கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

21. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 21


தங்கையும் தம்பியும் சூரஜ் செய்யும் தவறினை சுட்டிக்காட்ட சூரஜ் வருந்தினான். இருப்பினும் தன்னுடன் பிறந்தவர்கள் தன் மனைவியின் மேல் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் கண்டு வியந்தான். அதற்கு மேல் பெருமிதம் அடைந்தான்.

விராட்டுக்கு தேங்க்ஸ் என்று ஒரு மெஸேஜை அனுப்பிய சூரஜ், உடனே சென்னை செல்ல விமான டிக்கெட் உள்ளதா என்று தேடினான். மறுநாள் காலை ஐந்தரை மணிக்குதான் இருந்தது. இன்று டமில் சென்னை சென்றது போல, நாளை காலை நான் சென்னை செல்வேன் என்று நினைத்தபடியே தனக்கு ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டான்.

மெதுவாக செய்யக்கூடிய வேலைகளை தள்ளிப்போட்டுவிட்டு முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு விரைவாகக் கிளம்பினான்.

சூரஜ் வீட்டுக்கு வரும்போது தீபிகாவும் அம்மாவும் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

நேராக அம்மாவின் முன்னால் வந்து நின்றவன்,

"ம்மா.. நாளைக்கு காலைல சென்னை போறேன்.." என்று உரைத்துவிட்டு, தீபிகாவிடம்,

"உங்க பாபி கிட்ட எதுவும் சொல்லாத.. அவளுக்கு சர்பிரைஸ் குடுக்க போறேன்.." என்று சொல்லி புன்னகைத்துவிட்டு, விடுவிடுவென்று தன்னுடைய அறைக்கு நகர்ந்தான்.

அவன் போனதும், தீபிகா கௌரியைப் பார்த்து,

"அம்மா.. நம்ம பிளான் வொர்க் அவுட் ஆகுது.." என்று கூறி புன்னகைக்க,

"ஆமாடி.." என்று கௌரியும் மகளைப் பார்த்து புன்னகைத்தாள்.


*****


விராட் ஆனந்தியுடன் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாக கழித்தான்.

அவளை அணைத்துக் கொண்டு சாலையில் நடந்தபடி கேட்டான்.

"ஆனந்தி!"

"ம்!"

"நீ செல்வி பாபிய பத்தி என்ன நெனக்கிற?"

"அக்கா ரொம்ப நல்லவங்க! பயங்கர டேலன்டட்! நிறைய விஷயம் தெரியும்! சூப்பரா பாடுவாங்க! அவங்களுக்கு நிறைய சகிப்புத்தன்மை இருக்கு. அவங்க யார் என்ன கேட்டாலும் விட்டுக் குடுத்துடுவாங்க! சில சமயம் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சத விட்டு குடுக்கற நிலைமை வந்தாலும் அதனால யாருக்காவது எதாவது யூஸ் இருக்குன்னு தெரிஞ்சா யோசிக்கவே மாட்டாங்க! உடனே விட்டுக் குடுத்துடுவாங்க! அதுக்காக வருத்தப்படவும் மாட்டாங்க! கோவப்படவும் மாட்டாங்க! சொல்லிக் காட்டவும் மாட்டாங்க! அவங்களுக்கு நம்ம எதுனா கெடுதல் பண்ணினா கூட மன்னிச்சுடுவாங்க! மொத்தத்துல அவங்க ஒரு அம்மா மாதிரி! அவங்க செய்யற ஒவ்வொரு வேலையிலயும் அர்ப்பணிப்பு பரிபூரணமா இருக்கும். அவங்கள மாதிரி இன்னொருத்தி பொறந்துதான் வரணும். அவங்களுக்கு பிடிக்காத ஒண்ணே ஒண்ணு, யாராவது அசிங்கமா பேசினா அவங்களுக்கு பிடிக்காது! பளார்ன்னு ஒரே அறைதான்! அதோட பேசினவங்க வாயே தெறக்க முடியாது. குறைஞ்சது ஒரு பல்லாவது விழுந்துடும்! அவ்ளோ கோவம் வரும்! ஆனா அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும்தான். மத்தபடி கோவமே வராது!" ஆனந்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சொல்லச் சொல்ல அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் சொல்வது அத்தனையும் உண்மை என்று அவனுக்கும் புரிந்துதான் இருந்தது.

