4.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
மறுநாள்...
வழக்கம் போல் மலர் பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டிருக்க ....
வாசலில் தேவி வந்து நின்று "மலர் ரெடியாகிட்டியா? சீக்கிரமா வா" என்று அழைக்க..
"மலர் இதோ வந்துட்டேன் தேவி "என்று பதில் உரைத்தவள் வேகமாக வாசலுக்கு வர
"அக்கா ..."என்று அழைத்த வாறே வந்தாள் வினோதினி .சங்கரின் மூத்த மகள்."அக்கா இங்க பாருங்க இந்த நோட்டை மறந்து வைச்சுட்டு போறீங்க "என்று கொடுத்தவள் "அக்கா வரும்போது நான் சொன்னதை வாங்கிட்டு வர்றீங்களா? "என்று கேட்க சரி என்றவள் "நீ காலேஜ் போகலையா?" என்று கேட்க ..."இதோ கிளம்பிட்டேன்" என்றாள்.
"சரி வினோ பார்த்து பத்திரமா போ" என்று அவளிடம் சொல்லி விட்டு தேவி பின்னாடி அமர்ந்தவள்" போகலாம் தேவி" என்று சொன்னாள்.
வினோவிடம் வந்த சுந்தரி 'ஏய் அந்த மலரு என்ன ?கலெக்டர் வேலையா பார்க்கிறா அவளுக்கு நின்னு நீ வேலைப் பார்க்கிற" என்று கேட்க ... "அம்மா மலர் அக்கா என்னோட அக்கா அவங்களுக்காக இத கூட நான் செய்யலைன்னா எப்படி?"
" அது சரி நீ அவகிட்ட என்ன வாங்கி கேட்ட? எங்கிட்ட சொல்ல வேண்டியது தானே நான் வாங்கி தர மாட்டேனா அவகிட்ட கேட்கிற?"
"நான் ... வந்து ஒரு புக் வாங்கி வர சொன்னேன் அந்த கடை அவங்க போற வழியில தான் இருக்கு அதான் அக்காகிட்ட சொன்னேன்" என்றாள்.
"அப்படியா! சரி காலேஜ்க்கு கிளம்பு "என்று சொல்லி விட்டு சென்றாள் சுந்தரி.
வண்டியில் சென்றுக் கொண்டிருக்க தேவி "என்ன மலர் ஒன்றும் பேசாமல் வர்றே? "
"அது வினோவ பற்றி தான் யோசிச்சுட்டு வரேன்"
"ஏன் வினோக்கு என்னாச்சு?"
" அது அவ படிக்கிற காலேஜ்ல ஒரு பையன் ரொம்ப கிண்டல் பண்ணுறானா எங்கிட்ட சொன்னா, அதான் என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு வரேன்"
"இதுக்கு எதற்கு யோசனை? உன் சித்தப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே! என்றதும்" சித்தப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் "
"ஏன் சொன்னா என்ன ஆகும்?" "என்னாகும்னு தெரியாதா உனக்கு? இனிமேல் காலேஜ் போக வேண்டாம்னு சொல்லுவாங்க அப்புறம் படிப்பு பாதியிலே நிற்கும்,இந்த வருஷம் மட்டும் காலேஜ்க்கு போய்ட்டு வந்துட்டா படிப்பு முடிஞ்சுடும்,அதுவரைக்கும் யாருக்கும் தெரியாம பார்த்துக்கனும்" என்று யோசனையோடு பேசிக் கொண்டிருக்கும் போது " ஏய் அங்கே பாருடி" என்று அவள் சொன்ன திசையை பார்க்க ...நேற்று எங்கே கதிரை சந்தித்தாளோ அங்கே கொஞ்ச தூரத்தில் நின்றுக் கொண்டிருந்தான் கதிர்.
நேற்று பார்த்ததை விட இன்று பார்க்க பளிச் என்று இருந்தான்.அவன் அணிந்திருந்த லைட் க்ரீம் கலர் ஷர்ட் பிளாக் கலர் பாண்ட் என்று பளீச்சென்று நின்றவனை பார்த்தும் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் மலர்.'இவன் எதுக்கு வந்து நிற்கிறான்' என்று யோசித்தவாறே இருக்க ......
