5.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
மலரும் தேவியும் போகும் வழியினில் "மலர் நீ பண்றது எதுவும் சரியில்லை" என்று பேச்சை நிறுத்தினாள் தேவி.
"இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி பேசுற?"
"என்ன பண்ணல நீ? இங்க பாரு மலரு தேவையில்லாததை பேசி மற்றவங்களை ஏமாத்துற மாதிரி என்கிட்ட பேசாதே,எதுக்கு நீ அந்த கதிரை இப்போ பிரச்சினைல ஏமாற்றி விட்டே "என்றதும்
"இதுக்கு தான் என் மேல கோபப்படுறீயா" என்று அசட்டையாக கேட்டாள் மலர்.
"மலர் நீ ஏன் இப்படி துணிந்து முடிவெடுக்கிற? அப்படி நீ செய்றதுல உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா உங்க அம்மாவோட நிலைமையை நினைச்சு பார்த்தியா? உனக்காக தான் உங்க அம்மா உயிரோட இருக்காங்க அது கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா இல்லையா?" என்றாள்.
"எனக்கு தெரியும் தேவி சின்ன விஷயத்தை இப்போ எதுக்கு பெரிசாக்குற?"
"நான் பெரிதுபடுத்தலை மலர் நீ பண்ணது தான் பெரிய தப்புன்னு சொல்றேன்"
"இப்போ என்ன சொல்லவறே தேவி?"
"முதல்ல நேற்று அவர் மேல வண்டியை இடித்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்டு இருக்கலாம் அதையும் செய்யலை,அத கேட்கலைன்னா கூட பரவாயில்லை,வினோ பிரச்சினைக்கு அவரை இழுத்து விட்டது இன்னும் பெரிய தப்பு"என்றாள் கோபத்தோடு...
"தேவி முதல்ல நான் சொல்றதை கேளு வினோவோட பிரச்சினைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் யோசிச்சு இருந்தேன்,அப்போ அந்த கதிர் வம்பு பண்ணவும் நான் சும்மா ஒரு பொய் சொன்னேன் அதை சொன்ன ஐந்து நிமிஷத்துல உண்மையை கண்டுபிடிச்சுட்டான்.அப்போ அவனால இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்னு நினைச்சு கேட்டேன்,அவனும் ஒத்துக்கிட்டான் தானே! அதுவும் இல்லாமல் ஏற்கனவே இப்படி தான் ஒரு தடவை பிரச்சினை நடக்கும் போது நான் வாயை மூடிக்கிட்டு இருந்ததால என்ன நடந்திச்சுன்னு உனக்கு தெரியும்ல அதனால் தான் இனிமேல் எதையும் தைரியமா முடிவெடுக்கனும் தான் செய்தேன்" என்றாள்.
"சரி நீ சொல்றதும் உண்மைன்னு வைச்சுக்கலாம்,ஆனால் பிரச்சினை பெரிசான உடனே எதுக்கு அங்கிருந்து ஓடி வந்தாய் அவருகிட்ட ஒரு தாங்ஸ் கூட சொல்லாமல்..."என்று அவள் முடிக்கும் முன்
"அது அங்க போலீஸ் வந்துடுச்சுன்னா நம்ம ரெண்டுபேரையும் விசாரித்தால் வீடுவரைக்கும் பிரச்சினை வரும் அதான் வரச் சொன்னேன்"
"அட..... அறிவுள்ள என் தோழியே..... அங்கே போலீஸ் வந்தது என்றால் என்ன செய்யன்னு யோசித்த நீ அந்த கதிரே போலீஸா இருந்தால் என்ன செய்வே?" என்று கேட்டு முடிக்கவும் ஸ்கூல் வரவும் சரியாக அமைந்தது.
உள்ளே சென்று தங்கள் வேலைகளை பார்க்க செல்ல மலருக்கோ தேவி கேட்டதே யோசனையாக இருந்தது.
