3.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
"உங்க பேரு கதிர் தானே!" என்று திரும்ப ஒரு முறை கேட்ட மலர் "சார் ஏன் திடீரென மயக்கம் போட்டு விழுந்திட்டீங்க?"
"அது வெயில் ரொம்ப அதிகமா இருந்ததால நடக்க முடியலை அப்புறம் பக்கத்துல சாப்பாடு கடை ஏதாவது இருக்கான்னு பார்க்க வந்தேன்,எந்த கடையும் நல்ல இருக்கிற மாதிரி இல்லை" என்றான்.
"ஓ... அப்படியா! ஏன் கைல பணம் இல்லையா?"என்று கேட்க...
அவள் சொன்னதைக் கேட்ட அவனுக்கோ மிகுந்த சங்கடமாக இருந்தது .
"என்கிட்ட பணம் இருக்கு" என்றான் பம்மியகுரலில்..
"அப்போ நீங்க ஊருக்கு புதுசா?"என்றதும்
"ஆமாம் "என்று தலையாட்ட...
அவனது நிலைமையை ஒரளவு யூகித்தவள் "சரி உங்களுக்கு ரொம்ப பசிக்குது என்றால் நான் சாப்பாடு வைச்சிருக்கிறேன்" என்று தனது கைப்பையிலிருந்து சாப்பாட்டை நீட்ட... அவனுக்கோ ஒரு மாதிரியாக இருந்தது.
"நம்மளை பிச்சக்காரன்னு நினைச்சுட்டாளோ? என்று தோன்ற அமைதியாக இருக்க...
"சார் நான் சாப்பாடு தந்து உங்களை அசிங்கப்படுத்துறாத நினைக்காதீங்க,இது எனக்காக நான் கொண்டு வந்த சாப்பாடு பசிக்குதுன்னு சொல்லுறீங்க அப்புறம் கடை சாப்பாடு வேண்டாம்னு சொல்லுறீங்க அதனால் தான் கேட்கிறேன்,இது வீட்ல செஞ்ச சாப்பாடு தான் தைரியமா சாப்பிடுங்க உங்களை என்னோட ப்ரெண்டா நினைச்சுக்கோங்க தேவையில்லாத எண்ணம் வராது" என்று டிபன் பாக்ஸை திறந்து நீட்ட...
அவன் 'வாங்கலாமா வேண்டாமா?'என்ற யோசனையில் இருக்க மலர் அவனுடைய கையை பிடித்து டிபனை வைத்தாள்.
அவன் எடுத்து ஒரு கவளம் வாயில் வைத்து சாப்பிட நல்ல ருசியாக இருக்க அனைத்தையும் சாப்பிட்டு முடித்தான்.அதுவரை அவனருகில் அமைதியாக இருந்து கொண்டாள் மலர்.
கதிர் சாப்பிட்டு முடித்தவுடன் டிபன் பாக்ஸை வாங்கியவள் தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொல்லி விட்டு " இட்லி நல்லா இருந்துச்சா?,எங்க அம்மா தான் செஞ்சாங்க நல்ல ருசியாக இருக்கும் என்று சொன்னவள் அவனை தலை முதல் கால் வரை ஆராயும் பார்வை பார்த்தப்படி எங்கேயாவது அடிப்பட்டு இருக்கா?" என்று கேட்டாள் மலர்.
அவனுக்கு அவ்வளவு நேரம் இருந்த பசி மயக்கம் அப்பொழுது தான் சரியானது.
இதுவரை பசி அறியாமல் இருந்தவன் ஒரு நாளாவது ரோட்டில் நடந்து சென்று கடையில் சாப்பிட நினைத்தவனுக்கு கடையும் சரியாக அமையவில்லை.வெயிலில் நடந்து பழக்கம் இல்லாததால் வந்த லேசான தலைசுற்றல் அவ்வளவு தான்.
'ஆனால் ஏதோ ஒன்று என் மீது மோதியது போல தோன்றியதே' என்று மலர் சொன்னதும் யோசனையில் அமர்ந்தவன் கையில் லேசாக வலி எடுக்க கைமுட்டியில் லேசான சிராய்ப்பு இருக்க... அதை பார்த்தவன் அப்பொழுது தான் கீழே விழுந்த ஞாபகம் வர ...
"என்னாச்சு சார் அமைதியாக இருக்கீங்க" என்று கேட்க...
"அது ..... வந்து என் மேலே ஏதோ ஒரு வண்டி இடிச்சதாக ஞாபகம் அப்புறம் தான் நான் கீழே விழுந்து கைல அடிப்பட்டு இருந்திருக்கு " என்று காட்டஅதைக் கேட்டு இவளுக்கு நெஞ்சினில் பயம் வந்தது.
