கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காகித கப்பல்கள்

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—10



மிக சிறந்த தருணங்கள் மிக சிறிய அறவிப்பில் வந்துவிடுகிறது. ராகவன் சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்க்கும் தகுதி தனக்கு இல்லை என்று புரிந்து கொண்டு, விட்டத்தை பார்த்தான். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதில் அடங்கியிருக்கிறது அவன் நிம்மதி.



“சித்ரா...நீ என்ன மேல் அவ்வளவு மதிப்பும் அன்பும் வச்சிருக்கே. உன் கிட்டே நான் சொன்ன பொய்கள் என்னையே இப்ப தின்கிறது. உன்னை அவமானப் படுத்திட்டேன்னு நினைக்கும் போது செத்துவிடலாம் போல் இருக்கு. நீ கொடுத்த நிழலில், நீ காட்டிய பெருந்தன்மையில், நீ செலுத்திய அன்பில் நனைந்து கொண்டு எப்படி இவ்வளவு கோழையாக இருந்தேன்னு எனக்கேத் தெரியலை. ஐ டோன்ட் டிசர்வ் யூ...”



வெகு நேரம் சித்ரா அவன் சொன்ன விஷயங்களை ஜீரணிக்க கஷ்டப்பட்டாள். அவளுக்கு கண்ணீர் சிந்துவதில் கூட அர்த்தமில்லை என்று தோன்றியது. கண்களை துடைத்துக் கொண்டாள்.



“நீங்க எனக்கு செய்தது ஒரு வகையில் துரோகம் தான். என்னை நீங்க நம்பலை. என் அன்பை நீங்க பெரிதா மதிக்கலை. நீங்க என் மனசை மட்டும் உடைக்கலை. நம்ம எதிர்காலத்தையே உடைச்சிட்டீங்க.”



அங்கே நிற்கப் பிடிக்காமல் அவள் வெளியேற முயன்றாள். ராகவன் அவள் கையை பிடித்து நிறுந்தினான்.



“எதுவும் சொல்லாம போறியே?”

அவள் புன்னகைத்தாள். அந்த புன்னகை அவன் மனப் புண்ணுக்கு பேண்ட்-ஏட் போட்டு மூடியது போல் இருந்தது. ஆனாலும் அவனுக்கு வலி போகவில்லை. அவளைப் பற்றி அவன் அதிகம் கவலைப்பட்டான். அது தான் அவனுக்கு அதிக தண்டனையை கொடுத்தது. அதை அவள் புரிந்து கொள்வாளா? “சித்ரா...” மீண்டும் கூப்பிட்டான்.



“என் இதயம் பெரிசில்லை. அதுக்கு தைரியமும் இல்லை. அது கொடூரமானதும் இல்லை. இப்ப நீங்க சொன்னதை கேட்ட பின் அது பலமானது இல்லை என்று புரிந்து கொண்டேன். இந்த இரும்பு கூட்டுக்குள் அதை பதுக்கி வைத்திருந்தேன். நீங்க விட்ட தப்பான மூச்சு

அதை சாகடித்துவிட்டது. நீங்க என் முகத்தைப் பாருங்க அது போதும். என் இதயத்தை பார்க்காதீங்க...”



சித்ரா சொல்லிவிட்டு தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள். அந்த சமயம் போன் அடித்தது. முரளியின் போன்.



“சொல்லுங்க டாக்டர்...என்ன விஷயம்?”



“ஒரு நல்ல நியூஸ் அம்மா...உங்க வாழ்க்கை கணக்கில் ஒரு புதிய வசந்தம். எங்கே இருக்கேங்க? உங்களோடு பேசணும்.”



“மாலை நான்கு மணிக்கு வாங்க.” சொல்லிவிட்டு அவள் போனை கட் பண்ணினாள். ராகவன் சொல்லிய விஷயம் டாக்டருக்கு தெரியாது போலும். எதை வசந்தம் என்கிறார்? தலை சுற்றியது.

சித்ராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. வசந்தம் வருகிறது என்கிறார். கணவனோ இலை உதிர்காலத்தின் ஒரு பகுதியை காட்டிவிட்டான்.



“சித்ரா...உன்னிடம் முதலிலேயே சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசாகி இருக்காது. உனக்கு அந்த வலியை கொடுக்க நான் விரும்பலை. அதான் வேறு ஒன்றும் இல்லை.”



“அதை விட பெரிய வலியை இப்ப கொடுதிருக்கீங்க. காதலை விட உங்களுக்கு விடுதலை முக்கியம் இல்லே? நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா காதலே ஒரு சுதந்திரம் தான். சொல்லுங்க நீங்க சொன்னதெல்லாம் உண்மையா?”



“ஆமாம்...இனி நான் பொய் சொல்ல விரும்பலை. என்னை கீதா ப்ளாக் மெயில் பண்ணப் பார்க்கிறாள்....நீ தான் அதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நான் நொந்து போயிருக்கேன்.”



“முடிவுகள் எடுக்க முதலில் பிரச்சனையின் உள்ளே இறங்கணும் மனதின் வேதனை குறையணும். அப்ப தான் என்னால் ஒரு முடிவு சொல்ல முடியும். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்னு நீங்க நினைக்க வேண்டாம். நான் வரேன். மதியம் காண்டீனில் சாப்பிடுங்க. என்னால் சமைத்து எடுத்து கொண்டு வர முடியாது. எனக்கு படுத்து அழவேண்டும் போல் இருக்கு...” அத்தோடு சித்ரா அறையை விட்டு வெளியேறினாள். அவனுக்கு தன் ஒளியே போனது போல் இருந்தது. .



இதுவரை வீடு என்று நினைத்து அவள் இளைப்பாறிய இடம் வெறும் சுடுகாடு என்று தோன்றியது. பிணம் சுடுகாட்டை வந்தடைவது போல் தான் அவள் வீடு வந்து சேர்ந்தாள். பாபு வந்து அவள் காலைக் கட்டிக் கொண்டான். அவன் பள்ளி விட்டு வந்ததும் எதிர் வீட்டு பெண்மணி அவன் வீட்டு கதவை திருந்து அவனை உள்ளே விட்டாள்.



“ஏதாவது வேணுமா பாபு?” என்று கேட்டாள்.



“ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி. தாங்யூ.” அவள் போனதும் இவன் ஹோம் வொர்க் செய்தான். டி.வி பார்த்தான். இதோ அம்மா வந்துவிட்டாள்.



“அம்மா...நான் என்ன கொண்டு வந்திருக்கேன் பார்.”



“என்ன கொண்டு வந்திருக்கே? சொர்கத்தை நோக்கி காரைக்கால் அம்மையார் தலை கீழாக போனாங்களாம். எனக்கு அது கூட சொர்க்கம் இல்லை. என் சொர்க்கம் மூடிவிட்டது...”



அவள் சொன்னது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. அவன் நினைத்தான் அம்மாவிடம் அந்த ரகசியத்தை சொல்லிவிட்டால் அவள் சந்தோஷமாகி விட மாட்டாளா? அம்மாவை இத்தனை வருத்தத்துடன் அவன் பார்த்ததே இல்லை. அவனுக்கு பயமாக இருந்தது.



“சரி சொல்லு. என்ன கொண்டு வந்திருக்கே? புயலா? கடும் குளிரா? பாலைவனமா?...” பாபு அழ ஆரம்பித்தான். அப்போது தான் அவள் தன் நிலை அடைந்தாள். அவள் மனம் இளகியது.



“ஸாரிடா கண்ணா. அம்மா ஏதோ சிந்தனையில் ஏதேதோ உளறிட்டேன். சொல்லு சொல்லு...என்ன கொண்டு வந்திருக்கே?”