இவர்கள் இருவரும் வருவதைக்
கண்டவன் வழியை மறைத்து நிற்க மலர் தேவியிடம் " வண்டியை நிறுத்தாமல் சென்று விடு "என்று சொல்ல தேவி எதிரே நிற்பவனை கண்டு பதற்றத்தில் வண்டியை அவனுக்கு அருகில் நிறுத்தி விட்டாள்.வண்டியின் மீது கையை வைத்து பிடித்தவன்" ஏய் நீ தானே என் மேல வண்டியை ஏத்துனே ஒன்னும் தெரியாத மாதிரி எஸ்கேப் ஆக பார்க்கிறீயா?
" என்று தேவியை பார்த்து கேட்க தேவியோ பேந்த பேந்த விழிக்க...
" ஏய் உன்னை தான் கேட்கிறேன் பதில் சொல்லமா இருக்கே" என்று மிரட்ட... பின்னால் அமர்ந்து இருந்தவள் இறங்கி முன்னால் வந்த மலர் "சார் வண்டில இருந்து கையை எடுங்க எதுக்கு தேவையில்லாம வழியில நின்று தொல்லை கொடுக்கிறீங்க?" என்று கேட்க ...
"ஹலோ யார் தொல்லை கொடுக்குறாங்க? நேற்று என் மேல வண்டியை இடிச்சு கொல்லப் பார்த்த உங்களை நான் தொல்லை பண்றேனா? "என்று கேட்க ..
"தேவி ஐயோ என்ன பேசுறீங்க?" என்று பதற "நேற்று என்னை உங்க பைக் வைச்சு என் மேல ஏத்துனீங்கல்ல அததான் சொல்றேன்" என்றதும்
" இங்க பாருங்க சார் உங்க மேல வண்டியை வைச்சு இடிச்சது அவ இல்லை நான்தான்" என்றதும் "உன் வாயால உண்மையை சொல்ல வைக்க தான் நான் அந்த பொண்ணை சொன்னேன்" என்றான் கதிர்.
அவன் சொன்னதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்தாலும் மலர் சுதாகரித்துக் கொண்டு "இப்போ உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்க ...
"என் மேல வண்டியை வைச்சு இடிச்சல்ல ஒரு சாரி கேட்க தோணுச்சா உனக்கு இரு நான் போலீஸ்ல உன்னை பற்றி கம்ப்ளெய்ண்ட் கொடுக்கிறேன்"இதைக் கேட்ட தேவியின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிய மலரோ "நீங்க என் மேல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாலும்
ஒன்னும் நடக்காது?"
" ஏன்?" என்று கதிர் கேட்க...
"நான் யார் தெரியுமா? "
"நீ யாருன்னு சொன்னா தானே தெரியும்"
"நான் கமிஷனோட பொண்ணு தெரியுமா? நான் தான் உங்களை பாவம் பார்த்து காப்பாற்றி விட்டேன் புரியுதா?" என்று மிரட்டலோடு கேட்க...
" அப்படியா! 'என்றவன் காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் வழியே 'உடனே போட்டோ அனுப்பு" என்று மெதுவாக சொன்னான்.மலர் சொன்னதை கேட்டு தேவி அவளை பார்க்க இவளோ கண்ணை காட்டினாள்.
"அங்கே என்ன தனியா பேசுறீங்க" என்க
"அப்போ நீங்க கமிஷனர்ரோட பொண்ணா? எத்தனையாவது பொண்ணு? "
"ஹலோ அதெல்லாம் சொல்ல முடியாது"
"அப்போ நீ பொய் சொல்றீயா?"
" இல்லை நான் பொய் சொல்லலை,இப்ப என்ன? நான் எத்தனையாவது பொண்ணு தானே தெரியனும் எங்க அப்பாக்கு ரெண்டு பசங்க,ஒன்னு நான் இன்னொன்னு என் தம்பி புரியுதா? "என்று சொல்ல "அப்போ நீ சொல்றது உண்மை தான் என்றான் கதிர்"
"தெரியுதுல்ல வழியை விடுங்க" என்று அவள் திமிரோடு பதில் சொல்ல "சரி அவருக்கு ரெண்டு பசங்க இருக்கிறது உண்மை தான்,ஆனா அவங்களோட பேமிலி போட்டோல நீங்க ஏன் இல்லை" என்று தனது போன்ல இருந்து போட்டாவை காட்ட ஆடிப்போய் விட்டாள் மலர்.வேறென்ன கமிஷனர் தன் குடும்பத்தோடு சிரித்த முகத்தோடு இருக்கும் போட்டோவை கதிர் காட்ட இவள் வேறு என்ன செய்வாள்? "ஏய் என்ன பொய் சொல்லுறீயா? கமிஷரோட பொண்ணுன்னு சொன்னே நீ ஏன் போட்டால இல்லை" என்று மிரட்ட தேவிக்கு திக்...திக் ..... என்றது.'மலர் சொல்லும் பொய்யில் என்ன நடக்க போகிறதோ 'என்ற பயத்தில் நின்றாள்.
