கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

9.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

Shaliha ali

Moderator
Staff member
9.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே



மலர் கதிரிடம் உன்னை "டா போட்டு அழைக்கவா?" என்று கேட்டதற்கு அதே புன்னகை மாறாமல் "ம்ம்ம்... சொல்லு மலர் பரவாயில்லை நான் உன் பிரெண்டு தானே அதனால் என்ன?" என்று அவன் சொன்னதும் கதிர் சொன்ன பதிலைக் கேட்டு "ஆஆஆவென... வாயை பிளந்தவள் என்னால் நம்பவே முடியலை சார் நீங்களா பேசுறதுன்னு? ம்ம்ம் இருந்தாலும் டா போட்டு சொல்ல மாட்டேன் கதிர் என்றே சொல்றேன்" என்றாள் கண்களை சிமிட்டி சிரித்தப்படி...


''ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் என்றைக்காவது ஒரு நாள் மட்டும் சொல்வேன் அப்போ கோபப்படக் கூடாது" என்று அவள் சொல்ல அவளுக்கு தன்னை மீறிய அவன் மேல் உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க அவளுக்கும் விருப்பமில்லை.அதை புரிந்த கதிரும் புரிந்து கொள்ள தவறவில்லை.


அவனும் சிரித்தான். இருவரும் நடக்க தங்கள் குடும்பத்தை பற்றி பேசினர்.ஆனால் கதிர் தன்னை பற்றிய எந்த விவரமும் சொல்ல வில்லை.தன்னுடைய வீட்டில் அவன் ஒரே ஒரு மகன் என்பதை தவிர.இருவரும் வீட்டின் அருகே உள்ளே தெரு முனைக்கு வரவும் அவள் வேகமாக முன்னே நடந்து சென்று விட்டாள்.அவனோடு ஒன்றாக சென்றால் சுந்தரி சித்தியால் தேவையில்லாத பிரச்சினை வரும் என்று அவனிடம் ஏற்கனவே சொல்லி இருந்ததால் அமைதியாக சென்று விட்டாள் மலர்.


ஒருநாள் பள்ளியில் கதிர் அன்றைக்கு தாமதமாக வந்தான்.அன்று ...தலைமை ஆசிரியர் அறையில் மலரும் இன்னொரு மாணவனும் அவனுடைய பெற்றோர்களாக இருக்க வேண்டும். இருவரும் அவனுக்கு அருகில் நின்றுக் கொண்டிருக்க....கதிர் என்னவென்று அறிய உள்ளே நுழையும் தருணம் அந்த மாணவனின் தாயிடம் மலர் "இங்க பாருங்க உங்க பையன் பண்ற எதுவும் சரியில்லை.நானும் எத்தனை தடவை வார்ன் பண்ணி அனுப்பிட்டேன் ஆனால் அவன் செய்றது சரியில்லை'' என்றதும் ''என் பையனை சரியில்லைன்னு சொல்லுறே முதல்ல நீ ஒழுங்கான்னு சொல்லு,குடும்ப மானத்தை தெருவுல நிப்பாட்டுன நீ சரியில்லை எத்தனை பேரோட'' என்று நிறுத்தியவர் ''இதுல என் பையனை சரியில்லைன்னு என்கிட்டயே சொல்லுற'' என்று அந்த பெண்மனி சொன்னதும் மலரின் செந்தாமரை கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக கொட்ட... தலை குனிந்து நின்றவளை கண்ட கதிரின் நெஞ்சம் பதைபதைக்க கண்களில் இருந்து அவனையும் அறியாமல் கண்ணீர் துளிந்தது.



'பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்த என் மலர் இன்று ஒரு நொடியில் சிறகை இழந்து துடித்துடித்துக் கொண்டிருக்கும் என்னவளை அருகில் அழைத்து தோள் சாயத்துக் கொள்ள நினைக்கும்' அவனின் கைகளுக்கு கட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே வர மலர் அங்கிருந்து வேகமாக வெளியே வரவும் எதிரே வந்த கதிரை நிமிர்ந்து பார்க்க அங்கே அவனைக் கண்டதும் மலர் பார்க்க அவனும் பார்க்க அவளுடைய முகம் வாடிய மலரை போல் அவளது முகம் வாடி இருக்க அதை கதிர் உற்று நோக்க அதே வேகத்தோடு இன்னும் வேகமாக வெளியே சென்றாள் மலர்.கதிர் முன்னே சென்று உள்ளே நுழைய.....



அங்கே இருந்த தலைமை ஆசிரியர் ''இங்க பாருங்க என்ன இருந்தாலும் அவங்க ஒரு ஆசிரியர் அதுக்கான மதிப்பை கொடுங்க அதுவும் இல்லாமல் அவங்களோட தனிப்பட்ட விஷயத்தை இங்கே பேசுறது சரியில்லை உங்க பையன் மேல வந்திருக்க கம்பெளய்ண்ட்க்கு பதில் சொல்லுங்க'' என்றார்.