“ப்ராக்ரஸ் ரிப்போர்ட். முதல் ரேங்க்.”



அது பரிசு. பிள்ளை தரும் நல் பரிசு. ஆனால் இவன் என் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டானே ராகவன்...அதனால் என்ன பாசம் போய்விடுமா என்ன? அவள் கனிவுடம் சிரித்தாள்.



“நான் பெருமையா கையெழுத்து போடுவேன் கண்ணா. உனக்கு என்ன ட்ரீட் வேணும் சொல்லு...நான் இப்ப செய்றேன். குலோப் ஜான் செய்யவா? அல்லது கேசரி?”



“எனக்கு உன் முத்தம் தான் வேணும். உன் சிரிப்பு தான் வேணும்.”

மகனை கட்டிக் கொண்டாள். பாபு உன் மகன் இல்லை சித்ரா என்று ராகவன் சொன்ன அதிர்ச்சி செய்தி அவளுள் இறங்கி இம்சித்த இவ்வளவு நேரம், அவன் முத்தம் வேண்டும் என்று சொன்னதில் காணாமல போயிற்று. ராகவன் சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி எழுந்தது.

கேசரி சாப்பிட்டு. பால் குடித்து...அம்மாவுடன் கொஞ்சி குலாவி விட்டு பாபு சொன்னான்.



“அம்மா...வந்து அந்த கீதா ஆன்ட்டி முன்பு இங்கே வருவாங்க தெரியுமா? அப்பா கூட பேசிட்டே இருப்பாங்க.”



திக்கென்றது சித்ராவுக்கு. இவன் என்ன புதுக் கதை சொல்கிறான்? கீதா என்கிற பெண்ணை மாமியார் ராகவனுக்கு பார்த்த பெண் ஆயிற்றே. அவள் எதுக்கு இங்கு வந்து பேசி இருக்கிறாள்?. சித்ரா இந்த ஒரு வருடமாக மாலை ஆறு மணிக்கு மேல் அவளுக்கு பார்த்து வைத்திருந்த வீட்டுக்கு போய் விடுவாளே...அந்த நேரம் இந்த கீதா வந்திருப்பாளோ? இரவு முழுக்க தங்கி இருப்பாளோ? இவனிடம் எப்படி கேட்பது? அசிங்கமா ஆயிடுமே. ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை இந்த கீதாவின் மகனோ இந்த பாபு?



“அம்மா...அந்த ஆன்ட்டி பாட் ஆன்ட்டி அம்மா. அப்பா கிட்டே பணம் வாங்கிக்கிட்டு போகும். உன் கிட்டே சொல்லனும்னு நினைப்பேன். அப்பா சொல்லக் கூடாதுன்னு சொன்னார். அதான்...”



“வேறு என்ன என்ன விஷயங்கள் நடந்திருக்கு பாபு.? உனக்கு தெரிந்ததை சொல்லு. பதட்டப்படாம யோசிச்சு சொல்லு. அம்மா திட்ட மாட்டேன்.”



“நிஜமா திட்ட மாட்டியே? எனக்கு பயமா இருக்குமா? என்னை ஹேட் பண்ணுவியா?” பாபு அழ ஆரம்பித்தான். அவன் கண்கள் குளமாகியது.



“தைரியமா சொல்லு. நீ என்ன செய்திருந்தாலும் நான் உன்னை ஹேட் பண்ண மாட்டேன். நீ என் மகனாச்சே...எப்படி உன்னை ஹேட் பண்ணுவேன்? பாவம் இந்த சின்ன வயசில் அனுபவிக்க கூடாத கஷ்டத்தையெல்லாம் அனுபவிச்சிட்டே....சொல்லு கண்ணா..”



பாபு மென்று விழுங்கினான். அவன் கண்களில் பயம் தெரிந்தது.



“வந்து வந்து.....அம்மா அப்பாவை நான் தான் கத்தியாலே குத்திட்டேன்.”



“என்னது? என்ன சொல்றே பாபு? நீயா....நீயா?..பொய் சொல்றே.”



“இல்லேம்மா நிஜம். அப்பா அந்த கீதா கூட பேசினது எனக்கு பிடிக்கலை. என்னை கூட்டிட்டுப் போகப் போறேன்னு சொன்னா. அப்பாவும் சரின்னு சொன்னார். அதான் ஆங்கரி ஆய்டுச்சு..குத்திட்டேன். அப்புறம் பயந்து போய் கட்டிலில் வந்து படுத்துக்கிட்டேன். படுக்கையில் மூத்திரமும் ஆயும் போயிட்டேன்...அதாம்மா நடந்தது....”



இதை ஏன் ராகவன் அவளிடம் சொல்லவில்லை? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துக்கு மேல் குழப்பம்.



“அம்மா...நீ என்ன ஹேட் பண்ணிடுவியா?’



“இல்லேடா...நீ என் தங்கம். அம்மா எப்பவும் உனக்கு துணையா இருப்பேன். கோழி குஞ்சை காக்கிற மாதிரி காப்பேன்.”



“ப்ராமிஸ்...”


“ப்ராமிஸ்..”



“அப்பா ஏன்ம்மா நான் தான் குத்தினேன்னு சொல்லலை. தானே குத்திக்கிட்டதா சொன்னாரு?”



“உன் மேல் உள்ள ப்ரியத்தாலே தான். “



“போலிஸ் கண்டு பிடிச்சுடுமா அம்மா?. என்னை ஜெயிலில் போடுவாங்களா?”



“ச்சே..ச்சே...அப்படி விட்டு விடுவோமா? இனிமே நீ கோபம் வந்தால் என் கிட்டே சொல்லணும். நீயா எதுவும் செய்யக் கூடாது. சரியா? இனிமே இப்படி முரட்டுத் தனமா செய்ய மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு.”



“ப்ராமிஸ்...அப்படி செய்யவே மாட்டேன்.” பாபு தன் நெஞ்சில் வைத்திருந்த அக்னியை வெளியிட்டப் பின் நிம்மதி அடைந்தான். அம்மாவை கட்டிக் கொண்டு தூங்கினான். ரொம்ப நாளுக்குப் பின் நன்கு தூங்கினான். சித்ராவுக்கு தூக்கம் போயிற்று. மர்மங்கள். தொடர்ந்து மர்மங்கள். பனி படர்ந்த காலை நேரம் போல் சூரியனை பார்க்க முடியாத பரிதவிப்பு நேரம். மாலை வருவதாக சொன்ன முரளிதரன் வரவில்லை. போனும் பண்ணவில்லை. அவர் என்ன புதுக் கதை சொல்லப் போகிறாரோ? எது நிஜம் எது பொய் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. இது என்ன கோலம் இறைவா?



சித்ராவுக்கு சமையல் வேலை ஓடவில்லை. குழம்பில் உப்பு போட மறந்தாள். தயிர் காலியாகிவிட்டது. கடையில் போய் வாங்கி வந்தாள். அரிசியை களைந்து குக்கரில் வைத்தபோது கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றிவிட்டாள். சாதம் கூழாகிவிட்டது. இதை எப்படி ராகவனுக்கு குடுப்பது? மீண்டும் அரிசி வைத்து பொல பொலவென்று வடித்த பின் காளான் கறி பண்ணிக் கொண்டு டிபன் காரியரில் அடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பினாள். அவள் கால்கள் பின்னின. இன்று என்ன செய்தி சொல்லப் போகிறான் ராகவன்?



ராகவன் சாப்பிட்டு முடிந்த பின் அவனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.



