Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 45
செல்வியும் சூரஜும் எங்கு சென்றார்கள் என்ன ஆனார்கள் என்று ஒன்றும் தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் குழம்பித் தவித்தார்கள்.
'நா அவங்ககிட்ட ரொம்பவே கோவமா நடந்துகிட்டேன்.. அதனாலதான் என் முகத்தில கூட முழிக்க பிடிக்காம அவங்க எங்கியோ போய்ட்டாங்க..' என்று நினைத்து நினைத்து மருகினாள் கௌரி. தீன்தயாளும் சொல்லொணாத் துயருக்கு ஆளானார்.
விராட்டும் ஆனந்தியும் அவர்களைத் தேற்ற பலவாறு முயன்றனர்.
குழந்தை ஐஷூ மட்டும் அங்கு இல்லாமல் போயிருந்தால் அந்த வீடே நிலை குலைந்து போயிருக்கும். அந்த ஒரு உயிர் மற்ற உயிர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது.
குழந்தையின் வேலைகள் தவிர மற்ற அனைத்துமே இயந்திரத்தனமாய் நடந்து கொண்டிருந்தது எனலாம்.
**********
மும்பை சென்று செல்வியை பார்த்துவிட்டு வருவதாய்ச் சொன்ன யமுனா மதுரை திரும்பி மூன்று தினங்கள் ஆகியிருந்தன.
செல்விக்கு உடம்பு சரியில்லை.. அவளைப் பார்த்துவிட்டு அப்படியே மற்றவர்களையும் பார்த்து பேசிவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றவள், தன் மனிதர்களைப் பார்த்துவிட்டு வந்த உற்சாகம் எதுவுமின்றி சோர்ந்தே அமர்ந்திருந்தது கண்டு, முழுக்க முழுக்க கண்மணியாக மாறிவிட்டிருந்த பிங்கிக்கு குழப்பாக இருந்தது. (இனி நானும் அவளை கண்மணி என்றே குறிப்பிடுகிறேன்.)
"அம்மா! என்ன ஆச்சு? நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு எதும் சரியில்லையா? ஊருக்கு போய்ட்டு வந்த அலைச்சல் ஒத்துக்கலயா?" என்று தெளிவான தமிழில் அக்கறையுடன் கேட்டாள் கண்மணி.
மதுரை வந்ததிலிருந்து எங்கும் தமிழ் மொழி அவள் காதில் ஒலிப்பதால் அவள் இப்போது சரளமான தமிழில் பேசக் கற்றுக் கொண்டுவிட்டாள்.
மேலும் மதுரை வந்த பின், முடிந்த வரை தமிழிலேயே உரையாட வேண்டும்; அப்போதுதான் நம் உறவினர்கள் நம்மை ஏற்றுக் கொள்ள முன் வருவார்கள் என்று தாயும் மகளும் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். இதுவும் செல்வி சொல்லிக் கொடுத்த அறிவுரைதான்.
மகள் வந்து அக்கறையாய் விசாரித்தாலும் ஏதோ சிந்தனையிலிருந்த யமுனா,
"குச் நஹி பேட்டா! தும் ஜாவோ.. அப்நே படாயீ மே த்யான் லகாவோ.." (ஒண்ணுல்ல மகளே! நீ போ! உன் படிப்புல கவனம் செலுத்து..) என்று பதலளித்தாள்.
இங்கு வந்து இரண்டு ஆண்டில் ஹிந்தியில் பேசுவதை முழுவதுமாய் நிறுத்தியிருந்த அம்மா, இப்போது ஏன் ஹிந்தியில் பேசுகிறார்கள் என்று துணுக்குற்றாள் கண்மணி.
"ம்மா! க்யா ஹுவா? ஆப் க்யூன் இத்னே பரேஷான் ஹைன்?" (அம்மா! என்னாச்சு? நீங்க ஏன் இவ்ளோ கவலையா இருக்கீங்க?) என்று அவளும் ஹிந்தியிலேயே பதற்றத்துடன் கேட்டாள்.
