கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 99 காதல் அளபெடை❤️

✍️யோசி யோசி✍️
மொழியின் எழுத்துக்களுக்கு அளபெடை ஓசையின் இன்னிசையைப் போல காதலின் அளபெடையாக ஒலிக்கும் அழகிய காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஆதி :
உரிமைக் குரல் மூலம் பலரின் துன்பங்களை தீர்ப்பவன். காதல் என்பது இன்னது என்று உணர்ந்து தன்னவளுக்கு துணை நின்றவன். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவன்.

💌ஸ்லோகன்💌

காதல் மொழியின் அளபெடை பல
கற்று முதன்மை பெற்ற
ஆதி மர்யமின் காதல் அளபெடை
ஓங்கி ஒலிக்கும் தமிழிது!!
 

Abirami

Well-known member
KS 118 மைவிழியோ காதல் மந்திரமோ❤️

✍️யோசி யோசி✍️
மைவிழிகளில் விழுந்தவனின் காதல் போராட்டங்கள் நிறைந்த கதை. காதலில் ஜெயித்தது மைவிழியா இல்லை காதல் மந்திரமா என்பதே மைவிழியோ காதல் மந்திரமோ கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்

அருண் :
ஒரே ஒரு தப்பு பண்ணிட்டு கதை முழுக்க ஓராயிரம் தடவை சாரி கேட்டவன் 😂🤭காதலில் சொதப்புவது எப்படினு ட்யூஷன் எடுக்கலாம் டா நீ😝காதலுக்கும் லட்சிய கனவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிப்பவன். நம்பிக்கையான காதலை கொண்டவன்.

💌ஸ்லோகன்💌

மைவிழியிக்கும் காதல் மந்திரத்துக்கும் இடையிலான காதல்
போரில் வென்றது அருண் ஐஸின் காதல்விழிகள்!!
 

Abirami

Well-known member
KS 120 என் ஜீவனே உன் காதல் தானே❤️

✍️யோசி யோசி✍️
பல துன்பங்களை கடந்தும் வாழும் காதலுக்கு ஜீவனே அவர்கள் மற்றவரின் மேல் வைத்த காதல் தானே என கூறும் காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

விதுசந்திரிணி :
வாவ் வாட் அ லவ்...பா எப்படி இப்படி எல்லாம் அவனை காதலிச்சு இருக்கா...செம்ம லவ். காதலின் எல்லா படிகளையும் தாண்டிய இறுதி நிலையில் திளைக்கும் காதல். காதலிப்பது இவ்வளோ சுகமா என நினைக்க வைக்கும் அவளின் காதல் சூப்பர்.

💌ஸ்லோகன்💌

ஆதவன் நிலவாக ஜொலிக்கும்
காதல் வானில் பறந்து
முடிவற்ற காதலில் உருகும் ஓர்
உயிரே ஆதவ் விது!!
 

Abirami

Well-known member
KS 135 கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி❤️

✍️யோசி யோசி✍️
முதன் முறை கண்டதும் மலர்ந்த காதலும் காணும் போதெல்லாம் பெருகிய காதல் கதை கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

சூர்யா :
ரொம்ப வித்தியாசமான அழகான கேரக்டர். சாமியாரும் மன்மதனும் சேர்ந்து செய்த கலவை அவன். மனோவின் மண்டைய காய விடுவது, கவினை கண்டுபிடிக்க விட்டு சுத்தலில் விடும் விதம், பல போராட்டங்களை ஈஸியாக கடப்பது என எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

ஆதவன் நறுமுகையை விளையாடும் காதலும்
சூர்யா கவின்மலராக வெளிப்படும் காதலும்
கண்டநாள் முதலாய் சேர்ந்து பெருகிய
காதலிது!!
 

Abirami

Well-known member
KS 16 காதலும் கற்று உனை மற❤️

✍️யோசி யோசி✍️
காதல் என்பது இன்னது என வகைப்படுத்தப் பட முடியாத எல்லாவற்றையும் கடந்த நிலை என்பதை கற்று அதில் இருவரும் தன்னையே மறந்து துணையை மட்டும் நினைக்கும் அழகிய உறவு கொண்ட காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

தீப்சரன் :
கஷ்டப் பட்டு முன்னேற துடிக்கும் தன் காதலிக்கு துணை நிற்பவன். காதலை விட சிறந்தது எதுவும் இல்லை என்பதை தன் காதலைக் கொண்டு அவளுக்கு உணர்த்தியவன். உறவு, நட்பு என எல்லாவற்றையும் முதன்மையாக கருதுபவன்.

💌ஸ்லோகன்💌

தீபனின் ஒளியால் மிளிர்ந்து எழும் அதீவாவும்
பாரின் மனதை அறிந்து உள்ளம் பறித்த பென்னும்
காதலைக் கற்று தங்களை மறந்தனர்!!
 
Top