“பாபு தான் உங்களை குத்தினான்னு அவனே சொல்லிட்டான்.”



ராகவன் திடுக்கிட்டு பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் வெளியில் வரும் என்று அவன் நினைக்கவே இல்லை.



“என்ன சால்ஜாப் சொல்லலாம்னு பார்க்கிறீங்களா? கீதா கூட நீங்க பழகும் விஷயம் வெளியே தெரியக் கூடாதுன்னு தானே நீங்களே குத்திக்கிட்டதா சொன்னீங்க? கீதா தான் வேணும்னு சொல்லியிருந்தா நான் எப்பவோ உங்களை விட்டு விலகி இருப்பேன். வீட்டை விட்டு துரத்தியும்...என் மகனை உங்கள் வீட்டில் வந்து பார்க்கணும் உத்தரவு போட்டும் ...உங்களுக்கு சமைச்சு போடணும்னு கட்டளை இட்டும்...நான் ஒத்துக்கிட்டு வந்ததுக்கு என்ன காரணம் தெரியுமா? பாபு மேலே இருக்கும் என் பாசம் தான். அவன் என் பிள்ளை இல்லன்னு சொன்னீங்க. அப்ப அவன் கீதாவுக்கு பொறந்தவனா? அப்ப அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். ஏன் என்னை ஏமாத்தணும்?”



“சித்ரா...உன் மேல் உள்ள காதலால் தான் எல்லாமே செஞ்சேன்.”

அவள் ஏளனமாக சிரித்தாள்.



கப்பல் மிதக்கும்.

























அத்தியாயம்---11
 

sankariappan

Moderator
Staff member
காகிதக் கப்பல்கள்---13

அத்தியாயம்—13



வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பாவனிக்கு காய்ச்சல்.



“கவிதா...எனக்கு ரொம்ப மேல் சுடுது. இன்று டாக்டரிடம் காட்டவேண்டும்.” என்று பவானி சொல்ல கவிதா



“ஆமாத்தே. நானே கேக்கணும்னு நினச்சேன். நீங்க ஒரு மாதிரியா இருக்கீங்களேன்னு..... பத்து மணிக்குப் போகலாம்.”

இருவரும் நவஜீவன் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள்.



“எப்படி இருக்கான் உங்க பேரன்?” என்று விசாலம் வினவினாள். சுர வேகத்தில் கடுப்பாக இருந்த பவானி சொன்னாள்.



“அவன் முதல் பிறந்த நாள் வந்த நேரம் என் மாங்கல்யம் பறிபோச்சு. என் மருமகள் சித்ரா வந்த நேரமே சரியில்லை. எவ்வளவோ என் மகனிடம் கெஞ்சிக் கேட்டேன். வேறே கல்யாணம் பண்ணிக்கோடான்னு. கீதான்னு ஒரு பெண்ணை பார்த்து வச்சிருகிறதா கூட சொன்னேன். கேக்க மாட்டேனுட்டான். இப்ப புள்ளை வேறு பொறந்தாச்சு..இனி எங்கே அது பத்தி நினைக்க முடியும்? எல்லாம் தலையெழுத்து.”



விசாலத்தின் புத்தி ஒரு புதிய கணக்கு போட்டது. பவானியை டாக்டரிடம் அனுப்பினாள். அவள் மருந்து வாங்கி கொண்டு போனதும் அவள் ராகவனுக்குப் போன் செய்தாள்.



“மிஸ்டர் ராகவன்...நான் உங்க நர்ஸ் விசாலம் பேசறேன்.”



“சொல்லுங்க சிஸ்டர். என்ன விஷயம்?”



“உங்க அம்மா சொன்ன கீதாங்கற பொண்ணு இங்கே வந்திருக்கா. அவள் இங்கே ஒரு ஸ்டாப் நர்ஸ் வேலைக்கு சேர்ந்திருக்கா. அவ கிட்டே தெரியாம உங்களுக்கு பிள்ளை மாத்தின விஷயத்தை சொல்லிட்டேன். அவ வந்து உங்ககிட்டே ஏதாவது பணம் பறிக்க திட்டம் போட்டா...எதுவும் கொடுக்காதீங்க. ரொம்ப ஸாரி மிஸ்டர் ராகவன். எப்படியோ விஷயம் லீக்காயிடுச்சு. எனக்கு பயமா இருக்கு. போலீசுக்குத் தெரிந்தால் நம் கதி அதோகதிதான். சூதானமா இருங்க.”



பீதியை கிளப்பிவிட்டு விசாலம் போனை வைத்தாள். அவள் மூளை தீவரமாக வேலை செய்தது. எப்படி எப்படி பொய்களை சொல்லி அவனிடம் பணம் கறக்கலாம் என்று திட்டம் தீட்டினாள். வெகு ஜாக்கிரதையாக செயல் படணும். இல்லை மாட்டிக் கொள்வோம்.

கடைசியில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.



ராகவன் விசாலம் போன் பண்ணி சொன்னதிலிருந்து கிலியில் உறைந்து போய் இருந்தான். ச்சே இந்த விசாலத்தை நம்பி இப்படி ஒரு பாவச் செயலை நாம் செய்திருக்கவே கூடாது. போலிஸ்...அது இது என்று பிரச்சனை பெருசாகிவிட்டால்? அய்யோ...தூக்கில் தான் தொங்கணும். ஒரு இரண்டு வாரம் ஒன்றும் நடக்கவில்லை. சற்று அமைதி அடைந்தான். சரி கடவுள் நம் பக்கம் இருக்கார் என்று சமாதானமானான். ஆனால் மறு நாளே ஒரு இளம் பெண் அவனை பார்க்கவேண்டும் என்று சொல்லி அலுவலகத்தின் முன் நிற்பதாக பியூன் கோவிந்தன் சொன்னான். சித்ராவை பியூனுக்கு தெரியும். வேறு யாராக இருக்கும். அவன் வெளியே வந்து பார்த்தபோது வெளிர் நீல சுடிதார் அணிந்து ஒரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.



“நீங்க யாரு? என்னை எதுக்கு பார்க்கணும்?”



“நான் வந்து பார்க்காம வேறு யார் வந்து பார்ப்பாங்க? மிஸ்டர் ராகவன் உங்க தில்லு முல்லு எல்லாம் தெரிந்துவிட்டது. நான் நியாயம் கேக்க வந்திருக்கேன். எனக்கு நீதி வேணும்?”



“உங்களுக்கு நீதி வேணும்னா கோர்டுக்கு போங்க. இங்கே அலுவலகத்தில் நீதியா வித்திட்டிருக்காங்க?”



“என் குழந்தையை கொடுங்க. எவ்வளவு பெரிய பிராட் பண்ணியிருக்கீங்க? உங்களை கோர்டுக்கு இழுப்பேன்.”



ராகவன் ஆடிப் போனான். இருந்தாலும் கட்டிக் கொள்ளாமல்



“என்ன மிரட்ட வந்தீங்களா? உங்க குழந்தை என் கிட்டே எப்படி இருக்கும்? தத்து பித்துன்னு உளறதீங்க. எனக்கு வேலை இருக்கு நான் போறேன். சரியா? வேற வேலை இருந்தா பாருங்க.”