"என்னன்னு சொல்ல.. செல்வியோட குழந்தை பிறந்து ஒரு மணி நேரம் கூட உயிரோட இல்ல.. செத்து பேச்சு.. பாவம் செல்வி.. ஐஷுக்குட்டிய காப்பாத்தற போராட்டத்தில தன் குழந்தைய பலி குடுத்துட்டா.." என்று கண்ணீருடன் ஆரம்பித்து நடந்த விபரீதங்களைக் கூறி முடித்தாள் யமுனா.
'செல்வி பாபிக்கா இந்த நிலைமை..' என்று மனதுக்குள் அழுதாள் கண்மணி.
"செல்விக்கும் சூரஜுக்கும் எல்லாம் சரியாகி நல்லபடியா குழந்தை பிறக்கணும்னு வேண்டிப்போம்.." என்று சொல்லி கண்மணியை படிக்க அனுப்பி வைத்தாள் யமுனா.
தன்னுடைய அறைக்கு வந்த கண்மணி செல்விக்கு அழைக்கலாமா என்று நினைத்துவிட்டு, வேண்டாம்.. உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவளை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாள்.
ஆனால் அந்த குறுஞ்செய்தி அவளுக்கு சென்று சேர்ந்ததே தவிர அதை செல்வி பார்க்கவேயில்லை.
கண்மணிக்கு மனது வருந்தினாலும் செல்விக்கு உடல்நிலை இன்னும் தேறவில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவள் அதை பார்க்கவில்லை போல என்று நினைத்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
யமுனாவும் கண்மணியும் அவ்வப்போது செல்வியைப் பற்றியும் சூரஜைப் பற்றியும் கவலையாகப் பேசிகொண்டிருந்தார்கள்.
கண்மணி செல்விக்கு செய்தி அனுப்பி பத்து நாட்களுக்குப் பின்னர் அவள் அதை பார்த்துவிட்டதாக நீல நிற டிக் வந்து கண்மணிக்கு காட்டிக் கொடுக்க கண்மணிக்கு மனம் மகிழ்ந்தது. அன்றிலிருந்து செல்வியின் பதிலுக்காக அவள் ஆவலாகக் காத்திருந்தாள்.
ஆனால் செல்வி அந்த செய்திக்கு பதிலெதுவும் அனுப்பவேயில்லை.
"என்னன்னு தெரியல மா.. செல்வி பாபிக்கு நா அன்னிக்கு போட்ட மெசேஜை பாபி இன்னிக்குதான் பாத்திருக்காங்க.. ஆனா பதில் எதுவும் பாபி அனுப்பவேல்ல.. மனசு கஷ்டமா இருக்கு மா.." என்று கண்மணி யமுனாவிடம் சொல்லி வருந்தினாள்.
"செல்விக்கு உடம்பில மட்டுமில்லாம மனசிலயும் காயம் பட்டிருக்குல்ல பிங்கி.. பாவம் அவ.. கௌரி பாபி இப்டி முகத்தை திருப்பிக்குவாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டா.. எல்லார் கிட்டயும் அன்பு மட்டுமே காட்ட தெரிஞ்ச பொண்ணுக்கு இப்டி ஒரு சோதனைய ஆண்டவன் குடுத்திருக்கான்.. அவ இந்த சோதனைய கடந்து வர கொஞ்ச நாளாகும்மா.. அது வரை வெய்ட் பண்ணு.. அப்றம் அவ உனக்கு கண்டிப்பா பதில் போடுவா.." என்று மகளைத் தேற்றினாள் யமுனா.
இருவரும் கவலையுடன் பேசிக் கொண்டும் தங்கள் மும்பை வாழ்க்கையை அடிக்கடி நினைத்துக் கொண்டும் இருந்தனர். இப்படியே ஒரு மாதம் ஓடிப் போனது.
அப்படி ஒரு நாள் இருவரும் செல்வியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, பால் பாண்டியன் வந்தான்.
"என்ன அத்த? எப்டி இருக்கீங்க? ஹே கண்மணி! எப்டிடா இருக்க?" என்று குசலம் விசாரித்தான்.