'ஐய்யய்யோ இந்த ஆளு மயங்கி விழுந்தாலும் நல்ல ஞாபகம் வைச்சு இருக்கானே என்று நினைத்தவள் முதல்ல இங்கிருந்து எஸ்கேப் ஆகிடணும்' என்று முடிவெடுத்தவள் "கையை காட்டுங்க" என்று அவன் கையை பிடித்து தனது பையில் இருந்து பஞ்சை காயத்தில் துடைத்து விட்டவள் ஒரு மருந்தை எடுத்து தடவி விட்டு "லேசான சிராய்ப்பு தான் கொஞ்ச நேரத்துல சரியாகி விடும் நீங்க பார்த்து போங்க நான் இப்ப அவசரமா போகனும்" என்றாள்.
"ஏங்க நீங்க என்ன நர்ஸா?" என்று கேட்க... இல்லை தலையாட்டியவள் "ஏன் நர்ஸா இருந்தால் தான் கையில் பர்ஸ்ட் ஏய்டு வைச்சு இருப்பாங்களா?" என்று கேள்வியோடு கேட்க...
"சரி உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லை,நீங்க கேட்கவே இல்லையே சார் என்றவள் நான் கிளம்புறேன்" என்றாள்.
"ரொம்ப தாங்ஸ்ங்க" என்றான்.
"ம்ம்ம்ம் ஓகே ஓகே "என்று என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக நடந்து சென்று விட்டாள்.
கொஞ்ச தூரம் சென்றவள் 'ஷ்ஷ்ஷ்ப்பா .... அந்த கதிருக்கு ஞாபகம் வந்திடுச்சோன்னு பயந்தே போயிட்டேன்,நல்ல வேளை அவனுக்கு ஞாபகம் வருவதற்கு முன்னாடி அங்கிருந்து கிளம்பியாச்சு,ம்ம்ம் சாப்பாடு வேற அவன்கிட்ட கொடுத்துட்டேனே இப்போ லஞ்ச்க்கு என்ன செய்ய? என்று யோசித்தவள் வீட்டுக்கு போய் எதாவது இருக்குதான்னு பார்ப்போம்' என்று வீட்டை நோக்கி சென்றாள் மலர்.
மலர் சென்றதும் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் கதிர்.
'என்ன பொண்ணு இவ பட பட பட்டாசு மாதிரி மூச்சு விடாம பேசுறா நம்மளை பேசவே விட மாட்டேங்கிற ஆனாலும் பரவாயில்லை உதவி பண்ணனும் மனசு இருக்கே' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு முன்னால் ஒரு கார் வந்து நிற்க... அதில் இருந்து இறங்கிய இருவர்" கதிர் சார் பார்த்திபன் சார் உங்ககிட்ட பேசணும்னு சொல்லுறாரு" என்று போனை நீட்ட...
அவனோ யோசித்தவாறே போனை அவர்களிடம் இருந்து வாங்கி "ஹலோ...." என்று சொல்ல மறுமுனையில் பார்த்திபன் தான் பேசினார்.
"கதிர் என்ன பண்ணிட்டு இருக்க உடனே ஹாஸ்பிட்டல் போய் என்னாச்சுன்னு செக் பண்ணிட்டு உடனே வீட்டுக்கு கிளம்பி வா, நீ சுத்தி பார்த்தது எல்லாம் போதும் "என்று அவர் கத்த ...
"அப்பா ப்ளீஸ் கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகி கோபப்படுறீங்க" என்று கேட்க...
"இதுக்கு மேல என்ன ஆகணும்னு கதிர் ஏதோ உனக்கு யாரும் இல்லாதவங்க மாதிரி ரோட்டுல மயக்கம் போட்டு விழுந்திருக்க இதுக்கு மேல என்ன நடக்கனும்னு நினைக்கிறே" என்றவர்
"கீதவாணிக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் துடிச்சு போய்டுவா ஒழுங்கா கிளம்பி வா " என்று பேசி முடித்ததும் "அப்பா நான் வந்து மூன்று மாசம் தான் ஆகுது அதுவும் இல்லாமல் நீங்க இப்படி ஆள் வைச்சு கண்காணிக்கிறது என்னவோ நீங்க என்னோட பர்ஸ்னல் லைவ்ல தலையிடுற மாதிரி இருக்கு"
"கதிர் நீ வண்டியில இடிச்சு விழுந்த பொழுதேஎன்னோட ஆட்கள் வந்து உன்னை காப்பாற்றி இருக்கனும் ஆனா இடிச்ச அந்த பொண்ணே உன்னை நல்லா பாத்துக்கிட்டதாலும் உன்னோட தனிப்பட்ட விஷயத்துல தலையிட வேண்டாம் தான் அமைதியா இருக்க சொன்னேன் புரியுதா" என்று கண்டிப்போடு பார்த்திபன் பேச...