"அக்காவுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். கள்ளம் கபடம் இல்லாம சிரிக்கற அந்த பிஞ்சுக் குழந்தைகள் முகத்தப் பாத்தாலே போதும்! இந்த உலகத்தில இருக்கற துன்பம் எல்லாம் பறந்துடும்னு சொல்வாங்க! இந்த உலகத்தில இருக்கற தீவிரவாதி எல்லாருக்கும் பனிஷ்மென்ட்டா ஆளுக்கு ரெண்டு கைக்குழந்தைய குடுத்து அந்தக் குழந்தைங்கள அழ விடாம எப்பவும் சிரிக்க வெச்சு பாத்து பராமரிக்கணும்னு பனிஷ் பண்ணினா எல்லா தீவிரவாதியும் திருந்திடுவான். உலகத்தில தீவிரவாதமே இல்லாம போய்டும்னு எப்பவும் சொல்வாங்க!" என்றாள் அவள்.

"வாவ்! வாட் அன் இன்னோவேடிவ் ஐடியா!" என்றான் விராட் வியப்புடன்.

"ம்! அதனாலதான் அக்கா அந்த ஸ்பெஷல் சில்ரன்க்கு டீச்சரா போகணும்னு ட்ரெய்னிங் போனாங்க! டீச்சராவும் ஆனாங்க! ரெண்டு வருஷம் வேல பண்ணினாங்க! ரெண்டு வருஷமும் பெஸ்ட் டீச்சர் அவார்ட் அவங்களுக்குதான் கிடைச்சது!"

விராட்டுக்கு கண்கள் பனித்தன.

"ஆனா, பாவம் அக்காவுக்கு இன்னும் ஏன் குழந்தை பிறக்கலன்னு தெரில!" என்றாள் ஆனந்தி வருத்தமாக.

"பொறக்கும்! சீக்ரமாவே பொறக்கும்! பாவம் சூரஜ் பையாவுக்கு ஆஃபீஸ்ல வொர்க் லோட் ரொம்ப ஜாஸ்த்தியா இருக்கு! அவன் வீடு வரவே ரொம்ப லேட் ஆயிடுது! என்ன பண்ணுவாங்க பாவம்!" என்றான் விராட்.

"அதுவும் கரெக்ட்தான்!"

"அதனால ஆனந்தி, நீ பாபிக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணனும்! வீட்டு வேலைய செய்யறதுக்கு தயக்கம் காட்டக் கூடாது. பாபியோட சண்டையும் போடக் கூடாது! சரியா!" என்றான்.

"இத நீங்க எனக்கு சொல்லணுமா? உங்களுக்கு பாபி ஆகறதுக்கு முன்னாடியே அவங்க எனக்கு அக்கா! அவங்க என்னோட அக்கான்னு சொல்றதவிட, என் பெஸ்ட் ஃப்ரண்ட், ஃபிலாஸபர், கைட், கேர் டேக்கர், இன்னும் எவ்வளவோ சொல்லலாம்!" ஆனந்தி பெருமையாகச் சொன்னாள்.

"குட்!"

"எனக்குத் தெரியுங்க! அக்கா மேல உங்களுக்கு ரொம்ப மரியாதை இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும்! அவங்க எனக்கு அக்கான்னா உங்களுக்கும் அக்காதான்! உங்களுக்கு அண்ணின்னா எனக்கும் அண்ணிதான்! உங்களுக்கு ப்ரண்ட்ன்னா எனக்கும் ப்ரண்ட்தான்! நீங்க என்ன ஃபீல் பண்றீங்களா அதயேதான் நானும் ஃபீல் பண்ணுவேன்! அக்காவும் நானும் எப்பவுமே ஒத்துமையாதான் இருப்போம்! உங்களையும் உங்க அண்ணனையும் ஒருநாளும் பிரிக்க மாட்டோம்!" என்றாள் ஆனந்தி.

அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்த சலனங்கள் யாவும் ஒரு நொடியில் காணாமல் போனது போல உணர்ந்தான்.

ஆனந்தியின் கைப்பேசி சிணுங்கியது. அவளுடைய அம்மா பூங்குழலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

"அம்மா மெசேஜ் பண்ணிருக்காங்க.." என்றாள்.

"என்னாச்சு?"

"செல்வி அக்காவுடைய பாட்டில்ல? லக்ஷ்மி பாட்டி.. அவங்க கீழ விழுந்துட்டாங்களாம்.. கால்ல ஏர்லைன் ஃப்ராக்சராம்.. அக்கா சென்னை போயிருக்காங்களாம்.. " என்றாள் ஆனந்தி.

"ம்ம்.. அதான் தீபிகா சொன்னாளே.." என்றான் விராட். அவனுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தீபிகாவின் மூலமாகத் தெரியுமாதலால் அவன் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆனந்தியின் மனம் வருத்தமடைந்தது.

"ஹே! செல்வி பாபியோட பாட்டிக்காக நீ ஏன் கவலைப்படற?" என்று இயல்பாகக் கேட்டான்.