'எங்கே எதாவது பிரச்சினையாகி விடுமோ?' என்று யோசனையில் மூழ்கி இருந்தவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.
'அப்போ பிரச்சினை அம்மா வரைக்கும் போகுமோ? சித்தி என்ன கேள்வி கேட்டே கொன்றுவிடுமே 'என்ற யோசனையின் இடையே உணவு இடைவெளியின் போது இருவரும் சந்தித்து இருக்க தேவி "என்ன மலர் நான் சொன்னதைப் பற்றி நீ என்ன நினைக்கிற?" என்று கேட்க ஆரம்பித்தால்.......
"தேவி நீ சொல்றதும் உண்மை தான்.இப்போ என்ன செய்ய?" என்று கண்களை உருட்டிக் கொண்டே ஒரு வித பயத்தோடு கேட்க...
"மலர் இதோட எல்லாத்தையும் விட்டுவிடு. இனிமேல் இந்த மாதிரி வேலை செய்யாமல் இரு,இல்லைன்னா அம்மாகிட்ட சொல்லிடுவேன் "என்றாள்.
"சரி இனிமேல் யார்கிட்டயும் வம்பு பண்ணலை நீ அம்மாகிட்ட சொல்லாதே கேட்டால் ரொம்ப வருத்தப்படுவாங்க"
"அதுக்கு தான் நானும் அமைதியா இருக்கேன் மலர் இனிமேலாவது எந்த விஷயத்திலும் தலையிடாமல் இரு" என்றாள்.
"ம்ம்ம்..... நீ சொன்ன மாதிரி இருக்க நான் முயற்சி பண்றேன் ஆனா ஒன்னுடி சும்மா இருந்த என்னை பயமுறுத்தி வைச்சுட்டல்ல உன்னை....." என்று அவளை அடிக்க துவங்கினாள் மலர்.
மாலை நேரம் வீட்டிற்கு வந்த பிறகு தனது அறையில் அமர்ந்திருக்க அங்கே வந்தாள் வினோ."அக்கா ... " என்று அழைத்தபடி உள்ளே வந்தவள் கதவை தாழிட்டுக் கொண்டு அவளருகில் அமர்ந்தவள் "அக்கா என்ன பண்ண நீ? அந்த பசங்க எல்லோரையும் இருக்கிற இடம் இல்லாமல் செய்துட்டே,சூப்பர்க்கா "
"நான் ஒன்றும் பண்ணலை வினோ"
"அப்போ யார் பண்ணா?"
"யாரோ பண்ணாங்க விடு வினோ எப்படியோ பிரச்சினை முடிஞ்சிடுச்சுல்ல அது தான் முக்கியம்"
"இல்லை அக்கா காலேஜ் முழுதும் இத பத்தி தான் பேச்சு அதான் கேட்டேன்"
"ம்ம்ம்ம் .... "என்றாள்.
"சரி அக்கா நீங்க வேற ஏதோ யோசனைல இருக்கீங்க நான் பிறகு வரேன்" என்று அங்கிருந்து சென்று விட்டாள் வினோ.மலரின் யோசனையோ தேவி சொன்னது போல் கதிரால் எதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்ய என்று தான்.
மறுநாள்..... வழக்கம் போல் தேவி அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வர மலரும் செல்ல...
"ஏய் தேவி எப்பவும் போற வழியிலே வேண்டாம் இன்னொரு பக்கமா போய்டு"
"ஏன் என்னாச்சு?"