அப்பா பேசியதை மனதில் குறித்துக் கொண்டவன் "அப்பா நீங்க தானே சொல்லி இருக்கீங்க வாழ்க்கையில நடக்கிற எதுவுமே நமக்கு ஒரு அனுபவம் தான் சொல்லி இருக்கீங்க,இப்போ இந்த விஷயத்தையும் நாம அப்படியே எடுத்துக்கலாம், ப்ளீஸ் அப்பா அம்மாகிட்ட இப்போதைக்கு இத பற்றி பேசாதீங்க நான் இனிமேல் இது மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன் அப்பா" என்று கெஞ்சலோடு கேட்க...
தனது மகனுக்காக ஒத்துக் கொண்டவர்" அப்படி எதாவது நடந்துச்சுன்னா உடனே கிளம்பி வரணும்" என்று கண்டிப்போடு போனை கட் செய்தார் பார்த்திபன்.
கதிர் போனை அங்கிருந்தவனிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் "என்மேல எந்த வண்டி மோதியது?" என்று கேட்க...
"சார் நீங்க நடந்து வரும்போது ரெண்டு பொண்ணுங்க வண்டில வந்துட்டு இருந்தாங்க அப்போ தான் பிரேக் சரியா பிடிக்காம உங்க மேல வந்து விழுந்துட்டாங்க உடனே வண்டி ஓட்டிட்டு வந்த பொண்ணு இன்னொரு பொண்ணுக்கிட்ட வண்டியை கொடுத்து விட்டுட்டு உங்களுக்கு என்னாச்சுன்னு பார்க்க வந்தாங்க "என்றான்.
இதைக் கேட்ட கதிர் 'அப்போ பயத்துல தான் நீ எனக்கு உதவி செய்தாயா? வண்டியை வைச்சு என் மேல இடிச்சதற்கு ஒரு வார்த்தை கூடசாரி கேட்கலை இரு உன்னை என்ன செய்றேன் பாரு' என்று நினைத்துக் கொண்டான்.
இங்கே வீட்டிற்கு வந்த மலர் உள்ளே யாரும் இல்லாமல் இருந்ததை கவனித்தவள் நேராக கிச்சனுக்கு சென்று ஏதாவது சாப்பிட இருக்கிறதா? என்று பார்க்க... ஒரு பாத்திரத்தில் இட்லியும் சாம்பாரும் இருக்க அதை எடுத்து தன்னுடைய டிபன் பாக்ஸை கழுவி அதில் இட்லியும் சாம்பாரையும் வைத்து விட்டு தனது அறையில் சென்று ஒரு புக்கை எடுத்துக் கொண்டவள் மனதினுள் 'நல்ல வேளை யாரும் நம்மளை பார்க்கலை 'என்று வாசலுக்கு வர மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் அவளது அம்மா காமாட்சி.
அங்கே மலரைக் கண்டவள் "மலர் என்ன இன்னும் ஸ்கூலுக்கு போகலையா? "என்று கேட்க...
"அம்மா நான் ஒரு புக் மறந்து வைச்சுட்டு போய்ட்டேன் அத எடுக்க தான் வந்தேன்" என்றாள்.
"அப்படியா மலரு சரி ஒரு ரெண்டு நிமிஷம் இங்கேயே இரு நான் போய் காசு எடுத்துட்டு வரேன் வரும்போது கடைக்கு போய்ட்டு வந்துடு" என்றார்.
அவளும் சரி என்று அம்மா பின்னாடி சென்றுக் கொண்டிருக்க கிச்சனில் இருந்து சுந்தரி சித்தி சத்தம் கொடுத்தாள்
"அண்ணி எங்க இருக்கீங்க?" என்று அழைக்க காமாட்சி கிச்சனுக்கு சென்றார்.
"என்னாச்சு சுந்தரி"என்று கேட்க...
"அண்ணி எனக்கு டிபன் வைச்சீங்களா இல்லையா? எங்கே இட்லியை காணோம்" என்றாள்.என்ன சொல்ற சுந்தரி? நான் இதோ இந்த பாத்திரத்தில் தான் வைச்சேன்" என்று திறந்து பார்க்க அதில் இட்லி இல்லை.
