கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜா பாட்டி கைவைத்தியம்...திரி

Status
Not open for further replies.

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 5



போன எபியில் வெந்தயத்தைப் பற்றி இன்னும் நிறைய சொல்லறேன்னு சொன்னேன் இல்லையா.. இதோ உங்களுக்கு, எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்ல வந்திருக்கேன்..




வெந்தயம் நம் அழகை மேம்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கிறது.



எப்படின்னு நீங்க கேட்பது புரியுது..



** தொடர்ந்து வெந்தயப்பொடியை எடுத்துக்கொள்வதால் அஜீரணக்கோளாறுகள் நீங்கி, நம் உடலையும் வனப்புடன் வைக்க உதவும். வெந்தயக்களியும் உடல் குளிர்ச்சிக்கு உதவுகிறது. கோடைக்காலத்தில் உடல் சூட்டிற்கு வாரம் ஒரு முறை வெந்தயக்களியை செய்து உண்ணலாம். வெந்தயம் உட்கொள்வதால் உடம்பில் இருக்கும் கசடுகள் நீங்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.



** உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளும் வெந்தயம் உடலுக்கு நன்மை அளிப்பது போல வெளிப்புற தோற்றத்திற்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்..



**முகப்பொலிவுக்கு நல்ல பேஸ் பேக் இது.., முகத்திற்கான களிம்பாகவும் தடவலாம்.. ‘வைட்டமின் சி மற்றும் கே’ அதிகளவில் இருக்கும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பாலில் கலந்து தடவி வந்தால், உங்கள் முகப்பொலிவு கூடுவதுடன், முகத்தில் வரும் பருக்கள், மற்றும் கருமையையும் நீக்குகிறது.



** அடுத்ததாக.. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு அழகு தரக்கூடியது அவர்களின் தலைமுடிதானே..



இப்போது இருக்கும் அவசர காலகட்டத்தில், தலைமுடியைப் பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கு நம்மில் பலருக்கு..



தலைமுடி உதிருவது, பொடுகு, வழுக்கை.. இப்படி எத்தனையோ பிரச்சனைகள்..



இது எல்லாவற்றிர்க்கும் நல்ல தீர்வு வெந்தயம் னு சொல்லலாம் பிள்ளைங்களா..



ஏற்கனவே நிறைய பேர் வெந்தயத்தைப் போட்டு தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி அந்த எண்ணையைத் தலைக்கு உபயோகப்படுத்தி இருப்பீர்கள்..



இன்னும் சிலர் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலையில் பேக் மாதிரி போட்டுக் குளித்தும் பார்த்திருப்பீர்கள்.. வெந்தயமே நல்ல கண்டிஷனர்தான்.. ஷாம்புக்கு பதில் இதை எடுத்துக்கொள்ளலாம்.. தலைமுடியை மிருதுவாக்கி, நன்றாக பளபளக்க வைக்கும்..



இது எல்லாமே நல்ல சிகிச்சைதான்..



இப்போ நான் இன்னொரு விதமாய் வெந்தயத்தை எப்படி தலைக்குப் பயன்படுத்துவது என்பதை சொல்லறேன்.. நிச்சயம் இது ஒரு நல்ல தீர்வாய் இருக்கும் உங்கள் அனைத்துப் பிரச்சனைக்கு..



** அலோவேரா.. சோற்றுக்கற்றாழை உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்.. அதன் பயன்களும் ஏராளம்.. அலோவேராவைப் பற்றி தனியாக இன்னொரு எபியில் சொல்கிறேன். இப்போ, அத்தோடு வெந்தயம் சேரும் பொழுது எப்படி நல்ல பலனைக் கொடுக்கிறது என்பதை இப்போ பார்ப்போம்.



சோற்றுக்கற்றாழை ஒரு பெரிய இலை எடுத்துக்கொள்ளுங்கள்.. அதன் முட்பகுதிகளை லேசாக கீறி விடுங்கள்.. மெல்ல மேலிருந்து கீழ் வரை இரண்டாகப் பிளந்து கொள்ளுங்கள்.. அதன் நடுவில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை உள்ளே வைத்து அப்படியே நூலால் லேசாக கட்டிவிடுங்கள்.. இரண்டு நாட்கள் அப்படியே காற்றோட்டமான இடத்தில் வைத்து விடுங்கள்..



இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெந்தயம் நன்றாக ஊறி இருக்கும்.. அந்த வெந்தயத்த்தோடு சோற்றுக்கற்றாழையையும் சேர்த்து சிறிது சிறிதாக நறுக்கி நல்ல தேங்காய் எண்ணெய்யோடு போட்டுக் காய்ச்சி, வடிகட்டி தலையில் தடவி வர, முடி சம்மந்தமான எல்லா பிரச்சனைகளும் நிச்சயம் தீரும். 100 மில்லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம் இந்த அளவிற்கு..



சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் நீங்கள் போட்டுக் காய்ச்சலாம். எதுவும் ஆகாது. ஆனால் நன்றாக சலசலப்பு நீங்கும் வரை காய்ச்ச வேண்டும்.. ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து அப்படியே அதை ஆறவிட்டு, நன்றாக வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் வைத்து உபயோகப்படுத்துங்கள்..



நாள்பட, இந்த எண்ணெய் நன்றாகவே இருக்கும். கெட்டுப் போகாது. தலைமுடி பிரச்சனைகளுக்கு நிச்சயம் இந்த சிகிச்சை நல்ல பயனைத் தருவதோடு, உங்கள் முடியும் கருப்பாக, வேகமாக வளரத் தொடங்கும்..



முயற்சி செய்து பாருங்கள் பிள்ளைங்களா..



சரோஜா பாட்டி கைவைத்தியம் பிடிச்சிருந்தா, ஒரு லைக்கோ இல்லை கமென்ட்சோ போட்டுடுட்டு போங்க மறக்காமல்..



நிச்சயம் இன்னொரு கைவைத்தியத்தோடு சீக்கிரமே உங்களைச் சந்திக்க வருவேன்..



 

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 6



அஜீரணம் மற்றும் புளித்த ஏப்பமா?



இன்று நம்மில் பலருக்கு இந்த அஜீரணக்கோளாறு ஏற்படுகிறது.


அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.. முக்கிய காரணியாக இருப்பது தூக்கமின்மையும், அதிகப்படியாக உண்டு செரிமாணம் ஆகாமல் தவிப்பதும்தான். உணவு உண்டு, போதிய தண்ணீர் எடுத்துக்கொளாததும் ஒரு காரணம்தான்..


இன்று இந்த அஜீரணகோளாறுகளைப் போக்க, சரோஜாபாட்டி, சில எளிய கைவைத்தியங்களை உங்களுக்குச் சொல்லப் போறேன்..



** ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு இஞ்சி, சீரகம், கறிவேப்பில்லை மூன்றையும் போட்டு கொதிக்கவிட்டு பின் வடிகட்டி அந்த நீரைக் குடித்தால் நிச்சயம் அஜீரணம் பறந்து போயிடும்.



** சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம், இந்துப்பு எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொண்டு, சீரகம் மட்டும் இரண்டளவு போட்டு வறுத்துப் பொடி செய்து, சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் எந்தமாதிரி அஜீரணமும் குணப்படும்.



** பிரண்டைத் துவையல் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் தரும்.



** உணவு உண்டபின் வெற்றிலைப் போட்டுக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால், உண்ட உணவு நன்கு செரிமாணமாகும்.



** ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எலிமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, சுவைக்கு சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டாலும், அஜீரணக் கோளாறில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.



** ஒரு டம்ளர் மோரில் பெருங்காயத்தையும், உப்பையும் போட்டு கலக்கிக் குடிக்கலாம்.



** ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தைக் கையால் நசுக்கிப் போட்டு கலந்து குடித்தாலும், செரிமாணப்பிரச்சனைகள் அனைத்தும் சட்டென நீங்கும்.



** ஒரு துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, வாயில் போட்டு மெதுவாக தன் சாற்றினை விழுங்கினாலும், செரிமாணப் பிரச்சனைகள் போய்விடும்.



இன்னிக்கு கொடுத்திருக்கும் கைவைத்தியக் குறிப்புகள் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்..



அடுத்து வேறு ஒரு கைவைத்தியக்குறிப்போடு உங்களை மீண்டும் சந்திக்க வருகிறேன்..











 
Last edited:

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 7



இன்றைய சரோஜா பாட்டி கைவைத்தியத்தில் தலைவலியைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்…


முதல்ல தலைவலிக்கு என்ன காரணம் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கோங்க..


சரியான தூக்கமில்லாமை, ஏதாவது ஒவ்வாமை, அதிகப்படியான உணவு உண்டு ஜீரணமாகாமல் இருப்பது, அதிகமான மன அழுத்தம், சக்கரை அளவில் வேறுபாடு, அளவுக்கதிகமான வேலை, சளியால் தலைவலி, குடிபழக்கம், புகைபிடித்தல் இப்படி பல காரணங்கள் தலைவலிக்கு நாம் சொல்லலாம்.