அவன் தன் அலுவல் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இப்போதுதான் மதுரை வருகிறான். அவனுக்கு சூரஜின் வீட்டில் நடந்த விபரீதங்கள் பற்றி எதுவுமே தெரியாது.
"நல்லா இருக்கேன் மாமா.." என்று கண்மணி பதிலளித்தாள்.
"ம்.. இருக்கோம் பா.. நீ இப்பதான் பெங்களூருல இருந்து வரியா?" யமுனா கேட்டாள்.
"ஆமா அத்த.. நேத்தி நைட் வந்தேன்.. நீங்க சூரஜ் வைஃப்க்கு உடம்பு சரியில்லன்னு மும்பை போறேன்னு மெசேஜ் போட்டுட்டு போனீங்களே.. சூரஜை பாத்தீங்களா? அவன் எப்டி இருக்கான்? அவன் வைஃப்க்கு இப்ப உடம்பு ஓகேயா? குழந்தைக்கு எதுவும் ஆகலதானே?" என்று கேட்டான்.
அவனிடம் நடந்த விபரீதங்களைச் சொன்னாள் யமுனா.
அவள் கூறியதைக் கேட்ட பால் பாண்டியன் அதிர்ந்தான்.
"ஓ மை காட்! என்ன அத்த சொல்றீங்க? குழந்தைய பறி குடுத்துட்டாங்களா.. சோ சேட்.. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி தான் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழவே ஆரம்பிச்சாங்க.. பாவம்.. சூரஜும் அவன் வைஃபும் செய்தது எவ்ளோ பெரிய தியாகம்.. இதக் கூட அவங்கம்மாவால புரிஞ்சிக்க முடியலையா?" என்று கேட்டுவிட்டு சூரஜின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்தான்.
அது நாட் ரீச்சபுள் என்று வந்ததால் விராட்டின் எண்ணை யமுனாவிடம் வாங்கி அவனை அழைத்தான்.
விராட் சொன்ன செய்தியைக் கேட்டு மேலும் அதிர்ந்து போனான்.
"என்ன விராட் சொல்றீங்க? சூரஜை காணலையா? எங்க போனான்? எப்ப இருந்து அவன காணம்?" என்றெல்லாம் படபடவென்று கேள்விகள் கேட்டான்.
விராட் சொன்ன பதில்கள் அவனை மேலும் குழப்பவே செய்தன.
"நா என் போலீஸ் பவரை வெச்சி எல்லா இடத்திலயும் தேடிட்டேன்.. அவனையும் பாபியையும் எங்கியும் காணல.. அவன் ஆஃபீஸ்லயும் அவன் எங்க போயிருப்பான்னு தெரியலன்னு சொல்றாங்க.. ஏன்னா அவன் ஆஃபீஸ்லயும் ரிப்போர்ட் செய்யல.. எனக்கு என்ன பண்றதுன்னு புரியல.." என்று கவலையுடன் சொன்னான் விராட்.
"நா ஹெட் ஆஃபீஸ்ல கேட்டு பாக்கறேன் விராட்.. டோன் வொரி.. அவங்கள எப்டியாவது நாம கண்டுபிடிச்சிடலாம்.." என்று ஆறுதல் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த யமுனாவும் கண்மணியும் என்னவென்று பதற்றத்துடன் கேட்க,
"சூரஜும் அவன் வைஃபும் சென்னையிலிருந்து மும்பை கிளம்பியிருக்காங்க.. ஆனா மும்பை போய் சேரவேல்ல.. எங்க போனாங்க.. என்ன ஆனாங்கன்னு தெரியலன்னு சூரஜ் தம்பி விராட் கவலையா சொல்றாரு.." என்று நடந்ததைக் கூற யமுனாவும் கண்மணியும் மேலும் வருந்தினர்.
"செல்வியும் சூரஜும் இப்ப எங்க இருக்காங்கன்னு யாருக்கும் தெரிலயா.. எங்க தேடறதுன்னும் புரியலயா.. ஐயோ! கடவுளே! இதென்ன விபரீதம்? அவங்கள ஏன் இப்படி மேலும் மேலும் சோதிக்கற.. நல்லா இருந்த குடும்பத்தில யார் கண் பட்டுச்சோ.." என்று யமுனா அழுதாள்.