"உங்களுக்கு பாட்டிய பத்தி என்ன தெரியும்?" என்று கேட்டாள் ஆனந்தி. அவளுடைய குரலில் கோபம் எட்டிப் பார்ப்பது போல இருந்தது.

ஆனந்தி கோபமாகப் பேசுவது விராட்டுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தேன்நிலவுக்கு வந்துவிட்டு சண்டை எதற்கு என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அமைதியாக இருப்பது போல காட்டிக்கொண்டான்.

ஆனால் தீபிகா மற்றும் செல்வி மூலம் ஆனந்திக்கு விராட்டின் கோபத்தைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அதனால் அவள் ஒரு நொடி அமைதிக்குப் பின், நிதானமாகப் பேசினாள்.

"பாட்டி ரொம்ப நல்ல மாதிரி! நான் அவங்களுக்கு பேத்தியில்லதான்.. ஆனா செல்வி அக்காவையும் என்னையும் ஆனந்தனையும் அவங்க பிரிச்சு பாத்ததே இல்ல!"

"ஓ!" ஆச்சர்யமாய்க் கேட்டான்.

"ம்! ஆமா.. எல்லா ஆனுவல் லீவுக்கும் நானும் ஆனந்தும் சென்னலைதான் டேரா! நைன்த் லீவுக்கு என்னாலயும் ஆனந்தாலயும் சென்னை போக முடியல! டென்த்க்காக நிறைய ஸ்பெஷல் க்ளாஸ் ட்யூஷன்னு பயங்கர டைட்! திருச்சிய விட்டு நகரவே முடியல! அக்காவுக்கு போர் அடிச்சுதோ இல்லையோ பாட்டிக்கு போர் அடிச்சிருச்சு! செல்வி அக்காவ கூட்டிகிட்டு திருச்சி வந்துட்டாங்க! நீங்க படிங்க! படிக்கற நேரம் போக மத்த நேரம் நம்ம விளையாடலாம்னு சொல்லி எங்ககூட ஒரு மாசம் இருந்தாங்க!" என்றாள் ஆனந்தி. அவளுடைய கண்களிலும் குரலிலும் அன்றைய குதூகலம் வந்திருந்தது.

"வாவ்! திஸ் இஸ் ரியலி க்ரேட்!" மனைவியின் குதூகலம் அவனையும் தொற்றிக் கொண்டது.

"ஆமா! செம ஜாலி! அம்மா, அப்பா, ஆனந்த், செல்வி அக்கா அப்றம் நான்.. எல்லாரையும் ரௌண்டா உக்காரச் சொல்லி மூணு வேளையும் சாதம் பிசைஞ்சு கைல போடுவாங்க! சாதம் போடும்போது நெறைய கதை சொல்வாங்க! ஒரே கலாட்டாதான்! எனக்கும் அக்காவுக்கும் கைல மருதாணி வெச்சுவிட்டுட்டு சாதம் ஊட்டிவிடுவாங்க! ஆனந்த் சண்டைக்கு வருவான். பேத்திங்களுக்கு மட்டும்தான் ஊட்டிவிடுவீங்களா? எனக்கும் ஊட்டி விடுங்கன்னு.. உனக்கு இல்லாததான்னு சொல்லி அவனுக்கும் ஊட்டி விடுவாங்க! உடனே, அவன் மருதாணி வெச்சுக்கலதானே! அப்றம் ஏன் பாட்டி அவனுக்கு ஊட்றீங்கன்னு நாங்க சண்டை போடுவோம்! ஒரே ரகளைதான்.. அதெல்லாம் மறக்கவே முடியாது!" அவள் சொல்லச் சொல்ல விழி விரியக் கேட்டுக் கொண்டிருந்தான் விராட்!

'இப்படியெல்லாம் நாம் ஒருநாளும் அனுபவித்ததேயில்லையே! பாட்டி! யூ ஆர் க்ரேட்!' என்று நினைத்தான். இப்போது அவனுக்கு பாட்டியின் மேல் தனி மரியாதை வந்துவிட்டது.

'இப்படிப்பட்ட பாட்டியிடம் வளர்ந்ததினால்தான் பாபிக்கு மனதில் இத்தனை அன்பு இருக்கிறது. தன்னலம் கருதாது பிறருக்காகவே உழைக்கிறார்கள். அதில் இன்பமும் காண்கிறார்கள்!' என்று நினைத்துக் கொண்டான்.