“ராகவன் சார்...எங்க குழந்தையை எடுத்துக்கிட்டு இறந்து போன உங்க குழந்தையை செத்துப் போன எங்க அக்காகிட்டே வைக்கலை? இறந்து போன அமுதாவின் தங்கை நான். என் பேர் கீதா. உங்க அம்மா உங்களுக்காக பார்த்த அந்த கீதா நான் தான். இப்ப சொல்லுங்க உண்மையை. உங்களை கெஞ்சிக் கேட்டுகிறேன்...எங்க பிள்ளையை ஒப்படச்சிடுங்க. ப்ளீஸ்...அந்த நர்ஸ் விசாலம் உங்களை ஏமாத்திட்டா. அதுக்கு யாருமில்லைன்னு சொன்னது பொய். நான் இருக்கேன்....குழந்தையின் சித்தி.”



“மரியாதையா இங்கே இருந்து போய்டு. நீ அந்தக் குழந்தைக்கு சிதிங்கறதுக்கு என்ன ஆதாரம்?”



ராகவன் கேட்டதும் அவள் கடகடவென்று சிரித்தாள்.



“உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சிடுச்சு. விவரம் தெரியாம பேசறீங்க. உங்களுக்கு முதல் என் அக்காவையே தெரியாது. பிறகு என்னை எப்படி அடையாளம் தெரியும்.? உங்க சதியை நான் அம்பலப்படுத்துவேன். குழந்தையை குடுத்திட்டு போயிட்டே இருங்க. இல்லை உங்க மனைவியிடம் சொல்லிடுவேன். நான் வரேன். இது என் போன் நம்பர். எப்ப வந்து நான் குழந்தையை வாங்கிக்க முடியும்னு சொல்லுங்க.”



அவள் திரும்பிப் போக யத்தனித்தாள். ராகவனுக்கு பயத்தில் உடம்பு சில்லிட்டது. “நில்லு...” என்றான்.



“என்ன? பிள்ளையை கொடுத்திடறீங்களா?”



“அது எப்படி முடியும்? அவனுக்கு மூணு வயசாச்சு. இப்ப போய் வந்து கலாட்டா பண்றீங்களே? என் மனைவி உயிரையே விட்டிடுடுவா?”



“எனக்கு இப்ப தான் விஷயம் தெரிஞ்சது. நவஜீவன் ஆஸ்பத்திரியில் நான் நர்சா பணி புரிய வந்தேன். விசாலம் நடந்த உண்மையை உளறிக் கொட்டினாங்க. நான் தான் அந்த இறந்த பெண்ணின் தங்கை என்று தெரியாமல். நான் அக்கா இறந்த சமயம் துபாயில் வேலை பார்த்திட்டு இருந்தேன். இப்ப தான் இங்கு வந்தேன். உன் அக்கா மகன், ராகவன் என்பவர் கிட்டே தான் வளருதுன்னு சொன்னாங்க. அவங்களுக்கு உங்க விலாசம் அலுவலக விலாசம் எல்லாம் தெரிஞ்சிருக்கு. உங்க அம்மாகிட்டே அந்தப் பிள்ளை எங்க பிள்ளைன்னு சொன்னா உங்க கதி அதோகதி. சித்ராவுக்கு நீங்க டிவோர்ஸ் கொடுக்க வேண்டி வரும். எப்படி வசதி?”



“இத பாருங்க. ஒரு குடும்பத்தை வீணா கலைக்காதீங்க. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க. தரேன். வாங்கிட்டுப் போயிடுங்க. ப்ளீஸ்...”



வாதிட்டுக் கொண்டே நின்றாள் அந்தப் பெண். பிள்ளை தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிதாள். ஒரு வழியாக கடைசியில் சம்மதிப்பது போல் சம்மதித்து ஐந்து லட்சத்துக்கு ஒத்துக் கொண்டாள்.



பணத்தை கொடுத்துவிட்டு முகத்தில் கறியை பூசிக் கொண்டது போல் உட்கார்ந்திருந்தான் ராகவன். அவன் முகத்தில் சிரிப்பு போயிற்று. ஒரு வேளை இவள் பொய் சொல்கிறாளோ என்றும் யோசித்தான். அந்தப் பெண் அம்மா அவனுக்குப் பார்த்தப் பெண் என்பதால் அவள் அம்மாவிடம் ஏதாவது உளறி விடுவாளோ என்று அவனுக்கு கவலை ஆகிவிட்டது. சரி பணத்தை தானே தொலைத்தோம் என்று சமாதானப் படுத்திக் கொண்டான். விசாலதுக்குப் போன் போட்டு



“உங்களால் நான் ஐந்து லட்சம் இழந்தேன். அந்தப் பெண் இனி என்னிடம் வந்து மீண்டும் பணம் கேட்காமல் இருக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க இவ்வளவு கேர்லெஸ் ஆக இருப்பது சரியில்லை. நான் இதுக்கு மேல் மனுஷனாக இருக்க மாட்டேன்.” என்று கத்தினான்.



“இனிமே அவ உங்க பக்கமே வரமாட்டா. நான் பார்த்துக்கிறேன்.” என்று உறுதி மொழி அளித்தாள் விசாலம். கீதாவாக நடித்த அந்தப் பெண்ணின் பெயர் உண்மையில் உஷா. விசலத்தின் தூரத்து சொந்தம். ஐந்து லட்சத்தை இருவரும் பங்கு போட்டுக் கொண்டார்கள். இதோடு விசாலம் திருப்தி அடைந்து விட்டாள். ஆனால் போலி கீதாவுக்கு ஒரு வீபரீத ஆசை வந்தது. உஷாவான அவள் கீதா என்று சொல்லிக் கொண்டு எப்படியாவது ராகவனை அடைந்து விட வேண்டும் என்று கணக்கு போட்டாள். அடிக்கடி ராகவன் அலுவலகம் வந்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினாள். அலுவலகத்தில் யார் இந்தப் பெண் என்று நோண்ட ஆரம்பித்தார்கள். அவளை அலுவலகம் வராதே என்று சொன்னான். போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றால் பிள்ளையை மாற்றின விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்தான். அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தின்டாடினான். அதன் விளைவு அவன் சித்ராவை வீட்டை விட்டுப் போகச் சொன்னான். விசித்திரமான இந்த நடவடிக்கை அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.



மழை நீர் தேங்கலில் கப்பலை மிதக்க விட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்துக் கொண்டே தெருவில் நடந்து கொண்டிருந்தான் ராகவன். காகிதக் கப்பலை அவன் கடலில் மிதக்க விட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான். கடல் போல் பிரச்சனையை அவன் எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவதை நினைத்து அவனுக்கு அவன் மேலேயே இரக்கம் வந்தது. பாவம்...இல்லாத பிரச்சனைக்கு அவன் இரையாகிக் கொண்டிருப்பதை அவன் உணரவில்லை. தீர விசாரிக்கும் நிலைமையில் அவன் இல்லையா? அல்லது அவன் முட்டாளா? என்று அவனுக்கேத் தெரியவில்லை. சித்ரா தனியே துரத்தப்பட்டதும் அந்த போலி கீதா வீட்டுக்கே வர ஆரம்பித்தாள். கீதா மாலை ஆறு மணிக்கு மேல் அவள் வீட்டுக்குப் போனதும் இவள் ராகவனை பார்த்து தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி படுத்த ஆரம்பித்தாள். ராகவன் செய்வதறியாமல் திண்டாடினான். அவன் நாளுக்கு நாள் மன நிம்மதி இழந்து கொண்டிருந்தான்.



கப்பல் மிதக்கும்…
 

sankariappan

Moderator
Staff member
காகிதக் கப்பல்கள்.