"நீ தானே சொன்னே இனிமேல் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று அதனால் தான்"
"என்ன சொல்ல வர்றே?அதை முதல்ல தெளிவா சொல்லு "நாம போற வழியில அந்த கதிர் நின்றால் எதாவது வம்பு செய்வான் என்னால சும்மா இருக்க முடியாது அதான் நாம வேற வழியில போய்ட்டா நாம எங்கே போறோம் என்று தெரியாது எங்கே இருக்கோம் என்று தெரியாது. எதுக்கு வம்பு நானே ஒதுங்கி கொள்கிறேன்"
"ம்ம்ம்..... சரி இப்படி இருந்தால் பிரச்சினை இல்லை "என்று வேறு வழியில் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
ஒருவாரம் கடந்த நிலையில் கதிரை மலர் சந்திக்கவில்லை.இனிமேல் கதிரை பற்றி பயப்பட தேவையில்லை அவனை சந்திக்க போவதுமில்லை என்று அவள் நினைத்திருந்தாள்.ஆனால் அன்று ஒருநாள் காலையில் பாவாடை தாவணியில் சுற்றிக் கொண்டிருந்தாள் மலர்.அதைக் கண்ட சுந்தரி "ஏய் மலர் எதுக்கு இப்போ பாவாடை தாவணியோட சுத்திட்டு இருக்கே"
"இது என்ன சித்தி கேள்வி? இன்னைக்கு ஸ்கூல் லீவ் அதான் எனக்கு பிடிச்ச டிரெஸ் போட்டு இருக்கேன்"
"ஆமாம்டி யம்மா இப்போ தான் பெரிய பொண்ணு ஆனேன்னு நினைப்பா உனக்கு? உன் வயசுல உள்ள பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி பிள்ளை குட்டின்னு ஆயாச்சு நீ என்னன்னா தாவணி சுத்திட்டு இருக்கே" என்றாள்.
"இப்போ என்ன சித்தி என் வயசுல உள்ள எல்லோரும் பிள்ளை குட்டின்னு இருக்காங்க அதானே உன் பிரச்சினை இருங்க வரேன்" என்று வேகமாக வீட்டின் பின் பக்கம் தோட்டத்திற்கு சென்றவள் கையில் பூனைக்குட்டியை எடுத்துக் கொண்டு வந்து சித்தி கையில் திணித்தபடி
"இந்தாங்க பிடிங்க நீங்க கேட்ட குட்டி இதோ இருக்கு கொஞ்சம் வெயிட் பண்ணிங்கன்னா சீக்கீரம் பிள்ளைக்கு ரெடி பண்றேன்" என்று பூனைக்குட்டியை எடுத்து சித்தி மடிமேல் வைத்தாள்.
அதைக் கண்டு அலறிய சுந்தரி "மலர் எடு இந்த பூனையை "என்று பயத்துடன் கத்த...
"சித்தி நீங்க கேட்ட குட்டி தான் சித்தி இது ஒன்றும் செய்யாது இப்போ கூட பாருங்க எப்படி அழகா கண்ணை மூடிட்டு தூங்குது" என்று சொல்லும் போது பூனை மெதுவாக தலையை தூக்க சுந்தரி "மலர் இந்த பூனையை மொதல்ல எடு" திரும்பவும் சொல்ல அவள் பயப்படுவதை பார்த்துக் கொண்டிருந்த வினோவும் சதிஷும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
"அண்ணி இந்த மலருக்கு ரொம்ப கொழுப்பாயிடுச்சு இங்க வாங்க" என்று கத்த... அம்மா வரவும் பூனைக்குட்டியை தூக்கியவள் சுந்தரி காமாட்சியிடம்
"என்ன பேச்சு பேசுற இவ கூடிய சீக்கிரம் பிள்ளைக்கு ரெடி பண்றாலாம் இதென்ன குடும்பமா வேற எதாவதா? "என்று கேட்க... அங்கிருந்த சங்கர் "சுந்தரி சும்மா விளையாட்டுக்கு சொன்னா எதாவது பிரச்சினை பண்ற மாதிரி பேசுற? நான் பிரச்சனை பண்றேனா?"