அதற்குள் வீட்டில் இருந்தவர்களிடமும் விஷயம் பரவி விட அவர்களும் சூரஜுக்காகவும் செல்விக்காகவும் வருந்தினர்.
"நேர்மையான போலீஸ்காரன் குடும்பத்துக்கு இப்டிதான் சோதனைகள் வரும் போல.." என்று கூறி யமுனா கண்ணீர் விட்டாள்.
இதைக் கேட்டவர்கள் யமுனாவின் கூற்றில் இருந்த வேதனையை உணர்ந்தவர்களாய் அவளை சமாதானம் செய்தனர்.
"கவலப்படாதீங்க அத்த.. எல்லாம் சீக்கிரமே சரியாகும்.. எங்க ஹெட் ஆஃபீஸ்ல கண்டிப்பா ஏதாவது விவரம் கிடைக்கும்.." என்று ஆறுதல் கூறிய பால் பாண்டி தன் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ள விரைந்தான்.
எல்லாரும் சிறிது நேரம் ஆறுதல் கூறிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க நகர்ந்துவிட, யமுனாவும் செல்விக்காக வேண்டிக் கொள்ள அருகிலிருந்த அம்மன் கோவிலுக்குக் கிளம்பினாள்.
"நா கோவிலுக்கு போயிட்டு வரேன் பிங்கி.. நீயும் வரியா?"
"ம்.." என்று கண்மணியும் அவளுடன் கிளம்பினாள்.
இவர்கள் கிளம்பும் நேரம், அங்கு வந்தாள் துர்கா. (கண்மணியின் சித்தப்பா மகள் - கண்மணியின் தந்தை செந்தில்வேலனின் தம்பியான சரவணவேலனின் மகள்.)
கண்மணியும் துர்காவும் கிட்டத்தட்ட ஒரே வயதினர்தான். ஒரே கல்லூரியில் ஒன்றாகத்தான் படிக்கிறார்கள்.
"ஹே கண்மணி! ஆர்கானிக் கெமிஸ்ட்ரீல கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு.. நா ப்ரொஃபசர் கிட்ட கேட்டேன்.. இன்னும் சில ஃப்ரண்ட்சும் கேட்டாங்களாம்.. நாளைக்கு சொல்லி தரேன்னு சொல்லியிருக்காங்க.. அதுக்கு முன்னால டவுட்ஸ் எல்லாம் நாம டிஸ்கஸ் பண்ணிக்கலாமா.. நாளைக்கு சார் கிட்ட கேக்க ஈசியா இருக்கும்.." என்று வந்தாள்.
"சரி கண்மணி.. நீ படி.. நா போய்ட்டு வரேன்.." என்று கூறி யமுனா கிளம்பினாள்.
கண்மணியும் தன் சகோதரியுடன் படிக்க அமர்ந்தாள்.
மதுரை வந்த புதிதில் கண்மணியிடம் துர்கா சரியாக நடந்து கொள்ளவில்லை.
'ஹிந்திக்காரி! அலட்டி! எங்க பெரியப்பா சாவுக்கு காரணமானவ..' என்றெல்லாம் கண்மணி தூற்றப்பட்டாள். அதுவும் பால் பாண்டி மாமாவின் அன்புக்கு பாத்திரமானவள் என்பதால் இன்னும் அதிகமான அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்டாள் கண்மணி.
ஆனால் செல்வியின் கனிவான வழிகாட்டுதலினால் கண்மணி அமைதியாகவும் அன்பாகவும் இருந்தாள்.
இருவரும் ஒரே கல்லூரியில்தான் படிக்கிறார்கள் என்றாலும் துர்கா தங்கள் வீட்டு காரிலும் கண்மணி பேருந்திலும் கல்லூரிக்குச் செல்வார்கள். கண்மணியையும் அழைத்துப் போகதான் கார் என்று துர்காவிடம் சொன்னாலும் அவள் கண்மணியை வேண்டுமென்றே தன்னுடன் அழைத்துச் செல்லாமல் அலைக்கழித்தாள். அதனால் எதற்கு வம்பு என்று கண்மணியே பேருந்தில் செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டாள்.
