கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 12 காதல் கண்ணனின் ராதையவள்❤️

✍️யோசி யோசி✍️
அவள் பிறக்கும் முன்பே ராதை தான் தனக்கானவள் என எண்ணி அவளுக்காக காத்திருந்த கண்ணனின் காதல் ராதையானவள் அவள்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ராதை :
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நினைத்தவள். திருமணத்திற்குப் பின் கணவனின் நிலையை தன்னோடு ஒப்பிடாமல் அவனை முன்னிறுத்தி செயல் பட்டவள். அவர்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்தவள்.

💌 ஸ்லோகன்💌

கண்ணனுக்காகவே பிறந்த காதல் ராதையை போல
அவனுக்காக வாழ்ந்து அவனோடு சேர்ந்தாள் ராதையவள்!!
 

Abirami

Well-known member
KS 22 காதல் கண்ணம்மா❤️

✍️யோசி யோசி✍️
காதலில் சிறந்தவளை பாரதி கண்ணம்மா என குறிப்பிடுவதை போல, அவர்களின் காதலை சுமந்து, காதலுக்காக காத்திருந்த சிறந்த காதலியே காதல் கண்ணம்மா.

👤 பிடித்த கதாப்பாத்திரம்👤

மித்து(சஹி) :
முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் துணை இருந்த சிறந்த பேச்சாளர். தன் காதலை சுமந்து தனித்து வாழ்ந்து பல வெற்றிகளை பெற்றவள். யாரையும் காயப் படுத்தாமல் அவர்களிடம் இருந்து விலகியவள்.

💌 ஸ்லோகன்💌

பானுவின் காதலை தொலைத்த பாண்டி சஹி மேல் காதல்கொண்டு மகிழ்ந்தான்!!
 

Abirami

Well-known member
KS 42 காதல் கொண்டேனடி கண்மணி❤️

✍️யோசி யோசி✍️
காதலி அவளின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் தன் மனதையும் திறக்காமல் இருந்தவன், இறுதியில் அவள் மேல் காதல் கொண்டானடி.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

பவானி :
பிரிந்த தங்கள் குடும்பத்தை ஒன்றாக சேர்க்க போராடியவள். கணவன் தன் காதலை மறுத்தும் சுய மரியாதையுடன் அவனை வென்றவள். தந்தையின் கௌவரவத்தையும் கணவனின் நேர்மையையும் புரிந்து இருவரின் வெற்றிக்கும் உடனிருந்தவள்.

💌ஸ்லோகன்💌

பவாவின் காதலின் முன் தோற்று தன் காதலால் அவளை வென்றவன் சிவா!!
 

Abirami

Well-known member
KS 62 காதல் தாண்டவம்❤️

✍️யோசி யோசி✍️
நடனத்தில் சிறந்த தாண்டவத்தை கற்றவளை காதலால் வெல்ல நினைப்பது அந்த அழகிய தாண்டவ நடத்தின் அசைவுகளை போல கடினமாக இருக்கக் கூடும்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

நாதன் :
தந்தையின் மரணத்திற்குப் பின் அவரை பற்றி நினைவுகளை சுமந்து வாழ்பவன். மரணப் படுக்கையில் விழ ஆசைக் கொண்டவளை காப்பாற்றி அவளுக்கு நன்மை செய்தவன். பல போராட்டங்களை கடந்து தனக்கு பிடித்தது கிடைக்க ஏங்கியவன்.

💌 ஸ்லோகன்💌

சிந்துவின் நாதத்தால் ஒலிர்ந்து எழுந்தது
ஜெகத்தின் மணி(மன) ஓசை!!
 

Abirami

Well-known member
KS 110 காலம் மாறலாம் நம் காதல் மாறுமா❤️

✍️யோசி யோசி✍️
இவ்வளோ துன்பங்களை கடந்து வாழும் காதலின் வயதை மாற்ற வல்ல காலத்தால் என்றும் காதலை மாற்றி அதை வெல்ல முடியாது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

வருண் :
காதலிப்பவளின் கனவுகளுக்கு துணை இருந்து அதை மெய்ப்பித்தவன். காதலி அவளின் கோபத்தை தாங்கி அவளின் தவறான புரிதலில் துவண்டு தன்னை புரிய வைத்தான். மற்றவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு உதவியவன்.

💌ஸ்லோகன்💌

சிறுவயதில் முளைத்த தன் காதலை உரமூற்றி வளர்ந்தவன்
பூச்சிக் கொள்ளி அடித்து காதலியின் கோவத்தை வென்று
அவளை காதலால் வீழ்த்தினான்!!
 
Top