கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 105 காதல்தானடி உன் மேல் எனக்கு❤️

✍️யோசி யோசி✍️
காதல் கொண்ட நெஞ்சம் தன் காதலை கொண்டு எல்லா நேங்களிலும் உடனிருப்பது மட்டும் காதலில்லை, காதலுக்காக காதலை துறந்தவனின் காதலும் காதலே.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

கார்த்திக் :
பார்த்ததும் தன் மனதில் பதிந்தவளின் மனதுக்காக அவளின் தேடலுக்கு உடனிருந்து உதவியவன். குடும்பத்தின் மேல் அளவில்லாத பாசம் கொண்டவன். யாரின் மனமும் புண்படாமல் பேசுபவன், மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன்.

💌ஸ்லோகன்💌

காதல் மனதை மறைத்தவனின் காதலில் உயிர்பெற்றது
காதல் மனதை அறிந்தவனின் காதல்.
 

Abirami

Well-known member
KS 43 காதல் மனசு❤️

✍️யோசி யோசி✍️
காதலுக்காக எதையும் மாற்ற துணியும் மனசு இயல்பு காதலுக்காக தங்களையே மாற்றிக் கொள்கின்றன மனது தான் காதல் மனசு.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

கல்பனா :
எதிர் பாரமால் தன் கணவனின் காதல் தனக்கு கிட்டாத போதும் தன் காதலை கொண்டு அதை பொறுத்தவள். சுற்றம் சூழ வாழ்ந்து இன்பத்தை நிரப்பியவள். மற்றவர்களின் மனதையும் புரிந்து நடந்துக் கொண்டவள்.

💌ஸ்லோகன்💌

காதல்மேல் நம்பிக்கை கொண்டவளின் காதலைக் கண்டு
காதல் மனதை பற்றி அறிந்து காதல் கொண்டவள் அவள்(ரேகா)
 

Abirami

Well-known member
KS 95 காதலும் வீரமும்❤️

✍️யோசி யோசி✍️
காதல் என்னும் போர்களத்தில் வீரத்துடன் காதலும் சரிசமமாக சேர்ந்துக் கொண்டு மோதும் போது அவர்களை வெல்ல போவது அவர்களின் காதலா?? வீரமா??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ருத்ரதாமன் :
தங்கள் நாட்டை தன் உயிரினும் மேலாக நேசித்து முன்னோர்களின் ஆசையை தன் லட்சியமாக மாற்றி அதை அடைந்தது. சங்கமித்தையின் மேல் கொண்ட காதல். சுதர்ஷனா அணையை திரும்ப கட்டியது எல்லாமே சூப்பர்.

💌 ஸ்லோகன்💌

வீரத்தோடு காதலும் சேர்ந்த போர்க்களத்தில்
இரு பிரிவினரும் வெற்றி கொண்டவர்களே.
 

Abirami

Well-known member
KS 3 கைத்தலம் பற்றிடும் காதலே❤️

✍️யோசி யோசி✍️
காதலிப்பவர்களின் கைகளை பற்றி நடப்பதினால் கிடைக்கும் நம்பிக்கையைக் கொண்டு உலகத்தையே வென்றுவிடுமாம் அந்த காதல் கரங்கள்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

சைலஜா தேவி :
400 ஆண்டுகளாக தவ வாழ்வு வாழ்ந்து தங்கள் சந்திதியினரின் நலம் காத்தவர். வஜ்ரனுக்கும் சுகாவுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். தன் பிறப்பின் நோக்கத்தை அடைந்த வீர மங்கை.

💌ஸ்லோகன்💌

வஜ்ரனின் கைபற்றி காதல் பேசிய சுஜாவின்
இப்பிறவி பலனை வென்று இணைத்தது காதலே!!
 

Abirami

Well-known member
KS 6 காதல் அகராதி❤️

✍️யோசி யோசி✍️
மொழி, எழுத்து, கவிதை, இலக்கியம் என உலகில் இருக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அகராதி, தினமும் புது புது காவியங்கள் படைக்கும் காதலிடம் தோற்று காதலையே ஒரு முற்றாத அகராதியாக பட்டம் சூட்டுகிறது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மின்மினி :
அழகாக துள்ளி ஓடும் புள்ளி மான் போல சேட்டை செய்தாலும் அறிவாளியான பெண். யூட்யூப் ராணி, கிள்ளை தமிழ் பேசி எல்லாரையும் மயக்குபவள். லூட்டியில் பாட்டியை மிஞ்சும் பேத்தி, தாய் தந்தையை இணைத்த பாலம்.

💌 ஸ்லோகன்💌

நீரை தனக்குள் இழுத்து அழகாகும் பூமியை போல
வருணை தனக்குள் இழுத்து காதலில் புது அகராதி படைத்தவள் தர்னிதா!!
 
Top