார்கள். ஆனால் தங்களுடைய பாடத்தை கவனமாக கருத்தூன்றிப் படிப்பார்கள்.

அவர்கள் சொல்லித் தரும் ஹிந்தி புரியவில்லை என்றால் விராட் உதவுவான். அதனால் செல்வி ஹிந்தியை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டாள்.

விராட் பதிலுக்கு தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். ஒண்ணும் சரியில்லையே என்று நினைத்தபடியே தமிழைக் கற்றுத் தந்தாள் செல்வி.

ஒருநாள் கௌரியை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றுவிட்டு வரும்போது ஒரு இடத்தில் ஃப்ரெஞ்ச் சொல்லித் தர ஆசிரியர்கள் தேவை என்ற விளம்பர போர்ட் பார்த்து உள்ளே சென்று விசாரித்தாள். நல்ல சம்பளம், பார்ட் டைம் வேலை என்றனர். விராட்டிடம் அதைப் பற்றிக் கூறி வேலையில் சேரலாமா என்று ஆலோசனை கேட்டாள்.

"உங்களுக்கு ஃப்ரெஞ்ச் தெரியுமா?"

"ம். தெரியுமே! ஏன்?"

"முதல்ல உங்களுக்கு என்னென்ன தெரியும்னு ஒரு லிஸ்ட் குடுங்க!"

"விராட்ஜி! தமிழ்ல ஔவையார்ன்னு ஒரு புலவர் இருந்தாங்க! அவங்க என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு! அப்டீன்னு!"

"அப்டீன்னா?!"

"நம்ம எவ்ளோ படிச்சாலும் நம்ம படிச்சது நம்ம கைல பிடிக்கிற மண் அளவுக்குதான். நம்ம படிக்கறதுக்கு இன்னும் இந்த உலகத்து அளவுக்கு விஷயம் பாக்கி இருக்குன்னு அர்த்தம்!"

அவன் புன்னகைத்தான்.

"சரி! அந்த ஃப்ரெஞ்ச் கத்து குடுக்கற வேலைக்கு போகலாமா வேணாமா?"

"என்ன ஏன் பாபி இதெல்லாம் கேக்கறீங்க? எங்க வேணா வேலைக்கு போங்க பாபி!"

"இல்ல! நான் கேக்கற ஆங்கிள் உங்களுக்கு புரியல! நான் வேலைக்குப் போகவான்னு கேக்கல. நான் என்ன கேக்கறேன்னா, அந்த இடம்? அது ஸ்கூல் காலேஜ் பக்கத்தில இல்ல. ஸ்டூடன்ட் ஹாஸ்டல் பக்கத்திலயும் இல்ல. எல்லாத்துக்கும் மேல பார்ட் டைம் ஜாப்க்கு மூணு மடங்கு சம்பளம் தரதுக்கு ரெடியா இருக்காங்க. அதான் எங்கியோ இடிக்கற மாதிரி இருக்குன்னு உங்கள கேட்டேன்."

"ஓ! சரி நான் விசாரிக்கறேன் பாபி! அவங்க எதுனா கான்டாக்ட் நம்பர் குடுத்தாங்களா?"

"ஆமா! இந்தாங்க!" நம்பரைக் கொடுத்தாள். இவள் போய் விசாரித்த போது அந்த இடம் எப்படி இருந்தது. எத்தனை பேர் இருந்தார்கள் என்று எல்லாவற்றையும் கூறினாள்.

"ஓகே பாபி! இன்னும் ரெண்டு நாள்ல சொல்றேன்!"

"தேங்க்ஸ்!" செல்வி ட்யூஷன் எடுக்க மாடிக்கு சென்றாள்.

பிங்கி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து ஏன் என்று விசாரித்தாள். தான் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் உள்ளது என்றும் அந்தப் பார்லரில் வேலை செய்யும் ஒருவன் தன்னிடம் காதல் கடிதம் தந்து விட்டான் என்றும் கூறி அழுதுகொண்டே கடிதத்தை செல்வியிடம் காட்டினாள்.

கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அவன் தமிழன் போலிருக்கிறது என்று நினைத்தாள்.

"விடும்மா! பயப்படாதே! நாளைக்கு விராட் பையாவிடம் சொல்லி ரெண்டு தட்டு தட்டினால் எல்லாம் சரியாகிவிடும்!" என்று தைரியம் சொல்லி பாடத்தில் கவனத்தை செலுத்த வைத்தாள்.

ட்யூஷன் முடிந்து பிள்ளைகள் எல்லாம் போன பின்னர், விராட்டைத் தேடி அவனுடைய அறைக்கு வந்தாள்.

"என்ன பாபி?"

"விராட்ஜி! பிங்கிக்கு ஒருத்தன் லவ் லெட்டர் குடுத்திருக்கான்!"

"ரொம்ப தப்பாச்சே!"

"தப்பான செயல் மட்டுமில்ல! ஆளே தப்பானவன்!"

"அப்டீன்னா?

"ஐயோ! என் வாயால எப்டி சொல்வேன்! ரொம்ப தப்பா எழுதியிருக்கான். அவன கான்டாக்ட் பண்றதுக்கு ஒரு மொபைல் நம்பரும் தந்துருக்கான். இதுல என்ன பெரிய ப்ரச்சனைன்னா, இந்த லெட்டர் வேற யார் கையிலயாவது கிடைச்சா, அவ கேவலமாவனன்னு அர்த்தம் புரிஞ்சுக்குவாங்க! அவன் மேல எந்த தப்பும் புகாரும் வராத மாதிரி எழுதியிருக்கான்!"

"ஐயோ! என்ன பாபி இது? அவகிட்ட என்ன சொன்னீங்க?"

"இத விடும்மா! அவன விராட் பையா பாத்துக்குவார்னு சொல்லிட்டேன்!"

"நல்ல காரியம் செஞ்சீங்க பாபி! குடுங்க பாக்கலாம்!" அவள் கடிதத்தை கொடுத்தாள். அவன் பார்த்துவிட்டு, முதலில் செல்வி தந்த ஃப்ரெஞ்ச் ட்யூஷன் நம்பரும் இந்த கடிதத்தில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லர்காரன் கொடுத்த நம்பரும் ஒன்றே என்று கண்டு பிடித்து அண்ணியிடம் காட்டினான்.

"அடக்கடவுளே! விராட்ஜி! எதோ பெரிய தப்பு நடக்குது. கவனிங்க! அதே நேரத்தில கேர் ஃபுல்லாகவும் இருங்க!"

"சரி பாபி! நான் பாத்துக்கறேன்!"

கீழே சென்றுவிட்டாள்.

மறுநாள் விராட்டுக்கு மதிய சாப்பாடு கொடுத்துவிட்டுத் திரும்பும் போது பிங்கியின் பள்ளியில் எதோ பிரச்சனை என்று பிள்ளைகளை அரைநாள் விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டார்கள். பிங்கி பள்ளி அருகே நின்று கொண்டிருக்கும் போது அந்த பார்லர்காரன் வந்து வம்பிழுத்தான். பிங்கி பயந்து நடுங்கி அழுது கொண்டிருந்தாள். அருகில் மேலும் சில மாணவிகளும் அழுது கொண்டிருந்தனர்.

செல்வி விராட்டுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறிவிட்டு அந்த பார்லர்காரனை நன்றாக அடித்தாள். அவன் கூரிய கத்தி ஒன்றை எடுத்து செல்வியை சீவப் போக, கராத்தே தெரிந்தவளாதலால் அவனது தாக்குதலை அழகாக தடுத்தாள். அவனை கராத்தே ஸ்ரோக்கினால் எளிதாக வீழ்த்தி மாணவிகள் உதவியுடன் கட்டி வைத்தாள்.