தலைவலிக்கான மருந்து நம்ம வீட்டிலேயே இருக்குங்க.. தலைவலி வந்த உடனேயே மாத்திரை எடுத்துக்கொள்ளாமல், நமக்கு தெரிஞ்ச கைவைத்தியத்தை முதல்ல செஞ்சிப் பார்க்கணும்.. ரொம்ப முடியலைன்னா மாத்திரை, மருந்து அப்புறம் டாக்டர்கிட்ட போறதெல்லாம் இருக்கவே இருக்கு..


இதோ உங்களுக்காக சில கைவைத்தியத்தை இப்போ பகிர்ந்து கொள்கிறேன்.


** ஏலக்காய் போட்டு ஒரு கப் தேநீர் சுடாகக் குடிக்கலாம்.


** ஏலக்காய் 4, கிராம்பு 4, வெத்திலை 3 எல்லாவற்றையும் பாலில் அரைத்து சூடாக்கி நெய்யில் குழைத்துப் பற்று போட்டால், தலைவலியோடு சளி பிடித்திருந்தால் அப்படியே ஓடிவிடும்.


** சுக்குப்பொடியோ அல்லது சுக்கையோ தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து நெற்றி மீது பற்று போட்டாலும், தலைவலி எங்கே எங்கேன்னு காணாமல் போகும்.. ஆனால் சுக்கின் எரிச்சலை கொஞ்சம் தாங்கிக் கொள்ளணும்.


** நிறைய வெந்நீர் குடியுங்கள்.


** கொதிக்கும் நீரில் காப்பிப்பொடியை போட்டு ஆவி பிடிச்சாலும், நிச்சயம் பலன் இருக்கும்.


** கிராம்பை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து குழைத்து நெற்றியில் போட்டுக்கொள்ளலாம்.


** முள்ளங்கி சாறு எடுத்தும் பருகலாம்.


** புதினா இலைகளை அரைத்து, அந்த சாறை நெற்றியில் போட்டாலும் தலைவலி குறையும்.


** காப்பி அல்லது டீயில் பாலுக்கு பதில் எலிமிச்சை சாறு சேர்த்துக் குடித்தால் நிவாரணம் நிச்சயம்.


இந்த தலைவலிக்கான கைவைத்தியம் உங்களுக்கெல்லாம் பிடிச்சி இருக்கும்னு நினைக்கிறேன்.. நீங்களும் இதை செஞ்சிப் பாருங்க..


அடுத்து இன்னொரு கைவைத்தியக் குறிப்போடு உங்களை நிச்சயம் மீண்டும் சந்திக்க வருவேன்.. பை பை பிள்ளைங்களா..



 

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 8



இன்றைய சரோஜா பாட்டி கைவைத்தியத்தில், சின்ன சின்ன எளிய வைத்தியக் குறிப்புகளைச் சொல்லப் போகிறேன்.. படிச்சிட்டு அப்படியே போயிடாமல், உங்கள் அவசர வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் பகிர்ந்திருக்கும் இக்குறிப்புகள் உபயோகப்படுமான்னு யோசிச்சு, பின்பற்றிப் பயனடையுங்கள்.



** ரத்த சோகைக்கு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் தக்காளி சாப்பிடலாம்.



** வயிற்றுப் புண்ணுக்கு கேரட் மற்றும் பூசணி நிறைய சாப்பிடலாம்.



** கொழுப்பு குறைய கொள்ளு மற்றும் காரெட் எடுத்துக்கொள்ள வேண்டும்.



** புளியந்தளிரை துவையாலாக்கி உண்ண வயிற்று மந்தம் நீங்கும்.



** நாள்தோறும் ஒரு பப்பாளித்துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.



** பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி பசியைத் தூண்டும்

வல்லமையுடையது.



** சர்க்கரை நோய்க்கு முளைவிட்ட சிறு தானியங்கள், மற்றும் பீன்ஸ், பாகற்க்காய்,


வெள்ளரி சாப்பிட்டு வரலாம்.



 

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 9




நோய் எதிர்ப்பு சக்திக்கு கடுகுடன், வெந்தயம், பெருங்காயம், மஞ்சள் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை நீங்கள் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால், நம் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்து, நோய் வராமல் பாதுகாப்பு அளிக்கிறது.



இந்த பொடி அனைத்து வயிற்றுக் கோளாறுகளையும் நீக்கும்.

 
Status
Not open for further replies.
Top