கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

35. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 35


ஆனந்தன் தன் அப்பாவை அழைத்து தன் மனதின் விருப்பத்தைக் கூறினான்.

"என்ன?" ஒரு மாதிரி குரலில் கேட்டார்.

"ஏம்ப்பா! தீபிகா நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ இல்லியா?" பதற்றமாகக் கேட்டான்.

"டேய்! அப்டி சொல்வேனா? நான் கேக்கறதே வேற!"

"அப்டீன்னா?"

"உன்கிட்டேந்து இத நானும் உங்கம்மாவும் ரொம்ப நாளைக்கு முன்னாடியே எதிர்பாத்தோம்!" குரலில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.

"என்னது?" வியந்தான்.

"டேய்! நீ என் பிள்ளைடா! உன் மனசு என்னன்னு எனக்கு தெரியாதா? இல்ல உங்கம்மாவுக்குதான் புரியாதா?"

"அப்பா! ரொம்ப தேங்க்ஸ்ப்பா!"

"ம்ஹூம்! தேங்க்ஸ் எல்லாம் சொல்லவே கூடாது! உன் சந்தோஷம் எங்க சந்தோஷம்! உன்னோட விருப்பம்தான் எங்களோட விருப்பம்!" மகனின் விருப்பத்தை தன் விருப்பமாக ஏற்றதினால் வந்த ஒரு பெருமிதம் அவர் குரலில் தெரிந்தது. தொடர்ந்தார்.

"சரி எப்ப வர?"

"நாளன்னிக்கு?!"

"என்னது?" இன்ப அதிர்ச்சியுடன் கேட்டார்.

"ஆமா! தீபிகா ஓகே சொன்னப்றம் நான் இங்க இருந்து என்ன பண்ணப் போறேன்! கிளம்பிட்டேன்! ஆனா நான் வரது சர்ப்ரைஸா இருக்கட்டும்! அம்மா கிட்ட கூட சொல்லாதீங்க!" குதூகலத்துடன் பேசினான்.

"ஓகேடா! ஜமாய்! நான் ஆனந்தி வளைகாப்பு அன்னைக்கே உன் நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு பண்றேன்! நீ பத்திரமா வா! நேரா மும்பைக்கு வந்துடு! அலைய வேணாம்!"

"ஓகேப்பா! அம்மாகிட்ட குடுங்க!"

அவர் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பூங்குழலியிடம் கொடுத்து அவளிடம் மகனின் விருப்பத்தை மட்டும் சொன்னார்!

"ஆனந்தா! ரொம்ப சந்தோஷமா இருக்குடா! சீக்ரமா வா!" அவளுடைய மனதின் மகிழ்ச்சி அவள் குரலில் எதிரொலித்தது.

"தேங்க்ஸ்மா! உங்களுக்கு ஓகேதானே!"

"பின்ன! தீபிகா எப்ப நம்ம வீட்டுக்கு வரப்போறான்னு காத்துக்கிட்டு இருந்தேன்!"

"ஆனா உங்களுக்கு எப்டி தெரியும்மா?"

"டேய்! என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா? நான் உன்ன பத்து மாசம் சுமந்து பெத்தவடா! உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் என்ன அர்த்தம்னு எனக்கும் தெரியும்! உங்கப்பாவுக்கும் தெரியும்!" இதுதான் தாய்மையின் கர்வம்!

"ஸோ ஸ்வீட் மம்மி! ஐ லவ் யூ மா!"

"ஐ டூ லவ் யூடா செல்லம்! சரி ஒடம்ப போத்துக்கோ! ஆனந்தியோட வளைகாப்புக்கு ரெடி பண்ணிகிட்டு இருக்கோம்! வேலை நிறைய இருக்கு! வெச்சுடவா!"

"ஓகேமா! பை!"

"பை!"

கீர்த்திவாசன் சூரஜுக்கு போன் செய்தார். விஷயத்தைச் சொன்னதும் அவன் குதூகலித்தான்.

இரு குடும்பத்தாரும் மீண்டும் ஒரு சம்மந்தம் செய்து கொள்ளப் போகிற மகிழ்ச்சியில் திளைத்தனர்.

செல்வியும் ஆனந்தியும் தீபிகாவை கொஞ்சி மகிழ்ந்தனர். வீட்டில் எல்லாருடைய மனதிலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

தீபிகா ஆனந்தனை அழைத்தாள்.

"ஹாய்டா செல்லம்!"

"என்ன ஆனந்த்! ரொம்ப குஷியா இருக்கீங்க?"

"இல்லையா பின்ன! என் காதலி எனக்கு மனைவியா ஆகப்போறா! இது குஷியான விஷயம் இல்லையா!"

"உங்க பேரண்ட்ஸுக்கு என்ன பிடிச்சிருக்கா ஆனந்த்!"

"பிடிக்காம இருக்குமா?"

"பாபியோட வளைகாப்பு அன்னிக்கு நம்ம எங்கேஜ்மென்ட்! ஹூம்! நீங்க வந்தா நல்லா இருக்கும்!"

"ஹேய்! கமான் யா! கொஞ்ச நாள்தான்! நான் சீக்ரமா வந்துடறேன்! டோன்ட் வொரி!"

"ம்! ஓகே!"

"சரி! அப்றம் பேசலாம்! வேலை கொஞ்சம் டைட்டா இருக்கு! வெச்சுடறேன்! பை!" அழைப்பை துண்டித்து விட்டான். இல்லையென்றால் அவன் விமான நிலையத்தில் இருப்பதை அவள் கண்டுபிடித்து விடுவாளே!

சூரஜ், செல்வியின் காதில் கிசுகிசுத்தான்.

"ஆனந்த் சுட்கிய ஒரு வழியா உசார் பண்ணிட்டான்!"