செல்வியின் தாக்குதலைப் பார்த்துக் கொண்டே வந்த விராட் ஆச்சர்யப்பட்டான். அண்ணி ப்ளாக் பெல்ட் ஹோல்டர்தான். ஆனா எப்பவோ ப்ராக்டிஸ் பண்ணினது இப்ப எப்டி பண்ண முடிஞ்சிது. அண்ணி யூ ஆர் ரியலி க்ரேட்! என்று நினைத்தபடியே வந்து அந்த பார்லர்காரன் முகத்தைப் பார்த்ததும் வெறியாகி விட்டான்.

பளார் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தான். அவன் அறைந்ததில் அவனுக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

"மாரியே! பையா! ஜோர் ஸே மாரியே!" என்று பிங்கி ஆர்ப்பரித்தாள்.

"பிங்கி, ச்சுப் ரஹோ!" என்று பிங்கியை அடக்கிவிட்டு,

"விராட், அவன ஏன் இந்த அடி அடிக்கறீங்க?" என்று கேட்டாள் செல்வி.

"அப்றம் சொல்றேன் பாபி! நீங்க கிளம்புங்க! தேங்கஸ்!" அண்ணியிடம் சொல்லிவிட்டு,

"ஷாபாஷ் பச்சோன்! பஹுத் ஹோஷியாரி சே காம் கியா! அப் ஆப் லோக் கர் சலோ! சம்பால் கே ரஹ்னா!" என்று மாணவிகளை பாராட்டினான்.

பிங்கியை செல்வி அழைத்துச் சென்றாள். மற்ற மாணவிகளை விராட் தன்னுடன் வந்த போலீஸிடம் கூறி அவரவர் வீட்டில் விட ஏற்பாடு செய்தான்.

பார்லர்காரனைக் கைது செய்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று லாக்கப்பில் அடைத்தான்.

அன்று இரவு செல்வி அவனிடம் மதியம் கேட்டதை திரும்பவும் கேட்டாள். விராட் அவன் யாரென்று கூறினான்.

"உங்களுக்கு அவன் யார்ன்னு தெரியுமா பாபி?"

"எனக்கு எப்டி தெரியும்?"

"ஆனா நீங்க அவன ஏற்கனவே பாத்திருக்கீங்க! அடிச்சிருக்கீங்க!"

"என்னது?" அதிர்ந்தாள்.

"ஆனா எப்போ? எனக்கு ஞாபகம் இல்லையே!"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி நீங்க என்ன மன்னிக்கணும்!"

"மன்னிக்கணுமா? ஏன்? நான் மன்னிக்கற அளவு நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?"

"ஆமா பாபி! தப்புதான் பண்ணினேன். அதுக்குதான் மன்னிப்பு கேக்கறேன்."

"முதல்ல விஷயத்த சொல்லுங்க! அது தப்பா இல்லயான்னு நான் முடிவு பண்ணிக்கறேன். அப்றமா மன்னிப்பு தரலாமா வேண்டாமான்னு பாக்கலாம்!"

"சரி! உங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்கள முதல் முதலா பாக்க வந்தேனே ஞாபகம் இருக்கா?"

"ம்."

"அன்னிக்கு மத்யானம் நீங்க உங்க தம்பி தங்கையோட ஐஸ்க்ரீம் சாப்டப் போனீங்களா?"

"ஞாபகம் இல்லியே!"

"இல்ல. நீங்க யோசிச்சு சொல்லுங்க!"

"சரி போயிருக்கலாம்! அதுக்கு?"