அத்தியாயம்---14



ஒரு ஆண் நல்லவனாக இருந்தால் போதும், அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட சில பணத்தாசை பிடித்த பெண்கள் இருக்கிறார்கள். அந்த ரகம் தான் கீதா. நாடகத்தில் நடிக்க வந்த புது நடிகை. அவள் உண்மை பெயர் உஷா என்று ராகவனுக்குத் தெரியாது. இவள் பேர் கீதா தான் என்று அவள் சொன்ன பொய்யை நம்பினான். அடிக்கடி வர ஆரம்பித்தாள். மூன்று வயது பாபுவுக்கு அவள் வருகையின் அர்த்தம் புரியவில்லை. எதற்கு வந்து அப்பாவிடம் சண்டை போடுவது போல் பேசுகிறாள்? அப்பா கெஞ்சுவதும் அவள் கத்துவதும் வாடிக்கை ஆகிவிட்டது. பாபுவுக்கு அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் ஏதோ தப்பாக இருக்கிறது என்று மட்டும் புரிந்தது. அம்மாவிடம் சொன்னால் அப்பா கோபித்துக் கொள்வார் என்று பயந்தான்.



“பாபு...அம்மாக்கிட்டே இதை சொல்லிடாதே...” என்றான்.

பாபு தலையாட்டினான். அடிக்கடி இந்த லேடி வந்து பேசுவதும் அப்பா சமாதானம் செய்வதும் அவனுக்கு பிடிக்கவேயில்லை. அவளை எப்படி துரத்துவது என்று யோசித்தான். ஒரு சீரியலில் கொடுமை படுத்தும் ஒரு சித்தியை ஒரு ஐந்து வயது பையன் சித்தி உக்காரும் நாற்காலியில் குண்டூசிகளை குத்தி வைக்கிறான். சித்தி வந்து உட்கார்ந்து ஆஆ..ஒஒ..என்று கத்துகிறாள். இது மாதிரி செய்தால் என்ன என்று அவன் பிஞ்சு மனம் எண்ணியது. அப்பாவின் டிராவிலிருந்து குண்டூசிகளை எடுத்து ஒரு நாள் அவன் குத்தி வைக்க உஷா அதில் உட்கார்ந்து வலி பொறுக்க மாட்டாமல் அலறினாள்.



“பாபு..நீயா இப்படி செஞ்சே? தப்பில்லையா?” என்றாள். அப்பொழுது ராகவன் இன்னும் அலுவலகத்திலிருந்து வரவில்லை.



“நீ எதுக்கு அப்பாவோட சண்டை போடறே? நீ போயிடு....கோ...”



“அப்படி போகமுடியாது செல்லம். ஏன்னா நான் உன் அம்மா.”



“சீ.....நீ பொய் சொல்றே. சித்ரா தான் என் அம்மா.”



“சித்ராவோட குழந்தை இறந்து போச்சு. என் அக்கா இறந்து போச்சு. நீ அவ பெத்த குழந்தை. உன்னை மாத்தி வச்சிட்டாங்க. உனக்காகத் தான் போராடறேன். நான் உன் சித்திடா...”



அனைத்துக் கொள்ள முயன்றாள். பாபு உதறிக் கொண்டு போனான்.

அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் சித்தி என்று அவள் சொன்னது மட்டும் புரிந்தது. சித்திகள் பொல்லாதவர்கள் என்று அந்த சீரியலில் வந்ததை வைத்து இவன் அவளை கெட்டவள் என்று முடிவு செய்தான். அவளுக்கு ஏதாவது தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான். அவள் சூடிதாரில் ஒரு நாள் இங்க்கை கொட்டினான். இன்னொரு நாள் சின்ன கத்திரி வைத்து அவள் புடவையின் முந்தியை கிழித்தான்.



சித்ரா அவளை அறியாமல் தன் மகனுக்கு தீமை ஒன்றை செய்து கொண்டிருந்தாள். அவனை வைத்துக் கொண்டு அந்த பொல்லாத சித்தி சீரியலை பார்த்தாள். அதை பார்த்துக் கொண்டிருந்த அந்த பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் எழுந்தது. உஷாவை அவன் அதில் காட்டியபடி இம்சை பண்ண ஆரம்பித்தான். வழியில் எண்ணையை கொட்டினான். உஷா வழுக்கி விழுந்தாள். தண்ணீரை அவள் முகத்தில் விசிறி அடித்தான். இப்படி அவன் செய்த குட்டி குட்டி இம்சைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவள் வந்து கொண்டு தான் இருந்தாள். ராகவன் அலுவலகம் விட்டு வரும் முன் நடக்கும் இந்த சில்மிஷங்கள் அவனுக்குத் தெரியாது. சித்ராவுக்கும் தெரியாது. பாபுவின் நாலாவது பிறந்த நாளின் முந்திய தினம் உஷா வந்து

பாபுவுக்கு கேக் கொடுத்தாள்.



“இத பார்...இன்று தான் கடைசி நாள். உன் அப்பா சம்மதிக்கலைன்னா நான் அவரை கொன்று விடுவேன் ஜாக்கிரதை! உன் அப்பாவிடம் சொல்லிவிடு.” என்று விட்டுப் போனாள். பாபுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.



ஒரு நாள் அதிகாலையிலே வந்துவிட்டாள் உஷா. சித்ரா வாக்கிங் போயிருந்தாள். ராகவன் அவளை துரத்தினான்.



“கீதா போயிடு..என்னால் உன்னை கல்யாணம் பண்ண முடியாது என்று தெளிவா சொல்லிட்டேன். பாவம் சித்ரா உன் லூட்டியால் அவள் வீட்டை விட்டே போய்விட்டாள். திஸ் இஸ் த லிமிட். மரியாதையா நீ ஓடிடு...என்னால் தாங்க முடியலை.”



“அப்ப...சரி உன் அம்மாவிடம் பாபு உன் குழந்தை இல்லன்னு சொல்லிடறேன். அவங்க உன் சித்ராவை துரத்திடுவாங்க. அதுக்கும் நீ மசியலைன்னா நீ செய்த திருட்டுத்தனத்தை..பிள்ளையை மாற்றி என் அக்கா குழந்தையை எடுத்துக்கிட்டதை அம்பலப்படுத்துவேன். ஜெயிலுக்குப் போ களி தின்னு...”



பாபு இத பார்த்து ஆத்திரம் கொண்டான். டைனிங் டேபிள் மேல் இருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு வந்து உஷாவை குத்த முயன்றான். அந்த சீரியலில் அந்தப் பையன் அப்படித்தான் செய்தான். சித்தி பயந்து திருந்துகிறாள். நாமும் அப்படி செய்தால் இவள் ஒடிவிடுவாள். அப்பாவை தொல்லை பண்ண மாட்டாள் என்று கணக்கு போட்டு கத்தியை பலம் கொன்ட மட்டும் ஓங்கினான். உஷா மேல் விழ வேண்டிய கத்திக் குத்து ராகவன் மேல் விழுந்தது. உஷா



“பாவி..என்ன காரியம் செஞ்சிட்டே? உன் அப்பன் ஜெயிலுக்கு போறதுகுப் பதிலா நீ போகப் போறே...” என்று கத்திவிட்டு தலை தெறிக்க ஓடிவிட்டாள். ராகவன் மகனிடம் சொன்னான்.



“பாபு...பயப்படாதே. அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ போய் தூங்கு. அம்மா இப்போ வந்திடுவா....போ...போ...”

அவசரபப்டுதினான். “ப்பா...ப்பா...ப...ய....மா ஆ ஆ ...”



“பயப்படாதே அப்பா இருக்கேன். நீ உன் படுக்கையில் படுத்து தூங்கற மாதிரி கிட...மத்ததை நான் பார்த்துக்கிறேன்...போ போ.”



