கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**144 என் காதலின் விடிவெள்ளி நீயடி (1ud only )

காதலர்களை சேர்த்து வைக்க துடிக்கும் நாயகன் அபி. பிரிந்து உள்ள தன் தாய்மாமன் குடும்பத்தையும் தன் தயையையும் சேர்த்து வைக்க துடிக்கும் நாயகி வர்ஷி. இவர்கள் இருவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான காதல் கதை என்று நினைக்கிறேன்.

குடும்பத்தை பிரித்து காதல் கைகூடுவதை தவிர்த்து இருவீட்டு சம்மதத்துடன் காதல் சேர வேண்டும் என எண்ணும் காதலி எனவே கதைக்கு 😍😍என் காதலின் விடிவெள்ளி நீயடி 😍😍என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

((கதை கரு அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் தோழரே ))
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks**21 காதலோடு வாழ்கிறேனடி

காதலர்கள் கோமளா ரிஷி

ஆரம்பமே பஞ்சாயத்துதான். ரத்து செய்ய பிராது குடுத்து இருக்காங்க காதல் கல்யாண ஜோடி . இவங்க ரெண்டு பேரோட காதல் கதை பிளாஷ் பேக் ஹா சொல்ல போறாங்கனு நினைக்குறேன். ஹீரோ குடும்பம் அழகா இருக்கு especially மேகா குட்டி அடிக்குற லூட்டி சூப்பர்.

ஹீரோ ஹீரோயின் சந்திப்பு, ஆரம்பத்திலேயே முட்டிகிச்சு போல😂😂 இன்ட்ரோ சீன் செம்ம . கணவன் மனைவி இருவருமே தங்களின் பிரிவுக்கு முன்னாடி வாழ்ந்த நாட்களை நினைத்து ஏங்கும் காதல் கதை ஆதலால் "😍காதலோடு வாழ்கிறேனடி 😍"என தலைப்பு வைத்து இருக்கலாம்.

((ஆரம்பமே அட்டகாசமா இருக்கு எழுத்தாளரே தயவு செய்து continue பண்ணுங்க, நல்ல கிராமத்து கதையை மிஸ் பன்றோம். ஒரே ஒரு ud தான் போட்டு இருக்கீங்க.. இன்னும் 2weeks இருக்கு so all the best 🙏🙏🙏)))
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks-110 காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

காதர்கள் வருண் அபி

சிறு வயதிலே பூத்த காதல் இது. நாயகன் அபியை சிறு பெண்ணாய் இருக்கும் போதே, தன் வாழ்க்கை துணை அவள் என தீர்மானிக்கிறான். அபி தன் தந்தை இல்லாத நிலையில் தாயும் உடல்நல குறையால் அவதீபாடுவாதல்,அவள் மாமன் மகன் வருண் ரெஸ்டாரெண்ட்யை முன்னேற்ற உதவி புரிகிறான்.

நாயகி நாயகன் மீது வெறுப்பை மட்டும் காட்டுகிறாள் தன் தவறான புரிதலினால். அவனை புரிந்து கொண்ட பிறகு அவனின் முழு காதலுக்கு உரிமையாகி போகிறாள். தன் சிறு வயது காதலுக்காக போராடி அதில் வெற்றியும் பெறுகிறான் வருண். எனவே கதைக்கு 😍💞காலம் மாறலாம் நம் காதல் மாறுமா 💕💞என தலைப்பு வைத்து இருக்கலாம்.
 

Sspriya

Well-known member
Ks≈110 😍😍காலம் மாறலாம் நம் காதல் மாறுமா 😍😍

ஸ்லோகன்

"பிஞ்சி பருவத்திலே என் இதய கூட்டினுள் உன் இதயம் கோர்க்க ஆசை கொண்டேன் பொன்மணியே"!💞💞

"இன்று என் வாழ்வில் உன் வாழ்வையும் சேர்த்து வசந்தம் காண கை கோர்ப்போம் வா கண்மணியே "!💞💞
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-26 காதல் நெஞ்சங்கள் ( முடிவுற்றது)

காதல் தம்பதி மலர் மாறன் &😍(தாத்தா பாட்டி )😍

தனக்கு பிடிச்சது மட்டும் தான் செய்வேன் என படிக்காமல் பொறுப்பற்று வளரும் மாறன். படிக்க வசதி இல்லாமல் வேலைக்கு செல்கிறாள் தாத்தாவின் வளர்ப்பில் வளரும் மலர். பெரியோர்களால் இவ்விருவருக்கும் திருமணம் நடத்தபடுகிறது.

தன் காதல் நெஞ்சம் கொண்டு கணவனை நல்வழி படுத்தி உழைத்து வாழ்வில் முன்னேர வைக்கிறாள் மலர். குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்த போதும் மனம் தளராமல் தன் மனைவியின் இலட்சியத்தை நிறைவேற்றும் மாறன்.

காதல் கொண்ட இரு நெஞ்சங்கள் தங்களையும் தன் குடும்பத்தையும் நல்வழி படுத்தும் என இக்கதையில் அழகாக கூறியுள்ளார் எழுத்தாளர். எனவே கதைக்கு 😍😍காதல் நெஞ்சங்கள் 😍😍என்று தலைப்பு வைத்துள்ளர்.

((( மாறனோட தாத்தா பாட்டி லவ் awesome 👌👌😍😍😍))))
 
Top