கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 108 மனதிலே காதலா❤️

✍️யோசி யோசி✍️
இரு மனங்கள் இணையும் காதலில் நான்கு மனங்களும் தங்கள் இணையின் மனதில் இருக்கும் காதலைத் திறக்கத் தங்கள் ஒரு தலை காதலோடு காத்திருக்கும் அழகிய காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

நித்யா :
துறுத் துறுவென இருந்து எல்லாரையும் கலகலப்பாக வைத்து இருப்பவள். வளரும் போதே வளர்ந்த பல நல்ல பழக்கங்களைக்(கஞ்சத் தனம்😂😝) கொண்டு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக வாழ்பவள். பா செம்ம பொண்ணு டா நித்தி நீ உனக்காக தமிழ் பண்ணதுல தப்பே இல்ல😝🤭(தமிழ் நித்தி தான் நமக்கு முக்கியம்)

💌ஸ்லோகன்💌

சத்யாவின் காதலோடு மதுவைவும்
ஹனியின் காதலோடு உதயையும்
தமிழின் காதலோடு தியாவையும் இணைக்குமா அவர்களின் மனதில் இருக்கும் காதல்!!!
 

Abirami

Well-known member
KS 137 ஊமைக் காதல் நானடா❤️

✍️யோசி யோசி✍️
ஆண்டுகள் பல தாண்டி அவனுக்காக காத்திருக்கும் அழகிய ஊமைக் காதலியின் காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

நாச்சியார் :
செம்ம செம்ம லவ்...இருநூறு ஆண்டுகளுக்கு பின்னும் தன் காதலில் வெற்றி பெற போராடும் பெண். காதலன் அவனின் பார்வைக்காக ஏங்கி ஏங்கி தவித்தவள். எல்லாருக்கும் நன்மை செய்ய நினைப்பவள்.

💌ஸ்லோகன்💌

செல்வியின் ஊமைக் காதலில் உருகிய காற்றும் காலமுமே
சிங்கா செல்வியை சேர்த்து வைக்க ஊமையாய் துடித்தது!!
 

Abirami

Well-known member
KS 142 வலியோடு போராடும் காதல்❤️

✍️யோசி யோசி✍️
காலங்கள் பல கடந்தும் காத்திருந்து காதலில் பல துன்பங்களையும் வலிகளையும் கடக்கப் போராடும் காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

விஷ்வமித்ரன் :
காதலியின் பிரிவில் வாடி அவளின் நினைவில் இறுதி வரை வாழ்ந்தவன். நண்பனின் குடும்பத்தையும் அவனின் ஆசையையும் நிறைவேற்றி வைத்தவன். காதலின் வலியை சுமந்து தன் கனவில் சாதித்தவன்.

💌ஸ்லோகன்💌

வெற்றி ஷ்ராஜின் காதலில் துவங்கி
பல வலிகளைக் கண்டு
விஷ்வமித்ரன் ஷ்ரதாவாய் காதலில்
வெற்றிக்கனியை சுவைத்தனர்!!
 

Rajalakshmi Narayanasamy

Moderator
Staff member
இங்க தான் கமெண்ட் போடனுமா?

எல்லாத்தயும் வாசிக்கலை ஆனாலும், என் கெஸ் சொல்றேன்..

1,3,6,12,13,19,22,28,30,35,39,42,51,62,63,66,73,90,102,105, 109,110,116,135,136,
 
Top