அவன் நெஞ்சில் ரத்தம் வடிந்தது. பாபு தன் அறைக்குப் போய் படுத்தான். அவனுக்கு பயத்தில் ஒண்ணுக்கு வந்தது. மலமும் கழித்துவிட்டான். சுரம் வந்துவிட்டது போல் உடல் உள்ளுக்குள் சுட்டது. கடவுளே...இப்ப என்ன பண்றது.? அம்மா சித்ரா வந்தால் தேவலை. சித்ரா வந்தாள். அப்புறம் நடந்ததெல்லாம் ஒரு கனவு மாதிரி இருந்தது பாபுவுக்கு. ஆனால் அதன் பிறகு அந்தக் குரங்கு உஷாவைக் காணவில்லை. அது தான் அவனுக்கு பெரிய

ஆறுதலாக இருந்தது.



ராகவன் தன்னைத் தானே குத்திக் கொண்டதாகச் சொல்லி பாபுவை காப்பாற்றி விட்டான் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் முரளி அவனிடம் சொன்னான்.



“ராகவன் நடந்ததை என்னால் யூகிக்க முடிகிறது. அந்த அதிகாலை நேரத்தில் ஒரு பெண் உங்க வீட்டை விட்டு தலை தெறிக்க ஓடினாள் என்று ஒரு ஆட்டோ டிரைவர் சாட்சி சொன்னார். அதை வைத்து அந்தப் பெண்ணை நாங்க பிடித்துவிட்டோம். அவளை விசாரித்ததில் எல்லா உண்மையும் தெரிந்தது. ஆனால்...கத்தியில் உங்க கைரேகை இருந்தாலும் உங்க மகனின் கைரேகையும் இருந்தது. சொல்லுங்க என்னாச்சு? நீங்க நடந்ததை சொன்னா நல்லது...” ராகவன் இதை எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டான். சமாளித்துக் கொண்டு



“நீங்க ஏதோ தப்பா சொல்றீங்க....அவன் கைரேகை அதில் இருக்க வாய்பேயில்லை. நீங்க ரொம்ப ஓவராப் போறீங்க...”



இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சித்ரா வந்துவிட்டாள். அவளிடம் பாபுவைப் பற்றி சொல்லாமல் மற்ற விஷயங்களை சொல்லவும் சித்ரா எதவும் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அழுது கொண்டே வெளியே ஓடிவிட்டாள். அவளிடம் உண்மையை நன்கு விளக்கி சொல்லலாம்...பாபு உங்க குழந்தை தான். அந்தப் விசாலமும் மாலினியும் உஷாவும் அடித்த கூத்து...நீங்க ராகவனை தப்பா நினைச்சிட்டீங்க...என்று விளக்க முயன்று...அவள் ஓட முரளி பின் தொடர்ந்து போயும் அவளைப் பிடிக்க முடியவில்லை. இங்கே அவசரமாக ஓடி வந்து பார்த்தால் ராகவன் அவன் பெட்டில் இல்லை.

தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டான் முரளி.



பவானி ஒன்றும் செய்யத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தாள். ராகவனைக் காணவில்லை என்றதும் அவள் தாய் மனம் துடித்தது.



“தப்பு பண்ணிட்டேன். அவனை இம்சை பண்ணிட்டேன்.”

முரளி அவளிடம் எல்லாவற்றையும் ஒப்புவித்து விட்டான்.



“அம்மா...அந்த உஷா பிடிபட்டுவிட்டாள். நர்ஸ் விசாலம் வாக்கு மூலம் கொடுத்திட்டா. பாருங்க இவ்வளவு பிரச்சனைக்கும் நீங்க தான் அடிப்படை காரணம். இரண்டு மருமகள் உங்களுக்கு. இருவரையும் சமமாக நினைக்கவேண்டிய பெரியவங்க நீங்க....”



“கடவுளே..இப்படியெல்லாம் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை.

என் மகன் என்னிடம் மனம் விட்டு பேசியிருந்தால் இப்படி நடக்குமா.?” அங்கு தான் சித்ரா நின்று கொண்டிருந்தாள்.



“சார்..இவங்க மருமகளுக்குள்ளே பாகு பாடு பார்க்கலை மகன்களுக்குள்ளேயே பாகுபாடு பார்த்தாங்க. மூத்த மகன் என்றால் ஒரு சலுகை இளைய மகன் என்றால் ஒரு இளக்காரம். ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு...”



“ஐயோ..அப்படியெல்லாம் இல்லைடி. ஏதோ அப்படி செஞ்சிட்டேன்..”



“ஏதோ ஒன்னும் செய்யலை. தெரிந்து தான் செஞ்சிங்க. உங்களாலே நான் என் கணவரை சந்தேகப் பட்டுட்டேன். பாவம் அப்பாவி மனுஷன். இப்ப எங்கே போனாரோ தெரியலை?. உங்க மூட நம்பிக்கையை வச்சு உங்க அருமை அண்ணன் மகள் நல்லாவே உங்களை மூளை சலவை செய்திட்டா. முரளி சார் இல்லேன்னா என் வாழ்க்கை என்னவாகி இருக்கும்.?”



பவானி தலை குனிந்தாள். நிலமை முத்திப் போனதை புரிந்து கொன்ட கவிதா. “சித்ரா..நடந்தது நடந்துவிட்டது. நான் ஸாரி கேட்டுக்கிறேன். நமக்குள்ளே இப்படி சண்டை அடிச்சுக்கிட்டு...ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசாமல் இருந்ததால்...அந்த விசாலம் பணம் பறிக்க திட்டம் போட்டு ஜெய்சிட்டா. அந்த மூதேவி உஷா, கீதான்னு ஏமாத்தி உன் புருஷனை கல்யாணம் பண்ணச் சொல்லி வற்புறுத்தி இருக்கா. பிள்ளையை அவ அக்கா பிள்ளை என்று நாடகமாடியிருக்கா.”



“நம்ம குடும்பத்து மனுஷாளை அடுத்தவர் கிட்டே விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு இப்ப தான் புரிஞ்சுக்கிட்டேன். என்னால் வந்தது தான் எல்லாம். என் பேரனையே அது இல்லாத ஒரு பெண்ணின் குழந்தை என்று சொல்ல அந்த நர்சுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்கும்? சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்து செத்துப் போச்சுன்னு சொன்னாளே....ராகவன் இதை எப்படி நம்பினான்?...”



“எல்லாம் நீங்க பண்ண ஆர்ப்பாட்டத்தில் தான். பொம்பளைப் புள்ளைன்னா வேண்டாம்....வீட்டுக்கு கூட்டி வராதே...அப்படி இப்படின்னு ஆட்டம் ஆடலை? அதுக்கு பயந்து தான் அவர் அந்த பச்சை பொய்யை நம்பினார். அம்மாவோட அன்பு வேணும்னு எவ்வளவு ஏங்கினார் தெரியுமா? நீங்க பாராமுகமா இருந்ததை அவரால் தாங்க முடியலை. நல்ல வேளை ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது....”



ராகவன் ஆட்டோவில் வந்து இறங்கினான். அந்த வீட்டின் முன் அவன் நின்று கவனிப்பதை பார்த்து....அடுத்த வீட்டு அம்மாள் கேட்டாள்.

“யாருப்பா நீ? யாரை தேடறே.?”



“இங்கே மாலினின்னு...”



“ஒ...அவ வீடு தான். அமெரிக்காவிலே வேலை பார்க்கிறா. ரொம்ப நல்ல பொண்ணு. உள்ளே தான் இருக்கா. போய் பாரு.”