"சரி! நீங்க போனீங்க! உங்களுக்கு ஞாபகம் இல்ல! அத விடுங்க! அப்டி போய்ட்டு சாப்டு முடிச்சி பில் செட்டில் பண்ண ஆனந்த் போனார். அதுக்கப்றம் கொஞ்சம் பின்னாடி நீங்களும் உங்க ஸிஸ்டரும் எழுந்து போனீங்க! அப்ப ஒரு ஆள் வந்து உங்ககிட்ட என்னவோ சொன்னான். உடனே நீங்க பயங்கர கோவமா அவன அறைஞ்சீங்க! அப்றம் உங்க ஸிஸ்டர் கையப் பிடிச்சி கூட்டிட்டு போய்ட்டீங்க! ஆனா ரெண்டு நிமிஷத்ல ஆனந்தும் வந்து அவன ஒரு அறை விட்டு திட்டிட்டு போனார்! அன்னிக்கு அறை வாங்கினவன் தான் இவன்."

"என்னது? அடக்கடவுளே! சரி இதுல நீங்க என்ன தப்பு பண்ணினீங்க!? நீங்கதான் ஸீன்லயே இல்லையே!"

"நான் ஸீன்ல இல்ல! அந்த பார்லர்ல ஒரு ஓரமா உக்காந்து என் ஃபரண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன். நீங்க மூணு பேரும் பயங்கரமா பேசி சிரிச்சுகிட்டு இருந்தீங்க! எல்லாரும் ஒருமாதிரி பாத்ததும் அமைதியாகிட்டீங்க. அப்றம் தான் இது நடந்தது. நான் அவனப் பிடிச்சி கேட்டதுக்கு அவன் ஒரு பதில் சொன்னான். அதனால.." இழுத்தான்.

"அதனால நீங்க என்ன தப்பா நெனச்சீங்களா?" கூலாகக் கேட்டாள்.

"பாபி!" அதிர்ந்தே விட்டான்.

"சரி விடுங்க! இப்ப எல்லாம் க்ளியர் ஆயிடுச்சுல்ல! அவ்ளோதான். சரி அவன விட்றாதீங்க! அவன்தான் அந்த ஃப்ரெஞ்ச் ட்யூஷன் கேசுக்கு உங்களுக்கு கிடைச்சிருக்கற லூப் ஹோல்! பத்திரமா இருங்க!" சொல்லிவிட்டு நகரப் போனவளை நிறுத்தினான்.

"பாபி!"

"என்ன விராட்!"

"என்ன பாபி ஒண்ணுமே நடக்காத மாதிரி போறீங்க?"

"விராட்! ரொம்ப கன்ஃப்யூஸ் பண்ணிக்காதீங்க! அவன் என் கிட்ட அசிங்கமா பேசியிருப்பான். அப்படி பேசினா மட்டும்தான் எனக்கு அடிக்கற அளவு கோவம் வரும். அதான் அடிச்சிருப்பேன். அவன் கிட்ட, நீங்க ஒரு போலீஸ்ங்கறதுனால என்ன ப்ரச்சனை அப்டீன்னு கேட்ருப்பீங்க! அவன் தன்ன நல்லவனா காட்டிக்க என்னப்பத்தி எதுனா தப்பா சொல்லியிருப்பான். அந்த நெனப்புலயே ஈவ்னிங் என்ன வந்து பாத்துருக்கீங்க! என்னப் பத்தி நல்ல அபிப்ராயம் எப்டி வரும். விடுங்க! நான் ஒண்ணும் பெரிசா எடுத்துக்கல!"

"பாபி! என்ன மன்னிக்க மாட்டீங்களா?"

"நீங்க தப்பு பண்ணினாதான் மன்னிக்கணும். நீங்கதான் எந்த தப்பும் பண்ணலியே!"

"பாபி இருந்தாலும்!"

"விராட்!? நீங்க ஒரு போலீஸ்காரர்! போலீஸ்ன்னா எல்லாத்தையும் சந்தேகப் படனும். நீங்க சந்தேகப் பட்டீங்க! தெளிவாய்ட்டீங்கல்ல! அப்றம் ஏன் கவலப்படறீங்க? சரி இப்ப நடந்த சம்பவத்லேந்து ஒரு லெசன் கத்துக்கோங்க! என்ன தெரியுமா?"

"என்ன?"

