கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 101 இசைக்காதலி என்னைக் காதலி❤️

✍️யோசி யோசி✍️
அவன் மேலான காதலால் இசைக்காதலி ஆகியவளின் காதலைக் கேட்கும் அழகிய காதல் கதை. காதலி என்னைக் காதலி இசைக்காதலி என்னைக் காதலி சூப்பர்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அபிநயன் :
உலகம் போற்றும் இசையமைப்பாளர் என சிறு அகந்தையும் இல்லாத மிருதுவான காதலன் அவன். காதலியின் துன்பத்தை போக்க நினைத்து அவளே தன்னை நம்பாத சூழலில் சிக்கியும் அவளின் கைப்பற்றியவன். நம்பிக்கையை தன் மீது விதைத்து மறுபடியும் அவளை காதல் புரிய செய்தவன்.

💌ஸ்லோகன்💌

இசைக்காதலியின் இசைக்காதலன் அவனின் இசையில் இசையாய்
மீட்டும் இசை ஓசையின் சங்கமமே
அவர்களின் காதல் இசை!!
 

Abirami

Well-known member
KS 55 உன் துயரம் நீங்கும் என் காதலில்❤️

✍️யோசி யோசி✍️
காதலியவளின் துயரத்தை நிக்கி மகிழ்ச்சியை பரவ செய்தான் தான் அவள் மீதுக் கொண்ட காதலென்னும் அழகிய நேசத்தால்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

நீரன் :
காதலின் மனதை புரிந்துக் கொண்டு அவள் குடும்பத்தின் சம்மதித்தற்கு காத்திருந்தவன். பெண்ணவளின் துன்பத்தைக் கண்டு பணியாய் உருகியவன். வாவ் அவளுக்காக ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி அவளின் காதலை அடைய நினைத்தவன்.

💌ஸ்லோகன்💌

இதழினும் மெல்லிய இதழினி பட்ட வாழ்க்கை துயரத்தை
காதல் என்னும் மழைநீர்க் கொண்டு அத்துயரை நிக்கி
அவளை மலர செய்தவன் நீரன்!!
 

Abirami

Well-known member
KS 116 நின்றன் காதலை எண்ணி❤️

✍️யோசி யோசி✍️
மாஸ்க் போடும் கோரோனா காலத்தில் முகத்தை சரியாக கூட பார்க்காத இருவருமே அவர்களது மனதின் காதலை நினைத்து நினைத்து அதை வளர்த்து களித்தனர்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

தமிழ்ச் செல்வன் :
எந்த சூழலிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய காத்திருக்கும் நல்ல மனம். சுமி விஸ்வா ஜோடியை சேர்ந்தது, கோரோனா காலத்தில் முதியவர்களுக்கு வழங்கிய உணவு, அன்பு, பாசம் என எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

பார்(பார்கவி)வையால் வருடும் இனிய காதலின் மொழியை
படித்து பல காதல் கவி(பார்கவி)தைகள் படைத்தான் தமிழ்!!
 

Abirami

Well-known member
KS 109 மௌனமே காதலாய்❤️

✍️யோசி யோசி✍️
காதலில் பல்வேறு மொழிகள், பாஷைகள் தேவையற்று பேசும் மொழிக்கே இங்கு வேலை வைக்காமல் மௌனமாய் பேசுகிறது காதல். விழிமொழி கற்ற காதலர்களுக்கு மௌனமே காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அன்புச் செல்வன் :
பேருக்கு ஏற்றதை போல அவ்வளவு அன்பை மொழி மீது பொழிகின்றவன். தன்னுடைமை ஆனாவளின் துன்பத்தை எல்லாம் துடைத்து இன்பத்தை பெருக்கியவன். காதல்கள் பல கோடி பொழிந்து அனைவரையும் கவர்ந்திழுத்தவன்.

💌ஸ்லோகன்💌

அன்பின் அடைமழையை பொழிபவனின் காதல் மொழியை அனுபவித்து
அன்பில் சிறந்திருந்தனர் அன்பு மொழி இருவரும் காதலில் ஓருயிராய்!!
 

Abirami

Well-known member
KS 66 உயிர்நிலைக் காதல்❤️

✍️யோசி யோசி✍️
காதலுக்கு வைக்கப் படும் பல தேர்வுகளை தாண்டி உயிரில் கலந்து அழகிய காதல் உறவில் சேரும் உயிர்நிலைக் காதல் கதை இது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அருணிமா :
தன்னை சுற்றி நடக்கும் பல குற்றங்களை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்பவள். காதலில் வாங்கிய வலிகளை மாற்றி குடும்பத்தில் அமைதியை நாட்டுபவள். வினீதின் ஈகோவை காதலால் மாற்றியவள்.

💌ஸ்லோகன்💌

உயிரினும் மேலான சிறந்த காதலை உடையவள் பூரணத்துவமாய்
காத்து மேலும் சிறப்பிப்பதை கண்டு
பூரித்தவன் வினீத்!!
 
Top