''சரிங்க சார் நீங்க சொல்றது உண்மைன்னே வைச்சுக்குவோம்,ஆனால் என் பையன் தான் தப்பு செஞ்சான்னு என்ன ஆதாரம் இருக்கு''என்று கேட்டனர்.


தலைமை ஆசிரியர் பதில் தெரியாமல் விழிக்க கதிர் தலைமை ஆசிரியரிடம் என்னவென்று கேட்க... அவர் அவர்களிடம் ''ஒரு பத்து நிமிஷம் வெளியே இருங்க'' என்றதும் '' இங்கே பாருங்க சார் நீங்க எங்க பையன் தான் செய்தான்னு உடனே ஆதாரத்தை காட்டுங்க இல்ல அந்த பொண்ணு மலர் என் பையனை அடிச்சத்துக்கும் எங்ககிட்ட பேசினத்துக்கும் மன்னிப்பு கேட்கனும்''என்று அந்த மாணவனின் பெற்றோர் இருவரும் சொல்லி விட்டு வெளியே சென்றனர்.


தலைமை ஆசிரியர் குழப்பத்தோடு நிற்க கதிரே முதலில் ஆரம்பித்தான்.''என்ன பிரச்சினை சார்?''


''கதிர் முதல்ல எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை,நடந்தது என்னன்னா இதோ இங்கே நின்றுக் கொண்டிருந்த மாணவன் எந்த ஆசிரியர்கிட்டயும் மரியாதையா நடந்துக்க மாட்டான்.அவன் பெரிய வீட்டுப்பையன் அந்த எண்ணத்துல அவன் இஷ்டத்துக்கு இருப்பான் மலர் அடிக்கடி அந்த பையனை கண்டிச்சுட்டே இருப்பாள்.இப்பொழுது எல்லாம் மாணவிகள் போய் ஒரே வம்பிழுத்து கெட்ட வார்த்தையில பேசிக்கிட்டு இருந்திருக்கிறான்.எந்த டீச்சரும் கண்டிக்கலை.அப்படி இருக்கும் போது இரண்டு நாள் முன்னாடி ஒரு பொண்ணை கையை பிடிச்சு இழுத்துருக்கிறான்.அந்த மாணவி மலர் கிட்ட போய் சொல்லி இருக்கா மலரும் அவன் கிட்ட போய் தப்பு பண்ணாதேன்னு சொல்லிருக்கா அவன் திரும்பவும் அதே தப்பை செய்ய மலர் கேட்க போனதற்கு அவளையும் தப்பா பேசிருக்கிறான் அதான் இவ அடிச்சிட்டா இப்போ அவங்க பேரண்ஸ் வந்து மன்னிப்பு கேளுன்னு பிரச்சினை பண்ணுறாங்க இல்லை என் பையன் தான் பண்ணான்னு ஆதாரம் கொடு'' என்கிறார்கள் என்றார் அவர்.


அவர் சொன்னதை கேட்டு யோசனையில் அமர்ந்தவன் ''சார் நீங்க சிசிடிவி கேமரா வைச்சு இருக்கீங்களா? என்று கேட்க அவர் ஆமாம் என்றார்.அந்த சிசிடிவி கேமரா எங்கே இருக்கு'' என்று கேட்க அதற்கான இடத்தை காட்ட அதில் அவர் சொன்ன நாளில் நடந்த நிகழ்வுகளை பார்க்க அதில் அந்த மாணவன் செய்த செயல் இருக்க அதை எடுத்து பதிவு செய்தவன் தலைமை ஆசிரியரிடம் அவர்ளை அழைக்க சொல்ல அந்த மாணவனும் பெற்றோரும் உள்ளே வர சிசிடிவியில் பதிவான அன்று நடந்த நிகழ்வுகளை அவர்கள் முன்னே காட்ட அவர்கள் வாயடைத்து நின்றனர்.



இப்பொழுது கதிர் பேசினான். ''இப்போ என்ன செய்யலாம்னு சொல்லுங்க? உங்க மகன் செய்ததது தப்பு என்று வீடியோ ஆதாரத்தோடு இருக்கு இதை வைச்சு உங்க பையனோட வாழ்க்கையை இல்லாமல் செய்ய முடியும்''என்றதும் அந்த மாணவனின் தந்தை 'ஏய் யாரா மிரட்டுற நான் நினைச்சேன்னா இந்த ஸ்கூலே இல்லாம பண்ண முடியும்'' என்றவன் அந்த ஊரின் முக்கியமான எம்.எல்.ஏ.வின் பெயரைச் சொல்ல கதிரோ சிரித்துக் கொண்டு''நீ சொல்லும் தலைவனின் தலைவர் தான் இந்த ஸ்கூல இப்போ இன்ஜார்ஜ் எடுத்து இருப்பது'' என்று சொல்ல வந்தவன் வாயை மூடியவன் ''என்னை மன்னிச்சிடுங்க இனிமேல் என் பையனை ஒழுங்கா படிக்க சொல்றேன்'' என்று காலில் விழாத குறையாக சொல்ல கதிர் மலரிடம் சென்று அவர்களை மன்னிப்பு கேட்க சொன்னான்.



