கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

15.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

Shaliha ali

Moderator
Staff member
எத்தனை கஷ்டம் இருந்தாலும்


மறந்து போகிறேன் உன்னோடு


பேசும் அந்த அழகிய


தருணங்களில் மட்டும்.


சங்கர் மாப்பிள்ளை வீட்டில் போன் போட்ட செய்தியை வீட்டில் மலரை தவிர எல்லோரும் இருக்கும் போது சொன்னவர் சுந்தரி "நீ என்ன முடிவெடுக்கிறன்னு என்கிட்ட சொல்லு" என்று சொல்லி விட்டு சென்றார் சங்கர்.


அவர் சொன்னதும் சுந்தரி காமாட்சியை பார்க்க காமாட்சி கண்களால் சரி என்பது போல் பாவனை செய்ய சுந்தரிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.


வெளியே சென்ற சங்கரின் மனதிலோ தன்னால் பணத்தை வெளியே புரட்ட முடியாத காரணத்தால் இந்த சம்மந்தம் வேண்டாம் எனச் சொல்லி விட்டார்.அவருடைய கவலை எல்லாம் மலரை பற்றி தான் இருந்தது.தன்னுடைய அண்ணன் இருந்திருந்தால் மலருக்கு எப்படியாவது திருமணத்தை முடித்திருப்பார்.ஆனால் இன்று மலருக்கு திருமணம் முடிக்காமல் தன்னுடைய மகளுக்கு பெரிய இடத்தில் சம்மந்தம் செய்ய அவருடைய மனம் ஒப்பவில்லை.தன்னுடைய அண்ணனுக்கு செய்யும் துரோகமாக எண்ணியவர் கல்யாணத்திற்கு தேவையான பணத்தை புரட்டாமலே தன்னால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று சுந்தரியிடம் கூறிவிட்டார்.தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையை எண்ணி வருந்தியபடியே நடந்துச் சென்றார்.


காமாட்சிக்கு சுந்தரிக்கும் சங்கருக்கும் நடந்ததை பற்றி இது எதுவும் தெரியவில்லை.அவருடைய கவலை, வருத்தம் எல்லாம் தன்னுடைய கொழுந்தானரை பற்றி தான் 'மலருடைய வாழ்க்கையை விட தன் மகளின் வாழ்வே பெரியதாக எண்ணி தன்னுடைய மகளின் வாழ்க்கையில் அவர் பணயம் வைத்தது அவரால் தாங்க முடியவில்லை.தான் பெற்று எடுத்த மகளுக்கு அவள் விரும்புகின்ற மாதிரியான வாழ்க்கையை அமைக்கமால் மலர் விரும்பாத வாழ்க்கையை அவளுக்கு திணிப்பதை எண்ணி மனம் வருந்தியடி இருந்தார் காமாட்சி. இருந்தாலும் சங்கர் மேல் இருந்த நம்பிக்கையால் எதற்கும் இந்த திருமண விஷயத்தை பற்றி ஒரு முறைக் கேட்கலாம்' என எண்ண அதை பற்றி பேசினார் காமாட்சி.



காமாட்சியின் அறைக்கு வந்த சுந்தரி "அண்ணி என்ன முடிவு எடுத்திருக்கீங்க?" என்று கேட்க...


காமாட்சி "உனக்கும் தம்பிக்கும் திரும்பவும் தீபக்கு கல்யாணம் முடிச்சு கொடுக்கிறதுல சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் தான் ஆனால் பத்து பதினைந்து நாள் டைம் கொடு அதற்கிடையில் மலர்கிட்ட பேசி நான் அவகிட்ட சம்மதம் வாங்கி கொள்கிறேன்" என்று காமாட்சி சொன்னதும் சுந்தரிக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை.


முகத்தில் தோன்றிய சந்தோஷத்தை வெளிக் காட்டாமல் "அவங்களுக்கும் அதில் விருப்பம் தான்" என்றதும் சங்கரும் இதில் உடந்தையாகத் தான் இருக்கிறார் என்பதை காமாட்சியால் நம்பமுடியவில்லை.


சுந்தரி தீபக்கிற்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறியவள் விரைவில் உங்கள் இருவரின் திருமணமும் நிச்சயம் நடைபெறும் என நம்பிக்கையை தீபக்கிற்கு தந்தவள் "தம்பி முதலில் வினோவுடைய நிச்சயம் நடந்த பிறகு உங்களுக்கும் மலருக்கும் நிச்சயம் செய்து திருமணம் நடத்தி விடலாம்" என்று சொல்ல தீபக்கிற்கு தான் நினைத்த நெடுநாள் எண்ணம் விரைவில் நிறைபோவதாக எண்ணி மகிழ்ந்தான்.


இங்கே வீட்டில் மலருக்கு நடப்பது எதுவும் தெரியாமல் அவள் எப்போதும் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.கதிரும் மலரும் நல்ல நண்பர்களாகிப் போயினர்.இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.



