கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 73 உன்னோடு காதலாம்❤️

✍️யோசி யோசி✍️
காதலை வெளிப்படுத்தும் வகையில் வரும் உன்னோடு நான் காதல் கொண்டுள்ளேன் என்பதற்கு முன் முதலில் தன் மீது தனக்கு காதல் உள்ளதா? என்ற கேள்விக்கு விடை கண்டு வாழ்வதே வாழ்க்கையாகும்.

👤 பிடித்த கதாப்பாத்திரம்👤

ப்ரனீத் :
நகைச்சுவை திறன் அதிகமாக கொண்ட நாயகன். எல்லாரையும் புரிந்து எல்லார் நிலையிலும் இருந்து யோசித்து கொலை முறச்சியை அறிய முயன்ற விதம் சூப்பர். தன் லட்சியத்தை அடைய அதிக அளவில் உழைத்து அதனோடு காதலும் கிடைக்கப் பெற்றவன்.

💌ஸ்லோகன்💌

யாரோடு இங்கு காதல் என தேடுவதை விட என்னோடு நான் காதல் கொண்டுள்ளேன் என்பதில் காதலே அழகாகிறது!!
 

Abirami

Well-known member
KS 26 காதல் நெஞ்சங்கள்❤️

✍️யோசி யோசி✍️
காதல் கொண்ட நெஞ்சம் நினைத்தால், நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கவல்லது. இரு காதல் நெஞ்சங்களின் கதை இது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

காயமலர்க்கன்னி :
பெயரில் மென்மையாய் கொண்ட மலர் புகுந்த வீட்டின் நிலையை கண்டு அவர்களை மாற்ற போராடுவது. கணவனுக்காக பேசும் மலரின் காதல் சூப்பர். மாறனை மாற்றி அவனுக்கு வாழ்வின் மேல் பிடிப்பு உண்டாக்கிய காதல் நெஞ்சம் அவளினது.

💌ஸ்லோகன்💌

கல்லை கூட சிற்பமாக்க வல்லது
காதல் கொண்ட நெஞ்சமது!!
 

Abirami

Well-known member
KS 10 நித்திலமே நீ என் காதலடா(டி)❤️

✍️யோசி யோசி✍️
காதலை தான் உணர்ந்த பின் காதலிப்பவரும் அந்த காதலை உணரும் வரை காத்திருப்பதில் ஒரு சுகமுண்டு. காத்திருந்து கிடைக்கும் காதலையே நித்திலமாக சூடி கொண்டாட முடியும்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அஞ்சலி :
சிறு வயதிலேயே தோன்றிய காதல் கைக் கூட முடியாமல் போனாலும், அதற்காக காத்திருந்து தன் காதலை உணர்த்தியவள். சிரிப்பு, தைரியம், காதல் நிறைந்த பெண்ணவள்.

💌ஸ்லோகன்💌

இளவயதில் தோன்றிய இளா மீதான காதலை
காத்திருந்து பெற்றதில் தான் இத்தனை சுகமுண்டோ!!
 

Abirami

Well-known member
KS 104 கிராமத்துக் காதல்❤️

✍️யோசி யோசி✍️
அந்த காலத்துக் காதலை கண்டதைப் போல இருக்கும் அழகிய ஒரு கிராமத்துக் காதல் இது. கம்பர்மலையை சேர்ந்த இருவரின் காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

கனகாம்பரி :
தன் கிளி கண்மணி மற்றும் சகாக்களுடன் பட்டான் பூச்சியாய் சுற்றி திரிபவள். படிப்பின் மேல் ஆசைக் கொண்டு தன் லைட்சியத்தை அடைந்து புவி அத்தானின் மேல் அளவில்லாத காதல் கொண்டவள்.

💌ஸ்லோகன்💌

அம்பாரி மேல் அமர்ந்து புவியையே
சுற்றி வந்தாள்
புவியாவன் அம்பரி மேல் வைத்த காதலினால்!!
 

Abirami

Well-known member
KS 124 காதலே சாதலாய்❤️

✍️யோசி யோசி✍️
வலிகள் தாண்டி உதித்து எழும் காதல் தாங்கும் வலிகளை கண்டால் காதலே ஒரு சாதல் தானோ என்றே தோன்றும். காதலின் வலிகளுக்கு காதலே பரிசு.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

வாமிலன் :
தன் கனவு காதலியை கண்ட நாள் முதலாய் காதலித்து சந்தர்பத்தால் அவளை இழந்து வாடியவன். துன்பத்தை பார்த்து துவண்டு போகாமல் ஃப்னிக்ஸ் பறவையாய் தோல்வியில் இருந்து எழுந்தவன். பல காதலர்களை சேர்த்து வைப்பது, குடும்பத்தின் மீதான பாசம், தன் மனதில் உதித்தவளை காதலித்துக் கொண்டே இருந்தது எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

வலிகள் நிரம்பிய வாழ்வால் உதிர்ந்த குழலியை
தங்கள் மலரோடு மகிழ்வை சேர்த்து
தந்தான் மிலன்!!
 
Top