"எதையுமே ஒருத்தரோட ஆங்கிள்லேந்து பாக்காதீங்க! அடுத்தவங்க ஆங்கிள்லயும் யோசிக்கணும். இது உங்க போலீஸ் ஸ்டேஷன்ல நீங்க பாக்கற கேஸுக்கு மட்டும் இல்ல! வேற எதுவா இருந்தாலும் இது பொருந்தும்! சரியா!"

"சரி! நீங்க எப்டி இத ஈஸியா எடுத்துக்றீங்க?"

"விராட்! நான் ஒரு போலீஸ்காரன் பொண்ணு! ஒரு போலீஸ்காரன் எப்டி யோசிப்பான்னு எனக்கு தெரியும்! அது மட்டும் இல்ல! நீங்க என்ன தப்பா நெனச்சா எனக்கு என்ன வந்தது. நான்தான் தப்பு பண்ணலியே! அப்றம் என்ன?"

"ஒரு வேள நான் உங்க கல்யாணத்த நிறுத்தியிருந்தா?"

"நான் என்ன நிரூபிச்சிருப்பேன்! ஸிம்பிள்!"

"ம்!"

"சரி! நான் ஒரு கேள்வி கேக்கறேன்! மும்பைல இருக்கறவருக்கு சென்னைல எங்கேந்து ஃப்ரண்ட் வந்தாரு? அதுவும் ரெஸ்டாரண்ட்ல உக்காந்து பேசற அளவுக்கு?" சங்கேதமாய்ப் பார்த்தாள்!

"நீங்க போலீஸ்காரர் பொண்ணுன்னு நிரூபிச்சுட்டீங்க! சொல்றேன்! என் கூட போலீஸ் ட்ரெயினிங் அட்டென்ட் பண்ணின ஒருத்தன் தெலுங்குகாரன். ஆனா தமிழ்ப்பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டு உங்க ஊர்ல அது பேர் என்ன, பெனஸ்ட் நகர்!"

"பெஸண்ட் நகர்!"

"ஆங்! பெஸண்ட் நகர்! அங்கதான் குடித்தனம் பண்றான். அவன் கூடதான் பேசிகிட்டு இருந்தேன்! கோவப்படாதீங்க! ஆக்சுவலா அவனாலதான் எனக்கு தமிழ்காரங்க மேல ஒரு வெறுப்பே வந்துச்சு!"

"அடக்கடவுளே! நாங்க என்ன பண்ணினோம்?"

"அவன் கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணு பயங்கர செல்ஃபிஷ்! மாமியார் மாமனார மதிக்காம புருஷன மதிக்காம ரொம்ப திமிரா நடந்துகிட்டா! அன்னிக்கு அதப்பத்திதான் பேசிகிட்டு இருந்தான்!"

"ஸாரி! விராட்ஜி! ஒரு தமிழ்ப் பொண்ணு தப்பு பண்ணினா ஒட்டு மொத்தமா எல்லாரையும் தப்பா நெனக்கலாமா?"

"அதுக்கும் காரணம் இருக்கு பாபி! இன்னிக்கு அரஸ்ட் பண்ணினேனே அந்த பார்லர்காரன், அவன் அன்னிக்கு என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னான்?"

"பாபி! ஸாரி! ரொம்ப கஷ்ட்டமாயிருக்கு!"

"பரவால்ல சொல்லுங்க விராட்!"

"அவன் உங்க லவ்வராம்! நீங்களும் அவனும் ரொம்ப வருஷமா லவ் பண்றீங்களாம்! புதுசா வேற பெட்டரான லவ்வர் கிடைச்சதும் நீங்க அவன கழட்டிவிட்டுட்டு போய்ட்டீங்களாம்!"

"உவ்வே! ச்சீய் கருமம்!" செல்விக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஸாரி! பாபி!" விராட்டுக்கு ஒருமாதிரியாகிவிட்டது.