"நீங்க மூணு பேரும் ரொம்ப குடுத்து வெச்சவங்க! ஓன் (own) ப்ரதர் ஸிஸ்டர்ஸே இவ்ளோ ஒத்துமையா இருப்பாங்களான்னு தெரியாது. ஆனா நீங்க மூணு பேரும்.. சான்ஸே இல்ல! யூ த்ரீ ஆர் க்ரேட்!" மனம் திறந்து பாராட்டினான்.

"தேங்க்யூ! ஆல் க்ரெடிட் கோஸ் டு லக்ஷ்மி பாட்டி!" என்றாள் ஆனந்தி புன்னகை முகமாக. அவள் மனதுக்குள், 'ஹப்பாடா.. இவருக்கு கோபம் வராம இருந்தது..' என்று நினைத்துக் கொண்டாள்.

"ம்! தட்ஸ் ரைட்! ஆனந்தி! உங்கப்பாவுக்கு பேரண்ட்ஸ்.. அந்த சைட் ரிலேஷன்ஸ் யாரும் பெரிசா நம்ம மேரேஜுக்கு வரலியே!" கேட்டான் விராட்.

"எங்க தாத்தா பாட்டி அதாவது அப்பாவோட பேரண்ட்ஸ் நாங்க சின்ன வயசா இருக்கும் போதே போயாச்சு. அப்பா கூட பொறந்தவங்க யாருமில்ல. அது மாதிரி அந்த சைட் ரிலேஷன்ஸ் யாரும் இப்ப பெரிசா டச்ல இல்ல! இப்போதைக்கு எங்க ரிலேஷன்னு சொல்லிக்கணும்னா கிரி பெரியப்பா, மங்கை பெரியம்மா, லக்ஷ்மி பாட்டி, செல்வி அக்கா இப்ப நீங்கல்லாம்! அவ்வளவுதான்!" என்றாள்.

"ஆனந்தி! லக்ஷ்மி பாட்டிய கூட்டிட்டு வந்து நம்ம வீட்ல வெச்சுக்கலாமா!" குழந்தை போலக் கேட்டான்.

"இதக் கேட்டா பாட்டி ரொம்ப சந்தோஷப் படுவாங்க!" என்று அவள் புன்னகைத்தாள்.

அவளுடைய புன்னகையில் மயங்கியவன்,

"ம்! சரி வா! பயங்கரமா பசிக்கிது! பனி வேற ரொம்ப ஜாஸ்த்தியா பெய்யுது! போலாம்!" அவள் கை கோர்த்து நடக்க, அவளும் அவனுடன் இணைந்து நடந்தாள்.

அவர்கள் ரூமுக்கு வந்து அடைந்து கொண்டனர். நிறைய பேசினார்கள்! அவள் நிறைய இடங்களைப் பார்த்துவிட்டு வந்து படம் வரைந்தாள்! வரைந்ததைப் பாதுகாத்து வைத்துக் கொண்டான்.

கண நேரம் கூடப் பிரியாமல் ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டிக் கொண்டனர்.

பனியில் ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். விளையாடிவிட்டு வந்து தேனீர் குடிக்கும் போது அங்கு காதல் புரியும் மற்ற ஜோடிகளைக் கண்டு ஆனந்தி வெட்கப்பட்டாள். அவள் வெட்கப்படுவதைக் கண்டு விராட் ரசித்தான். ரூமில் வந்து இதைச் சொல்லி சொல்லி அவளைக் கலாய்த்தான். அவளை அணைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடினான். அவளோடு காதலில் கூடி மகிழ்ந்தான்.

தேன்நிலவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! இருவரும் ஈருடல் ஓருயிராக ஊர் திரும்பினர்.




உடன்பிறப்புகள் எடுத்துரைத்த
உண்மைகளை உணர்ந்ததுமே
மன்னவனும் உருகி நின்றான்!
அன்பிலே நெகிழ்ந்து நின்றான்!

தன்னவளின் பெருமை அறியாமல்
தவறுகளைச் செய்தேனென்று
மனதிற்குள் துடித்துப் போனான்!
தரிசனம் தேடிக் கிளம்பி விட்டான்!

ஆனந்தியும் அவள் துணையும்
தேனிலவில் தேன் மொழியில்
உளம் கனிந்து உரையாடுகையில்
செல்வியே பேசு பொருளானாள்!

செல்வியைச் சீராட்டிப் பாராட்டி
ஆனந்தம் அள்ளித் தெளித்து
வாழ்வாங்கு வாழ வைக்க
மனதிற்குள் உறுதி பூண்டனரே!

காதலுடன் பின்னிப் பிணைந்து
களித்துக் களைத்த பின்னர்
இல்லறப் பறவைகளும்
இனிதே இல்லம் திரும்பினவே!




- C. புவனா



- காதலின் மொழி என்ன?
 
Top