"அவ நல்லா இருக்கட்டும் தான் சொன்னேன்" என்று சொல்ல காமாட்சி "மலர் உள்ளே வா சமையல் செய்யனும் வந்து உதவி செய் "என்று அவளை உள்ளே அழைத்து சென்றவள் "ஏன் மலர் சித்திக்கிட்ட இப்படி பதில் பேசுற அம்மா சும்மா விளையாடினேன்மா விடுங்க இன்னைக்கு என்ன சமைக்கணும் அத சொல்லுங்க" என்று பேச்சை மாற்ற காமாட்சியோ என்றைக்கு தான் இவ மாறாப்போறாளோ என்று நொந்து கொண்டு வேலை செய்ய தொடங்கினர்.அவளுக்கோ சித்தியை லேசாக கலங்கடித்ததில் சிறு மகிழ்ச்சி.
அப்பொழுது வெளியே பேச்சு சத்தம் கேட்க சங்கர் மலர் தண்ணி கொண்டு வாம்மா என்றழைக்க இதோ வரேன் சித்தப்பா என்றவள் பாவாடையை தூக்கி செருகிக் கொண்டு கொலுசு சத்தம் கேட்க கையில் தண்ணீர் சொம்போடு வந்தவள் சங்கரின் அருகில் திரும்பி அமர்ந்து ஒருவன் பேசிக் கொண்டிருக்க யாராக இருக்கும் என்று யோசனையோடு அவர்கள் அருகில் வந்தவள் சொம்பை நீட்ட சங்கர் இந்த "தம்பிக்கு கொடும்மா" என்று சொல்ல வந்தவன் திரும்பவும் அவள் அவனைக் கண்டதும் கண்கள் விரிய செவ்விதழ்கள் துடிக்க மெதுவாக அவனது பெயரை உச்சரித்தன "கதிர்" என்று தானாக சொல்ல பயத்தில் வியர்த்துக் கொட்ட சங்கர் "மலர் தம்பிக்கு தண்ணியை கொடும்மா இவ தான் என் மூத்த பொண்ணு மலர் பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல வேலை பார்க்கிற" என்று சொல்ல அவளை மேலிருந்து கீழே வரை பார்த்தவன் தண்ணியை கொடுக்கும் போது அவள் இருக்கும் நிலையை கண்டு அவன் சிரிக்க அவளுக்கு விக்கல் வர மலர் "எனக்கு தண்ணிய கொடுத்தா உங்களுக்கு விக்கல் வருது முதல்ல நீங்க தண்ணீயை குடிங்க" என்று சொல்ல வாங்கி மடக்மடக் என்று குடிக்க சங்கர் 'கதிர் தம்பிக்கு வேற பண்ணத எல்லாம் சொல்ல வந்துட்டானோ அப்போ அவன் போலீஸா போச்சு எல்லாம் போச்சு நான் அவ்வளவு தான்' என்று யோசித்துக் கொண்டிருக்க மலர் என்று சங்கர் அழைக்க "இதோ வரேன்" என்றவள் கதிரிடம் சொம்பை நீட்ட அவன் வாங்கி தண்ணியை குடித்தவன் "விக்கல் சரியாயிடுச்சா" என்றான்."ம்ம்ம்" என்றாள்.
சங்கர் மலரிடம் "கதிர் தம்பி நம்ம வீட்டுக்கு எதிரே இருக்கிற வீட்டுக்கு தான் குடி வந்து இருக்கிறார்அதான் எதிர்த்த வீடாச்சேன்னு பார்க்க வந்து இருக்கிறாரு இந்த ஊர்ல தான் வேலை பார்க்க போறாரு" என்று அவன் வந்த தகவலை சொல்ல இவளுக்கு சற்று நிம்மதி அவர் சொன்னதும் "சரிங்க சார் நான் கிளம்புறேன் "என்று சொன்னவன் எழுந்து சொம்பை கொடுத்தவன் மெதுவாக "முதல்ல பார்த்த இடத்துக்கு வந்துரு "என்று மெதுவாக சொல்லி விட்டு கண்ணை காட்டி விட்டு சென்றான்.அவளுக்கு என்ன செய்வதென்று அறியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
(தொடரும்)