7.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே.
கதிர் நிலவன் வந்ததை கண்ட மலரும் தேவியும் அதிர்ச்சியை முகத்தில் அப்பட்டமாக காட்டினர்.ஆனால் கதிர் அங்கே தனக்கு தெரிந்த இருவர் நிற்பதையே கண்டுக் கொள்வதாக இல்லை.மலர் தேவியை பார்த்து "இவன் எப்படி இங்கே வந்தான்" என்று சைகை காட்ட... தேவி "தெரியலை" என்று பதிலுக்கு சைகை செய்தாள்.கதிர் வந்ததும் தலைமை ஆசிரியர் அங்கிருந்த ஒவ்வொரு ஆசிரியர்களின் பெயரைச் சொல்லி அவர்கள் எடுக்கும் பாடத்தை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்ட வர ஒவ்வொருவரும் வணக்கம் சொல்லிக் கொண்டு வர கடைசியாக மலரையும் அறிமுகப்படுத்தினார்.
மலரைக் கண்டதும் கதிர் தனது காதை மெதுவாக தடவ மலரோ கண்களாலே கெஞ்சினாள். கதிர் அதை பார்த்து "ம்ம்ம்..." என்று கண்களாலே பதிலுரைத்தான்.
"சரி எல்லோரும் அவங்களுடைய வகுப்பிற்கு செல்லுங்கள்" என்றார் தலைமை ஆசிரியர். எல்லோரும் சென்றதும் மலர் மட்டும் நின்றுக் கொண்டிருக்க... "சார் இவங்க என்ன சப்ஜெக்ட்ன்னு சொல்லவே இல்லை"
"அது... வந்து நான் போன்ல சொன்னேன்ல அது இவங்க தான்"
"ஓ அப்போ இவங்க தான் அந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கா!"என்று இழுத்துக் கொண்டுக் கேட்க... அதற்கு மலர் வேகமாக ஏதோ சொல்ல வர கதிர் தன்னுடைய இரண்டு காதையும் மெதுவாய் பிடித்துக் காட்ட இவள் வாயை மூடிக் கொண்டாள்.
"சார் வாங்க உங்க அறைக்கு போகலாம்" என்று தலைமை ஆசிரியர் சொல்ல...
"வேண்டாம் சார் முதல்ல ஸ்கூல் புல்லா ஒரு ரவுண்ட்ஸ் போகலாம் அதற்கு பிறகு என்னோட அறைக்கு போகலாம்" என்றவன் மலர் பக்கம் திரும்பி அவளை ஒரு பார்வைப் பார்த்து "ம்ம்ம்... உங்களுக்கு இப்போ வேற வொர்க் எதாவது இருக்கா?"என்று கேட்க... "இல்லை"என்று தலையசைத்தாள்.
"சரி எங்க கூட வாங்க நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு" என்றான்.
"சரி" என்று இவளும் நோட்டை எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னால் நிற்க
"ஹான்....உங்க பேரு என்ன மிஸ்...?
"என்னோட பெயரு மலர்"
"சரியாக கேட்கலை"
"அது...... வந்து என்னோட பெயரு கலைமலர்"
"அப்படியா! சரி வாங்க" என்றழைக்க... மூவரும் ஸ்கூல்லை சுற்றி பார்க்க செல்ல சில கட்டிடங்கள் பழுதாகி இருந்தது.
அதைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டே வந்தவன் "மலர்" என்றழைக்க...
"ஹான் சொல்லுங்க சார்" என்று கவனமாகக் கேட்க... அவனிடம் அமைதி "என்ன எழுதனும் சார்"என்று நோட்டில் எழுதுவது போல் நிற்க அவனோ ஒரு பார்வை பார்த்தவன்" ம்ம்ம்..."என்று யோசித்தவாறு "ஒன்றுமில்லை" என்றான்.