ராகவன் போய் பெல்லை அடித்தான். இளம் பெண் ஒருத்தி வந்து கதவு திறந்தாள். அது மாலினி தான் என்று அவன் புரிந்து கொண்டான். அவன் ஆஸ்பத்திரியை விட்டு ஓடிப் போய் விசாலத்தைப் பார்த்தான். அவள் தான் மாலினியை மாட்டி விட்டு தப்பிக்கலாம் என்று அவள் வீட்டு விலாசமும் அவள் புகைப்படமும் கொடுத்தாள். அவள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறாள் என்றும் சொன்னாள். ராகவன் கேட்டான் “நீங்க மாலினி தானே?”



“ஆமா...நீங்க யாரு.?”



“வெண்ணை...ஏண்டி நீ தானே எல்லாத்துக்கும் காரணம்..” ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான்.



“எதுக்கு என்ன அறஞ்சீங்க? நீங்க யாரு என்னை அடிக்கிறதுக்கு?”



“நானா? என் மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை செத்துப் போச்சுன்னு சொல்லி எங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை

உன்னோட அக்கா குழந்தைன்னு சொல்லி..பெரிய தியாகி மாதிரி எனக்கு கொடுத்த வள்ளல் தானே நீ...உனக்கு ஒரு அறை பத்தாது..”



மாலினிக்கு புரிந்தது. இது அந்த ராகவன். அய்யோ இவனுக்கு தெரிந்துவிட்டாதா?” அவள் மனம் சஞ்சலம் அடைந்தது.



“ஸாரி ராகவன் சார்...உள்ளே வாங்க..”



“நான் எதுக்கு உள்ளே வரணும்.? போலிஸ் வரும்...”



“சார்...சார்..நான் ஒரு ஏழை..அநாதை..”



“அமெரிக்கா போய் படித்து....பெரிய வேலையில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு. இருக்கும் நீ ஏழைன்னு சொன்னா எப்படி.?”



“சார்...சார்...நான் அநாதை விடுதியில் தான் வளர்ந்தேன். அமெரிக்கா போக பணம் தேவையா இருந்தது. அவசரம். எங்கும் கிடைக்கலை. அதான் இப்படி ஒரு கொடூரத்தை பண்ணிட்டேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். நான் செய்த கொடூரம் எனக்கு உரைச்சது. சம்பாதிக்க ஆரம்பிச்சதும் நான் உங்க கிட்டே வாங்கின பணத்தை விசால அக்காவுக்கு அனுப்பி உங்ககிட்டே கொடுத்திடச் சொன்னேன். அவங்களும் கொடுதிட்டேன்னு சொன்னாங்க. என்னோட குற்ற உணர்வு அப்புறம் தான் போச்சு...என்னை மன்னிச்சிடுங்க சார். என் எதிர் காலத்தை ஸ்பாயில் பண்ணிடாதீங்க ப்ளீஸ்...”



அவள் ராகவனின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினாள்.



போலிஸ் இன்ஸ்பெக்டர் ராகுல் அவனுக்கு போன் செய்தார். அவன் போனதும் சொன்னார்.



“சார்...முக்கியமானவங்களான நர்ஸ் விசாலம். அந்த உஷா எல்லோரையும் அரெஸ்ட் பண்ணி லாக்-அப்பில் தள்ளியாச்சு. ஒரு கம்பளைன்ட் எழுதிக் கொடுங்க. அப்புறம் சார்..வந்து அவங்க என்ன சொல்றாங்க தெரியுமா? இதுக்கு காரணகர்த்தா மாலினின்னு ஒரு பொண்ணு தானாம். அந்த ப்ராடையும் அரெஸ்ட் பண்ணனும்...எப்படிபட்ட தில்லாலங்கடி வேலை பார்த்திருக்காங்க பார்த்தீங்களா? சரி சார்...நான் அந்த மாலினி...”



“இன்ஸ்பெக்டர்...அந்த மாலினிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவங்க பொய் சொல்றாங்க. குழந்தையை மாத்தினோம்னு பொய் சொல்லி பணம் பறிச்சிருக்காங்க. அப்புறம் அதோட நிக்காம கீதான்னு சொல்லிக்கிட்டு இந்த ஆஷாவை அனுப்பி மேலும் பணம் பறிக்க சொன்னது இந்த விசாலம் தான். அவளும் என் முட்டாள்தனத்தை அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு ப்ளே பண்ணிட்டா. என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளனும்னு குழந்தையை மாத்தினதை போலீசிடம் சொல்வேன்னு பயமுறுத்திட்டா. இவங்களை உள்ளே தள்ளுங்க இன்ஸ்பெக்டர்....மனுஷங்களோட உணர்வுகளோட விளையாடிட்டாங்க. வீணா அவள் மேலே பழி போடறாங்க. அதுக்கு ஆதாரம் இருக்கா கேளுங்க.”



இன்ஸ்பெக்டர் ராகவன் சொன்னது சரி தான் என்று உணர்ந்து மாலினியை கைதி செய்யாமல் விட்டு விட்டார். விசாலத்திடம் சென்று ராகவன் பேசினான்.



“உன் பணத் தேவைக்கு என் ஆதார ஸ்ருதியை பிடுங்க பார்த்தியே! நீயெல்லாம் இந்த நர்ஸ் தொழிலுக்கே ஒரு களங்கம். அவமானம். உஷா....அப்படின்னா விடியல்ன்னு அர்த்தம். அடுத்தவங்க வாழ்க்கையின் அஸ்தமனத்துக்கு வழி பண்ணிய உனக்கு இந்த அழகான பெயரா? நீங்க கம்பி என்னும் போது....ஒன்னை ஞாபகப் படுத்திக்கோங்க....வெளியே வரும் போது பெயருக்கு ஏத்தா மாதிரி நடந்துக்கோங்க. விசாலமான மனசோட, சூரிய உதயம் போன்ற வாழ்க்கையை வாழ முயற்சி பண்ணுங்க. செஞ்ச பாவம் போதும். திருந்தி வாழுங்க....உங்களை மன்னிக்கவே மாட்டேன்...”



விசாலமும் உஷாவும் அம்மாவாசை இருட்டை முகத்தில் பூசிக் கொண்டு, தார் சிலை போல் நின்றனர். கருப்பு மனசுகளுக்கு வெளுத்த தோல் இருந்து என்ன பிரயோஜனம்?



கப்பல் மிதக்கும்.
 

sankariappan

Moderator
Staff member
காகிதக் கப்பல்கள்.

அத்தியாயம்—15



வீடு என்றால் அது மனசுக்கு இதம் தரனும். பாதுகாப்பான இடம் இது என்று தோன்ற வேண்டும். அப்படியல்லாமல் அதுவே சிறை மாதிரி இருந்தால் அப்புறம் அந்தக் குடும்பக் கடலில் காகிதக் கப்பல்கள் கூட ஜோராகப் பயணம் செய்ய முடியும். செய்து விட்டதே! முரளி என்ற மனிதன் இல்லாவிட்டால் காகிதக் கப்பல் கரையை அடைத்திருக்கும்.

மாலினியை அவன் மன்னித்து விட்டான். அவள் படிக்க வேண்டி பிச்சை எடுக்க அவமானப் பட்டு திருட்டு வழியில் பணம் பெற்றாள். செய்த தவறு உணர்ந்து அதை திரும்பக் கொடுத்திருக்கிறாள். ஒழிந்து போகட்டும். சின்னப் பெண் அவள் எதிர் காலத்தை அவன் வீணாக்க விரும்பவில்லை. ஆனால் இந்த உஷாவும் விசாலமும் விட்டால் அவனை காலம் பூராவாக ப்ளாக் மெயில் பண்ணியிருப்பார்கள்.