அங்கிருந்து வந்த மலர் தனக்காக உள்ள அந்த யாருமில்லா வகுப்பறையில் அழுதுக் கொண்டிருக்க... அங்கே வந்த தேவி ''என்னாச்சு மலர்? ஏன் இப்படி அழுகிற?'' என்று கேட்க... அவளோ அமைதியாக இருந்தாள்.


''சொல்லு மலர் என்ன நடந்தது?என்று திரும்பவும் கேட்க தேவியை கட்டிக் கொண்ட மலர்''தேவி என் வாழ்க்கையில எதை மறக்கனும்னு நினைக்கிறேனோ அதை திரும்ப வந்து யாராவது என்னை நியாபகப்படுத்தி நான் செய்யாத தப்பை செஞ்சேன்னு என்னை குற்றம் சுமத்துறாங்க''என்று நடந்ததை சொன்னாள் மலர்.


''நான் உன்கிட்ட அன்றைக்கே சொன்னேன் அந்த பையன்கிட்ட தேவையில்லாம பேசாதன்னு நீ கேட்டியா? இப்போ பாரு''என்றதும் ''என்ன தேவி பேசுற ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடக்கும் போது கேட்க ஆள் இல்லைன்னா அன்றைக்கு என்னை மாதிரி தான் அவமானம் பட்டு நிற்கனும் அதான் நான் எதிர்த்து கேட்டேன்'' என்றாள் கண்களில் கண்ணீரோடு அதை துடைத்து விட்ட தேவி ''இப்போ கோபம் வருதுல்ல அதை அங்கேயே காட்டி பதில் பேசிட்டு வர வேண்டியது தானே,அதை விட்டுட்டு இப்போ கோபப்படுற'' என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த அந்த மாணவனும் அவனின் பெற்றோரும் அவளிடம் வந்து ''மிஸ் மன்னிச்சிடுங்க'' என்றதும் அவர்களும் மன்னிப்பு கேட்டு சென்றனர்.அதைக் கண்ட இருவரும் திகைத்து போயினர்.



தேவி மலரிடம்'' இவங்களோட வாலை ஒட்ட வெட்டுனது யாருடீ?''என்று கேட்க... அங்கே வந்த கதிர் ''நான் தான்'' என்றான்.இருவரும் திரும்பி பார்க்க மலரிடம் கேட்டான் ''என்ன கலை நீ இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுதுட்டு வராதே'' என்று சொல்ல இவளோ ம்ம்ம் என்று தலையசைத்தாள்.


தேவி கதிரிடம் என்ன பண்ணீங்க? என்று கேட்க அதற்கு கதிர் சொன்னான் ''அவங்க ஆதாரத்தை கேட்டாங்க நான் சிசிடிவியில் பதிவானதை எடுத்துக் காட்டினேன்.அவங்க மேல தப்பு இருப்பதால் அவங்களால எதுவும் செய்ய முடியலை அதான் செய்த தப்பு மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க''என்றவன் மலரின் தலையை லேசாக தட்டியவன்'' மூளையை இந்த மாதிரி விஷயத்துக்கு யூஸ் பண்ணு'' என்று சொல்லி செல்ல எத்தனிக்க ''கதிர் ரொம்ப தாங்ஸ்'' என்றாள் மலர்.


எதுக்கு என்று கதிர் கேட்க....


'எல்லாத்துக்கும்''என்றாள் அவள்.


அவளின் தனிப்பட்ட விஷயத்தை கேளாமல் அவளுக்கு ஒரு துயரம் என்றதும் அவளுக்காக முன்னாடி தோள் கொடுத்த நண்பனாக அவன் செய்த உதவிக்கு என்று புரிந்து கொண்டவன் விரைவிலே மலரின் வாயாலே நடந்தவைகளை தன்னவள் தன்னிடம் கூறுவாள் என்ற மனதில் தோன்றிய நம்பிக்கையோடு அவளை தலை சாய்த்து பார்த்து சிரித்தவன் ''இன்னைக்கு மழையை பெய்ய போகுது தேவி குடையை எடுத்து போ'' என்றான்.


தேவியோ புரியாமல் ''சார் நல்ல வெயில் அடிக்குது நீங்க என்னடான்னா மழை பெய்ய போகுதுன்னு சொல்லுறீங்க'' என்று கேட்க


''இல்ல உன் குரு என்கிட்ட அதிசயமா தாங்ஸ் சொன்னால்ல அதுக்கு தான்'' என்று கண்ணை அடித்தபடி சொன்னான்.




அதைக் கேட்டு மலர் கண்களை முறைத்துக் கொண்டு ''டேய் கதிர் உன்னை விட மாட்டேன்'' என்று அடிக்க செல்ல... அவன் அங்கே இருந்தால் தானே அவனோ அவளைக் கண்டு அங்கிருந்து சென்றுவிட்டான் கதிர்.மலர் உரிமையோடு சொன்ன ''டேய் கதிர்'' என்ற வார்த்தையை காதில் இனிக்க கேட்டபடி .....



(தொடரும்)
 
Last edited:
Top