"இதுல வைச்சுட்டு தான் மேலே துணி காய போட போனேன் அதுக்குள்ள எங்கே போச்சுன்னு தெரியலை "என்றார் காமாட்சி.
மலர் விழித்துக் கொண்டே மனதினுள் 'ஐய்யய்யோ! சித்தியோட டிபனையா எடுத்தேன்,தெரிஞ்சுது அவ்வளவு தான்,ஊர்ல இருக்குற எல்லார்கிட்டையும் சொல்லி அசிங்கப்படுத்துமே என்ன செய்ய?' என்று யோசனை இருக்க...
சுந்தரி" இது என்ன அநியாயமா இருக்கு வீட்ல யாரும் இல்லை,நம்ம ரெண்டுபேரையும் தவிர" என்று சொன்னவள் பக்கத்தில் நின்ற மலரைக் கவனிக்க...
"ஆமா மலரு நீ என்ன ஸ்கூலுக்கு போகலையா?"
" அதுவந்து.... சித்தி ஒரு புக் எடுக்க வந்தேன் அம்மா கடைக்கு போக சொன்னாங்க அதான் இங்கே வெயிட் பண்றேன்" என்றாள்.
"நீ தான் என்னோட இட்லியை எடுத்தியா?" என்று சந்தேகத்தோடு கேட்க...
"நான் ஏன் எடுக்கிறேன்?அம்மா கொடுத்த இட்லி இதோ என் பையில் இருக்கு, எனக்கு எதுக்கு உங்க இட்லி? இப்போ என்ன? உங்க இட்லியை காணோம் அதானே இங்க பூனை சுத்துல்ல அது தான் திருட்டிட்டு போய் இருக்கும்" என்றாள் மலர்.
இது என்னடி எங்கேயும் இல்லாத அதிசயமா இருக்கு!பூனை இட்லியை திருடும்னு இப்ப தான் கேள்விபடுறேன்,அதுகூட பரவாயில்லை இட்லிக்கு தொட்டுக்க சாம்பாரோட வா திருடிப் போகும் "என்று மூக்கை மேல் விரலை வைத்து கேட்க ...
'இந்த சித்தி ரொம்ப யோசிக்குது இனிமேல் இங்க இருக்க கூடாது உடனே கிளம்பனும்' என்று யோசித்தவள் "நீங்க உட்கார்ந்து யோசிங்க, அம்மா சித்திக்கு சூடாக தோசை ஊத்திக் கொடுங்க எனக்கு நேரமாகுது நான் போறேன்" என்று சென்று விட்டாள்.
"சுந்தரி நான் உனக்கு தோசை ஊத்தித் தரேன் "என்று சமையலை தொடர்ந்தார் காமாட்சி.
'இங்க என்ன பூனை சுத்துன்னு நானும் கண்டுபிடிக்கிறேன்' என்று மனதில் நினைத்துக் கொண்டாள் சுந்தரி.
ஸ்கூலுக்கு சென்ற மலரை கண்ட தேவி" என்னாச்சு? மலர்" என்று பதற்றத்தோடு கேட்க ...
நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் மலர்,அதைக் கேட்ட தேவி "நான் முதலிலேயே சொன்னேன் வண்டி ஓட்டாதேன்னு நீ கேட்கவே இல்லை,இப்போ பாரு எவ்வளவு பிரச்சினைன்னு இதோட எந்த பிரச்சினையும் வராமல் இருந்தால் சரி தான் "என்றாள்.
"அதெல்லாம் வராது" என்ற சொன்ன மலரை பார்த்து" ஏய் மலர் நாம இடிச்ச ஆளு கண்டுபிடிச்சு திரும்ப வந்துட்டானா என்ன செய்ய? "என்று கேட்க...
" ஏய் நீ பயப்படுகிற மாதிரி பெரிசா ஒன்னும் காயம் இல்லை அதனால பயப்படாதே! அதுவும் இல்லாமல் கதிருக்கு எதுவும் நியாபகம் இருக்காது" என்றாள்.
"என்னவோ நீ சொல்ற பார்ப்போம்" என்றாள் தேவி.
"தேவி நீ பேசுறதை பார்த்த நாளைக்கே அந்த ஆளு வந்து நிற்கிற மாதிரி பேசுற" என்று அவளை சமாதானம் செய்தாள் மலர்.ஆனால் கதிரை அடிக்கடி சந்திக்கப் போவதை அவளும் அறியாமல் இருந்தாள்.
(தொடரும்)