முரளி அவனை பிடித்துக் கொண்டான்.

“ராகவன் சார்....கத்தியில் உங்க மகனின் கைரேகையை நீங்க அழிச்சிருக்கீங்க. லேசா தெரிந்தது. நான் அதை முழுசா அழிச்சிட்டேன். யாருக்கும் அது தெரியாது. கைரேகை ரிப்போர்ட் கொடுத்த மருத்துவரிடம் கேட்டுக் கொண்டேன். சின்னப் பையன்..வீட்டில் நடந்த களேபரங்களில் உணர்ச்சி வயப்பட்டு அப்படி செய்திட்டான். அதை மறச்சிடலாம்னு கேட்டுக் கிட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் அதை உங்களிடமிருந்து நான் மறைக்க

விரும்பலை. நான் யூகிச்சேன். அவன் அந்த உஷாவை குத்த வந்திருப்பான். அது உங்கள் மேல் பட்டுவிட்டது. ஆம் ஐ ரைட்.?”



ராகவன் பதில் சொல்லாமல் தலை குனித்தான். அந்த மௌனம் அவன் ஒப்புக் கொண்டதுக்கு அடையாளமாயிற்று.



“ரொம்ப நன்றி மிஸ்டர் முரளிதரன்....” கண்ணீர் வழிய ராகவன் முரளியின் கையை பிடித்துக் கொண்டான்.



“இதை நான் வாழ் நாள் முழுக்க மறக்க மாட்டேன்.”



“நீங்க இன்னொன்னும் மறக்க கூடாது. உங்கள் மகனுக்கு அவன் தவறை புரிய வைக்கணும். நியாயங்களை வன்முறையால் அடையக் கூடாதுன்னு அட்வைஸ் பண்ணனும். அவன் நல்ல பிரஜாயா வளரணும். இது என்ன வேண்டுகோள்.”



“கண்டிப்பா...நன்றி நன்றி...ஆயிரம் நன்றி முரளி சார்...”

இன்வெஸ்ட்டிகேட்டிங் அதிகாரி என்றால் அவர் மனம் என்ன இரும்பாலையா செஞ்சிருக்கும்? அவருக்கும் நல்லது கேட்டது தெரியும். குழந்தைகள் சைக்காலாஜி தெருஞ்சு வச்சிருக்கார்.



வீடு ஒளி மயமாக இருந்தது. பின்னே கார்திகை ஆச்சே. சித்ரா வீடு முழுக்க அகல் விளக்கு ஏற்றி வைத்திருந்தாள். தீபக் கோலம் அவனை வரவேற்றது. உள்ளே அவல் உருண்டை செய்யும் வாசனை ஊரை தூக்கிற்று. அதிரசமும் அவள் பொறியும் கூட தட்டில் நிறைந்திருந்தது. பவானி பூஜை செய்ய அனைவரும் கும்பிட்டனர்.

கவிதா அவள் கணவர் பிள்ளைகள், பாபு...சித்ரா—ராகவன் அனைவரும் பவானி காலில் விழுந்து ஆசி வாங்கினர். ராகவன் அம்மாவிடம் சொன்னான்.



“அம்மா..உனக்கு என் மேல் கோபமில்லையே?”

பவானி முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டாள்.



“நீ தான் என் மேல் கோபப்படணும். ஒரு குடும்பம் ஒற்றுமையாக இல்லாவிட்டால் கண்ட கழுதையும் வந்து உதைக்கும். உன் அண்ணனும் கவிதாவும் தான் உசத்தி என்று நான் பண்ணிய கூத்து தான் இந்த சரிவுக்கு காரணம். நல்ல வேளை கடவுள் மாதிரி அந்த முரளி தம்பி வந்து காப்பாத்தினார்.



பட்டுப் பாவாடையும் சட்டையுமாக காதில் ஜிமிக்கியும் காலில் கொலுசுமாக நின்ற தன் பெண் குழந்தைகளை கவிதா கூப்பிட்டாள்.



“சித்தப்பா சித்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கோங்க.”

அவளுக்கும் புத்தி வந்தது. கொழுந்தன் குடும்பத்தையும் மதிக்க வேண்டும் என்று. பாபுவை எடுத்து அனைத்துக் கொண்டாள்.

கொஞ்சம் அன்பும் கொஞ்சம் புரிதலும் இருந்தாலே போதும் அன்னியர் வந்து வாலாட்ட முடியாது. பிறரிடம் சொந்தங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற படத்தை விசாலமும் மாலினியும் உஷாவும் கற்றுக் கொடுத்து விட்டனர்.



“ராகவா...கூடிய சீக்கிரம் உனக்கு என்னை மாதிரி அழகான பெண் குழந்தை பிறக்கணும்மடா..” என்று வாய் நிறைய ஆசீர்வாதம் பண்ணினாள் பவானி. சித்ராவுக்கு வெட்கம் வந்து அவள் உள்ளே சென்று அதிரசம் எடுக்கும் சாக்கில் ஒளிந்து கொண்டாள்.



சித்ராவின் அம்மா அப்பா தங்கை எல்லோருக்கும் சந்தோசம்.

“அக்கா..உன்னை என்னென்னவோ திட்டிட்டேன். அறை வேக்காடுன்னு

புரிஞ்சுக் கிட்டேன். ஸாரி அக்கா. உனக்கு உன் கணவர் பற்றி தெரிந்திருக்கு. அதான் பொறுமையாக இருந்தே.”



“நானும் கடைசியில் பொறுமை இழந்திட்டேன். பாபுவை நான் பெறவில்லை என்று அவர் சொன்னதும் பாபு அந்த உஷா இங்கு அடிக்கடி வருகிறாள் என்று சொன்னதும் அதை உண்மை என்று எண்ணி தடுமாறிவிட்டேன். முரளி சார் இல்லை என்றால் எங்கள் கல்யாணம் பிரேக்-அப் ஆகியிருக்கும்.”



“கடவுள் அப்படி விட மாட்டாரம்மா. உண்மை எப்போதும் ஊமையாக இருக்குமா? மாப்பிள்ளை பாவம் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார்...இனிமே நாம கண்ட வதந்தியை நம்பக் கூடாது. தீர விசாரிக்கணும். மனம் விட்டு பேசணும்.”



“அது தான் உண்மை. அவர் மட்டும் மனம் விட்டு எல்லாம் சொல்லியிருந்தா இதுவரை வந்திருக்காது. ஓட்ட கப்பலை அதுவும் காகிதக் கப்பலை வைத்துக் கொண்டு கடலில் பிரயாணம் செய்ற துணிச்சல் வேறு யாருக்கு வரும்? எனக்கு ஒரு பாட்டு நியாபகம் வருது. ‘காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்.

மணல் எடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்...’

அப்படித்தான் செய்திருக்கார் உங்க மாப்பிள்ளை. சரியான பிரகஸ்பதி..”



“அக்கா...அத்தான் இங்கே இல்லன்னு தைரியமா சொல்றியா?”



“எனக்கேன் பயம்? நேத்தே அவர் கிட்டே சொல்லிட்டேன்..அவர் சிரிச்சிட்டார். இனிமே நீ தான் மாஸ்டர் அப்படின்னு சொல்லிட்டார்.”



அனைவரும் சிரித்த போது அங்கே வந்த ராகவனும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான். ரொம்ப நாளைக்கப்புறம் அவர்கள் வீட்டில் வசந்தம் வீசியது. இலையுதிர் காலம் ஓடிவிட்டது.



நிறைந்தது.





சங்கரி அப்பன்







.
 
Top