ஒரு நாள் கார் திடீரென்று ரிப்பேராகி விட, அன்று வேறு வழியின்றி துர்காவும் பேருந்தில் பயணிக்க நேர்ந்தது.
அப்போதும் கண்மணியுடன் சேர்ந்து செல்லாமல் தனியாகத்தான் போவேன் என்று பிடிவாதம் பிடித்து தனியாகச் சென்றாள்.
அன்று பேருந்தில் ஒரு 'பெருங்குடிமகன்' துர்காவிடம் வம்பு செய்ய வந்தான்.
"ஏய்! என்னா செவத்த குட்டி.. இன்னிக்கு ப்ளசருல போலயா.. பஸ்ஸுல வார.." என்று கேட்டுக் கொண்டே அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான்.
"ஏய்.. விடு.. விடு.. என்ன விடு.."
இதற்கெல்லாம் பழக்கப்பட்டிராத துர்கா வெலவெலத்துப் போனாள்.
பயமும் கண்ணீருமாக அவள் செய்வதறியாது குழம்பித் தவிக்க, இதைக் கண்ட பேருந்தின் பின்னால் நின்றிருந்த கண்மணி, கும்பலைத் தள்ளி விலக்கிக் கொண்டு வேக வேகமாக முன்னால் வந்தாள்.
"ஏய்! பத்தமீஸ்! அவ கைய விட் டா!" என்று ஹிந்தியும் உடைந்த தமிழுமாக கூறிக் கொண்டே துர்காவின் கையை அவன் கையிலிருந்து விடுவிக்க முயன்றாள்.
மும்பையிலிருந்து மதுரை வந்த புதிது என்பதால் அவளுடைய தமிழ் அப்போது கொஞ்சம் உடைந்துதான் இருந்தது.
"அட! இங்க பாருடா.. இந்த வடக்கத்தி பீஸு இங்க வந்து இந்தி படம் ஓட்டுது.." என்று கண்மணியைப் பார்த்து ஏளனமாகக் கூறிக் கொண்டே அவள் கையையும் தன் மறு கையால் பற்ற முயற்சித்தான்.
"ஹிந்தி ஃபில்ம் தேக்னா துஜே! தோ தேக் லோ!" என்று அவனை விட ஏளனமான குரலில் கோபமாகக் கூறிய கண்மணி, தான் கற்ற தற்காப்புக் கலையான கராத்தேயின் உதவியுடன் அவனை வெளுத்து வாங்கினாள்.
அவன் ஐயோ அம்மா என்று அலறிக் கொண்டே கண்மணியின் கால்களிலும் துர்காவின் கால்களிலும் விழுந்து வணங்கி விட்டு ஓடியே போனான்.
துர்கா நன்றியுடன் கண்மணியின் கையைப் பிடித்தபடி கண்ணீர் விட, கண்மணி அவளை அணைத்து ஆசுவாசப்படுத்தினாள்.
"உனக்கு கராத்தேல்லாம் தெரியுமா?" என்று துர்கா வியந்து போய் கேட்க, கண்மணி தான் கராத்தே கற்ற வரலாற்றை சொல்லிச் சிரித்தாள்.
"உங்க ஊர் செல்வி பாபிதான் எனக்கே கராத்தே கத்து குடுத்தாங்க.. நீ என்னடான்னா என்ன போய் கேக்கற.. ஏன்? நீ கராத்தே கத்துக்கலயா?" என்று கண்மணி கேட்க,
"சுத்தம்! கராத்தேவாவது ஒண்ணாவது! நம்ம பாட்டிக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.. பொண்ணுங்கன்னா எப்பவும் அடக்க ஒடுக்கமா சமையல்கட்டே கதின்னு இருந்தாதான் நல்லதுன்னு நெனக்கிறவங்க.. நானும் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன்.. நா காலேஜ் போறதுக்கே எவ்ளோ போராட வேண்டியிருந்தது தெரியுமா? நல்ல வேளை! நீ மும்பைல இருந்து வந்த.. உன்ன வெச்சி எனக்கும் காலேஜ் போற பாக்கியம் கிடைச்சது.." என்று துர்கா கூறினாள்.