"கடவுளே! சரி விடுங்க விராட்! போனாப் போகுது! நீங்க என்ன பண்ணுவீங்க!"

"அதான் நான் உங்கள தப்பா நெனச்சுட்டேன்! தமிழ்காரங்கன்னா பிடிக்காமப் போச்சு!"

"சரி! அந்த ஃப்ரண்ட் இப்ப எப்டி இருக்கார்!"

"நல்லாதான் இருக்கான்! மாமனார் வீட்டோட செட்டில் ஆகிட்டான்! வைஃப் கன்சீவ் ஆகியிருக்காளாம்! சந்தோஷமா போன் பண்ணினான்!"

"பாத்தீங்களா! அவ அட்ஜஸ்ட் பண்ணலன்ன உடனே இவர் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டார்! இதுதான் லைஃப்!"

"பாபி ஸாரி!"

"இப்ப நான் உங்கள அறையப் போறேன்!" என்று கை ஓங்கினாள். அவன் பயந்த மாதிரி நகரவும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.

"ரியலி யூ ஆர் க்ரேட் பாபி! சரி! எனக்கு ஒரு டௌட்!"

"அடடா! இப்ப என்ன டௌட்டு?"

"நீங்க எப்பவோ கராத்தே கத்துகிட்டீங்க! ஸ்ட்ரோக்ஸ் ஞாபகம் இருக்கலாம். ஆனா எப்டி இப்பவும் உங்களால அதே மாதிரி அவன அடிக்க முடிஞ்சுது.?"

"யோகா! யோகா இஸ் தி ஸீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!" என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள்.

அண்ணியை வியந்தபடி உறங்கச் சென்றான். ஆனால் இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

இவ்ளோ தூரம் எல்லாத்தையும் அனுசரிச்சு போற அண்ணி, அந்த ஒரு விஷயத்தில மட்டும் ஏன் ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டாங்க.. அந்த ஒரு விஷயத்தினால இவங்க பண்ற எல்லா நல்லதும் அடிபட்டு போச்சே.. எல்லா விஷயத்திலயும் அவங்கள முழுசா நம்பறேன்.. ஆனா அந்த ஒரு விஷயத்துக்காக அண்ணிய மன்னிக்கவே மாட்டேன்.. என்று நினைத்தபடியே தூங்கிப் போனான்

அதற்கு மறுநாள் விராட், பிங்கியின் பள்ளிக்கு சென்றான்.

தலைமை ஆசிரியையைச் சந்தித்து முதல் நாள் நடந்தவற்றைக் கூறினான். பள்ளிக் குழந்தைகைளை இது போல அவசரமாக பாதியில் விடுப்பு கொடுத்து அனுப்புவதானால், பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வலியுறுத்தினான்.

அது மட்டும் அல்லாமல் யாரும் புதிதாக முளைக்கும் ட்யூஷன் சென்டர்களில் விசாரிக்காமல் சேர வேண்டாம் என்றும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தச் சொன்னான்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பள்ளியில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தினான். அந்த குற்றவாளியைக் கைது செய்ய உதவிய மாணவிகளுக்கு பாராட்டையும் மறக்காமல் தெரிவித்தான்.

அன்று மாலை ஆனந்தி மெஸேஜ் செய்தாள்.

"பிஸியா?"

"இல்ல! இப்பதான் ட்யூட்டி முடிஞ்சி வந்தேன்!"

"ஓ! ஓகே!"

"அப்றம்! என்ன திடீர்னு!"

"இல்ல சும்மாதான்!"

"உங்க ஸ்டடிஸ் எப்டி போய்ட்டு இருக்கு?"

"ம். சூப்பரா போய்ட்டு இருக்கு! நீங்க லவ் ஆஜ் கல் படம் பாத்துட்டீங்களா?"

"இல்ல! அதுக்கெல்லாம் டைம் இல்ல! நா கடைசியா பாத்த படம் சென்னை எக்ஸ்பிரஸ் தான்.. அதுக்கப்றம் படம் பாக்க டைம் இல்ல..""