அதைக் கேட்டு மலருக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு "ஒன்னுமில்லையா சார்" என்று கண்களில் கோபத்தோடு பல்லை நறநற எனக் கடித்துக் கொண்டு முகத்தில் புன்னகை சிந்தினாள்.அதைப் பார்த்து அவனும் கிண்டலாகப் புன்னகை சிந்தினான்.
அந்த பள்ளி ஒரு மேல்நிலைப் பள்ளி அதனால் சுற்றி இருந்த ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்டான் கதிர்.மலர் வேறுபக்கம் பார்வை செலுத்தும் போது "அது அங்கே" என்று ஆரம்பிக்க மலர் இவன் பக்கம் கவனம் செலுத்த அதோடு நிறுத்திவிட்டு தலைமை ஆசிரியரிடம் பேச ஆரம்பித்தான்.இப்படியே செய்து அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான் கதிர்.எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு அவனுடைய அறைக்கு சென்றனர்.தலைமை ஆசிரியர் மலரிடம் "மலர் சார் என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்து கொடு,இனிமேல் உனக்கு இந்த வொர்க் தான் முதல்ல சரியா?" என்று சொல்ல... இவளும் தலையாட்டிக் கொண்டு "சரி அங்கிள் நான் பார்த்துக்கிறேன்" என்று அவனை பார்த்து முறைத்தவாறே சொன்னாள்.
அவர் அங்கிருந்து சென்றவுடன் கதிர் சேரில் அமர்ந்திருக்க அவனுக்கு எதிரே நின்றவள் "ஹலோ சார் என்ன உங்களுக்கு என்ன பார்த்த கிண்டலா தெரியுதா? நோட்ஸ் எடுக்கனும் வான்னு சொல்லிட்டு ஸ்கூல் புல்லா என்னை தேவையில்லாம ரவுண்டு அடிக்க விடுறீங்க அது கூட பரவாயில்ல பேச வர்ற மாதிரி வந்து அப்படியே பேச்சை நிப்பாட்டுறீங்க என்ன?" என்று மூச்சுவிடாமல் பேச மலர் பேசுவதையே பார்த்துக் கொண்டு கைகளை தன்முகத்தில் தாங்கிப் பிடித்துக்கொண்டு யோசித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் பேசி முடித்ததும் மெலிதான புன்னகை சிந்தியவன் "நீ சரியா வொர்க் பண்றியான்னு செக் பண்ணேன் அவ்வளவு தான் வாங்குற சம்பளத்துக்கு சரியா வேலை செய்யனும்ல அதுக்கு தான் இது கூட தெரியாம இருக்கே இதுல வேற பெரிய டீச்சர்னு நினைப்பு.ஆமா என்கிட்ட இவ்வளவு தைரியமா பேசுற இந்த இடத்துல வேற யாராவது இருந்தால் நீ பேசினத்துக்கு உன்னை வேலை விட்டு தூக்கி இருப்பாங்க" என்று அவன் முகத்தை கோபமாய் காட்டி எச்சரித்ததும் அவளது முகம் மாறி யோசனை ஆழ்ந்தாள் மலர்.
'அவன் சொல்வதும் உண்மை தானே' என்று நினைக்க... 'சரி சரி இப்படியே நிற்காமல் அடுத்தடுத்த வொர்க் பாருங்க"என்றவன் "எனது சேருக்கு பின்னால் இருக்கிற ஷெல்ப்ல ஒரு பைல் இருக்கு அதை எடுங்க" என்றான்.