"கவலப்படாத! உன்ன கராத்தே கிளாஸ் சேர்க்க இன்னிக்கு நடந்த விஷயம் ஹெல்ப் பண்ணும்.." என்ற கண்மணி அதற்கு ஏற்பாடும் செய்தாள்.
அதன் பின்னர் துர்காவும் கண்மணியும் உற்ற தோழிகளாகிவிட்டனர். இருவரும் ஒன்றாக படித்தனர். ஒன்றாக சாப்பிட்டனர். ஒன்றாகவே தூங்கினர். கண்மணி துர்காவுக்கு ஹிந்தியும் துர்கா கண்மணிக்கு தமிழும் கற்றுக் கொடுக்க, ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் பாராட்டிக் கொண்டார்கள்.
கண்மணியின் சிபாரிசில் இப்போது துர்காவும் கராத்தேயில் கில்லாடி ஆகிவிட்டிருந்தாள். அவள் தான் மட்டுமல்லாமல் தன் மற்ற தோழிகளும் கூட கராத்தே பயில வழி வகை செய்தாள்.
இப்போது அவர்கள் அனைவரும் சிலம்பம் பயின்று வருகிறார்கள்.
கண்மணியின் மூலமாக செல்வியைப் பற்றி தெரிந்து கொண்ட துர்காவும் செல்வியுடன் சில முறை போனில் பேசி நட்பு வளர்த்துக் கொண்டிருந்தாள். அவளும் செல்வியை பாபி என்றே அழைக்கவும் செய்தாள்.
துர்காவுடன் சேர்ந்து கண்மணி படித்து முடித்துவிட்டு எழுந்தாள். யமுனாவும் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்திருந்தாள்.
செல்விக்கு நடந்த விபரீதங்களைப் பற்றி கண்மணி செல்லக் கேட்டு வருந்திய துர்கா, இப்போது அவளைக் காணவேயில்லை என்பதைக் கேட்டதும் அதிர்ந்துதான் போனாள்.
"கவலப்படாத கண்மணி. செல்வி பாபி நல்லபடியா இருப்பாங்க.. அவங்க நல்லா இருக்கணும்னு நானும் வேண்டிக்கறேன்.." என்றாள் துர்கா.
கண்மணி துர்காவின் தோளில் ஆதரவாகச் சாய்ந்து கொண்டாள்.
தலைமை அலுவலகத்தில் விவரம் கேட்டு வருகிறேன் என்று சென்ற பால் பாண்டி கசப்பான தகவலுடன் வந்து சேர்ந்தான்.
காதலுக்கு மொழியேது என்றுரைத்து
கசிந்துருகிக் காதல் செய்த நாயகியும்
காதலின் சின்னத்தை இழந்ததோடு
நிம்மதியையும் தொலைத்துவிட்டாள்!
நாயகனும், நாயகியும் மனம் வெறுத்து
உற்றாரைத் துறந்து ஓடி ஒளிந்தனரே!
பெற்றோருக்கும் மாணிக்கத்தின் மதிப்பு
இழந்தபின் தானே புரிகிறது?
அழுது புரண்டாலும் புலம்பித் தவித்தாலும் அள்ள முடியுமா சிதறிய வார்த்தைகளை?
துயரத்தில் தவித்த உள்ளங்களை மேலும்
துன்புறுத்திக் கிழித்தது கொடுமையன்றோ?
விராட்டும், ஆனந்தியும் தவித்தார்கள்!
தமையனைத் தேடிய காவலன் தளர்ந்தான்!
வீட்டில் வலம் வந்த குழந்தை மட்டுமே
வாடிய உள்ளங்களை வாழ வைத்தது!
தமிழகம் சென்ற பிங்கியும் மாறினாள்
கண்மணியாகி வாழ்வில் சிறந்தாள்!
வாழ வழிவகுத்த செல்வி பாபியின்
துயரம் அறிந்து துடிதுடித்து நிற்கிறாள்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?