"ஹ்ம்ம்.. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது.. அதுல ஷாருக்கான் சூப்பரா நடிச்சிருந்தார்!"

"உங்களுக்கு ஷாருக் பிடிக்குமா?"

"ரொம்ப பிடிக்கும்! உங்களுக்கு?"

"தீபிகா படுகோன் பிடிக்கும்! என் தங்கையோட பேர் இருக்குல்ல?"

"ஹேய்! இதானே வேணாங்கறது?"

"நிஜமாதாங்க!"

"நம்பிட்டேன்!"

"சரிங்க! பாபி கூப்பட்றாங்க! அப்றம் மெஸேஜ் பண்றேன்!"

"ஓ! ஓகே! சரி பை! அப்றம் டைம் கிடைக்கும் போது லவ் ஆஜ் கல் போய் பாருங்க!"

"கண்டிப்பா பாக்கறேங்க! பை!"

இப்படி எப்போதாவது வெட்டியாக ஏதாவது மெஸேஜ் செய்வாள்! அவனும் பதிலனுப்புவான். அதில் அவனுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும்! சில சமயம் போன் செய்வாள். ஆனால் அதிகமாக பேசமாட்டாள். இவனும் சில நேரங்களில் போன் செய்வான். சில நிமிடங்களில் வைத்துவிடுவான். ஆனால் மெஸேஜிலும் வாட்ஸ் அப்பிலும் நிறைய நேரம் கண்டதையும் பகிர்ந்து கொள்வார்கள். அவளுடைய வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சரை ஒவ்வொரு முறை அவள் மாற்றும் போதும் அதை டவுன்லோட் செய்து சேவ் செய்து கொள்வான். பத்து நாள் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த மெஸேஜ்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் வரலாயின. அது ஒரு இன்பமான அவஸ்தையாக அவனுக்கு இருந்தது. ஆனால் அந்த அவஸ்தையை அவன் மிகவும் விரும்பினான்.

பிங்கியின் பள்ளியில் கராத்தே வகுப்புகள் ஆரம்பித்தன. செல்வி கராத்தே பயிற்றுவிக்கும் ஆசிரியையாக பிங்கியின் பள்ளியில் சேர்ந்தாள். பின்னர் அவளது திறமைகளைக் கண்டு பள்ளி நிர்வாகம் அவளை முழு நேர ஆசிரியையாக நல்ல சம்பளம் கொடுத்து வேலையில் அமர்த்திக் கொண்டது. அதனால் செல்வி ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஆன்லைன் வேலைகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பள்ளி வேலைக்குச் சென்றாள். அவளுக்கு பழக்கப்பட்ட வேலை என்பதாலும், பிடித்தமான வேலை என்பதாலும் அவள் தினமும் புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டாள்.

காலையில் பிங்கியை அழைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்று வேலை முடிந்ததும் பிங்கியை அழைத்துக் கொண்டு வீடு வருவதும் வழக்கமாயிற்று.

பிங்கி தன் பயம், தன்னிரக்கம் எல்லாவற்றையும் தூர எரிந்துவிட்டு நிமிர்வோடு இருக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று ஒருநாள், தனக்கும் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று செல்வியிடம் கேட்டு வந்து நின்றாள்.

"பாபி! ஐ வான்ட் டு லேர்ன் டமில் லேங்வேஜ்! வில் யூ டீச் மீ?"

"வொய்?"

"அது என்னோட மதர் டங்க் இல்லன்னாலும் நானும் தமிழ்காரிதானே! தமிழனுக்கு தானே நான் பொண்ணா பொறந்திருக்கேன்! அப்டீன்னா, எனக்கு தமிழ் தெரிஞ்சிருக்கணும்ல!"

"சரி! நான் கத்து தரேன்!"