இவளும் சரி என்று எடுக்க பின்னே சென்றவள் அவன் பார்க்காத வண்ணம் அவன் முதுகுக்கு பின்னால் இருந்து தன் கைகள் இரண்டையும் கழுத்தை நெறிப்பது போல் அவன் கழுத்திற்கு அருகில் கொண்டு சென்றவள் அடுத்து கைகளை நன்றாக மடக்கி நன்றாக இன்னொரு கையால் தேய்த்து அவனது தலையை நோக்கி கொட்டுவது போல் பாவானை செய்ய... எதற்கும் அவன் என்ன செய்கிறான்? என்று தலையை சாய்த்து எட்டி பார்க்க... கதிர் தனது போனில் முன்னால் உள்ள கேமாராவை ஆன் செய்து பதிவு செய்துக் கொண்டே அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.அதைக் கண்ட மலர் அப்படியே கொண்டு வந்த கையை எடுக்க அவன் சேரை சுழற்றி அவள் புறம் திரும்ப மலர் "இஇஇஈஈஈ" என்று சிரிக்க அவனோ புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க... இவளோ ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்துக் கொண்டு இஇஇஇ என்று லேசாக நகர அப்பொழுது மதிய இடைவேளைக்கான மணி அடிக்க... இதற்காக காத்திருந்தவளைப் போல் "சார் லஞ்ச் பிரேக் நான் போறேன்" என்று அவனுடைய பதிலை கூட எதிர்ப்பார்க்காமல் சென்று விட்டாள் மலர்.
தேவி மலருக்காக சாப்பிட காத்துக் கொண்டிருக்க ... அவளை காணாததால் அவள் இருக்கும் காலியான வகுப்பறைக்கு செல்ல அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.கைகளில் இருந்த நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள்.உள்ளே வந்த தேவி" மலர் என்னாச்சு" என்று கேட்க... "இனிமேல் என்ன நடக்கனும்? "என்று நிறுத்த "ஏய் என்னாச்சு? அந்த கதிர் எப்படி வந்தாரு? அப்புறம் உன்னை என்ன சொன்னாரு?" என்று கேட்க... "ஏய் அந்த ஆளு என்னை பேசாமலே உயிரை வாங்கிட்டான்டி "என்று நடந்ததை சொல்ல தேவி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.?
சரி இப்போ என்ன செய்ய? விடு அவரு வந்தது வந்தாச்சு இனிமேல் என்ன செய்ய?" என்று சொல்ல...?? இல்லை என்னை ரொம்ப சீண்டி பார்க்குறான் என் கைல மாட்டுனா அவ்வளவு தான் என்று சொல்லி திரும்பியவள் பார்க்க வாசலில் கதிர் நின்றுக் கொண்டிருந்தான்.
அவனை கண்டு பேச்சை நிறுத்தியவளிடம் "பேசு கலை பேசு கலை உன்னோட பேச்சை கதிர் கேட்கத்தானே ஆவலாக வந்தேன்" என்று சொல்ல ... "அவளோ அமைதியாக இருக்க சரி என்னோட கடனை அடை "என்று சொல்ல அவளோ முழிக்க...
" என்ன யோசிக்கிற அதான் என்னை பார்த்ததும் தோப்புக்கரணம் போடனும் சொன்னோனே மறந்துட்டியா? போடு" என்று சொல்ல..
அவளோ "ம்ஹீம் "என்று முடியாது சொல்ல அவனோ "ம்ம்ம்" என்று சொல்ல அவளோ சிணுங்கியவாறே "ம்ஹீஹீம்" என்றாள்.
"முடியாதுன்னா விடு இந்த வீடியோவை உங்க அங்கிள் கிட்டயும். ஏற்கனவே அந்த பசங்களை மாட்டிவிட்டத உங்க வீட்லயும் சொல்லவா" என்று கேட்க மலரோ "வ்வ்வ்வ்வ்" என்று கஷ்டப்பட்டு அழுதுகொண்டே தோப்புக்கரணம் போட அவளுடைய டிபனை திறந்து சாப்பிட ஆரம்பித்தவன் "இனிமேல் நீ கொண்டு வர சாப்பாடுல உனக்கு பாதி எனக்கு பாதி இல்லைன்னு பதில் வந்துச்சு வீடியோ பேசும் அவ்வளவு தான்" என்றான் கதிர்.தான் முதல்முறையாக தன்னை விட்டு விலகி செல்பவளின் நெருக்கத்தை அதிகப்படுத்த நினைக்கும் தன் மனதை எண்ணி வியந்தபடி...
(தொடரும்)