"ஏய் கேட்டதற்கு பதில் சொல்லு" என்று கேட்க "ஓ...ஓ..."என்று அழ ஆரம்பித்தாள் மலர். அவள் அழுவதை பார்த்து தேவி அதிர்ச்சியாகி விட்டாள்.'இவ உடனே தோல்விய ஏத்துக்க மாட்டாளே இன்னைக்கு என்ன இவன் கிட்ட வசமா மாட்டிக்கிட்டாளா?' என்று யோசனையோடு பார்க்க மலர் அழுவது இன்னும் அதிகமானது." இப்போ ....நான்... என்ன .... செய்வேன் .. .. ஐயோ... ம்ம்ம்.... "என்று அழ அதைக் கண்ட கதிர் பதற்றமாக ஏய் பொண்ணு... "இப்போ எதுக்கு அழுறே ..."என்று கேட்க அவளோ சொன்னதையே திரும்ப சொன்னாள் மலர்."ஏய் இப்போ உன்னை நான் என்ன பண்ணேன்னு அழுறே?" என்று கேட்க...
"போச்சு எல்லாம் போச்சு "என்றாள்."என்ன போச்சு? "
"அதுவா ... வேண்டாம் ஏற்கனவே நான் பொய் சொல்றேன்னு சொல்லுறீங்க இதுல நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்க" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னாள் மலர்.
அவளை கொஞ்சம் பயம் முறுத்தி விளையாடலாம் என்று பார்த்தால் அவள் அழுதவுடன் கதிருக்கு ஏதோ போல் ஆனது."சரி நீ சொல்றதை நான் நம்புறேன். என்ன விஷயம்னு முதல்ல சொல்லு அதுக்கு முன்னாடி உன் பேரை சொல்லு" என்றான்."என்னோட பேரு கலை"
"ம்ம்ம்... சரி நல்ல கலையான பேருதான்,நீ பொய் சொன்னதுக்கு நான் உன்னை என்னவென்று கூட கேட்கலை, அதுக்குள்ளே எதுக்கு இப்போ நீ அழுறே கலை" என்று கேட்க..
" சார் எதுக்கு நான் அப்படி பொய் சொன்னேன்னு தெரியுமா ..... "
"எதுக்குன்னு தானே இவ்வளவு நேராம கேட்கிறேன் சொல்லு "என்றான் சற்று எரிச்சலுடன்..
"சார் நான் போற வழியில தினமும் சில பசங்க என்னையும் அந்த வழியில வருகிற மற்ற பொண்ணுங்ளையும் ரொம்ப கிண்டல் பண்ணுறாங்க எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேங்குறாங்க வீட்ல சொன்ன இனிமேல் வீட்டை விட்டு வெளியே அனுப்பமாட்டாங்க அதான் இன்னைக்கு நான் அந்த பொறுக்கி பசங்ககிட்ட போய் நான் கமிஷனரோட பொண்ணு இனிமேல் யாராவது கிண்டல் பண்ணீங்க எங்க அப்பாகிட்ட சொல்லி உங்களை உள்ளே தள்ளிடுவேன் என்று மிரட்டலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.ஆனால் நான் சொன்னது
பொய்னு ரொம்ம ஈஸியா நீங்க கண்டுபிடிச்சிடீங்க. இப்போ நான் என்ன செய்வதென்று எனக்கு தெரியலை" என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு வருந்தியவன் "அதெல்லாம் ஒன்றும் தெரியாது நீ போய் சொல்லு" என்றான் கதிர்.
"இல்லை சார் நீங்க கண்டுபிடிச்ச மாதிரி கண்டுபிடிச்சுட்டா என்ன செய்ய?" என்றாள்."ஏய் எனக்கு கமிஷனரை தெரியும் அதான் சொன்னேன்,அவங்களுக்கு தெரியுமா? "என்று சொல்ல...