செல்வி இப்போது விராட், பிங்கி இருவருக்கும் தமிழாசிரியையாக மாறிப்போனாள். இருவரும் மிக மிக கவனமாக கற்றனர்.

செல்விக்கு ஆச்சரியமாக இருந்தது. பிங்கி தமிழ்காரி என்று எண்ணியதால் தமிழ் கற்றுக் கொள்கிறாள்! ஆனால் விராட் யாருக்காக இப்படி மும்முரமாக தமிழ் கற்றுக் கொள்கிறான் என்று நினைத்தாள். ஆனால் அவனிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அது வெகு விரைவிலேயே அவளுக்குத் தெரிய வந்தது.

ஒருநாள் விராட் வேலை முடிந்து வர கொஞ்சம் தாமதமாகியது. வந்ததும் வழக்கம் போல குளிக்கப் போனான். செல்வி டீயைப் போட்டு மாடிக்கு எடுத்து வந்தாள்.

"பாபி! டூ மினிட்ஸ்! டீய டேபிள் மேல வெச்சுடுங்க! நான் எடுத்துக்கறேன்!" என்று குரல் கொடுத்தான்.

செல்வி அவனுடைய அறையில் இருந்த டேபிளில் டீயை வைத்துவிட்டுத் திரும்பும் போது விராட்டின் செல்லில் மெஸேஜ் என்று கூவிவிட்டு ஸ்க்ரீன் சேவர் டிஸ்ப்ளே ஆனது. ஸ்க்ரீன் சேவராக ஆனந்தியின் புகைப்படம் இருப்பதைப் பார்த்ததும், ஓஹோ! அதானா போலீஸ்காரன் தமிழ் கத்துக்கறான் என்று நினைத்து சிரித்தபடி கீழே இறங்கினாள். ஆனால் தனக்கு தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனந்தியையும் விராட்டையும் ஜோடியாக கற்பனை செய்து பார்த்தாள். மிக மிக பொருத்தமான ஜோடி என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவனாக எதுவும் சொல்லாமல் நாமாக எதுவும் கற்பனை செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்து விட்டுவிட்டாள்.

விராட்டும் பிங்கியும் தமிழில் வெளுத்து வாங்க ஆரம்பித்தார்கள் என்றால் செல்வி ஹிந்தியில் வெளுத்து வாங்கினாள்.

விராட் ஆனந்தியிடம் சரளமாக தமிழில் பேச ஆரம்பித்தான். தினமும் மாலையில் ட்யூட்டி முடிந்து வந்தபின் அரைமணி நேரம் அவளிடம் மொக்கை போடுவது அவனுடைய புத்துணர்ச்சி டானிக்காக மாறிப் போயிருந்தது.

ஐஸ்க்ரீம் பார்லர்காரன் மூலமாக ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்கையே தடுத்து நிறுத்தினார்கள். விராட் தன்னால் திறமையாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்தான். அவனுடைய டிபார்ட்மென்டில் அவனுக்கு மிகவும் நல்ல பெயர் கிடைத்தது. இன்ஸ்பெக்டராக பதவி உயர்வும் வந்தது.




மன்னவனின் குடும்பத்தில்
மான்விழியாள் கலந்து விட்டாள்!
தன்வீடு இதுவேயென்று
தன்மனதில் ஏற்று நின்றாள்!

உதவிக்கரம் நீட்டியுமே
சிறுபெண்ணின் துயர் துடைக்க
முனைந்தவள் கண்முன்னே
முளைத்தனவே எதிர்வினைகள்!

மைத்துனனின் உதவியுடன்
சதியை வென்று மனதில் நின்றாள்!
உதவியவனை அணைத்ததுவே
பதவி உயர்வும் பரிசாக!

புதிதாகத் துளிர்த்ததொரு
காதல் மொட்டும் மணம் பரப்பக்
காத்திருக்கும் வேளையினில்
காதலுக்கு மொழி எதற்கு?


- C. புவனா.



- காதலின் மொழி என்ன?









 
Top