"அண்ணனா லட்சணமா இருங்க!"

சிரித்தபடி நடக்கப்போகும் சுப நிகழ்ச்சிகளுக்கு வேண்டியவற்றை தயார் செய்ய ஆயத்தமானான்.

"பாபி! முஜே வோஹ் வாலி டிரஸ் சாஹியே!" என்று வந்து நின்றாள் தீபிகா!

"கௌன்ஸி டிரஸ்?"

"வஹி! ஜோ பிங்கி நே பஹனி தீ! ஃபேர்வெல் கே தின்!"

தீபிகாவுக்கு பிங்கி அணிந்தது போல தாவணி அணிய ஆசை வந்தது. அதுவும் ஆனந்தியின் வளைகாப்பன்று அணிய வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள்.

செல்வியிடம் கேட்டாள். கடைக்குச் சென்று வாங்கும் நிலையில் செல்வியும் இல்லை! ஆனந்தியும் இல்லை! பெரியவளுக்கு மசக்கையினால் வாந்தியும் மயக்கமும் அதிகமாக இருந்தது! சிறியவளுக்கோ ஏழு மாதம் நிறைவு அடைந்து எட்டாம் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது! என்ன செய்வது?

சூரஜ் சிக்கலைத் தீர்த்தான்!

"அதுதான் அமேசான் இருக்கே! ப்ரௌஸ் பண்ணி ஆடர் ப்ளேஸ் பண்ணு! என் கிட்ட பிரைம் அக்கவுன்ட் இருக்கு.. அதனால ஒரே நாள்ல டெலிவரி கிடைக்கும்! கேஷ் ஆன் டெலிவரியும் இருக்கு! வேணாம்னா ரிட்டன் பண்ணிடலாம்! பிரச்சனையில்லை!"

சூரஜின் யோசனைப்படி இணையத்தில் ஆடர் செய்தனர்! செமி ஸ்டிச்சுடு என்று சொல்லப்படும் பாதி தைத்த ஆயத்த ஆடை! அன்று மாலையே வந்துவிட்டது. தீபிகா தன்னுடைய தையல்காரியிடம் கொடுத்து அதை தன்னுடைய அளவுக்கு தைத்துக் கொண்டு வந்தாள்.

கிளிப் பச்சை நிறத்தில் சிவப்பு பாடர் போட்ட காஞ்சிபுரம் பட்டுப் பாவாடை, அதே நிறத்தில் டிசைனர் ரவிக்கை, சிவப்பு நிறத்தில் தங்க சரிகையில் பாடர் வைத்த கிரீப் தாவணி! அதற்கு டெம்பிள் ஜுவல்லரி செட்! தீபிகாவுக்கு முதுகு வரைதான் முடி! அதனால் நீண்ட ஜடை பின்னலிட சவுரி! ஜடையில் வைக்க நகைகள் எல்லாம் ஒரே நாளில் வந்துவிட்டது.

ஆனந்தி அவளுக்கு செயற்கை மல்லிச்சரமும் கனகாம்பர சரமும் செய்து கொடுத்தாள்.

"ஆனா சுட்கி! நிச்சயதார்த்தத்துக்கு ஆனந்த் வரமாட்டான்!" செல்வி அவளை வம்புக்கு இழுத்தாள்!

"தெரியும்! அதனாலதான் இந்த டிரஸ் போட்டுக்கறேன்! அவர் வராருன்னா நான் எப்பவும் போல ஒரு சுடிதார் போட்டுடுவேன் பாபி!" என்றாள்.

"ஏன் சுட்கி? எங்கண்ணன் முன்னாடி தாவணி போட்டா என்ன?" ஆனந்தி சிரித்தபடி கேட்டாள்.

"அவர் முன்னாடி தாவணிலயா?!" கண்களை விரித்து புரியாத ஒரு உணர்ச்சியைக் காட்டினாள்!

"ஹேய்!" சகோதரிகள் இருவரும் நாத்தனாரை கிண்டல் செய்து சிரித்தனர்.

"ஹூம்! போங்க பாபி! அவர் முன்னாடியெல்லாம் சுடிதான்!" வெட்கத்துடன் எழுந்து ஓடினாள்.

"சுட்கி?!" அவள் வெட்கத்துடன் சிரித்தபடி ஓடுவதைப் பார்த்தபடி வந்தான் விராட்!

திருமணம் என்று வந்தால் எல்லார் மனமும் இப்படித்தான் ஒரு வித சந்தோஷமும் பயமும் வெட்கமும் ஆச்சர்யமும் கலந்த கலவையாய் மாறிப் போகும் போலிருக்கிறது என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.


ஆருயிர் நீ தான் என்று ஆனந்தன்
அள்ளித் தெளித்த சொற்களால்
தனை மறந்த தீபிகாவின்
மகிழ்ச்சிக்கொரு எல்லையில்லை!

ஆனந்தன் தன் விருப்பத்தை
அன்னை தந்தையிடம் சொல்லிவிட
அவர்களும் ஏற்றபின்னர் என்றோ எமக்குத் தெரியுமென நகைத்தனர்!

வளை பூட்டும் நன்னாளில் மணத்தை
நிச்சயிப்போம் என்றே உரைத்திட ஆனந்தனின் செவிகளில் செய்தியோ
தேனாகப் பாய்ந்து இனித்தது!

மன்னவனின் எண்ணங்களில்
மயங்கி நின்ற மங்கையவள்
தமிழ்ப் பெண்ணாக உடையுடுத்தி
தங்கச் சிலை போல நின்றாள்!

பாவாடை
தாவணியில் பாவை
பால்நிலவு தேவதையானாள்!
நீண்ட கூந்தலில் குஞ்சலமும் மலரும்
சூட்டியே நின்றாள் எழிலுடனே!


- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top