" இல்லை சார் எனக்கு பயம்மா இருக்கு அப்புறம் பதற்றத்துல ஏதாவது சொதப்பிட்ட என்ன செய்ய" என்று தலையை தொங்க போட்டுக் கொண்டு சொல்ல அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தேவி மனதினுள் 'அடிப்பாவி ... உன் தங்கச்சி பிரச்சினையை இவனை வைச்சு முடிக்க போறீயா ஒழிஞ்சது போ 'என்று அமைதியாக இருந்தாள்.
மலர் இருக்கும் நிலையை கண்டு வருந்தியவன் "சரி கலை நேற்று தானே சொன்ன நம்ம ரெண்டுபேரும் பிரண்ட்ஸ், அதனால நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்,வா நான் போய் அந்த பசங்கல என்னன்னு கேட்கிறேன் "என்று சொன்னான்.
"இல்லை வேண்டாம் எதாவது பிரச்சினையாக போகுது சார்"
"பரவாயில்லை வா கலை எதாவது பிரச்சினை என்றால் கமிஷனர்கிட்ட சொல்லலாம்,நீ என்று இல்லை இந்த இடத்துல வேற எந்த பொண்ணு உதவி கேட்டாலும் நான் செய்வேன்" என்று சொல்ல தேவியும் மலரும் அவர்களுடைய வண்டியில் செல்ல கதிர் தன்னுடைய பைக்கில் என மூவரும் வினோ படிக்கும் காலேஜ் செல்லும் ரோட்டிற்கு சென்றனர்.
கதிர் வரும் வழியில் யாரிடமோ போனில் பேசிக் கொண்டே வந்தான்.மலர் தேவியிடம் ஸ்கூல்ல போய் பேசிக்கலாம் வாயை மூடிட்டு வா என்றாள். அங்கே சென்றதும் மலர் இடத்தைக் காட்ட அங்கே நான்கைந்து பேர் ஒவ்வொரு பைக்கில் உட்கார்ந்து கொண்டு வழியில் வரும் பெண்களையும் அங்கே கல்லூரிக்கு வரும் பெண்களை கிண்டலடித்துக் கொண்டும் இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டிருக்க அதைக் கண்டவன் முதலில் அதை போனில் வீடியோ எடுத்தான்.
பின்பு அவர்களிடம் போக மலரோ தேவியிடம் சற்று தொலைவில் வண்டியை நிறுத்த சொல்ல கதிர் அங்குள்ளவர்களிடம் சென்று "தம்பிகளா உங்களுக்கு இங்கே என்ன வேலை? என்று கேட்க சார்க்கு இங்கே என்ன வேலையோ அதே வேலை தான் எங்களுக்கும்" என்றான் ஒருவன்.கதிர் "இங்க பாருங்க தம்பிகளா தேவையில்லாம பொண்ணுங்களை கிண்டல் பண்ணுற வேலை வைச்சுகாதீங்க ஒழுங்கா இங்கிருந்து எல்லோரும் கலைந்து போய்டுங்க "என்று மிரட்ட ...
"ஏய் இதே மாதிரி நீ பேசுனன்னு வைய்யு பேச உன் வாய் இருக்காது" என்று ஒருவன் கையை முறுக்கிக் கொண்டு ஒருவன் கதிர் அருகில் வர திடீரென அவர்களை சுற்றி நாலைந்து பேர் அவர்களை சுற்றி வளைக்க கதிர் "இவங்களை தான் பிடிங்க "என்றதும் மலர் "ஏய் தேவி பிரச்சினை பெரிசாயிடுச்சுடி வண்டியை எடு அடுத்து நம்ம கிட்ட தான் வருவாய்ங்க எஸ்கேப்..." என்று கத்த தேவி தலையில் அடித்துக் கொண்டாள் "தேவையில்லாத பிரச்சினை இழுத்து வேடிக்கை பார்க்க வேண்டியது" என்று புலம்பிக் கொண்டு வண்டியை வேகமாக கிளப்பி விட்டாள்.கதிர் அங்கே முடித்துக் கொண்டு இங்கே வந்து பார்க்க கலையும் இல்லை அவளுடைய தோழியும் இல்லை என்று கண்டவன்" இந்த தடவை ஒரு தாங்ஸ் கூட சொல்லாம போய்ட்டல்ல உன்னை விட மாட்டேன் "என்றான் கதிர்.
மன்னிப்பையும் நன்றியையும்
மட்டும் எதிர்பார்த்து செல்பவன்
அவளிடம் தீராத நேசத்தையும்
காதலையும் கண்டுக்
கொள்வானா?
(தொடரும்)