கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-17 மலர்ந்தும் மலராத காதலே

காதல் பூக்கள் அஞ்சலி சந்தோஷ்

காதலர்கள் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் . அவர்கள் நேரில் சந்திப்பதற்கு முன்பே கனவில் தன் இணையை காணுகின்றனர். சில பல போராட்டங்களுக்கு பிறகு இரு மனமும் திருமணத்தில் இணைகிறது.

கனவிலே காதல் வயப்பட்டவர்கள் ஆதலால் "😍மலர்ந்தும் மலராத காதல் 😍என தலைப்பு வைத்து இருக்கலாம்.

பூக்கள் பூக்கும் தருணம் பார்க்க அழகா இருக்கும் இவர்கள் காதலும் அது போல அழகு என எண்ணி இந்த தலைப்பு வைத்து இருக்கலாம்.
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-23 கானலாய் காதலை கண்டேன்

நாயகன் முகில் நாயகி யாழ்

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஜோடி இவர்கள். தன் மகள் கூட்டு குடும்பத்தில் வாழ வேண்டும் என எண்ணம் கொண்ட தந்தையால் வளர்க்கப்பட்ட நாயகி. மாப்பிளையாக அறிமுகம் ஆகிறான் முகில். தான் நினைத்தது போல மற்றவர்கள் நடக்க வேண்டும் எனும் குணம் கொண்டவன்.

திருமணத்திற்கு முன்பு அவன் செய்யும் செயல் யாவும் காதல் என எண்ணும் நாயகி, பிறகு அவை யாவும் அவனின் சுயநலம் என புரிந்து கொள்வாள் என்று நினைக்கிறேன். எனவே இக்கதைக்கு 😍😔கானலாய் காதலை கண்டேன் 😔😍என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

((🤔 ஒரு ud தான் போட்டு இருக்காங்க ஆனால் செமயா இருக்கு வாசிக்க, எழுத்தாளர் எங்கு இருந்தாலும் மறக்காமல் கதையை continue பண்ண வேண்டும் . தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏))))
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-139 காதல் சில குறிப்புகள்

கதையில் நிறைய காதல் ஜோடி வருவாங்கனு நினைக்குறேன். முதல் ஜோடி பாபு பானு, கல்லூரி காதல். இருவரின் ஊடல் அழகா இருக்கு வாசிக்க.

காதலன் மற்றும் காதலி எப்படி காதலை உணர்வது, தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கிறார்களா என எப்படி புரிந்து கொள்வது போன்ற சில காதல் குறிப்புகளை குட்டி குட்டி incident ha சொல்ல போறாங்கனு நினைக்கின்றேன்.

ஆதலால் இக்கதைக்கு 😍😍காதல் சில குறிப்புக்கள் 😍😍என தலைப்பு வைத்து இருக்கலாம். 👍👍🙏🙏🙏

((சூப்பரா இருக்கு வாசிக்க, especially அந்த சின்ன வயசு அட்டை லைப்ரரி சீன் சூப்பர் )))
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-120 என் ஜீவனே உந்தன் காதல் தானே

காதல் ஜோடி விதுசந்திரனி ஆதவன்

சிறு வயது முதலே நாயகன் மீது ஒரு தலை காதல் கொண்ட நாயகி. தன் அத்தை பெண்ணை தான் மணக்க போகிறான் என்று தெரிந்த பிறகு அவன் சந்தோஷத்திற்காக காதலை சொல்லாமல் பிரிகிறாள். அத்திருமணம் விவகாரத்தில் முடிகிறது.

தன்னவனின் துயர் தீர்க்க அவனின் தாரமாக கரம் பிடிக்கிறாள் விது . அவளின் தூய காதலில் தன் துக்கம் மறந்து ஆனந்தமாக வாழ்கிறான் ஆது.

தன் தன்னலமற்ற காதலால் ஆதவனின் உள்ளத்திலும் உணர்விலும் உயிரிலும் இரண்டற கலக்கிறாள் நாயகி விது. எனவே கதைக்கு 😍😍என் ஜவனே உந்தன் காதல் தானே 😍😍என தலைப்பு வைத்து இருக்கலாம் எழுத்தாளர். 🙏🙏🙏
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-136 தொடரும் காதல்

காதலர்கள் மீரா பிரகாஷ்

சிறுவயது முதலே எதிரும் புதிருமாக இருக்கும் நாயகன் மற்றும் நாயகி. மனதினுள் காதலித்து கொண்டும் வெளியே வெறுப்பையும் காட்டுகிறார்கள். சொல்லாத காதல் செல்லாமல் போய் விட்டது.

இருவரும் காதல் சொல்லாமலே புரிதல் இன்மையால் பிரிகின்றனர். மீராவை எங்கு தேடியும் நாயகனால் கண்டறிய முடியவில்லை. உடல் மட்டுமே பிரிந்து இருந்தது உள்ளம் மற்றும் அதன் உணர்வுகள் ஒன்றுதான். இருவருமே திருமணம் செய்யாமல் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். காலங்கள் கடந்தது,

நாயகன் மகளும் நாயகியின் மகனும் காதல் வயப்படுகிறார்கள். இவ்விருவரின் திருமண பேச்சின் போது தான் பழைய காதலர்கள் சந்திக்கிறார்கள்.

இருவரின் சந்ததிகள் வழியே காதல் தொடர்ந்து வந்ததால் 😍🤗 தொடரும் காதல் 😍🤗 என தலைப்பு வைத்து இருக்கலாம் எழுத்தாளர்.

( negative ending புடிக்கும்னா இந்த ஸ்டோரி படிக்கலாம் 👍👍 கிட்டத்தட்ட 96மாறி இருக்கும் )
 
Top