இப்படியே சில நாட்கள் செல்கையில் மலர் வேலையை முடித்து வீட்டிற்கு திரும்ப வருகையில் அம்மாவை பார்க்க முடியாமல் போனது.சில நேரங்களில் இரவு நேரம் மிகவும் தாமதமாக வரத் தொடங்கினார்.


இதை கவனித்த மலர் "அம்மா ஏங்கே தினமும் போய்ட்டு வர்றீங்க?" என்று கேட்க...


"ஒன்றுமில்லை மலர் ஒரு சின்ன விஷயமா வெளியே போறேன்"


"ம்ம் எங்கே போறீங்கன்னு எங்கிட்ட சொல்ல மாட்டீங்களா?"

"கண்டிப்பா சொல்றேன் ஆனால் இப்போ என்னால சொல்ல முடியாது சொல்ல வேண்டிய நேரத்துல சொல்றேன் என்றவர் வா ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டு தூங்கலாம்" என்றார்.


அம்மாவிடம் இதற்கு மேல் கட்டாயப்படுத்த முடியாது என்பதால் மலரும் அமைதியாக இருந்து விட்டாள்.


இன்னும் இரண்டு நாட்களும் இதே தொடர 'தேவியிடமும் கதிரிடமும் இதை பற்றி சொல்லவா வேண்டாமா?'என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


தன்னை பற்றி என்றால் இருவரிடமும் தயங்காமல் கூறி விடுபவள் தன் அன்னையை பற்றி சொல்ல தயக்கம் கொண்டாள்.தெரிந்தால் நாளை அம்மா தன் மேல் வருந்தக் கூடும் என்றெண்ணி அமைதியாக இருந்து விட்டாள்.


மறுநாள்.......


ஸ்கூலில் கதிருக்கு ஒரே பதற்றமாக இருந்தது.நாளை தன்னுடைய காதலை பற்றி மலரிடம் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்.'அதே போல் தான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை என்ற தன்னை பற்றிய முழுவிவரமும் சொல்லி விட வேண்டும் என்றும் பின்பு மலரை தன்னுடன் அழைத்து சென்று தன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்த எண்ணியவன் முதலில் நாளை மலரை தன்னுடன் வெளியே அழைத்துச் செல்வதை பற்றி கூற அவளுக்காக காத்திருந்தான்' கதிர்.



இங்கே மலரோ பலவித குழப்பங்களில் இருந்தாள்.


சுந்தரி சித்தி ஒரு சில நாட்களாகவே அவளை பற்றி ஏதோ ஒன்றை வைத்து பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள்.


எதற்கு என்று அவளுக்கு காரணம் புரியவும் இல்லை.அதே போல் தீபக் ஒரு சில நாட்களாக அவளை பின் தொடர்வதை வேலையாகவே வைத்திருந்தான்.அதையும் மலர் கவனிக்காமல் இல்லை.எதுவும் புரியாமல் குழம்பித் தவித்தாள்.



பள்ளியில் அவளுக்காக காத்திருந்த கதிர் மலர் உள்ளே நுழைந்ததும் அவளைக் கண்டவன் "வா மலர் உனக்காக தான் காத்திருந்தேன் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் "எனும் பொழுது அவளுடைய முகம் சரியில்லாததை கவனித்தவன் "என்னாச்சு மலர் ஏதோ யோசனையில் இருக்க போல? "


"இல்லை கதிர் கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் டல்லா இருக்கு?"


"அப்படியா! வா டாக்டர்கிட்ட போய் காட்டலாம்"


"வேண்டாம் கதிர் மாத்திரை போட்டு இருக்கிறேன் சரியாகி விடும்"என்றவளிடம்


"பிறகு ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்தே? வீட்லேயே ரெஸ்ட் எடுத்து இருக்கலாமே?" என்று அக்கறையாக சொல்பவனிடம் எப்படி சொல்லுவாள் .... அவளுக்கு உடம்பை விட மனம் தான் சரியில்லை என்று எப்படி கூறுவாள் .


"அதெல்லாம் விடுங்க கதிர் என்கிட்ட ஏதோ சொல்ல வேண்டும் என்று சொன்னீங்களே? "


" அதெல்லாம் ஒன்றுமில்லை பிறகு பார்த்துக்கலாம் "என்றான்.


"இல்லை கதிர் சொல்லுங்க ப்ளீஸ் ..... என்று கெஞ்சிக் கேட்க...

"அது.... என்று அவன் நிறுத்த" என்னன்னு சொல்லுங்க கதிர்" என்று கேட்க...


"உனக்கு இப்போ உடம்பு சரியில்லையே" என்று சொல்ல...


"டேய் கதிர் சொல்ல போறீயா? இல்லையாடா?" என்று கை நீட்டி கண்களை உருட்டி கேட்க...


"ஐயோ சொல்லிடுறேன் விட்டால் எல்லோர் முன்னாடியும் என்னை மரியாதை இல்லாமல் சொன்னாலும் சொல்லிடுவே "என்றான் பொய்யாய் நடித்தப்படி......



அவளும் அவன் செய்ததை ரசித்தப்படி சிரிக்க கதிரோ மலரை பார்த்து "கலை நாளைக்கு எங்கேயாவது வெளியே போய்ட்டு வரலாமா?" என்று கேட்க...


"இதை கேட்கத்தான் இவ்வளவு தயங்கினீங்களா கதிர்? போகலாம்" என்றாள் மலர்.


"அதோட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி உங்கிட்ட சொல்லனும் "

" ம்ம்ம் அப்படியா! ஏன் நாளைக்கு சொல்லுறீங்க? இதோ இன்றைக்கே சொல்லுங்க நான் உங்ககிட்ட தானே இருக்கேன் "

"இல்லை கலை நாளைக்கு நான் தனியா முக்கியமான விஷயத்தை பற்றி பேசனும் நாளைக்கு காலையில கண்டிப்பா வந்துவிடு கலை" என்று கேட்டவுடன் ஏனோ மறுக்காமல் உடனே சரி என்றாள்.


"நிச்சயமா கதிர் நான் கண்டிப்பாக வருகிறேன் "


மலர் கேட்ட பொழுது அவன் தன் மனதில் உள்ளதை சொல்லி இருந்திருந்தால் வரப் போகும் பிரிவை கொஞ்சமாவது தடுத்து இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க யாரால் எதை தடுக்க முடியும்.


கதிரிடம் பேசிய பிறகு கொஞ்சம் மன ஆறுதல் அடைந்தவள் ஏனோ தேவியை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்காததால் கதிரை சந்திக்கப் போவதை பற்றியும் சொல்லவில்லை.தன் மனதில் உள்ள குழப்பத்தையும் சொல்லவில்லை.


அன்று மாலை மலர் வீட்டுக்கு சென்ற பிறகு அம்மா ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தாள்.என்ன வென்று கேட்டாலும் சரியான பதில் இல்லை.அவளோ எப்பவும் போல் வினோவுடனும் சதீஷ் உடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.ஏனோ மனதிற்குள் ஒரு நெருடலாகவே இருந்தது.



மலர் இரவு சாப்பிட்டு முடித்து படுக்க சென்று ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது காமாட்சி மலரை வேகமாக எழுப்பினார்."மலர் சீக்கிரமா எழுந்திரும்மா" என்று எழுப்ப...


பதற்றத்துடன் எழுந்தவளை பார்த்து "அம்மா என்னாச்சு?" என்று கேட்க...


"மலர் சத்தம் போடாமல் எழுந்திரு"மலர்.


"என்னம்மா என்னாச்சு?"


"அதெல்லாம் அப்புறமா சொல்லுறேன் முதல்ல கிளம்பு"

"எங்கே?"


என்று கடிகாரத்தை பார்க்க... அதிகாலை மூன்று மணியை காட்ட..."அம்மா இந்த நேரத்துல எங்கே கிளம்ப சொல்லுறீங்க" என்று சுற்றி நோட்டம் விட்டு கேட்க அம்மாவிற்கு அருகில் இரண்டு டிராவல் பைகள் இருப்பதை கண்டவள் ....



"அம்மா எங்கே போறோம்?" என்று கேட்க...


"மலர் அம்மா என்ன செய்தாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன்னு நீ நம்புறீயா? இல்லையா" என்று காமாட்சி கேட்க...



" அம்மா என்ன இப்படி சொல்லீட்டிங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன்" என்றதும் "அப்படி என்றால் ...?" சரி எங்கிட்ட எந்த கேள்வியும் கேட்காமல் என் கூட. கிளம்பி வா" என்றதும்


"அம்மா சித்தப்பாகிட்ட மட்டுமாவது போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போகலாமா?"

"வேண்டாம் இனிமேல் நாம எங்கே இருக்க போறோம்னு யாருக்கும் தெரிய வேண்டாம் நீ பேக்கை தூக்கிட்டு கிளம்பு" என்றதும்

"அம்மா என் செல்போன் மட்டும் எடுத்துக்கவா?"என்று கேட்க...


'தேவையில்லை"



"இனிமேல் எதுவும் தேவையில்லை தேவையான பொருளை நான் எடுத்துக்கிட்டேன் நீ என்னோடு வா" என்று சொல்ல...


"அம்மா ஒரே ஒரு நிமிஷம் என்று வேகமாக தேவியுடைய நம்பரை மட்டுமாவது குறித்துக் கொள்ளவா?"என்று கேட்க...


"என்கிட்ட செல் நம்பர் இருக்கு வா போகலாம்"என்றார்..


ஒன்றும் புரியாமல் மலர் தவிக்க...காமாட்சி மலரை அங்கிருந்து மெதுவாகவும் வேகமாகவும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.


மலருக்கோ கதிரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் செல்வதை எண்ணி வருந்தியபடி முதன் முதலாக அவனுடைய எண்ணங்களை மனதில் சுமந்தபடி ஊமையாய் சென்றாள்.


இனி கண்கள் உன்னை காணுமோ


என்ற ஏக்கத்தில் மனதில்


தோன்றிய வழிகளோடு பேச


தெரிந்தும் பேசா மடந்தையானேன்


நான்


(தொடரும்)
 
Top